கதையாசிரியர் தொகுப்பு: விக்கி விக்னேஷ்

8 கதைகள் கிடைத்துள்ளன.

இந்தியா பாகிஸ்தான் 20க்கு20 கிரிக்கட்

 

  இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 20க்கு20 கிரிக்கட் போட்டி ஆரம்பமாவதற்கு இன்னும் ஒன்றரை மணி நேரம் இருந்தது… இப்போது நேரம் 6.30… இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பிரச்சினையால் இந்தப் போட்டி கொழும்பில் நடத்தப்படுகிறது. போட்டிக்கு பெருந்திரளான மக்கள் பார்வையாளர்களாக கூடி இருந்தார்கள். இலங்கை போட்டிக்கு கூட இந்த அளவுக்கு அரங்கம் நிரம்பியதில்லை… இந்த இடத்தில் ஒரு குண்டு வெடித்தால் எப்படி இருக்கும்? நினைக்கவே அச்சமாக இருந்தது.. சில நிமிடங்களுக்கு முன்னர் ஒருவரின் கையில் இருந்து தவறி


செல்வி

 

  கண்ண மூடினா இந்த ஃபைலோட கலர்தான் கண்ணுக்கு தெரியுது. இதெல்லாம் வீசிட்டு எங்கயாவது போயிடனும் பா…. என் முனுமுனுப்பு என்னோடு மட்டும் இல்லை…. பக்கத்தில் இருந்த ஜானகியும் கேட்டிருந்தாள். இதுகெல்லாம் கஷ்ட்ரப்பட்டா எப்படி சேர்?. உங்களை நம்பிதான் இந்த கம்பனியே இருக்கு. உங்க அப்பா இறந்த பிறகு அத்தனை பொறுப்பும் உங்களுக்குதானே. ஆயிரம் இரண்டாயிரம் சமாச்சாரமா இது? கோடி கணக்கில புரள்ற பிஸ்னஸ். இப்படித்தான் இருக்கும்.” ஜானகி என் பிரத்தியேக செயலாளர் மாத்திரம் அல்ல, என்


கின்னரப்பெட்டியின் கண்ணாடியில்

 

  கறுப்பு வெள்ளை கட்டைகளைத் தட்டி கின்னரப்பெட்டியிடம்; (பியானோ) பேசிக் கொண்டிருந்தேன். கதவு தட்டும் சத்தம்… பியானோ வைக்கப்பட்டிருக்கும் அறையில் இருந்து எட்டிப் பார்த்தால் முன்னறை ஜன்னல் வழியாக வெளியில் நிற்பது யாரென்று தெரியும்… எழுந்து நின்று எட்டிப்பார்த்தேன்… கதவுக்கு அருகில் கார்திகா.. ரோஜா நிற சேலை, அதற்கு மேல் ஒரு குளிரங்கி… கறுப்பு நிறக் கைப்பை.. செங்கல் அளவில் ஒரு திரன்பேசி.. ஆனால் மெல்லியதாக… திறன்பேசியின் முனையை அவள் கடித்தபடி இருந்தாள்…. ஆறு வருடங்களுக்கு முன்னர்


என் அருமை சந்திரிக்கா

 

  கதவுகளை திறந்து கொண்டு படியேறி யாரோ ஓடி வருவது போல ஒரு சத்தம். இரவு 1 மணி படுக்கை அறையில் இருந்து எழுந்து முன்னறை விளக்கை ஏற்றாமலேயே யன்னலில் பார்த்தேன்…. ஒன்றும் தெரியவில்லை… மின்விளக்கை ஏற்றிவிட்டு பார்தேன்… அப்போதும் தெரியவில்லை கதவினைத் திறந்து வெளியில் சென்று பார்த்தேன்… கீழ் வாயிற்கதவு திறக்கப்பட்டிருந்தது.. அதை பூட்டிவிட்டு படியேறும் போது காற்றின் வேகம் கதிகலங்க வைத்தது… எல்லா கதவுகளையும் இறுக்கி மூடி என் படுக்கை அறைக்கு வந்து படுத்துவிட்டேன்….


யூஓன்

 

  ‘இன்னும் 10 மணித்தியாலங்களில் என் பூவை சந்திப்பேன்’ யுஓன், 12 மணித்தியாலங்களுக்கு முன்னர் மெசேஞ்சரில் அனுப்பிய செய்தியை இப்போதுதான் பார்த்தேன்… யுஓனுக்காக ஆயிரம் மைல்கள் தாண்டி பூத்த மலர் நான்… ஹுஆ என் பெயர்.. பேஸ்புக்கில் நாங்கள் சந்தித்து இன்றுடன் 3 வருடங்கள். நேருக்கு நேர் சந்தித்ததில்லை. இன்று சந்திப்பதாய் திட்டம். யுஓன், நாஞ்சிங் நகரின் ஒரு முள்… ஹுஆ ஆகிய என்னை பாதுகாக்கவே படைக்கப்பட்டவன். அவனின் பாதுகாப்பிலேயே வளர ஆசைப்பட்ட பூ நான்… யுஓன்