கதையாசிரியர் தொகுப்பு: ராஜம் கிருஷ்ணன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

தலைமுறைகள்

 

  வளைவு நெளிவுகளை அழித்துக்கொண்டு உடலைச் சுமக்க வைத்த சதை வயசுக்கும் வாழ்வின் சரிவுக்கும் கட்டுவிட்டுத் தொய்ந்து ஆடுகிறது. ஓர் அடி பெயர்த்து வைக்கும் முன் இன்னோர் அடியில் தாங்காத உடல் தள்ளாடுகிறது. முண்டிதமான தலையை மறைக்கும் சேலை இறுக்கமாக இரு செவிகளையும் மூடிக் கொண்டிருக்கிறது. துல்லியமான பார்வை இல்லாத கண்களைப் பாதுகாக்க அமைந்தாற் போன்ற கண்ணாடி. டாக்ஸியை விட்டு மெல்ல இறங்கும் மருமகள் ஒவ்வோர் அடியாக வாயிற்படியிலேற்றிக் கூட்டி வருகிறாள். வளைவே இல்லாத மெத்தென்ற பாதம்


வே

 

  “இன்றைக்கேனும் கட்டாயம் கேட்பார்கள்’ என்றசபலத்துடன் வீட்டுப் படியேறினாள் மாலதி. கண் சோர. நடை துவள. மச்சுப்படி ஏறுகையில் விழுந்துவிடாமருக்க வேண்டுமே என்றஉணர்வில் கையால் சுவரைப் பற்றிக் கொண்டாள். கூடத்திருந்து மங்களத்தம்மாளின் கீச்சுக்குரல் ஒத்தது. இறைவனின் படைப்பில் உண்டான எத்தனையோ மாதிரிகளில். மங்களத்தம்மாளின் குரல் ஒரு தனி மாதிரி. அது தடிக்கவும் தடிக்கும்; கீச்சென்று செவிகளில் பாயவும் பாயும். “ஊரு உலகத்துக் கயாணமா நடந்திருந்தாத்தான் கேள்வியே இல்யே!” மாலதிக்கு நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது. மச்சுப்படி அவள் காலை


தூசி

 

  ”என்னம்மா, குழந்தை! ஏன் அப்படிப் பார்க்கிறே?” செம்பட்டை மாறாத தலையில் எண்ணெய் தடவிய கோலம். ஆறு வயதுதான் மதிக்கலாம். கவுனில் ஈர மண் படிந்த அழுக்கு. கருவிழிகள் குறுகுறுக்க, செப்புவாய் வியப்பிலே சற்றே அகன்றிருக்க, குழந்தை அவள் கேள்விக்குப் பதில் சொல்லாமலே பார்த்துக்கொண்டு இருந்தாள். ”என்னம்மா? இங்கே யாரேனும் உன்னைப் போல் விளையாட இருக்கிறார்களா என்று பார்க்கிறாயா? ஒருவரும் இல்லையே?” ”நீங்க மட்டும்தான் இருக்கிறேளா, மாமி?” ”எங்க வீட்டு மாமா ஆபீஸ் போய் விட்டார். சாயங்காலம்