Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: முனைவர் பூ.மு.அன்புசிவா

6 கதைகள் கிடைத்துள்ளன.

அலாவதீனும் குட்டிநாயும்

 

  அன்று ஞாயிற்றுக் கிழமை காலைப்பொழுதில் டியுசனை முடித்துக்கொண்டு, வீட்டை நோக்கி ஆளுக்கொரு சின்ன சைக்கிளில், ஜோசப்பும், பீரிஜெயின் அலாவுதீனும் வந்து கொண்டிருந்தார்கள். பெரிய அரச மரத்தடியில், ஒரு நாய் குரைத்துக் கொண்டிருந்தது. அதைச்சுற்றி நான்கு குட்டி நாய்கள் கத்திக்கொண்டிருந்தன. ஜோசப் தன் சைக்கிளை நிறுத்திவிட்டு, தன் மூக்குக் கண்ணாடி மூக்குப் பகுதிக்குள் லேசாக அமுக்கிவிட்டு, யோசித்தான். இந்த நாய் நேற்றுக் காலை சினையாகத்தானே திரிந்தது. நேற்று மாலையோ இரவோதான் குட்டிகள் போட்டிருக்க வேண்டும். லவ்லி. வாவ்


இரக்கமற்ற விதி

 

  மணியாடர் பட்டுவாடா செய்பவர் அதிக ஒட்டடையும் குறைந்த ஓலையும் நிறைந்த குடிசை வீட்டுக்குள் இருந்த ஐம்பத்தேழு வயது பேச்சியைப் பெயர் சொல்லி அழைத்தார். ‘த யாருப்பா நீ அதிகாரமா பேரச் சொல்லிகூப்புடற” என்றபடி, கமா போன்ற வளைந்த முதுகுடன் பேச்சி வெளியே காட்சி தந்தாள். “புது டெல்லியிலிருந்து மூக்கன்ங்கிறவர் ஆறாயிரத்து ஐந்துறூறு மணியாடர் அனுப்பி இருக்காரு. கைரேகை வச்சட்டு வாங்கிக்கோ”. பேச்சிக்கு உடம்பெல்லாம் ஒரு விநாடி சிலுத்து அடங்கியது. தனது வலது கையை எடுத்து புகயிலைச்


மின்சாரத் தகனம்

 

  ஆத்தங்கரையை ஒட்டிய சுடுகாட்டுக்குள் ஊதா நிற ஜீப் நுழைந்தது. டிப்-டாப் ஆசாமிகள் ஐந்து பேர் இறங்கினார்கள். ஜீப் டிரைவர் நூல,; பந்து, டேப் சகிதமாய் அவர்களோடு சேர்ந்து கொண்டார். மண் வெட்டியையும் தன் வளைந்த முதுகையும் குழாயடியில் கழுவியபடி மங்கலான கண்கள் வழியே மேலோட்டமாகப் பார்த்தார், கருப்பு என்கிற கருப்புசாமி. டிப் – டாப் ஆசாமிகளில் இரண்டு பேர் டேப்பைப் பிடித்து நீள வாக்கிலும் அகல வாக்கிலும் குறுக்கும் நெடுக்குமாய் அளந்து கொண்டு அவர்களுக்குள் பேசிக்கொண்டனர்.


பூமாலை அம்மா

 

  தலையில் மளிகைப் பொருட்கள், காய்கறிகள் அடங்கிய சிறுமூட்டை ஆகியவற்றை ஒரு தட்டுக் கூடையில் வைத்துச் சுமந்து ப+மாலை போயக்; கொண்டிருக்கிறாள். சின்னப் பூப்போட்ட ரோஸ்; கலர் சேலை. கருநீலத்தில் ரவிக்கை. முதுகுவரைக்கும் தொங்கும் தலைமுடி. லேசாக வாடியிருக்கும் மல்லிகைப்பூ. கைகளில் பிளாஸ்டிக் வளையல். நெற்றியில் ஐம்பது காசு அளவு குங்குமம். கால்களில் சிணுங்குகின்ற கொலுசு. கரக்… கரக்.. என ஓசையிடும் பிளாஸ்டிக் செருப்பு. இதையெல்லாம் பார்க்கும் போது பெண்கள் கூட இவ்வளவு நேர்த்தியாக அலங்காரம் செய்ய


ரூபா என்கிற ரூபாவதி

 

  ரூபா என்கிற ரூபாவதி. நடுத்தர வர்க்கம் வாடகை வீட்டின், அறைக்குள்ளிருந்தபடியே ரூபாவதியின் உறவினர்களுடன் சேர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகளைச் சாந்தி ஓரக்கண்ணால் பார்த்தாள். காப்பி, மிக்சர். இனிப்பு. ஒவ்வொருவருக்கும் பரிமாறப்பட்டு இருந்தன. மாப்பிளையின் பெரியப்பா, பெரியம்மா, காலில் விழுந்து வணங்குதல் போன்ற சம்பிரதாயங்கள் முறையாக நடந்தன. மாப்பிள்ளை சிறிது நேரம் எதிரில் கீழே அமர்ந்து ரூபாவை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, வெட்கமோ, என்னவோ, வீட்;டுத் தோட்டம் சூப்பரா இருக்கு சுற்றிப் பார்க்கிறேன், என்று எழுந்தார். கூடவே ரூபாவின் அண்ணன்