கதையாசிரியர் தொகுப்பு: பொ.கருணாகரமூர்த்தி

26 கதைகள் கிடைத்துள்ளன.

பகையே ஆயினும்…

 

  இந்த வீட்டுக்கு ஆறுமாசத்துக்கு முன்னர் குடிவந்திருந்தோம். வரும் போதே எதிர்வீட்டுத் துருக்கிக்காரன் மாடிப்படிகளில் பெரிய பலகை ஒன்றை வைத்து இறைச்சி வெட்டிக்கொண்டிருந்தான். தரையெங்கும் திட்டுதிட்டாக இரத்தமும், இறைச்சியும், எலும்புத் துகள்களும் பறந்திருந்தன. “ஏன் உள்ள வைச்சுத்தான் வெட்டிறதுக்கென்ன?”என்றேன். “சுவர் பழுதாகிவிடாதா…….?” என்று பதில் கேள்வி போட்டான். “எல்லாருமே படியில வைச்சுத்தான் இறைச்சி வெட்டுவாங்களோ இங்கே……..?”என்றேன். அவன் ஒரு கருடப்பார்வை பார்க்க……. மனைவி சொன்னாள்: “ அவனோட என்னத்துக்கு வீண் பேச்சு…….. துஷ்டனைக் கண்டால் தூரவிலகென்றிருக்கு……. இந்த


ஆத்தி

 

  அந்த மரத்தை ஆத்தி என்று அவ்வூரில் சொன்னார்கள். எமக்கு வவுனிக்குள நீர்ப்பாசன நிலக்குடியேற்றத்திட்டத்தின் மூலம் யோகபுரத்தில் கிடைத்த காணியில் அரசே கட்டித்தந்த சிறிய வீட்டு முன்றலில் நின்றது. நெடிதுயர்ந்த பெரிய விருட்ஷமென்று சொல்லமுடியாது. தெருவிலிருந்து நோக்கையில் வீட்டை மறைத்துக்கொண்டு நிற்கப் போதுமானது. சின்னத்தம்பிப்புலவர் வீட்டுவாசலில் நின்றிருந்த பொன்பூச்சொரியும் பொலிந்தசெழுந் தாதிறைக்கும் நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் – மின் பிரபைவீசு புகழ் நல்லுர்ரான் வில்லவரா யன்கனகவாசலிடைக் கொன்றை மரம். மாதிரிக்கு யாருக்கும் எமது வீட்டை அடையாளங்காட்டிக் குறிப்புச்சொல்லி


வண்ணத்துப்பூச்சியுடன் வாழ முற்படுதல்

 

  இதுவும் ஒரு வசந்தகாலம். இரவு நேரம் பதினொன்றை அணுகிக்கொண்டிருக்கிறது. சித்தார்த்தனுக்கு அதிகாலை நாலு மணிக்கு வேலைத்தளத்தில் அட்டென்டன்ஸ் காட் பஞ்ச் பண்ணியாகவேண்டும். இணையத்தில் ஏதாவது பார்த்துவிட்டோ கிறுக்கிவிட்டோ படுக்கைக்குப் போகலாமென்றால் அவனது செல்லமகள் ஹோம் வேர்க் பண்ணுகிறேனென்று சொல்லிக் கணினியை மூன்று மணிநேரமாக உருட்டிக்கொண்டிருக்கிறாள். அவள் இப்போதைக்கு அதைவிட்டு நகரப்போவதில்லையென்று தோன்றவும் ” சோபி(தா)க்கண்ணா உன்ரை புறொஜெக்டைக் கொஞ்சம் மினிமைஸ் பண்ணிவிட்டு எனக்கேதாவது மெயில்ஸ் வந்திருக்கோவென்று பார்த்துச்சொல்லடா செல்லம் நான் படுக்கப்போறன்.” என்றான். அவளும் நொடியில்


வனத்துக்குத்திரும்புதல்

 

  ஒரு நல்ல கதையை வாசித்து நிறைக்கையிலும், பணிமுடிய இன்னும் 5 நிமிஷங்கள்தான் இருக்கு என்று மணிக்கடிகை அபிநயக்கையிலும் எனக்குள் எப்போதும் ஒரேமாதிரியான உணர்வே திரைக்கும். பணி என்றால் ஏதோ ‘கழுத்துப்பட்டி’ கட்டிக்கொண்டு இயற்றுவது என்று நீவீர் எண்ணிவிடலாகாது, பாண் வெதுப்புவதுதே ஊழியம். என் சகபணியாளன் அயிடின் “ இன்றைக்கு என் காதலியின் பிறந்தநாள். நாம் பணிமுடிந்து போகையில் ஒரு அருந்தகத்தில் ‘ராக்கி’ குடிக்கப்போகலாம் ”என அழைத்திருந்தான். துருக்கியில் இருக்கும் காதலியின் நினைப்பைக் கொண்டாடவேண்டி தன்னார்வத்தில் அவனே


மாயத்தூண்டில்

 

  இரண்டு விடயங்கள்தான் இப்போது என்னைக் கடைந்துகொண்டிருக்கின்றன. ஆறுமாதமாக பணியில்லை. வேலையில் இல்லை என்பதை நான் சமாளித்தாலும் வெளியில் என்னைக் காண்பவர்களுக்கும் போனில் குடையும் மற்றவர்களுக்கும் இதுவே முதன்மையான பேசுபொருளாகவும் பிரச்சனையாகவும் இருக்கிறது. இப்போதான் ஆடத்தொடங்கியிருக்கும் முதற்பல்லை நாக்கால் நிமிண்டிக்கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு “ உங்களுக்கு ஏம்பா வேலை ” என்றான் கடைக்குட்டி கந்தன். “ வேலைக்குப்போனாத்தானே மகன் காசுகிடைக்கும் ” “ அய்யோ அய்யோ, எதுக்கப்பா சும்மா மெனெக்கெட்டு வேலைக்கெல்லாம்போய்………. நேராய் பாங்குக்குப்போய் பேப்பரில கீறிட்டுக்குடுங்கோ………… காசுதருவாங்கள்