கதையாசிரியர் தொகுப்பு: டி.சாய்சுப்புலட்சுமி

8 கதைகள் கிடைத்துள்ளன.

கேள் கேள் பெரிது கேள்

 

 பா……,,ர……,,தீ…, நீயா? அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கலந்த குரலில் விழிகள் விரிய சாலையின் எதிர்த்திசையில் சென்று கொண்டிருந்தவளைப் பார்த்துக் கேட்டாள். தீடீரென்று எதிரே வந்தவள் தன்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டதும் திகைத்துப் போய் ஆ… …ஆமாம்…நீ…ங்……க? என்று சற்றே இழுத்தாள். நீங்க சூர்ய பாரதி தானே?………நான்……என்னை நினைவில்லையா?…,,மீனாட்சி மகளிர் பள்ளியில் ஒன்றாய்ப் படித்தோமே?……. ஓ……,ஓ……ஞாபகம் வந்துடுச்சுடீ……,அனு…,,அனுஷா மோகன்……கரெக்டா? உடனே இயல்பாக இருவரையும் *டீ* தொற்றிக் கொண்டது. “ஏய்…,,எப்படி இருக்கடீ?ஆளே மாறிப்போயிட்ட? என்ன ஆச்சு?. பள்ளி இறுதிநாளன்று சந்தித்தது. அப்பொழுதே


அற்புதா

 

 சென்னையின் பன்னாட்டு விமான முனையத்தில் அந்த அமொpக்கன் ஏர் லைன்ஸ் விமானம் தரையிறங்கியது, ஆனால் மனம் முழுவதும் நிறைந்த பாரத்தோடு அதிலிருந்து அற்புதா இறங்கினாள், வழக்கமான சோதனைகளை முடித்து வெளியில் வந்தாள், அவளுக்கு சென்னை புதியதாக உருவாக்கப்பட்ட நகரமாகவே தோன்றியது, விடியற்காலை குளிர்ச்சியில் வாகனம் வெளியேற்றும் புகை காற்றில் கரைந்து மு்க்கில் முட்டியபோதுதான் தனது தாய்நாட்டின் வாசனையை மீண்டும் உணர்ந்தாள் அற்புதா. “கால் டாக்ஸி மேடம்?” என்ற பவ்யமான குரல் கேட்டு “ராயல் லீ மெரிடியன் போகனும்?”


கருப்புசாமி

 

 ஏலே …. கருப்பு எந்திரிலே…., ………. …….. ராசா….எந்திரிப்பா….பொளுது விடிஞ்சிருச்சு.. ம்.., ம்…., ஐயா ரவைக்கு நீ லேட்டாத்தான் வந்தே.. என்னய்யா செய்யுறது நம்ம பொளப்பே அப்படி இருக்கே…… ஆத்தா..ஒரு அஞ்சு நிமிஉக்ஷம் ஆத்தா….கால் முச்Nடும்நோவுது ஆத்தா.., கருப்புசாமியின் முனகலிலிருந்து அவன் கால் வலியின் தீவிரத்தை அவளால் உணர முடிந்தது, முத்தம்மா கண்களில் தேங்கிய கண்ணீரை முந்தானையால் துடைத்தபடியே ‘சாமி…., எனக்கு எல்லாம் புரியுது ல….என்ன செய்ய முதலாளி சீக்கிரம் ஒர்க்சாப்புக்கு வரச் சொன்னார்ன்னு நீதானே நேத்து


துருவ சந்தி

 

 வைதேஹி எங்கேடி போயிட்டேடூ எத்தனை நாழியா கூப்பிடிண்டு இருக்கேன், காதில விழறதா இல்லையாடூ என்னோட அவசரம் அவளுக்குப் புரியவேமாட்டேங்கறது.? என்ன பண்ண? ஆக வேண்டியதெல்லாம் காலா காலத்தில் ஆகியிருந்தா இப்படி இருக்கமாட்டா,,,,,ம்,,,,,,,(மனசுக்குள் கடைசி மு்ன்று வரிகளை முஹணுமுஹணுத்தாள் விசாலம்) “என்னம்மா. ஏதோ தலை போகிற அவசரம் மாதிரிக் கூப்பாடு போடுறே? கடைக்குப் போகத்தானே?” “அதென்ன அப்படிக் கேட்கறே? கடைக்குப் போகத்தானே என்று. இன்னும் பதினஞ்சு நாள்கூட இல்ல. வாங்கித் தைக்கக் குடுத்தாத்தானே அவன் கடைக்கு நாயாப் பேயா


அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

 

 என்னம்மா சுசீ என்ன இன்னும் யோசனை? ஏற்கனவே முடிவு செய்ததுதானேடூ கிளம்பலாமா?அவங்ககிட்ட வரதுக்கு முன்னாடி இன்ஃபார்ம் பண்ணஹணும், ,,,,என்ன சொல்ல? ஏதோ யோசனையில் இருந்த சுசீ ,,,,ஆ,,,,ங் ,,,,,போலாங்க என்றாள் ரொம்ப அசிரத்தையாக, ஒரு மனிதனுக்கு என்னதான் வசதியிருந்தாலும் குழந்தைப் பேறு இல்லையென்றால் வாழ்க்கையே அன்னியமாகி விடுகிறது, அதைப் போக்க எடுக்கும் முயற்சிகளில் தம்பதிகளுக்கே வயசாகி விடுகிறது, தீடீரென்று நேற்று அண்ணன் வீட்டில் நடந்த நிகழ்ச்சி சுசீலாவின் மனத்திரையில் ஓடியது, அம்மா நீங்களும் அப்பாவும் கொஞ்சமாவது எங்களைப்