கதையாசிரியர் தொகுப்பு: ஜான்பால் நவீன்

1 கதை கிடைத்துள்ளன.

அக்கா

 

  தெரு முனையை நெருங்கியதும் மூக்கை பொத்திக்கொண்டேன்.நூறடி தூரத்தில் போடப் பட்டிருந்த துருவேறிய கட்டிலின் மேல் வைத்திருந்தார்கள்.சுண்ணாம்புத் துகள்கள் சிதறிக் கிடந்தன.மலமும் பினாய்லையும் கலந்தது போன்றொரு நாற்றம் குடலைப் பிடுங்கியது. “நீ போய் பாத்துட்டு வந்துரு டா.அங்க இருந்திருந்தா நான் போயிருக்க மாட்டேனா?,’அம்மா கெஞ்சிக் கேட்டுக்கொண்டதால் தான் இங்கு வந்தேன்.நரைத்த தலைமயிர்.ஒடிசலான கன்னங்கள்.கருப்புத்துணியினை வாயில் திணித்து வைத்தால் போன்று,ஈக்கள் வாயினை அடைத்திருந்தன. தலைக்கருகில் அவளின் ஆஸ்தான பழுப்போரிய பை. நான் மட்டும் தான் அங்கிருக்கிறேன். அனாதைப்பிணம் கேள்விப்பட்டிருக்கிறேன்.சுற்றி