கதையாசிரியர் தொகுப்பு: சந்திரா இரவீந்திரன்

12 கதைகள் கிடைத்துள்ளன.

கண்ணில் தெரியும் ஓவியங்கள்…

 

 வாயிற் கதவுகளற்ற ஒரு படியில் அப்போது அவள் நின்றிருந்தாள். அது Under groundற்குப் பக்கத்தில் இருந்தது. வர்ணம் தேய்ந்த வெளிச்சுவரொன்றில் ஒட்டப்பட்டிருந்த, யாரையும் கவர முடியாததுபோல் தோன்றிய ஒரு ஓவியத்தை அவள் பார்த்தபடி நின்றிருந்தாள். அழகையும் அபூர்வங்களையும் நடந்தபடியே ரசித்துச் செல்வதென்பது இந்த அவசர நாட்டின் பொது நடைமுறை! ஆனாலும் எத்தகைய வேளைகளிலும் சில நிமிடங்களாவது தரித்து நின்று, ரசித்து விட்டுச் செல்லவே அவள் மனத்தில் ஆர்வமிருக்கும்! ஓவியத்தினூடாய் நெஞ்சிற்குள் ரசனையற்ற கேள்விகள் எழுந்து கொண்டன. அடுத்த


யாசகம்

 

 காற்று, மழை, மேகம், கடல், மலை, நதி, வயல் . . .என்று அழகான தரிசனங்களைச் சுமந்தபடி மென்மை யான மனிதமனங்களுடன் பின்னிப்பிணைந்து, நனைந்து நாளெல்லாம் முக்குளித்து எழுதுகின்றேன்! ஆயினும், திரும்பத் திரும்ப ஒன்றுவிடாமல் என்னால் சரியாகப் புரிய வைக்க முடியவில்லை! “வா, என்னோடு சேர்ந்து நின்று சில உயரங்களை, சில உன்னதங்களைத் தரிசித்துப் பார்” என்று சொல்கிற தைரியம் இப்போ என்னிடமிருந்து தப்பித்துப்போக விடுகிறது! எப்பவும் இரண்டு கண்கள் நெருப்புத்துகள் களை என்னில் படரவிட்டபடி நகருகின்றன!


வல்லை வெளி தாண்டி…

 

 காற்று வெளியூடாய், கணவருடன் மோட்டார் சைக்கிளில் ‘டபிள்’ போவது எவ்வளவு சுகமான அனுபவம்! திருமணமான புதிதில் தொல்லைகளேது மற்ற சுதந்திர நினைவுகளோடு சோடியாய்ச் சுற்றித் திரியும் சுகம் எத்தனை இனிமையானது?! அக்காற்றுவெளி ‘வல்லை வெளி’யாய் இருக்க வேண்டும்! அந்த நேரம் வானில் ‘ஹெலி’களே இல்லாத, மழையும் தூறாத, கோடைக்காலத்து மாலை நேரமாய் இருக்க வேண்டும்! வீசிவரும் காற்று, காதோடு கதை சொன்னவாறே கூந்தலையும் சேலையையும் வருடித் தவிக்க வைக்க வேண்டும்! சின்ன புள்ளினங்கள் மேலும் கீழுமாய்ச் சிறகடித்துப்


முறியாத பனை!

 

 நீண்ட காலமாளிணித் துருப்பிடித்துப் போயிருந்த தண்டவாளங்களில் மீண்டும் புதிதாளிணிப் பரபரப்பு! சுறுசுறுப்பு! ஒருநாளில் இரு தடவைகள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஊரும் ரயில் வண்டிகளின் சத்தங்கள்! ஜனங்கள் அவசரம் அவசரமாளிணிக் கூடிப் பிரியும் குட்டிக் குட்டிக் காட்சிகள்! சப்தங்கள் யாவும் ஓளிணிகிறபோது, பழையபடி எல்லாவற்றையும் மீறிக்கொண்டு வரும் கடலை நெளிணியின் கமறலும், பூட்ஸ்களின் தோல் மணமும்! சிலசமயம் வயிற்றைக் குமட்டும் … பலசமயங்களில் அடிவயிற்றுக்குள் அப்பிக்கொண்டுவிடும் அச்சமோ, அருவருப்போ, கோபமோ என்று புரியாத ஒரு நெருடல் பந்தாக


என் மண்ணும் என் வீடும் என் உறவும்…

 

 அது ஒரு ஆடி மாத நடுப்பகுதி… கொளுத்தி எரியும் வெயிலில் யாழ்மண் கருகிக் கொண்டிருந்தது! இராணுவக் கெடுபிடிகள் தாளாமல், வடமராட்சி மண்ணில் சொந்த வீட்டைவிட்டு, யாழ் மண்ணிற்கு இடம் பெயர்ந்து சுய அடையாளங்களை மறைக்க முயன்று கொண்டு இருக்கிற போதும் பிறந்து வளர்ந்த ஊரும், தவழ்ந்து மகிழ்ந்த வீடும் மனத்திற்குள் வந்துவந்து, எங்களை அலைக்கழித்துக்கொண்டே யிருக்கும்! எனக்குத் திருமணப் பேச்சுக்கள் நடைபெறுகிறது ஒரு புறம்! என் குட்டித் தங்கை குதியன் குத்திக்கொண்டு, வேம்படிச் சிநேகிதிகளுடன் யாழ் நகரம்