கதையாசிரியர் தொகுப்பு: க.கமலகண்ணன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

கணவனே கடவுளாக…

 

  “பளார்” எனக் கன்னத்தில் மேலாளர் சந்தானம் அறைந்ததும், ஒரு நிமிடம் கலங்கிப் போனான் சங்கர். அப்படியே வெளியே வந்து தன் இடத்தில் அமர்ந்தான். சிறிது நேரம் கழித்துச்சுயநினைவுக்கு வந்தான். அடுத்த இரண்டு நாட்கள் அலுவலகம் வரவில்லை. மேலிடத்தில் புகார் செய்யலாமா என்று யோசித்தான் சங்கர். அதனால் தன்னுடைய பதவி உயர்வு பாதிக்கும் எனத் தோன்றியதால்,அடுத்த நாள் ஞாயிறு விடுமுறை என்பதால் மேலாளர் வீட்டில் இருப்பார். நேரில் வீட்டுக்குச் சென்று பேசலாம் என்று முடிவு செய்து தூங்கிப்


அன்பு சம்ராஜியம்

 

  தஞ்சை தரணியில் காவிரியால் வளமான நகரத்துக்கு அருகாமையில் பச்சை பசேல் என வயல்வெளிக்கு நடுவே அந்த அழகிய கிராமம். காலைக் கதிரவன் மெல்ல எழக், கந்த சஷ்டி கவசம் காதில் தேனாய் விழக், கதிர் இழுத்துப் போர்த்திக் கொண்டு சுகமாய் அரைக் குறை தூக்கத்தில் படுத்திருந்தான். “கதிர், எழுந்திரு நேரம் ஆகுது”“ என்று எழுப்பினாள் அக்கா வளர்மதி. சோம்பலாய் எழுந்து, வரவேற்பறையை எட்டிப் பார்த்தான், எதிர்வீட்டு தங்கராசு மாமாவும் கதிர் அப்பாவும் பேசிக் கொண்டு இருந்தார்கள்.