கதையாசிரியர் தொகுப்பு: கிருத்திகா

2 கதைகள் கிடைத்துள்ளன.

ஒலித் தீர்வுகள்

 

  சிங்கப்பூர் ரயிலில் பயணம் செய்யும்பொழுது தன்னைச் சுற்றி சிறிது இடம் தேவைப்படுகிறது அவளுக்கு. தன்னுடைய செய்தித்தாளை விரித்து வாசிக்க. அடுத்தவரின் ஒலிப்பானில் இருந்து வழியும் நாராசத்தில் இருந்து தப்பிக்க. மெல்லிசை செவிக்கு விருந்தாகும். அதிக ‘டெசிபல்’ சக்தியில் சக பிரயாணியினுடைய கைப்பேசியின் வழி தொடர்ந்து அலறும் இசைக்கருவியை என்னவென்று சொல்ல? ஒரு நாள் சோதனைக்கு உட்பட்ட மாதவிக்கு அருகில், வெகு நளினமான இள நங்கை ஒருத்தி. விலை உயர்ந்த கைப்பை. அலுவலகத்திற்குச் செல்ல முழங்காலுக்கும் மேலே


காலந்தவறாமை!

 

  தலையில் ஒலி வாங்கியுடன் இணைந்துள்ள ஒலிப்பானைப் பொருத்திக்கொண்டு சிரித்த முகத்துடன் முகமன் கூறிய ஆண்ட்ரியாவிற்கு ஒரு அவசரச் சிரிப்பை உதிர்த்துவிட்டு அலுவலகக் கணினியை உயிர்ப்பித்தபொழுது மணி 7:58. “நேற்று போல இன்றும் தாமதமாகி விடுமோ என்று பயந்தே விட்டேன்!” என்று நான் கூறினேன். “நான்தான் 7:30 மணிக்கே வருகிறேனே! நீ ஏன் அலட்டிக்கொள்கிறாய்!” என்றாள் ஆண்ட்ரியா. அவள் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவள். ஜப்பான் நாட்டுக்காரனை கல்யாணம் செய்ததாலோ என்னவோ அவளுக்கு எல்லா வேலைகளையும் நேர்த்தியுடனும் நேரத்துடனும்