கதையாசிரியர் தொகுப்பு: கல்கிதாசன்

10 கதைகள் கிடைத்துள்ளன.

பஸ் பயணம்

 

 அலாரம் அடித்தவுடன் அவசர அவசரமாகக் காலைக் கடன்களை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வட சேரி பஸ் நிலையத்தை அடைந்தபொழுது காலை 5.00 மணிக்கு திரு நெல்வேலிக்குக் புறப்படும் END TO END பஸ் தயாராக நின்று கொண்டிருந்தது.உள்ளே ஏறி நோட்டம் விட்டதில் ஒரு மூன்று பேர் அமரும் இருக்கையில் நடுவிலே ஒரு இருக்கை காலியாக இருந்ததைக் கண்ட நான் அவசரமாக அதை நோக்கி நகர்ந்தேன், ஓரத்தில் அமர்ந்திருந்தவர் நடுவிற்கு நகர்ந்து எனக்கு ஓரத்தைத் தந்தார். பஸ்


கமலியும் ப்ரியாவும்

 

 கமலி கோவிலில் விளக்குக்கு விட எண்ணெயை ஒரு பாட்டிலில் எடுத்து அதனோடு தொடுத்த பூவையும் ஒரு கூடையில் வைத்துவிட்டு சாரியை மாற்றிக் கொண்டே மணியைப் பார்த்தாள். ஐந்து நாற்பது. ஆச்சு!. ப்ரியா வந்துடுவள் என்று எண்ணுமுன்பே ஹாலில் வந்து பொத்தென்று சோபாவில் விழுந்தாள் ப்ரியா. அவளை காலேஜ் பஸ் தினமும் சரியாகக் வீட்டில் கொண்டு சேர்த்துவிடும். “ப்ரியா! கோவிலுக்கு வரியா. இன்னிக்கு ஸ்ரீராம நவமி. ராமரை தரிசித்து ரொமப நாளாச்சே. வாயேன் போய்ட்டு வருவோம்” என்றாள் கமலி.


நூற் கண்டு

 

 சிவராமன் அவசர அவசரமாக குளித்து ரெடியாகிக்கொண்டே வாட்சைப் பார்த்தால் மணி 7.30 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. ஆபிஸ் பேக், பால் பாத்திரத்துடன் வேகமாக வெளியே வந்து ஆத்தைப் பூட்டி பக்கத்தில் சியாமளா மாமியாத்து வாசற்படியில் சாவியையும் பால் பாத்திரத்தையும் வைத்தபடி “மாமி ஆபிஸ¤க்கு போயிட்டு வரேன் சாவியையும் பால் பாத்திரத்தையும் உள்ளே எடுத்து வச்சிகோங்கோ “என்று சத்தம் போட்டுக் கொண்டே தெருவில் தாவிக் குதித்து ஓட்டமும் நடையுமாக பஸ் ஸ்டாண்டைப் பார்த்துப் போனான். சிவராமன் ஒரு வங்கி


பால் மாடு

 

 பாலயத்திலிருந்தே ஒன்றாகப் படித்து வளர்ந்த குமாரவேலுவும் சுயம்புவும் கல்லூ¡¢ப் படிப்பை ஒரு வழியாக முடித்தபின்பு எவ்வளவோ தேர்வுகள் எழுதிப் பார்த்தும் அவர்களுக்கு வேலை ஒன்றும் கிடைத்தபாடில்லை. குமாரவேலின் தந்தை ராசு ஆசா¡¢ வீட்டின் பின்புறம் வைத்திருந்த பட்டறையில் இரு நண்பர்களும் படிக்கிற பொழுதே விளையாட்டாக தச்சு வேலையைக் கற்றுக் கொண்டிருந்தார்கள். விவசாயியான சுயம்புவின் தந்தை இருந்த ஒரு ஏக்கர் நிலத்தையும் அவர் பெண்ணின் கல்யாணத்திற்கு அடமானம் வைத்து அதன் பின் மீட்க முடியாமல் ஈட்டிக் காரனிடமே நிலத்தை


கலி முத்திண்ருக்கு

 

 ஹாலிலுள்ள டீவி, சோபா இடுக்குகளில் ஒளிந்து கொண்டிருந்த தூசிகளை பழைய துணியை வைத்து அகற்றிக் கொண்டிருந்த கோபாலனை கைபேசி ஒலி அழைத்தது. எதிர் முனையில் அவனது பால்ய சினேகிதனும் தற்பொழுது சம்மந்தியாகும் வாய்ப்புமுள்ள சடகோபன். அந்த அழைப்புக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தான் கோபாலன் துணியைத் தூர வீசிவிட்டு கைபேசியை எடுத்துக் கொண்டு வாசலுக்கு ஓடினான். அவன் வீட்டிற்குள் சிக்னல் ஒழுங்காகக் கிடைக்காது. சடகோபனிடம் “டேய்! நாங்கள் ரெடியாக இருக்கின்றோம். பையன் நேத்தியிலிருந்தே ஆபிஸ¤க்குப் போகலை. இரண்டு நாளா என்