கதையாசிரியர் தொகுப்பு: கடல்புத்திரன்

31 கதைகள் கிடைத்துள்ளன.

செல்லாச்சியம்மா

 

  செல்லாச்சியம்மா செத்துப் போனாராம். பிரான்சிலிருக்கும் நேசன் போயிருப்பானோ? நேசன் அவர் மகன். ஒருகாலத்தில் வவுனியாவிலிருந்தபோது எங்கள் அயல் வீட்டிலிருந்த அன்பான ஜீவன். இன்று அவர் இல்லை. அவரின் இறப்புச் செய்தியை கேட்கிறதுக்கு எங்கள் மத்தியில் தொடர்புகள் தொடரவில்லை. கால ஒட்டத்தில் கணிசமான மாற்றங்கள். ஒவ்வொருத்தரின் பிரச்சனைகளின் தாக்கம் எல்லோரையும் தனிமைப்படுத்தி விட்டிருந்தன. செல்லாச்சியம்மா, மெல்லிய சருகு போன்ற காய்ந்த தோற்றம் உடையவர். சுமாரானவர். அவரின் வாழ்வு எழுதினாலும் எழுதாட்டியும் ஒரு காவியம் தான். நெஞ்சுரம், அன்புள்ளம்


வீடு

 

  இந்த வீடு உண்மையில் செல்லடியில் உடையவில்லை.ஆனால்,யாழ்நகரில் ,புதிதாய்க் கட்டிய வீடொன்றில் செல் விழுந்ததில் முற்றாக உடைந்திருந்ததைப் போய்ப் பார்த்திருந்தேன்.அந்த நேரம் அங்கிருந்த குடும்பம் கடவுள் புண்ணியத்தில் அவர்கள் வெட்டியிருந்த பதுங்கு குழியில் இருந்ததால்…உயிர் தப்பி இருந்தார்கள்.. ,அந்த வீட்டை இந்த வீட்டுடன் இணைத்திருக்கிறேன். தமிழ்க்கிராமங்களில் பொதுவாக வாடகைவீடு பெறுவது சிரமான காரியம். அருமையாகப் படித்தவர்கள், கொழும்புக்கு வேலை கிடைத்துப் போற போது, சிலவேளை தம் குடும்பத்தையும் கூட்டிச் சென்றால், அவர்கள் இருந்த வீடு காலியாகும். நடுத்தர


வேலிகள்

 

  காலங்காத்தாலே அம்மாட நச்சரிப்பை தாழமுடியாமல் பாண்வாங்க சைக்கிளில் வெளிக்கிட்ட வேலன், சேர்ச்சந்தியிலே திரும்பியபோது எதிர்ப்பக்கத்தில் வீதியோரமாகவிருந்த வயிரவர்” கோவிலடியில் மக்கள் கூட்டமாக நிற்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தச் சென்றான். “சிவத்திற்கு விசர் பிடித்துவிட்டது” கதிரேசு குமுறிக்கொண்டிருந்தான். பேச்சில் வீரம் எல்லாம் வந்து போய்க்கொண்டிருந்தது. சிறிது தள்ளி “கையை வெட்டவேண்டும்” என்று கள்ளுமுட்டியோடு நிற்கிற செல்லன் சொல்லிக்கொண்டிருந்தான். இவன் பகிடிக்காரன். அவனை பெரியவர் சிறியவர் சூழ்ந்திருந்தார்கள். அவன் சீரியஸாக கதைப்பதாகப் பட்டது. அப்படி என்ன நடந்துவிட்டது? ஒரமாக நிற்கிற


பெண்

 

  தனித்ததாக சற்று உள்ளே தள்ளி காணியின் மத்தியில் இருந்த ஒரு வீடு. அன்னியப்பட்டுப்போனது போலிருந்த அந்த வீட்டிலே சிந்தனையுடன் வராந்தாவில் இருந்த கட்டிலில் குந்தியிருந்து வெளியே பார்த்துக்கொண்டு சுலோச்சனா இருந்தாள். அவள் ஒரளவு அழகிதான். இருந்தாலும் என்ன பிரயோசனம்? மனிதப் பிரச்சனைகளில் பெண் எப்படியானவள் என்பது அடிபட்டுப்போய் விடுகிறது. முன்றில். மாமரம். அதில் விளையாடு ற கவலையற்ற இரு அணில்கள். ஆணும் பெண்ணுமாக டுயட் பாடினாலும். அவற்றின் வாழ்க்கையில் அவ்வளவு அணியாய இழைகள் இராதுபோல பட்டது.


சவால்!

 

  சாமக்கோழி கூவுது!,சாமக்கோழி என்ன கூவுறது?, சேவல் தானே கூவும்!, ‘கோழி’என்கிறார்களே!, பிழையாய் சொல்றதும் ஒரு ஃபாசனா?ஏன்.. குழப்பமில்லாமல் நேராய் சொல்கிறார்களில்லை. எங்களுக்கோ சொந்த மொழி! இந்த தமிழ் மொழி’யை வேற ஒருத்தன் கற்க வாறான் என்றால், எங்களையே குழப்புற மொழியாக வைத்திருந்தால்,அவன் தலையை பிய்க்க மாட்டானா? அறிவு ரீதீயாக பொருந்தாமலும் கிடக்கிறதே. ஆனால்,’சாமச்சேவல்’ என்பதில் ஒரு பொருந்தாமையும் இருக்கிறதாகப்படுகிறது. எங்க’பண்டிதர்களை என்ன செய்யலாம்?’என்ற ஆத்திரத்தோடு சைக்கிளை மிதித்தான். இலக்கணச் சுத்தமாக எந்த மொழியைக் கற்கப் போனாலும்