கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.கண்ணன்

408 கதைகள் கிடைத்துள்ளன.

கொரோனா பாடங்கள்

 

  நம் சரித்திரத்தில் கிறிஸ்து பிறப்பதற்கு முன் (கி.மு); கிறிஸ்து பிறந்ததற்குப் பின் (கி.பி) என்று இருப்பது போல, தற்போது கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்குப் பின் (கொ.மு; கொ.பி.) என்று தற்போதைய சரித்திரத்தை புதிதாக எழுத வேண்டும் போல. ஒரு காலத்தில் பர்த்டே பார்ட்டி; பேச்சிலர் பார்ட்டி; நிர்வாக ஆனுவல் டே; என்று எதையாவது காரணம் காட்டி, கூடி கூடிக் கும்மியடித்தோம். மால்கள், தியேட்டர்கள், வழிபாட்டுத் தலங்கள் எனக் கூடி கூடிக் கொக்கரித்தோம். காரணங்களைத் தேடித் தேடி


வேசியிடம் ஞானம்

 

  பாண்டிய அரசன் பராந்தகப் பாண்டியன் (கி.பி 880-900) மதுரையை தலைமையிடமாகக் கொண்டு மிகச் சிறப்பாக ஆண்டு வந்தான். அறிவாளியான அந்த அரசனுக்கு ஒருநாள் இரவு திடீரென ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அந்த சந்தேகத்தை உடனே தன் மனைவியும், நாட்டின் அரசியுமான வானவன் மாதேவியிடம் கேட்டான். அவளுக்கும் அதற்கான பதில் தெரியவில்லை. அந்தச் சந்தேகம், “பாவத்தின் தந்தை யார்? பாவம் செய்ய ஆதி காரணமாக அமைவது எது?” மறுபடியும் யோசித்து யோசித்துப் பார்த்தான். அரசனுக்கு விடை தெரியவில்லை.


சியாமளிச் சித்தி

 

  எனக்கு இப்போது வயது அறுபது. பெங்களூரில் பெரிய மல்டி நேஷனில் வேலை செய்து ரிடையர் ஆனேன். தற்போது சென்னையில் சொந்தமாக வீடு கட்டிக்கொண்டு செட்டில் ஆகிவிட்டேன். காலை பதினோரு மணிக்கு வீட்டில் பூஜை முடிந்து தீபாராதனை காட்டிக் கொண்டிருந்தபோது எனக்கு மொபைலில் போன் வந்தது. தஞ்சாவூரில் என்னுடைய சியாமளிச் சித்தி இறந்து விட்டாளாம். சித்திக்கு வயது 72. என் அம்மா அப்பா இறந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. அதனால் சித்தியின் இறப்புக்கு ஒரு பிரதிநிதியாக நான்


சம்ஸய ஆத்மா விநஸ்யதி

 

  அந்தச் சின்னைக் கிராமத்தில் 1970 களில் ஒரு அக்கிரஹாரம் இருந்தது. ஆனால் இப்போது அதில் பல ஜாதியினரும், ஏன் பல மதத்தினரும் கூட குடியேறி விட்டனர். அது அக்கிரஹாரமாக இருந்தபோது, ஒரு வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் காவியுடை அணிந்த ஒரு வயதான சாமியார் தன்னுடைய உஞ்சுவர்த்தியை முடித்துக்கொண்டு, ஒரு பெரிய வீட்டின் முன்புறத் திண்ணையில் அமர்ந்தபடி, கிடைத்த அரிசிகளை பிரித்து ஒரு துணிப் பையில் மாற்றிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டினுள் கணவனும், மனைவியும் வாஞ்சையுடன் ஒருவரையொருவர்


தடுக்கி விழுந்தவன்

 

  குணசீலன் அப்போது பத்தாவது படித்துக் கொண்டிருந்தான். படிப்பின் நடுவே மூன்று வருடங்கள் தோல்வியுற்றதால், அவனைப் பார்ப்பதற்கு கல்லூரியில் படிப்பவன் போலக் காணப்படுவான். அவன் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் யூனிபார்ம் போட்டுக்கொண்டு பள்ளிக்கு அரை டிராயரில் வருவார்கள். ஆனால் இவன் அதே யூனிபார்மில் முழு டிரவுசர் அணிந்து கொள்வான். முற்றிய விடலைப் பருவம் என்பதால் அவனின் முகத்தில் ஏராளமான பருக்களும், மீசையும் தாடியும் காணப்படும். வீட்டிற்கு தெரியாமல் புகை பிடிப்பான். டீன் ஏஜ் துடிப்புகள் அவனிடம் அதிகம்.