கதையாசிரியர் தொகுப்பு: எம்.இந்திரானி

8 கதைகள் கிடைத்துள்ளன.

மூளைச்சலவை

 

 “ரெலிவிஷனில் நேரம் நான்கு மணி எனக் காட்டியது. வாசலில் அப்பாவின் மோட்டார் பைக் ஒலி கேட்டு சுவாரஸ்யமாக, ரீவி பார்த்துக் கொண்டிருந்த என் தங்கை சுனந்தா ஆச்சரியத்தோடு எழுந்து நின்றாள்.எங்கள் எல்லோருக்கும் ஆச்சரியம் தான். காலையில் அப்பா வேலைக்குப் போனால் பின்னேரம் வழக்கமான வேலை முடிந்த பிறகு ஓவர்ரைம் செய்து விட்டு நேரே மதுக்கடைக்குப் போய் உயர்ந்த ரகமாய் ஒரு கிளாஸ் அருந்தி விட்டு எட்டு மணீக்குப் பிறகுதான் வீட்டுக்கு வருவது வழக்கம். இந்த நேரத்தில் அவர்


காலத்தால் அழியாத கல்யாணம்

 

 இரண்டு மணித்தியாலங்களாய் துலா மிதித்துக் கொண்டிருந்தார் சுந்தரம். இவ்வளவு நேரமும் அவர் வாய் திறந்து ஒரு வார்த்தையும் பேசவில்லை.. பட்டையால் தண்ணீர் அள்ளி இறைத்துக் கொண்டிருந்த, பரமானந்தத்திற்கு ஆச்சரியமாக இருந்தது. “என்ன மச்சான் சுந்தரம்? மற்ற நாளிலையெண்டால் இத்தறுதிக்கு, துலா மிதிச்சபடி எத்தினை பாட்டுப் பாடுவியள்.. எத்தினை புதினம் சொல்லுவியள். இண்டைக்கென்ன மெளன விரதமே? “இறைப்பு முடியட்டும் துலாவிலையிருந்து, இறங்கி வந்து சொல்லுறன்”. சுந்தரம் சொல்லி முடித்த போது கடைசிப் பாத்திக்குத் தண்ணீரைத் திருப்பி விட்டு இவர்களை


சாதிகள் இல்லையடி பாப்பா

 

 “சாதிகள் இல்லையடி பாப்பா….குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் இரண்டாம் வகுப்புக்குத் தமிழ் பாடம் படிப்பித்துக் கொண்டிருந்த தர்மலிங்கம் மாஸ்டர் இரண்டாம் வகுப்புத் தமிழ் புத்தகத்திலிருந்த இப்பாடலை இராகத்தோடு பாடினார்.இராகமாகப் பாடினாலும் குரலில் உணர்ச்சியோ சுருதியோ இல்லை கேலித்தனம் தொனித்தது.. அவர் பாடி முடித்ததும் மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து அதனைப் பாடினார்கள் இரு கைகளையும் தட்டி, ஒரு காலால் நிலத்தில் தாளம் போட்டு உற்சாகமாகப் பாடிக் கொண்டிருந்த மாணவர்களின் குரலில் பாட்டின் பொருளைப் புரிந்து கொண்ட உணர்ச்சி தெரிந்தது.


கை காட்டி மரம்

 

 “என்ரை பந்தைத் தாடா விது” “இந்தப் பந்து எனக்கு வேணும். நான் தர மாட்டன்” என்று சொல்லிக் கொண்டு ஒரு பந்தைத் தன் மார்போடு அணைத்து இறுகப் பிடித்தபடி கேற்றை நோக்கி ஓடினான் விதுஷன். அவனை துரத்திச் சென்ற மதுஷன் கேற்றின் அருகே விதுஷனைக் கீழே விழுத்திப் பந்தை அவனிடமிருந்து, பிடுங்கி எடுக்க அவன் கோபத்துடன் மதுஷனின் கையைத் தன் பற்களால் கடித்து[ப் பந்தைப் பறிக்க முயல, மதுஷன் விதுஷனின் தொடையில் தன் நகங்களால் ஊன்றிக் கிள்ளினான்.


பள்ளிக்கூடப் புதிர்

 

 “டேய்! அரவிந்தன் மாஸ்டர் வாறாரடா” ரியூற்றறி வாசலில் நின்ற மாணவர்கள் உள்ளே போய் வாங்குகளில் அமர்கின்றனர். வாசலில் சைக்கிளை நிறுத்தி விட்டு வகுப்புக்கு வருகிறான் அரவிந்தன். தன் இருக்கையில் அமர்ந்தவாறு கையைத் திருப்பி நேரம் பார்க்கிறான். பாடம் தொடங்க வேண்டிய நேரத்திற்குப் பத்து நிமிடங்கள் இருக்கின்றன. பயிற்சிப் புத்தகத்தை, எடுத்து விரித்து வைத்துக் கொண்டு படிப்பிக்க ஆரம்பிக்கிறான். “இண்டைக்கு அரவிந்த் சேர் புது மணிக்கூடு கட்டியிருக்கிறார் என்னடா ரஞ்சன்” “ ஓமடா புதுசு போலைத் தான் கிடக்கு”