பென்குயின் பயணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 28, 2019
பார்வையிட்டோர்: 31,643 
 

பென்குயின்( பறக்கமாட்டாது ஆனால் நீந்தும் தன்மை கொண்டது ) ஒரு சிறிய பறவை. அது எப்பொழுதும் பெரிய பொருட்களைப்பற்றியே கேள்விகேட்டுக்கொண்டிருக்கும்!

” கடல் எவ்வளவு ஆழத்திலிருக்கின்றது?”

“சூரியன் இரவில் நித்திரை செய்கின்றதா?” என்றெல்லாம் வினாவிக்கொண்டிருக்கும்.

இப்படித்தான் ஒரு நாள் அது வானத்தின் உயரம் எவ்வளவு? எனக்கேட்டுக்கொண்டிருந்தது…..

” பறந்து சென்று தானாகத்தெரிந்து கொண்டால் என்னவாம்? ” என்று கரகரப்பொலி எழுப்பியது அந்தவழியால் வந்துகொண்டிருந்த அல்பற்றோஷ் ( பசுபிக்கடலில் காணப்படும் வெண்மையான பறவை) என்னும் ஒரு பெரிய பறவை.

“நான் ஒரு பென்குயின் என்னால் பறக்க முடியாது”. என்றது பென்குயின். “அப்படியா? சரி – நீ விரும்பினால் நான் உன்னை என் முதுகில் ஏற்றிச்செல்கிறேன்” என்றது அல்பற்றோஷ்!
அவை பறவைக்கூட்டங்களைக்கடந்து மேலே நீல வானத்தில் பறந்தது!

ஆனால் வானம் அளவுக்குமீறிய உயரமாகவே இருந்தது! பென்குயினால் தொட முடியவில்லை!

“பறந்து செல்வது எனக்கு மகிழ்ச்சியாகவே இருகின்றது”

“ஆனால் தொடர்ந்தும் வானத்தின் உயரம் எவ்வளவு என அறியமுடியாதுள்ளது” என்றது பென்குயின்!

“எனக்கும் தெரியாது” “இதற்கு மேல் என்னால் பறக்க முடியாது” என்றது அல்பற்றோஷ்!

” என்னால் பறக்க முடியும் ” என்று கூப்பிட்டார் அந்த வழியால் வெப்பக்காற்று பலூனில் பறந்து வதுகொண்டிருந்த ஒருவர்!

“நீ விரும்பினால் என்னுடன் வரலாம்”

“ஆம் தயவு செய்து என்னைக்கூட்டிச்செல்லுங்கள்” என்றது பென்குயின்.

அவர்கள் பறந்து சில மென்மையான முகில்களைக்கடந்தார்கள்!

பென்குயின் அந்த முகில்களைப்பிடிக்க முயற்சி செய்தது! ஆனால் அவர்கள் அதனூடாக பறந்து சென்றார்கள்!

அங்கிருந்து பார்த்தால் நிலம் மிகவும் தூரமாகத்தெரிந்தது. ஆனால் வானம் அப்பொழுதும் நிலத்திலிருந்து பார்த்த உயரத்திலேதான் இருந்தது.

“பறந்து செல்வது மிகவும் அற்புதமானது” ” ஆனால் என்னால் வானத்தின் உயரத்தைத்தான் அறிய முடியவில்லை” என்றது பென்குயின்! “எனக்கும் தெரியவில்லை! ஆனால் இதைவிட உயரத்தில் என்னால் பறக்க முடியாது” என்றார் வெப்பக்காற்று பலூனில் இருந்தவர் !

“என்னால் பறக்க முடியும் உயரமாக” என்றார் அந்த வழியால் வந்துகொண்டிருந்த விண்வெளிப்பயணி! நீ விரும்பினால் என்னுடன் வர முடியும்” என்றார் அவர்!

“ஆம், தயவு செய்து என்னைக்கூட்டிச்செல்லுங்கள்” என்றது பென்குயின்! அவர்கள் மேலே மேலே பறந்தார்கள். நீல நிற வானத்தைக்கடந்து கருமஞ்சல் நிறமான விண்வெளி வரைக்கும் பறந்தார்கள். பறந்தார்கள், பறந்தார்கள் சந்திரன் வரைக்கும் பறந்தார்கள்! அங்கே விண்வெளிக்கப்பலை தரையிறக்கினார்கள்!

பென்குயின் சந்திரனில் அங்கும் இங்குமாக துள்ளிக்குதித்தது!

அத்துடன் மேலே நட்ச்சத்திரங்களைக்கண்டது.! ” இங்கேயும் நட்ச்சத்திரங்கள் தெரிகிறதே! ஒ ! சந்திரனைவிட நீண்ட உயரமாக இருக்கிறதே நட்ச்சத்திரங்கள்” என்றது பென்குயின்.

“ஆனால் வானம் எவ்வளவு உயரம்? என்பதற்கு எனக்கு இன்னும் விடை தெரியவில்லை”

எனக்கும் தெரியவில்லை! இதை விட உயரதில் எனனால் பறக்க முடியாது” என்றார் விண்வெளிவீரர்.

பென்குயின் மிக மிக உயரத்திற்கு வந்துவிட்டது. அதனால் தனது அம்மாவைப்பார்க்க முடியாது அத்துடன் தனது இக்குலுவையும் ( எக்சிமோக்கலின் பனிக்கட்டியாலான வீடு) பார்க்க முடியாது. நான் மிக மிக உயரத்திலிருக்கிறேன்,

“இப்பொழுது நான் வீட்டிற்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. என்றது” பென்குயின். இப்பொழுது அவர்கள் வீட்டை நோக்கி பறந்தார்கள்……

பென்கியின் தனது அம்மாவிடம் கூறியது “நான் பறவைகளைக்கடந்து சென்றேன். அத்துடன் முகில்களையும் கடந்து சந்திரனுக்குச்செல்லும் பாதைகளையும் கடந்து சென்றேன். ஆனால் வானம் மட்டும் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கிறது….! நான் நினைக்கிறேன் எனக்கு இப்போது விடை தெரியும்” என்றது பென்குயின். ” வானம் ஒரு போதும் முடிவடையாது! வானத்திற்கு முடிவு இல்லை” என்றது பென்குயின்.

பென்குயினின் தாயார் போர்வையை இழுது அணைத்துவிட்டார்.

“இதன் பொருள் என்ன தெரியுமா? நீ இன்னும் ஒரு நாள் கண்டுபிடிப்பிற்காகச்செல்லலாம்” இப்பொழுது “நன்றாகத்தூங்கு” எனக்கூறி முத்தமிட்டார் பென்குயினின் தாயார்.

– பல ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் மனங்களில் தவழ்ந்த “வானவில்” என்னும் இதழில் ஆனி மாதம் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த எனது சிறுவர் சிறுகதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *