சென்றது மீளாது

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 25, 2021
பார்வையிட்டோர்: 6,198 
 

ஐந்து வயதுடைய ஒரு ஏழை சிறுவன் அவன் பெயர் ஆதித்தன். அம்மாவின் பெயர் சாந்தி, ஆதித்தன் துரு துருவென்று இருப்பான்.

தன் நண்பர்களுடன் ஒற்றுமையுடனும் இருப்பான். ஆதித்தன் பள்ளியில் சேர்க்கப்பட்டு படிக்க ஆரம்பித்தான். படிப்பில் முதல் மாணவனாக இருப்பான்.

ஆதித்தன் நான்காம் வகுப்பு அடி எடுத்து வைக்கிறான். தன் நண்பர்கள் தன்னை விட்டு விலகி செல்கிறார்கள். ஆதித்தன் அழுக்கு முகத்துடனும், கிழிந்த சட்டையுடனும், செம்பட்டை தலையுடனும் இருப்பான்.

மற்றவர் பார்ப்பதற்கு அழகாக தெரியமாட்டான் . ஆதித்தனுக்கு ஒன்றும் புரியவில்லை.

துரு துருவென்று இருக்கும் ஆதித்தன் தனிமையில் தள்ளப்பட்டான். படிப்பில் கவனம் குறைய ஆரம்பித்தது. விளையாட்டில் ஆர்வம் குறைந்தது. அந்த சிறுவயதில் தன் நண்பர்கள் தன்னை விட்டு விலகி இருப்பதை ஆதித்தனால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆதித்தன் பரிட்சையில் குறைவான சதவீதம் வாங்கியதால் ஆசிரியரால் அடிக்கப்பட்டு கை, கால், வீக்கமாக இருந்தது.

அதை பார்த்த தன் தாய் கதறி அழுதாள்!!!

ஏன் அடித்தீர்கள் ? என்று கேட்டால் தன் மகனை பள்ளிக்கூடம் வரவேண்டாம் என்று கூறிவிடுவார்களோ என்று அதை பற்றி ஒன்றும் கேட்கவில்லை . தன் மகன் நன்றாக படித்து தன்னை இந்த உலகத்திற்கு அடையாளம் காட்டவேண்டும் என்பது தான் அம்மாவின் ஆசை.

அம்மாவிடம் அம்மா என் நண்பர்கள் யாருமே என்னிடம் பேசுவது இல்லை என்று ஆதித்தன் கூறுவான். சாந்தி தன் மகனை கட்டி அனைத்து நீ நன்றாக படி உன் நண்பர்கள் உன்னிடம் வந்து பேசுவார்கள், பழகுவார்கள், என்று கூறி தன் மகன் நெற்றியில் முத்தம்மிடுவாள் .

தன் அம்மாவின் மடியில் அழுதுகொண்ட . . . . தூங்கிவிடுவான். சாந்திக்கு தான் தெரியும் தன் மகனின் அழுகையின் அர்த்தம்.

சாந்தி ” தமிழ் முதுகலை பட்டதாரி ” என்பது அவளுக்கு மட்டும் தான் தெரியும்.

தன் கணவன் பள்ளி படிப்போடு நிறுத்திவிட்டார். இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள் இவர்கள் வாழ்க்கை நன்றாக இருந்தது.

தன் மனைவி ஒருவரிடம் பேசும் விதம், பழகும் விதம், ஒரு பட்டதாரி என்பதை வெளிக்காட்டும். சிலவருடம் கழித்து கணவன் தன் மனைவிடமிருந்து விலக ஆரம்பித்தார். இதை புரிந்து கொண்ட சாந்தி தன்னை ஒரு படிப்பறிவு இல்லாத பெண்ணைபோல் மாற்றி கொண்டாள்.

தனக்குள் ஒரு வட்டத்தை போட்டுகொண்டு வாழ ஆரம்பித்தாள்.

தன் கணவனோடு கூலி வேளைக்கு போக ஆரம்பித்தாள். தன் குடும்பம் முன்னேற்றம் அடையவில்லை தன் குழந்தைகளுக்கு தேவையான தேவைகளை கூட செய்துகொடுக்க முடியவில்லை.

இதை நினைத்து கண்ணீர் விட்டுக்கொண்டே ………. தன் மகன் தமிழ் புத்தகம் அருகில் இருந்தது அதை எடுத்து புரட்டி பார்த்தாள்.

“சென்றது மீளாது” பாரதியார் கவிதை ஒன்று இருந்தது, அதை படித்தாள் மனதில் ஒரு புத்துணர்வும், உடம்பில் ஒரு சிலிர்ப்பும் ஏற்பட்டது

“தமிழில் முதுகலை பட்டம் பெற்றவள்” ஆதலால், பாரதி கவிதை அர்த்தம் புரிந்து கொண்டாள். அருகில் இருந்த குறிப்பேடை எடுத்து கிறுக்கியவாறு தன் மகனை தட்டி கொடுத்துக்கொண்டே சுவற்றில் சாய்த்து தூங்க ஆரம்பித்தாள்.

சென்றது மீளாது

சென்றதினி மீளாது, மூடரே! நீர்

எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து

குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம் இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு

தின்று விளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர் ;

தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா

பொருள் :

“ஒரு விடயம் முடிந்துவிட்டால் அது மீண்டும் கிடைப்பது கடினம். ஆகையால், முடிந்ததையே எப்போதும் நினைத்துக்கொண்டிருந்து கவலை என்னும் குழியில் விழவேண்டாம். இன்று தான் நாம் புதிதாய் பிறந்தோம் என்று நினைந்திக்கொண்டு, நல்ல எண்ணங்களை நமக்குள் புதிதாய் விதைத்து வாழவேண்டும். அப்படி செய்கையில் நம் தீமைகள் அனைத்தும் அழிந்து போகும் என்கினார் பாரதியார் “.

நாம் வீணடித்த இந்த பத்து வருடங்களை பற்றி கவலை படவேண்டாம்.

இனி வரும் காலங்களை வீணடிக்காமல் நம்முடைய கனவுக்காகவும்,

தன் மகன் வளர்ச்சிக்காகவும் நமக்குள் போட்டுக்கொண்ட இந்த வட்டத்தை விட்டு வெளியே வரவேண்டும் என்று முடிவு பண்ணினாள் சாந்தி .

நம் கணவருக்கும், மற்றவருக்கும் நாம் படிப்பறிவு அற்றவர்போல் நடித்துக்கொண்டு, ஆதித்தன் ஆசானாகவும், சாந்தி முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியாகவும் ஒரு கதாபாத்திரம் உருவாக்கினாள் . சாந்தியும் தன் மகனோடு முதலாம் ஆண்டிலிருந்து படிக்க ஆரம்பித்தாள். தன் மகனுக்கு நல்ல நண்பராகவும், நல்ல அம்மாவாகவும், தன்னை மாற்றிக்கொண்டாள்.

ஆதித்தனுக்கு நண்பன் இல்லை என்கிற குறை அவனிடமிருந்து ஓடிப்போனது ஆதித்தன் நல்லா படிக்க ஆரம்பித்தான் நல்ல மதிப்பெண்ணும் பெற்றான்.

சாந்தியின் வாழ்க்கை சில வருடம் கழிந்தது. ஆதித்தனும் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்தான். ஆதித்தனுக்கு வாழ்க்கையின் யதார்த்தம் புரிந்து அவன் வாழ்க்கையில் வரும் துன்பம், வளர்ச்சிக்கு வரும் தடைகளை தகர்த்து எரிந்து முன்னேற ஆரம்பித்தான். ஆதித்தன் மனதில் ஒன்றே ஒன்று மட்டும் தான் இருந்தது .

“சாந்தி ஆதித்தனிடம் ஒரு மந்திரம் கூறினாள்“. அது மட்டுமே அவன் மனதில் இருந்தது .

ஆதித்தன் இளங்கலை பட்டம் பெற்றார் . அதை தொடர்ந்து முதுநிலை படிக்க கல்லூரி சேர்ந்தார். ஆதித்தன் கல்லூரியில் முதல் மாணவனாக இருப்பதால் முதுநிலை படிப்புக்கு தேவையான செலவுகளை கல்லூரி ஏற்றுக்கொண்டது. முதுநிலை பட்டமும் பெற்றார் . ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியில் அமர்ந்தார். தன் தகுதியை மென்மேலும் வளர்த்துக்கொண்டார் ஆதித்தன். ஆதித்தன், ஒரு சிறுகதை பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கெடுத்துக்கொண்டார். ஆதித்தன் அந்த நிகழ்ச்சியில் உரையாடி முடித்தார். சிறுகதை எழுத்தாளர்களுக்கு சான்றிதழும், பரிசு பொருளும், பரிசளிக்க ஆரம்பித்தார்.

இறுதியில் ஆதித்தனுக்கு ஒரு பெரிய இன்ப அதிர்ச்சி !!!! ….. அருகில் தன் “தாய்” “முதல் சிறுகதை எழுத்தாளர் ” பரிசு பெறுவதற்காக கண்ணீர் மல்க கையேந்தி நின்றாள்.

ஒரு நிமிடம் எதுவும் பேசமுடியாமல் திகைத்து நின்றார் ஆதித்தன்.

தன் மகனிடம் பரிசை பெறுகிறோம் என்று மிகுந்த சந்தோசம் சாந்திக்கு, என் கனவு நிறைவேறி விட்டது என்று பூரிப்பு அடைந்தாள் சாந்தி.

ஆதித்தனுக்கும் இது ஒரு முதல் வெற்றியாக எடுத்துக்கொண்டார். சான்றுதலை வாங்கிக்கொண்டு மேடையிலிருந்து இறங்கினாள் சாந்தி. சிறப்பு பரிசு பெறுவதற்கும் சாந்தியை தேர்ந்தெடுத்தார்கள். மறுபடி, சிறப்பு பரிசு பெறுவதற்காக மேடை ஏறினாள் சாந்தி.

பரிசு பெற்று ஓரிரு வார்த்தைகள் பேச சொன்னார்கள். சாந்திக்கு மேடையில் பேசி பழக்கம் இல்லை தயங்கி நின்றாள். ஆதித்தன் அருகில் வந்து நீங்கள் ஒரு படைப்பாளி உங்களால் தயங்காமல் பேசமுடியும் பேசுங்கள் என்றார்.

சாந்தி தயங்கிக்கொண்டே பேச ஆரம்பித்தாள். எனக்கு பேச வாய்ப்பளித்த இந்த நல் உள்ளங்களுக்கு நன்றி என்று பேச ஆரம்பித்தாள். நான் இந்த சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கி காணப்பட்டேன்.

“நான் என் மகனுக்கு வசதியை கொடுக்கவில்லை வாய்ப்பை கொடுத்து வளர்த்தேன் ”

அவன் இந்த சமூகத்தில் பட்ட கஷ்டங்களை பார்த்தேன், அவனோடு சேர்ந்து அழுதேன், ஒரு நாள் என் மகன் பட்ட கஷ்டங்களை விட்டு வெளியே வருவான் திறமையை வளர்த்து கொள்வான் என்று நம்பினேன். அவனும் இந்த சமூகத்தில் முட்டி, மோதி, போராடி, ஒரு பெரிய பட்டதாரியானான்.

ஒரு காலத்தில் நான் என் மகனிடம் மாணவியாக தோன்றி படித்து வந்தேன். என் மகன் நான் நல்ல படித்தால் எனக்கு பென்சில், பென், பரிசு கொடுப்பான் இன்று என் மகன் ” சிறந்த சிறுகதை படைப்பாளி விருது” கொடுக்கிறான்.

மேடையில் அமர்ந்திருக்கும் அனைவர்க்கும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது!!!!

ஆதித்தன் அம்மாவா சாந்தி என்று, அன்று நான் கண்ட கனவு இன்று நிறைவேறியது என்றால் சாந்தி .

“நான் ஒரு முதுநிலை பட்டதாரி” மேடையில் அமர்ந்திருக்கும் அனைவர்க்கும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது!!!!

ஆதித்தன் மறுபடி வியந்து நிற்கிறார்!!!! என் அம்மா ஒரு முதுநிலை பட்டதாரியா என்று,

ஏன்? நம்மிடம் இதை மறைத்து வைத்தார்.

எத்தனையோ பெண்கள் தன் சூழ்நிலை காரணமாக நம்முடைய இயல்பு குணத்தையும், நமக்கான கனவு, அனைத்தையும் மறந்து வாழ்கிறார்கள்.

எத்தனை சூழ்நிலை இருந்தாலும், நமக்கான இலட்சியத்தை கைவிட கூடாது.

நம்மால் முடியாதது எதுவும் இல்லை.

நாம் பிறந்ததற்கு அர்த்தம் தான் என்ன?

பெண்களாகிய நாம் குழந்தை பருவத்தில் அப்பாவின் உதவியோடு வளர்கிறோம், சில ஆண்டுக்கு பிறகு தன் சகோதரன் உதவியோடு வாழ்கிறோம், இப்படி ஒவ்வொரு தருணத்திலும் மற்றவர் கை பிடித்து வாழ்கிறோம்.

நமக்கு திருமணம் நடந்த பிறகு நமக்கென்று ஒரு பொறுப்பு கொடுக்கப்படுகிறது சூழ்நிலையால், குடும்பத்தில் நமக்கான பொறுப்பை நம்மால் சரியாக நடத்தமுடியும்போது

ஏன் ? நமக்கான இலட்சியத்தை அடைய முடியாது. நமக்கென்று ஒரு இலக்கு இருந்தால் நம்மால் அந்த இலக்கை அடையமுடியும்.

என் வாழ்க்கை ஒரு இருட்டறையில் இருந்தது. நம் பாரதி கவிதைகள் என் இலக்கு என்னவென்று கண்டெடுக்க செய்தது. நான் என் கடமைகளை செய்த முடித்த நேரத்தில் எனக்கான நேரத்தை தேர்ந்தெடுத்தேன்.

அந்த நேரத்தில் சிறுகதை தொடர், கவிதைகள், எழுதுவேன். என் தோழி ஒரு நாள் என்னுடைய கவிதை நோட்டை பார்த்தாள்.

அவள் ஆச்சிரியமாக கேட்டாள் உனக்கு கவிதை எழுத தெரியுமா!!!!! என்று நான் கல்லூரியில் படிக்கும் பொது கவிதை போட்டியில் கலந்துகொண்டு சான்றுதல் வாங்கியதை காட்டினேன்.

வாழ்த்துக்கள் சாந்தி கை குலுக்கினாள். இந்தமாதிரியான பாராட்டுதலை கேட்டு பல ஆண்டுகள் ஆனது. இந்த குறிபேடு கொடு நான் படித்துவிட்டு தருகிறேன் என்று வாங்கி கொண்டாள்.

ஆறுமாதம் கழித்து வாரமலரில் சாந்தியின் பெயர் புகைப்படத்தோடு கவிதை போட்டியில் முதல் கவிதையாக இடம்பிடித்திருந்தது.

அதை பார்த்த சாந்திக்கு பெரிய அதிர்ச்சி!!!! நம்பவே முடியவில்லை.

எப்படி இது நடந்தது என்று குழப்பத்தில் இருந்தாள்.

தன் தோழி கைபேசியின் மூலம் அழைத்து நான் தான் உன் கவிதையை தேர்ந்தெடுத்து வாரமலர்க்கு அனுப்பினேன் என்றாள். உன் திறமை உன்னோடு இருந்தால் அது யாருக்கு பயன்?

உன்னை போன்ற பெண்கள் வீட்டில் அடைபட்டு இருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் நீ ஒரு எடுத்துக்காட்டாக திலகவேண்டும். அதற்காகத்தான் நான் உன் திறமையை உலகுக்கு அறிமுக படுத்தினேன் என்றாள்.

சாந்திக்கு ஆனந்த கண்ணீர் மல்க சந்தோசம் அடைந்தாள். நமக்கான இலக்கை தெரிந்து கொண்டு அதன் வழி சென்றோம் என்றால், நாம் அனைவரும் ஒரு படைப்பாளி தான்.

நாம் இந்த உலகத்தை விட்டு செல்லும்போது,

“அடுத்த தலைமுறைக்கு வளர்ச்சிக்கான வழியை காட்டிவிட்டு செல்வோம்“

“நம் பிறப்பிற்கான அர்த்தத்தை தெரிந்து கொண்டு செல்வோம்” என்று சாந்தி ஒரு கவிதையின் மூலம் தன் உரையை முடித்துக்கொள்கிறாள்.

உன் இலக்கை தேடு

உன்னிடம் நீ கேள்? உன் இலக்கு என்னவென்று

தெரியும்!!!

உன் இலக்கிடம் நீ கேள்? உன் தடைகள் என்னவென்று

தெரியும்!!!

உன் அறிவிடம் நீ கேள்? உன் தடைகளை உடைக்க வழி

தெரியும்!!!

உன் தடைகளை உடைத்தெரிந்து வெளியே வா…….

நீ! யாரென்று இந்த உலகிற்கு

தெரியும்!!! .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *