கிராதார்ஜுனீயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 11, 2022
பார்வையிட்டோர்: 4,581 
 

பாகம் நான்கு | பாகம் ஐந்து

ஒரே சமயத்தில் சிவனுடைய , அர்ஜுனனுடைய இருவரின் பாணங்களும் காட்டுப் பன்றியின் மீது தைத்தன. வேடன் உருவில் உள்ள சிவ பெருமான், ஒரு காட்டுவாசியை அர்ஜுனனிடம் அனுப்பி வைத்தார். அவன் அர்ஜுனன் சமீபம் வந்து போற்றி வணங்கி கூறுகிறான், “ஐயா, நீங்கள் அரசர்களில் சிறந்தவர் என்று நினைக்கிறேன். அதனால் எனது வணக்கங்களை உங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். இந்த காட்டுப் பன்றியின் மீது பதிந்துள்ள பாணம் எங்கள் எஜமானருடையது. மஹாபுருஷரே, சிவனுடைய பாணத்தை அபகரிப்பதோ அல்லது திருடுவதோ கூடாது. அதனால் பாணத்தைக் கொடுத்து விடுங்கள்.” என்று அஸ்திரத்தைக் கேட்கிறான்.

சிவனுடைய பாணம் எங்காவது மறைந்து கிடக்கலாம். இது என்னுடைய பாணம். சூரனாகிய எனக்கு அடுத்தவர்களுடைய பாணத்தை அபஹரிக்க லேண்டிய அவசியம் இல்லை. பாணங்கள் இரண்டும் ஒரே சமயத்தில் எய்யப்பட்டன். அதனால் இந்த பாணம் சிவனுடையது என்று சொல்வது உசிதம் அன்று. நான் வனவாசி. காட்டுப் பன்றிகளைக் கொல்வதற்கு எனக்கு அதிகாரம் உள்ளது.” என்றான் அர்ஜுனன்.

திரும்பிச் சென்ற காட்டுவாசி சிவனிடம் சென்று இவையனைத்தும் கூறுகிறான். கோபம் அடைந்த சிவன் தனது பூதகணங்களை அனுப்புகிறார். அர்ஜுனனிடம் போரிட்ட பூதகணங்கள் தோல்வி அடைகின்றனர். அதனால் சிவகுமாரன் கார்த்திகேயனை போருக்கு சிவன் அனுப்பி வைக்கிறார். கார்த்திகேயனும் தோல்வி அடைந்து திரும்புவதால் சிவபிரான் தானே அர்ஜுனனுடன் போர் செய்ய கிளம்புகிறார்.

வேடனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே வெகு பயங்கரமான போர் துவங்கியது. யுத்தத்தைப் பார்த்த தேவர்கள் அதிசயித்து வியந்தனர். யுத்த்தில் வேடன் அதீத சிறப்புடன் விளங்குகிறான். அதனைக் கண்ட அர்ஜுனன் ஊஹிக்கிறான். “இந்த வேடனிடம் ரத சைனியங்கள் ஏதும் இல்லை. இருந்தாலும் எனது சாமர்த்தியத்தை தனது பலத்தினால் குறைவு படச் செய்கிறான். ஆனால் நான் வேடனல்ல. அதனால் இந்த வேடனை எனது திவ்ய அஸ்திரங்களை உபயோகித்து வெற்றி பெறலாம்” என்று அர்ஜுனன் ஊஹம் செய்கிறான்.

அர்ஜுனன் தனது பிரஸ்வாபனம் என்னும் பெயருடைய அஸ்திரத்தைச் செலுத்துகிறான். அதனால் சிவனுக்கு கோபம் உண்டாகின்றது. கோபத்தினால் அவரது மூன்றாவது கண் திறந்தது. பிரஸ்வாபனம் அஸ்திரம் செயல் இழந்து போனது. அடுத்து தனது நாகாஸ்திரத்தை அர்ஜுனன் ஏவுகிறான். சிவனால் நாகாஸ்திரமும் செயல் இழக்க வைக்கப்பட்டது.

அஸ்திரங்கள் செயல் இழந்த போனதால் தனது தோள் வலிமையைக் காட்ட மற்போர் ஆரம்பித்தது. இருவரும் பெரும் குரலில் ஒலி எழுப்பி யபடி மிக கடுமையாகப் போரிட்டனர் இருவரது சரீரங்களில் இருந்தும் ரத்தம் வழிந்தன. காயங்களுடன் காணப்பட்டனர்.

யுத்த்தின் நடுவே சிவன் மேலே எழும்ப அதே சமயத்தில் அர்ஜுனன் அவரது பாதங்களைப் பற்றி இழுக்கிறார். தனது பாதங்களை அர்ஜுனன் பற்றியதும் சிவ பெருமான் மகா ஆனந்தம் அடைந்தார். சிவன தனது வேடன் உரவில் இருந்து நிஜ ரூபத்தில் காட்சியளித்தார். சிவ பெருமானைக் கண்ட அர்ஜுனனும் மனமகிழ்ந்து வணங்குகிறான். சிவனும் மகிழ்ந்து அர்ஜுனனை அரவணைத்தார். அந்த கணத்தில் தேவர்கள் பூமாரிப் பொழிந்தனர் கந்தர்வர்கள் தேவ கானம் இசைத்தனர்.

அர்ஜுனன் சிவபிரானை வணங்கி சத்ருக்களை வெற்றிக் கொள்ள வேண்டிய சாதனங்களை தந்து அருளுமாறு வேண்டுகிறான். சிவபிரான் தனது பாசுபத அஸ்திரத்தை தந்து அருளுகிறார். தனுர் வேதத்தினைக் கற்றுக் கொடுக்கிறார். அர்ஜுனன் தனுர் வேதத்தைப் படித்த படி சிவபெருமானை வலம் வந்து வணங்கி தொழுகிறான்.

இதனைக் கண்டு மகிழ்ந்த இந்திராதி தேவர்களும் அவர்களுடைய பலவிதமான அஸ்திரங்களையும் அரஜூனனுக்கு கொடுத்து அருள்கிறார்கள். இதன் பின் சிவனுடைய கட்டளையை அனுசரித்து அரஜுனன் தனது இருப்பிடத்திற்குச் சென்றான்.

இதுதுடன் கிராதார்ஜுனீயம் கதை நிறைவடைகிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *