சேற்றில் மலர்ந்த செந்தாமரை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 18, 2019
பார்வையிட்டோர்: 6,735 
 

அத்தியாயம்-22 | அத்தியாயம்-23 | அத்தியாயம்-24

செந்தாமரை “டாக்டர் முதலில் எங்க மாமாவுக்கு ஒரு கண்ணை ‘ஆபரேஷன்’ பண்ணுங்க. அவருக்கு அந்த கண் சரியா ஆனதும்,நீங்க அடுத்து எங்க அக்காவுக்கு கண்னை ‘ஆபரேஷன்’ பண்ணுங்க.நான் இப்பவே ஐம்பதாயிரம் ரூபாய் கட்டி விடறேன்”என்று சொன்னதும் அந்த கண் டாக்டர் “சரிம்மா.நீங்க பணத்தை கட்டி விடுங்க” என்று சொன்னதும், செந்தாமரை தன் அக்காவை மட்டும் அழைத்துக் கொண்டு போய் கண் ஆபரேஷனுக்கு எங்கே பணம் கட்ட வேண்டும் என்று கே ட்டு அந்த இடத்தில் ஐம்பதாயிரம் ரூபாயை கட்டி விட்டு வந்தாள்.

அடுத்த நாள் காலை எட்டு மணிக்கு கமலாவும்,செந்தாமரையும்,சேகரை அந்த கண்’ நர்ஸிங்க் ஹோமுக்கு’க் கொண்டு வந்து சேர்த்தார்கள் கண் டாக்டர் சேகருக்கு ஒரு கண்ணை ஆபரேஷன் பண்ணி விட்டு அந்த கண்ணிலே ‘பாண்டேஜ்’ போட்டு வெளியே அழைத்து வந்தார்.”இவரை மறுபடியும் மூனு நாளைக்கு அப்புறமா மறுபடியும் இங்கே அழைச்சி கிட்டு வாங்க.நான் இவருடைய அடுத்த கண்ணையும் ஆபரேஷன் பண்றேன்”என்று சொன்னார்.மூன்று நாள் கழித்து கமலாவும் செந் தாமரையும் சேகரை அழைத்துக் கொண்டு அடுத்த கண்ணையும் ‘ஆபரேஷன்’ பண்ணீக் கொண்டு வீட்டிற்கு வந்தார்கள்.அவர்கள் ‘ஆர்டர்’ பண்ண கண் கண்ணடி வந்து இருக்கு என்று அந்த கண் கண்ணாடிக் கடையில் இருந்து போன் வந்ததும்,செந்தாமரை கண் கண்ணடியை வாங்கி வந்து சேக ரை போட்டுக் கொள்ள சொன்னாள்.சேகர் கண்ணடியைப் போட்டுக் கொண்டதும்,அவருக்கு பழைய படி கண்கள் நன்றாகத் தெரிய ஆரம்பித்தது.சேகர் சந்தோஷத்துடன் செந்தாமரையையும்,கமலாவை யும் பார்த்து “இப்ப என் கண்ணு ரெண்டும் ரொம்ப நல்லாத் தெரியுது” என்று சந்தோஷத்துடன் சொன் னான்.செந்தாமரை அடுத்த நாளே கமலாவை அந்த கண் ‘நர்ஸிங்க் ஹோமில் சேர்த்து, அவளுடைய ரெண்டு கண்களையும் ஆபரேஷன்’ பண்ணி வந்து,ஒரு மாசம் கழித்து அவளுடைய கண் ‘பவரை’ எழுதி வாங்கிக் கொண்டு வந்து கண் கண்ணாடிக் கடையில் கண்ணாடி ஆர்டர் பண்ணீ,கண் கண்ணாடி ரெடி ஆகி வந்ததும்,அதை வாங்கி வந்து கமலாவை போட்டுப் பார்க்கச் சொன்னாள்.கண் கண்ணாடியைப் போட்டுக் கொண்டதும் கமலாவுக்கும் பழைய படி கண்கள் ரெண்டும் நன்றாகத் தா¢ய ஆரம்பித்தது.

சேகரும் பழைய கெட்ட வழக்கங்களை எல்லாம் விட்டு விட்டு,அடிக்கடி கமலாவை அழைச்சுக் கிட்டு கோவில்களுக்கு எல்லாம் போய் வந்து கொண்டு இருந்தான்.இதைப் பார்த்ததும் கமலா சேகர் மேலே இருந்து பழைய கோவத்தை எல்லாம் மறந்து விட்டு அவருடன் சந்தோஷமாக குடித்தனம் பண்ணீ வந்துக் கொண்டு இருந்தாள்.இதைப் பார்த்த செந்தாமரையும் செல்வியும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

செல்வி செந்தாமரையைப் பார்த்து ”சித்தி,நீங்க எங்க அப்பாவை கண்டு பிடிச்சு கொடுத்து, அவருக்கும்,அம்மாவுக்கும் கண் ஆபரேஷன் பண்ணீ அவங்களுக்கு பழையபடி கண் ரெண்டும் நல்லா தெரியறா மாதிரி கண் கண்ணாடியும் வாங்கிப் போட்டு இருக்கீங்க.நாங்க மூனு பேரும் உங்க ளுக்கு எவ்வளவு ‘தாங்க்ஸ்’ சொன்னாலும் போதாது சித்தி”என்று சித்தியின் கைகளைப் பிடித்துக் கொண்டு தன் கண்களில் கண்ணீர் முட்ட முட்ட சொன்னாள்.உடனே செந்தாமரை ”செல்வி,அவங்க ரெண்டு பேரும் உனக்கு அப்பா,அம்மா,ஆவதற்கு முன்னாலேயே,எனக்கு அவங்க ரெண்டு பேரும் அக்கா மாமா.நான் அவங்களுக்கு இந்த உதவியை பண்ணாம வேறே யாருக்கு பண்ண போறேன்” என்று சொன்னதும் செல்வி உடனே “சித்தி,உங்க கிட்டே பேசி யாரும் ஜெயிக்கவே முடியாது. நீங்க ஒரு ‘பார்ன் இன்டெலிஜெண்ட் வுமன்’” என்று சொல்லி செந்தாமரையைப் புகழ்ந்தாள்.

அன்று இரவு செந்தாமரை படுத்துக் கொண்டு தூக்கம வராமல் யோஜனை பண்ணிக்கொண்டு இருந்தாள். ‘நாம இந்த குடும்பத்துக்கு வந்து நம்ம அப்பா,அம்மா,அக்கா இவர்களுக்கு இத்தனை வருஷமா உதவியா இருந்து வந்தோம்.இப்ப அப்பாவும்,அம்மாவும் அவர்கள் காலம் முடிஞ்சவுடன், இந்த உலகத்தை விட்டுப் போய் விட்டாங்க.நாமும் அவங்களுக்கு எல்லா ‘காரியங்களையும்’ செஞ்சு முடிச்சோம்.ராணீயை படிக்க வச்சி,அவ ஆசை பட்டவரை அவளுக்கு கல்யாணம் பண்ணீ வச்சோம். அவ இப்ப அவ புருஷனோடும்,குழந்தையோடும் சந்தோஷமா இருந்து வறா.செல்வி டாக்டர் படிப்பு படிச்சி விட்டு,அவ ஆசை பட்டா மாதிரி ஒரு டாக்டரா ஆகி சந்தோஷமா வாழ்ந்து வறா.அவளுக்கும் கை நிறைய வம்பளம் வருது.அவ வேறே ‘நான் கல்யாணமே பண்ணீக்கப் போறதில்லே, ‘அன்னை தெரஸா’ மாதிரி வாழ்ந்து வந்து நிறைய ஏழை ஜனங்களுக்கு வைத்தியம் பண்ணி வரப் போறேன்னு சொல்லிட்டா.இந்த வீட்டிலே அவங்க மூனு பேரும் சந்தோஷமா வாழ்ந்து வர போறாங்க.அக்காவுக்கு இப்ப அவளை விட்டு ஓடிப் போன புருஷன் மறுபடியும் கிடைச்சு,அவரும் அடிக்கடி கோவில்களுக்கு எல்லாம் போய் வந்து,மனம் திருந்தி ஒரு நல்ல மனுஷர் போல வாழ்ந்து வந்து கிட்டு இருப்பதைப் பாத்து சந்தோஷமா இருந்து வறாங்க.அவங்க ரெண்டு பேரையும் ஒரு கஷ்டமும் இல்லாம சந்தோஷ மா வச்சு கிட்டு வர இப்ப செல்வி அவங்க கூட இருக்கா.இனிமே நாம இங்கு இருந்து என்னப் பண்ணப் போறோம்.நாம தனியா இருந்து வந்தா நமக்கு வரும் சம்பளத்தை நிறைய ஏழை குழந்தை களுக்கும்,அனாதையா இருக்கும் வயசான முதியவர்களுக்கும் குடுத்து அவர்கள் எல்லோ¡ரையும் சந்தோஷமாக வச்சு கிட்டு வர வேணும்’என்று மிகவும் ஆசைப்பட்டாள் செந்தாமரை.

அவள் ஒரு தீர்மானத்திற்கு வந்தாள்.‘நாளைலே இருந்து பள்ள்ளிக் கூடம் திறக்கப் போவுது. நாம பள்ளிக் கூடத்திற்கு மிக அருகாமையில் இருக்கும் ஒரு ‘லேடீஸ் ஹாஸ்டலில் ஒரு ரூமை எடுத் துக் கிட்டு அங்கு இருந்துக் கொண்டு,நம்முடைய ஆசையை செஞ்சு வந்தா என்ன.இனிமே நாம இந்த குடும்பத்தில் இருந்து ஒன்னும் செய்யப் போவதில்லையே. மாறாக அக்காவுக்கும் மாமாவுக்கும் நாம இடைஞ்சலாகத் தான் இருந்து வரப் போறோம்.வெளீயே போய் இருந்தா நாம ஆசைப் பட்டதை எல்லாம் தாராளமா செஞ்சு வரலாமே’ என்று தன் மனதில் நினைத்தாள்.உடனே செந்தாமரை எழுந் துக் கொண்டு தன் துணிமணிகளை ரெண்டு ‘சூட் கேஸில்’’பாக்’ பண்ணீ வந்துக் கொண்டாள்.

காலையில் எழுந்ததும் பல்லைத் தேய்த்துக் கொண்டு வந்தவுடன் கமலா செந்தாமரைக்கு ‘காபியை’க் கொடுத்தாள்.அவள் ‘காபியை’ ருசி பார்த்து குடித்துக் கோண்டு இருக்கும் போது சேக ரும் செல்வியும் எழுந்து வந்து விட்டார்கள்.‘காபியை’க் குடித்தவுடன் செந்தாமரை நிதானமாக “அக்கா,மாமா,செல்வி,நான் ராத்திரி ஒரு முடிவுக்கு வந்து இருக்கேன்.இனிமே நான் இங்கே இருந்து செய்யப் போவது ஒன்னும் இல்லே.நீங்க மூனு பேரும் சந்தோஷமா இருந்து வாங்க.நான் எங்க பள்ளீக் கூடத்திற்கு கிட்ட இருக்கும் ஒரு வசதியான ‘லேடீஸ் ஹாஸ்டலில்’ போய் தங்கி இருந்துக் கிட்டு, எனக்கு வரும் சம்பளத்தில் என் செலவு போக,மீதி பணத்தை நீறைய ஏழை குழந்தைகளுக்கும்,வய சான முதியவர்களுக்கும் குடுத்து வந்து அவங்களே சந்தோஷமாக வாழ வச்சு பாக்க ரொம்ப ஆசைப் படறேன்.நீங்க முனு பேரும் இந்த வீட்டிலே சந்தோஷமாக இருந்து வாங்க” என்று சொன்னதும் கமலா உடனே “செந்தாமு,நீ எங்களை விட்டு தனியாப் போவகூடாது.நீ எங்க கூடவே இருந்து வா. எங்களெ வுட்டுட்டு நீ எங்கேயும் போவக் கூடாது”என்று செந்தாமரையின் கைகளைப் பிடித்து கெஞ்சி னாள்.சேகரும் “ஆமாம் செந்தாமு,நீ எங்க கூடவே இருந்து வா”என்று கெஞ்சும் குரலில் சொன்னான். செல்வியும் “ஆமாம் சித்தி,நாங்க எல்லாரும் இருக்கும் போது நீங்க ஏன் சித்தி தனியா இருந்து வரணு ம் எங்க கூடவே இருந்து வாங்க” என்று அவளும் செந்தாமரை கையை பிடித்துக் கொண்டு கேட்டாள்.

அவர்கள் மூனு பேருக்கும் செந்தாமரை ” நீங்க மூனு பேரும் ‘என்னை இங்கேயே இருங்க’ ன்னு கேட்டதுக்கு நான் உங்களுக்கு ரொம்ப ‘தாங்ஸ்’ சொல்றேன்.ஆனா எனக்கு வாழக்கைலே இன்னும் சில ஆசைகள் இருக்கு.நான் அவைகளை செஞ்சு வர நான் தனியாத் தான் இருந்து வந்தா தான் செஞ்சு வர முடியும்.என்னைத் தயவு செஞ்சி தடுக்காதீங்க” என்று சொல்லி விட்டு எழுந்துப் போய் விட்டாள்.செந்தாமரை அப்படி தீர்மானமாக சொல்லி விட்ட பிறகு யாரும் ஒன்னும் சொல்ல வில்லை.
செந்தாமரை அக்கா கொடுத்த நாஷ்டாவை சாப்பிட்டு விட்டு ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு பள்ளிக் கூடத்திற்குக் கிளம்பினாள். மதியம் டயம் கிடைத்தபோது செந்தாமரை அருகில் இருக்கும் ஒரு வசதியான ‘லேடீஸ் ஹாஸ்டலுக்கு’ப் போய், தன்னை அறிமுக படுத்திக் கொண்டு,தான்அந்த ‘ஹாஸ்டலில்’ நிரந்தரமாக தங்கி வர ஒரு ரெண்டு ரூம் உள்ள வசதியான போர்ஷனை’ வாடகைக்கு எடுத்துக் கொண்டாள்.சாயங்காலம் பள்ளி கூடம் முடிந்த பிறகு வீட்டிற்கு வந்தாள்.அக்காவிடமும் சேகா¢டமும்” நான் காத்தாலே சொன்னா மாதிரி நான் எங்க பள்ளீக் கூடத்திற்கு பக்கத்திலே இருக் கிற ஒரு வசதியான ‘லேடீஸ் ஹாஸ்ட லில்’ ரெண்டு ரூமை வாடகைக்கு எடுத்து கிட்டு இருக்கேன். அந்த ‘லேடீஸ் ஹாஸ்டல்’ பேரு ‘சாரதா லேடீஸ் ஹாஸ்டல்’ என் ரூம் நம்பர் 26.நான் இனிமே அங்கே தங்கி இருக்கப் போறேன்.செல்வி வீட்டுக்கு வந்தவுடன் தயவு செஞ்சி சொல்லி விடுங்கக்கா” என்று சொல்லி விட்டு தன் ரூமுக்குப் போய் தன்னுடைய ரெண்டு ‘சூட் கேஸ்களையும் எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள்.கமலா செந்தாமரையைப் பார்த்து “செந்தாமு,நாங்க எவ்வளவோ சொல்லியும் நீ கேக்கலே.நீ தனியா இருந்து வரணும்ன்னு பிடிவாதமா சொல்லிட்டே.அங்கே போய் நீஆசை பட்டா மாதிரியே வாழ்ந்து வாம்மா.முடிஞ்ச போது எங்களை வந்து பார்த்துட்டுப் போ.நாங்களும் முடிஞ்ச போது உன்னை வந்து ‘ஹாஸ்டலில்’ பாக்கறோம்”என்று கண்களில் கண்ணீர் மல்க செந்தாமரையின் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னாள்.செந்தாமரை அக்காவையும் மாமாவையும் அழைத்துக் கொண்டு பாங்குக்குப் போய் ஒரு ‘ஜாயிண்ட் அக்கவுண்ட்டை’ஆரம்பித்து,அதில் மூனு லக்ஷ ரூபாய் போட்டாள்.கமலாவும் சேகரும் செந்தாமரைக்கு தங்கள் நன்றியை கண்ணீர் தளும்ப சொன்னார்கள்.

சேகர் “செந்தாமு,நீ இந்த குடும்பத்துக்கு நிறைய செஞ்சு இருக்கே உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும்மா.நீ மட்டும் இந்த குடும்பத்துக்கு வராம இருந்து இருந்தா கமலாவும்,ராணீயும்,செல்வியும், இன்னைக்கு இந்த வாழக்கையை வாழ்ந்து வரவே முடியாதும்மா. அந்த பெருமாள் கோவிலிலே நீ மட்டும் என்னை அடையாளம் கண்டுப் பிடிச்சு,என்னை என் குடும்ப த்தோடு சேர்த்து விடாம இருந்து இருந்தா நானும் அணு அணுவாக செத்துகிட்டு இருந்து இருப்பேன். நீ எங்கே இருந்தாலும் சந்தோஷமா இருந்து வரணும்ன்னு நான் அந்த ஆண்டவரை தினமும் வேண்டி வறேம்மா.நீ அந்த ஹாஸ்டலில் சந்தோஷமா இருந்து வா செந்தாமு” என்று சொல்லி தன் ரெண்டு கைகளையும் உயர ஓசத்தி வாழ்த்தினார்.அவர் கண்களிலும் கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது. “சரி மாமா,சரி அக்கா,நான் போய் வறேன்” என்று சொல்லி விட்டு தனக்கு வந்த அழுகையை அட க்கிக் கொண்டு செந்தாமரை தன் ரெண்டு ‘சூட் கேஸ்களையும்’ தூக்க ஆரம்பித்தாள்.

உடனே சேகர் ” செந்தாமு,நான் ஒரு பெட்டியைத் தூக்கி கிட்டு வறேன்” என்று சொல்லி விட்டு ஒரு ‘சூட் கேஸை’த் தூக்கிக் கொண்டு செந்தாமரையுடன் வாசலுக்குப் போனான்.வாசலுக்கு வந்த செந்தாமரை காலியாக வந்துக் கொண்டு இருந்த ஒரு ஆட் டோ வை கூப்பிட்டு அதில் ரெண்டு ‘சூட் கேஸ் களையும்’ ஏற்றி விட்டு தானும் ஏறிக் கொண்டாள்.கண்களில் கண்ணீர் தளும்ப சேகரும் கமலா வும் செந்தாமரைக்கு ‘டா’’டா’ சொன்னார்கள்.அவள் ஆட்டோ கண்ணீல் இருந்து மறைந்த பிறகு சேகரும், கமலாவும், வீட்டீற்குள் வந்தார்கள்.கமலா தன் அம்மா அப்பா படத்திற்கு முன்னால் நின்றுக் கொண்டு “செந்தாமரை ஒரு தெய்வீகப் பிறப்பு.அவ இந்த குடும்பத்திலே பொறந்தது, நாம எல்லாரும் போன ஜென்மத்திலே செஞ்ச புண்ணீயம்.நீங்க ரெண்டு பேரும் செந்தாமு எங்கே இருந்தாலும், அவ ளை சந்தோஷமா வச்சு வாங்க.அவ என்னைக்கும் கஷ்டப் படவே கூடாது”என்று கண்ணில் கண்ணீர் தளும்ப வேண்டிக் கொண்டாள்.சேகரும் கமலா பக்கத்தில் தன் கண்களை மூடிக் கொண்டு தன் அத்தையையும் மாமாவையும் மனசார வேண்டிக் கொண்டான்.

ஆட்டோ ‘ஹாஸ்டலுக்கு’ வந்ததும் செந்தாமரை தன் ரெண்டு ‘சூட் ‘கேஸ்களையும்’ எடுத்துக் கொண்டு தன் ரூமுக்குள் வந்தாள்.‘இனி நம்ம வாழக்கை இந்த ஹாஸ்டல் ரூமில் தான்’ என்று சொல் லிக் கொண்டு அதில் வாழ்ந்து வர தன்னை பக்குவப் படுத்திக் கொண்டாள் செந்தாமரை. ஒவ்வொரு வார கடைசியிலேயும் சனிகிழமை காலையிலும்,மாலையிலும்,ஞாயிற்றுகிழமை காலை நேரத்திலேயும் நிறைய ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக கணக்கு சொல்லிக் கொண்டு வந்தாள்.அவர்களுக்கு செந்தாமரை பாட புஸ்தகங்கள்,நோட்டு புஸ்தகங்கள், ’ஜாமெண்டா¢ பாக்ஸ்’ போன்றவைகளை எல் லாம் நிறைய வாங்கிக் கொடுத்தாள்.ஞாயிற்றுக் கிழமை மாலை நேரத்தில் அனாதை இல்லங்களுக்குப் போய் அங்கு இருந்து வந்த முதியோர்களுக்கு பண உதவி செய்து வந்தாள்.அவள் மனம் இப்போது ரொம்பவும் நிம்மதியாக இருததது.நேரம் கிடைக்கும் போது செந்தாமரை அக்காவையும், மாமாவை யும்,செல்வியையும்,பார்த்து கொஞ்ச நேரம் அவங்க கிட்டே பேசி விட்டு,அவங்க போட்ட சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு ஹாஸ்டலுக்கு வந்துக் கொண்டு இருந்தாள்.அதே போல கமலாவும்,சேகரும், செல் வியை அழைத்துக் கொண்டு செந்தாமரை இருக்கும் ‘ஹாஸ்டல்’ ரூமுக்கு வந்து செந்தாமரையுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு,ஹாஸ்டலில் போட்ட சாப்பாட்டை செந்தாமரையுடன் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வந்துக் கொண்டு இருந்தாள்.

தன் அப்பா நீட்டிலே சும்மா இருந்து வருவதைப் பார்த்த செல்வி “அப்பா, இந்த வயசிலெ நீங்க வீட்லே சும்மா உக்காந்து வரக் கூடாது.நான் ரமேஷ் சார் கிட்டே இதைப் பத்தி இருக்கேன்.அவரும் ‘ஆமாம் அவர் இந்த வயசிலே வீட்லே இருந்து சும்மா இருந்து வரக் கூடாது.அவரும்,உங்க அம்மாவும் நீயும் இஷ்டப் பட்டா அவர் இந்த ‘நர்ஸிங்க் ஹோமிலே’ ஒரு ‘வாச்மேன்’ வேலை செஞ்சு வர நான் சம் மதிக்கிறேன்’ ன்னு சொன்னாருப்பா.நீங்க எங்க ‘நர்ஸிங்க் ஹோமிலே’ ஒரு ‘வாச்மேன்’ வேலை செஞ்சு வறீங்களாப்ப்பா.அம்மா உனக்கு சம்மதாம்மா” என்று கேட்டாள்.இந்த ஐடியாவுக்கு கமலா சம்மதம் சொல்லவே அடுத்த நாள் முதல் சேகர் ராணியுடன் அவள் வேலை செஞ்சு வந்த ‘நர்ஸிங்க் ஹோமில்’ ஒரு ‘வாச் மேன்’ வேலைக்கு சேர்ந்து, டாகடர் ரமேஷ்க்கு தன் நன்றியை சொல்லி விட்டு சந்தோஷமாக அந்த வேலையை செய்து வந்தான்.
அன்று பள்ளீ கூடத்தில் பிரின்ஸிபால் ஷர்மா செந்தாமரையைக் கூப்பிட்டு “செந்தாமரை,இந்த வருஷ பத்தாவது வகுப்புக்கு ‘ஸ்கூல் எக்ஸ்கர்ஷனுக்கு’ ‘உங்களையும்,மிஸ் ரேவதியையும் ‘செலக்ட்’ பண்ணி இருக்கேன்.இந்த வருஷ ‘ஸ்கூல் எக்ஸ்கர்ஷனுக்கு’ நீங்க அந்த ‘ஸ்டூடண்ட்ஸ்’களை, மூனு நாளைக்கு மதுரைக்கு அழைத்து கிட்டு போய் அவங்களை மதுரையை எல்லாம் சுத்திக் காட்டுங்க. நீங்க தான் மதுரையிலெ ஆறு வருஷம் படிச்சி வந்தீங்களே.உங்களுக்கு மதுரை நல்லா தெரியுமே” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.செந்தாமரைக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.உடனே செந்தாமரை பிரின்ஸிபாலைப் பார்த்து “ரொம்ப தாங்ஸ் சார்.நான் ரேவதி மிஸ்ஸோடு மதுரைக்குப் போய் அந்த ‘ஸ்டூடன்ட்ஸ்’ மதுரையை சுத்திக் காட்டி விட்டு,அவங்களைஅழைச்சுக் கிட்டு வறேன்” என்று சந்தோஷமாகச் சொல்லி விட்டு ‘பிரின்ஸிபால்’ ரூமை விட்டு வெளியே வந்தாள்.‘பிரின்ஸிபால்’ ரூமை விட்டு வெளியே வந்த செந்தாமரை “இத்தனை வருஷம் கழித்து நாம மதுரைக்குப் போவப் போறோமே.நாம மதுரையிலே படிச்சு இப்போ இருபத்தி ஐஞ்சு வருஷத்துக்கு மேலே ஆவப் போவுதே. மதுரை இப்போ எவ்வளவு மாறி இருக்கும்.மதுரைக்குப் போனா நாம கணபதி சாரைப் பார்க்க நேரம் இருக்குமா.அவர் இப்போ கல்லூரியிலே இருந்து’ ரிடையர்’ ஆகி இருப்பாரே.அவர் முன்னம் இருந்த வீட்டிலே இருப்பரோ இல்லை வேறு ஏதாவது வீட்டுக்கு மாறி இருப்பாரோ.அவர் பையன் ஆனந்தன் இந்த இருபத்தி ஐஞ்சு வருஷத்திலே படிப்பு எல்லாம் முடிச்சு விட்டு,ஒரு நல்ல வேலையில் இருந்து வருவானே.கணபதி சார்,அவனுடன் வேறு புதுசா ஒரு வீட்டை வாங்கி கொண்டு போய் இருந்து வருவாரோ¡ என்னவோ.ஒரு வேளை இந்த ‘எக்ஸ்கர்ஷன்’ நடுவிலே நமக்கு நேரம் கிடைச்சா ரேவதி மிஸ் கிட்டே கொஞ்சம் சொல்லி விட்டு,நாம மதுரை பல் கலைக் கழகத்துக்குப் போன் பண்ணீக் கேட்டா அவங்க ரிடையர் ஆன கணக்கு ‘ப்ரபசர்’ கணபதி சார் எங்கே இருந்து வறார்ன்னு சொல்லு வாங்களா.அப்படி அவங்க சொல்லலேன்னா,நாமே அந்த பல்கலை கழகத்துக்குப் போய்,அங்கே வேலை செஞ்சி வரும் எந்த கணக்கு ‘ப்ரபசர்’ கிட்டேயாவது கணபதி சார் ‘அட்ரஸ்ஸை வாங்கி கிட்டு அவரைப் போய் நிச்சியமா சந்திச்சுப் பேசணும்.இந்த மதுரை ‘எக்ஸ்கர்ஷன்’’ ‘டிரிப்லே’ எப்படி யாது நாம கணபதி சாரை கண்டு பிடிச்சி அவருக்கு நாம இப்போ வாழ்ந்து வர சந்தோஷ சமாசாரத் தை சொல்லி அவருக்கு நன்றி சொல்லி அவர் ஆசீர்வாதத்தை வாங்கி வரணும்’ என்று மிகவும் ஆசை பட்டாள்.

பள்ளி கூட நிர்வாகம் பத்தாவது வகுப்பு ‘ஸ்டூடண்ட்ஸ்’களிடம் மதுரைக்கு ‘எக்ஸ்கர்ஷன் போய் வர பணம் வாங்கி அறுபது ‘ஸ்டூண்ட்ஸ்’ களுக்கும் செந்தாமரை க்கும் மிஸ் ரேவதிக்கும் ரயில் டிக்கட்டும்,மதுரையில் தங்க இடம்,எல்லோரும் சாப்பிட சாப்பாடு போன்ற எல்லா ஏற்பாடுகளும் பண் ணினார்கள்.குறிப்பிட தினத்தில் செந்தாமரையும்,ரேவதி மிஸ்ஸ¥ம் அந்த பத்தாம் வகுப்பு முப்பது மாணவர்களை சரியாக எண்ணீ அவர்களை அழைத்துக் கொண்டு,பள்ளி கூட நிர்வாகம ஏற்பாடு பண்ணீ இருந்த ரெண்டு பஸ்களில் ஏற்றிக் கொண்டு சென்னை எழும்பூர் ஸ்டேஷனுக்கு வந்து மது ரைக்கு செல்லும் பண்டியன் எக்ஸ்ப்ரஸ் வண்டியில் ஏறி அடுத்த நாள் காலையிலே மதுரைக்கு வந்து சேர்ந்தார்கள்.பள்ளீக் கூட நிர்வாகம் ஏற்பாடு பண்ணி இருந்த இடத்தில் எல்லோரும் வந்து தங்கி குளித்து விட்டு ‘டிரஸ்’ பண்ணீக் கொண்டு காலை ‘டிபனை’ முடித்துக் கொண்டு ரெண்டு பஸ்களில் ஏறி முதலில் திருப்பரங்குன்றம் போய் முருகப் பெருமானை சேவித்து விட்டு வந்தார்கள்.அன்று சாய ந்திரம் எல்லோரும் பழமுதிர் சோலைக்குப் போய் வந்தார்கள்.அடுத்த நாள் கள்ளழகர் கோவில், மதுரை திருமலை நாயக்கர் மஹால் ‘மியூசியம்’ எல்லாம் பார்த்து விட்டு மதியம் உணவுக்கு வந்து மதிய உணவு சாப்பிட்டார்கள்.அன்று சாயந்திரம் எல்லோரும் கிளம்பி மதுரை மீனாக்ஷ¢ அம்மன் கோ விலுக்கு வந்து மீனாக்ஷ¢ அம்மனை அம்மனை தா¢சனம் பண்ணி விட்டு கோவில் பிரகாரத்தை சுற்றி வந்துக் கொண்டு இருந்தார்கள். செந்தாமரை எல்லோருடனும் வெளி பிரகாரத்தை சுற்றி வந்துக் கொண்டு இருந்த போது,தூரத்தில் இருந்த ஒரு ‘கான்க்¡£ட் பென்ச்சில்’ கணபதியும் அவர் மணைவி சாந்தாவும் உட்கார்ந்துக் கொண்டு இருந்ததை பார்த்ததும் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
உடனே செந்தாமரை ரேவதி மிஸ்ஸிடம் “ரேவதி மிஸ்,கொஞ்ச நேரம் நீங்க ‘ஸ்டூடண்ஸ்’ ளைப் பாத்துக்க முடியுமா,அதோ அந்த ‘கான்க்¡£ட்’ பென்ச்சில் உக்காந்துக் கிட்டு இருக்கிறவங்க எனக்கு ரொம்ப தெரிஞ்சவங்க.நான் அவங்க கூட ஒரு பத்து நிமிஷம் பேசிட்டு வறேன்” என்று கேட்டதும், ரேவதி மிஸ் “நீங்க போய் வாங்க.நான் ‘ஸ்டூடண்ஸ்’ ளைப் பார்த்துக்கறேன்” என்று சொன்னாள். உடனே செந்தாமரை ரேவதி மிஸ்ஸ¤க்கு ‘தாங்க்ஸ்’ சொல்லி விட்டு ‘விடு’ ‘விடு’ என்று கணபதியும் அவர் மணைவி சாந்தாவும் உட்கர்ந்துக் கொண்டு இருக்கும் இடத்திற்கு ஓடிப் போனாள்.

செந்தாமரை முதலில் அவர்களிடம் ஒன்னும் பேசாமல் அவர்கள் தான் நினைத்து வந்த அவர் கள் கணபதி சாந்தா தம்பதிகள் தானா என்று தீர்மானம் பண்ணி கொள்ள நினைத்தாள்.இருவர் முகதிலும் சோக சாயல் படர்ந்து இருந்தது. இருவரும் மிகவும் மிகவும் மெலிந்து காணப் பட்டார்கள். மின்சார விளக்குகள் இல்லாதது இருந்ததாலும்,சாயங்கால இருள் சூழ்ந்து இருக்கவே அவர்களுக்கு செந்தாமரை வந்து இருப்பது தெரியவிலை.கணபதி சாந்தாவைப் பார்த்து “ரொம்ப நேரம் ஆயிடிச்சி சாந்தா.இருட்டிப் போனா எனக்கு கண்ணுங்க நல்லா தெரியறதில்லே.அதனால்லே நாம இப்ப கிளம்பி போவலாமா.நாம விடுதிக்கு ‘லேட்டா’ப் போனா,அப்புறமா அவங்க ராத்திரி நமக்கு போடற ரெண்டு தோசை கூட போட மாடாங்க”என்று சொல்லி விட்டு மெல்ல எழுந்தார்.செந்தாமரைக்கு அவர் என்ன பேசுகிறார் என்று புரியாமல் தவித்தாள்.‘சரி அவங்க எழுந்து போவதற்குள்,நாம அவங்களை சந்தித்து பேசி விடலாம்’ என்று நினைத்து செந்தாமரை கணபதி முன்னால் போய் நின்றுக் கொண்டு “அப்பா, நீங்களாப்பா.அம்மா நீங்களாம்மா.என்னை உங்களுக்கு தெரியுதா.நான் தான் உங்க பொண்ணு செந்தாமரை.என்னை பத்தாவதில் இருந்து, பன்னாடவது வரை படிக்க வச்சு,அப்புறமா நான் B.Sc, M.Sc, B.Ed, வரை படிச்ச பிறகு என்னை சென்னைக்கு இட்டு கிட்டு வந்த விட்ட அம்மா அப்பா” என்று சந்தோஷத்துடன் சொன்னாள்.செந்தாமரையை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள் கணபதியும் சாந்தாவும்.

உடனே கணபதி “நீயா செந்தாமரை,எங்கே மதுரைக்கு வந்து இருக்கே.எப்படி நீ எங்களை அடையாளம் கண்டு பிடிச்சே”என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.உடனே செந்தாமரை “அப்பா, நான் என் பள்ளீ கூட ‘ஸ்டூடன்ட்ஸ்’களை மதுரைக்கு ‘எக்ஸ்கர்ஷன்’ அழைச்சு வந்து இருக்கேன்.நான் கோவிலின் வெளிப் பிரகாரத்தை சுத்தி வரும் போது தற்செயலா உங்க ரெண்டு பேரையும் பாத்தேன். உடனே உங்க கூட பேச நான் ஓடி வந்தேன்”என்று சந்தோஷத்துடன் சொன்னாள்.“ஓ அப்படியா செந்தாமரை.இத்தனை வருஷத்துக்கு அப்புறமா உன்னைப் பாத்ததிலே ரொம்ப சந்தோஷமா இருக் கும்மா.உனக்கு சென்னையிலெ கிடைச்ச கணக்கு வாத்தியார் வேலை உனக்கு பிடிச்சு இருந்ததா. அந்த கணக்கு வாத்தியரா,நீ இன்னும் வேலை செஞ்சு வறயா” என்று கேட்டார் கணபதி. செந்தாமரை உடனே “நான் சென்னைக்குப் போனவுடனே எனக்கு எட்டாவது ‘க்ளாஸ¤க்கு’ கணக்கு எடுத்து வர வேலை கிடைச்சுது உங்களுக்கு நல்லா தெரியும்.நான் அந்த வேலையை ஒத்து கிட்டு எங்க அம்மா, அப்பா,அக்கா,ரெண்டு பெண் குழந்தைக்ங்களையும்,என் கூட இட்டு கிட்டு வந்து வச்சுக்கிட்டேன். என் அக்கா புருஷன் என் அக்காவை விட்டுட்டு,வேறே ஒரு பெண்ணோடு ஓடிப் போய் விட்டு இருந் தாரு.என் அக்கா பொ¢ய பெண் பத்தாவது படிச்சு முடிச்சவுடன் அவளுக்கு அவ ஆசை பட்ட ஒரு பையனையேப் பாத்து கல்யாணம் கட்டி வச்சேன்.ரொம்ப வருஷமா உடம்பு சரி இல்லாம இருந்து வந்த என் அப்பா பேத்தி கல்யாணத்தைப் பாத்து விட்டு சந்தோஷமா இறந்துப் போனாரு.அவர் இறந்துப் போன மூனு வருஷம் கழிச்சு,என் அம்மாவும் இறந்து போயிட்டாங்க.அப்புறமா நான் என் அக்கா ரெண்டாவது பொண்ணை டாக்டர் படிப்பு படிக்க வச்சேன்.அவ இப்ப ஒரு டாக்டரா ஒரு பொ¢ய ‘நர்ஸி ங்க் ஹோமிலே’ வேலை செஞ்சு கிட்டு வறா.ஒரு நாள் நானும்,என் அக்காவும், ஒரு நாள் பெருமாள் கோவிலுக்குப் போன போது,அந்த கோவிலிலே என் அக்காவை விட்டு ஓடிப் போன புருஷன்ப் பாத் தேன்.இப்ப அவர் மனசு திருந்தி என் அக்கா கிட்டே மன்னிப்பு கேட்டு விட்டு என் அக்கா கூட இரு ந்து வறாரு.இப்ப அவங்க எல்லாரையும் நான் இருந்து வீட்டிலே இருக்கச் சொல்லி விட்டு,நான் ஒரு ‘லேடீஸ் ஹாஸ்டலில்’ தனியாத் தங்கி வறேன்.என் சம்பள மீதிப் பணத்திலே நிறைய ஏழை குழந்தை களுக்கு பண உதவி செஞ்சு வறேன்.என் ஓய்வு நேரங்களிலே அவங்களுக்கு கணக்கு சொல்லித் தறேன்.ஒவ்வொரு வார கடைசியிலே நான் ஒரு முதியோர் இல்லத்துக்கு போய்,அங்கு இருந்து வர முதியவர்களுக்கு பண உதவி செஞ்சு வறேன்” என்று தன் பூரா கதையையும் விவரமாகச் சொன் னாள்.கணபதியும் சாந்தாவும் செந்தாமரை சொல்வதை ஆச்சரியமாகக் கேட்டுக் கொண்டு இருந்தார் கள்.அவர்களுக்கு இன்னும் நம்பிக்கையே வரவில்லை.

கொஞ்ச நேரம் ஆனதும் செந்தாமரை கணபதியைப் பார்த்து “ ஏம்ப்பா நீங்களும் அம்மாவும் இவ்வளவு இளைச்சுப் போய் ரொம்ப சோகமாகவும்,சோர்வாகவும் இருக்கீங்க. உங்க ரெண்டு பேர் உடம்பும் சரியா இல்லையா”என்று கவலையோடு விசாரித்தாள்.உடனே கணபதியின் கண்களில் கண்ணீர் வழிந்தது அவர் தன் தோள் மேலே போட்டு இருந்த துண்டை எடுத்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.சாந்தாவும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு இருந்தாள்.இருவரும் அழுவதைப் பார்த்த செந்தாமரைக்கு தூக்கி வாரிப் போட்டது.‘நாம என்ன கேட்டு விட்டோம். பாவம் கணபதி சார் இப்படி அழ ஆரம்பிச்சு இருக்காரே’ என்று நினைத்து மிகவும் கவலைப் பட்டாள் செந் தாமரை.

தன் கண்களைத் துடைத்துக் கொண்டே கணபதி “அதை ஏம்மா கேக்கறே.ஆனந்தன் படிச்சு முடிச்சவுடன் அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சுதும்மா.அவனுக்கு வேலை கிடைச்ச அந்த வருஷமே நான் என் வேலையில் இருந்து ‘ரிடையர்’ ஆகி விட்டேம்மா.ரெண்டு வருஷம் கழிச்சு, நானும் சாந்தாவும் ஆனந்தனுக்கு ஒரு நல்ல பெண்ணாப் பார்த்து கல்யாணத்தை விமா¢சையா பண்ணி வச்சோம்.ஆனந்தனும்,அவன் மணைவி ரம்யாவும் எங்க ரெண்டு பேரையும்,நல்லா வச்சுக் கிட்டு வந்தாங்க.அந்த சந்தோஷத்தில் நானும் சாந்தாவும்,பிள்ளையோடும்,மருமகளுடனும்,மீதி காலத்தை சந்தோஷமாகக் கழிச்சு வரலாம்ன்னு முடிவு பண்ணி நான் இருந்து வந்த என் வீட்டையும், சொத்தையும்,ஆனந்தன் பேருக்கு மாத்தி விட்டோம்மா” என்று சொல்லும் போது கணபதி மீண்டும் அழ ஆரம்பித்தார்.அவர் தன் தோள் மேலே போட்டு இருந்த துண்டை எடுத்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.ரெண்டு நிமிஷம் கழித்து கணபதி தன் கண்களைத் துடைத்துக் கொண்டே ”நாங்க அதை செஞ்சி ரெண்டு மாசம் கூட ஆகி இருக்காது செந்தாமரை.ஒரு நாள் திடீரென்று ஆனந்தன் ‘நாங்க ரெண்டு பேரும் அவங்களுக்கு பாரமா இருந்து வரோம்’ ன்னு அவன் சம்சாரம் சொல்லவே, அவ பேச்சைக் கேட்டுக் கிட்டு எங்க ரெண்டு பேரையும் ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டான்ம்மா.அன்னையிலே இருந்து நாங்க ரெண்டு பேரும் தினமும் இப்படி கொஞ்ச நேரம் இந்த இந்த கோவிலில் உக்காந்துக் கிட்டு இருந்து விட்டு,இருட்டிப் போனதும் அந்த இல்லத் துக்கு போய் விடுவோம்மா” என்று கண்களில் கன்ணீருடன் சொன்னார்
கணபதி சொன்னதைக் கேட்டதும் செந்தாமரைக்குத் தூக்கி வாரிப் போட்டது. “என்னப்பா சொல்றீங்க.இப்படியும் ஆனந்தன் செய்வான்னு நான் கனவிலும் நினைக்கலேப்பா.இவ்வளவு கல் நெஞ்சம் பிடிச்சவங்களா இருப்பங்களா அவங்க ரெண்டு பேரும்.உங்க வீட்டையும்,சொத்தையும் உங்க கிட்டே இருந்து வாங்கிக் கிட்டு,உங்க ரெண்டு பேரையும் இந்த வயசான காலத்திலே ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்து இருக்காங்களே.என்ன மனுஷங்க இவங்க.கொஞ்சம் கூட மனதாபிமானே இல்லையே அவங்க ரெண்டு பேருக்கும்” என்று சொல்லி மிகவும் வருத்தப் பட்டாள் செந்தாமரை. சற்று நேரம் யோஜனைப் பண்ணினாள் செந்தாமரை.ஒரு முடிவுக்கு வந்தாள் செந்தாமரை.‘அன்று இந்த தம்பதிகள் எனக்கு இந்த வாழ்க்கையை அமைச்சு குடுத்து இருக்கா விட்டா, நான் அந்த சோ¢யில் ஒருத்தியா இருந்து கிட்டு,தினமும் ஒரு குடிகாரன் கிட்டே அடியும்,கெட்ட வார்த்தைகளால் திட்டையும் கேட்டுக் கிட்டு தானே வந்து இருப்பேன்.இவங்களாலே தானே எனக்கு இந்த நல்ல வாழ்க்கை அமைஞ்சு இருக்கு.எனக்கும்,என் குடும்பத்துக்கும்,ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு குடுத்த இவங்க பாவம் இன்னைக்கு ஒரு முதியோர் இல்லத்லே கஷ்டப்பட்டு வந்துக் கிட்டு இருக்காங்களே. இவங்க ரெண்டு பேரும் இப்படி கஷ்டப் பட்டு வருவதைப் பாத்து, நான் எப்படி சும்மா இருக்க முடியும்’ என்று எண்ணி வருத்தப் பட்டது செந்தாமரையின் உள் மனம்.

செந்தாமரை நீண்ட நேரம் யோஜனைப் பண்ணி ஒரு தீர்மானத்திற்கு வந்தாள்.உடனே செந்தா மரை கணபதியையும் சாந்தாவையும் பார்த்து “அப்பா,அம்மா, நீங்க ரெண்டு பேரும் இப்படி ஒரு இப்படி முதியோர் இல்லத்லே கஷ்டப்பட்டு வருவதை என்னால் பாத்து கிட்டு சும்மா இருக்க என் மனம் இடம் கொடுக்கலே.இன்னைக்கு நான் வாழும் இந்த வாழ்க்கை நீங்க ரெண்டு பேரும் எனக்குப் போட்ட பிச்சை தானே.இதை என்னால் மறக்க முடியாதே.நான் இன்னைக்கு ராத்திரி சென்னைக்கு கிளம்பிப் போய்,வர ஞாயித்துக் கிழமை காலை மறுபடியும் மதுரைக்கு வறேன்.அப்போ நான் உங்க ரெண்டு பேரையும் என்னோடு சென்னைக்கு அழைச்சு கிட்டு போய். உங்க ரெண்டு பேருடைய காலம் முடியும் வரை என்னோடு சந்தோஷமா வச்சு கிட்டு வந்து,நீங்க செஞ்ச உதவிக்கு கைம்மாறு செய்ய ஆசை படறேன்.நீங்க ரெண்டு பேரும் மறுக்காம என்னோடு சென்னைக்கு வந்து என்னோடு தங்கி வரணும்”என்று கண்களில் கண்ணீர் மல்க கேட்டு கொண்டாள் செந்தாமரை.கணபதிக்கும் சாந்தாவுக்கும் என்ன சொல்வதென்றே புரியவில்லை.அவர்கள் இருவரும் உடனே ”வேணாம்மா செந்தாமரை.நாங்க இங்கே இருந்துக் கிட்டு எங்க கடைசி காலத்தை கழிச்சு கிட்டு வரோம்மா.நாங்க உன் கூட சென்னைக்கு எல்லாம் வரலேம்மா” உனக்கு ரொம்ப ‘தாங்க்ஸ்ம்மா’ ”என்று சொன்னார்கள்.

ஆனால் செந்தாமரை பிடிவாதமாக “அப்பா,அம்மா,நான் தினமும் வேண்டி வரும் பிள்ளயார் என்னை என் குடும்பத்துக்கு செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் முடிக்க வச்சி,இப்போ என்னை ‘ப்¡£யா’ இருக்க வச்சு இருக்கார்.நீங்க ரெண்டு பேரும் என் கூட சென்னைக்கு வந்தே ஆகணும் மறுக்காதீங்க.நீங்க செஞ்ச உதவிக்கு நான் கைம்மாறு செய்ய ரொம்ப ஆசைப் படறேன்.எனக்கு இந்த சந்தர்ப்பத்தை தயவு செஞ்சி நீங்க ரெண்டு தரணும்.நீங்க ரெண்டு பேரும் மறுக்காம என்னோடு சென்னைக்கு வரணும்” என்று கண்களில் கண்ணீர் மல்க கேட்டாள்.சாந்தா செந்தாமரையைப் பார்த்து “ஏன் செந்தாமரை,நீ இன்னும் கல்யாணமே பண்ணிக்கலையா” என்று கேட்டாள்.“இல்லேம்மா,நான் கல்யாணமே பண்ணிக்கலே.என் வாழ்க்கையிலே எனக்கு ரெண்டு ஆசை தாம்மா.ஒன்னு எங்க குடும் பத்தை மிக ஏழ்மை நிலையில் இருந்து நல்ல நிலைக்கு கொண்டு வந்து அவங்களை சந்தோஷமா வச்சு வரணும்.அதை நான் நல்ல விதமா செஞ்சு முடிச்சுட்டேன்.என் ரெண்டாவது ஆசை.ஏழை குழந்தைகளுக்கு கணக்கு அறிவை வளப்பது,முதியோர்களுக்கும்,நிறைய பண உதவி பண்ணுவது. நான் இப்போ அந்த ரெண்டையும் செஞ்சு வரேன்.நான் கல்யாணம் பண்ணீக் கிட்டா எனக்கு வரும் கணவர் என் ஆசையை அவர் செய்ய விடுவாரோ இல்லையோ என்று பயந்து நான் எந்த சலனம் இல்லாம தனியாவே வாழ்ந்து வறேம்மா” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் செந்தாமரை. செந்தாமரை சொன்னதைக் கேட்டு கணபதியும் சாந்தாவும் ஆச்சரியப்பட் டார்கள்.ரெண்டு பேரும் தன்னுடன் சென்னையில் வந்து தங்க வேண்டும் என்று செந்தாமரை பிடிவாதமாக சொல்லவே, இருவரும் ‘சரி’ என்று ஒத்துக் கொண்டு செந்தாமரையுடன் சென்னைக்கு வந்து தங்குவதாகச் சொன்னார்கள்.அவர்கள் ரெண்டு பேரைப் பார்த்து “ரொம்ப ‘தாங்ஸ்’ அப்பா அம்மா” என்று சொல்லி விட்டு அவர்களை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வெளியே போய்,அவர்கள் ரெண்டு பேரையும் ஒரு ஆட்டோ பேசி,அவர்களை அதிலே ஏற்றி விட்டு ஆட்டோ டிரைவா¢டம் பணத்தை கொடுத்து விட்டு,ஆட்டோ டிரைவா¢டம் “டிரைவர் இவங்க ரெண்டு பேரையும் தயவு செஞ்சி இவங்க இருந்து தங்கி இருக்கிற முதியோர் இல்லத்லே கொஞ்சம் இறக்கி விடுங்க”என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.

ஆட்டோ கிளம்பின பிறகு செந்தாமரை கோவிலுக்குள் வந்து ரேவதி ‘மிஸ்ஸடனும்’ ‘ஸ்டூடன்ட்ஸ்’களுடனும் கலந்துக் கொண்டாள்.செந்தாமரைக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. கணபதி சாரையும்,சாந்தா அம்மாவையும்,எப்படி,எங்கே சந்திக்கப் போறோம் என்று கவலைப்பட்டு வந்த அவளுக்கு,அவர்கள் ரெண்டு பேரையும் அவள் கண் முன்னே காட்டி,அவர்களை சென்னைக்கு அழைச்சு வந்து,சந்தோஷமா தன்னுடன் கூட வச்சு கிட்டு,வரும் பா¡க்கியததை கொடுத்த பிள்ளை யாருக்கு மனதார தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டாள் செந்தாமரை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *