ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 6, 2021
பார்வையிட்டோர்: 3,858 
 

அத்தியாயம்-16 | அத்தியாயம்-17 | அத்தியாயம்-18

மெதுவாக  ‘போனை வைத்து விட்டு வைத்து விட்டு சுதா உடனே ஒரு காகிதத்தை எடுத்து ஒரு ‘லெட்டர்’ எழுதினாள்.அந்த ‘லெட்டரை’ நாலாக மடித்தாள்.தன் ரூமில் இருந்த மேஜை மேலே எல்லோவறையும் எடுத்து தூர வைத்து விட்டு தான்,எழுதின ‘லெட்டரை’ காலியாக இருந்த மேஜை மேலே  எல்லோருக்கும் தெரியும்படி வைத்தாள்.

பிறகு தான் ரெடியாக வைத்து இருந்த ஒரு பையை எடுத்துக் கொண்டு,அவள் இத்தனை வருஷமாக இருந்து வந்த வீட்டைவிட்டு கடவுளை வேண்டிக் கொண்டு வேகமாக ‘சூப்பர் மார்கெட் டுக்கு’ கிளம்பிப் போனாள்.

‘பாத் ரூமை’ விட்டு வெளீயே  வந்த ராமசாமி மீதி ‘ஹிண்டு’ பேப்பரைப் படிக்க கையில் எடுத்து படிக்க ஆரம்பித்தார்.

ஒரு மணி நேரம் கழித்து மங்களம் மாமியாரை டாக்டரிடம் காட்டி மாத்திரைகள் எழுதி வாங்கிக் கொண்டு,அங்கேயே இருந்த ‘மெடிக்கல் ஷாப்பில்’ டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரைகளை வாங் கிக் கொண்டு ஒரு ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தாள்.ஆட்டோ டிரைவருக்கு பணத்தை கொடுத்து விட்டு மெல்ல மாமியாரை பிடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தாள்

வீட்டுக்குள்ளே நுழைந்த மங்களம் முதல் வேலையாக சுதா இருந்த ரூமை கவனித்தாள்.

அந்த ரூம் காலியாக இருந்தது.அவளுக்கு தேள் கொட்டியது போல இருந்தது.

மெல்ல மாமியாரை அழைத்துப் போய் கட்டிலில் படுக்க வைத்து விட்டு,ஒரு போர்வையை போர் த்தி விட்டு,வெளியே வந்த மங்களம் சுதா ‘பெட் ரூமுக்கு வந்தாள்.அவள் கண்ணில் சுதா மேஜை மே லே வைத்து விட்டுப் போன ‘லெட்டர்’ தெரிந்தது.

பயத்துடன் அந்த ‘லெட்டரை’ப் படிக்க ஆரம்பித்தாள்.

அன்புள்ள அம்மா,அப்பா,தாத்தா,பாட்டி,ரமா, நானும் இத்தனை மாசமா எனக்கு பீட்டரை கல் யாணம் பண்ணி வைக்க எவ்வளவோ கேட்டுப் பாத்தேன்.பீட்டர் அப்பாவும் பாட்டியும் நம்மாத்துக்கு வந்து எவ்வளவோ சொல்லி எங்க ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணி வைக்கும் படி ரொம்ப கேட் டா.அவா கேட்டுண்ட மாதிரி பண்ண அப்பா வாத்தியாரைக் கூப்பிட்டு ‘அவர்’ பேரை பிராமண பேரா மாத்தக் கேட்டா.ஆனா அந்த வாத்தியார் ஏதோ ஒரு பெரிய ‘லெக்ச்சரை’ குடுத்துட்டு,என்னவோ பாவ புண்ணீயத்தே பத்தி எல்லாம் சொல்லிட்டு ஒரு ‘தார்மீக’ வழியும் தெரியலே.’லௌகீகமா’ பண் றது தான் சரி’ ன்னு சொல்லிட்டு கிளம்பிப் போயிட்டார்.நான் அவரை எந்த குத்தமும் சொல்லலே. அது அவர் செஞ்சு வந்த ‘தொழில் தர்மம்’.வாத்தியார் அப்படி சொல்லிட்டுப் போன பிறகு அப்பாவுக் கும் என்ன பண்றதுன்னு தெரியலே.எனக்கு பீட்டரைத் தவிர வேறே எந்த பிராமணப் பையனையு ம் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஆசை இல்லே.பீட்டர் எனக்கு அவர் முதலாளி கிட்டே இந்த வேலே யே வாங்கிக் குடுத்து,அவரே என் கூட உக்காந்துண்டு எனக்கு நான் செஞ்சு வரும் வேலேயே சொல் லி குடுத்து இருக்கார்.அப்போ தான் எனக்கு அவர் மேலே ரொம்ப ஆசை வந்தது.அவர் என்னை காலம் பூராவும் கஷ்டப் படமா காத்துவேன்னு சத்தியம் பண்ணி குடுத்து இருக்கார்.இந்தாத்லே அப்பா வோ,அம்மாவோ,தாத்தாவோ, பாட்டியோ என்னை பீட்டருக்கு ‘ரெஜிஸ்தர் கல்யாணம்’ பண்ணி வைக் க ஒத்துக்கொள்ளவே மாட்டா.அந்த மாதிரி பண்ணுவது உங்க நாலு பேருக்கும் பிடிக்கவே பிடிக்காது ன்னு எனக்கு நன்னாத் தெரியும்.நான் இத்தனை மாசமா என் அப்பா,அம்மா, தாத்தா,பாட்டி, ரமா எல்லோரும் என் கூட இருப்பா.’அவரும்’ என் கூட இருந்து வருவார்ன்னு  நினைச்சு ’மனப்பால்’ குடிச்சு வந்தேன்.ஆனா என் ‘தலை விதி’ வேறே விதமா அமைஞ்சு இருக்குன்னு நான் நினைக்கறேன்.

‘ஒன்னை இழந்தாத் தான் ‘மத்தொனான்னு கிடைக்கும் என்று ஆயிடுத்து என் வாழக்கைலே.எனக்கு வேறே வழி ஒன்னும் தெரியாததாலே,நான் இந்த ஆத்தை விட்டு ஓடிப் போய்  பீட்டருடன் வாழக்கை நடத்தி வர முடிவு பண்ணி இருக்கேன்.என்னை இத்தனை வருஷமா சாதம் போட்டு படிக்க வச்ச அப்பா,அம்மா ரெண்டு பேரும் என்னை தயவு செஞ்சி  மன்னிச்சிடுங்க.என் மேலே பாசமா இருந்த தாத்தா,பாட்டியும் என்னை தயவு செஞ்சி மன்னிச்சிடுங்க.ரமா,நீ ரொம்ப நன் னா படிச்சு,ஒரு நல்ல வேலையை தேடிண்டு வந்து,அப்பா,அம்மா, தாத்தா,பாட்டி உனக்குப் பாக்கற ஒரு நல்ல பிராமணப் பையனை கல்யாணம் பண்ணீண்டு,மூத்த பொண்ணான நான் அவாளுக்குக் குடுக்க முடியாத சந்தோஷத்தே நீயாவது குடு.நீயும் அவா பாக்கற பிராமணை பையனைக் கல்யாண ம் பண்னிண்டு ரொம்ப சந்தோஷமா வாழ்ந்துண்டு வா.நீயும் என்னை மன்னிச்சிடு ரமா.
இப்படிக்கு இந்த ஆத்லே இத்தனை வருஷங்களா சந்தோஷமா இருந்து வந்த சுதா.

‘லெட்டரை’ப் படித்த மங்களம் ‘தொப்’பென்று ‘சோபா’வில் சாய்ந்து உட்கார்ந்தாள்.

மங்களம் இப்படி ‘திடீர்’ என்று சாய்ந்து உட்காருவதைப் பார்த்த ராமசாமி பேப்பர் படிப்பதை விட்டு விட்டு “என்ன மங்களம்,இப்படி திடீர்ன்னு ‘சோபா’விலே உக்காந்துட்டே.உனக்கும் உடம்பு முடியலையா என்ன” என்று கேட்டதும் மங்களம் தன் கண்களைத் துடைத்துக் கொண்டே”அப்பா சுதா இந்த ஆத்தே விட்டு அந்த பீட்டர் கிட்டே ஓடிப் போயிட்டா.இந்த ‘லெட்டரை’ படியுங்கோ.உங்களுக்  கே எல்லாம் புரியும்”என்று சொல்லி சுதா எழுதி இருந்த ‘லெட்டரை’ மாமனார் கையிலே கொடுத்தாள்.

விமலா மங்களம் சொன்னதைக் கேட்டதும் மெல்ல தன் போர்வையை எடுத்து விட்டு,கட்டிலை விட்டு மெல்ல எழுந்து ஹாலுக்கு வந்து மங்களம் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டாள்.

தன் மணைவியும் வந்து ‘சோபா’வில் உட்காருவதைப் பார்த்த ராமசாமி மங்களம் கொடுத்த ‘லெட்டரை’ உரக்கப் படித்தார்.

அவர் கண்களில் கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந்தது.அவர் அதை துடைத்துக் கொண் டே”ஆனாலும் இந்த சுதாவுக்கு இத்தனை பிடிவாதம் கூடாது.அந்த பீட்டர் இல்லாட்டா என்ன. நம்மை எல்லாம் விட அவன் தான் முக்கியம்ன்னு நினைச்சு அவன் கூட ஓடிப் போய் இருக்காளே. சுதா இந்த மாதிரி பண்ணுவான்னு நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கலே” என்று சொல்லி மிகவும் வருத்தப் பட்டார்.

உடனே விமலா “நானும் இந்த ஆத்லே இத்தனை வருஷமா வளந்து வந்த சுதா இப்படி பண்ணு வான்னு கொஞ்சம் கூட நினைக்கவே இல்லே.அவளுக்கு நம்மை எல்லாரையும் விட அந்த கிருஸ்தவ பையன் பீட்டர் ‘ஒசந்தவனா’ ஆயிட்டான்.இந்த காலத்து குழந்தைகளுக்கு இந்த ‘காதல்’தான் ஒசத்தியா போய் இருக்கு.பெத்த அம்மா,அப்பா,தாத்தா, பாட்டி,கூடப் பொறந்த தங்கை எல்லாம் இல்லே” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

மங்களம் தன்னை மெல்ல சுதாரித்துக் கொண்டு ‘போனில்’ தன் கணவர் ராமநாதனுக்கு சுதா வீட்டை விட்டு ஓடிப் போன விஷயத்தை அழுதுக் கொண்டே சொன்னாள்.

மங்களம் சொன்ன விஷயத்தைக் கேட்ட ராமநாதனுக்கு ‘தேள் கொட்டியது’ போல இருந்தது. தன் பக்கத்தில் சக ஆபீஸர்கள் இருந்ததால் “அப்படியா,இதோ நான் ஆத்துக்கு கிளம்பி வறேன்” என்று மொட்டையாகச் சொல்லி விட்டு சீப் மானேஜா¢டம் போய் “சார்,என் அப்பாவுக்கு திடீர்ன்னு நெஞ்சு ரொம்ப வலிக்கறதாம்.என் ‘வைப்’ இப்போ ‘போன்’பண்ணி சொன்னா.எனக்கு ஒரு “ஹாப் எ டே” லீவு வேணும்” என்று கேட்டவுடன் அவர் “ராமநாதன்,நீங்கோ சீக்கிரமா ஆத்துக்குப் போய் உங் க அப்பாவை ஒரு நல்ல ஹாஸ்பிடலுக்கு அழைச்சீண்டு போய் காட்டுங்கோ” என்று சொன்னதும் ராமநாதன் ஒரு ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.

வீட்டுக்கு உள்ளே நுழைந்ததும்” ராமநாதா,நாம மோசம் போயிட்டோம்டா.சுதா இந்தாத்தை விட்டு ஓடிப் போயிட்டா.இந்த ‘லெட்டரை’ப் படிடா“ என்று சுதா எழுதி இருந்த ‘லெட்டரை’ கொடுத்தார்.

ராமநாதன் ‘சோபா’வில் உட்கார்ந்துக் கொண்டு தன் பாக்கெட்டில் இருந்து மூக்கு கண்ணாடி யை எடுத்து கண்களில் போட்டுக் கொண்டு அப்பா நீட்டின ‘லெட்டரை’ வாங்கிப் மூன்று தடவை திருப்பி திருப்பிப் படித்தார்.

அவர் கண்களில் கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந்தது.

கொஞ்சம் நேரம் கழித்து “சுதா இப்படி அவசரப் பட்டு ஆத்தே விட்டு ஓடிப் போவான்னு, நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலே.நாம அவளுக்கு ஒரு ‘வழி ‘பண்றதுக்கு முன்னாடி,அவ தனக்கு பிடி ச்ச மாதிரி ஒரு ‘வழியே’ பாத்துண்டுட்டா.அவளுக்கு பெத்தவாளை விட, அவ காதலிச்ச பீட்டர் ஒசத் தியா ஆயிட்டான்.அதனாலே தான் அவ இந்த ஆத்தை விட்டு அவன் கூட ஓடிப் போயிட்டா.எல்லா ம் முடிஞ்சுப் போச்சு.இனிமே நாம பண்ண என்ன இருக்கு.ஒன்னும் இல்லே” என்று சொல்லி ‘லெட்ட ரை’க் கசக்கி தூர ஏறீந்தார் ராமநாதன்.

கொஞ்ச நேரம் போனதும் ராமசாமி “ராமநாதா,நீ வேண்ணா ஒன்னு பண்ணேன்.நீ உடனே இப்போ அந்த ‘சுப்பர் மார்கெட்டுக்கு’ப் போய், சுதாவைப் பாத்து, ‘நல்ல தனம்’ சொல்லி அவளை மறு படியும் ஆத்துக்கு அழைச்சிண்டு  வறத்துக்கு ‘ட்ரை’ பண்றயா” என்று வருத்தத்தோடு கேட்டார்.

அப்பா கேட்டதுக்கு ராமநாதன் பதில் ஒன்னும் சொல்லவில்லை.

வெறுமனே யோஜனைப் பண்ணீக் கொண்டு இருந்தார்.மாமனார் சொன்னதைக் கேட்ட மங்க ளத்துக்கும் விமலாவுக்கும்,‘ஒரு வேளை அப்படிப் பண்ணா சுதா மறுபடியும் ஆத்துக்கு மறுபடியும் வந்துடுவாளே’ என்று ஆசைப் பட்டார்கள்.

பத்து நிமிஷம் ஆனதும் ராமநாதன் “நான் ஆத்துக்கு வறதுக்கு முன்னாடி,நீங்க மூனு பேரும் சுதா எழுதி இருந்த ‘லெட்டரை’ நன்னா படிச்சு இருப்பேள்ன்னு நினைக்கிறேன்.அவ தீர யோசிச்சுத் தான் இந்த முடிவை எடுத்து இருக்கா.அவளுக்கு இருபத்தி மூனு வயசு ஆறது.அவ இன்னும் ஒரு சின்ன குழந்தே இல்லே.நம்மை எல்லாரையும்விட தனக்கு அந்த ‘கிருஸ்தவ பையன் காதல்’ தான் முக்கியம்னு ரொம்ப விவரமா எழுதி இருக்காளே.அதே நீங்க எல்லாம் நன்னா படிச்சு இருப்பேளே” என்று சொல்லி விட்டு தன் மூக்குக் கணாடியை கழட்டி விட்டு,தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

கொஞ்ச நேரம் ஆனதும் “நான் அந்த ‘சுப்பர் மார்கெட்டுக்கு’ப் போய்,அந்த கிருஸ்த பையன் எதிரில் சுதாவுக்கு என்ன ‘நல்ல தனம்’ சொல்றது.அப்படி நான் சொன்னா அவ கேக்கப் போறாளா என்ன.எனக்கு என்னவோ அவ ஓடிப் போனதை ஒரு ‘கெட்ட’கனவா மறந்துட்டு,இனிமே ரமாவை நன்னா படிக்க வச்சி,சுதா எழுதி இருக்கிறா மாதிரி ஒரு நல்ல பிராமணப் பையனா கல்யாணத்தை பண்ணீ வச்சி, சந்தோஷப் பட்டுண்டு வரணும்.எனக்கு வேறே வழி ஒன்னும் தெரியலே.நான் அந்த ‘சூப்ப்ர் மார்கெட்டு’க்குப் போய் எல்லார் எதிரிலும் அவமான பட விரும்பலே.நாம் எல்லாரும் மெல்ல மெல்ல சுதாவை மறந்து வந்து வாழப் பழகணும்”என்று சொல்லி விட்டு ‘சோபா’வை விட்டு மெல்ல எழுந்தார்.

ராமநாதன் சொன்னததை கேட்ட ராமசாமிக்கும், விமலாவுக்கும் மங்களத்துக்கும்  என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.மூவருக்கும் ராமநாதன் சொன்னதில் ‘அர்த்தம் இருக்கு’ ’இனிமேல் சுதாவை மறந்து தான் வாழ்ந்து வர வேணும்’ ‘வேறே வழி ஒன்னும் இல்லே’ என்கிற முடிவுக்கு வந்து ஆக வேண்டிய காரியங்களை கவனித்து வர ஆரம்பித்தார்கள்.

ஆனால் நாலு பேரும் தங்கள் மனதில் அழுதுக் கொண்டு தான் வாழ்ந்து வந்துக் கொண்டு இருந்தார்கள்.

வீட்டை விட்டு தன் பையுடன் சுதா நேரே அவள் வேலை செய்து வந்த ‘சூப்ப்ர் மார்கெட்டு’க்கு வந்தாள்.வாசலிலேயே காத்துக் கொண்டு இருந்த பீட்டர் சுதாவைப் பார்த்து “வா சுதா.நீ உங்க வீட்டே விட்டு வருவேன்னு நான் எதிர் பார்க்கலே” என்று சொன்னதும் சுதா அவனைப் பார்த்து “எனக்கு வே றே வழி ஒன்னும் தெரியலே.உங்க பேர்லே இருக்கிற ஆசையாலே நான் எங்க ஆத்தே விட்டு இந்த பை யோடு உங்க கூட வாழ்ந்து வர வந்துட்டேன்” என்று சொன்னதும் பீட்டர் “நீ கவலைப் படாதே சுதா. நான் உன்னே ஏமாத்தவே மாட்டேன்.நான் சத்தியம் பண்ணிக் குடுத்தா மாதிரி இன்னே காலம் பூரா வும் கண் கலங்காம வச்சுப்பேன்” என்று சொல்லி விடு சுதாவை ‘சூப்ப்ர் மார்கெட்டு’க்கு உள்ளே அழைத்துக் கொண்டு போனான்.

பீட்டர் மானேஜர் அறைக்கு சுதாவை அழைத்துக் கொண்டு போய் ”சார்,நான் உயிருக்கு உயிரா காதலிச்ச சுதா அவங்க வீட்டே விட்டு இந்த பையோடு வந்து இருக்கா.நான் அவளுக்கு சத்தியம் பண்ணிக் குடுத்தா மாதிரி அவளே கல்யாணம் கட்டிக்கப் போறேன்.நீங்க எனக்கு ஆசீர்வாதம் பண் ணுங்க” என்று கையை கூப்பி கேட்டான்.
உடனே அவர் “பீட்டர்,நீ இந்த பொண்ணே உன் கூட கூட்டிக் கிட்டுப் போய் உங்க அப்பா ஆயா கிட்டே எல்லா விஷயத்தையும் சொல்லு.நான் இன்னைக்கு உனக்கு லீவு தறேன்” என்று சொன்னதும் பீட்டர் அவரை ‘தாங்க்’ பண்ணி விட்டு சுதாவை அழைத்துக் கொண்டு,அவன் அப்பா வேலை செய்துக் கொண்டு இருந்த ‘சர்ச்சு’க்குப் போய் எல்லா விஷயத்தையும் சொன்னான்.

சந்தோஷப் பட்டு ஜான் அவங்க ரெண்டு பேரையும் “பாதர் சுபீரியர்” இடம் அழைத்துப் போய் “பாதர்,இவங்க ரெண்டு பேரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிரா நேசிக்கறாங்க.இந்தப் பொண்ணு ஒரு ஐயர் பொண்ணு.இதே பத்தி உங்க கிட்ட நான் முன்னமே சொல்லி இருக்கேன். நானும் என் அம்மாவும் இந்த பொண்ணு வீட்டுக்குப் போய் எவ்வளவோ கேட்டுப் பாத்தோம்.கடைசியா நானும் என் அம்மாவும் அவங்களேப் பாத்து ‘நீங்க பீட்டர் பேரை ஒரு ஐயர் பேரா மாத்தி,உங்க ஐயர் வழக்கப் படி ஒரு கல்யாணத்தே பண்ணி வச்சி,இந்த ‘இளசு’களை பிரிச்சு விடாம பண்ணுங்கன்னு கேட்டுப் பாத்தோம்.அவங்க அந்த மாதிரி பண்ணாததாலே பாவம் இந்த பொண்ணு இந்த துணிப் பையோடு அவங்க வீட்டே விட்டு ஓடி வந்து இருக்கு.நீங்க இவங்க ரெண்டு பேருக்கும் நம்ம மத வழக்கபடி மோதிரம் மாத்தி உங்க ஆசீர்வாததோட ‘கர்த்தர்’ முன்னாடி ஒரு கல்யாணத்தே பண்ணி வக்க முடியுமா” என்று தன் கைகளைக் கூப்பிக் கொண்டு கேட்டான்.

உடனே “பாதர் சுபீரியர்” ”ஜான்,நான் இவங்க ரெண்டு பேருக்கும் நம்ம  மத வழக்கபடி மோதிரம் மாத்தி ‘கர்த்தர்’ முன்னாடி ஒரு கல்யாணத்தே பண்ணி வக்கிறேன்.ஆனா இந்த மாதிரி பண்றதாலே பின்னாடி ஒரு குழப்பமும் வராதே.நீ எதுக்கும் இந்த பொண்னையும், பீட்டரையும் அழை ச்சுக் கிட்டே உங்க அம்மா கிட்டே விஷயத்தே சொல்லு.இந்த மாதிரி பண்றதிலே அவங்களுக்கும் சம்மதம் இருக்கணும்” என்று சொல்லி முடிக்கவில்லை சுதா “பாதர்,எங்க ஆத்லே இருந்து யாரும் ஒரு குழப்பமும் பண்ண மாட்டா.அவா எல்லாரும் பீட்டர் அப்பாவும் பாட்டியும் சொன்னா மாதிரி பண்ண எங்க ஆத்து வாத்தியாரைக் கூப்பிட்டு கேட்டா.அவர் முடியாதுன்னு சொல்லி விடவே,எனக்கு வேறே வழி ஒன்னும் தெரியலே.நான் ஒரு ‘லெட்டர்’ எழுதி வச்சுட்டு,அந்த ஆத்தே விட்டு இந்த துணிப்பை யோடு ‘இவரோடு’ வாழ்ந்து வர சம்மதிச்சு வந்து இருக்கேன்” என்று தீர்மானமாகச் சொன்னாள்.

‘பாதர் சுபீரியர்’ சொன்ன மாதிரி ஜான் சுதாவையும்,பீட்டரையும் அழைத்துக் கொண்டு தன் வீட்டுக்கு வந்து எல்லா விஷயத்தையும் விவரமாக அம்மாவிடம் சொன்னான்.

உடனே ரோஸி சுதாவைப் பார்த்து “அம்மா சுதா,நீ உங்க வீட்டே விட்டு இப்படி ஒரு துணிப் பையோட ஓடி வந்து இருக்கே.உனக்கு பீட்டரை கல்யாணம் பண்ணிக்க பூரண சம்மதமா. நீ பீட்டரை கல்யாணம் பண்ணிக் கிட்ட பிறவு,உங்க அம்மா அப்பா இங்கே வந்து ஏதாச்சும் கலாட்டா பண்ணுவா ங்களா” என்று பயத்துடன் கேட்டாள்.
உடனே சுதா “பாட்டி,அவா யாரும் இங்கே வந்து ஒரு கலாட்டாவும் பண்ண மாட்டா.நீங்க ¨தா¢யமா இருந்துண்டு வாங்கோ” என்று சொன்னதும் ரோஸி சுதாவை ஆசீவாதம் பண்ணீனாள்.

அந்த வார கடைசியிலேயே ரோஸியும்,ஜானும் சுதாவையும் பீட்டரையும் அழைத்துக் கொண்டு சர்ச்சுக்குப் போய் ‘பாதர் சுப்பீரியர்’  முன்னிலையில் அவர்கள் வழக்கப் படி மோதிரம் மாற்றி கல்யா ணம் பண்ணிக் கொண்டார்கள்.

அடுத்த நாளில் இருந்து சுதாவும் பீட்டரும் ஒன்றாக அந்த ‘சூப்பர் மார்கெட் வேலைக்கு ஒன் றாக சந்தோஷமாக போய் வந்துக் கொண்டு இருந்தார்கள்.

சுதா வீட்டை விட்டு ஓடிப் போய் ஒரு மாதம் ஆகி விட்டது.

எப்போதுமே குடும்பத்தில் ஏற்படும் ஒரு ‘துக்கம்’ வயதானவர்களால் தான் தாங்கிக் கொண்டு வருவது மிகவும் கஷ்டமாய் இருக்கும்.அவர்கள் ‘தள்ளாமையும் குடும்பத்தின் மேல் இருக்கும் அசை க்க முடியாத “பாசமும்” தான் காரணம்.

வீட்டிலேயே இருந்து வந்ததால் விமலவும்,மங்களமும் சுதாவைப் பற்றி கவலைப் பட்டுக் கொ ண்டு வந்தார்கள்.இருப்பினும் வீட்டு வேலைகளை செய்து வந்துக் கொண்டு இருந்ததால் அவர்கள் பொழுது போய்க் கொண்டு இருந்தது.

‘ஆபீஸ்’க்கு போய்க் கொண்டு ராமநாதனும் தன் வேலையில் கவனம் செலுத்தி வந்தார்.

ஒரு வேலையும் இல்லாத ராமசாமியால் சுதா வீட்டை விட்டு ஒரு கிருஸ்தவ பையனுடன் ‘ஓடிப் போன’ விஷயத்தை தாங்கிக் கொண்டு வருவது ரொம்ப சிரமமாக இருந்தது.‘சுதா,அந்த கிருஸ்தவா ஆத்லே என்ன கஷ்டப் பட்டுண்டு வறாளோ.பகவானே சுதா எந்த கஷ்டமும் படாம சந்தோஷமா இரு ந்துண்டு வரணும்’ என்று எப்போதும் கவலைப் பட்டுக் கொண்டு இருந்தார்.பெரிய பேத்தியின் பாசம் அவரை மிகவும் வாட்டி வந்தது.

ஒரு நாள் காலையில் எழுந்ததும் பல்லைத் தேய்த்துக் கொண்டு வந்த ராமசாமி,மிகவும் முடியாமல் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தார்.

உடனே ராமநாதன் “என்னப்பா,நீங்க உங்க நெஞ்சை பிடிச்சுண்டு உக்காந்துட்டேள். உங்களுக்கு நெஞ்சை ரொம்ப வலிக்கறதா” என்று சொல்லிக் கொண்டு அப்பா பக்கத்திலே உட்கார்ந்துக் கொண் டு அவர் கையைப் பிடித்து கேட்டான்.“ஆமாம் ராமா.எனக்கு நெஞ்சை ரொம்ப வலிக்கறது. இந்த ஆத் தே விட்டு சுதா ஒரு கிருஸ்தவை பையன் கூட ஒடிப் போன சமாசாரம் என்னால் தாங்கிக்கவே முடிய லே. ‘இந்த மாதிரி’ எல்லாம் நடந்தா என்னேப் போல இருக்கிற பெரியவாளுக்கு நெஞ்சே நிச்சயமா வலிக்கத் தான் வலிக்கும்” என்று கத்திச் சொன்னார்.

உடனே ராமநாதன் “அம்மா, உங்களுக்கு  ஏற்கெனவே B.P.இருக்கு.நீங்க இந்த சுதா சமாசார த்தே நினைச்சு ரொம்ப கவலைப் பட்டுண்டு வராதீங்கோ.தயவு செஞ்சி கத்திப் பேசாதீங்கோ. அது உங்க B.Pயை நிச்சியமா ஜாஸ்தியாக்கும்” என்று சொல்லி அப்பாவைக் கவலைப் படாம இருந்து வரச் சொன்னான்.

கொஞ்ச நேரம் ஆனதும் ”அப்பா,ராத்திரி போட்டுக்க வேண்டிய ரத்த கொதிப்பு மாத்திரை போட்டுண்டேளா” என்று கேட்டார் ராமநாதன்.”இல்லே ராமா,நான் போட்டுக்க மறந்து விட்டேன்.இதோ நான் இப்பக் கொண்டு வந்து ‘காபி’ குடிச்சுட்டு போட்டுக்கறேன்” என்று சொன்னார் ராமசாமி.சொன் னாரே ஒழிய ராமாசாமி ‘சோபா’வை விட்டு எழுந்தா¢க்காமல் தன் கண்களை மூடி கொண்டு உட்கார் ந்துக் கொண்டு இருந்தார்.

கொஞ்ச நேரம் ஆனதும் அவர் மெல்ல எழுந்து,தன் பெட் ரூமுக்குப் போய் ரத்த கொதிப்பு மாத் திரையை எடுக்கப் போனார்.ஆனால் ராமசாமி முடியாமல் மறுடியும் வந்து ‘சோபா’வில் ‘தொப்’ என்று உட்கார்ந்து விட்டார்.

அவர் கண்கள் மூடி இருந்தது.

பதறிப் போன ராமநாதன் உடனே எழுந்து வந்து ”ஏம்ப்பா,உங்களுக்கு ரொம்ப சோர்வா இருக்குன்னு சொன்னேள்.ஆனா இப்போ கண்ணை மூடிண்டு உக்காந்துண்டு இருக்கீங்களே” என்று சொல் ல்லிக் கொண்டு அவர் பக்கத்தில் வந்து உட்கார்ந்துக் கொண்டு கவலையோடு விசாரித்து அவர் உட ம்பைத் தொட்டுப் பார்த்தார்.

அவர் உடம்பு ‘ஜில்’ என்று இருந்தது.

ராமநாதன் மிகவும் கவலை பட்டார்.ராமசாமி வெறுமனே தன் கண்களை மூடிக் கொண்டு தான் இருந்தார்.ஒரு நிமிஷம் கூட ஆகி இருக்காது அப்படியே சாய்ந்து விட்டார்.பதறிப் போன ராமநாதன் அவர் கையைத் தொட்டுப் பார்த்தார்.அவருக்கு தேள் கொட்டியது போல் இருந்தது.

”ஏம்ப்பா,இப்படி திடீரென்று படுத்துட்டேள்.உங்க உடம்பு இப்படி ‘ஜில்’ன்னு ஆயிடுத்தே.அம் மா,மங்களம் உடனே ஓடி வாங்கோ.அப்பா உடம்பு சோர்வா இருக்குதுன்னு சொல்லி சோபாவில் படுத் தா.ஆனா இப்போ அவர் உடம்பு ‘ஜில்’ ன்னு ஆயிடுத்து.மங்களம் சீக்கிரமா ஓடி வா” என்று கத்தினார்  ராமநாதன்.

ராமநாதான் கத்தி சொன்னதைக் கேட்ட விமலாவும் மங்களமும் சமையல் அறையில்  இருந்து ஓடி வந்து  வந்தார்கள்.மங்களம் கொஞ்சம் தண்ணீர் எடுத்து ராமசாமியின்  முகத்தில் தெளித்தாள். வெறுமனே கொஞ்சம் முகத்தைச் சுளித்தாரே ஒழிய அவர் தன் கண்களைத் திறக்கவில்லை.பதறிப் போன விமலாவுக்கு கையும் ஓடவில்லை,காலும் ஓடவில்லை.மங்களமும் கவலைப் பட்டாள்.

உடனே ராமநாதன் தன் ‘ஷர்ட் பாண்டை’ போட்டுக் கொண்டு,பர்ஸையும் எடுத்துக் கொண்டு வாசலுக்குப் போய் காலியாக போய்க் கொண்டு இருந்த ஒரு ஆட்டோவை கைத் தட்டி அழைத்தார். அந்த ஆட்டோ வாசலுக்கு வந்ததும் ராமநாதன் மெல்ல அப்பாவை எழுப்பி,மங்களத்தையும் அழைத் துக் கொண்டு அருகில் இருந்த ‘நர்ஸிங்க் ஹோமு’க்கு ஓடினார்.

ராமநாதன் ஹாஸ்பிடல் உள்ளே ஓடிப் போய் அங்கு இருந்த டாகடரிடம் தன் அப்பாவின் நிலை யைச் சொல்லி உடனே கவனிக்குமாறு வேண்டிக் கொண்டான்.டாக்டரும் உடனே ஓடி வந்து ராம சாமியை பா¢சோதனைப் பண்ணிப் பார்த்தார்.அவர் கூட வந்த ‘நர்ஸிடம்’ ஏதோ ஒரு மருந்து பேரைச் சொல்லி ‘இஞ்செக்ஷனையும்’ சீக்கிரமாக கொண்டு வரச் சொன்னார்.

‘நர்ஸ¤ம்’ உடனே ஓடிப் போய் டாக்டர் சொன்ன மருந்தையும் ‘இஞ்செக்ஷனையும்’ கொண்டு  வந்தாள்.

டாக்டர் அந்த பாட்டிலை உடைத்து உடனே ராமசமிக்கு ஒரு ‘இன்ஜெக்ஷனை’ப் போட்டார்.

பிறகு அவர் நாடியைப் பிடித்துப் பார்த்து விட்டு “நீங்க உடனே இவரை ஒரு I.C.U. இருக்கிற ஒரு பெரிய ஹாஸ்பிடலில் அழைத்துப் போய் வைத்தியம் பாருங்க.அவர் நிலைமை ரொம்ப மோசமா இருக்கு” என்று சொன்னார் அந்த டாக்டர்.

டாக்டர் சொன்னதைக் கேட்ட ராமநாதுனுக்கு மயக்கமே வரும் போல் இருந்தது.

”அப்பா நிலைமை ரொம்ப மோசமா இருக்குன்னு டாக்டர் சொல்றாரே.நாம உடனே இவரை ஒரு I.C.U.இருக்கிற ஹாஸ்பிடலுக்கு கொண்டு போய் ‘அட்மிட்’ பண்ணி ஆகணும்”என்று ராமநாதன் சொ ன்னதும் ”ஆமாம்,நீங்க சொல்றது ரொம்ப சரி.நாம அவரை உடனே ஒரு பெரிய ‘ஹாஸ்பிடலுக்கு’ அழைச்சுண்டு போகலாம்” என்று மங்களம் சொன்னதும் ராமநாதன் அங்கேயே காத்துக் கொண்டு இருந்த ஆட்டோ டிரைவரை உதவிக்குக் கூப்பிட்டான்.

ராமநாதன் அம்மாவை ‘போனில்’ கூப்பிட்டு “அம்மா இந்த சின்ன ஹாஸ்பிடல்லே இருக்கற டாக்டர் அப்பாவுக்கு ஒரு ‘இஞ்செக்ஷன்’ போட்டுட்டு,.அவர் நிலைமை ரொம்ப மோசமா இருக்குன்னு சொல்லி என்னை உடனே அவரை I.C.U. இருக்கிற ஹாஸ்பிடலுக்கு கொண்டு போய் அட்மிட் பண் ணச் சொல்லிட்டார்.அதனால் நானும் மங்களமும் அப்பாவை I.C.U. இருக்கிற ஹாஸ்பிடலுக்கு கொ ண்டு போய் ‘அட்மிட்’ பண்ணப் போறோம்.நான் உங்களுக்கு அங்கே போய் ‘போன்’ பண்றேன்ம்மா” என்று சொல்லி விட்டு ராமநாதன் அந்த ஆட்டோ டிரைவா¢டம் “சார்,இங்கே இருக்கிற டாக்டர் உடனே  இவரை ஒரு I.C.U. இருக்கிற பெரிய ஹாஸ்பிடலுக்கு கொண்டு போங்கன்னு சொல்லிட்டாரு.நீங்க மறுபடியும் அவரை கொஞ்சம் பிடிச்சி ஆட்டோவிலே ஏத்தறீங்களா ப்லீஸ்’ “என்று கெஞ்சினான்.

”சரி வாங்க,நாம இவரே ஆட்டோவிலே ஏத்திக் கிட்டு ஒரு பெரிய ஹாஸ்பிடலுக்குக் கொண்டு போவலாம்”என்று சொல்லி ராமசாமியைப் பிடித்தார்.உடனே ராமநாதனும்,அந்த ஆட்டோ டிரைவரும் பிடித்து  ராமசாமியை கைத் தாங்கலா மெல்ல பிடித்து தூக்கி மறுபடியும் வந்த ஆட்டோவில் ஏற்றினார் கள்.ராமநாதனும் மங்களமும் ஆட்டோவில் ஏறிக் கொண்டார்கள்.

ராமநாதன் இந்த ஆஸ்பத்திரிக்கு கொடுக்க வேண்டிய ‘பீஸை’ கட்டி விட்டு வெளியே வந்து ஆட்டோவில் ஏறி ”கொஞ்ச சீக்கிரமா பெரிய ஆஸ்பத்திரிக்குப் போங்க” என்று டிரைவரை அவசரப் படுத்தினார் ராமநாதன்.

ஆட்டோ டிரைவரும் “சரிங்க,இதோ நான் சீக்கிரமாப் போறேங்க” என்று சொல்லி விட்டு ஆட் டோவை ‘ஸ்டார்ட்’ பண்ணி வண்டியை ஓட்ட ஆரம்பித்தான்.

பெரிய ஆஸ்பத்திரியை அடைந்தவுடன் ராமநாதன் உடனே இறங்கி ‘எமர்ஜென்ஸி’க்குப் போய் அங்கு இருந்த டாக்டரிடம் தன் அப்பாவின் நி¨லையை விளக்கி, அந்த சின்ன ஆஸ்பத்திரியில் செய் த சிகித்சையையும் விளக்கினான்.

‘எமர்ஜென்ஸியில்’ இருந்த டாக்டர் அங்கு இருந்த இரண்டு ஆஸ்பத்திரி சிப்பந்திகளைக் கூப் பிட்டு வெளியில் ஆட்டோவில் இருக்கும் ‘பேஷண்டை’உடனே ‘எமர்ஜென்ஸிக்கு’ கொண்டு வரச் சொன்னார்.அவர்களும் உடனே ஓடிப் போய் ஆட்டோவில் இருந்த ராமசாமியை ஒரு ‘ஸ்ட்ரெஸ்ஸா¢ல்’ ஏற்றிக் கொண்டு வந்து ‘எமர்ஜென்ஸி’யில் கொண்டு வந்து விட்டார்கள்.

டாக்டர் ராமசாமியை நன்றாகப் பா¢சோதனைப் பண்ணிப் பார்த்து விட்டு,பிறகு அவரை  I.C.U க்குள் அனுப்பி விட்டார்.

மங்களம் தன் கணவா¢டம் “ஏன் அப்பாவை I.C.U.க்குள் அழைச்சுண்டு போய் இருக்கா” என்று கவலையுடன் கேட்டாள்.

ராமநாதனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.அவர் மங்களத்தைப் பார்த்து “கவலைப்படாதே மங்களம்அவருக்கு ஒன்னும் இல்லே.இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாம் சரியாப் போகும்” என்று சொல்லி மங்களத்துக்கு ஆறுதல் சொன்னார்.சொன்னாரே ஒழிய அவருக்கும் ‘ஏன் நம்ம அப்பா வை I.C.U.க்குள்அழைச்சுண்டு போய் இருக்கா’ என்று சந்தேகமாகப் பட்டார்.

ராமநாதன் ‘எமர்ஜென்ஸி’ டாக்டரைப் போய்க் கேட்டார்.

உடனே அந்த டாக்டர் “அவர் நிலைமை ரொம்ப மோசமா இருக்கு.அவர் நாடித் துடிப்பு மிகவும் குறைவா இருக்கு.தவிர அவருக்கு இப்போ உடனே ‘ஆக்ஸிஜன்’ செலுத்தி ஆகணும்.தவிர அவருடை ய ‘ப்ளட் ப்ரெஷர்’, E.C.G ரெண்டையும் மானிட்டர்’ பண்ணணும்.அதனால் தான் அவரை I.C.U க்கு ள் அனுப்பி இருக்கோம்.அங்கு வைத்தியம் செஞ்சா தான் அவரை பிழைக்க வைக்க முடியும்.’எமர்  ஜென்ஸி’லே அதே எல்லாம் செய்ய முடியாது” என்று சொல்லி விட்டு ‘எமர்ஜென்ஸி’க்கு வந்த வேறு ஒரு ‘பேஷண்ட்டை’ கவனிக்கப் போய் விட்டார்.டாகடர் சொன்னதை கேட்ட ராமநாதனுக்கு மிகவும் கவலையாய் போய் விட்டது.
அவன் கண்களில் நீர் துளித்தது.

இதைப் பார்த்த மங்களம் தன் கணவனைப் பார்த்துப் “ஏன்னா நீங்கோ கண் கலங்கறேள்.டாக்ட ர் அப்படி என்ன சொன்னார்” என்று கவலையுடன் கேட்டாள்.ராமநாதன் டாகடர் சொன்னதை மங்கள த்துக்கு சொன்னார்.ராமநாதன் டாக்டர் சொன்னதை அம்மாவுக்கு ‘போனில்’ சொன்னார்.விமலா மிக வும் கவலைப்பட்டு “என்ன ராமநாதா,இப்படி சொல்றே.அப்பாவுக்கு ஒன்னும் ஆகாதே.எனக்கு ரொ ம்ப பயமா இருக்கு ராமநாதா” என்று கவலையுடன் கேட்டாள்.ராமநாதன் “கவலைப் படாதீங்கோம்மா. அப்பாவுக்கும் ஒன்னும் ஆகாது” என்று அம்மாவுக்கு தேத்தறவு சொன்னார் ராமநாதன்.

வீட்டிலே விமலா சுவாமியை வேண்டிக் கொண்டு இருந்தாள்.ராமநாதனும்,மங்களமும் அங்கு இருந்த சோ¢ல் உட்கார்ந்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு பகவானை வேண்டிக் கொண்டு இருந்தார்கள்.

கொஞ்ச நேரம் போனதும் ஒரு டாக்டர் வெளியே வந்து ராமநாதனைக் கூப்பிட்டு “அவர் நிலை மை இன்னும் மோசமாத் தான் இருக்கு.அவர் B.P, ECG, ரெண்டையும் நாங்க ‘மானிட்டர்’ பண்ணி வரோம்.இன்னும் மூனு மணி நேரத்துக்குள்ளே அவர் நாடித் துடிப்பு கொஞ்சமாவது அதிகம் ஆகணும். அவர் இப்போ ரொம்பா ‘க்ரிடிகல்லா’ இருக்கார்” என்று சொன்னார்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *