தாயே தெய்வம்!

 

ஓர் ஏழை; ஏழையென்றால் ஏழை அப்படிப்பட்ட ஏழை. சட்டைதான் டெரிலின் சட்டை யாகவே அணிவானே ஒழிய, ஒரு வேளை கஞ்சிக்குக்கூடக் கஷ்டப் படும் ஏழை. அவனிடம் ஒரு விசேஷம்… சேர்ந்தாற்போல் எவ் வளவு நாள் பட்டினி கிடந்தாலும் சரி, எத்தனை முரடர்களையும் ஒண்டி ஆளாக அடித்து நொறுக்கி விடுவான்.

அந்தக் கதாநாயகன், கதாநாயகியைக் காதலிக்கிறான். அவள் பணக்காரி, பணக்காரி, அப்படிப் பட்ட பணக்காரி. பணக்காரியே ஒழிய, உள்ளம் இளகிய உள்ளம். ஏழைகளைக் கண்டால் போதும், உடனே காதலித்துவிடும். அவள் அப்பாவோ பணத் திமிர், சாதி வெறி, கர்வம், ஆடம்பரம், அகம் பாவம் இவை எல்லாவற்றுக்கும் இருப்பிடம். ‘தன் பெண் படித்துப் பட்டம் பெற்றவளாக இருந்தால் என்ன… கட்டை வண்டிக்கார னைக் காதலிக்கட்டுமே’ என்று சும்மா இராமல், காதலுக்கு முட் டுக்கட்டை போட்டுவிட்டார்.

அந்தக் கதாநாயகிக்கும் கதா நாயகனுக்கும் காதல் ஏற்பட்டதே ஒரு சுவையான நிகழ்ச்சி! அவள் சைக்கிள் ஓட்டிக்கொண்டு வந் தாள். எதிரே இவன் கட்டை வண்டி. ஒரு மோதல்… உடனே காதல்! அவள் அவனைப் பார்த்து, ”ஏய்… ஃபூல்!” என்றாள். அவன் உடனே, ”ஏய் கேர்ள்!” என்றான். இது மவுன்ட்ரோடில் நடக்கிறது. உடனே கதாநாயகி பி.சுசீலா குர லில், ”ஏய் ஃபூல்… ஏய் ஏய் ஏய்… ஃபூல்!” என்று பாடுகிறாள். கதா நாயகன் டி.எம்.எஸ். குரலில், ”ஏய் கேர்ள்… ஏய் ஏய் ஏய் கேர்ள்” என்று பாடுகிறான்.

‘ஓய் ஓய்… ஒண்ணாம் நம்பர் இடியட்! ஓ…ய்ய்யா!’ – அவள்.

‘டோய் டோய்… ரெண்டுங் கெட்டான் ரெடிமேட்! டோய்யா!’ – அவன்.

மெரீனா பீச்சிலிருந்து ஊட்டிக் குப் போய்த் திரும்பி மறுபடி மவுன்ட்ரோடுக்கே வந்து பாட்டை முடித்துக்கொண்டு, தெய்விகக் காதலர்களாகிவிட்டார்கள்.

கதாநாயகனும் கதாநாயகியும் இரண்டாவது டூயட் பாடுவதற்காக, ரகசியமான இடமாக இருக்கட் டுமே என்று மைசூர் பிருந்தாவனத் துக்குப் போய், பல்லவியை ஆரம் பித்து, அப்படியே சாத்தனூர் அணைக்கட்டில் வந்து சரணத் தைப் பாடும்போது, கதாநாயகியின் பொல்லாத அப்பா ஒரு செடிக்குப் பின்னாலிருந்து பார்த்துவிட்டார்!

அவர் எதற்காகச் சாத்தனூர் அணைக்கட்டுக்கு வந்தார் தெரி யுமா? கள்ளக் கடத்தல் வியாபாரம் செய்ய! தன் வீட்டில் கள்ளக் கடத்தல் வியாபாரம் செய்தால் யாராவது பார்த்துவிடுவார்களே என்று பயந்து, அதை சாத்தனூர் அணைக்கட்டிலாவது, பார்க்கிலா வதுதான் வைத்துக்கொள்வார்.

வீட்டுக்கு வந்த பிறகு, மகளை கண்டபடி திட்டி, இனிமேல் வீட்டை விட்டு வெளியே போகவே கூடாது என்று கூறிவிட்டார். வீட்டில் வேலைக்காரன் இருக்கி றானே, அவன் சும்மா இருப் பானா? அவன் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் உதவுவது என்று தீர்மானித்துவிட்டான். அவனுக்கு அதுதானே வேலை? ஏனென்றால், அவன் கதாநாயகனுக்கு நண்பன். அவன்தான் காமெடியன்.

அவன் உதவியோடு சில பல ரீல்களுக்குப் பிறகு, கடைசியில் போலீஸ் வந்து வில்லனைக் கைது செய்தது. உடனே வில்லன் மனம் திருந்தி, ”நான் திருந்திட்டேன். என் மகளை நீயே கல்யாணம் செய்து கொள்” என்று சொல்ல, ”நீங்கள் நினைத்ததுபோல் நான் கட்டை வண்டிக்காரன் அல்ல. படித்துப் பட்டம் பெற்ற இன்ஜி னீயர். பொழுதுபோக்குக்காகக் கட்டை வண்டி இழுத்தேன். அவ்வ ளவுதான்” என்று உண்மையை விளக்கினான் கதாநாயகன்.

கதாநாயகிக்கும் கதாநாயகனுக் கும் விமரிசையாகக் கல்யாணம் நடந்தது. கதாநாயகன் தன் தாயார் படத்தின் முன்னால் நின்று கை கூப்பி வணங்கி, ”தாயே! எல்லாம் உன்னால்தான் நடந்தது. எங்களை ஆசீர்வாதம் பண்ணம்மா!” என்று கேட்டான். தாயார் படத்தின் மீதிருந்த மாலையிலிருந்து, ஒரு ரோஜா இதழ் கதாநாயகன் தலையிலும், இன்னொரு ரோஜா இதழ் கதாநாயகி தலையிலும் விழுந்தது. அவன் சொன்னான்… ”தாயே தெய்வம்!”

உடனே அவர்கள் இருவரும் காஷ்மீருக்குப் போக, அவள் ”ஏய் ஏய் ஏய்… ஃபூல்!” என்று பாட, அவன் ”ஏய் ஏய் ஏய்… கேர்ள்’!’ என்று அவளைத் துரத்தினான். 

தொடர்புடைய சிறுகதைகள்
1. படம்: ஒரு தெரு. நல்ல இருட்டு. அந்த இருட்டில் ஓர் இளம் பெண் நடந்து செல்கிறாள் என்பது 'பளிச்' என்று தெரியவேன்டும். அந்தப் பெண்ணின் மேலாடை விலகியிருந்தால் நல்லது. வார்த்தை: அந்த இருட்டில் ராணி தன்னந்தனியாகப் போய்க் கொண்டிருந்தாள்! 2. படம்: படத்திற்கான ...
மேலும் கதையை படிக்க...
ஒண்ணே ஒண்ணு !
அன்று ஏகாம்பரம் வீட்டில் ஏகக் கூட்டம். ஏகாம்பரத்தின் மகன் ரவிக்கு மூன்று வயதாகிறது. பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். நண்பர்கள் கூட்டம். வீடு நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. ஏகாம்பரத்தின் மனைவி ஜலஜா அங்குமிங்கும் ஓடியாடி, வந்தவர்களை கவனித்து உபசரித்துக் கொண்டிருந்தாள். ஏகாம்பரம் அடிக்கடி ...
மேலும் கதையை படிக்க...
அவன் நடந்துகொண்டிருந்தான்; முடி வில்லாமல் நீண்டுகொண்டேயிருந்த நடை எங்கேதான் முடியுமோ! கையிலிருக்கும் கமண்டலத்தையும், உடம்பிலிருக்கும் காவி உடையையும், நெற்றியிலிருக்கும் திருநீற்றையும், முகத்திலிருக்கும் தாடியையும் கண்டால் ஒரு சாமியாரோ என்ற சந்தேகம் வருகிறது. இந்த இளம் வயதில் அவன் சாமியாராகக் காரணமென்னவாக இருக்கும்? இப்போது ...
மேலும் கதையை படிக்க...
அவள் தன் புருசனைப் பார்த்து, ''தா... சும்மா கிட!'' என் றாள். புருசன், ''சீ... கம்னு கிட!'' என்றான். அவர்கள் ஏழு வயதுப் பையன், ''இது இன்னடா பேஜாரு!'' என்றான். ''இந்தாம்மே... இப்ப இன் னான்றே?'' ''இன்னாய்யா முறைக்கிறே..! இஸ்டமில்லாட்டி உட்டுட்டுப் போயேன்... இன்னாமோ ...
மேலும் கதையை படிக்க...
'காவேரியில் குளித்தால், பண் ணிய பாவம் போகும்' என்று யாரோ சொன்னார்கள். 'சரி, காவேரியில் குளித்துவிட்டு வரலாம்' என்று காசிக் குப் போனேன். அப்படியே உடம்பை துடைத்துக்கொள்வதற்காகத்தான் பக்கத்திலே இருந்த அந்தக் கிராமத்திற்குப் போனேன். அழகான கிராமம். கூடுவாஞ்சேரி என்று பெயராம்! அந்தக் ...
மேலும் கதையை படிக்க...
ராக்கெட் ராணி
ஒண்ணே ஒண்ணு !
எது வாழ்க்கை ?
என்னைப் போல் ஒருவன்!
பத்மா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)