ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: புனைவு
கதைப்பதிவு: October 6, 2025
பார்வையிட்டோர்: 190 
 
 

(2013ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-14 | அத்தியாயம் 15-16

13. ரகசிய நாட்குறிப்புப் புத்தகம்

ஹெர்மயனி மருத்துவமனையில் பல வாரங்கள் தங்கியிருக்க நேர்ந்தது. கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து மற்றவர்கள் திரும்பி வந்தபோது, ஹெர்மயனி யார் கண்ணிலும் தட்டுப்படாமல் இருந்தது பல வதந்திகளுக்குத் தீனி போட்டது. ஏனெனில், அவள் தாக்கப்பட்டிருந்ததாக எல்லோரும் நினைத்தனர். அவளை லேசாகவாவது பார்க்கலாம் என்ற எண்ணத்தில் பல மாணவர்கள் அவள் படுத்திருந்த மருத்துவமனைப் பகுதி வழியாக அலைந்து கொண்டிருந்ததால், மேடம் பாம்ஃபிரே, முகத்தில் பயங்கர முடியுடன் பிறர் பார்வையில் பட்டு அவள் அவமானப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவளது படுக்கையைச் சுற்றி ஒரு திரைச்சீலையைத் தொங்கவிட்டார்.

ஹாரியும் ரானும் ஒவ்வொரு மாலையிலும் அங்கு சென்று அவளைப் பார்த்தனர். பள்ளியின் புதிய பருவம் துவங்கியதும், அவளுடைய வீட்டுப்பாடங்களை அவர்கள் அவளிடம் எடுத்து வந்தனர்.

ஒரு நாள் மாலையில், அவளது படுக்கைக்கு அருகில் இருந்த மேசையின்மீது ஒரு வண்டிப் புத்தகங்களை அடுக்கியவாறு, ரான், “எனக்கு மட்டும் பூனையின் நீண்ட மீசை முளைத்திருந்தால், படிப்பை ஏறக்கட்டி இருந்திருப்பேன்,” என்று கூறினான்.

“ரான், முட்டாள்தனமாகப் பேசாதே. படிப்பில் நான் பின்தங்கிவிடக்கூடாது,” என்று ஹெர்மயனி சுறுசுறுப்பாகக் கூறினாள். தனது முகத்திலிருந்த முடி அனைத்தும் மறைந்துவிட்டிருந்தது குறித்தும், மஞ்சள் நிறத்தில் இருந்த கண்கள் பழையபடி மெதுவாகப் பழுப்பு நிறத்திற்கு மாறிக் கொண்டிருந்தது குறித்தும் அவள் மிகவும் சந்தோஷமாக இருந்தாள். மேடம் பாம்ஃபிரேயின் காதுகளில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக ஹெர்மயனி தன் குரலைத் தாழ்த்திக் கொண்டு, “புதிய துப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்று நான் நினைக்கிறேன், சரிதானே?” என்று கேட்டாள்.

“ஆமாம், எதுவுமே கிடைக்கவில்லை,” என்று ஹாரி உற்சாகமின்றிக் கூறினான்.

ஹெர்மயனியின் தலையணைக்கு அடியில் லேசாக நீட்டிக் கொண்டிருந்த, தங்க நிறத்தில் இருந்த ஒன்றைச் சுட்டிக்காட்டி, “அது என்ன ?” என்று ஹாரி கேட்டான்.

“அது ஒன்றுமில்லை. நான் சீக்கிரமாகக் குணமாக வேண்டும் என்னை வாழ்த்தி எனக்கு வந்த இன்னொரு வாழ்த்து அட்டை” என்று மழுப்பிவிட்டு, அதை அவள் அவசர அவசரமாக அவர்கள் பார்வையிலிருந்து மறைக்க முயன்றாள். ஆனால் ரானின் வேகத்திற்கு அவளால் ஈடு கொடுக்க முடியவில்லை. அவன் அதை அவளிடமிருந்து பிடுங்கி, அதைப் பிரித்துத் திறந்து, உரத்தக் குரலில் படித்தான்:

“ஹெர்மயனிக்கு: நீ விரைவில் குணமடைய என் வாழ்த்துக்கள்! உன்மீது அக்கறை கொண்டுள்ள ஆசிரியர் – பேராசிரியர் கில்டராய் லாக்ஹார்ட், மூன்றாம் நிலை மெர்லின் பதக்கம், தீய மந்திர சக்திகள் பாதுகாப்புச் சங்கத்தில் கௌரவ உறுப்பினர், ‘மந்திரவாதினி வாராந்திர’ப் பத்திரிக்கையில் தொடர்ந்து ஐந்து வாரங்களுக்குப் ‘புள்ளகை மன்னன்’ பட்டம்.”

ரான் ஹெர்மயனியை வெறுப்புடன் பார்த்தான்.

“இதைப் போய்த் தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு நீ தூங்குகிறாயா?”

அப்போது, மேடம் பாம்ஃபிரே, ஹெர்மயனிக்கு இரவு கொடுக்கப்பட வேண்டியிருந்த மருந்துகளை எடுத்துக் கொண்டு அங்கு வந்ததால், ரானின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய தர்மசங்கடத்தில் இருந்து ஹெர்மயனி தப்பினாள்.

ஹாரியும் ரானும் அங்கிருந்து கிளம்பி கிரிஃபின்டார் கோபுரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ரான் ஹாரியிடம், “நீ சந்தித்துள்ளதிலேயே லாக்ஹார்ட்தான் மிகவும் சாமர்த்தியசாலியான ஆளா என்ன?” என்று கேட்டான். ஸ்னேப் அவர்களுக்கு ஏகப்பட்ட வீட்டுப்பாடங்களைக் கொடுத்திருந்தார். அவற்றைச் செய்து முடிப்பதற்குள் தான் ஆறாம் ஆண்டிற்குப் போய்விடுவோம் என்று ஹாரி நினைத்துக் கொண்டான். முடியைச் செங்குத்தாக நிற்க வைக்கும் மாயத் திரவத்தில் எத்தனை எலி வால்களைப் போட வேண்டும் என்பதைத் தான் ஹெர்மயனியிடம் கேட்க மறந்துவிட்டிருந்ததைப் பற்றி ரான் புலம்பிக் கொண்டிருந்தான். அப்போது அவர்கள் இருந்த தளத்திற்கு மேற்தளத்தில் கோபமான கத்தல் சத்தம் ஒன்று கேட்டது.

‘அது ஃபில்ச்,” என்று ஹாரி முணுமுணுத்தான். அவர்கள் வேகமாக மாடிப்படிகளில் ஏறி, மறைவாக நின்றுகொண்டு, கவனமாகக் காதுகொடுத்துக் கேட்டனர்.

ரான் பதற்றத்துடன், “வேறு யாராவது தாக்கப்பட்டிருப்பார்கள் என்று நீ நினைக்கிறாயா?” என்று ஹாரியிடம் கேட்டான். அவர்கள் ஆடாமல் அசையாமல், ஃபில்ச்சின் சத்தம் வந்து கொண்டிருந்த திசையை நோக்கித் தங்களுடைய தலைகளைச் சாய்த்து வைத்துக் கொண்டு, காதுகளைத் தீட்டிக் கொண்டு நின்றனர். ஃபில்ச் கன்னாபின்னாவென்று கத்திக் கொண்டிருந்தார்.

“தலையெழுத்து! எனக்கு இருக்கிற வேலை போதாதா? இந்த வேலை வேறு எனக்கு வேண்டுமா? துடைத்துப் பெருக்குவதாவது பரவாயில்லை. இதற்குமேல் தாங்காதடா சாமி ! நான் இப்போதே டம்பிள்டோரிடம் போகப் போகிறேன்”.

அவரது காலடி ஓசை தேய்ந்து மறைந்தது. தூரத்தில் ஒரு கதவு படாரென்று ஓங்கி மூடப்பட்டச் சத்தமும் கேட்டது.

அவர்கள் எட்டிப் பார்த்தனர். ஃபில்ச் அங்கிருந்து போவதற்கு முன், தனது வழக்கமான கண்காணிப்பு இடத்தில் காவல் காத்துக் கொண்டு இருந்து கொண்டிருந்தார் என்பது அவர்களுக்கு உறுதியாகத் தெரிந்தது. அவர்கள் நாரிஸ் பூனை தாக்கப்பட்ட இடத்திற்கு மறுபடியும் வந்தனர். ஃபில்ச் எதைப் பற்றிக் காச்சுமூச்சென்று கத்திக் கொண்டிருந்தார் என்பதை அவர்கள் அந்த இடத்தை ஒரு பார்வை பார்த்தவுடனேயே கண்டுபிடித்துவிட்டனர். பாதித் தாழ்வாரத்தில் நீர் வாரி இறைக்கப்பட்டிருந்தது. அது முனகல் மர்ட்டிலின் குளியலறைக் கதவின் வழியாக இன்னும் கசிந்து கொண்டு இருந்ததுபோலத் தோன்றியது. ஃபில்ச்சின் காட்டுக்கத்தல் இப்போது நின்றுவிட்டிருந்ததால், குளியலறைச் சுவர்களில் எதிரொலித்துக் கொண்டிருந்த முனகல் மர்ட்டிலின் தேம்பல்களை அவர்களால் தெளிவாகக் கேட்க முடிந்தது.

“இப்போது முனகல் மர்ட்டிலுக்கு என்ன பிரச்சனையாக இருக்கும்?” என்று ரான் கேட்டான்.

“நாம் உள்ளே போய் என்னவென்று பார்க்கலாம்,” என்று ஹாரி கூறினான். அவர்கள் தங்களுடைய அங்கிகளைத் தங்கள் கணுக்கால்களுக்கு மேலே தூக்கிப் பிடித்துக் கொண்டு, அந்தத் தாழ்வாரத்தில் கொட்டிக் கிடந்த தண்ணீரின் வழியாக நடந்து சென்று குளியலறைக் கதவை அடைந்தனர். அங்கு மாட்டப்பட்டிருந்த ‘உபயோகத்தில் இல்லை’ என்ற அறிவிப்புப் பலகையை அவர்கள் வழக்கம்போல அலட்சியம் செய்துவிட்டு உள்ளே சென்றனர்.

முனகல் மர்ட்டில் அழுது எப்போதையும்விட அது அதிகச் சத்தத்துடனும் அதிக வலியுடனும் கொண்டிருந்தது. முன்பு அழுது கொண்டிருந்தது. அது தனது வழக்கமான தண்ணீர்த் தொட்டிக்குள் மூழ்கியிருந்ததுபோலத் தோன்றியது. அந்தக் குளியலறைச் சுவர்களையும் தரையையும் தொப்பலாக நனைத்திருந்த தண்ணீர் அங்கிருந்த மெழுகுவர்த்திகளையும் அணைத்து விட்டிருந்ததால் அந்த அறை இருட்டாக இருந்தது.

“மர்ட்டில், என்னவாயிற்று?” என்று ஹாரி கேட்டான்.

“யார் அது?” என்று மாட்டில் பரிதாபமாகக் கேட்டது. “வேறு எதையாவது என்மீது எறிய வந்திருக்கிறாயா?”

அங்கு கொட்டிக் கிடந்த தண்ணீரின் ஊடாக மாட்டில் இருந்தி தடுப்பு அறையை நோக்கி நடந்து சென்ற ஹாரி, “நான் ஏன் உன்மீது எதையாவது எறிய வேண்டும்?” என்று கேட்டான்.

“எனக்கென்ன தெரியும்?” என்று முனகல் மாட்டில் கத்தியது. அது வெளியே வந்தபோது, இன்னும் அதிகமான தண்ணீர் அத்தரையில் கொட்டியது. “இங்கு நான் பாட்டுக்கு, நான் உண்டு, என் வேலை உண்டு என்று இருந்து வருகிறேன். ஆனால் வேடிக்கை என்று நினைத்துக் கொண்டு யாரோ என்மீது ஒரு புத்தகத்தை எறிகிறார்கள்..”

“யாராவது எதையாவது உன்மீது எறிந்தாலும் அதுதான் உன்னைத் தாக்காதே,” என்று ஹாரி கூறினான். “அதாவது, அது உன் ஊடாக உன்னைக் கடந்து சென்றுவிடுமே என்று தான் சொல்ல வந்தேன்.”

அவன் சொல்லக்கூடாததைச் சொல்லிவிட்டிருந்தான். மாட்டில் மேல் நோக்கிப் பறந்து கொண்டே கத்தியது: “நாம் எல்லோரும் கர்ட்டில்மேல் புத்தகங்களை எறியலாம். ஏனென்றால் அதை அவனால்தான் உணர முடியாதே! அவளுடைய வயிற்றின் ஊடாகச் செல்லும்படி எறிந்தால் பத்துப் புள்ளிகள்! அது அவளுடைய தலை வழியாகச் சென்றால் ஐம்பது புள்ளிகள். ஹா, ஹா, ஹா! இது என்னவொரு வேடிக்கையான விளையாட்டாக இருக்கும்? ஹா, ஹா, ஹா! ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை?”

“ஆமாம், புத்தகத்தை உன்மீது யார் எறிந்தார்கள்?” என்று ஹாரி கேட்டான்.

மர்ட்டில் அவர்களை உற்றுப் பார்த்துக் கொண்டே, “எனக்குத் தெரியாது. சாவைப் பற்றி அசை போட்டுக் கொண்டு, நான் பாட்டுக்கு அத்தொட்டியின் முனையில் உட்கார்ந்திருந்தேன். ஒரு புத்தகம் நேராக என் உச்சந்தலையின் ஊடாகப் போய் விழுந்தது,” என்று கூறியது. “அது, அதோ அங்கே கிடக்கிறது. அது நீரில் நனைந்து போயிருக்கிறது.”

தொட்டிக்கு அடியில் மர்ட்டில் காட்டிய இடத்தை ஹாரியும் ரானும் குனிந்து பார்த்தனர். அங்கு ஒரு சிறிய புத்தகம் கிடந்தது. அதன் கருப்பு அட்டை மிகவும் அழுக்காக இருந்தது. அந்த அறையில் இருந்த பிற அனைத்தையும்போல அதுவும் தொப்பலாக நனைந்திருந்தது. ஹாரி அதை எடுப்பதற்காகக் குனிந்தான். ஆனால் திடீரென்று ரான் தன் கையை நீட்டி அவனைத் தடுத்தான்.

“ஏன் தடுக்கிறாய்?” என்று ஹாரி கேட்டான்.

“உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா?” என்று ரான் கேட்டான், “அது அபாயகரமான ஒன்றாக இருக்கக்கூடும்.”

“அபாயகரமானதா?” என்று ஹாரி நகைத்தான். “இதில் என்ன அபாயம் இருந்துவிடப் போகிறது?”

ரான் அந்தப் புத்தகத்தை சந்தேகக் கண்ணோடு பார்த்துக் கொண்டே, “இதைக் கேட்டால் நீ ஆச்சரியப்படுவாய்,” என்று கூறினான். “மந்திரஜால அமைச்சகம் கைப்பற்றியுள்ள சில புத்தகங்கள் ஒருவரது கண்களைக் குருடாக்கிவிடும். ‘சோனட்ஸ் ஆஃப் புத்தகங்களைப் பற்றி என் அப்பா என்னிடம் கூறியிருக்கிறார். சில வாழ்நாள் முழுவதும் கவிதை நடையிலேயே பேசினர். பாத் என்ற எ சார்சரர்’ என்ற புத்தகத்தைப் படித்தவர்கள் தங்களுடைய மீதி இடத்தைச் சேர்ந்த ஒரு மந்திரவாதினி ஒரு புத்தகத்தை வைத்திருந்தாள். அதைப் படிக்கத் துவங்கினால், படிப்பதை உன்னால் நிறுத்தவே முடியாது. நீ எப்போதும் அதை உன் மூக்கின் அருகே பிடித்துக் கொண்டுதான் அலைய வேண்டிருக்கும், ஒரே ஒரு கையைக் கொண்டு மட்டுமே நீ மற்ற வேலைகளைச் செய்து கொள்ள வேண்டியிருக்கும். அப்புறம் -”

“சரி, சரி, நிறுத்தித் தொலை! நீ என்ன சொல்ல வருகிறாய் என்பது எனக்குப் புரிந்துவிட்டது,” என்று ஹாரி கூறினான்.

தொப்பலாக நனைந்த நிலையில் அந்தக் குட்டிப் புத்தகம் தரையில் கிடந்தது. என்ன புத்தகம் என்று எளிதில் வகைப்படுத்தப்பட முடியாத ஒன்றாக அது இருந்தது.

“ஆனால் அது என்னவென்று பார்க்காமல் அதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது, இல்லையா?” என்று கேட்டுவிட்டு, ஹாரி கீழே குனிந்து அதைத் தரையிலிருந்து எடுத்தான்.

அது ஒரு நாட்குறிப்புப் புத்தகம் என்பது ஹாரிக்கு உடனே தெரிந்துவிட்டது. அதன் அட்டையில், மங்கிப் போன நிலையில் தெரிந்த வருடம், அப்புத்தகம் ஐம்பது வருடங்கள் பழமையானது என்பதை எடுத்துரைத்தது. அவன் அதை ஆவலுடன் பிரித்தான். அதன் முதல் பக்கத்தில், பக்கத்தில், ‘நார்ட்டன்’ என்ற பெயர் எழுதப்பட்டிருந்ததை ஹாரி கண்டுபிடித்தான். அந்த எழுத்துக்களின் மீது மை ஆங்காங்கே திட்டுத்திட்டாகக் கசிந்திருந்தது.

ரான் ஹாரியை எச்சரிக்கையுடன் அணுகி அவனது தோளுக்கு மேலாக எட்டிப் பார்த்து, “ஒரு நிமிடம் பொறு,” என்று கூறினான். “எனக்கு அந்தப் பெயரைத் தெரியும் — நார்ட்டன், ஐம்பது வருடங்களுக்கு முன்பு, பள்ளிக்குச் சிறப்பான சேவை புரிந்ததற்காக ஒரு விருதைப் பெற்றான்.”

“இதைப் பற்றி உனக்கு எப்படித் தெரியும்?” என்று ஹாரி ஆச்சரியத்தில் வாய் பிளந்தான்.

“ஒழுங்கு நடவடிக்கைத் தண்டனையின்போது, ஃபில்ச், நார்ட்டனின் கேடயத்தை என்னை ஐம்பது முறை பளிச்சூட்ட வைத்தார் என்பதால் எனக்குத் தெரியும்,” என்று ரான் ஆத்திரத்தோடு கூறினான். “நான் அதன்மீதுதான் நத்தைகளை வாந்தியெடுத்தேன். நீயும் ஒரு மணிநேரம் ஒரே பெயரையே தேய்த்துத் தேய்த்துப் பளிச்சூட்டி மெருகேற்றிக் கொண்டிருந்தால், உனக்கும் அது கண்டிப்பாக நினைவிற்கு வரும்.”

நனைந்து போயிருந்த அதன் பக்கங்களை ஹாரி பிரித்தெடுத்தான்.அவை காலியாக இருந்தன. அப்புத்தகத்தின் எந்த வொரு பக்கத்திலும் எதுவும் எழுதப்பட்டிருந்ததற்கான சுவடே இருக்கவில்லை. ‘மேபல் அத்தையின் பிறந்தநாள்’ என்றோ, அல்லது ‘பல் மருத்துவரை மூன்றரை மணிக்குப் பார்க்க வேண்டும்’ என்றோகூட அதில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

“அவர் இதில் எதையுமே எழுதவில்லைபோலத் தெரிகிறது.” என்று ஹாரி, ஏமாற்றம் கலந்த ஒரு குரலில் கூறினான்.

“அப்படியானால் இதைப் போய் ஏன் ஒருவர் கழிவு நீரில் தூக்கிப் போட வேண்டும்?” என்று ரான் ஆச்சரியத்துடன் கேட்டான்.

ஹாரி அப்புத்தகத்தைத் திருப்பி அதன் பின்னட்டையைப் பார்த்தான். லண்டனில் உள்ள வாக்ஸ்ஹால் சாலையில் அமைந்த ஒரு புத்தக விற்பனைக் கடையின் முகவரி அதில் அச்சிடப்பட்டிருந்ததை அவன் கண்டான்.

ஹாரி சிந்தனையுடன், “ஒருவர் வாக்ஸ்ஹால் சாலையிலிருந்து ஒரு நாட்குறிப்புப் புத்தகத்தை வாங்கியிருக்க வேண்டும் என்றால், அவர் மகுள்களுக்குப் பிறந்தவராகத்தான் இருக்க வேண்டும்,” என்று கூறினான்.

“இந்தப் புத்தகம் உனக்கு எவ்விதத்திலும் பிரயோஜனப்படாது,” என்று ரான் கூறினான். பிறகு தன் குரலைத் தாழ்த்திக் கொண்டு, “அதனால், அது மர்ட்டிலின் மூக்கு வழியாகப் போகுமாறு உன்னால் அதை எறிய முடிந்தால் உனக்கு ஐம்பது புள்ளிகள்,” என்று வேடிக்கையாகக் கூறினான்.

ஆனால் ஹாரி அதைத் தன் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டான்.


பிப்ரவரி மாதத் துவக்கத்தில், ஹெர்மயனி, பூனை மீசையின்றி, விலங்கு முடியின்றி உடல் முழுவதும் வாலின்றி, மருத்துவமனையிலிருந்து வெளியேறினாள். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த முதல் நாள் மாலைப் பொழுதில் அவள் கிரிஃபின்டார் பொது அறையில் உட்கார்ந்திருந்தபோது, ஹாரி அவளிடம் நார்ட்டனின் நாட்குறிப்புப் புத்தகத்தைக் காட்டினான். அதோடு, அது தங்களுக்குக் கிடைத்தக் கதையையும் அவன் கூறினான்.

ஹெர்மயனி அந்த நாட்குறிப்பை வாங்கிப் புரட்டிப் பார்த்தபடி, “ஓ! இது ரகசிய மந்திர சக்திகளைக் கொண்டிருக்கலாம்;” என்று உற்சாகமாகக் கூறினாள்.

“தப்பித் தவறி அப்படி ஏதாவது இருந்தால், இந்த நாட்குறிப்பு அதைச் சாமர்த்தியமாக மறைத்து வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்,” என்று ரான் கூறினான். “ஒருவேளை அது வெட்கப்பட்டுக் கொண்டு அதை வெளிப்படுத்தாமல் இருக்கலாம். ஹாரி, நீ ஏன் அதைத் தூக்கி எறியவில்லை என்று எனக்குப் புரியவில்லை.”

“இதை ஏன் ஒருவர் ஒழித்துக்கட்ட முயற்சித்தார் என்பது தெரிந்தால் நன்றாக இருக்கும்,” என்று ஹாரி கூறினான். “அதேபோல, நார்ட்டன், நம் பள்ளிக்கு எந்தச் சிறப்பான சேவை புரிந்ததற்காக ஒரு விருதைப் பெற்றான் என்பதைத் தெரிந்து கொள்ளவும் நான் விரும்புகிறேன்.”

“அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்,” என்று ரான் கூறினான். “ஐந்தாம் வருட இறுதித் தேர்வில் முப்பது பாடங்களில் அவன் தேர்ச்சி பெற்றிருக்கலாம் அல்லது பிராபண்டமான கணவாய் மீனின் வாயிலிருந்து ஒரு பேராசிரியரைக் காப்பாற்றியிருக்கலாம். அல்லது பலருக்குப் பேருதவி செய்யும் விதத்தில், அவன் மாட்டிலைக் கொலை செய்திருக்கலாம்..

ஹெர்மயனியின் முகத்தில் குடி கொண்டிருந்த தீர்க்கமான பார்வையைப் பார்த்த ஹாரி, தான் நினைத்துக் கொண்டிருந்ததையே அவளும் நினைத்துக் கொண்டிருந்தாள் என்ற முடிவுக்கு வந்தான். ரான் அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தபடி, “என்ன?” என்று கேட்டான்.

“ரகசியங்கள் அடங்கிய பாதாள அறை ஐம்பது வருடங்களுக்கு முன்புதானே திறக்கப்பட்டது?” என்று ஹாரி கேட்டான். “மால்ஃபாய் அப்படித்தானே சொன்னான்?”

“ஆமாம்,” என்று ரான் இழுத்தான்.

ஹெர்மயனி அந்த நாட்குறிப்பின்மீது உற்சாகமாகத் தாளமிட்டபடி, “இந்த நாட்குறிப்பும் ஐம்பது வருடங்களுக்கு முந்தையது;” என்று கூறினாள்.

“அதனால்?”

“ஏய், ரான்! கொஞ்சம் விழித்துக் கொள்!” என்று ஹெர்மயனி செல்லமாகக் கடிந்து கொண்டாள். “ரகசியங்கள் அடங்கிய பாதாள அறையைக் கடந்த முறை திறந்தவன் ஐம்பது வருடங்களுக்கு முன்பு பள்ளியைவிட்டு நீக்கப்பட்டான் என்பது நமக்குத் தெரியும். அதேபோல, நார்ட்டனும் தனது பள்ளிக்குத் தான் ஆற்றியிருந்த சிறப்பான சேவைகளுக்காக ஐம்பது வருடங்களுக்கு முன்புதான் விருது வாங்கினான். ஒருவேளை ஸ்லிதரினின் வாரிசைப் பிடித்ததற்காக அவனுக்கு அந்த விருது வழங்கப்பட்டிருந்தால்? ரகசியங்கள் அடங்கிய பாதாள அறை எங்கே இருக்கிறது, அதைத் திறந்தது யார், அதனுள் எப்படிப்பட்ட ராட்சஸ விலங்கு வசித்து வருகிறது போன்றவை குறித்தப் பல நாட்குறிப்பு நமக்கு வெளிப்படுத்தக்கூடும். அப்படி இருக்கும்போது, விஷயங்களை அவனது இம்முறை தாக்குதலில் ஈடுபட்டு வருபவன் இப்புத்தகம் யார் கைக்கும் கிடைக்காமல் இருக்க வேண்டும் என்று நினைப்பான், இல்லையா?”

“ஹெர்மயனி, உன்னுடைய ஊகம் அபாரமானது என்பதில் சந்தேகமில்லை”, என்று ரான் கூறினான். “ஆனால் அதில் ஒரு பெரிய ஓட்டை இருக்கிறது. இந்த நாட்குறிப்பில் எதுவுமே எழுதப்பட்டிருக்கவில்லை!”

ஆனால் ஹெர்மயனி தன்னுடைய பையிலிருந்து தனது மந்திரக்கோலை வெளியே எடுத்துக் கொண்டிருந்தாள்.

“கண்ணுக்குப் புலப்படாத மையினால் அது எழுதப்பட்டிருக்கலாம்.” என்று அவள் முணுமுணுத்தாள்.

அவள் அந்த நாட்குறிப்பை மூன்று முறை தட்டியவாறு, “அபரேஷியம்” என்று கூறினாள்.

எதுவும் நிகழவில்லை. ஆனால் ஹெர்மயனி அலட்டிக் கொள்ளாமல் தன் மந்திரக்கோலைத் தன் பையினுள் போட்டுவிட்டு, அதிலிருந்து இன்னொரு பொருளை வெளியே எடுத்தான். பிரகாசமான சிவப்பு நிறத்தில் இருந்த ஓர் அழிப்பான் போல அது இருந்தது.

“இதற்கு ‘வெளிப்படுத்தி’ என்று பெயர். இதை நான் டயகான் சந்தில் வாங்கினேன்,” என்று அவள் கூறினாள்.

அவள் அதைக் கொண்டு ‘ஜனவரி முதல் நாள்’ மீது நன்றாக அழுத்தித் தேய்த்தாள். அப்போதும் எதுவும் நிகழவில்லை.

“அதில் எதுவும் கிடையாது என்று நான்தான் முதலிலிேயே கூறினேனே,” என்று ரான் கூறினான். “நார்ட்டனுக்கு அது ஒரு கிறிஸ்துமஸ் பரிசாகக் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். அவன் அதில் எழுத யோசித்துக்கூட இருந்திருக்க மாட்டான”


நார்ட்டனின் நாட்குறிப்புப் புத்தகத்தைத் தான் ஏன் தூர எறிந்திருக்கவில்லை என்று ஹாரியும் யோசித்துக் கொண்டிருந்தான். அதன் பக்கங்கள் காலியாக இருந்தன என்ற உண்மை அவனுக்குத் தெரிந்திருந்த போதிலும், அதில் இடம்பெற்றிருந்த கதையைத் தான் படிப்பதுபோல அவன் அதன் பக்கங்களைக் குருட்டாம்போக்காகப் புரட்டிக் கொண்டிருந்தான். நார்ட்டன் என்ற பெயரைத் தான் அதற்கு முன்பு ஒருபோதும் கேள்விப் பட்டிருக்கவில்லை என்பது அவனுக்கு உறுதியாகத் தெரிந்திருந்தாலும், அப்பெயர் அவனுக்கு எதையோ உணர்த்தியது. தான் மிக மிகச் சிறியவனாக இருந்தபோது தனக்கு நார்ட்டன் என்றொரு நண்பன் இருந்ததுபோலவும் அதைத் தன்னால் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை என்பதுபோலவும் அவனுக்குத் தோன்றியது. ஆனால் அது அபத்தம். ஹாரி ஹாக்வார்ட்ஸுக்கு வருவதற்கு முன்பு, பெயருக்குக்கூட அவனுக்கு எந்தவொரு நண்பனும் இருந்ததில்லை. அவனுக்கு நண்பர்களே இல்லாதபடி டர்ஸ்லீ தம்பதியினர் பார்த்துக் கொண்டனர்.

ஆனாலும், நார்ட்டனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஹாரி முடிவு செய்தான். அதனால் அடுத்த நாள் அதிகாலையிலேயே, நார்ட்டனுக்குக் கிடைத்தச் சிறப்பு விருதை ஆராய, வெற்றிக் கோப்பைகள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு அவன் சென்றான். அதில் ஆர்வம் காட்டிய ஹெர்மயனியும், முழுக்க முழுக்க நம்பிக்கையற்று இருந்த ரானும் அவனுடன் வந்தனர். வெற்றிக் கோப்பைகள் வைக்கப்பட்டிருந்த அறையில் தான் பார்த்தது ஒரு ஜென்மத்திற்குப் போதும் என்று ரான் கூறினான்.

நார்ட்டனின் பளிச்சூட்டப்பட்டிருந்த தங்க வெற்றிக் கேடயம், மூலையில் இருந்த ஓர் அலமாரியில் திணித்து வைக்கப்பட்டிருந்தது. அது ஏன் அவனுக்கு வழங்கப்பட்டது என்பதற்கான விளக்கம் அதில் இடம்பெற்றிருக்கவில்லை. “நல்லவேளை, இல்லையென்றால் அது இன்னும் பெரிதாக இருந்திருக்கும். அதை நான் இன்னும் பளிச்சூட்டிக் கொண்டு இருந்திருப்பேன்,” என்று ரான் கூறினான். ஆனால் முந்தைய தலைமை மாணவர்களின் பட்டியலிலும், மந்திரத்தில் சாதனைப் பதக்கம் வாங்கியிருந்தவர்களின் பட்டியலிலும் நார்ட்டனின் பெயர் இடம்பெற்றிருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர்.

ரான் தன் மூக்கைத் திருகியவாறு, அதிருப்தியுடன், “அவனது கதை பெர்சியினுடையதைப் போலவே இருக்கிறது.” என்று கூறினாள். “மாணவ அணித் தலைவன், தலைமை மாணவன் – ஒருவேளை ஒவ்வொரு வகுப்பிலும் அவன்தான் முதலிடம் வகித்தான்போலும்”

“படிப்பில் முதலிடத்தைப் பெறுவது என்னவோ செய்யப்படக்கூடாத ஒரு காரியம் என்பதுபோலக் கூறுகிறாயே!” என்று ஹெர்மயனி அலுத்துக் கொண்டாள். ரான் கூறியது அவளைக் காயப்படுத்தியிருந்ததுபோல இருந்தது அவளது குரல்.


இப்போது ஹாக்வார்ட்ஸ் கோட்டைமீது சூரியன் தன் கருணைக் கண்ணைத் திறந்திருந்தான். வெயில் மீண்டும் பலவீனமாக அடிக்கத் துவங்கியிருந்தது. கோட்டைக்குள் இருந்தவர்களின் மனநிலையிலும் நம்பிக்கை அதிகரிக்கத் துவங்கியிருந்தது. ஜஸ்டின் மற்றும் நிக்கிற்குப் பிறகு வேறு யார்மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கவில்லை. மன்ட்ரேக்குகளின் மனநிலை ஏற்ற இறக்கங்களுடன் இருந்ததாலும், அவை அமுக்கமாக இருந்ததாலும், அவை வெகுவேகமாகத் தமது குழந்தைப் பருவத்தைக் கடந்து வந்து கொண்டிருந்தன என்று மேடம் பாம்ஃபிரே மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.

ஒரு நாள் மதியம், “மன்ட்ரேக்குகளின் முகங்களின்மீது இருக்கின்ற பருக்களும் வடுக்களும் மறைந்துவிட்டால் வேளை நெருங்கிவிட்டது என்று அர்த்தம்,” என்று மேடம் பாம்ஃபிரே, கனிவுடன் ஃபில்ச்சிடம் கூறிக் கொண்டிருந்ததை ஹாரி கேட்க நேர்ந்தது. “அதன் பிறகு, அவற்றை வெட்டியெடுத்துக் காய்ச்ச வெகுகாலம் பிடிக்காது. உங்களுடைய நாரிஸ் பூனையும் உங்களிடம் மீண்டும் திரும்பி வந்துவிடும்.”

ஒருவேளை ஸ்லிதரினின் வாரிசு தன் தைரியத்தை இழந்திருக்கக்கூடும் என்று ஹாரி நினைத்தான். இப்போது பள்ளி மிகுந்த கண்காணிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருந்ததால், ரகசியங்கள் அடங்கிய அறையைத் திறப்பது மேலும் மேலும் அப்பயகரமானதாக ஆகியிருக்கக்கூடும். அதனுள் என்ன அடைக்கப்பட்டிருந்ததோ, அது, ஒருவேளை மேலும் ஐம்பது வருடங்களுக்குத் தூங்குவதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கக்கூடும்…

ஆனால் ஹஃபில்பஃப் அணியைச் சேர்ந்த மாணவனான எர்னியால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. ஹாரிதான் குற்றவாளி என்றும், தான் தன் கருத்துக்களைத் தேவையில்லாமல் வெளிப்படையாகப் பேசிவிட்டிருந்தோம் என்றும் அவன் இன்னும் நம்பிக் கொண்டிருந்தான். பீவ்ஸும் நிலைமையை மோசமாக்கிக் கொண்டிருந்தது. கூட்டமாக இருந்த தாழ்வாரங்களில் அது திடீரென்று தோன்றி, “ஹாரி பாட்டர், சூரப்புலி பாட்டர்…” என்று பாடிக் கொண்டிருந்தது. அதற்கேற்ற ஒரு நடனத்தையும் அது இப்போது கண்டுபிடித்திருந்தது.

அந்தத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதற்குத் தான்தான் காரணம் என்று லாக்ஹார்ட் நினைத்துக் கொண்டிருந்தார். கிரிஃபின்டார் மாணவர்கள் உருவமாற்று வகுப்பிற்குப் போவதற்காக நின்று கொண்டிருந்தபோது, லாக்ஹார்ட், பேராசிரியர் மெக்கானகல்லிடம் கூறிக் கொண்டிருந்ததை ஹாரி கேட்க நேர்ந்தது.

அவர் எல்லாம் தெரிந்தவர்போலத் தன் மூக்கை லேசாகத் தட்டிக் கொண்டும் கண்ணடித்துக் கொண்டும், “மெக்கானகல், இனி தாக்குதல் எதுவும் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை,” என்று கூறினார். “ரகசியங்கள் அடங்கிய அறை இம்முறை ஒரேயடியாக மூடப்பட்டுவிட்டது என்று நான் நினைக்கிறேன். நான் அவனை வெகு விரைவில் பிடித்துவிடுவேன் என்பதைக் குற்றவாளி உணர்ந்திருக்க வேண்டும். நான் அவன்மீது பாய்ந்து அவனைத் துவம்சம் செய்வதற்கு முன்பு, இதோடு நிறுத்திக் கொள்வது புத்திசாலித்தனம் என்று அவன் முடிவு செய்திருக்க வேண்டும்.

“இப்போது நமக்குத் தேவை, மக்களை உற்சாகப்படுத்தும் ஒன்றுதான். கடந்த பருவத்தின் கசப்பான நினைவுகளை அடித்துச் செல்லும் விதத்தில் அது இருக்க வேண்டும்! இப்போது நான் இதற்கு மேல் எதையும் கூற மாட்டேன். ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும்..”

அவர் மீண்டும் தன் மூக்கைத் தட்டியவாறு நடையைக் கட்டினார்.

மக்களை உற்சாகப்படுத்துவதற்கு லாக்ஹார்ட் யோசித்து வைத்திருந்தது என்னவென்று பிப்ரவரி பதினான்காம் நாளன்று பேரரங்கில் காலை உணவைச் சாப்பிடச் சென்றபோது தெளிவானது. வரை நீடித்ததால் ஹாரி சரியாகத் தூங்கியிருக்கவில்லை. அதனால் அதற்கு முந்தைய நாள், ஒரு குவிடிச் பயிற்சி இரவு வெகுநேரம் இருந்தது. தான் ஒரு தவறான அறையில் நுழைந்துவிட்டிருந்ததாக அவன் பேரரங்கிற்கு அரக்கப் பரக்க வந்தபோது சற்றுத் தாமதமாகி ஒரு கணம் அவன் நினைத்தான்.

இளஞ்சிவப்பு நிறத்திலிருந்த மிகப் பெரிய மலர்களால் அந்த அரங்கின் சுவர்கள் முழுவதும் நெருக்கமாக அலங்கரிக்கப்பட்டு இருந்தன. வெளிறிய நீல நிற மேற்கூரையிலிருந்து, இதய வடிவில் இருந்த காகிதத் துண்டுகள் கொட்டிக் கொண்டிருந்தன. ஹாரி நேராக கிரிஃபன்டார் அணியினர் இருந்த பெஞ்சை நோக்கிச் சென்றான். அங்கு ரான் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தான், ஹெர்மயனி உற்சாகமாக இருந்தாள்.

ஹாரி தன் இடத்தில் உட்கார்ந்து கொண்டு, தன்னுடைய தட்டின்மீது விழுந்திருந்த காகிதத் துண்டுகளைப் பொறுக்கியவாறு, “இங்கு என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?” என்று கேட்டான்.

வெறுப்பின் உச்சகட்டத்தில் இருந்த ரான், ஆசிரியர்கள் அமர்ந்திருந்த திசையை நோக்கிக் கை காட்டினான். அறையின் அலங்காரத்திற்குப் பொருத்தமாக, கவர்ச்சியான இளஞ்சிவப்பு நிற அங்கியுடன் இருந்த லாக்ஹார்ட், அமைதியாக இருக்குமாறு கூட்டத்தினரை நோக்கிக் கை காட்டினார். அவருக்கு இருபுறமும் இருந்த ஆசிரியர்கள் எவர் முகத்திலும் ஈயாடவில்லை. பேராசிரியர் மெக்கானகல்லின் கன்னத்தில் ஒரு தசை இழுத்துக் கொண்டிருந்ததை ஹாரி கவனித்தான். அப்போதுதான் ஒரு பெரிய கோப்பை ‘எலும்பு-விளைவிப்பி’யை யாரோ தன்னைக் குடிக்க வைத்திருந்தது மாதிரியான முகத்தோற்றத்துடன் ஸ்னேப் உட்கார்ந்திருந்தார்.

“காதலர் தின நல்வாழ்த்துக்கள்!” என்று லாக்ஹார்ட் சத்தமாகக் கூறினார். “எனக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்பிய நாற்பத்து ஆறு பேருக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். ஆம்! உங்களைத் திக்குமுக்காட வைத்திருக்கும் இந்த அலங்காரத்தைச் செய்தது நான்தான். ஆனால் இது – இது ஒரு தொடக்கம்தான்!”

லாக்ஹார்ட் தன் கைகளைத் தட்டினார். வரவேற்பறை வாசற்கதவின் வழியாக, கடுகடுப்புடன் இருந்த ஒரு டஜன் சித்திரக் குள்ளர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் சாதாரணமாக வரவில்லை. அவர்கள் எல்லோரும் தங்க நிற இறக்கைகளை அணிந்து கொண்டு கையில் யாழ் இசைக் கருவியுடன் வந்தனர்.

“இவர்கள் என்னுடைய மன்மதத் தூதுவர்கள்!” என்று லாக்ஹார்ட் வாயெல்லாம் பல்லாகக் கூறினார். “இவர்கள் இன்று பள்ளி நெடுகிலும் காதலர் தின வாழ்த்து அட்டைகளை வினியோகித்துக் கொண்டு திரிந்து கொண்டிருப்பார்கள். வேடிக்கைகள் அதோடு முடிந்துவிடாது! என்னுடைய ஆசிரியர்கள் இதில் கலந்து கொள்ள விரும்புவார்கள் என்று நான் நினைக்கிறேன். காதல் மாயத் திரவத்தை எப்படிக் காய்ச்சுவது என்று நீங்கள் ஏன் பேராசிரியர் ஸ்னேப்பைக் கேட்கக்கூடாது? அதேபோல, நான் இதுவரை சந்தித்துள்ளதிலேயே, காதல் வசியங்கள் பற்றி மிக அதிகமாகத் தெரிந்து வைத்துள்ளவர் பேராசிரியர் ஃபிளிட்விக்தான். வயதானாலும் அவர் ஒரு கில்லாடியான பேர்வழி!”

பேராசிரியர் ஃபிளிட்விக் தன் முகத்தைத் தன் கைகளுக்குள் புதைத்துக் கொண்டார். தப்பித்தவறி எவனாவது தன்னைக் காதல் மாயத் திரவம் பற்றிக் கேட்டால் அவனுடைய தொண்டைக்குழி வழியாக வலுக்கட்டயமாக விஷத்தைத் திணித்துவிடத் தயாராக இருந்தவர்போல ஸ்னேப் காணப்பட்டார்.

தங்களுடைய முதல் வகுப்பிற்காக ஹாரியும் ரானும் ஹெர்மயனியும் அந்தப் பேரரங்கைவிட்டு வெளியேறியபோது, ரான், ஹெர்மயனியிடம், “அந்த நாற்பத்தாறு பேரில் நீயும் ஒருத்தி இல்லை என்று கூறு,” என்று கூறினான். ஹெர்மயனி திடீரென்று தனது வகுப்பு அட்டவணையைத் தன்னுடைய பையில் தேடுவதில் மும்முரமாக ஆனாள். அவள் எதுவும் பேசவில்லை.

அன்று முழுவதும் காதலர் தின அட்டைகளைக் கொடுப்பதற்காகச் சித்திரக் குள்ளர்கள் எல்லா வகுப்புகளிலும் அனுமதியின்றிப் புகுந்து கொண்டிருந்தனர். அது ஆசிரியர்களுக்கு மிகவும் எரிச்சலை ஏற்படுத்தியது. அன்று மதியம் கிரிஃபின்டார் அணியினர் தங்களுடைய வசிய வகுப்பிற்காக மேற்தளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு சித்திரக் குள்ளன் ஹாரியைப் பிடித்துக் கொண்டான்.

“ஏய்! உன்னைத்தான்! ஆரி பாட்டர்!” என்று ஒரு சித்திரக் குள்ளன் கூப்பிட்டான். அவனது முகத்தை ஒரு விரிவான புன்னகை அலங்கரித்திருந்தது. அவன் மற்றவர்களை இடித்துத் தள்ளிக் கொண்டு ஹாரியை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

ஜின்னி உட்படப் பல முதல் வருட மாணவர்கள் நிறைந்திருந்த ஒரு கூட்டத்திற்கு நடுவே காதலர் தின வாழ்த்து அட்டையைப் பெற்றுக் கொள்வது என்ற யோசனையே ஹாரியை வியர்த்துப் போகச் செய்தது. அவன் அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றான். அவன் ஓட்டமெடுப்பதற்குள் அந்தச் சித்திரக் குள்ளன், மற்றவர்களின் கணுக்கால்களை மிதித்துத் தள்ளி, கூட்டத்தை விலக்கிவிட்டு அவனை அணுகியிருந்தான்.

“ஒரு சங்கீத வாழ்த்துச் செய்தியை ஆரிப் பாட்டருக்கு நான் நேரில் கொடுக்க வேண்டும்,” என்று கூறிவிட்டு, அவன் தன் யாழை ஒருவிதமான அச்சுறுத்தும் தொனியில் மீட்டத் துவங்கினான்.

ஹாரி அங்கிருந்து தப்பிக்க முயன்று கொண்டே, “இங்கு வேண்டாம்,” என்று கிசுகிசுத்தான்.

அவன் ஹாரியின் புத்தகப் பையைப் பிடித்துப் பின்னால் இழுத்தவாறு, “அப்படியே நில்லுங்கள்!” என்று உறுமினான். ஹாரி தன் பையை இழுத்துக் கொண்டே, “என்னை விட்டுவிடு!” என்று இரைந்தான்.

பெரும் சத்தத்துடன் அவனது பை இரண்டாகக் கிழிந்து அதிலிருந்த அவனது புத்தகங்கள், மந்திரக்கோல், இறகுப் பேனா ஆகிய அனைத்தும் தரையில் கொட்டின. அவனது மைப்புட்டி உடைந்து அவை எல்லாவற்றின் மீதும் மையால் அபிஷேகம் செய்தது.

அந்தச் சித்திரக் குள்ளன் பாடத் துவங்குவதற்கு முன்பாக எல்லாவற்றையும் பொறுக்கிவிட வேண்டும் என்று ஹாரி. போராடினான். அதனால் அந்தத் தாழ்வாரத்தில் ஒரு நெரிசல் ஏற்பட்டது.

“இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது?” என்று, இழுத்து இழுத்துப் பேசிய ஜீவனற்ற ஒரு குரல் கேட்டது. அது மால்ஃபாய். ஹாரி, கிழிந்து போயிருந்த தனது பையில் அவசர அவசரமாக எல்லாவற்றையும் அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தான். தனக்கு வந்திருந்த காதலர் தின சங்கீத வாழ்த்துச் செய்தியை மால்ஃபாய் கேட்பதற்கு முன்பு அந்த இடத்தைத் தான் காலி செய்துவிட வேண்டும் என்று அவன் தவியாய்த் தவித்தான்.

“இங்கு என்ன களேபரம்?” என்று ஹாரிக்குப் பரிச்சயமான இன்னொரு குரல் கேட்டது. பெர்சி அங்கு தோன்றினான்.

இதனால் இன்னும் தடுமாற்றம் அடைந்த ஹாரி அங்கிருந்து ஓடத் தலைப்பட்டான். ஆனால் அந்தச் சித்திரக் குள்ளன் ஹாரியின் முழங்கால்களை இறுகக் கட்டிப் பிடித்தான். ஹாரி தரையில் தடுமாறி விழுந்தான்.

அவன் ஹாரியின் கணுக்கால்களின்மீது ஏறி உட்கார்ந்து கொண்டு, “சரி, உன்னுடைய காதலர் தின சங்கீத வாழ்த்துச் செய்தி இதோ!” என்று கூறினான்.

புதிதாகப் போடப்பட்டிருக்கும் தவளை ஊறுகாயின்
பசுமை நிறத்தில் இருக்கும் அவனது கண்கள்!
கரும்பலகையின் நிறத்தில் இருக்கும் அவனது தலைமுடி!
உண்மையிலேயே தெய்வீகமாகத் தோன்றும் அவன்
என்னுடையவனாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
தீய மந்திரவாதிகளின் சக்கரவர்த்தியை வெற்றி கொண்டக்
கதாநாயகன் நீ!

ஹாரியால் அந்த இடத்திலிருந்து மாயமாய் மறைய முடியும் என்றால், கிரிங்காட்ஸ் வங்கியில் இருந்த தனது அனைத்துத் தங்கத்தையும் அவன் அதற்காகக் கொடுத்திருப்பான். மற்ற எல்லோருடனும் சேர்ந்து தானும் சிரிக்க முயற்சித்தவாறே அவன் எழ முயற்சித்தான். சித்திரக் குள்ளன் அவன்மீது ஏறி உட்கார்ந்திருந்த இடம் மரத்துப் போயிருந்தது. பெர்சி கூட்டத்தினரைக் கலைக்கத் தன்னால் முடிந்ததைச் செய்தான். கூட்டத்தினரில் சிலர் களிப்புடன் சிரித்துக் கொண்டே சென்றனர்.

“எல்லோரும் கலைந்து செல்லுங்கள்! எல்லோரும் கலைந்து செல்லுங்கள்! மணியடிக்க இன்னும் ஐந்து நிமிடங்கள்தான் இருக்கின்றன,” என்று பெர்சி ஒருசில இளம் மாணவர்களை விரட்டிக் கொண்டிருந்தான். “மால்ஃபாய், நீயும்தான்!”

ஹாரி திரும்பிப் பார்த்தான். மால்ஃபாய் கீழே குனிந்து எதையோ பொறுக்கி, பிறகு தன் பல்லைக் காட்டிக் கொண்டே அதைக் கிராபிடமும் காயலிடமும் காட்டியதை ஹாரி கண்டான். நார்ட்டனின் நாட்குறிப்புப் புத்தகத்தை மால்ஃபாய் எடுத்து வைத்திருந்தான் என்பது ஹாரிக்குப் புரிந்தது.

“அதை என்னிடம் கொடுத்து விடு!” என்று ஹாரி அமைதியாகக் கூறினான்.

“இதில் ஹாரி பாட்டர் என்ன எழுதியிருக்கிறான் என்று நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்,” என்று மால்ஃபாய் கூறினான். அவன் அந்த நாட்குறிப்பின் அட்டையில் இருந்த வருடத்தைப் பார்க்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அவன் அது ஹாரியின் நாட்குறிப்பு என்று நினைத்திருக்க வேண்டும். அங்கு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று மௌனமானார்கள். ஜின்னி நடுங்கிப் போய் அந்த நாட்குறிப்பையும் ஹாரியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அதை ஹாரியிடம் கொடுத்துவிடு!” என்று பெர்சி கண்டிப்புடன் கூறினான்.

மால்ஃபாய் அந்த நாட்குறிப்பை, ஹாரியை வெறுப்பேற்றும் விதமாக அவனை நோக்கி ஆட்டிக் கொண்டே, “இதைப் பார்த்து முடித்தவுடன் கொடுத்துவிடுகிறேன்,” என்று கூறினான்.

பெர்சி, “பள்ளியின் மாணவ அணித் தலைவன் என்ற முறையில் –” என்று ஆரம்பித்த நேரத்தில் ஹாரி தன் பொறுமையை இழந்திருந்தான். அவன் தன் மந்திரக்கோலை வெளியே எடுத்து, “எக்ஸ்பெல்லியார்மஸ்!” என்று கத்தினான். ஸ்னேப் எப்படி லாக்ஹார்ட்டை நிராயுதபாணியாக ஆக்கினாரோ, துல்லியமாக அதேபோல, தன்னுடைய கையிலிருந்த நாட்குறிப்புப் புத்தகம் தன் கையைவிட்டு எகிறிக் காற்றில் பறந்ததை மால்ஃபாய் பார்த்தான். வாயெல்லாம் பல்லாக ரான் அதைப் பிடித்துக் கொண்டான்.

பெர்சி, “ஹாரி!” என்று சத்தமாகக் கூப்பிட்டான். “பள்ளியின் தாழ்வாரங்களில் மந்திரவித்தைகளைப் பயன்படுத்தக்கூடாது. நான் இதைப் பற்றிப் புகார் செய்ய வேண்டியிருக்கும்!”

ஆனால் ஹாரி அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவன் மால்ஃபாயை முறியடித்திருந்தான். அது போதும். அதற்காக கிரிஃபின்டார் அணி ஐந்து புள்ளிகளை இழக்க நேரிட்டாலும் பரவாயில்லை. மால்ஃபாய் கடுங்கோபத்தில் சீறிக் கொண்டிருந்தான். ஜின்னி தனது வகுப்பிற்குச் செல்வதற்காக மால்ஃபாயைக் கடந்து சென்றபோது, அவன் அவளைப் பார்த்து, “உன்னுடைய காதலர் தின வாழ்த்து ஹாரி பாட்டருக்குப் பிடித்திருந்ததுபோலத் தெரியவில்லை,” என்று வஞ்சகமாகக் கூறினான்.

ஜின்னி தன் முகத்தை மூடிக் கொண்டே வகுப்பிற்குள் ஓடினாள். ரான் உறுமிக் கொண்டே தனது மந்திரக்கோலை வெளியே உருவினான். ஆனால் ஹாரி உடனடியாக அவனைத் தள்ளிக் கொண்டு சென்றான். ரான் தன்னுடைய வசிய வகுப்பு முழுவதும் நத்தைகளை வாந்தி எடுத்துக் கொண்டு கழிக்க வேண்டியிருக்கவில்லை.

அவர்கள் இருவரும் பேராசிரியர் ஃபிளிட்விக்கின் வகுப்பைச் சென்றடையும்வரை, நார்ட்டனின் நாட்குறிப்புப் புத்தகம் ஒரு விஷயத்தில் மிகவும் வித்தியாசப்பட்டு இருந்ததை ஹாரி கவனிக்கவில்லை. அவனுடைய மற்றப் புத்தகங்கள் எல்லாம் ரத்தச் சிவப்பு மையில் குளித்திருந்தன. ஆனால் அந்த நாட்குறிப்புப் புத்தகம் மட்டும் மை கொட்டுவதற்கு முன்பு இருந்ததைப்போலவே சுத்தமாக இருந்தது. அதை அவன் ரானிடம் சொல்ல முன்வந்தான். ஆனால் ரானின் மந்திரக்கோல் மீண்டும் தகராறு செய்து கொண்டிருந்தது. அதன் ஒரு முனையிலிருந்து பெரிய ஊதா நிற நீர்க்குமிழிகள் வெளிப்பட்டுக் கொண்டிருந்ததால், அவனுக்கு வேறு எதிலும் நாட்டம் இருக்கவில்லை.


அன்றிரவு, ஹாரி, தனது பொதுப் படுக்கையறையில் எல்லோருக்கும் முன்னதாகவே படுக்கச் சென்றான். ஃபிரெட்டும் ஜார்ஜும் மீண்டும் ஒருமுறை, “புதிதாகப் போடப்பட்டிருக்கும் தவளை ஊறுகாயின் பசுமை நிறத்தில் இருக்கும் அவனது கண்கள் P என்ற வரிகளைப் பாடுவதை அவனால் சகித்து கொள்ள முடியாது என்பது அதற்கு ஒரு காரணம். அதோடு, அவன் நார்ட்டனின் நாட்குறிப்புப் புத்தகத்தை மீண்டும் ஒருமுறை ஆராய விரும்பினான். ஆனால் ரான் அதை வெட்டி வேலையாகக் கருதினான் என்பதை அவன் அறிந்திருந்தான்.

ஹாரி தன்னுடைய படுக்கையில் ஏறி உட்கார்ந்து கொண்டு, அந்த நாட்குறிப்பின் காலியான பக்கங்களைப் புரட்டினான். அவற்றில் ஒன்றில்கூட ரத்தச் சிவப்பு மையின் அறிகுறி இருக்கவில்லை. பின் அவன் தன் படுக்கைக்கு அருகே இருந்த தனது சிறிய அலமாரியில் இருந்து ஒரு புதிய மை பாட்டிலை எடுத்து, அதில் தன் இறகுப் பேனாவை முக்கி வெளியே எடுத்து, அந்த நாட்குறிப்பின் முதல் பக்கத்தில் ஒரு சொட்டு மையை வடியவிட்டான்.

அந்த மை ஒரு நொடி அந்தக் காகிதத்தில் பிரகாசமாக மிளிர்ந்தது. அடுத்தக் கணம், அதை அந்தத் தாள் அப்படியே உறிஞ்சிக் கொண்டதுபோல அது மாயமாய் மறைந்தது. பரவசமடைந்த ஹாரி, தன் இறகுப் பேனாவை மீண்டும் அந்த மையில் முக்கி, ‘என் பெயர் ஹாரி பாட்டர்’ என்று எழுதினான்.

அந்த எழுத்துக்களும் ஒரு கணம் அந்தப் கணம் அந்தப் பக்கத்தில் தங்கியிருந்துவிட்டுப் பிறகு மாயமாய் மறைந்தன. பின் திடீரென்று ஒன்று நிகழ்ந்தது.

ஹாரி பயன்படுத்தியிருந்த அதே மையில், அவன் எழுதியிராத வார்த்தைகள் அப்பக்கத்திலிருந்து கசிந்தன.

“ஹலோ, ஹாரி பாட்டர்! என் பெயர் நார்ட்டன். என் நாட்குறிப்புப் புத்தகம் உனக்கு எப்படிக் கிடைத்தது?”

அந்த வார்த்தைகளும் மெதுவாக மறைந்தன. ஆனால் அதற்கு முன்பாக ஹாரி அதற்கு பதிலளிக்கத் துவங்கியிருந்தான்.

“யாரோ அதைக் கழிவுத் தொட்டியில் தூக்கி எறிந்து அழிக்கப் பார்த்திருக்கிறார்கள்.”

அவன் நார்ட்டனின் பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்தான்.

“அதிர்ஷ்டவசமாக, என்னுடைய நினைவலைகளை, சாதாரண மையைவிட அதிக காலம் நீடித்து நிலைத்து இருக்கக்கூடிய ஒரு வழியில் நான் பதிவு செய்து வைத்துள்ளேன். ஆனால் இந்த நாட்குறிப்பு யாராலும் படிக்கப்பட்டுவிடக்கூடாது என்று சிலர் விரும்புவார்கள் என்பதை நான் எப்போதும் அறிந்திருந்தேன்.”

தன்னுடைய ஆர்வமிகுதியால் அப்பக்கத்தில் மையைச் சிதறவிட்டிருந்த ஹாரி, “நீ என்ன சொல்கிறாய்?” என்று கிறுக்கினான்.

“இந்த நாட்குறிப்பு மிகவும் பயங்கரமான நினைவலைகளை உள்ளடக்கியுள்ளது. மூடி மறைக்கப்பட்ட உண்மைகள். ஹாக்வார்ட்ஸ் மந்திர தந்திர மாயாஜாலப் பள்ளியில் நடந்த விஷயங்கள்.”

“நான் தற்சமயம் அங்குதான் படித்துக் கொண்டிருக்கிறேன்,” என்று ஹாரி அவசர அவசரமாக பதிலளித்தான். “இங்கு இப்போது படுபயங்கரமான விஷயங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ரகசியங்கள் அடங்கிய பாதாள அறை குறித்து உனக்கு ஏதாவது தெரியுமா?”

ஹாரியின் இதயம் படபடத்துக் கொண்டிருந்தது. நார்ட்டனின் பதில் விரைவாக வந்தது. நார்ட்டனின் கையெழுத்து இப்போது கோழிக் கிறுக்கலாக மாறியிருந்தது. அவன் தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் சொல்வதற்கு அவசரப்பட்டதுபோலத் தெரிந்தது.

“ரகசியங்கள் அடங்கிய பாதாள அறை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். என்னுடைய காலகட்டத்தில் அது ஒரு கட்டுக்கதை என்றும், அப்படிப்பட்ட ஒன்று நிஜத்தில் கிடையாது என்றும் எங்களிடம் கூறப்பட்டது. ஆனால் அது ஒரு கடைந்தெடுத்தப் பொய். என்னுடைய ஐந்தாவது வருடத்தில், ரகசியங்கள் அடங்கிய பாதாள அறை திறக்கப்பட்டது. அந்த ராட்சஸ விலங்கு பல மாணவர்களைத் தாக்கியது. ஒரு மாணவி கொல்லப்பட்டாள். ரகசியங்கள் அடங்கிய அறையைத் திறந்தவனை நான் கையும் களவுமாகப் பிடித்தேன். அவன் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டான். ஹாக்வார்ட்ஸில் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தது குறித்து அவமானமடைந்த தலைமையாசிரியர் பேராசிரியர் டிப்பட், உண்மையை வெளியே சொல்ல என்னைத் தடை செய்துவிட்டார். இறந்து போன அந்த மாணவி எதிர்பாராத ஒரு விபத்தில் இறந்துவிட்டாள் என்ற கதை பரப்பப்பட்டது. நான் பட்டச் சிரமங்களுக்காக அவர்கள் ஓர் அழகான, பளபளப்பான, என் பெயர் பொறிக்கப்பட்டக் கேடயத்தை எனக்குத் தந்து, நான் என் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும் என்று என்னை எச்சரித்தனர். ஆனால் இது மீண்டும் நிகழக்கூடும் என்பதை நான் அறிந்திருந்தேன். அந்த ராட்சஸ விலங்கு தொடர்ந்து வாழ்ந்து வந்தது. அதனைத் திறந்துவிடக்கூடிய சக்தி படைத்தவர்கள் அடைக்கப்படவில்லை.”

ஹாரி வேகமாக பதிலெழுத வேண்டும் என்ற முனைப்பில் தன்மை பாட்டிலைக் கிட்டத்தட்டக் கொட்டிக் கவிழ்த்திருந்தான்.

“அது இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மூன்று தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று எவருக்கும் தெரியவில்லை. கடந்த முறை அதைச் செய்தது யார்?”

“நீ விரும்பினால் அதை என்னால் உனக்குக் காட்ட முடியும்; என்று பதில் வந்தது. “நீ வெறுமேன என் வார்த்தையை நம்ப வேண்டாம். நான் அவனைக் கையும் களவுமாகப் பிடித்த இரவு தொடர்பான என் நினைவிற்குள் உன்னை என்னால் கூட்டிச் செல்ல முடியும்.”

ஹாரி தயங்கினான். அவனது இறகுப் பேனா, நாட்குறிப்புப் புத்தகத்திற்குச் சிறிது உயரே அந்தரத்தில் நின்று கொண்டிருந்தது. நார்ட்டன் என்ன கூற வந்தான்? வேறோருவருடைய ஞாபகத்திற்குள் எப்படித் தன்னால் செல்ல முடியும்? ஹாரி அந்தப் பொதுப் படுக்கையறையின் வாசற்கதவைப் பதற்றத்துடன் பார்த்தான். அறைக்குள் இருள் கவிழ்ந்து கொண்டிருந்தது. அவன் மீண்டும் அப்புத்தகத்தைப் பார்த்தபோது அதில் புதிய வார்த்தைகள் தோன்றியிருந்தன.

“அதை உனக்குக் காட்ட என்னை அனுமதி!”

ஹாரி ஒரு சொடுக்குப் போடும் நேரம் தயங்கினான். பின் ஒரே ஒரு வார்த்தையை அதில் எழுதினான்.

“சரி.”

திடீரென்று அந்த நாட்குறிப்புப் புத்தகத்தின் பக்கங்கள், வேகமாக அடிக்கும் காற்றில் பறப்பதுபோலப் பறந்து ஜூன் மாதத்தின் பாதியில் வந்து நின்றது. ஜூன் பதிமூன்றாம் நாள் என்று எழுதப்பட்டிருந்த சதுரக் கட்டம் ஒரு குட்டித் தொலைக்காட்சித் திரைபோல மாறியதை, ஹாரி, திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தான். கைகள் லேசாக நடுங்க, அவன் அந்த நாட்குறிப்பைத் தன் கைகளால் எடுத்து, அச்சிறிய தொலைக்காட்சிக் கட்டத்தைத் தன் கண்களுக்கு மிக அருகில் வைத்துக் கொண்டான். தனக்கு என்ன நேர்ந்து கொண்டிருந்தது என்பதை அவன் உணர்ந்து கொள்வதற்கு முன்பாகவே அவன் முன்னோக்கிச் சரிந்து கொண்டிருந்தான்; அந்தக் கட்டமும் பெரிதாகிக் கொண்டிருந்தது. தனது உடல் தான் படுத்திருந்த படுக்கையைவிட்டுப் புறப்பட்டதையும், அந்த நாட்குறிப்புப் புத்தகத்தின் பதிமூன்றாம் நாள் பக்கத்தில் இருந்த துளை வழியாக, வண்ணங்கள் மற்றும் இருளால் நிரம்பியிருந்த ஒரு சுழலுக்குள் தான் தலைகுப்புறச் சரிந்ததையும் அவன் உணர்ந்தான்.

சிறிது நேரத்தில், தனது கால்கள் திடமான பகுதி ஒன்றைத் தொட்டதை அவன் உணர்ந்தான். பிறகு, நடுங்கிக் கொண்டே அவன் நிமிர்ந்து நின்றான். அவனைச் சுற்றித் தெளிவற்று இருந்த உருவங்கள். திடீரென்று தெளிவாயின.

தான் எங்கு இருந்தோம் என்பதை ஹாரி உடனடியாக உணர்ந்து கொண்டான். வட்ட வடிவமாக இருந்த அந்த அறையில் இருந்த புகைப்படங்களில் இருந்தவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அது டம்பிள்டோரின் அறை. ஆனால் அந்த மேசைக்குப் பின்னால் இருந்தது டம்பிள்டோர் அல்ல. அறிவார்ந்த, ஒல்லியான ஒரு மந்திரவாதி அங்கு அமர்ந்திருந்தார். ஒருசில வெள்ளை முடிக் கற்றைகளைத் தவிர அவரது தலை முழு வழுக்கையாக இருந்தது. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அவர் ஒரு கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்தார். ஹாரி அந்த மனிதரை அதற்கு முன்பு ஒருபோதும் சந்தித்திருக்கவில்லை.

ஹாரி நடுங்கிக் கொண்டே, “மன்னிக்க வேண்டும். நான் உங்களைத் தொந்தரவு செய்யும் எண்ணத்தோடு…” என்று தட்டுத் தடுமாறிக் கூறினான்.

ஆனால் அந்த மந்திரவாதி நிமிரக்கூட இல்லை. அவர் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தார். ஹாரி அவரது மேசைக்கு அருகில் சென்று, “ம்ம் – நான் இங்கிருந்து போய்விடுகிறேன் – நான் போகலாமா?” என்று கேட்டான்.

அப்போதும் அந்த மந்திரவாதி அவனை அலட்சியம் செய்தார். அவர் அவன் கூறியதைக் கேட்ட மாதிரிகூடத் தெரியவில்லை. ஒருவேளை அந்த மந்திரவாதி காது கேளாதவராக இருக்கக்கூடும் என்று நினைத்து ஹாரி தன் குரலை உயர்த்தினான்.

“உங்களைத் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். இப்போது நான் போய்விடுகிறேன்,” என்று அவன் கத்தினான்.

அந்த மந்திரவாதி ஒரு பெருமூச்சுடன் அந்தக் கடிதத்தை மடித்து வைத்துவிட்டு, எழுந்து நின்று, ஹாரியை ஏறிட்டுக்கூடப் பார்க்காமல் அவனைக் கடந்து சென்று, தனது சன்னலின் திரைச்சீலையை விலக்கினார்.

சன்னலுக்கு வெளியே இருந்த வானம் பிரகாசமான சிவப்பு நிறத்தில் இருந்தது. அது அந்தி வேளைபோலத் தெரிந்தது. அந்த மந்திரவாதி மீண்டும் தன் மேசைக்குச் சென்று அமர்ந்தார். அவர் தன்னுடைய பெருவிரலைத் திருகிக் கொண்டு, வாசற்கதவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஹாரி சுற்றுமுற்றும் பார்த்தான். அங்கு ஃபாக்ஸ் பீனிக்ஸ் பறவை இருக்கவில்லை. ‘விர்’ என்ற ஒலியுடன் சுழன்று கொண்டிருந்த வெள்ளிக் கருவிகளும் அங்கு இருக்கவில்லை. இது நார்ட்டன் காலத்திய ஹாக்வார்ட்ஸ். அதனால் ஹாரிக்கு யாரென்று தெரியாத இந்த மந்திரவாதி அப்போதைய தலைமையாசிரியராக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் டம்பிள்டோர் அல்ல. ஹாரி இப்போது கிட்டத்தட்ட ஒரு மாயாவியைப்போல இருந்தான். ஐம்பது வருடங்களுக்கு முந்தைய மனிதர்களின் கண்களுக்கு அவன் தென்படவில்லை.

அவரது அலுவலகத்தின் கதவு தட்டப்பட்டது.

அந்த முதிய மந்திரவாதி, பலவீனமான குரலில், “உள்ளே வா” என்று கூறினார்.

தலைவனின் வெள்ளி முத்திரை அவனது ஆடையின் நெஞ்சுப் வயது மதிக்கத்தக்க ஒரு மாணவன் உள்ளே வந்தான். மாணவ அணித் தன்னுடைய கூம்புத் தொப்பியைக் கழற்றியபடியே, பதினாறு பகுதியில் மின்னிக் கொண்டிருந்தது. அவன் ஹாரியைவிட நல்ல உயரமாக இருந்தான். ஆனால் அவனது முடியும் ஹாரியின் தலைமுடியைப்போலவே கருப்பாக இருந்தது.

“ஓ, நார்ட்டன்!” என்று அந்தத் தலைமையாசிரியர் கூறினார்.

“பேராசிரியர் டிப்பட் அவர்களே, நீங்கள் என்னைப் பார்க்க விரும்பியதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது,” என்று நார்ட்டன் கூறினான். அவன் பதற்றமாகக் காணப்பட்டான்.

“உட்கார்!” என்று டிப்பட் கூறினார். “நீ எனக்கு அனுப்பியிருந்த கடிதத்தை நான் படித்தேன்.”

“ஓ!” என்று கூறிபடி அவன் உட்கார்ந்தான். அவன் தன் இரு கைகளையும் இறுகச் சேர்த்துப் பற்றிக் கொண்டான்.

“நார்ட்டன்,” என்று டிப்பட் கனிவாகக் கூறினார். “கோடை விடுமுறையின்போது உன்னை இங்கு தங்க என்னால் அனுமதிக்க முடியாது. விடுமுறைக்கு நீ வீட்டிற்குப் போக விரும்பவில்லையா?”

“எனக்கு அதில் விருப்பமில்லை,” என்று நார்ட்டன் கூறினான். “நான் அங்கு – அந்த இடத்திற்குத் திரும்பிப் போவதைவிட இங்கு ஹாக்வார்ட்ஸில் தங்கியிருப்பதையே பெரிதும் விரும்புகிறேன்-“

“நீ விடுமுறையில் சென்றால் மகுள்களின் அனாதை விடுதி ஒன்றில் தங்க வேண்டியிருக்கும் என்பது சரிதானா?” என்று டிப்பட் ஆர்வமாகக் கேட்டார்.

“ஆமாம், சார்,” என்று நார்ட்டன் கூறினான். அவனது முகம் லேசாகச் சிவந்திருந்தது.

“நீ மகுள்களுக்குப் பிறந்தவனா?”

“சார், நான் அரை ரத்தப் பிறவி!” என்று நார்ட்டன் கூறினான். “அப்பா ஒரு மகுள், அம்மா ஒரு மந்திரவாதினி.”

“உன்னுடைய அம்மாவும் அப்பாவும் என்ன ஆனார்கள்?”

“சார், என்னுடைய அம்மா, நான் பிறந்த சிறிது நாட்களுக்குள் இறந்துவிட்டார்கள். எனக்குப் பெயர் சூட்டும்வரை என் அம்மா உயிரோடு இருந்ததாக நான் இருந்த அனாதை விடுதியில் இருந்தவர்கள் என்னிடம் தெரிவித்திருந்தனர். நான் என் அம்மாவின் வயிற்றில் இருந்தபோதே என் அப்பா என் அம்மாவைக் கைவிட்டுவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.”

டிப்பட் தனது அனுதாபத்தை வெளிப்படுத்தும் விதமாக ‘உச்’ கொட்டினார்.

“நார்ட்டன், நீ இங்கு தங்குவதற்கு உனக்காக நான் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்கக்கூடும், ஆனால் இப்போதுள்ள சூழலில் ” என்று கூறி அவர் பெருமூச்செறிந்தார்.

“சார், நீங்கள் இந்தத் தாக்குதல்களைப் பற்றிக் குறிப்பிடுகிறீர்களா?” என்று நார்ட்டன் கேட்டான். ஹாரியின் இதயம் படபடவெனத் துடித்தது. அவர்கள் பேசிக் கொண்டிருந்த விஷயங்களில் எதையேனும் தான் கேட்காமல் விட்டுவிடுவோமா என்று பயந்து, ஹாரி இன்னும் அருகே சென்றான்.

“ஆம், அதைத்தான் நான் குறிப்பிட்டேன்,” என்று தலைமையாசிரியர் கூறினார். “கோடை விடுமுறையின்போது நீ பள்ளியில் தங்கியிருக்க நான் உன்னை அனுமதிப்பது எப்பேற்பட்ட முட்டாள்தனமானதொரு காரியமாக இருக்கும் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, சமீபத்தில் நடந்த துயரச் சம்பவத்தைக்

க்கில் எடுத்துக் கொள்ளும்போது – இறந்து போன அந்த மாணவியைப் பற்றித்தான் நான் சொல்கிறேன் – நீ இங்கிருப்பதைவிட உன்னுடயை அனாதை விடுதியில் அதிகப் பாதுகாப்பாக இருப்பாய். இப்போதுகூட மந்திரஜால அமைச்சகம் நம் பள்ளியை இழுத்து மூடுவது பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறது என்பதை நான் உன்னிடம் கூறியாக வேண்டும். இந்தத் தகாத செயல்களைச் செய்து கொண்டிருப்பது யார் என்பது குறித்து எங்களுக்குச் சிறு துப்புக்கூடக் கிடைக்கவில்லை…”

நார்ட்டனின் கண்கள் விரிந்தன.

“சார் … இந்த நபரை நாம் பிடித்துவிட்டால் … இச்செயல்கள் நடைபெறுவது நின்றுவிட்டால்…”

தலைமையாசிரியர் டிப்பட் தன் நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு, “நீ என்ன சொல்ல வருகிறாய்?” என்று கீச்சொலியுடன் கேட்டார். “நார்ட்டன், உனக்கு இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக ஏதாவது தெரியுமா?”

“இல்லை சார்,” என்று நார்ட்டன் அவசர அவசரமாகக் கூறினான்.

ஆனால், தான் டம்பிள்டோரிடம் கூறிய அதே விதமான ‘இல்லை’தான் இது என்பதை ஹாரி அறிந்தான்.

டிப்பட் லேசான ஏமாற்றத்துடன் தன் இருக்கையில் பின்னோக்கிச் சாய்ந்தார்.

“சரி, நார்ட்டன், நீ இப்போது போகலாம்…”

நார்ட்டன் தன் நாற்காலியைவிட்டு எழுந்து விறைப்பாக வெளியே சென்றான். ஹாரியும் அவனைப் பின்தொடர்ந்தான்.

அவர்கள் அந்தச் சுழல் படிக்கட்டு வழியாகக் கீழே இறங்கி, கோரமாகத் தோற்றமளித்த அந்த பெரிய விசித்திர விலங்கின் சிலையருகே இருண்ட தாழ்வாரத்தில் வெளிப்பட்டனர். நார்ட்டன் நின்றான். அதனால் ஹாரியும் நின்றான். ஹாரி அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். நார்ட்டன் தீவிரமாக எதையோ யோசித்துக் கொண்டிருந்ததாக ஹாரிக்குத் தோன்றியது. நார்ட்டன் தன் உதடுகளைக் கடித்துக் கொண்டிருந்தான். அவனது நெற்றி சுருங்கியிருந்தது.

பின், திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தவன்போல நார்ட்டன் பின்தொடர்ந்தான். வரவேற்பறையை அடைவதுவரை அவர்கள் வேறு அங்கிருந்து விரைந்தான். ஹாரியும் அவனைச் சத்தமில்லாமல் யாரையும் எதிர்கொள்ளவில்லை. உயரமாக இருந்த ஒரு மந்திரவாதி அங்கிருந்த பளிங்குப் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தார். அவருக்கு நீண்ட செம்பழுப்பு நிறத் தலைமுடியும் தாடியும் இருந்தன. அவர் நார்ட்டனைக் கூப்பிட்டார்.

“நார்ட்டன், இவ்வளவு நேரம் கழித்து நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”

ஹாரி அந்த மந்திரவாதியைப் பார்த்ததும் வியப்பில் வாயைப் பிளந்தான். அவர் வேறு யாருமல்ல, ஐம்பது வயது குறைந்திருந்த டம்பிள்டோர்தான்!

“சார், நான் தலைமையாசிரியரைப் பார்க்கச் சென்றிருந்தேன்,” என்று நார்ட்டன் கூறினான்.

ஹாரிக்கு நன்கு பழக்கமான, துளைத்துவிடுவது போன்ற பார்வையை நார்ட்டனை நோக்கி வீசிய டம்பிள்டோர், “சரி, இப்போது உடனடியாக உன் படுக்கைக்குச் செல்,” என்று கூறினார். “இந்நாட்களில் தாழ்வாரங்களில் தேவையில்லாமல் அலைந்து கொண்டிருப்பது நல்லதல்ல. குறிப்பாக, அந்த நிகழ்விற்குப் பிறகு …”

அவர் ஆழமாகப் பெருமூச்சு ஒன்றை விட்டபடி நார்ட்டனுக்கு இரவு வணக்கம் ஒன்றை உதிர்த்துவிட்டு அங்கிருந்து அகன்றார். அவர் தன் பார்வையிலிருந்து மறையும்வரை நார்ட்டன் பார்த்துக் கொண்டிருந்தான். பின் நேராக நிலவறைகளுக்குச் செல்வதற்கான கற்படிக்கட்டுகளை நோக்கி அவன் சென்றான். ஹாரி அவனைப் பின்தொடர்ந்தான்.

ஆனால் அவன் ஹாரி எதிர்பார்த்திருந்தபடி மறைவான ஒரு வழிக்கோ அல்லது ரகசியச் சுரங்கப் பாதை ஒன்றிற்கோ செல்லவில்லை. மாறாக, ஸ்னேப் மாயத் திரவ வகுப்பை நடத்தும் நிலவறைக்கு அவன் நேராகச் சென்றான். அங்கு தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டிருக்கவில்லை. நார்ட்டன் அந்த அறைக் கதவைத் தள்ளியபோது அது கிட்டத்தட்ட மூடிக் கொண்டது. அதில் ஒரே ஒரு சிறு இடைவெளி மட்டும் இருந்தது. அதன் வழியாக ஹாரியால் நார்ட்டனை மட்டுமே பார்க்க முடிந்தது. நார்ட்டன் அந்த அறையில் ஆடாமல் அசையாமல் கதவருகே நின்று கொண்டு, வெளியே இருந்த நடைபாதையையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

தாங்கள் இருவரும் குறைந்தது ஒரு மணிநேரமாவது அங்கு இருந்திருப்போம் என்று ஹாரிக்குத் தோன்றியது. சிலைபோல நின்று கொண்டு, கதவின் சிறு இடைவெளி வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்த நார்ட்டனை மட்டும்தான் ஹாரி மொத்த நேரமும் பார்த்துக் கொண்டிருந்தான். ஹாரியின் எதிர்பார்ப்பும் பதற்றமும் குறைந்து, இங்கிருப்பதைவிட நிகழ்காலத்திற்குத் திரும்பினால் நன்றாக இருக்குமே என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தபோது, கதவுக்கு வெளியே எதுவோ நகர்ந்து கொண்டிருந்த சத்தம் அவனுக்குக் கேட்டது.

அந்த நடைபாதையில் யாரோ பதுங்கிப் பதுங்கிச் சென்று கொண்டிருந்தனர். அந்த உருவம் அவனும் நார்ட்டனும் இருந்த அறையைக் கடந்து சென்றது. நார்ட்டன் அந்த அறைக் கதவைத் திறந்து வெளியேறி அந்த உருவத்தை ஒரு நிழல்போலப் பின்தொடர்ந்தான். தன் சத்தம் கேட்காது என்பதை மறந்துவிட்ட ஹாரி, ஓசையேற்படுத்தாத வண்ணம், நார்ட்டனைப் பின்தொடர்ந்து குதிங்கால்களில் நடந்து சென்றான்.

சுமார் ஐந்து நிமிடங்கள் அவர்கள் இருவரும் அந்தக் காலடிச் சத்தத்தையே பின்தொடர்ந்தனர். பின் நார்ட்டன் திடீரென்று நின்றான். இப்போது புதிய சத்தங்கள் வந்த திசையை நோக்கி அவனது தலை சாய்ந்திருந்தது. ஒரு கதவு கிறீச்சென்று திறந்த சத்தம் ஹாரிக்குக் கேட்டது. பின் யாரோ கரடுமுரடான குரலில் கிசுகிசுத்தனர்.

“வா, வா!… நான் உன்னை இங்கேயிருந்து வெளியேற்றியாக வேண்டும் இந்தப் பெட்டிக்குள் வா… சீக்கிரம் வா!”

ஹாரிக்கு அந்தக் குரல் பரிச்சயமான ஒன்றாகத் தோன்றியது.

நார்ட்டன் திடீரென்று அந்த மறைவிலிருந்து துள்ளினான். ஹாரி அவனுக்குப் பின்னால் வெளியே வந்தான். அங்கு மிகப் பெரிய உருவத்தைக் கொண்ட ஒரு மாணவன் நின்று கொண்டிருந்தான். அவன் குனிந்து திறந்திருந்த ஒரு கதவிற்கு முன்னால் உட்கார்ந்திருந்தான். அக்கதவின் அருகே ஒரு பெரிய பெட்டி இருந்தது.

“ஹாக்ரிட், மாலை வணக்கம்,” என்று நார்ட்டன் முரட்டுத்தனமாகக் கூறினான்.

அந்தப் பையன் தனக்குப் பின்னால் அக்கதவை ஓங்கிச் சாத்திவிட்டு எழுந்து நின்றான்.

“நார்ட்டன், நீ இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” நார்ட்டன் அவனை நெருங்கினான்.

“எல்லாம் முடிந்துவிட்டது,” என்று நார்ட்டன் கூறினான். “ஹாக்ரிட், நான் அவர்களிடம் உன்னை ஒப்படைக்கப் போகிறேன். தாக்குதல்கள் நிற்காவிட்டால் அவர்கள் ஹாக்வார்ட்ஸையே இழுத்து மூடப் போவதாகக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.”

“நீ என்ன சொல்கிறாய்? -“

“நீ யாரையும் கொல்ல நினைக்கவில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் அரக்கத்தனமான விலங்குகளைச் செல்லப் பிராணிகளாக வளர்க்க முடியாது. நீ அதை உடற்பயிற்சிக்காக வெளியே விட்டிருக்கக்கூடும் என்று நான் நினைக்கிறேன், ஆனால் _”

மூடப்பட்டிருந்த கதவின்மீது சாய்ந்து கொண்டு, “இது யாரையும் ஒருபோதும் கொன்றதில்லை,” என்று அந்தப் பெரிய பையன் கூறினான். அக்கதவிற்குப் பின்னால், வினோதமான பிராண்டல் ஒலி வந்து கொண்டிருந்தது ஹாரிக்குக் கேட்டது.

“போதும், ஹாக்ரிட்,” என்று கூறியவாறு, நார்ட்டன் அவனை இன்னும் நெருங்கினான். “இறந்து போன மாணவியின் பெற்றோர்கள் நாளை இங்கு வரப் போகிறார்கள். அவர்களது மகளை எது கொன்றதோ அதை அழிப்பதுதான் ஹாக்வார்ட்ஸ் அவர்களுக்குச் செலுத்தக்கூடிய குறைந்தபட்ச மரியாதையாக இருக்கும்.”

“அவளைக் கொன்றது இதுவல்ல,” என்று அந்தப் பையன் கர்ஜித்தான். அவனது குரல் அந்த இருண்ட நடைபாதையில் எதிரொலித்தது. “இது அதைச் செய்யவில்லை! இது அப்படிப்பட்டச் செயல்களில் ஒருபோதும் ஈடுபடாது!”

நார்ட்டன் தன் மந்திரக்கோலை உருவியவாறு, “வழியைவிட்டு விலகு!” என்று கூறினான்.

அவன் உச்சரித்த மந்திரம் அப்பகுதியைத் திடீர் வெளிச்சத்தில் மூழ்கடித்தது. அந்தப் பெரிய பையனுக்குப் பின்னால் இருந்த கதவு எகிறிப் பறந்தது. அது பறந்த வேகத்தில் அந்தப் பெரிய பையன் எதிர்ச் சுவரில் போய் விழுந்தான். அந்த அறையினுள் இருந்து வந்த ஒன்றைக் கண்ட ஹாரி, நீண்ட, காதைச் செவிடாக்கும் அலறல் ஒன்றை வெளியிட்டான். அது அவனைத் தவிர வேறு யாருக்கும் கேட்கவில்லை.

முதுகு வளைந்திருந்த பெரிய உருவம் ஒன்று அந்த அறையிலிருந்து வெளிப்பட்டது. அதன் உடல் முழுவதும் முடியால் மூடப்பட்டிருந்தது. அதன் கருப்பு நிறக் கால்கள் பின்னிப் பிணைந்திருந்தன. அதனுடைய பல கண்கள் பளிச்சிட்டன. மிகக் கூரான, இடுக்கியைப் போன்ற இரண்டு கொடுக்குகள் அதற்கு இருந்தன. நார்ட்டன் தன் மந்திரக்கோலை மீண்டும் உயர்த்தினான். ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டிருந்தது. அது அவனைத் தூக்கி எறிந்துவிட்டு, அந்தத் தாழ்வாரத்தை இடித்து நொறுக்கிக் கொண்டு அங்கிருந்து ஓடியது. நார்ட்டன் தட்டுத் தடுமாறி எழுந்தான். அது போன திசையைப் பார்த்துத் தனது மந்திரக்கோலை உயர்த்தினான். ஆனால் அந்தப் பெரிய பையன், நார்ட்டன்மீது பாய்ந்து, அவனது மந்திரக்கோலைப் பிடுங்கிக் கொண்டு, அவனை மீண்டும் கீழே தள்ளியபடியே, “வேண்டாம்!” என்று கத்தினான்.

அக்காட்சிச் சுழன்றது. இருள் முழுவதுமாகச் சூழ்ந்து கொண்டது. தான் கீழே விழுந்து கொண்டிருந்ததுபோல ஹாரி உணர்ந்தான். அவன் கிரிஃபின்டார் பொதுப் படுக்கையறையில் இருந்த தனது படுக்கையில் வந்து ‘டமால்’ என்று விழுந்தான். நார்ட்டனின் நாட்குறிப்புப் புத்தகம் அவனுடைய வயிற்றின்மேல் விரிந்து கிடந்தது.

அவன் தன் மூச்சைச் சமநிலைக்குக் கொண்டு வருவதற்குள் அந்த அறையின் கதவு திறந்தது. ரான் உள்ளே வந்தான்.

“நீ இங்கேதான் இருக்கிறாயா?” என்று அவன் கேட்டான்.

ஹாரி நிமிர்ந்து உட்கார்ந்தான். அவனுக்கு வியர்த்துக் கொட்டிக் கொண்டிருந்தது. அவன் நடுங்கிக் கொண்டிருந்தான்.

ரான் அவனைக் கரிசனத்துடன் பார்த்துக் கொண்டே, “உனக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டான்.

“ரான், அது ஹாக்ரிட், ஹாக்ரிட்தான் ஐம்பது வருடங்களுக்கு முன்பு ரகசியங்கள் இருந்த அறையைத் திறந்தார்,” என்று ஹாரி கூறினான்.

14. கார்னிலியஸ் ஃபட்ஜ்

மிகப் பெரிய, ராட்சஸத்தனமான விலங்குகளைப் பெரிதும் விரும்பும் வினோதப் பழக்கம் ஹாக்ரிட்டிற்கு இருந்தது என்பதை ஹாரி, ரான், ஹெர்மயனி ஆகிய மூவரும் எப்போதும் அறிந்திருந்தனர், ஹாக்வார்ட்ஸில் அவர்களுடைய முதல் வருடத்தின்போது ஹாக்ரிட் தன்னுடைய மரக் குடிலுக்குள் ஒரு டிராகனை வளர்க்க முயன்றிருந்தார். ‘ஃபிளஃபி’ என்று அவர் செல்லமாக அழைத்த அந்த ராட்சஸ மூன்று தலை நாயை மறக்க அவர்கள் மூவருக்கும் வெரு காலம் ஆகும். ஹாக்ரிட் சிறுவனாக இருந்தபோது கோட்டைக்குள் எங்கேனும் ஒரு ராட்சஸ விலங்கு ஒளித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கேள்விப்பட்டிருந்தால், அதை ஒரு முறையாவது பார்த்துவிட அவர் என்ன வேண்டுமானாலும் செய்திருப்பார் என்று ஹாரி உறுதியாக நம்பினான். அந்த அரக்கத்தனமான விலங்கை வெகு காலம் அடைந்து வைத்திருந்தது தவறு என்றும் அதைக் கொஞ்சம் காலாற நடக்க விடுவதில் தவறில்லை என்றும் அவர் நினைத்திருந்திருப்பார். பதிமூன்று வயது ஹாக்ரிட் அதற்கு ஒரு பெரிய கழுத்துச் சங்கிலியை மாட்ட முனைவது பற்றி ஹாரி கற்பனை செய்து பார்த்தான். ஆனால் அதே சமயம், ஹாக்ரிட் யாரையும் ஒருபோதும் கொல்ல நினைத்திருக்க மாட்டார் என்றும் ஹாரி உறுதியாக நம்பினான்.

நார்ட்டனின் நாட்குறிப்புப் புத்தகத்தை எவ்வாறு படிப்பது என்பதைத் தான் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றுகூட ஹாரி நினைத்தான். நடந்த விஷயங்கள் பற்றி மீண்டும் மீண்டும் அவனிடம் துருவித் துருவிக் கேள்விகள் கேட்டு ரானும் ஹெர்மயனியும் அவனைப் பாடாய்ப் படுத்தினர். அதோடு, அவற்றைத் தொடர்ந்து நிகழ்ந்த உரையாடல்களும் திரும்பத் திரும்ப ஒரே பாதையில் முடிவே இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்ததைக் கண்டும் ஹாரி வெறுத்துப் போயிருந்தான்.

“நார்ட்டன் தவறான ஆளைப் பிடித்திருக்கக்கூடும்,” என்று ஹெர்மயனி கூறினாள். “ஒருவேளை வேறு ஏதாவது ஒரு ராட்சஸ விலங்கு மக்களைத் தாக்கிக் கொண்டிருந்திருக்கலாம்.”

“இந்த இடத்தில் எத்தனை ராட்சஸ விலங்குகளைப் பிடித்து வைக்க முடியும் என்று நீ நினைக்கிறாய்?” என்று ரான் மந்தமாகக் கேட்டான்.

“ஹாக்ரிட் இப்பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார் பரிதாபமாகக் கூறினான். “ஹாக்ரிட் வெளியேற்றப்பட்டவுடன் என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம்தான்,” என்று ஹாரி தாக்குதல்கள் நின்று போயிருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், நார்ட்டனுக்கு விருது கிடைத்திருக்காது.”

ரானின் கண்ணோட்டம் வேறாக இருந்தது.

நார்ட்டன் அப்படியே பெர்சி போலவே பேசுகிறான். ஹாக்ரிட்மீது சேற்றை வாறி இறைக்க அவனைத் தூண்டியது யார்?”

“ஆனால் ரான், அந்த ராட்சஸ விலங்கு யாரையோ கொன்றிருக்கிறது,” என்று ஹெர்மயனி சுட்டிக்காட்டினாள்.

“ஹாக்வார்ட்ஸை இழுத்து மூடினால் ஏதோ ஒரு மகுளின் அனாதை விடுதிக்குச் செல்ல வேண்டிய நிலையில் நார்ட்டன் இருந்தான்,” என்று ஹாரி கூறினான். “அதனால் அவன் ஹாக்வார்ட்ஸிலேயே தொடர்ந்து தங்க விரும்பியதற்காக அவனைக் குற்றம் சொல்ல முடியாது..”

ரான் தன்னுடயை உதட்டைக் கடித்தான். பின் மெதுவாக, “நீ ஹாக்ரிட்டை நாக்டர்ன் சந்தில் வைத்துச் சந்தித்தாய் இல்லையா?” என்று கேட்டான்.

“ஆனால் அவர் ‘மாமிசம் தின்னும் நத்தை விரட்டி’யை வாங்குவதற்காக அங்கு வந்திருந்தார்,” என்று ஹாரி அவசரமாகக் கூறினான்.

அவர்கள் மூவரும் மௌனமாயினர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தங்களைக் குடைந்து கொண்டிருந்த மிகச் சிக்கலான அந்தக் கேள்வியை ஹெர்மயனி தயங்கியபடியே கேட்டாள்: “நாம் இவை எல்லாவற்றையும் பற்றி ஹாக்ரிட்டிடமே நேராகக் கேட்கலாமா?”

“அந்தச் சந்திப்பு மிகவும் சந்தோஷமான ஒன்றாக இருக்கும்,” என்று ரான் கிண்டலடித்தான். “ஹலோ ஹாக்ரிட், உடலெல்லாம் முடியாக இருக்கும் படுபயங்கரமான ஏதாவது ஒன்றைச் சமீபத்தில் நீங்கள் இக்கோட்டைக்குள் கட்டவிழ்த்துவிட்டுள்ளீர்களா?”

அடுத்து ஒரு தாக்குதல் ஏற்பட்டாலொழிய ஹாக்ரிட்டிடம் எதையும் கேட்கப் போவதில்லை என்று இறுதியில் அவர்கள் முடிவு செய்தனர். உருவமற்றக் குரலின் கிசுகிசுப்பு இல்லாமல் பல வாரங்கள் ஓடிப் போனதால், ஹாக்ரிட்டிடம் அவர் ஏன் பள்ளியில் இருந்து துரத்தப்பட்டார் என்பதைக் கேட்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்று அவர்கள் நம்பத் தலைப்பட்டனர். ஜஸ்டினும் நிக்கும் கல்லாக்கப்பட்டுக் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகியிருந்தன. தாக்குதல் நடத்தியவன், அதற்கு முழுக்குப் போட்டுவிட்டான் என்றே எல்லோரும் நினைத்தனர். பீவ்ஸ்கூட ஹாரி பாட்டரைக் கிண்டல் செய்து பாடிய பாடலை நிறுத்திக் கொண்டது. மூலிகையியல் வகுப்பில் ஒரு நாள் எர்னிகூட, தாவிப் பாயும் தவளைகளின் கழிவுகள் இருந்த ஒரு வாளியைத் தன்னிடம் எடுத்துத் தர முடியுமா என்று ஹாரியிடம் கேட்டான். மார்ச் மாதத்தில் ஒரு நாள், மன்ட்ரேக்குகள், மூன்றாவது பசுமைக் குடிலில் ஒரு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. அது பேராசிரியர் ஸ்புரவுட்டிற்குப் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

“மன்ட்ரேக்குகள் ஒரு தொட்டியிலிருந்து மற்றொரு தொட்டிக்குத் தாவ முயன்றால், அவை முழுமையாக வளர்ந்துவிட்டதற்கான அறிகுறி அது,” என்று அவர் ஹாரியிடம் கூறினார். வெகு விரைவில், மருத்துவமனையில் இருக்கும் அந்தப் பரிதாபமான ஜீவன்களை நம்மால் உயிர்த்தெழ வைக்க முடியும்.”


ஈஸ்டர் விடுமுறையின் போது இரண்டாவது வருட மாணவர்கள் ஒரு புதிய விஷயத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டியிருந்தது. அவர்கள் தங்கள் மூளைகளுக்கு வேலை கொடுத்து, மூன்றாம் வருடத்தில் தாங்கள் கற்றுக் கொள்ள விரும்பிய பாடங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வேளை வந்திருந்தது. அதைக் குறைந்தபட்சம் ஹெர்மயனி மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டாள்.

அவர்கள் புதிய பாடங்களின் பட்டியலைப் பார்த்து அதில் தங்களுக்குப் பிடித்தப் பாடங்களைக் குறித்துக் கொண்டிருந்தபோது, அவள் ஹாரியிடமும் ரானிடமும், “இது நம்முடைய மொத்த வருங்காலத்தையே தீர்மானிக்கின்ற விஷயம்,” என்று கூறினாள்.

“நான் மாயத் திரவப் பாடத்தைக் கழற்றிவிட்டுவிட விரும்புகிறேன்,” என்று ஹாரி கூறினான்.

“அது நம்மால் முடியாது,” என்று ரான் வருத்தத்துடன் கூறினான். “நாம் நம்முடைய பழைய பாடங்கள் எல்லாவற்றையும் அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், நான் தீய மந்திர சக்திகளுக்கு எதிரான பாடத்தைக் பாதுகாப்புப் கழற்றிவிட்டிருப்பேன்.”

“ஆனால் அது மிகவும் முக்கியமானது,” என்று ஹெர்மயனி அதிர்ந்து போய்க் கூறினாள்.

“லாக்ஹார்ட் கற்றுக் கொடுக்கும் விதத்தில் அது நிச்சயமாக முக்கியமானதே அல்ல,” என்று ரான் கூறினான். “பிக்ஸிகளை வெளியே விடக்கூடாது என்பதைத் தவிர உருப்படியான எதையும் நான் அவரிடமிருந்து கற்றுக் கொள்ளவில்லை.”

நெவிலுக்கு அவனது வீட்டில் இருந்த ஒவ்வொரு மந்திரவாதியும் மந்திரவாதினியும் கடிதம் எழுதியிருந்தனர். அக்கடிதங்களில், அவன் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான அறிவுரையை அவனுக்குக் கொடுத்திருந்தனர். குழப்பமும் கவலையும் அடைந்த நெவில், தன் நாக்குச் சற்று வெளியே துருத்திக் கொண்டிருக்க, பாடங்கள் அடங்கிய பட்டியலைப் படித்து கொண்டிருந்தான். பழங்காலச் சித்திர எழுத்துக்கள் பாடம் எண்மந்திரம் பாடத்தைவிடச் சுலபமானதாக இருக்குமா என்று போவோர் வருவோரிடமெல்லாம் அவன் கேட்டுக் கொண்டிருந்தான். ஹாரியைப்போல மகுள்களுடன் வளர்ந்திருந்த டீன் தாமஸ், தன் கண்களை மூடிக் கொண்டு அப்பட்டியலைத் தன் மந்திரக்கோலால் தொட்டான். அது எந்தப் பாடங்களிலெல்லாம் போய் நின்றதோ. அவன் அவற்றைத் தேர்ந்தெடுத்தான். ஹெர்மயனி யாருடைய அறிவுரையையும் நாடவில்லை. அவள் எல்லாப் பாடங்களையும் தேர்வு செய்து கொண்டாள்.

படிப்பு முடிந்ததும் மந்திரஜால உலகில் தான் எந்த மாதிரியான வேலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தான் தனது பெரியப்பா வெர்னனிடமும் பெரியம்மா பெட்டூனியாவிடமும் கேட்டால் ர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்று யோசித்துப் பார்த்தபோது ஹாரியின் உதடுகளில் சோகமான புன்முறுவல் படர்ந்தது. அவனுக்கு வழிகாட்டுதல் கிடைக்கவே இல்லை என்று கூறிவிட முடியாது. பெர்சி தன்னுடைய அனுபவங்களை அவனுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருந்தான்.

“நீ எங்கு போக விரும்புகிறாய் என்பதைப் பொறுத்தது அது” என்று பெர்சி கூறினான். “வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பதற்குச் சரியான நேரம் என்று ஒன்று உண்டு என்றால், அது இக்கணம்தான். எனவே, வருங்காலவியலைப் படிக்குமாறு நான் உனக்குப் பரிந்துரைப்பேன். மகுள்கள் குறித்த ஆய்வு அவ்வளவு தீவிரமானது அல்ல என்று மக்கள் கூறுவர். ஆனால் என்னைப் பொறுத்தவரை, மந்திரவாதிகளுக்கு, மந்திரஜாலமற்றப் பிற சமூகங்களைப் பற்றிய முழுமையான புரிதல் இருக்க வேண்டும், அதிலும் குறிப்பாக, அவர்களோடு நெருங்கி வேலை செய்ய விரும்பும் பட்சத்தில்! என்னுடைய அப்பாவை எடுத்துக் கொள்ளேன். பொழுது விடிந்தால் மகுள்கள் தொடர்பான விஷயங்களைத்தான் அவர் கையாள வேண்டியுள்ளது. என்னுடைய அண்ணன் சார்லி எப்போதுமே வெளியே இயற்கையோடு இருக்கவே விரும்புவான். அதனால் அவன் மந்திரஜால விலங்குகளின் பராமரிப்பு என்ற பாடத்தை எடுத்துப் படித்தான். ஹாரி, உன் வலிமை எதுவோ அதில் புகுந்து விளையாடு!”

ஆனால் தான் திறமைசாலியாக இருந்ததாக ஹாரி கருதிய ஒரே விஷயம் குவிடிச் விளையாட்டுதான். இறுதியில், ரான் தேர்வு செய்த பாடங்களையே அவனும் தேர்வு செய்தான். தான் எந்தப் பாடத்திலாவது மிகவும் மோசமாக இருந்தால், அதில் தனக்கு உதவுவதற்குத் தனக்குத் தெரிந்தவன் ஒருவன் இருப்பான் என்ற காரணத்தால் ஹாரி அப்படிச் செய்தான்.


கிரிஃபின்டார் அணியின் அடுத்தக் குவிட்டிச் போட்டி ஹஃபில்பஃப் அணியினருடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் இரவு உணவிற்குப் பிறகு தமது அணியினர் அனைவரும் குவிட்டிச் பயிற்சியில் பங்கு கொள்ள வேண்டும் என்று உட் வலியுறுத்தினான். அதனால் ஹாரிக்கு வீட்டுப்பாடங்கள் மற்றும் குவிடிச் பயிற்சியைத் தவிர வேறு எதற்கும் நேரமிருக்கவில்லை. ஆனால் பயிற்சி வகுப்புகள் நாளுக்கு நாள் மேம்பாடு அடைந்து கொண்டே வந்தன. சனிக்கிழமையன்று நடைபெறவிருந்த அப்போட்டிக்கு முந்தைய நாள் மாலையில் அவன் தன்னுடைய மந்திரத் துடப்பத்தை வைத்துவிட்டு வருவதற்காகத் தனது பொதுப் படுக்கையறைக்குச் சென்றபோது, கிரிஃபின்டார் அணி குவிடிச் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் இருந்ததாக அவன் உணர்ந்தான்.

ஆனால் அவனது குதூகலமான மனநிலை வெகுநேரம் நீடிக்கவில்லை. அவனது பொதுப் படுக்கையறைக்குச் செல்வதற்கான படிக்கட்டுகளின் மேற்படியின்மீது நெவில் அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தான். அவன் மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டான்.

“ஹாரி, இதைச் செய்தது யார் என்று தெரியவில்லை. ஆனால் நான் வந்து பார்த்தபோது -”

அவன் ஹாரியை பயத்துடன் பார்த்துக் கொண்டே கதவைத் திறந்தான்.

ஹாரியின் டிரங்குப் பெட்டியில் இருந்த அனைத்தும் எல்லா இடங்களிலும் விசிறியடிக்கப்பட்டு இருந்தது. அவனுடைய அங்கி கிழிக்கப்பட்ட நிலையில் தரையில் கிடந்தது. அவனுடைய படுக்கை விரிப்புகள் அவனுடைய கட்டிலிலிருந்து இழுத்துக் கீழே தள்ளப்பட்டிருந்தன. அவனுடைய படுக்கைக்கு அருகிலிருந்த குட்டி அலமாரியின் இழுப்பறை வெளியே இழுக்கப்பட்டு அதிலிருந்த எல்லாம் மெத்தையின்மீது கொட்டப்பட்டிருந்தது.

ஹாரி திறந்த வாய் மூடாமல் தன்னுடைய படுக்கையை நோக்கிச் சென்றான். அப்போது அவன், ‘அரக்கப் பேயுடன் ஒரு பிரயாணம்’ புத்தகத்திலிருந்து கழன்று வெளியே வந்திருந்த ஒருசில பக்கங்களைத் தாண்டிக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது.

அவனும் நெவிலும் படுக்கை விரிப்புகளை அவனது மெத்தையின்மீது விரித்துக் கொண்டிருந்தபோது, ரான், டீன் தாமஸ், சீமஸ் ஆகிய மூவரும் உள்ளே வந்தனர். டீன் தாமஸ் சத்தமாகத் திட்டத் துவங்கினான்.

“ஹாரி, என்ன ஆயிற்று?”

“ஒன்றும் புரியவில்லை,” என்று ஹாரி கூறினான். ஆனால் ரான் ஹாரியின் அங்கியை ஆராய்ந்து கொண்டிருந்தான். அந்த அங்கியின் எல்லாப் பாக்கெட்டுகளும் வெளிப்புறமாகத் தொங்கிக் கொண்டிருந்தன.

“யாரோ எதையோ தேடியிருக்கின்றனர்,” என்று ரான் கூறினான் “ஏதாவது காணாமல் போயிருக்கிறதா என்று பாரேன்.”

ஹாரி தன்னுடைய பொருட்களைச் சேகரித்து அவற்றைத் தனது டிரங்குப் பெட்டிக்குள் தூக்கி எறிந்தான். அவன் லாக்ஹார்ட்டின் கடைசிப் புத்தகத்தை அதனுள் தூக்கி எறிந்தபோதுதான் எது காணாமல் போயிருந்தது என்பது அவனுக்கு உறைத்தது.

“நார்ட்டனின் நாட்குறிப்புப் புத்தகத்தைக் காணவில்லை.” என்று அவன் ரானிடம் மெதுவாகக் கூறினான்.

“என்ன சொன்னாய்?”

ஹாரி தன் தலையை வாசலை நோக்கி ஆட்டினான். அவர்கள் இருவரும் வேகமாக கிரிஃபின்டார் பொது அறைக்கு மீண்டும் வந்தனர். அது பாதி காலியாக இருந்தது. அங்கு அவர்கள் ஹெர்மயனியுடன் இணைந்து கொண்டனர். அவள் தனியாக உட்கார்ந்து கொண்டு, ‘சுலபமாக்கப்பட்டுள்ள பழங்காலச் சித்திர எழுத்துக்கள்’ என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள்.

செய்தியைக் கேள்விப்பட்டதும் ஹெர்மயனி அதிர்ச்சியால் வாயடைத்துப் போனாள்.

“ஆனால் இதை ஒரு கிரிஃபின்டார்தான் திருடியிருக்க வேண்டும் – நம்மைத் தவிர வேறு யாருக்கும் இந்த அறைக்கு வருவதற்கான நுழைவுச் சங்கேத வார்த்தை தெரியாது . . .”

“நீ சொல்வது சரிதான்,” என்று ஹாரி கூறினான்.


அதற்கு அடுத்த நாள் காலையில் அவர்கள் எழுந்தபோது சூரியன் அற்புதமாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. புத்துணர்வூட்டிய தென்றல் வீசிக் கொண்டிருந்தது.

“குவிடிச் விளையாட்டிற்கு ஏற்ற வானிலை,” என்று உட் உற்சாகமாகக் கூறினான். அவன் தன் அணியினரின் தட்டுகளில் முட்டை வறுவலைப் போட்டுக் கொண்டிருந்தான். “ஹாரி, நன்றாகச் சாப்பிடு. இன்று நாம் வெளுத்துக் கட்டலாம்!”

கூட்டமாக இருந்த கிரிஃபின்டார் அணியின் பெஞ்சை ஹாரி உற்றுப் பார்த்தான். நார்ட்டனின் நாட்குறிப்புப் புத்தகத்தின் புதிய சொந்தக்காரன் இங்கு தன் கண் முன்னாலேயே இருந்தானா என்று அவன் யோசித்தான். அத்திருட்டைப் பற்றி ஒரு புகார் கொடுக்குமாறு ஹெர்மயனி அவனை நச்சரித்துக் கொண்டிருந்தாள். ஆனால் ஹாரிக்கு அந்த யோசனை பிடிக்கவில்லை. அப்படிச் செய்தால் அவன் அந்த நாட்குறிப்புப் புத்தகத்தைப் பற்றிய எல்லா விஷயங்களையும் கூற வேண்டி வரும். ஐம்பது வருடங்களுக்கு பள்ளியில் இருந்து முன்பாக ஹாக்ரிட் எதற்காகப் வெளியேற்றப்பட்டார் என்பது எத்தனை ஆசிரியர்களுக்குத் தெரியும்? அதை மீண்டும் நடுச்சந்திக்குக் கொண்டு வருபவனாக அவன் இருக்க விரும்பவில்லை.

அவன் ரானுடனும் ஹெர்மயனியுடனும் பேரரங்கைவிட்டு வெளியே வந்து தன்னுடைய குவிடிச் பொருட்களை எடுத்துக் கொள்வதற்காகச் சென்று கொண்டிருந்தபோது, ஹாரியின் கவலைப் பட்டியலில் இன்னொரு முக்கியமான கவலையும் சேர்ந்து கொண்டது. பளிங்குப் படிக்கட்டில் அவன் தன் காலை வைத்தக் னத்தில் அக்குரல் அவனது காதுகளில் மீண்டும் ஒலித்தது. ‘இம்முறை கொன்றுவிட வேண்டும்,,,நான் குத்திக் கிழிக்கப் போகிறேன்…நான் குதறப் போகிறேன்…”

அவன் திடீரென்று சத்தமாகக் கத்தினான். ரானும் ஹெர்மயனியும் பயந்து போய்த் துள்ளிக் குதித்தனர்.

ஹாரி தன் தோளுக்கு மேலாகப் பார்த்துவிட்டு, “அதே குரல்” என்று கூறினான். “அதை நான் மீண்டும் கேட்டேன் – உங்களுக்கு எதுவும் கேட்கவில்லையா?”

வியப்பில் வாயைப் பிளந்தபடி ரான் இல்லையென்று தலையசைத்தான். ஆனால் ஹெர்மயனி தனது ஒரு கையைக் கொண்டு தன் நெற்றியில் படீரென்று அடித்தாள்.

“ஹாரி, எனக்கு ஒரு விஷயம் புரிந்துவிட்டது! நான் நூலகத்திற்கு உடனடியாகப் போயாக வேண்டும்!”

அவள் படிக்கட்டுகளில் தாவி ஏறி ஓடினாள்.

“அவளுக்கு என்ன புரிந்துள்ளதாம்?” என்று ஹாரி வெறுமனே கேட்டுவிட்டு, அந்தக் குரல் எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டுபிடிப்பதற்காகச் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தான்.

“கண்டிப்பாக என்னைவிடப் பல மடங்கு அதிகமாக அவளுக்குப் புரிந்திருக்கும்!” என்று ரான் தன் தலையை ஆட்டியபடி கூறினான்,

“ஆனால் அவள் எதற்காக நூலகத்திற்குப் போக வேண்டும்?”

ரான் தன் தோள்களைக் குலுக்கியவாறு, “ஏனெனில் அதுதான் ஹெர்மயனியின் வழக்கம்,” என்று கூறினான். “எதிலேனும் சந்தேகமா நூலகத்திற்கு ஓடு!”

ஹாரி அக்குரலை மீண்டும் கேட்பதற்காகக் குழப்பத்துடன் அங்கு நின்று கொண்டிருந்தான். ஆனால் இப்போது அவனுக்குப் பின்னால், பேரரங்கிலிருந்து மக்கள் சத்தமாகப் பேசிக் கொண்டு வெளியேறி, வாசலைக் கடந்து, குவிடிச் மைதானத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

“குவிடிச் போட்டிக்கு நீ இப்போதே கிளம்பினால்தான் சரியாக இருக்கும்,” என்று ரான் கூறினான். “மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருக்கிறது.”

ஹாரி படுவேகமாக கிரிஃபின்டார் கோபுரத்திற்கு ஓடி, தன்னுடைய நிம்பஸ் 2000 மந்திரத் துடப்பத்தை எடுத்துக் கொண்டு, விளையாட்டைப் பார்ப்பதற்காகப் படையெடுத்துக் கொண்டிருந்த கும்பலின் ஊடாகப் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருந்தான். ஆனால் அவனது மனம் இன்னும் அந்த உருவமற்றக் குரலையே சுற்றிக் கொண்டிருந்தது. உடை மாற்றும் அறையில் அவன் தங்கள் அணியின் ரத்தச் சிவப்புச் சீருடைக்கு மாறிக் கொண்டிருந்தபோது, அவனுக்கு இருந்த ஒரே ஆறுதல், விளையாட்டுப் போட்டியைப் பார்ப்பதற்காக மொத்தப் பள்ளியுமே மைதானத்தில் இருந்தது என்பதுதான்.

ஆரவாரக் கைதட்டல்களுக்கு இடையே விளையாட்டு வீரர்கள் ஒரு வட்டமடித்தான். பின் மேடம் ஹூச் பந்துகளை விடுவித்தார். மைதானத்திற்குள் நுழைந்தனர். உட் கோல்போஸ்ட்டுகளைச் சுற்றி வெளிறிய மஞ்சள் நிறச் சீருடை அணிந்திருந்த ஹஃபில்பஃப் குழுவினர் கடைசி நிமிடத் தந்திரோபாயத் திட்டம் ஒன்றிற்காகக் குழுமியிருந்தனர்.

ஹாரி தன்னுடைய மந்திரத் துடப்பத்தில் ஏற ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது, பேராசிரியர் மெக்கானகல், ஓட்டமும் நடையுமாக மைதானத்திற்குள் வந்து கொண்டிருந்தார். அவரது கையில் ஒரு பெரிய ஊதா வண்ண ஒலிபெருக்கி இருந்தது. ஹாரியின் இதயம் கனத்தது.

பேராசிரியர் மெக்கானகல் அங்கு கூடியிருந்த மக்களைப் பார்த்து, “இப்போட்டி ரத்து செய்யப்படுகிறது,” என்று அந்த ஒலிபெருக்கி கிளம்பின. மனமொடிந்து போன உட், வேகமாகக் கீழே பறந்து வந்து, மூலம் அறிவித்தார். அங்கு கத்தல்களும் எதிர்ப்புக் கோஷங்களும் தன் மந்திரத் துடப்பத்திலிருந்து கீழே இறங்காமலேயே பேராசிரியர் மெக்கானகல்லை நோக்கி விரைந்தான்.

“ஆனால் பேராசிரியரே!” என்று அவன் கத்தினான். “நாங்கள் விளையாட வேண்டும். கோப்பை . . . கிரிஃபின்டார்…”

பேராசிரியர் மெக்கானகல் அவனைக் கண்டுகொள்ளவே இல்லை. அவர் தொடர்ந்து ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்தார். “எல்லா மாணவர்களும் அவரவரது அணிகளின் பொது அறைகளுக்கு நேராகச் செல்லும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அங்கு உங்களுடைய குழுத் தலைவர்கள் உங்களுக்கு மேலும் தகவல்களை வழங்குவர். இப்போது தயவு செய்து எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இங்கிருந்து கலைந்து செல்லுங்கள்!”

பின் அவர் தன்னுடைய ஒலிபெருக்கியைத் தாழ்த்திக் கொண்டு, ஹாரியை நோக்கிச் சைகை காட்டினார்.

“ஹாரி, நீ என்னுடன் வா!”

இம்முறை அவரால் எப்படித் தன்னைச் சந்தேகிக்க முடியும் என்று அவன் வியந்து கொண்டிருந்தான். அவர்கள் கோட்டையை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ரான் அங்கிருந்த கூட்டத்தில் இருந்து விலகித் தங்களை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்ததை ஹாரி கண்டான். பேராசிரியர் மெக்கானகல் அதற்கு ஆட்சேபம் தெரிவிக்காதது ஹாரிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

“ரான், நீயும் எங்களுடன் வருவது நல்லதுதான்.”

அவர்களை மொய்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருசில மாணவர்கள், போட்டி ரத்து செய்யப்பட்டிருந்தது குறித்து முணுமுணுத்துக் கொண்டிருந்தனர். வேறு சிலர், கவலையோடு காணப்பட்டனர். ஹாரியும் ரானும் பேராசிரியர் மெக்கானகல்லைப் பின்தொடர்ந்து பள்ளிக்குள் நுழைந்து பளிங்கு மாடிப்படி வழியாக ஏறினர். ஆனால் இம்முறை, பேராசிரியர் மெக்கானகல், அவர்களை யாருடைய அலுவலகத்திற்கும் கூட்டிச் செல்லவில்லை.

அவர்கள் மூவரும் மருத்துவமனைப் பகுதியை அணுகிக் கொண்டிருந்தபோது, பேராசிரியர் மெக்கானகல், “இது உங்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடும்,” என்று அவர்கள் வியக்கும் விதத்தில் ஒரு மென்மையான குரலில் கூறினார். “மேலும் ஒரு தாக்குதல் நடந்துள்ளது … இம்முறை அது ஓர் இரட்டைத் தாக்குதல்”

ஹாரிக்கு வயிற்றைப் புரட்டிக் கொண்டு வந்தது. மருத்துவமனையின் கதவைத் திறந்து கொண்டு பேராசிரியர் மெக்கானகல் உள்ளே போனார். ரானும் ஹாரியும் கூடவே சென்றனர்.

மேடம் பாம்ஃபிரே, நீண்ட சுருள் முடியுடன் இருந்த ஓர் ரானும் ஹாரியும் கிராப் மற்றும் காயலின் உருவத்தில் இருந்தபோது ஆறாவது வருட மாணவியின் அருகே குனிந்து கொண்டிருந்தார். ஸ்லிதரின் பொது அறைக்குச் செல்வதற்கான வழியை ரேவன்கிளா அணியைச் சேர்ந்த எந்தச் மாணவியிடம் கேட்டனரோ, அவள்தான் இவள் என்பதை ஹாரி அடையாளம் கண்டுகொண்டான்.அவளுடைய படுக்கைக்கு அடுத்தப் படுக்கையில் –

“ஹெர்மயனி!” என்று ரான் கத்தினான்.

ஹெர்மயனி ஆடாமல் அசையாமல் படுத்திருந்தாள். அவளது கண்கள் திறந்திருந்தன. அவை கண்ணாடிபோல மினுமினுத்தன.

“அவர்கள் இருவரும் நூலகத்திற்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டனர்,” என்று பேராசிரியர் மெக்கானகல் தெரிவித்தார். “உங்களால் இதைப் பற்றி விவரிக்க முடியுமா? இது அவர்களுக்கு அருகே தரையில் கிடந்தது . . .”

அவர் தன் கையில் ஒரு சிறிய வட்ட வடிவக் கண்ணாடியை வைத்திருந்தார்.

ஹாரியும் ரானும் இல்லையென்று தங்கள் தலைகளை அசைத்தனர். அவர்கள் இருவரும் ஹெர்மயனியையே வெறித்துக் கொண்டிருந்தனர்.

“நான் உங்களுடன் கிரிஃபின்டார் கோபுரம்வரை துணைக்கு வருகிறேன்,” என்று பேராசிரியர் மெக்கானகல் கனத்த இதயத்துடன் கூறினார். “நான் எப்படியும் அங்கு இருக்கும் மாணவர்களிடம் ஒருசில விஷயங்களைக் கூற வேண்டியுள்ளது.”


“எல்லா மாணவர்களும் மாலை ஆறு மணிக்குள் அவரவர்களுடைய அணிகளின் பொது அறைகளுக்கு வந்து சேர்ந்துவிட வேண்டும். அதன் பிறகு எவரும் பொது அறைகளைவிட்டு வெளியே செல்லக்கூடாது. உங்களுடைய ஒவ்வொரு வகுப்பிற்கும் உங்களை ஓர் ஆசிரியர் வந்து அழைத்துச் செல்வார். அடுத்து நடக்கவிருக்கும் அனைத்துக் குவிடிச் போட்டிகளும் ஒத்தி வைக்கப்படுகின்றன. இனி மாலை நடவடிக்கைகள் எதுவும் இருக்காது.”

கிரிஃபின்டார் பொது அறையில் நெருக்கியடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தவர்கள் அவருடைய பேச்சை மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர் அவற்றை ஒரு தோல் காகிதம் ஒன்றிலிருந்து படித்துக் கொண்டிருந்தார். அவர் அதைச் சுருட்டிக் கொண்டே, தொண்டை அடைக்க, “நான் இவ்வளவு துயரத்துடன் ஒருபோதும் இருந்ததில்லை என்பதைத் தனியாக எடுத்துக்கூற வேண்டியதில்லை. இதற்குப் பின்னால் உள்ள கயவன் பிடிபடாவிட்டால், இப்பள்ளி இழுத்து மூடப்பட்டுவிடும். இது குறித்து யாருக்காவது ஏதாவது தெரிந்தால் அவர்கள் அதைத் தெரிவிக்க முன்வருமாறு அவர்களை நான் அழைக்கிறேன்,” என்றார்.

அவர் அந்த ஓவியத் துளை வழியாகத் தட்டுத் தடுமாறி வெளியே சென்ற உடனேயே கிரிஃபின்டார் அணியினர் தங்களுக்குள் சலசலவெனப் பேசிக் கொள்ளத் துவங்கினர்.

“அப்படியானால் இதுவரை தாக்கப்பட்டிருப்பவர்களில் மூன்று பேர் கிரிஃபின்டார் அணியைச் சேர்ந்தவர்கள் – கிரிஃபின்டார் ஆவியான நிக் தனிக் கணக்கு – ஒருவர் ரேவன்கிளா உறுப்பினர், ஒருவர் ஹஃபில்பஃப் உறுப்பினர்,” என்று வீஸ்லீ இரட்டையர்களின் நண்பனான லீ ஜோர்டன் தன் விரல்களை மடக்கி எண்ணிக் கொண்டே கூறினான். “ஸ்லிதரின் அணியினர் எவருமே தாக்கப்படாமல் இருப்பதை எந்தவோர் ஆசிரியராவது கவனித்திருக்கிறாரா? ஸ்லிதரினின் வாரிசு, ஸ்லிதரினின் ராட்சஸ விலங்கு என்று, இவை எல்லாமே ஸ்லிதரின் அணியிலிருந்துதான் வருகின்றன என்பது தெள்ளத் தெளிவாகத் தெரியவில்லையா? அவர்கள் ஏன் ஒட்டுமொத்தமாக ஸ்லிதரின் அணியினர் எல்லோரையும் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளக்கூடாது?” என்று அவன் முழங்கினான். அவன் கூறியதை ஆமோதித்துப் பலர் தங்களுடைய தலைகளை அசைத்தனர், ஆங்காங்கே கைதட்டல்களும் கேட்டன.

பெர்சி, ஜோர்டனுக்குப் பின்னால் இருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். அவன் தன் கருத்தை ஒருமுறைகூட வெளியே சொல்லவில்லை. அவனது முகம் வெளுத்துப் போயிருந்தது; அவன் நிலைகுலைந்து போயிருந்தான்.

“அவன் அதிர்ச்சியில் இருக்கிறான்,” என்று ஜார்ஜ் ஹாரியிடம் மெதுவாகக் கூறினான். “அந்த ரேவன்கிளா பெண் பெனலோப் கிளியர்வாட்டர் – ஒரு மாணவ அணித் தலைவி. ஒரு மாணவ அணித் தலைவனோ அல்லது தலைவியோ தாக்கப்படுவார்கள் என்று பெர்சி எதிர்பார்த்திருக்கவில்லை என்று நான் நினைக்கிறேன்.”

ஆனால் ஹாரி அவன் கூறியதை அரைகுறையாகத்தான் கேட்டுக் கொண்டிருந்தான். ஹெர்மயனி ஒரு கற்சிலைபோல மருத்துவமனையில் படுத்திருந்த காட்சியை அவனால் தன் மனத்திலிருந்து களைந்தெறிய முடியவில்லை. குற்றவாளி சீக்கிரமாகப் பிடிபடவில்லை என்றால் அவன் மீண்டும்டர்ஸ்லீ தம்பதியினருடன் தான் காலம் தள்ள வேண்டி வரும். பள்ளி மூடப்பட்டால் தான் அனாதை விடுதிக்குச் செல்ல நேரிடும் என்ற காரணத்தினால் நார்ட்டன் ஹாக்ரிட்டைப் பிடித்துக் கொடுத்திருந்தான். நார்ட்டனின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை ஹாரியால் இப்போது நன்றாகவே உணர முடிந்தது.

“நாம் இப்போது என்ன செய்யப் போகிறோம்?” என்று ரான் ஹாரியின் காதில் கிசுகிசுத்தான். “அவர்கள் ஹாக்ரிட்டைச் சந்தேகிக்கிறார்கள் என்று நீ நினைக்கிறாயா?”

ஹாரி ஒரு தீர்மானத்திற்கு வந்தவனாக, “நாம் ஹாக்ரிட்டிடம் போய்ப் பேசலாம்,” என்று கூறினான். “இம்முறை அது அவராக இருக்காது என்று நான் நம்புகிறேன். ஆனால் கடந்த முறை அவர் அந்த ராட்சஸ விலங்கைத் திறந்துவிட்டிருந்தார் எனில், ரகசியங்கள் அடங்கிய அறைக்குள் எப்படிப் போவது என்பது அவருக்குத் தெரிந்திருக்கும். அது ஒரு தொடக்கமாக இருக்கும்.”

“ஆனால் வகுப்பு நேரம் தவிர மற்ற எல்லாச் சமயங்களிலும் நாம் நமது பொது அறையில்தான் இருக்க வேண்டும் என்று பேராசிரியர் மெக்கானகல் கூறியிருக்கிறாரே? -”

“என் அப்பாவின் பழைய மறைய வைக்கும் அங்கியை வெளியே எடுப்பதற்கான வேளை வந்துவிட்டது,” என்று ஹாரி கூறினான். அவனது முகம் இறுகிப் போயிருந்தது.


ஹாரி தன் தந்தையிடம் இருந்து ஒன்றே ஒன்றை மட்டும்தான் சுவீகரித்திருந்தான். அது ஒரு நீண்ட, மிருதுவான, மறைய வைக்கும் அங்கி. வேறு யாருக்கும் தெரியாமல் ஹாக்ரிட்டைப் போய்ப் பார்க்க அவர்களுக்கு இருந்த ஒரே வழி அதுதான். அவர்கள் இருவரும் வழக்கமான நேரத்தில் படுக்கைக்குச் சென்றனர். பிறகு நெவில், டீன் தாமஸ், சீமஸ் ஆகிய மூவரும் ரகசியங்கள் அடங்கிய பாதாள அறை குறித்து விவாதிப்பதை நிறுத்திவிட்டுக் கடைசியில் ஒருவழியாகத் தூங்கச் செல்வதற்காக அவர்கள் காத்திருந்தனர். பிறகு, ஹாரியும் ரானும் தங்கள் உடைகளை மாற்றிக் கொண்டு, அந்த மறைய வைக்கும் அங்கியைத் தங்கள் தலைகளையும் உடல்களையும் சுற்றிப் போர்த்திக் கொண்டனர்.

இருண்ட தாழ்வாரங்களின் ஊடாக நடந்து சென்றது ரசிக்கும்படியாக இருக்கவில்லை. ஹாரி இதற்கு முன்பு பல முறை இரவு வேளைகளில் கோட்டையில் அலைந்திருந்தான். ஆனால் அந்தி சாய்ந்த பிறகு தாழ்வாரங்களில் இவ்வளவு கூட்டத்தை அவன் ஒருபோதும் பார்த்திருக்கவில்லை. ஏதேனும் அசாதாரணமான நடவடிக்கைகள் நிகழ்ந்தனவா என்று பார்ப்பதற்காக ஆசிரியர்களும் மாணவ அணித் தலைவர்களும் ஆவிகளும் ஜோடி ஜோடியாக ரோந்து சுற்றிக் கொண்டிருந்தனர். ரானும் ஹாரியும் ஏதாவது சத்தம் போட்டால், மறைய வைக்கும் அங்கியால் அதைத் தடுத்து நிறுத்த முடியாது. ஸ்னேப் காவல் காத்துக் கொண்டிருந்த ஓரிடத்தில் ரான் தன்னுடைய கால்விரலை இடித்துக் கொண்டபோது, அவர்கள் பதற்றமடைந்தனர். நல்ல வேளையாக, ரான் தன்னைத் தானே திட்டிக் கொண்ட அந்த கணத்தில் ஸ் ஒரு தும்மல் போட்டார் அவர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, ஒருவழியாக முன்வாசல் கதவை அடைத்து, அதை மெதுவாகத் திறந்தனர்.

அன்று வானம் தெளிவாக நட்சத்திரங்களுடன் இருந்தது. சன்னல் வழியாக வெளிச்சம் வந்து கொண்டிருந்த ஹாக்பிட்டின் குடிலை நோக்கி அவர்கள் விரைந்தனர். அவரது குடிலின் முன்வாசல் கதவை அடைந்த பிறகுதான் மறைய வைக்கும் அங்கியை அவர்கள் சுழற்றினர்.

அவர்கள் அக்கதவைத் தட்டிய சில கணங்களுக்குப் பிறகு ஹாக்ரிட் அதைத் திறந்தார். நாணேற்றப்பட்டிருந்த ஒரு வில்லை அவர் அவர்களுடைய முகத்திற்கு நேராக நீட்டிக் கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் அவருடைய வேட்டை நாயான ஃபேங் பலமாகக் குரைத்துக் கொண்டிருந்தது.

“ஓ!” என்று கூறியவாறு அவர் தன்னுடைய ஆயுதத்தைக் கீழே இறக்கினார். பிறகு அவர்களை உற்றுப் பார்த்துக் கொண்டே, “நீங்கள் இருவரும் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

அவர்கள் உள்ளே சென்றதும், ஹாரி, ஹாக்ரிட்டின் வில்லைச் சுட்டிக்காட்டி, “அது எதற்காக!” என்று கேட்டான்.

“ஒன்றுமில்லை ஒன்றுமில்லை . .” என்று ஹாக்ரிட் முணுமுணுத்தார். “நான் – நான் – வேறு யாரையோ எதிர்பார்த்துக் . அதை விட்டுத் தள்ளு . . உட்காருங்கள் . நான் தேநீர் தயாரிக்கிறேன்..”

அவர் நடந்து கொண்ட விதம், தான் என்ன செய்து கொண்டிருந்தோம் என்று தனக்கே தெரியவில்லை என்பதுபோல இருந்தது. கெட்டிலில் இருந்த நீரை அடுப்பில் கொட்டி, அவர் அந்த அடுப்பை அணைத்தார். பிறகு, நடுக்கத்துடன் இருந்த தனது பிரம்மாண்டமான கைகளைக் கொண்டு அந்தக் கெட்டிலை நொறுக்கினார்.

“ஹாக்ரிட், உங்களுக்கு ஏதேனும் பிரச்சனையா?” என்று ஹாரி கேட்டான். “நீங்கள் ஹெர்மயனி பற்றிக் கேள்விப்பட்டீர்களா?”

“ஆமாம், கேள்விப்பட்டேன்,” என்று ஹாக்ரிட் கூறினார். அவரது குரல் உடைந்திருந்தது.

அவர் பதற்றத்துடன் சன்னல் வழியாக அடிக்கடி வெளியே பார்த்துக் கொண்டிருந்தார். அவர்களுடைய பெரிய டம்ளர்களில் தேநீர் பாக்கெட்டுகளைப் போடாமலேயே அவற்றில் அவர் வெந்நீரை ஊற்றினார். அவர் ஒரு கேக்கை ஒரு தட்டில் போட்டுக் கொண்டிருந்தபோது, வாசல் கதவு பலமாகத் தட்டப்பட்டச் சத்தம் கேட்டது.

ஹாக்ரிட் அந்தக் கேக்கை கீழே போட்டார். ஹாரியும் ரானும் பெரும் அச்சத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்தனர். பிறகு, மறைய வைக்கும் அங்கியை அவர்கள் தங்கள்மீது போர்த்திக் கொண்டு ஒரு மூலைக்குச் சென்றனர். அவர்கள் பாதுகாப்பாக இருந்ததை உறுதி செய்து கொண்ட ஹாக்ரிட், தன் வில்லை எடுத்துக் கொண்டு வாசற்கதவை விரியத் திறந்தார்.

“ஹாக்ரிட், மாலை வணக்கம்!”

அங்கு வந்திருந்தது டம்பிள்டோர். அவர் ஹாக்ரிட்டின் குடிலுக்குள் நுழைந்தார். அவர் கடுமையான முகபாவத்துடன் இருந்தார். அவரைத் தொடர்ந்து மிக மிக வித்தியாசமாகக் காட்சியளித்த மனிதர் ஒருவரும் உள்ளே நுழைந்தார்.

அந்த அன்னியர் குள்ளமாகவும் குண்டாகவும் இருந்தார். அவருடைய வெள்ளை நிறத் தலைமுடி கலைந்து கிடந்தது. அவரது வண்ணக் கலவையில் உடையணிந்திருந்தார். ஒரு சூட், ரத்தச் சிவப்பு நிறத்தில் ஒரு டை, ஒரு நீண்ட கருப்பு அங்கி, கூராக இருந்த ஊதா நிறக் காலணி ஆகியவை அவரை அலங்கரித்தன. பசுமை கலந்த மஞ்சள் நிறத்தில் இருந்த தன்னுடைய வட்ட வடிவத் தொப்பியை அவர் தன்னுடைய கைக்கு அடியில் இடுக்கிக் கொண்டிருந்தார்.

“அது என் அப்பாவின் மேலதிகாரி,” என்று ரான் கிசுகிசுத்தான். “கார்னிலியஸ் ஃபட்ஜ். மந்திரஜால அமைச்சர்.”

அவனை வாயை மூடிக் கொண்டிருக்கும்படி ஹாரி தன் முழங்கையால் பலமாக இடித்தான்.

ஹாக்ரிட்டின் முகம் பேயறைந்தாற்போலக் காணப்பட்டது. அவருக்கு வியர்த்துக் கொட்டியது. அவர் ஒரு நாற்காலியில் தொப்பென்று அமர்ந்து கொண்டு, அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார்.

“ஹாக்ரிட், நிலைமை மோசமாகப் போய்விட்டது,” என்று ஃபட்ஜ் அதிகாரமாகக் கூறினார். “நிலைமை உண்மையிலேயே மிகமிக மோசமாகப் போய்விட்டதால் நானே நேரில் இங்கு வர வேண்டியதாயிற்று. மகுள்களுக்குப் பிறந்த நான்கு பேரின்மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதால் மந்திரஜால அமைச்சகம் நேரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.”

ஹாக்ரிட் டம்பிள்டோரை மன்றாடும் நோக்கில் பார்த்துக் கொண்டே, “நான் ஒருபோதும் என்று தடுமாறினார். “பேராசிரியரே, உங்களுக்கு நன்றாகவே தெரியும். நான் ஒருபோதும் அதைச் செய்யவில்லை!”

டம்பிள்டோர் ஃப்ட்ஜை நோக்கித் தன் புருவத்தை உயர்த்தியவாறு, “ஹாக்ரிட்மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது என்பதை நான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்,” என்று கூறினார்.

ஃபட்ஜ் அசௌகரியமாக உணர்ந்தவாறே, “டம்பிள்டோர், இங்கே பாருங்கள்,” என்று துவக்கினார். “ஹாக்ரிட்டின் கடந்தகால நடவடிக்கைகள் அவருக்கு எதிராக இருக்கின்றன. என் அமைச்சகம் ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டும். பள்ளியின் நிர்வாகக் குழு என்னுடன் தொடர்பு கொண்டுள்ளது.”

“என்ன, மீண்டுமா? ஹாக்ரிட்டை அப்புறப்படுத்துவது எந்த விதத்திலும் பிரயோஜனப்படாது,” என்று டம்பிள்டோர் கூறினார். அவரது நீல நிறக் கண்கள் அனலைக் கக்கிக் கொண்டிருந்தன. ஹாரி அவரை அப்படி ஒருபோதும் பார்த்ததில்லை.

ஃபட்ஜ் தன்னுடைய தொப்பியை நோண்டியவாறே, “இதை என்னுடைய கோணத்திலிருந்து பாருங்கள்,” என்று கூறினார். “அவர்கள் என்னை நெருக்குகின்றனர். நான் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

“அது ஹாக்ரிட் இல்லை என்று முடிவாகிவிட்டால், அவர் திரும்பி வந்துவிடுவார். அதைப் பற்றி மேலே எதுவும் பேசப்படாது. ஆனால் அவரை நான் கூட்டிச் சென்றுதான் ஆக வேண்டும். கண்டிப்பாக நான் அதைச் செய்துதான் ஆக வேண்டும். நான் என் கடமையைச் செய்ய நடுங்கிக் கொண்டிருந்த ஹாக்ரிட், “என்னைக் கூட்டிச் செல்லப் போகிறீர்களா?” என்று கேட்டார். “என்னை எங்கே கூட்டிச் செல்லப் போகிறீர்கள்?”

ஃபட்ஜ் ஹாக்ரிட்டின் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தவாறே, ‘அருகில்தான்,” என்று கூறினார். “தண்டனையாக இல்லை, முன்னெச்சரிக்கையாக. வேறு யாராவது பிடிக்கப்பட்டுவிட்டால், நீங்கள் எங்களுடைய மனமார்ந்த மன்னிப்புடன் விடுவிக்கப்படுவீர்கள்…”

“அஸ்கபானுக்கு இல்லையே?” என்று ஹாக்ரிட் நம்பிக்கை இழந்த குரலில் கேட்டார்.

ஃபட்ஜ் அதற்கு பதிலளிக்கும் முன்பாக வாசற்கதவு மீண்டும் பலமாகத் தட்டப்பட்டது.

டம்பிள்டோர் போய்க் கதவைத் திறந்தார். இப்போது முழங்கையால் இடி வாங்கியது ஹாரி. அவன் கொஞ்சம் சத்தமாகவே முனகினான்.

லூசியஸ் மால்ஃபாய் ஹாக்ரிட்டின் குடிலுக்குள் வந்து கொண்டிருந்தார். பயணங்களின்போது அணிவதற்கான நீண்ட கருப்பு நிற அங்கி ஒன்றை அவர் அணிந்திருந்தார். அவரது உதடுகளில் ஒரு குரூரமான, திருப்தியான புன்னகை படர்ந்திருந்தது. ஃபேங் உறுமியது. “ஃபட்ஜ், நீங்கள் இங்கு ஏற்கனவே வந்துவிட்டீர்களா?” என்று அவர் ஆமோதிக்கும் விதமாகக் கேட்டார். “நல்லது, நல்லது

“நீங்கள் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று ஹாக்ரிட் கொதிப்புடன் கேட்டார். “என் வீட்டிலிருந்து வெளியே போங்கள்!”

லூசியஸ் அந்தச் சிறிய குடிலை இகழ்ச்சி ததும்பப் பார்த்துக் கொண்டே, “இதை என்னவென்று அழைத்தாய் – வீடு என்றா? என்னை நம்பு, எனக்கு மட்டும் இங்கு வர ஆசையா என்ன?” என்று கேட்டார். “நான் பள்ளிக்குத்தான் வந்தேன். ஆனால் தலைமையாசிரியர் இங்கு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.”

“என்னிடம் உங்களுக்கு என்ன வேலை?” என்று டம்பிள்டோர் கேட்டார். அவர் மரியாதையுடன்தான் பேசினார், ஆனால் அவரதுநீல நிறக் கண்களில் இன்னும் அனல் பறந்து கொண்டிருந்தது.

லூசியஸ் ஒரு தோல் காகிதத்தை விரித்தவாறு, “டம்பிள்டோர், இது ஒன்றும் மகிழ்ச்சியான வேலை அல்ல,” என்று விட்டேத்தியாகக் கூறினார். “நீங்கள் உங்கள் பதவியிலிருந்து விலகிக் கொள்வதற்கான வேளை வந்துவிட்டது என்று பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர். இது உங்களுடைய தற்காலிக உறுப்பினர்களின் கையெழுத்துக்களும் இருக்கின்றன. நீங்கள் வேலை நீக்க உத்தரவு. இதில் குழுவில் உள்ள பன்னிரண்டு உங்களுடைய பிடிமானத்தை இழந்துவிட்டீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இதுவரை எத்தனைத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன? இன்று மாலையில் மட்டும் இரண்டு தாக்குதல்கள், சரிதானே? இந்த வேகத்தில் போனால், விரைவில் ஹாக்வார்ட்ஸில் மகுள்களுக்குப் பிறந்தவர்கள் யாருமே படித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அது பள்ளிக்கு எவ்வளவு கடுமையான இழப்பை ஏற்படுத்தும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.”

“லூசியஸ், இங்கே பாருங்கள்,” என்று ஃபட்ஜ் கூறினார். அவர் கலவரமடைந்திருந்தார். “என்ன சொன்னீர்கள்? டம்பிள்டோரை வீட்டுக்கு அனுப்புவது என்றா? வேண்டாம், வேண்டாம்! இப்போது இருக்கும் களேபரச் சூழலில் இதுவும் சேர்ந்து கொள்ள வேண்டாம்…”

“ஃபட்ஜ், பள்ளித் தலைமையாசிரியரின் நியமனமும் நீக்கலும் பள்ளி நிர்வாகக் குழுவின் பொறுப்பு,” என்று லூசியஸ் கூறினார். “டம்பிள்டோர் இத்தாக்குதல்களை நிறுத்தத் தவறிவிட்டக் காரணத்தால்

“லூசியஸ், இங்கே பாருங்கள், இந்தத் தாக்குதல்களை டம்பிள்டோராலேயே நிறுத்த முடியாவிட்டால், அவற்றை வேறு யாராலும் நிறுத்த முடியாது,” என்று ஃபட்ஜ் கூறினார். இப்போது அவரது மேலுதடுகளில் வியர்வை அரும்பியிருந்தது.

“அதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்,” என்று லூசியஸ் குரூரமான புன்னகையுடன் கூறினார். “ஆனால் இப்போது நாங்கள் பன்னிரண்டு பேரும் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளோம் . . ”

ஹாக்ரிட் துள்ளி எழுந்தார். அவரது கரடுமுரடான தலைமுடி மேற்கூரையைத் தொட்டுக் கொண்டிருந்தது.

“லூசியஸ், இதில் கையெழுத்துப் போட அவர்களை ஒப்புக் கொள்ள வைக்க அவர்களில் எத்தனைப் பேரை நீங்கள் மிரட்டவும் அச்சுறுத்தவும் வேண்டியிருந்தது?”

“கொஞ்சம் அடக்கி வாசி, ஹாக்ரிட்! உன்னுடைய இந்தக் கோபம்தான் ஒருநாள் உனக்கு எமனாக வந்து வாய்க்கப் போகிறது,” என்று லூசியஸ் கொக்கரித்தார். “அஸ்கபான் காவலாளிகளைப் பார்த்து நீ இப்படிக் கத்தாமல் இருப்பது நல்லது என்று நான் உனக்கு அறிவுரை கூற விரும்புகிறேன். அவர்கள் இதைச் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.”

“நீங்கள் டம்பிள்டோரை வெளியேற்றக்கூடாது,” என்று ஹாக்ரிட் கத்தினார். அவரது ஆக்ரோஷத்தைப் பார்த்து ஃபேங் தன்னுடைய கூடைக்குள் பம்மிப் பதுங்கிக் கொண்டது. “அவரை அப்புறப்படுத்திவிட்டால், மகுள்களுக்குப் பிறந்தவர்களுக்கு எந்தவிதப் பாதுகாப்பும் இருக்காது. அடுத்துக் கண்டிப்பாகப் பல தலைகள் உருளும்!”

“ஹாக்ரிட், உன்னைக் கொஞ்சம் சாந்தப்படுத்திக் கொள்,” என்று டம்பிள்டோர் உறுதியாகக் கூறினார். பின்னர் அவர் லூசியஸ் பக்கம் திரும்பினார்.

“லூசியஸ், பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நான் விலக வேண்டும் என்று விரும்பினால், நான் விலகிக் கொள்கிறேன்.”

“ஆனால் –” என்று ஃபட்ஜ் தடுமாறினார்.

“முடியாது,” என்று ஹாக்ரிட் இரைந்தார்.

லூசியஸின் ஜீவனற்றச் சாம்பல் நிறக் கண்களிலிருந்து டம்பிள்டோர் தன்னுடைய பிரகாசமான நீல நிறக் கண்களை அகற்றவேயில்லை.

“ஆனால்,” என்று டம்பிள்டோர் தொடர்ந்தார். கேட்டுக் கொண்டிருந்தவர்கள் தனது வாயிலிருந்து வெளிப்பட்ட ஒவ்வொரு வார்த்தையையும் தவறாமல் கேட்கும் விதத்தில் அவர் மிக மெதுவாகவும் தெளிவாகவும் பேசினார். “இங்கு இருப்பவர்கள் என்மீது வைத்துள்ள விசுவாசத்தை நான் இழக்கும்போதுதான் நான் இப்பள்ளியிலிருத்து உண்மையிலேயே விலகியிருப்பேன். அதோடு, இங்கு ஹாக்வார்ட்ஸில், உதவி கேட்பவர்களுக்குக் கண்டிப்பாக உதவி கிடைக்கும் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.”

ஒருசில கணங்களுக்கு டம்பிள்டோரின் கண்கள் தாங்கள் ஒளிந்திருந்த மூலையை நோக்கி மின்னியதாக ஹாரி உறுதியாக நம்பினான்.

“போற்றப்பட வேண்டிய உணர்வுகள்,” என்று கூறி லூசியஸ் தலை வணங்கினார். “நாங்கள் எல்லோருமே உங்களுடைய – ம்ம் – உங்களது தனித்துவமான தலைமைத்துவத்தை என்றுமே மறக்க மாட்டோம். டம்பிள்டோர், உங்களுக்கு அடுத்ததாக வருபவர் கொலைகளைத் தடுத்து நிறுத்துவார் என்று –”

அவர் அக்குடிலின் வாசற்கதவை திறந்து, டம்பிள்டோரைப் பார்த்து மீண்டும் தலை வணங்கி, அவரை வெளியே வழியனுப்பி வைத்தார். தன்னுடைய தொப்பியை நோண்டிக் கொண்டிருந்த ஃபட்ஜ், ஹாக்ரிட் தனக்கு முன்னால் செல்வதற்காகக் காத்திருந்தார். ஆனால் ஹாக்ரிட் தான் இருந்த இடத்தைவிட்டு அசையவில்லை. அவர் ஆழமாக ஒரு முறை சுவாசித்துவிட்டு, கவனமாக, “யாராவது எதையாவது கண்டுபிடிக்க விரும்பினால், அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் சிலந்திப் பூச்சிகளைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டும், அவ்வளவுதான். அது அவர்களைத் தாங்கள் விரும்பும் இடத்திற்குக் கொண்டு சேர்க்கும். நான் கூற வேண்டிய எல்லாவற்றையும் நான் கூறிவிட்டேன்,” என்று கூறினார்.

ஃபட்ஜ் அவரை வியப்புடன் பார்த்தார்.

ஹாக்ரிட், மிருதுவான விலங்குத் தோலால் செய்யப்பட்டிருந்த தன்னுடைய மேலங்கியை எடுத்துக் கொண்டு, “சரி, நான் வருகிறேன்” என்று கூறினார். அவர் ஃபட்ஜைப் பின்பற்றி வாசற்கதவை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது மீண்டும் ஒரு முறை நின்றார். பிறகு, “நான் இல்லாதிருக்கும் சமயத்தில் யாராவது ஃபேங்கைக் கவனித்துக் கொள்ள வேண்டும்,” என்று சத்தமாகக் கூறினார்.

வாசற்கதவு அறைந்து சாத்தப்பட்டது. ரான் மறைய வைக்கும் அங்கியை உருவினான்.

“நாம் இப்போது பெரும் பிரச்சனையில் மாட்டிக் கொண்டுள்ளோம்,” என்று அவன் கம்மிய குரலில் கூறினான். “டம்பிள்டோர் கிடையாது. இதற்குப் பதிலாக அவர்கள் இப்பள்ளியையே இழுத்து மூடியிருக்கலாம். அவர் இல்லையென்றால் தினம் ஒரு தாக்குதல் நடைபெறும்.”

மூடியிருந்த வாசற்கதவைப் பிராண்டியவாறு ஃபேங் ஊளையிடத் துவங்கியது.

– தொடரும்…

– ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும், மூலம்: ஜே.கே.ரோலிங், தமிழில்: பி.எஸ்.வி.குமாரசாமி, முதற் பதிப்பு: 2013, மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், மும்பை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *