ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: புனைவு
கதைப்பதிவு: September 30, 2025
பார்வையிட்டோர்: 101 
 
 

(2013ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10

7. ஈன ரத்தப் பரம்பரை

அடுத்த சில நாட்களாக, தாழ்வாரங்களில் லாக்ஹார்ட் தனக்கு எதிரே வந்து கொண்டிருந்ததைத் தான் கண்டபோதெல்லாம், ஹாரி, அவரது பார்வையில் படாமல் தப்பிக்க நிறைய நேரத்தைச் செலவழித்தான். ஆனால் காலினை அவனால் தவிர்க்க முடியவில்லை. காலின் ஹாரியின் வகுப்பு அட்டவணையை மனப்பாடம் செய்து வைத்திருந்ததுபோலத் தோன்றியது. ஒவ்வொரு நாளும் ஏழெட்டு முறையாவது அவன் ஹாரியைப் பார்த்து, “ஹலோ ஹாரி,” என்று கூறிவிட்டு, பதிலுக்கு ஹாரி, “ஹலோ, காலின்,” என்று கூறுவதைக் கேட்பதைவிடப் பெரிய குதூகலம் அவனுக்கு வேறு எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை – ஹாரியின் குரல் எவ்வளவு சுரத்தின்றி ஒலித்தபோதிலும்கூட!

பெரும் அசம்பாவிதத்தில் முடிந்த கார் பயணம் குறித்து ஹாரியின்மீது ஹெட்விக்கிற்கு இருந்த கோபம் இன்னும் தணிந்திருக்கவில்லை. ரானின் மந்திரக்கோல் இன்னும் தகராறு பண்ணிக் கொண்டிருந்தது. அதன் உச்சகட்டமாக, வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற வசிய வகுப்பின்போது, அவனது மந்திரக்கோல் அவனது கையைவிட்டு எகிறி, சிறிய உருவத்தைக் கொண்டிருந்த, வயதான பேராசிரியரான ஃபிளிட்விக்கின் புருவ மத்தியில் போய் நேராகத் தாக்கியது. அது தாக்கிய இடத்தில், அவருக்குப் பச்சை நிறத்தில் ஒரு பெரிய புடைப்பு ஏற்பட்டது. இப்படி ஒன்று மாற்றி ஒன்றாக நடந்து கொண்டிருந்ததால், வார இறுதி விரைவாக வந்தது குறித்து ஹாரி சந்தோஷமடைந்தான். அவனும் ரானும் ஹெர்மயனியும் சனிக்கிழமை காலையில் ஹாக்ரிட்டைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அன்று காலையில் ஹாரி எழுந்து கொள்ள விரும்பிய நேரத்திற்குப் பல மணிநேரத்திற்கு முன்பாகவே, கிரிஃபின்டார் குவிடிச் அணித் தலைவனான ஆலிவர் உட் அவனை உலுக்கி எழுப்பினான்.

“என்ன விஷயம்?” என்று ஹாரி தூக்கக் கலக்கத்துடன் கேட்டான்.

“குவிடிச் பயிற்சி,” என்று உட் கூறினான். “எழுந்து வா!”

ஹாரி பாதிக் கண்களைத் திறந்து சன்னல் வழியாக வெளியே பார்த்தான். பொன்னிற வானத்தை மூடுபனி போர்த்தியிருந்தது. இப்போது அவனுக்கு நன்றாக விழிப்பு வந்திருந்தது. பறவைகள் போட்டுக் கொண்டிருந்த பலத்தக் கூச்சல்களுக்கு இடையே தான் எப்படி இப்படித் தூங்கிக் கொண்டிருந்தோம் என்று அவன் வியந்தான்.

“உட், இன்னும் விடியவே இல்லை,” என்று ஹாரி கூறினான்.

“நீ கூறுவது சரிதான்,” என்று உட் தெரிவித்தான். உயரமாகவும் வாட்டசாட்டமாகவும் இருந்த ஆறாவது வருட மாணவனான கண்கள் து அவனது அளப்பரிய ஆர்வத்தால் ஜொலித்துக் கொண்டிருந்தன. “நம்முடைய புதிய பயிற்சித் திட்டத்தின் ஓர் அங்கம் இது. உன் மந்திரத் துடப்பத்தை எடுத்துக் கொள், கிளம்பலாம். மற்ற அணிகள் எதுவும் இன்னும் பயிற்சியைத் துவக்கியிருக்கவில்லை. இவ்வருடம் நாம்தான் முதலில் பயிற்சியைத் துவக்கப் போகிறோம்.”

குளிரில் லேசாக நடுங்கிக் கொண்டும் கொட்டாவி விட்டுக் கொண்டும் ஹாரி தன் படுக்கையிலிருந்து இறங்கித் தன் குவிடிச் அங்கியைத் தேடத் துவங்கினான்.

“ஹாரி, இன்னும் பதினைந்து நிமிடங்களில் விளையாட்டு மைதானத்தில் நான் உன்னைச் சந்திக்கிறேன்,” என்று உட் கூறினான்.

ஹாரி தன்னுடைய ரத்தச் சிவப்பு அங்கியைத் தேடி எடுத்து அணிந்து கொண்டு, தான் செல்லவிருந்த இடத்தை விவரித்து ரானுக்கு ஒரு குறிப்பு எழுதி வைத்துவிட்டு, தனது நிம்பஸ் 2000 மந்திரத் துடப்பம் தோளில் தொங்க, சுழல் படிக்கட்டுகள் வழியாக இறங்கிப் பொது அறைக்கு விரைந்தான். அவன் அந்த ஓவியத் துவாரத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது பின்னால் ஒரு சலசலப்புச் சத்தம் கேட்டது. தன் கழுத்தில் கேமராவைத் தொங்கப் போட்டுக் கொண்டு காலின் சுழல் படிக்கட்டில் இருந்து வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தான். தனது கையில் அவன் எதையோ இறுகப் பற்றியிருந்தான்.

“யாரோ உன்னுடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட்டதை நான் கேட்டேன். ஹாரி, என் கையில் என்ன இருக்கிறது என்று பார்! நான் இதை உன்னிடம் காட்ட விரும்புகிறேன்

காலின் தன் மூக்கிற்கு அருகே ஆட்டிக் கொண்டிருந்த புகைப்படத்தை ஹாரி திகைப்புடன் பார்த்தான்.

அந்தக் கருப்பு-வெள்ளைப் புகைப்படத்தில், லாக்ஹார்ட் ஏதோ ஒரு கையைப் பிடித்துக் கொண்டு அங்குமிங்கும் நகர்ந்து கொண்டிருந்தார். அது தன்னுடைய கைதான் என்பதை ஹாரி எளிதாகக் கண்டுகொண்டான். புகைப்படத்தில் இருந்த ஹாரி, பிறரது பார்வைக்கு வராமல் இருக்கத் தனது முழு பலத்தையும் பிரயோகித்துக் கொண்டிருந்ததை நிஜத்தில் இருந்த ஹாரி வெகுவாக ரசித்தான். அவன் பார்த்துக் கொண்டிருந்தபோதே, லாக்ஹார்ட் தன் முயற்சியைக் கைவிட்டுவிட்டு, மூச்சு வாங்க, சோர்ந்து போய்ப் புகைப்படத்தின் ஓரத்தில் சரிந்தார்.

“இதில் நீ கையெழுத்துப் போடுகிறாயா?” என்று காலின் ஆர்வத்துடன் கேட்டான்,

அந்த அறையில் வேறு யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, “முடியாது,” என்று ஹாரி தீர்மானமாகக் கூறினான், “காலின், என்னை மன்னித்துக் கொள். நான் அவசரத்தி இருக்கிறேன். நான் குவிடிச் பயிற்சிக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்” ஹாரி அந்த ஓவியத் துவாரத்தின் வழியாக ஏறினான்.

“என்ன சொன்னாய்? குவிடிச் பயிற்சிக்கா?’ ஆகா! நாள் இதுவரை குவிடிச் விளையாட்டைப் பார்த்ததே கிடையாது. ஒரு நிமிடம் பொறு. நானும் வருகிறேன்.”

காலின் தட்டுத் தடுமாறி ஹாரியைப் பின்தொடர்ந்து அத்துவாரத்தின் வழியாக வெளியே வந்தான்.

“இதுவொன்றும் அவ்வளவு சுவாரசியமாக இருக்காது.” என்று ஹாரி அவசர அவசரமாகக் கூறினான். ஆனால் காலின் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அவனது முகம் உற்சாகமான எதிர்பார்ப்பால் ஜொலித்துக் கொண்டிருந்தது.

காலின் அவனுடன் துள்ளல் நடை போட்டு வந்து கொண்டே. “ஹாரி, கடந்த நூறு வருடங்களில், இந்த விளையாட்டில் கலந்து கொண்ட வீரர்களிலேயே நீதான் மிகவும் வயது குறைந்தவனா? அப்படியானால் நீ இந்த விளையாட்டில் மிகச் சிறந்தவனாக இருக்க வேண்டும். நான் இதுவரை பறந்ததே இல்லை. அது சுலபமானதா? இது என்ன? உன்னுடைய மந்திரத் துடப்பமா? இதுதான் இருப்பதிலேயே சிறந்ததா?” என்று அடுக்கடுக்காகப் பல கேள்விகளை அள்ளி வீசினான்.

அவனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று ஹாரிக்குத் தெரியவில்லை. தொடர்ந்து தொணதொணத்துக் கொண்டே வந்த ஒரு நிழல்போல அவன் இருந்தான்.

காலின் கீரீவி மூச்சு வாங்கிக் கொண்டே, “எனக்குக் குவிடிச் விளையாட்டுப் புரிபடவே இல்லை,” என்று கூறினான். “இதில் நான்கு பந்துகள் உண்டு என்பது உண்மைதானா? அவற்றில் இரண்டு பந்துகள் பறந்து சென்று விளையாட்டு வீரர்களைத் தாக்குமாமே!”

“ஆமாம்,” என்று கூறிய ஹாரி, கடைசியில் வேறு வழியின்றி, குவிடிச் விளையாட்டின் சிக்கலான விதிகளைப் பற்றி விவரிக்கத் துவங்கினான். “அவற்றின் பெயர் பிளட்ஜர்கள். ஒவ்வோர் அணியிலும் இரண்டு ‘அடிப்பவர்கள்’ உண்டு. பிளட்ஜர்கள் தங்கள் அணிப் பக்கம் வராமல் பார்த்துக் கொள்வதற்காகத் தங்கள் கைகளில் இருக்கும் மட்டைகளைக் கொண்டு அவர்கள் அவற்றை அடிப்பர். ஃபிரெட்டும் ஜார்ஜும் கிரிஃபின்டார் அணியில் உள்ள ‘அடிப்பவர்கள்’.”

காலின் திறந்த வாய் மூடாமல் ஹாரி கூறியதைக் கேட்டுக் கொண்டும் அவனையே பார்த்துக் கொண்டும் வந்ததால், ஒருசில படிகளில் தடுமாறிக் கொண்டே, “மீதிப் பந்துகள் எதற்காக?” என்று கேட்டான்.

“இருப்பதிலேயே பெரிய பந்தான சிவப்புப் பந்தின் பெயர் குவாஃபில். அதைக் கொண்டுதான் கோல் போட வேண்டும். ஒவ்வோர் அணியிலும் மூன்று ‘துரத்துபவர்கள்’ இருப்பர். அவர்கள் தங்களுக்கிடையே குவாஃபிலை எறிந்து கொண்டே போய், மைதானத்தின் முனையில் இருக்கும் மூன்று வளையங்களில் ஏதாவது ஒன்றில் அதைப் போட வேண்டும் “

“அந்த நான்காவது பந்து?”

“அதன் பெயர் தங்க ஸ்னிச்,” என்று ஹாரி கூறினான். “அது மிகவும் சிறியது. அது வேகமாகப் பறக்கும். அதைப் பிடிப்பது மிகவும் சிரமம். ஆனால் ‘தேடுபவர்கள்’ அதற்காகத்தான் இருக்கிறார்கள். ஏனெனில் அதைப் பிடிக்காதவரை குவிடிச் விளையாட்டு முடிவடையாது. எந்த அணியின் தேடுபவன் அதைப் பிடிக்கிறானோ, அந்த அணிக்குக் கூடுதலாக நூற்றைம்பது புள்ளிகள் கிடைக்கும்.”

காலின் பிரமிப்புடன், “நீதான் கிரிஃபின்டார் அணியின் தேடுபவன், அப்படித்தானே?” என்று கேட்டான்.

கோட்டையைவிட்டு வெளியே வந்து, பனி மூடியிருந்த புல்தரையின் ஊடாக அவர்கள் நடந்து கொண்டிருந்தபோது, “ஆமாம்,” என்று ஹாரி கூறினான். “அப்புறம், ‘பிடிப்பவன்’ என்று ஒருவன் உண்டு. அவன் கோல்போஸ்ட்டுகளைப் பாதுகாப்பான். இந்த விளையாட்டு மொத்தத்தில் அவ்வளவுதான்.”

ஆனால் அந்தச் சரிவான புல்தரையிலிருந்து அவர்கள் குவிடிச் மைதானத்தை அடையும்வரை காலின் தன் கேள்விக் கணைகளை நிறுத்தவே இல்லை. உடை மாற்றும் அறையருகே வந்தபோதுதான் ஹாரியால் அவனிடமிருந்து கழன்று கொள்ள முடிந்தது. அவன் ஹாரியிடம், “ஹாரி, நான் போய் ஒரு நல்ல இடமாகப் பார்த்து உட்கார்ந்து கொள்கிறேன்,” என்று ஹாரிக்குப் பின்னால் சங்கீதக் குரலில் கூறிவிட்டுப் பார்வையாளர்கள் ஸ்டான்டை நோக்கி வேகமாக நடையைக் கட்டினான்.

மற்ற ஆட்டக்காரர்கள் உடை மாற்றும் அறைக்கு ஏற்கனவே வந்துவிட்டிருந்தனர். உட் மட்டும்தான் நன்றாகத் தூக்கம் கலைந்தவன்போலத் தெரிந்தான். ஃபிரெட்டும் ஜார்ஜும் உப்பிய கண்களும் பரட்டைத் தலையுமாக அங்கு உட்கார்ந்திருந்தனர். அவர்களை அடுத்திருந்த நான்காவது வருட மாணவியான அலிசியா ஸ்பின்னெட், தனக்குப் பின்னால் இருந்த சுவரில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அவளுக்கு எதிரே அடுத்தடுத்து உட்கார்ந்திருந்த அவளுடைய சக துரத்துபவர்களான கேட்டி பெல்லும் ஏஞ்சலினா ஜான்சனும் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தனர்.

“ஹாரி, ஒருவழியாக வந்துவிட்டாயா? ஏன் இவ்வளவு நேரம்? நுழைவதற்கு முன்பாக நான் உங்கள் அனைவரிடமும் கொஞ்சம் என்று உட் சுறுசுறுப்பாகக் கேட்டான். “நாம் மைதானத்திற்குள் பேச வேண்டியிருக்கிறது. ஏனெனில் நான் இந்தக் கோடை விடுமுறை மொத்தத்தையும் செலவழித்து ஒரு புதிய பயிற்சித் திட்டத்தைத் தயாரித்துள்ளேன். இது நமது வெற்றி வாய்ப்பைக் கணிசமாக உயர்த்தும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன் . . .”

உட்டின் கையில் குவிடிச் மைதானத்தின் பெரிய வரைபடம் ஒன்று இருந்தது. அதில் பல வண்ணங்களில் கோடுகள், அம்புக்குறிகள் கூட்டல் குறிகள் ஆகியவை இடம்பெற்றிருந்தன. அவன் தன் மந்திரக்கோலை எடுத்து அந்த வரைபடத்தின்மீது தட்டினான். உடனே அந்த அம்புக்குறிகள் அந்த வரைபடத்தின்மீது கம்பளிப் பூச்சிகள்போல ஊரத் துவங்கின. உட் தனது புதிய உத்திகளை விவரித்துக் கொண்டிருந்தபோது, ஃபிரெட்டின் தலை அலிசியாவின் தோளில் சாய்ந்தது. அவன் குறட்டைவிடத் துவங்கினான்.

முதல் வரைபடத்தை விவரிக்க உட்டிற்கு இருபது நிமிடங்கள் ஆனது. அதற்கு அடியில் இன்னொரு வரைபடமும், அதற்குக் கீழே மூன்றாவது வரைபடமும் இருந்தன. உட் தன் பேச்சை வளர்த்துக் கொண்டே போனபோது ஹாரி கிறங்கத் துவங்கினான்.

“அப்படியானால்,” என்று உட் ஒருவழியாக முடித்தபோது, ஹாரி திடுக்கிட்டு விழித்தான். அவன் அப்போது கோட்டையில் காலை உணவிற்கு என்ன பரிமாறிக் கொண்டிருப்பார்கள் என்று கற்பனை செய்து கொண்டிருந்தான். “எல்லோருக்கும் எல்லாம் புரிந்ததா? ஏதாவது கேள்விகள் உள்ளனவா?”

திடுக்கிட்டு விழித்த ஜார்ஜ், “உட், எனக்கு ஒரு சந்தேகம், என்றான். “நேற்று நாங்கள் எல்லோரும் நன்றாக விழித்துக் கொண்டிருந்தபோது இதை ஏன் நீ எங்களிடம் கூறவில்லை?”

உட் அதை ரசிக்கவில்லை.

உட் அவர்களை நோக்கிக் கோபத்துடன், “எல்லோரும் இதைக் கேட்டுக் கொள்ளுங்கள்,” என்று ஆரம்பித்தான். “குவிடிச் கோப்பையை நாம் கடந்த வருடம் வென்றிருக்க வேண்டும். நாம்தான் இருப்பதிலேயே சிறந்த அணியாக இருந்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாத சில சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் -”

ஹாரி குற்ற உணர்வுடன் தன் இருக்கையில் நெளிந்தான். கடந்த வருடத்தின் இறுதிப் போட்டியின்போது அவன் மருத்துவமனையில் நினைவில்லாமல் படுத்திருந்தான். அதனால் ஏழு பேருடன் விளையாட நேர்ந்தது. அதற்கு முன்பு முந்நூறு வருடங்களில் விளையாட வேண்டிய ஒரு விளையாட்டை அவர்கள் ஆறு பேருடன் ஏற்பட்டிராத தோல்வியை அவர்களது அணி தழுவ நேர்ந்தது.

தன்னைச் சுதாரித்துக் கொள்ள உட்டிற்கு ஒரு நிமிடத்திற்கும் மேல் ஆனது. அந்தத் தோல்வி அவனை இன்னும் வாட்டிக் கொண்டிருந்ததுபோலும்.

“அதனால் இவ்வருடம், முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நாம் அதிகக் கடுமையாகப் பயிற்சி செய்ய வேண்டும்… சரி, இப்போது நாம் மைதானத்திற்குள் நுழைந்து, நாம் வகுத்துள்ள புதிய உத்திகளைச் செயல்படுத்தலாம்!” என்று உட் முழங்கினான். பின் அவன் தன்னுடைய மந்திரத் துடப்பத்தை எடுத்துக் கொண்டு அவர்களை வழிநடத்தி, உடை மாற்றும் அறையிலிருந்து வெளியே வந்தான். கொட்டாவி விட்டுக் கொண்டும் மரத்துப் போயிருந்த கால்களுடனும் அவனது குழு அவனைப் பின்தொடர்ந்தது.

உடை மாற்றும் அறையில் அவர்கள் வெகுநேரம் இருந்துவிட்டிருந்ததால் சூரியன் இப்போது முழுவதுமாக உதயமாகியிருந்தது. ஆனாலும் பனியின் மிச்சசொச்சங்கள் விளையாட்டரங்கின் புல்தரையின்மீது மேலோட்டமாகப் பரவியிருந்தன. ஹாரி மைதானத்திற்குள் நுழைந்தபோது, பார்வையாளர்கள் ஸ்டான்டில் ரானும் ஹெர்மயனியும் அமர்ந்திருந்ததைப் பார்த்தான்.

“அட! இவ்வளவு சீக்கிரம் முடித்துவிட்டீர்களே, பரவாயில்லை!” என்று ரான் கிண்டல் செய்தான்.

“உண்மையில் நாங்கள் இன்னும் துவக்கவேயில்லை,” என்று கூறிய ஹாரி, ரானும் ஹெர்யமனியும் பேரரங்கில் இருந்து எடுத்து வந்திருந்த ரொட்டியையும் வெண்ணெயையும் பொறாமையுடன் பார்த்தான். “உட் எங்களுக்குப் புதிய உத்திகளைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.”

அவன் தன் மந்திரத் துடப்பத்தில் ஏறி, நிலத்தை உதைத்து வானில் பறக்கத் துவங்கினான். குளிராக இருந்த காலைக் காற்று அவனது முகத்தின்மீது சாட்டையெனத் தாக்கியது. உட்டின் நீண்ட சொற்பொழிவைவிடத் திறமையாக அது அவனை விழிக்க வைத்தது. தான் மீண்டும் குவிடிச் மைதானத்தில் இருந்தது குறித்து ஹாரி சந்தோஷமாக உணர்ந்தான். அவன் ஃபிரெட்டையும் ஜார்ஜையும் துரத்திக் கொண்டு படுவேகமாக அந்த விளையாட்டரங்கைச் சுற்றி வந்தான்.

அவர்கள் ஒரு முனையில் திரும்பிக் கொண்டிருந்தபோது, ‘வினோதமான, சொடுக்குப் போடுவது போன்ற ஒரு சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது. அது என்னவாக இருக்கும்?” என்று ஃபிரெட் கேட்டான்.

ஹாரி பார்வையாளர்கள் ஸ்டான்டை உற்றுப் பார்த்தான். அங்கு இருந்ததிலேயே உயரமான இருக்கை ஒன்றில் காலின் அமர்ந்து கொண்டு, புகைப்படம் மேல் புகைப்படமாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தான். ஆளரவமற்று இருந்த விளையாட்டரங்கு, கேமராவின் ‘கிளிக்’ ஒலியைப் பல மடங்காகப் பெருக்கி எதிரொலித்துக் கொண்டிருந்தது.

“இங்கே பார், ஹாரி, என்னைப் பார்!” என்று கீச்சுக் குரலில் அவன் கத்திக் கொண்டிருந்தான்.

“அது யார்?” என்று ஃபிரெட் கேட்டான்.

“எனக்குத் தெரியாது,” என்று ஹாரி பொய் சொன்னான். பிறகு உடனடியாக, காலினிடம் இருந்து எவ்வளவு தூரம் தள்ளிச் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் அவன் வேகமாகச் சென்றான்.

அவர்களை நோக்கி வேகமாக வழுக்கிக் கொண்டு வந்த உட் சிடுசிடுப்புடன், “இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது?” என்று கேட்டான். “அந்த முதல் வருட மாணவன் ஏன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறான்? எனக்கு அது கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. நம்முடைய புதிய உத்திகளையும் அசைவுகளையும் தெரிந்து கொள்வதற்காக ஸ்லிதரின் அணி அனுப்பிய உளவாளியாக அவன் இருக்கலாம்.”

“அவன் கிரிஃபின்டார் அணியில் இருக்கிறான்,” என்று ஹார் அவசர அவசரமாகக் கூறினான்.

“உட், ஸ்லிதரின் அணியினருக்கு உளவாளிகள் தேவையில்லை” என்று ஜார்ஜ் கூறினான்.

பொறுமையிழந்த உட், “நீ எதனால் அப்படிக் கூறுகிறாய்?” என்று கேட்டான்.

கீழே கை காட்டிக் கொண்டே, “ஏனெனில் அவர்கள் இங்கு நேரிலேயே வந்திருக்கின்றனர்,” என்று ஜார்ஜ் கூறினான்.

பச்சை நிற அங்கிகளுடனும், கையில் மந்திரத் துடப்பங்களுடனும் பலர் மைதானத்திற்குள் வந்து கொண்டிருந்தனர்.

“இதை என்னால் நம்பவே முடியவில்லை,” என்று உட் கோபத்தில் கொதித்தான். “நான் இந்த மைதானத்தை நமக்காக இன்று பதிவு செய்து வைத்துள்ளேன்! இது என்னவென்று பார்த்துவிடலாம்”

உட் படுவேகமாகக் கீழ் நோக்கிப் பறந்தான். தனக்கு ஏற்பட்டக் கோபத்தில் அவன் தான் நினைத்திருந்ததைவிட அதிக வேகமாகத் தரையிறங்கியதால் தன் மந்திரத் துடப்பத்திலிருந்து கொஞ்சம் தள்ளாடியபடியே இறங்கினான். ஹாரி, ஃபிரெட், ஜார்ஜ் ஆகிய மூவரும் அவனைத் தொடர்ந்து தரையிறங்கினர்.

ஸ்லிதரின் அணித் தலைவனை நோக்கி, உட், “மார்க்கஸ்!” என்று தன் அடித் தொண்டையில் கத்தினான். “இது எங்களுடைய பயிற்சி நேரம். இதற்காகவே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். நீ இந்த இடத்தைக் காலி செய்!”

மார்க்கஸ், உட்டைவிட உருவத்தில் மிகப் பெரியவனாக அரக்கத்தனமான குள்ளநரித்தனம் தாண்டவமாடியது. “உட், இங்கு இருந்தான். அவன் பதிலளித்தபோது, அவனது முகத்தில் நம் எல்லோருக்கும் போதுமான இடம் இருக்கிறது.”

ஏஞ்சலினா, அலிசியா, கேட்டி ஆகியோரும் கீழிறங்கி வந்தனர். ஸ்லிதரின் அணியில் மாணவிகளே கிடையாது. அந்த அணியினர் இவர்கள் மூவரின் அருகே நெருங்கி வந்து அவர்களை ஓரக்கண்ணால் பார்த்தனர்.

“நான் இந்த மைதானத்தை எங்கள் அணிக்காக முன்பே பதிவு செய்து வைத்தேன்!” என்று உட் கோபத்தில் வெடித்துக் கொண்டிருந்தான்.

“ஆனால், பேராசிரியர் ஸ்னேப் தன் கைப்பட எழுதிக் கொடுத்தக் குறிப்பு என்னிடம் உள்ளது,” என்று மார்க்கஸ் கூறினான். “பேராசிரியர் ஸ்னேப்பாகிய நான், இன்று ஸ்லிதரின் அணியினர் குவிடிச் மைதானத்தில் விளையாடுவதற்குச் சிறப்பு அனுமதி அளிக்கிறேன். அவர்கள் ஒரு புதிய ‘தேடுபவ’னுக்குப் பயிற்சி அளிக்க வேண்டியிருக்கிறது.”

“என்ன, உங்களுக்கு ஒரு புதிய தேடுபவன் கிடைத்திருக்கிறானா?” என்று உட் கேட்டான். “அவன் எங்கே இருக்கிறான்?”

அங்கு நின்று கொண்டிருந்த ஆறு பெரிய உருவங்களுக்குப் பின்னாலிருந்து சிறிய உருவத்துடன் இருந்த ஏழாமவன் முன்னே வந்தான். வெளுத்துப் போயிருந்த அவனது முகத்தில் இகழ்ச்சிப் புன்னகை நடனமாடிக் கொண்டிருந்தது. அது டிராகோ மால்ஃபாய்!

ஃபிரெட், மால்ஃபாயை வெறுப்புடன் பார்த்துக் கொண்டே, “நீ லூசியஸ் மால்ஃபாயின் பையன்தானே?” என்று கேட்டான்.

“நீ மால்ஃபாயின் அப்பாவைப் பற்றிப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது,” என்று மார்க்கஸ் கூறினான். அவனது ஒட்டுமொத்தக் குழுவினரும் இன்னும் பெரிதாகப் புன்னகைத்தனர். “அவர் ஸ்லிதரின் அணிக்கு அளித்துள்ள தாராளமான நன்கொடையை நான் உனக்குக் காட்டுகிறேன்.”

அந்த ஏழு பேரும் தங்களுடைய மந்திரத் துடப்பங்களைத் தங்கள் முன்னால் நீட்டினர். பளபளவென்றிருந்த, புத்தம் புதிய ஏழு மந்திரத் துடப்பங்கள், நிம்பஸ் 2001 என்ற பொன்னெழுத்துக்களுடன் கிரிஃபின்டார் அணியினரின் முகத்திற்கு நேரே சூரிய ஒளியில் ஜொலித்துக் கொண்டிருந்தன.

மார்க்கஸ் தன்னுடைய மந்திரத் துடப்பத்தில் ஒட்டியிருந்த ஒரு சிறு தூசியைத் தட்டிவிட்டபடி, “இது மிகச் சமீபத்திய வடிவமைப்பு. போன மாதம்தான் இது விற்பனைக்கு வந்தது,” என்று அலட்சியமாகக் கூறினான். ஃபிரெட் மற்றும் ஜார்ஜின் கைகளில் இருந்த ‘கிளீன்ஸ்வீப்ஸ்’ மந்திரத் துடப்பங்களை ஏளனமாகப் பார்த்தபடி, “இந்தப் புதிய வடிவமைப்பு இதற்கு முந்தைய வடிவமைப்பான நிம்பஸ் 2000ஐவிடப் பல மடங்கு மேலானது. மிகப் பழைய வடிவமைப்பான ‘கிளீன்ஸ்வீப்ஸ்’ இதன் தூசுக்குச் சமானம்,” என்று கூறி இகழ்ச்சிப் புன்னகை ஒன்றை அவன் உதிர்த்தான்.

இதற்கு என்ன பதிலளிப்பது என்று கிரிஃபின்டார் அணியிலிருந்த எவருக்கும் ஒரு கணம் எதுவும் தெரியவில்லை, மால்ஃபாயின் ஏளனப் புன்னகை அகலமாக விரிந்ததில் அவனது உணர்ச்சியற்றக் கண்கள் சுருங்கி ஒரு சிறு கீற்றுப்போலக் காட்சியளித்தன.

“அங்கே பாருங்கள்!” என்று மார்க்கஸ் கூறினான்.”மைதானத்திற்குள் படையெடுப்பு.”

இரு அணியினருக்கும் இடையே என்ன நடந்து கொண்டிருந்தது என்று பார்ப்பதற்காக ரானும் ஹெர்மயனியும் புல்வெளியின் குறுக்காக நடந்து வந்து கொண்டிருந்தனர்.

“என்ன நடந்து கொண்டிருக்கிறது?” என்று ரான் ஹாரியிடம் கேட்டான். “நீங்கள் ஏன் விளையாடவில்லை?” பின் அவன் ஸ்லிதரின் அணியின் குவிடிச் சீருடையில் இருந்த மால்ஃபாயை அளந்து கொண்டே, “ஆமாம், இவன் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறான்?” என்று கேட்டான்.

“ரான், நான் ஸ்லிதரின் அணியின் புதிய தேடுபவன்,” என்று மால்ஃபாய் அற்பத்தனமான பெருமிதத்துடன் கூறினான். “இங்குள்ள ஒவ்வொருவரும் என் அப்பா எங்கள் அணிக்காக வாங்கிக் கொடுத்துள்ள மந்திரத் துடப்பங்களை ரசித்துக் கொண்டிருக்கின்றனர்.”

ரான் தன் முன்னால் இருந்த ஏழு அற்புதமான மந்திரத் துடப்பங்களைப் பார்த்துத் திறந்த வாய் மூடாமல் நின்றான்.

“இவை மிக அருமையாக இருக்கின்றன, இல்லையா?” என்று மால்ஃபாய் தேனொழுகக் கேட்டான். “ஒருவேளை கிரிஃபின்டார் அணியும் கொஞ்சம் பணத்தை ஏற்பாடு செய்து புதிய மந்திரத் துடப்பங்களை வாங்கிக் கொள்ளுமோ? இந்த ‘கிளீன்ஸ்வீப் ஃபைவ்ஸை’ ஏலம் விட்டால் ஏதாவது ஓர் அருங்காட்சியகம் அவற்றை வாங்கிக் கொள்ளக்கூடும்.”

இதைக் கேட்டு ஸ்லிதரின் அணி கொக்கரித்தது.

‘ஆனால் கிரிஃபின்டார் அணியில் இருப்பவர்கள் எவருக்கும் தங்கள் இடத்தைக் காசு கொடுத்து வாங்க வேண்டிய தேவை இருக்கவில்லை,” என்று ஹெர்மயனி சரியான பதிலடி கொடுத்தாள். “அவர்கள் அனைவரும் தங்கள் திறமையின் அடிப்படையில் அணியில் இடம்பெற்றுள்ளனர்.”

மால்ஃபாயின் முகத்தில் ஈயாடவில்லை.

“கழிசடையான ஈன ரத்தமே, இங்கு உ யாரும் உன் அபிப்பிராயத்திற்காக அலைந்து கொண்டிருக்கவில்லை,” என்று மால்ஃபாய் வெறுப்பை உமிழ்ந்தான்.

மிகமிக மட்டமான ஒன்றை மால்ஃபாய் கூறிவிட்டிருந்தான் என்பதை ஹாரி அடுத்தக் கணமே புரிந்து கொண்டான். ஏனெனில் அந்த வார்த்தைகள் அவனது வாயிலிருந்து வெளிவந்தவுட உடனடியாகப் பெரும் ஆர்ப்பரிப்பு அங்கு எழுந்தது. மால்ஃபாயின்மீது பாய்ந்த ஃபிரெட்டையும் ஜார்ஜையும் தடுக்க மார்க்கஸ் மால்ஃபாயின் முன் பாய வேண்டியிருந்தது. “என்ன தைரியம் உனக்கு!” என்று அலிசியா கூப்பாடு போட்டாள். ரான் தன் அங்கிக்குள் கையைவிட்டுத் தன் மந்திரக்கோலை வெளியே எடுத்து, அதை மார்க்கஸின் கைகளின் ஊடாக மால்ஃபாயை நோக்கி நீட்டி, “மால்ஃபாய், நீ கண்டிப்பாக இதன் விளைவைச் சந்தித்தாக வேண்டும்,” என்று கோபமாகக் கூச்சலிட்டான்.

ஒரு பெரும் சத்தம் அந்த விளையாட்டரங்கு முழுவதும் எதிரொலித்தது. ரானின் மந்திரக்கோலின் தவறான முனையிலிருந்து பச்சை நிற ஒளிக்கற்றை ஒன்று பாய்ந்து வந்து, ரானின் வயிற்றைப் பலமாகத் தாக்கியது. அவன் பின்னால் எகிறிப் புல்லின்மீது போய் விழுந்தான்.

“ரான்! ரான்! உனக்கு ஒன்றும் ஆகவில்லையே!” என்று ஹெர்மயனி கீச்சிட்டாள்.

ரான் பேசுவதற்காக வாயைத் திறந்தான். ஆனால் அவன் வாயிலிருந்து சத்தம் ஏதும் வரவில்லை. அதற்குப் பதிலாக, படுபயங்கர ஏப்பம் ஒன்று வந்தது. கொழகொழவென்றிருந்த, கூடில்லா நத்தைகள் பல அவன் வாயிலிருந்து ஒழுகி வெளியே வந்து அவன் மடியில் விழுந்தன.

ஸ்லிதரின் அணியினரால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. மார்க்கஸ் தான் கீழே விழுந்துவிடாமல் இருக்கத் தன்னுடைய புதிய மந்திரத் துடப்பத்தைப் பிடித்துக் கொண்டான். மால்ஃபாய் வெறித்தனமாகச் சிரித்தபடியே தரையில் உட்கார்ந்து கொண்டு தன் முஷ்டியால் மண்ணைக் குத்திக் கொண்டிருந்தான். கிரிஃபின்டார் அணியினர் ரானைச் சுற்றிக் குழுமினர். ரான் மேலும் பெரிய கூடில்லா நத்தைகளை வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான். யாரும் அவனைத் தொட விரும்பியதுபோலத் தெரியவில்லை.

“நாம் அவனை உடனடியாக ஹாக்ரிட்டிடம் அழைத்துச் செல்லலாம். அவருடைய குடில்தான் பக்கத்தில் இருக்கிறது,” என்று ஹாரி கூறினான். ஹெர்மயனியும் தைரியத்துடன் தலையை அசைத்தாள். அவர்கள் இருவரும் ரானின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றனர்.

அவர்கள் மைதானத்தைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தபோது, காலின் தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து இறங்கி ஓடி வந்து அவர்கள் முன்னே நாட்டியமாடிக் கொண்டிருந்தான். “ஹாரி, என்னவாயிற்று? என்னவாயிற்று, ஹாரி? அவனுக்கு உடம்பு சரியில்லையா? அவனை உன்னால் குணப்படுத்த முடியும், இல்லையா?” என்று அவன் மீண்டும் கேள்வி மேல் கேள்விகளாகக் கேட்டான். அப்போது ரான் ஒரு பெரிய ஏப்பம் விட்டான். மேலும் பல நத்தைகள் வெளியே வந்து விழுந்தன.

அதனால் கவரப்பட்டக் காலின் “உய்!” என்று கத்தினான். பின் தன் கேமராவைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, “ஹாரி, உன்னால் அவனை ஒரு நிமிடம் அசையாமல் பிடித்துக் கொள்ள முடியுமா?” என்று கேட்டான்.

ஹாரியும் ஹெர்மயனியும் ரானைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் ஹாரி கோபமாக, “வழியை விடு, காலின்,” என்று கத்தினான். கொண்டு, விளையாட்டரங்கில் இருந்து வெளியேறி, மைதானத்தைக் கடந்து, காட்டின் எல்லையருகே இருந்த ஹாக்ரிட்டின் குடிலுக்கு கூட்டிச் சென்றனர்.

கோட்டைப் பாதுகாவலரின் குடில் கண்களுக்குத் தென்பட்டதும், ஹெர்மயனி, “ரான், இதோ வந்துவிட்டது,” என்று கூறினாள். “கொஞ்சம் பொறுத்துக் கொள். உடனே சரி செய்துவிடலாம்.”

அவர்கள் ஹாக்ரிட்டின் குடிலிலிருந்து இருபதடி தூரத்தில் இருந்தபோது, அக்குடிலின் கதவு திறந்தது. ஆனால் வெளியே வந்தது ஹாக்ரிட் அல்ல. வெளிறிய ஊதா நிற அங்கி ஒன்றை அணிந்திருந்த கில்டராய் லாக்ஹார்ட்தான் அதிலிருந்து வெளியே வந்தார்.

அருகிலிருந்த ஒரு புதருக்குள் ரானை இழுத்தவாறே, “ஹெர்மயனி, சீக்கிரம் இங்கே வா!” என்று ஹாரி கிசுகிசுத்தான். ஓரளவு தயக்கத்துடன் ஹெர்மயனியும் அவனைப் பின்தொடர்ந்தாள்.

“நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது என்பது உங்களுக்குத் தெரியும்பட்சத்தில் இது மிகவும் சுலபமான ஒன்று,” என்று லாக்ஹார்ட் ஹாக்ரிட்டிடம் சத்தமாகக் கூறிக் கொண்டிருந்தார். “உங்களுக்கு உதவி தேவை என்றால், நான் எங்கிருப்பேன் என்று உங்களுக்குத் தெரியும்தானே! நான் என்னுடைய புத்தகத்தின் ஒரு பிரதியை உங்களுக்குத் தருகிறேன் – உங்களிடம் அது ஏற்கனவே இல்லை என்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. நான் என் புத்தகத்தில் கையெழுத்திட்டு அதை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். பிறகு சந்திக்கலாம்!” என்று கூறிவிட்டுக் கோட்டையை நோக்கி அவர் வேகமாக நடந்தார்.

லாக்ஹார்ட் பார்வையில் இருந்து மறையும்வரை காத்திருந்துவிட்டு, ஹாரி ரானை அப்புதரிலிருந்து வெளியே இழுத்து, ஹாக்ரிட்டின் குடிலின் அருகே கூட்டிச் சென்றான். அவர்கள் அவசர அவசரமாக அதன் கதவைத் தட்டினர்.

ஹாக்ரிட் உடனடியாக வாசலுக்கு வந்தார். எரிச்சலுடன் காணப்பட்ட அவரது முகம், வந்திருந்தது யார் என்று தெரிந்ததும் பிரகாசமடைந்தது.

“நீங்கள் எப்போது என்னைப் பார்க்கப் வரப் போகிறீர்கள் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். உள்ளே வாருங்கள்! உள்ளே வாருங்கள்! பேராசிரியர் லாக்ஹார்ட்தான் மீண்டும் வந்துவிட்டாரோ என்று நான் நினைத்தேன்.”

ஹாரியும் ஹெர்மயனியும் ரானைக் கைத்தாங்கலாக வாசற்படி வழியாக அந்த ஒற்றை அறைக் குடிலுக்குள் அழைத்துச் சென்றனர். அதன் ஒருபுறத்தில் மிகப் பெரிய படுக்கை ஒன்று இருந்தது. மறுபுறம் கணப்படுப்பில் நெருப்பு ஆனந்தமாக எரிந்து கொண்டிருந்தது. ரானை அங்கிருந்த நாற்காலியில் சாய்த்துக் கொண்டே, ஹாரி, நடந்தவற்றை அவசர அவசரமாக ஹாக்ரிட்டிடம் எடுத்துரைத்தான். ஆனால் ஹாக்ரிட் அந்த கூடில்லா நத்தைப் பிரச்சனை குறித்துச் சிறிதும் கலவரம் அடையவில்லை.

“அவை உள்ளே இருப்பதைவிட வெளியே இருப்பது நல்லது,” என்று கூறிக் கொண்டே, ஒரு பெரிய செப்புச் சட்டியைத் தூக்கி ரானின் முன்னால் அவர் போட்டார். “ரான், எல்லாவற்றையும் வெளியே கொண்டு வந்துவிடு!’

ரான் அந்தச் சட்டியை நோக்கிக் குனிந்ததைப் பார்த்துக் கொண்டே, ஹெர்மயனி, “அதுவாகவே நிற்கும்வரை நாம் எதுவும் செய்வதற்கில்லை என்று நான் நினைக்கிறேன்,” என்று கவலையுடன் கூறினாள். “நல்ல நாளிலேயே அந்த மந்திரத்தை வேலை செய்ய வைப்பது சிரமம். அதுவும், உடைந்து போன மந்திரக்கோலை வைத்துக் கொண்டு…”

ஹாக்ரிட் தடபுடலாக அவர்களுக்குத் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தார். அவரது நாயான ஃபேங், ஹாரியின்மீது கோழை வடித்துக் கொண்டிருந்தது.

ஹாரி ஃபேங்கின் காதுகளைச் சொறிந்துவிட்டுக் கொண்டே, “ஹாக்ரிட், லாக்ஹார்ட்டுக்கு உங்களிடம் இருந்து என்ன வேண்டுமாம்?” என்று கேட்டான்.

“கிணற்றில் இருந்து கெல்ப்பிக்களை எவ்வாறு வெளியே எடுப்பது என்று அவர் எனக்கு அறிவுரை கூறிக் கொண்டிருந்தார்,” என்று ஹாக்ரிட் உறுமினார். பாதி உரிக்கப்பட்டிருந்த சேவற்கோழியைத் தன் மேசையிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு, அவர் அந்த மேசையைத் துடைத்தார். பின் தேநீர்க் கெண்டியை அதன்மீது வைத்தார். “அது என்னவோ எனக்குத் தெரியாத ஒன்று என்பதுபோல அவர் பேசினார். தான் வெற்றி கொண்டிருந்த பன்ஷி மோகினிப் பிசாசைப் பற்றி அளந்து கொண்டிருந்தார். அவர் கூறியிருந்ததில் ஒரு வார்த்தை உண்மையாக இருந்தால்கூட நான் இந்தக் கெண்டியை அப்படியே தின்றுவிடுகிறேன்.”

ஒரு ஹாக்வார்ட்ஸ் பேராசிரியரை ஹாக்ரிட் திட்டி ஹாரி பார்த்ததில்லை. அதனால் அவன் அவரை ஆச்சரியமாகப் பார்த்தான். ஆனால் ஹெர்மயனி வழக்கத்திற்கு மாறாகத் தனது குரலை உயர்த்திக் கொண்டு, “நீங்கள் நியாயமாக நடந்து கொள்வதாக எனக்குப் படவில்லை. பேராசிரியர் டம்பிள்டோர் இவ்வேலைக்கு இவர்தான் மிகவும் பொருத்தமானவர் என்று -” என்று துவக்கினாள்.

ஹாக்ரிட் வெல்ல மிட்டாய்த் தட்டு ஒன்றை அவர்களிடம் நீட்டிக் கொண்டே “அவர் ஒருவர்தான் இந்த வேலைக்கு விண்ணப்பித்திருந்தார்,” என்று கூறினார். ரான் வயிற்றைப் புரட்டி அந்தச் சட்டிக்குள் இருமினான். “நான் என்ன கூறுகிறேன் என்றால், அவர் ஒரே ஒருவர் மட்டும்தான் இந்த வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். தீய மந்திர சக்திகளுக்கு எதிரான பாதுகாப்பு வேலைக்கு ஆள் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. அந்த வேலை குறித்து மக்கள் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. வந்தவர்களும் சொல்லிக் கொள்ளும்படியான காலம் நிலைத்து இருந்ததும் இல்லை,” என்று ஹாக்ரிட் தெரிவித்தார். அவர் ரானை நோக்கித் தன் தலையை ஆட்டியவாறே, “ஆமாம், அவன் யார்மீது சாபம்விட முயன்றான்?” என்று கேட்டார்.

“ஹெர்மயனியை மால்ஃபாய் ஏதோ ஒரு பெயர் சொல்லி அழைத்தான். அது உண்மையிலேயே மிகமிக மோசமான ஒரு வார்த்தையாக இருந்திருக்க வேண்டும். எல்லோருமே பெருங்கோபம் கொண்டனர்,” என்று ஹாரி கூறினான்.

வெளிறிப் போயும் வியர்த்துப் போயும் இருந்த ரான் அந்த மேசையிலிருந்து தன் தலையைத் தூக்கி, “ஆமாம், அது மிகமிக மோசமான வார்த்தைதான்!” என்று கரகரப்பான குரலில் கூறினான். “ஹாக்ரிட், மால்ஃபாய் அவளை ‘ஈன ரத்தம்’ என்றழைத்தான் -”

அடுத்தச் சுற்று நத்தைகள் அலையெனத் தலைதூக்கியதும் அவன் மீண்டும் தன் தலையைக் கவிழ்த்துக் கொண்டான். ஹாக்ரிட் ருத்ர தாண்டவம் ஆடினார்.

“அவன் அந்த வார்த்தையை உபயோகித்திருக்க மாட்டான்!” என்று ஹாக்ரிட் உறுமினார்.

“இல்லை, அவன் அப்படித்தான் கூறினான்,” என்று ஹெர்மயனி தெரிவித்தாள். “ஆனால் அதற்கு என்ன அர்த்தம் என்று எனக்குத் தெரியாது. அது மிகவும் அநாகரீகமான ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்..”

மீண்டும் நிமிர்ந்த ரான், “இருப்பதிலேயே மிகவும் மட்டமான, அவமதிப்பான வார்த்தை அது,” என்று மூச்சு வாங்கக் கூறினான். “மகுள்களுக்குப் பிறந்த ஒருவரைப் பற்றிக் கூறும் வசைச் சொல் அது. மால்ஃபாயின் குடும்பத்தைப் போன்ற ஒருசில மந்திரவாதிக் குடும்பங்கள், தாங்கள் மற்ற எல்லோரையும்விட உயர்ந்தவர்கள் என்று தங்களைக் கருதிக் கொள்கின்றனர். ஏனெனில் தாங்கள் தூய ரத்தப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்று அவர்களுக்கு நினைப்பு.” ரான் ஒரு சிறு ஏப்பம் விட்டான். ஒரே ஒரு நத்தை மட்டும் துள்ளி, நீட்டிக் கொண்டிருந்த அவனது கையில் வந்து விழுந்தது. அவன் அதை அந்தச் சட்டியில் தூக்கி எறிந்துவிட்டுத் தொடர்ந்தான். “அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்துவதில்லை என்பது மற்ற எல்லோருக்கும் தெரியும். நெவில் லாங்பாட்டத்தை எடுத்துக் கொள்வோம். அவன் தூய ரத்தப் பரம்பரையைச் சேர்ந்தவன்தான். ஆனால் அவனால் ஒரு கொப்பரையை நேராக நிமிர்த்தி வைக்கக்கூட முடியாது.”

“நம் ஹெர்மயனியால் பயன்படுத்த முடியாத ஒரு மந்திரத்தை அவர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை,” என்று ஹாக்ரிட் பெருமையாகக் கூறினார். ஹெர்மயனியின் முகம் அந்திச் சூரியனாய்ச் சிவந்தது.

ரான், நடுங்கிக் கொண்டிருந்த தன் கையால் வியர்வை வழிந்து கொண்டிருந்த தன் புருவங்களைத் துடைத்தபடி, “ஒருவரை ஈன ரத்தம் என்று அழைப்பது மகா கேவலம். அது பைத்தியக்காரத்தனம். எப்படிப் பார்த்தாலும், இன்றுள்ள பெரும்பாலான மந்திரவாதிகள் அரை ரத்தப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்தான். நாம் மகுள்களோடு திருமண பந்தம் ஏற்படுத்திக் கொள்ளாமல் இருந்திருந்தால், என்றோ நமது இனம் அழிந்திருக்கும்,” என்றான்.

அவன் ஏப்பம் விட்டுவிட்டு மீண்டும் அச்சட்டியை நோக்கிக் குனிந்தான்.

மேலும் அதிகமான நத்தைகள் அந்தச் சட்டிக்குள் விழுந்து கொண்டிருந்த சத்தத்தையும் மீறி, ஹாக்ரிட், “ரான், நீ அவனுக்குச் சாபமிட முயன்றது குறித்து நான் உன்னைக் குற்றம் சொல்ல மாட்டேன்,” என்று கூறினார். “உன் மந்திரக்கோல் பின்னால் வெடித்ததும் நல்லதுக்குத்தான். நீ மட்டும் மால்ஃபாய்க்குச் சாபம் இட்டிருந்தாயோ, லூசியஸ் மால்ஃபாய் மடையன் நேராக இங்கு புறப்பட்டு வந்திருப்பான். நல்லவேளை நீ பிரச்சனையில் மாட்டிக் கொள்ளவில்லை.”

ஹாரி ஏதோ சொல்ல வாயெடுத்தான். ஆனால் ஹாக்ரிட்டின் மிட்டாய்கள் அவனது தாடைகளை ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளச் செய்திருந்ததால் அவனால் பேச முடியவில்லை.

ஹாக்ரிட் திடீரென்று ஏதோ ஒன்று நினைவுக்கு வந்தவராக, “ஹாரி, உன்னிடம் சண்டை போடலாம் என்று இருக்கிறேன். ஊருக்கெல்லாம் உன் கையெழுத்திட்டப் புகைப்படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறாயாமே! என்னை மட்டும் மறந்துவிட்டாய்,” என்று கூறினார்.

கோபத்தில் ஹாரி கொதித்தெழுந்ததில், ஒட்டிக் கொண்டிருந்த அவனது பற்கள் விடுதலை அடைந்தன.

“நான் ஒன்றும் என் கையெழுத்திட்டப் புகைப்படங்களை வினியோகித்துக் கொண்டு திரியவில்லை,” என்று ஹாரி வெடித்தான். “லாக்ஹார்ட் என்னைப் பற்றி அப்படிக் கூறிக் கொண்டு திரிந்து கொண்டிருந்தார் என்றால்-”

ஹாக்ரிட் சிரித்துக் கொண்டிருந்ததை அப்போதுதான் ஹாரி பார்த்தான்.

“நான் விளையாட்டுக்காக அப்படிக் கூறினேன்,” என்று கூறிய ஹாக்ரிட், ஹாரியின் முதுகில் மென்மையாகத் தட்டினார். அவன் மேசைமேல் மூக்கடிக்க விழுந்தான். “நீ அப்படிப் பண்ணவில்லை என்று எனக்குத் தெரியும். உனக்கு அது தேவையில்லை என்று லாக்ஹார்ட்டிடம் நான் கூறினேன். நீ மெனக்கெடாமலேயே அவரைவிடப் பிரபலமாகத்தான் இருக்கிறாய்.”

ஹாரி நிமிர்ந்து உட்கார்ந்து தன் முகவாயைத் தடவிக் கொண்டே, “ஆனால் அவருக்கு அது பிடிக்கவில்லை,” என்று கூறினான்.

“அவருக்குப் பிடித்திருந்தது என்று நானும் நம்பவில்லை,” என்று ஹாக்ரிட் தன் கண்கள் மினுமினுக்கக் கூறினார். “பின் நான் அவரிடம் அவரது புத்தகங்கள் ஒன்றைக்கூடப் படித்ததில்லை என்று கூறினேன். உடனே அவர் இங்கிருந்து கிளம்பிவிட்டார்.” ரான் தன் தலையை மீண்டும் நிமிர்த்தியதும் ஹாக்ரிட் அவனிடம், “ரான், உனக்கு மிட்டாய்கள் வேண்டுமா?” என்று கேட்டார்.

“நன்றி! ஆனால் வேண்டாம்,” என்று அவன் பலவீனமான குரலில் கூறினான். “நான் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.”

ஹாரியும் ஹெர்மயனியும் தங்களது தேநீரைக் குடித்து முடிந்ததும், “வாருங்கள்! நான் தோட்டத்தில் என்ன வளர்த்துக் கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்குக் காட்டுகிறேன்!” என்று ஹாக்ரிட் கூறினார்.

அவரது குடிலுக்குப் பின்னால் இருந்த ஒரு சிறிய தோட்டத்தில், மிகப் பிரம்மாண்டமான ஒரு டஜன் பூசணிக்காய்கள் காய்த்திருந்தன. ஹாரி அவ்வளவு பெரிய பூசணிக்காய்களை அதற்கு முன்பு ஒருபோதும் பார்த்திருக்கவில்லை. அவை ஒவ்வொன்றும் ஒரு பெரிய பாறாங்கல் அளவுக்கு இருந்தன.

“நன்றாக வளர்ந்து கொண்டிருக்கின்றன, இல்லையா?” என்று ஹாக்ரிட் மகிழ்ச்சிக் கொப்பளிக்கக் கேட்டார். “ஹாலோவீன் விருந்திற்காக நான் இவற்றை வளர்த்து வருகிறேன்… இவை அதற்குள் இன்னும் பெரிதாக வளர்ந்துவிடும்.”

“அவற்றிற்கு என்ன போடுகிறீர்கள்?” என்று ஹாரி கேட்டான்.

தங்களை யாரும் கண்காணித்துக் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள ஹாக்ரிட் தன் தோளின் பின்புறமாகத் தலையைத் திருப்பிப் பார்த்தார்.

“அவை நன்றாக வளர்வதற்கு நான் கொஞ்சம் உதவி செய்து வருகிறேன் – நான் கூறுவது உனக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.”

ஹாக்ரிட்டின் பூக்கள் போடப்பட்டிருந்த இளஞ்சிவப்பு நிறக் குடை அவரது குடிலின் பின் சுவரில் தொங்கவிடப்பட்டிருந்ததை ஹாரி கவனித்தான். அந்தக் குடை, பார்ப்பதற்குச் சாதாரணமாகத் கருதியதற்குக் காரணங்கள் பல இருந்தன. ஹாக்ரிட் பள்ளியில் படித்தக் காலத்தில் உபயோகித்த மந்திரக்கோல் அதனுள் மறைத்து வைக்கப்பட்டிருக்கக்கூடும் என்று ஹாரி உறுதியாக நம்பினான் மந்திரஜாலங்களை நிகழ்ந்த ஹாக்ரிட்டுக்கு அனுமதி கிடையாது.அவர் ஹாக்வார்ட்ஸில் மூன்றாவது வருடம் படித்துக் கொண்டிருந்தபோது பள்ளியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் ஏன் நீக்கப்பட்டார் என்பதை அவனால் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைப் பற்றி எப்போது பேச்செடுத்தாலும் அவர் தன் தொண்டையை பலமாகச் செருமிக் கொண்டு, பேச்சு வேறு திசைக்கு மாறும்வரை திடீரென்று தனக்குக் காது கேட்காததுபோல இருந்துவிடுவார்.

“நீங்கள் ‘பெருவீக்க மந்திர’த்தை உபயோகித்திருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன், சரியா?” என்று ஹெர்மயனி, சந்தோஷத்திற்கும் ஒப்புதலின்மைக்கும் இடைப்பட்ட ஒரு தொனியில் கேட்டாள். “ஆனால் நீங்கள் அதைப் பிரமாதமாகச் செய்திருக்கிறீர்கள்.”

ஹாக்ரிட் ரானைப் பார்த்து, “இதையேதான் உன் தங்கையும் சொன்னாள்,” என்று கூறினார். “நேற்று நான் அவளைச் சந்தித்தேன்.” அவர் தன் தாடியைத் தடவிவிட்டுக் கொண்டு ஹாரியை ஓரக் கண்ணால் பார்த்தபடி, “தான் மைதானத்தைப் பார்க்க வந்ததாக அவள் என்னிடம் கூறினாள். ஆனால் என் வீட்டில் வேறு யாரையோ சந்திக்கலாம் என்ற நம்பிக்கையில் அவள் வந்திருக்கக்கூடும் என்பது என் ஊகம்,” என்று கூறினார். பின் ஹாரியைப் பார்த்துக் கண்ணடித்துக் கொண்டே, என்னைக் கேட்டால், கையெழுத்திடப்பட்ட ஒரு புகைப்படத்தை அவள் வேண்டாம் என்று கூற மாட்டாள் –” என்று இழுத்தார்.

“ஹாக்ரிட், கொஞ்சம் வாயை மூடிக் கொள்கிறீர்களா?” என்று ஹாரி சீறினான். ரான் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். நிலமெங்கும் நத்தைகள் தெறித்தன.

“ஏய்! ஜாக்கிரதை!” என்று ஹாக்ரிட் கத்திவிட்டுத் தனது பொக்கிஷப் பூசணிக்காய்களின் பக்கத்திலிருந்து அவனை இழுத்தார்.

அப்போது மதிய உணவிற்கான நேரம் வந்துவிட்டிருந்தது. ஹாரி காலையில் எழுந்ததிலிருந்து ஒரே ஒரு வெல்ல மிட்டாயைத் தவிர வேறு எதையும் சாப்பிட்டிருக்கவில்லை என்பதால், பள்ளிக்குத் திரும்பிச் சென்று சாப்பிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தான். அவர்கள் அனைவரும் ஹாக்ரிட்டிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு, கோட்டையை நோக்கி நடந்தபோது ரானுக்கு அவ்வப்போது விக்கல் வந்து கொண்டிருந்தாலும், ஓரிரு மிகச் சிறிய நத்தைகள் மட்டுமே இப்போது அவன் வாயிலிருந்து வெளியே வந்தன.

அவர்கள் வரவேற்பறையினுள் காலை எடுத்துக்கூட வைத்திருக்க மாட்டார்கள், அப்போது ஒரு குரல் அவர்களை நோக்கிப் பாய்ந்தது. “ஹாரி, ரான்! நீங்கள் இரண்டு பேரும் இங்குதான் இருக்கிறீர்களா?” என்று கேட்டபடியே பேராசிரியர் மெக்கானகல் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவரது முகத்தில் கடுமை தென்பட்டது. “உங்களுக்கு வழங்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைத் தண்டனை இன்று மாலை துவங்குகிறது.”

ரான் தன் ஏப்பத்தை அடக்கிக் கொண்டே, பதற்றத்துடன், “பேராசிரியரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.

“ரான், நீ ஃபில்ச்சுடன் சேர்ந்து வெற்றிக் கோப்பைகள் அறையிலுள்ள வெள்ளிக் கோப்பைகளைப் பளிச்சூட்ட வேண்டும்; என்று பேராசிரியர் மெக்கானகல் கூறினார். “இதற்கு நீ மந்திரங்களை உபயோகிக்கக்கூடாது, உன் கைகளை உபயோகிக்க வேண்டும்.”

ரான் மென்று விழுங்கினான். கண்காணிப்பாளர் ஆர்கஸ் ஃபில்ச்சுடன் சேர்ந்து வேலை செய்வதா! பள்ளியிலுள்ள ஒவ்வொரு மாணவனும் அவரை வெறுத்தனர்.

“ஹாரி, பேராசிரியர் லாக்ஹார்ட்டுக்கு வந்துள்ள ரசிகர் கடிதங்களுக்கு பதில் போட நீ அவருக்கு உதவ வேண்டும்,” என்று பேராசிரியர் மெக்கானகல் கூறினார்.

“ஐயோ! வேண்டாம்! நானும் கோப்பைகளைப் பளிச்சூட்டப் போகிறேனே,” என்று ஹாரி பரிதாபமாகக் கெஞ்சிக் கேட்டான்.

பேராசிரியர் மெக்கானகல் தன் புருவங்களை நெறித்தபடி, “கண்டிப்பாக முடியாது,” என்று கூறினார். “தனக்கு உதவுவதற்கு நீதான் வேண்டும் என்று பேராசிரியர் லாக்ஹார்ட் குறிப்பாகக் கேட்டுள்ளார். இரவு சரியாக எட்டு மணிக்கு நீங்கள் இருவரும் தயாராக இருக்க வேண்டும் என்பது நினைவிருக்கட்டும்.”

ஹாரியும் ரானும் மிகவும் மனமுடைந்த நிலையில் தங்கள் தலைகளைத் தொங்கப் போட்டுக் கொண்டு அப்பேரரங்கினுள் நுழைந்தனர். ‘நீங்கள் பள்ளி விதியை மீறினீர்கள் – இப்போது அனுபவியுங்கள்’ என்பது போன்ற முகபாவத்தோடு அவர்களுக்குப் பின்னால் ஹெர்மயனி வந்தாள். ஹாரியால் தான் நினைத்த அளவுக்கு ‘ஆட்டிறைச்சிப் பணியார’த்தை ருசிக்க முடியவில்லை. அவர்கள் இருவரும் தங்களுக்கு மிக மோசமான தண்டனை வழங்கப்பட்டிருந்ததாகப் பொருமிக் கொண்டிருந்தனர்.

“ஃபில்ச் என்னை இரவு முழுவதும் அங்கேயே வைத்திருக்கப் போகிறார்,” என்று ரான் புலம்பினான். “மந்திர வித்தையையும் உபயோகிக்கக்கூடாதாம்! அந்த அறையில் குறைந்தது நூறு கோப்பைகளாவது இருக்கும். இந்த மகுள்தனமான வேலை நமக்குச் சரிப்பட்டு வராது.”

ஹாரி வெறுமையாகப் பார்த்துக் கொண்டே, “முடியுமானால், நான் சந்தோஷமாக என் இடத்தை உனக்குக் கொடுத்துவிட்டு உன் இடத்தை எடுத்துக் கொள்வேன்,” என்று கூறினான். “டர்ஸ்லீ தம்பதியரின் வீட்டில் எனக்கு இதில் நல்ல அனுபவம் இருக்கிறது. லாக்ஹார்ட்டின் ரசிகர்களின் கடிதங்களுக்கு பதில் எழுதுவது . நான் தொலைந்தேன்!”

சனிக்கிழமை மதியம் வேகமாகக் கரைந்து போனது. திரும்பிப் பார்ப்பதற்குள் ஏழு மணி ஐம்பத்தைந்து நிமிடங்கள் ஆகிவிட்டிருந்தது. ஹாரி இரண்டாவது சென்றான். தன் பற்களைக் கடித்துக் கொண்டு கதவைத் தட்டினான.. லாக்ஹார்ட்டின் அலுவலகத்திற்கு வேண்டா வெறுப்பாகச் தளத்தின் தாழ்வாரத்தில் இருந்த

உடனே கதவு விரியத் திறந்து கொண்டது. லாக்ஹார்ட் அவனை நோக்கிப் புன்னகையை அள்ளி வீசியபடி அங்கு நின்று கொண்டிருந்தார்.

“வாடா, செல்ல ராஸ்கல்! வந்து உள்ளே உட்கார்!” என்று அவர் கூறினார்.

அந்த அறையின் சுவர்களில் மாட்டப்பட்டிருந்த லாக்ஹார்ட்டின் சட்டமிடப்பட்டிருந்த எண்ணற்றப் புகைப்படங்கள், அங்கு ஏற்றப்பட்டிருந்த பல மெழுகுவர்த்திகளின் ஒளியில் பிரகாசமாக மினுமினுத்துக் கொண்டிருந்தன. அவற்றில் சிலவற்றில் அவர் கையெழுத்தும் இட்டிருந்தார். அவரது மேசைமீது அவரது புகைப்படங்களின் இன்னொரு குவியல் கிடந்தது.

அது ஏதோ அருட்பெரும் பாக்கியம் என்பதுபோல, “ஹாரி, நீ இந்த அஞ்சலுறைகளில் முகவரிகளை எழுதலாம்,” என்று கூறினார். “இந்த முதலாவது கடிதத்தை கிளேடிஸ் குட்ஜானுக்கு அனுப்ப வேண்டும். கடவுள் அவளை ஆசிர்வதிப்பாராக! அவள் என்னுடைய பரம ரசிகை.”

பத்து நிமிடங்கள் நத்தைபோல ஊர்ந்தன. லாக்ஹார்ட்டின் தொடர்ச்சியான பேச்சை வெறுமனே சகித்துக் கொண்டு, எப்போதாவது, “உம்,” என்றோ, “ஆமாம்,” என்றோ, அல்லது “சரி, சரி,” என்றோ ஹாரி பிரக்ஞையின்றிக் கூறிக் கொண்டிருந்தான். அவ்வப்போது அவர், “புகழ் என்பது நிலையற்றது,” அல்லது “பிரபலமானவற்றைச் செய்பவன்தான் பிரபலமானவன்,” என்று முத்துக்களை உதிர்த்துக் கொண்டிருந்தபோது மட்டும் அவன் கவனித்தான்.

மெழுகுவர்த்திகளின் உயரம் குறைந்து கொண்டே வந்தபோது, அவற்றின் ஒளி, புகைப்படங்களில் இருந்து அவனைக் கவனித்துக் கொண்டிருந்த லாக்ஹார்ட்டின் முகங்களின்மீது கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடியது. ஹாரி விண்ணென்று தெறித்துக் கொண்டிருந்த தனது விரல்களைக் கொண்டு, ஆயிரமாவது கடிதம்போலத் தோன்றிய அஞ்சலுறையின்மீது வெரோனிகா ஸ்மெத்லீயின் முகவரியை எழுதினான். தான் அங்கிருந்து கிளம்புவதற்கான நேரம் சீக்கிரமாக வந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று அவன் நினைத்தான்.

பின் திடீரென்று அவனுக்கு ஏதோ சத்தம் கேட்டது. அது மெழுகுவர்த்திகள் ‘டப்’பென்று அணைந்த சத்தமோ அல்லது தனது ரசிகர்கள் குறித்த லாக்ஹார்ட்டின் பிதற்றலோ அல்ல.

அது ஒரு குரல்! எலும்பு மஜ்ஜையை உறைய வைக்கும் ஒரு குரல்! அசர அசர வைக்கின்ற, ஆனால் அதே சமயம் நஞ்சில் தோய்த்தெடுக்கப்பட்டிருந்ததைப் போன்ற ஒரு குரல்!

“வா! … என்னருகே வா!… நான் உன்னைக் குதறப் போகிறேன் . நான் உன்னைக் குத்திக் கிழிக்கப் போகிறேன்… நான் உன்னைக் கொல்லப் போகிறேன்…”

ஹாரி துள்ளிக் குதித்தான். வெரோனிகா ஸ்மெத்லீயின் முகவரியின்மீது இளம் ஊதா நிறப் பேனா மை கொட்டியது.

“என்ன?” என்று அவன் சத்தமாகக் கேட்டான்.

“அதுவா? அதிகமாக விற்பனையாகும் புத்தகங்களின் பட்டியலில் அது ஆறுமாத காலம் தொடர்ந்து இடம்பெற்றது. அது அதற்கு முந்தைய எல்லாச் சாதனைகளையும் முறியடித்தது,” என்று லாக்ஹார்ட் கூறினார்.

ஹாரி பெரும் பதற்றத்துடன், “நான் அதைக் கேட்கவில்லை” என்று கூறினான். “அந்தக் குரல்!”

“ஹாரி, மன்னிக்க வேண்டும். எந்தக் குரல்?” என்று லாக்ஹார்ட் கேட்டார்.

“இப்போது ஒரு குரல் கேட்டதே அது உங்களுக்குக் கேட்கவில்லையா?”

லாக்ஹார்ட் ஹாரியைப் பெரும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

“ஹாரி, நீ என்ன உளறிக் கொண்டிருக்கிறாய்? உனக்கு நன்றாகத் தூக்கம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். அடக் கடவுளே! கடிகாரத்தைப் பார்! நாம் இங்கு நான்கு மணி நேரமாக உட்கார்ந்திருக்கிறோம். என்னால் நம்பவே முடியவில்லை. நேரம் பறந்துவிட்டது. இல்லையா, ஹாரி?”

ஹாரி அதற்கு பதிலளிக்கவில்லை. அவன் அக்குரலை மீண்டும் கேட்கத் தனது காதுகளைத் தீட்டிக் கொண்டான். ஆனால், “உன்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் ஒவ்வொரு முறையும் இது மாதிரி அற்புதமான, ஆனந்தமான சந்தர்ப்பம் உனக்குக் கிடைக்கும் என்று நீ எதிர்பார்க்கக்கூடாது,” என்று லாக்ஹார்ட் கொண்டிருந்ததைத் தவிர வேறு எந்தச் சத்தமும் அவனுக்குக் கூறிக் கேட்கவில்லை. திகைப்பில் இருந்து விடுபடாதவனாய் ஹாரி அங்கிருந்து கிளம்பினான்.

அவன் மிகவும் தாமதமாக வந்திருந்ததால், கிரிஃபின்டார் பொது அறை கிட்டத்தட்டக் காலியாக இருந்தது. ஹாரி நேராகத் தன் படுக்கைக்குச் சென்றான். ரான் இன்னும் வந்திருக்கவில்லை. ஹாரி பைஜாமாவுக்கு மாறிவிட்டுத் தன் படுக்கையில் ஏறிப் படுத்துக் கொண்டு ரானுக்காகக் காத்திருக்கத் துவங்கினான். அரைமணி நேரம் கழித்து தன் கையைத் நீவிவிட்டுக் கொண்டு, வலுவான பளிச்சூட்டல் திரவ வாடையைத் துணைக்கழைத்துக் கொண்டு ரான் அந்த இருண்ட அறைக்குள் நுழைந்தான்.

ரான் தன் படுக்கையில் ஏறிப் படுத்துக் கொண்டே, “என் தசைகள் பிடித்துக் கொண்டுள்ளன,” என்று முனகினான். “நான் அந்தக் குவிடிச் கோப்பையைப் பதினான்கு முறை பளிச்சூட்டிய பிறகுதான் அவருக்குத் திருப்தி ஏற்பட்டது. பள்ளிக்குச் சேவை புரிந்ததற்காக வழங்கப்படும் சிறப்பான சேவைக்கான கோப்பை ஒன்றின் மீது நான் வாந்தி எடுத்தேன். அதைக் கழுவித் துடைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ஆமாம், லாக்ஹார்ட்டுடன் உன் பொழுது எப்படிப் போனது?”

பக்கத்துப் படுக்கைகளில் படுத்துக் கிடந்த நெவில், டீன், மற்றும் சீமஸை எழுப்பிவிடக்கூடாது என்பதற்காக ஹாரி தன் குரலைத் தாழ்த்திக் கொண்டு, லாக்ஹார்ட்டின் அறையில் தனக்கு மட்டுமே கேட்டக் குரலைப் பற்றி ரானிடம் அப்படியே எடுத்துரைத்தான்.

“ஆனால் லாக்ஹார்ட் அக்குரல் தனக்குக் கேட்கவில்லை என்று கூறினார், அப்படித்தானே?” என்று ரான் கேட்டான். நிலா வெளிச்சத்தில் ரான் தன் நெற்றியைச் சுருக்கிக் கொண்டதை ஹாரி பார்த்தான். “அவர் பொய் கூறியிருந்ததாக நீ நினைக்கிறாயா? ஆனால் எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரிபடவில்லை. ஒருவர் மற்றவர்களின் பார்வைக்குப் படாமல் இருந்தாலும்கூட, அறைக்குள் வரும்போது எப்படியும் கதவைத் திறந்துதானே உள்ளே வர வேண்டும்?”

“நீ கூறுவது சரிதான்,” என்று கூறிய ஹாரி தன் படுக்கையில் மல்லாந்து படுத்துக் கொண்டு மேற்கூரையை வெறித்துக் கொண்டிருந்தான். “அதுதான் எனக்கும் புரியவில்லை.”

8. இறந்தநாள் விழா

மைதானத்திலும் அக்டோபர் மாதம் பிறந்தவுடன் கோட்டைக்குள்ளும் ஈரப்பதத்துடன்கூடிய குளிர் பரவத் துவங்கியது. அதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே சளிக் காய்ச்சல் பரவத் துவங்கியதால், மருத்துவமனையின் பொறுப்பாளரான மேடம் பாம்ஃபிரே பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தார். அவர் கொடுத்தக் குறுமிளகுக் கஷாயம், அதைக் குடித்தவர்களின் காதுகளிலிருந்து பல மணிநேரத்திற்குப் புகையை வரவழைத்தாலும் உடனடியாக வேலை செய்தது. ஒட்டடைக்குச்சிபோல மெலிந்து போயிருந்த ஜின்னியை, அந்த மாயத் திரவத்தைக் குடிக்குமாறு பெர்சி எப்படியோ மசிய வைத்திருந்தான். அவளது செந்நிறத் தலைமுடிக்குள்ளிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருந்த புகை அவளது தலையில் நெருப்புப் பற்றியிருந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.

துப்பாக்கிக் குண்டுகளின் அளவில் இருந்த மழைத்துளிகள் நாள் முழுவதும் இடைவிடாது கோட்டையின் சன்னல்களின்மீது மோதி பலத்தச் சத்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன; ஏரியில் தண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது; பூந்தோட்டங்கள் சகதிக்காடாய்க் காட்சியளித்தன; ஹாக்ரிட்டின் பூசணிக்காய்கள், தோட்டத்தில் போடப்பட்டிருந்த கொட்டகையின் அளவுக்குப் பெரிதாக வளர்ந்திருந்தன. ஆனால் தொடர்ந்து குவிடிச் விளையாட்டுப் பயிற்சி எடுக்க வேண்டும் என்ற உட்டின் தணியாத தாகத்தை மட்டும் அந்த வானிலையால் தணிக்க முடியவில்லை. அதனால்தான் ஹாலோவீன் தினத்திற்கு ஒருசில நாட்களுக்கு முந்தைய ஒரு சனிக்கிழமை மதியத்தில், சேற்றால் அபிஷேகம் செய்யப்பட்டுத் தொப்பலாக நனைந்திருந்த நிலையில், ஹாரி, கிரிஃபின்டார் கோபுரத்திற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தான்.

அன்றைய பயிற்சி அவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக இல்லாமல் போனதற்கு அன்று பெய்த அடைமழையும், வீசிய பலமான காற்றும் மட்டுமே காரணமல்ல. ஸ்லிதரின் குழுவினரை வேவு பார்த்து வந்த ஃபிரெட்டுக்கும் ஜார்ஜுக்கும் அந்தப் புதிய நிம்பஸ் 2001 மந்திரத் துடப்பத்தின் வேகத்தைத் தங்கள் கண்களால் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்புக் கிடைத்திருந்தது. செங்குத்தாக மேலே ஏறவும் கீழே இறங்கவும்கூடிய ஜெட் விமானத்தைப்போல ஸ்லிதரின் அணியினர் வேகமாகப் பறந்து கொண்டிருந்தபோது, ஏழு பச்சை நிறப் புள்ளிகளாக மட்டுமே அவர்கள் தெரிந்ததாக ஃபிரெட்டும் ஜார்ஜும் தெரிவித்தனர்.

தன்மீதிருந்து கொட்டிக் கொண்டிருந்த நீர், தரையில் தெறித்தச் சத்தத்தின் ஊடாக, ஆளரவமற்று இருந்த தாழ்வாரத்தில் ஹாரி நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவனைப்போலவே யோசனையில் மூழ்கிப் போயிருந்த வேறொன்றை அவன் சந்தித்தான். அது கிரிஃபின்டார் கோபுரத்தின் ஆவியான ‘கிட்டத்தட்டத் தலையில்லாத நிக்’ அந்த ஆவி வாட்டமான முகத்தோடு சன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டு, “அடிப்படைத் தகுதி எனக்கில்லை. அரை அங்குலம்தான்… அது மட்டும்…” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

“ஹலோ, நிக்!” என்று ஹாரி கூறினான்.

“ஹலோ, ஹலோ,” என்று கூறிய நிக் பின்னால் திரும்பிப் பார்த்தது. கண்ணைக் கவரும் விதத்தில் இருந்த, அழகிய குஞ்சத்துடன்கூடிய ஒரு தொப்பியை அது தனது நீண்ட, சுருண்ட அணிந்திருந்தது. அது அணிந்திருந்த தலைமுடியின் மீது காலருடன்கூடிய அங்கி, கிட்டத்தட்டத் துண்டிக்கப்பட்டிருந்த அதன் கழுத்தை முற்றிலுமாக மறைத்திருந்தது. அந்த ஆவி வெண்புகைபோல வெளுத்திருந்தது. வெளியே தெரிந்த இருண்ட வானத்தையும் பலத்த மழையையும் ஹாரியால் அதன் உடலின் வழியாகப் பார்க்க முடிந்தது.

“ஹாரி பாட்டர், ஏன் மனக்கலக்கத்துடன் இருக்கிறாய்?” என்று கேட்டுவிட்டு, அந்த ஆவி தன் கையில் வைத்திருந்த, ஒளி ஊடுருவக்கூடிய விதத்தில் அமைந்திருந்த ஒரு கடிதத்தை மடித்துத் தன் கோட் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டது.

“நீயும் அப்படிதான் இருக்கிறாய்,” என்று ஹாரி பதிலளித்தான்.

“ஆ!” என்று கூறிய நிக், ‘ஒன்றுமில்லை’ என்பதுபோல நளினமாகக் கையசைத்துவிட்டு, “இது காசு பெறாத விஷயம் . . நான் உண்மையிலேயே அதில் சேர விரும்புகிறேன் என்று அர்த்தமில்லை விண்ணப்பித்தாவது வைக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் எனக்கு அதற்குத் தகுதி இல்லை என்பதுபோலத் தெரிகிறது,” என்று புலம்பியது.

அது விட்டேத்தியாகப் பேசியதுபோலத் தோன்றினாலும் அதன் முகத்தில் கசப்புத் தொக்கி நின்றது.

அது திடீரென்று துள்ளிக் குதித்துத் தன் பாக்கெட்டில் இருந்து அக்கடிதத்தை வெளியே எடுத்து, “கூர்மையில்லாத ஒரு கோடாலியால் கழுத்தில் நாற்பத்தைந்து முறை வெட்டப்பட்ட ஒரு நபர், ‘ஹெட்லெஸ் ஹன்ட்’ அமைப்பில் சேரத் தகுதி வாய்ந்தவர்தானே?” என்று கேட்டது. ஒத்துக் கொள்வதைத் தவிர ஹாரிக்கு வேறு வழி இருக்கவில்லை. அதனால், “ஆமாம்! இதிலென்ன சந்தேகம்?” என்றான்.

“என் கழுத்து ஒழுங்காகவும் விரைவாகவும் வெட்டப்பட்டு, என் தலை துண்டிக்கப்பட்டிருந்தால், மற்ற தேவையில்லாமல் கடுமையான வலியை நான் அனுபவித்திருக்க எல்லோரையும்விட நான்தான் அதிக மகிழ்ச்சி அடைந்திருப்பேன், வேண்டாம். அதோடு, தேவையற்றப் பரிகாசத்திற்கும் நான் ஆளாகி இருந்திருக்க மாட்டேன். ஆனாலும்…” அது தன் கடிதத்தைப்பிரித்துச் சீற்றத்துடன் படிக்கத் துவங்கியது.

“தங்கள் உடலிலிருந்து தலை முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளவர்களை மட்டுமே உறுப்பினர்களாக எங்களால் ஏற்றுக் கொள்ள முடியும். இல்லையெனில், ‘குதிரைகளில் இருந்தபடியே தலைகளைப் பந்தாடுதல்,’ ‘தலையுருட்டும் போலோ’ ஆகிய சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது எங்கள் உறுப்பினர்களுக்கு இயலாத காரியமாகிவிடும் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறோம். அதனால் நீங்கள் எங்களுடைய சங்கத்தில் உறுப்பினராவதற்குத் தகுதி பெறவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துக்களுடன், சர் பேட்ரிக் டிலன்சி-பாட்மோர்.”

நிக் தன் மனத்திற்குள் புகைந்து கொண்டே அக்கடிதத்தை மீண்டும் மடித்து உள்ளே வைத்தது.

“ஹாரி, வெறும் அரை அங்குலத் தசை நாரும் தோலும் மட்டுமே என் கழுத்தை என் தலையோடு ஒட்டிப் பிடித்து வைத்துள்ளன. பெரும்பாலானவர்கள் என்னை முண்டம் என்று சொல்லத் தயங்க மாட்டார்கள். ஆனால் இந்த சர் பேட்ரிக் டிலன்சி-பாட்மோருக்கு அது பத்தாதாம்!”

பின், நிக் ஆழமாக மூச்சிழுத்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, கொஞ்சம் அமைதி அடைந்த குரலில், ” ஆமாம், உனக்கு என்ன பிரச்சனை? என்னால் உனக்கு ஏதாவது உதவ முடியுமா?” என்று கேட்டது.

“முடியாது,” என்று ஹாரி கூறினான். “ஸ்லிதரின் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும்போது எங்களுக்கு ஏழு நிம்பஸ் 2001 மந்திரத் துடப்பங்களை உன்னால் ஏற்பாடு செய்து கொடுக்க முடியாதவரை –”

ஹாரியின் மீதி வார்த்தைகள், அவனது கணுக்கால்களுக்கு அருகே எங்கோ இருந்து வந்த, மிகவும் உச்சஸ்தாயியில் ஒலித்த ஒரு பூனைச் சத்தத்தில் மூழ்கின. அவன் கீழே குனிந்தபோது, விளக்குப்போல ஒளிர்ந்து கொண்டிருந்த ஒரு ஜோடி மஞ்சள் நிறக் கண்களை அங்கு அவன் சந்தித்தான். அது நாரிஸ் பூனை. சாம்பல் நிறத்தில் இருந்த அப்பூனையைக் கண்காணிப்பாளர் ஃபில்ச், மாணவர்களுக்கு எதிரான தன்னுடைய யுத்தத்தில் தனது வலது கரமாகப் பயன்படுத்தி வந்தார்.

“ஹாரி, நீ சீக்கிரமாக இந்த இடத்தைக் காலி செய்துவிடுவது நல்லது” என்று நிக் அவசர அவசரமாகக் கூறியது, ஃபில்ச் இன்று சரியான மனநிலையில் இல்லை. அவருக்குக் சளிக் காய்ச்சல். அதோடு, ஐந்தாம் எண் நிலவறையின் உத்தரத்தில், மூன்றாம் வருட இறைத்துவிட்டனர்; காலைநேரம் முழுவதும் ஃபில்ச் அதைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். நீ இப்போது எல்லா இடங்களிலும் சேற்றையும் சகதியையும் கொட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தால்…”

“சரி, நான் போகிறேன்,” என்று கூறிய ஹாரி, தன்னைக் குற்றம் சாட்டும் விதத்தில் முறைத்துக் கொண்டிருந்த நாரிஸ் பூனையின் பார்வையிலிருந்து விலகிப் பின்வாங்கினான். ஆனால் அதற்குள் நேரம் கடந்துவிட்டிருந்தது. தன்னுடைய கேடுகெட்டப் பூனையோடு ஓர் இனம் புரியாத தொடர்பு வைத்திருந்த ஃபில்ச், மூச்சிறைக்க, ஹாரியின் வலப்புறத்தில் இருந்த ஓர் ஓவியத் திரையிலிருந்து திடீரென்று வெளிவந்தார். பள்ளி விதியை மீறியிருந்த அவனை அவர் கோபமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். வண்ணக் கோடுகள் போடப்பட்டிருந்த கம்பளிச் சால்வையை அவர் தன் தலையைச் சுற்றிக் கட்டியிருந்தார். அவரது மூக்கு, வழக்கத்திற்கு மாறாக ஊதா வண்ணத்தில் இருந்தது.

ஃபில்ச், துடித்துக் கொண்டிருந்த தன் தாடை எலும்புகளுடனும், ஆபத்தான விதத்தில் வெளியே துருத்திக் கொண்டிருந்த கண்களுடனும் ஹாரியின் குவிடிச் அங்கியிலிருந்து சொட்டிக் கொண்டிருந்த சேற்றுக் குட்டையைச் சுட்டிக்காட்டி, “இந்த இடத்தை நாசம் பண்ணிவிட்டாய்!” என்று கூப்பாடு போட்டார். “எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாக இருக்கிறது. இதற்கு மேல் தாங்காது. ஹாரி பாட்டர், என் பின்னால் வா!”

ஹாரி நிக்கை நோக்கிச் சுரத்தே இல்லாமல் ‘போய் வருகிறேன்’ என்று கையை ஆட்டிவிட்டு, ஃபில்ச்சின் பின்னால் மீண்டும் கீழ்த்தளத்திற்குப் போனான். வந்த வழியே அவன் திரும்பிப் போனபோது தன் சகதிக் காலடித் தடங்களை இரட்டிப்பாக்கிக் கொண்டே சென்றான்.

ஹாரி இதற்கு முன்பு ஒருபோதும் ஃபில்ச்சின் அலுவலகத்திற்குள் நுழைந்திருந்ததில்லை. அந்த இடத்தைப் பெரும்பாலான மாணவர்கள் தவிர்த்து வந்தனர். சன்னல்கள் எதுவும் இல்லாத அந்த அறை இருட்டாகவும் அழுக்காகவும் இருந்தது. அதன் தாழ்வான கூரையிலிருந்து ஒரே ஓர் எண்ணெய் விளக்கு மட்டும் தொங்கிக் கொண்டிருந்தது. வறுத்த மீனின் வாசம் அங்கு சுற்றிக் கொண்டிருந்தது. அறைச் சுவர்களைச் சுற்றிலும் மரத்தினாலான ஆவண அலமாரிகள் இருந்தன. அவற்றின்மீது ஒட்டப்பட்டிருந்த பெயர்க் குறிப்புகளைப் பார்த்தபோது, ஃபில்ச்சால் தண்டிக்கப்பட்ட மாணவர்கள் எல்லோரையும் பற்றிய தகவல்கள் அவற்றில் இடம்பெற்றிருந்ததை ஹாரியால் கண்டுகொள்ள முடிந்தது. ஃபிரெட்டுக்கும் ஜார்ஜுக்கும் ஒரு மொத்த இழுப்பறையே ஒதுக்கப்பட்டிருந்தது. ஃபில்ச்சின் மேசைக்குப் பின்னால் இருந்த சுவரில், பளபளவென்று பளிச்சூட்டப்பட்டிருந்த பிணைச் சங்கிலிகளும் கைவிலங்குகளும் தொங்கவிடப்பட்டிருந்த மாணவர்களின் கணுக்கால்களைக் கட்டி உத்தரத்திலிருந்து அவர்களைத் தலைகீழாகத் தொங்கவிடுவதற்குத் தன்னை அனுமதிக்குமாறு அவர் டம்பிள்டோரை நச்சரித்துக் கொண்டிருந்து எல்லோரும் அறிந்த விஷயமே.

ஃபில்ச் தனது மேசையின்மீது இருந்த ஒரு கலயத்திலிருந்து ஓ இறகுப் பேனாவை எடுத்துக் கொண்டு, தோல் காகிதம் ஒன்ற்றகாகத் தட்டழிந்து கொண்டிருந்தார்.

‘சாணி,’ என்று அவர் கோபமாகக் கத்தினார். “சூடாகச் இந்க கொண்டிருக்கும் டிராகன் மூக்குச் சளி..தவளை மூளைகலள்… எலிக் குடல்கள்… கருமம், கருமம்…நல்ல முன்னுதாரணம்.. படிவம் எங்கே?ஆ. இதோ இருக்கிறது!’

அவர் ஒரு பெரிய தோல் காகிதத்தைத் தனது மேசை இழுப்பறையில் இருந்து வெளியே எடுத்து, அதைத் தன் முன்னா, நீட்டிப் பிடித்து, இறகுப் பேனாவை மையில் முக்கினார்.

“பெயர்? ஹாரி பாட்டர்..குற்றம்?…”

“கொஞ்சம் சகதி!” என்று ஹாரி கூறினான்.

“உனக்கு வேண்டுமானால் அது கொஞ்சம் சகதியாக இருக்கலாம்.. ஆனால் என்னைப் பொறுத்தவரை, ஒரு மணிநேரம் செலவழித்துக் கழுவிவிட வேண்டிய அதிகப்படியான வேலை!” என்று ஃபில்ச் இரைந்தார். “குற்றம்? … கோட்டையில் துர்நாற்றத்தை ஏற்படுத்தியது பரிந்துரைக்கப்படும் தண்டனை? ..”

ஒழுகிக் கொண்டிருந்த தனது மூக்கைத் துடைத்தவாறு, ஃபில்ச் தன் கண்களைக் குறுக்கிக் கொண்டு ஹாரியைப் பார்த்தார். ஹார் தனக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறதோ என்று பயத்துடன் தன் மூச்சை அடக்கிக் கொண்டு காத்திருந்தான்.

ஃபில்ச் அவனுக்கான தண்டனையை எழுதுவதற்காகக் குனிந்தபோது, அந்த அறையின் மேற்கூரையில் ‘டமால்’ என்று ஒரு பெரிய சத்தம் கேட்டது. அதனால் அங்கிருந்த எண்ணெய் விளக்குக் கடகடவென ஆடியது.

ஃபில்ச் பெருங்கோபத்துடன் தன் கையிலிருந்த இறகுப் பேனாவைத் தூக்கி எறிந்துவிட்டு, “பீவ்ஸ்!” என்று காட்டுக் கூச்சல் போட்டார். “இம்முறை நான் உன்னை விடப் போவதில்லை. நீ என்னிடம் வசமாக மாட்டிக் கொள்ளப் போகிறாய்!”

பின் ஹாரியைத் திரும்பிக்கூடப் பார்க்காமல், தன் சப்பைக் கால்களை இழுத்துக் கொண்டு தன் அலுவலகத்திலிருந்து வேகமாக வெளியே ஓடினார். அவரது நாரிஸ் பூனையும் மின்னலெனப் பாய்ந்து அவருடன் ஓடியது.

வழக்கமாகப் பெரும் சத்தத்தை ஏற்படுத்திக் கொண்டும், பொருட்களைக் கன்னாபின்னாவென்று தூக்கி எறிந்து கொண்டும் இருந்த ஆவிதான் பீவ்ஸ். அது எப்போதும் பல்லைக் காட்டிக் கொண்டு காற்றில் அலைந்தபடி, பேரழிவையும் இடர்பாடுகளையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தது. ஹாரிக்குப் பீவ்ஸை அவ்வளவாகப் பிடிக்காது. ஆனால் இம்முறை அது ரகளை செய்யத் தேர்ந்தெடுத்த நேரம் குறித்து அவன் நன்றியுடையவனாக இருந்தான். பீவ்ஸ் என்ன ரகளை செய்ததோ தெரியாது, ஆனால் ஃபில்ச்சிடம் இருந்து தன்மீதான கவனத்தைத் திருப்ப அது போதுமானதாக இருக்கும் என்று ஹாரி நம்பினான். இம்முறை பீவ்ஸ் மிகப் பெரிதாக எதையோ நாசம் செய்திருக்க வேண்டும் என்று ஹாரிக்குத் தோன்றியது.

ஃபில்ச் வரும்வரை தான் காத்திருப்பது நல்லது என்று ஹாரி முடிவு செய்துவிட்டு, அவரது மேசைக்குப் பக்கத்தில் இருந்த, அந்துப்பூச்சிகள் அரித்திருந்த ஒரு நாற்காலியில் தொப்பென விழுந்தான். அவரது மேசையின்மீது, பாதி நிரப்பப்பட்டிருந்த தனது படிவத்தைத் தவிர இன்னும் ஒன்றே ஒன்று மட்டும் இருந்தது. ஒரு பெரிய, பளபளவென்றிருந்த, ஊதா நிற அஞ்சலுறைதான் அது. அதன் முகப்பில் வெள்ளி எழுத்துக்களில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. ஃபில்ச் திரும்பி வந்து கொண்டிருக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வாசலை நோட்டம் விட்டுவிட்டு, ஹாரி அந்த அஞ்சலுறையை எடுத்துப் படித்தான். அதில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது:

குவிக்ஸ்பெல்

துவக்க நிலை மாயாஜாலத்திற்கான அஞ்சல் வழிக் கல்வி

அது ஹாரியின் ஆவலைத் தூண்டியதால், அவன் அந்த அஞ்சலுறையைப் பிரித்து அதனுள் இருந்த ஒரு கட்டுத் தோல் காகிதங்களை வெளியே எடுத்தான். முதல் பக்கத்தில் அழகான வெள்ளி எழுத்துக்களில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது:

உலகில் நீங்கள் சரியாகப் நவீன மாயாஜால பொருந்தவில்லையா? வெகு சாதாரண மந்திர வசியங்களைக்கூட உங்களால் செய்ய முடியவில்லையா? உங்களுடைய மந்திரக்கோலை நீங்கள் இயக்கும் விதத்தை உங்களாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லையா?

இதோ அதற்கான தீர்வு!

புத்தம் புதிய, தோல்விக்கான சாத்தியமே இல்லாத, உடனடிப் பலன் தருகின்ற, நீங்கள் மிக எளிதாகக் கற்றுக் கொள்ளக்கூடிய பயிற்சித் திட்டம்தான் ‘குவிக்ஸ்பெல்.’ எங்களுடைய இந்தப் பயிற்சித் திட்டத்தின் மூலம் நூற்றுக்கணக்கான மந்திரவாதிகளும் மந்திரவாதினிகளும் பயனடைந்துள்ளனர்.

டாப்ஷேமைச் சேர்ந்த மேடம் நெட்டில்ஸ் இப்பயிற்சித் திட்டம் குறித்து இவ்வாறு தெரிவிக்கிறார்:

“மந்திரங்களை உருத்தட்டுவது எனக்குச் சரிப்பட்டு வரவில்லை. நான் கலக்கும் மாயத் திரவங்களைப் பார்த்து என் குடும்ப உறுப்பினர்களே எள்ளி நகையாடுவர். ஆனால் ‘குவிக்ஸ்பெல்’ பயிற்சித் திட்டத்திற்குப் பிறகு, நான் கலந்து கொள்ளும் கேளிக்கை விருந்துகளில் எல்லோருடைய கவனமும் இப்போது என் பக்கம்தான் இருக்கின்றது. என்னுடைய ‘ஸின்டிலேஷன் ஸொல்யூஷன்’ மாயத் திரவத்தை எப்படித் தயாரிப்பது என்று கேட்டு என் நண்பர்கள் என்னைத் துளைத்தெடுத்து வருகிறார்கள்.”

டிட்ஸ்பரியைச் சேர்ந்த வார்லாக் டி. ஜே. புரோட் இவ்வாறு கூறுகிறார்:

“என்னுடைய பலவீனமான மந்திரதந்திரங்களைப் பார்த்து என் மனைவிக்கு இளக்காரமாக இருக்கும். ஆனால் நான் உங்களுடைய ‘குவிக்ஸ்பெல்’ பயிற்சித் திட்டத்தில் சேர்ந்த ஒரு மாதத்திற்கு உள்ளாகவே, நான் என்னுடைய மனைவியை ‘யாக்’ எருதாக மாற்றிவிட்டேன். ‘குவிக்ஸ்பெல்,’ உனக்கு என் மனமார்ந்த நன்றிகள்!”

ஆச்சரியமும் திகைப்பும் அடைந்த ஹாரி அதன் மீதிப் பக்கங்களையும் புரட்டினான். ஃபில்ச், போயும் போயும் எதற்காகக் ‘குவிக்ஸ்பெல்’ பயிற்சியில் சேர வேண்டும்? அப்படியானால் அவர் ஒரு முழுமையான மந்திரவாதி இல்லையா? ‘பாடம் ஒன்று: உங்களுடைய மந்திரக்கோலைப் பிடிக்கும் முறை (சில உபயோகமான தகவல்கள்)’ என்ற வரிகளை ஹாரி படித்துக் கொண்டிருந்தபோது, அந்த அறைக்கு வெளியே, ஃபில்ச் வந்து கொண்டிருந்ததை அறிவித்தக் காலடி ஓசை கேட்டது. ஹாரி அந்தத் தோல் காகிதங்களை அந்த அஞ்சலுறைக்குள் திணித்து, அதை அவரது மேசையின்மீது தூக்கி எறியவும் வாசற்கதவு திறக்கவும் சரியாக இருந்தது.

ஃபில்ச் வெற்றி வீரன்போலக் காட்சியளித்தார்.

“மறையக்கூடிய அந்த அலமாரி மிகவும் மதிப்பு வாய்ந்தது,” என்று அவர் தன் பூனையிடம் களிப்புடன் கூறிக் கொண்டிருந்தார். “என் செல்லமே, இம்முறை நாம் பீவ்ஸை வெளியே தூக்கி எறிந்துவிடலாம்”

அவரது பார்வை முதலில் ஹாரியின்மீதும் பின் அந்த ‘குவிக்ஸ்பெல்’ அஞ்சலுறையின்மீதும் படிந்தது. ஆனால் அந்த அஞ்சலுறை முதலில் இருந்த இடத்தைவிட்டு இரண்டடி தள்ளிக் கிடந்ததை ஹாரி அப்போதுதான் கவனித்தான். ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டிருந்தது.

சோகையால் வீங்கிப் போயிருந்த ஃபில்ச்சின் முகம் ரத்தச் சிவப்பாக மாறியது. அடுத்து அலையென வரவிருந்த கோபத் தாக்குதல்களுக்கு ஹாரி தன்னைத் தயார்படுத்திக் கொண்டான். ஃபில்ச் கெந்திக் கெந்தி நடந்து தன் மேசை அருகே சென்று, அந்த அஞ்சலுறையைப் படாரென்று எடுத்து மேசையின் இழுப்பறையினுள் தூக்கி எறிந்தார்.

“நீ அதைப் படித்தாயா? -” அவர் தடுமாறினார்.

“இல்லை,” என்று ஹாரி அவசர அவசரமாகப் பொய் சொன்னான்.

முடிச்சுக்கள் விழுந்திருந்த ஃபில்ச்சின் கைகள் திருகிக் கொண்டன.

“எனக்கு வந்தத் தனிப்பட்ட கடிதத்தை மட்டும் நீ படித்திருந்ததாக எனக்குத் தோன்றினால் முதலில் அது என்னுடைய கடிதமே அல்ல.. அது என் நண்பர் ஒருவருடையது..ஆனால்..”

ஹாரி அச்சத்துடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். ஃபில்ச் இவ்வளவு வெறி கொண்டு அவன் அதுவரை பார்த்திருக்கவில்லை. அவரது கண்கள் வெளியே புடைத்துக் கொண்டிருந்தன. உப்பிப் போயிருந்த அவரது கன்னங்களில் ஒன்று துடித்துக் கொண்டிருந்தது. அவர் தன் தலையில் கட்டியிருந்த வண்ணச் சால்வையும் பயமுறுத்துவதாகவே இருந்தது.

“சரி, இங்கிருந்து ஓடிப் போய்விடு! . . . இது பற்றி யாரிடமும் மூச்சுவிட்டுவிடாதே! அது ஒன்றும் அவ்வளவு முக்கிய . . . நீ அதைப் படிக்கவில்லை எனும் பட்சத்தில் இந்த இடத்தை உடனே காலி செய்துவிடு நான் பீவ்ஸ் பற்றிய அறிக்கையை எழுத வேண்டும் ஓடிப் போ!..”

ஹாரி தன் அதிர்ஷ்டத்தை வாழ்த்திக் கொண்டே அந்த அலுவலகத்திலிருந்து ஓட்டமெடுத்தான். முதலில் தாழ்வாரத்திற்கு வந்து, பின் அங்கிருந்து மாடிக்கு விரைந்தான். ஃபில்ச்சின் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின் தண்டனை எதுவும் கிடைக்காமல் தப்பியது பள்ளியில் ஒரு பெரிய சாதனையாக இருக்க வேண்டும்.

“ஹாரி! ஹாரி! என் தந்திரம் வேலை செய்ததா?”

நிக் ஒரு வகுப்பறையிலிருந்து வழுக்கிக் கொண்டு வந்தது. பீவ்ஸுக்குப் பின்னால் கருப்பு மற்றும் தங்க நிறத்தில் இருந்த ஒரு பெரிய அலமாரி உடைந்து சிதறிக் கிடந்ததை ஹாரி கண்டான். அது பெரும் உயரத்திலிருந்து கீழே தூக்கிப் போடப்பட்டு இருந்ததுபோலத் தோன்றியது.

“ஃபில்ச்சின் அறைக்கு நேர்மேலே இருந்த அறையில் அந்த அலமாரியைத் தூக்கிப் போட்டு உடைக்க நான் பீவ்ஸை இணங்க வைத்தேன்,” என்று நிக் ஆவலாகக் கூறியது. “அது அவரது கவனத்தைத் திசை திருப்பும் என்று நான் நினைத்தேன் -“

“ஆஹா, அது உன் வேலைதானா?” என்று ஹாரி நன்றிப்பெருக்குடன் கேட்டான். “ஆமாம், அது நன்றாகவே வேலை செய்தது. எனக்கு ஒழுங்கு நடவடிக்கைத் தண்டனைகூடக் கொடுக்கப்படவில்லை. நன்றி, நிக்.”

அவர்கள் அந்தத் தாழ்வாரத்தில் சேர்ந்தே நடந்தார்கள். நிக் இன்னும் சர் பேட்ரிக்கின் மறுப்புக் கடிதத்தைத் தன் கையில் வைத்திருந்ததை ஹாரி கவனித்தான்.

“உன்னுடைய ‘ஹெட்லெஸ் ஹன்ட்’ விஷயமாக என்னால் ஏதாவது செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும்,” என்று அவன் கூறினான்.

அடுத்தக் கணம், நிக், தான் நின்ற இடத்திலேயே ஆணி அடித்தாற்போல நின்றது. ஹாரி அதன் உடலினுள் புகுந்து மறுபக்கமாக வெளியேறினான். தான் அவ்வாறு செய்யாமல் இருந்திருக்கலாமோ என்று பிறகு அவனுக்குத் தோன்றியது. ஏனெனில், கடுங்குளிரான நீரில் முழுக்குப் போட்டதுபோல இருந்தது அது.

“உன்னால் எனக்கு ஒரு காரியத்தைச் செய்ய முடியும்,” என்று நிக் பரவசமாகக் கூறியது. “ஹாரி -ஆனால் நான் எனது விருப்பத்தை உன்னிடம் கூறினால், அது உன்னிடம் அளவுக்திகமாகக் கேட்பதுபோல இருக்குமோ என்று நினைக்கிறேன் . . . வேண்டாம் நீ அதை விரும்ப மாட்டாய் . . ‘

“பரவாயில்லை, சொல்,” என்று ஹாரி கூறினான்.

நிக் தன்னை மதிப்புவாய்ந்ததாகக் காட்டிக் கொள்ளும் விதத்தில் தன்னைச் சரி செய்து கொண்டு, “வரும் ஹாலோவீன் தினம் எனது ஐநூறாவது இறந்தநாள்,” என்று கூறியது.

“ஓ, அப்படியா?” என்று ஹாரி கேட்டான். அதற்காக வருத்தப்பட வேண்டுமா அல்லது சந்தோஷப்பட வேண்டுமா என்று அவனுக்கு உறுதியாகத் தெரியவில்லை. “சரி.”

“அதற்காக நான் கீழே உள்ள பெரிய நிலவறை ஒன்றில் ஒரு விருந்து கொடுக்கவிருக்கிறேன். அதற்கு நாடு முழுவதிலும் இருந்து என் நண்பர்களை அழைத்திருக்கிறேன். நீயும் அதில் கலந்து கொண்டால், நான் அதை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுவேன். ரானும் ஹெர்மயனியும் உன்னுடன் வந்தால் இன்னும் சந்தோஷப்படுவேன் – ஆனால் நீ பள்ளியில் நடக்கவிருக்கும் ஹாலோவீன் தின விருந்திற்குப் போகத்தான் விரும்புவாய் என்று எனக்குத் தோன்றுகிறது.” ஹாரி என்ன பதில் கூறப் போகிறான் என்று அது பதற்றத்துடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தது.

“இல்லை, இல்லை,” என்று ஹாரி அவசர அவசரமாகக் கூறினான். “நான் வருகிறேன்”.

“ஆ, பரம சந்தோஷம்! என் இறந்தநாள் விருந்தில் ஹாரி பாட்டர் கலந்து கொள்ளப் போகிறான்!” என்று கூறிய நிக், கொஞ்சம் தயங்கி, “நான் மிகவும் பயங்கரமாகவும் கொடூரமாகவும் தோற்றமளிப்பதாக உன்னால் சர் பேட்ரிக்கிடம் கூற முடியுமா என்று நான் யோசித்துக்
கொண்டிருக்கிறேன்,” என்று சொல்லி முடித்தது.

“கண்டிப்பாக,” என்று ஹாரி கூறினான்.

கிட்டத்தட்டத் தலையில்லாத நிக் அவனைப் பார்த்து வாயெல்லாம் பல்லாகச் சிரித்தது.

ஹாரி ஒருவழியாக உடை மாற்றிக் கொண்டு, பொது அறையில் இருந்த ஹெர்மயனியோடும் ரானோடும் போய்ச் சேர்ந்து கொண்டான். “என்ன, இறந்தநாள் விழாவா?” என்று ஹெர்மயனி ஆர்வத்துடன் கேட்டாள். “உயிரோடு இருக்கும் எவரும் இதற்கு முன்பு இப்படிப்பட்ட ஒரு விருந்தில் கலந்து கொண்டிருக்க மாட்டார்கள் என்று நான் பந்தயம் கட்டத் தயார் – அது பயங்கர ஜாலியாக இருக்கும்!”

மாயத் திரவ வீட்டுப்பாடத்தில் பாதியை மட்டும் முடிந்திருந்த ரான், “ஒருவர் எதற்காகத் தன்னுடைய இறந்தநாளைக் கொண்டாட வேண்டும்?” என்று எரிச்சலுடன் கேட்டான். “எனக்கு அது மிகவும் அலுப்பூட்டும் ஒன்றாகத் தோன்றுகிறது -“

வெளியே மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. ஆனால் உள்ளே அனைத்தும் பிரகாசமாகவும் சந்தோஷக் களிப்புடனும் இருந்தன. கணப்படுப்பிலிருந்து வந்த வெளிச்சம் அந்த அறையில் போடப்பட்டிருந்த எண்ணற்ற மென்மையான நாற்காலிகளில் பட்டு மின்னியது. அதில் உட்கார்ந்திருந்த மாணவர்கள் படித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் வீட்டுப்பாடங்களைச் செய்து கொண்டும் இருந்தனர். அங்கிருந்த ஃபிரெட்டும் ஜார்ஜும் ஃபிலிபஸ்டர் வாணவெடிகளை ‘சலமேன்டர்’ பல்லிக்கு ஊட்டினால் என்ன நடக்கும் என்பதைக் கண்டுபிடிக்க முனைந்து கொண்டிருந்தனர். ‘மாயாஜாலப் பிராணிகளைப் பாதுகாத்தல்’ வகுப்பிலிருந்து, ஃபிரெட், நெருப்பில் வசிக்கும் ஓர் ஆரஞ்சு நிற ‘சலமேன்டர்’ பல்லியைக் ‘காப்பாற்றி’ இருந்தான். அது இப்போது ஒரு மேசையின்மீது நீறு பூத்த நெருப்பாக இளைப்பாறிக் கொண்டிருந்தது. அதைச் சுற்றி, ஆர்வத்துடன் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு கூட்டம் குழுமியிருந்தது.

ஃபில்ச்சைப் பற்றியும் அந்தக் குவிக்ஸ்பெல் பயிற்சித் திட்டத்தைப் பற்றியும் ரானிடமும் ஹெர்மயனியிடமும் ஹாரி விவரிக்கவிருந்த நேரத்தில், திடீரென்று, அந்த ‘சலமேன்டர் பல்லி வானத்தில் சீறிட்டுக் கிளம்பியது. அது அந்த அறையைச் சுற்றிச் சுற்றி வந்தபோது வெடிகளையும் மத்தாப்புக்களையும் உமிழ்ந்து கொண்டே சென்றது. அதைக் கண்ட பெர்சி, ஃபிரெட்டையும் ஜார்ஜையும் கரகரப்பான குரலில் வசைபாடிக் கொண்டிருந்ததும், சலமேன்டரின் வாயிலிருந்து கண்களைக் கவரும் விதத்தில் பிரகாசமான ஆரஞ்சு வண்ண நட்சத்திரங்கள் வெளிவந்ததும், பிறகு அது கணப்படுப்பின் நெருப்பிற்குள் பாய்ந்ததும், அதைத் தொடர்ந்து அந்த நெருப்பினுள் ஏற்பட்ட வெடிச் சத்தங்களும் ஃபில்ச்சையும் குவிக்ஸ்பெல் அஞ்சலுறையையும் ஹாரியின் மனத்திலிருந்து தூக்கி எறிந்துவிட்டிருந்தன.


ஹாலோவீன் தினம் வந்தபோது, இறந்தநாள் விழாவிற்கு வருவதாகத் தான் அவசரப்பட்டு வாக்குக் கொடுத்துவிட்டிருந்ததை நினைத்து ஹாரி பொருமிக் கொண்டிருந்தான். அவனைத் தவிர, பள்ளியில் இருந்த மற்ற மாணவர்கள் அனைவரும் ஹாலோவீன் தின விருந்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். பேரரங்கு வழக்கம்போல நிஜவௌவால்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஹாக்ரிட்டின் பிரம்மாண்டமான பூசணிக்காய்கள் பெரிய விளக்குகளின் வடிவத்தில் செதுக்கப்பட்டிருந்தன. அவை ஒவ்வொன்றினுள்ளும் மூன்று பேர் ஏறி அமரக்கூடிய அளவுக்கு அவை பெரிதாக இருந்தன. ஹாலோவீன் தினத்தன்று கேளிக்கைக்காக, நாட்டியமாடும் எலும்புக்கூடுகள் குழுவொன்றை டம்பிள்டோர் ஏற்பாடு செய்திருந்ததாக ஒரு வதந்தி உலா வந்து கொண்டிருந்தது.

“கொடுத்த வாக்கு, கொடுத்ததுதான்,” என்று அதிகாரத் தொனியில் ஹெர்மயனி ஹாரிக்கு நினைவுபடுத்திக் கொண்டிருந்தாள். “இறந்தநாள் விழாவிற்கு வருவதாக நீ வாக்குக் கொடுத்துவிட்டிருக்கிறாய்.”

அதனால் அன்றிரவு ஏழு மணிக்கு, ஹாரி, ரான், ஹெர்மயனி ஆகிய மூவரும், கூட்டம் அலைமோதிய பேரரங்கின் வாசலைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். அரங்கினுள்ளே ஜொலித்துக் கொண்டிருந்த தங்கத் தட்டுகளும் மெழுகுவர்த்திகளும் ‘உள்ளே வாருங்கள், உள்ளே வாருங்கள்’ என்று அவர்களுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தன. ஆனால் அவர்கள் அந்த அரங்கைக் கடந்து நிலவறையை நோக்கி நடந்தனர்.

நிக்கின் விழாவிற்கு இட்டுச் சென்ற பாதையெங்கும் மெழுகுவர்த்திகள் அணிவகுத்து நின்றன என்றாலும், அவை குதூகலத்தைப் பிரதிபலிக்கவில்லை. நீண்ட, ஒல்லியான, அண்டங்காக்கை நிறத்தில் இருந்த அந்த மெழுகுவர்த்திகள், நீலநிறத்தில் இருந்த மங்கலான அமானுஷ ஒளியை அவர்கள்மீது உமிழ்ந்து கொண்டிருந்தன. அவர்கள் ஒவ்வொரு படியாக இறங்க இறங்க, வெப்பநிலையும் இறங்கிக் கொண்டே வந்தது. ஹாரி குளிரில் நடுங்கிக் கொண்டே தன்னுடைய அங்கியைத் தன்னைச் சுற்றி இறுக்கமாகச் சுற்றிக் கொண்டபோது, ஒரு பெரிய கரும்பலகையில் ஒரே நேரத்தில் ஆயிரம் விரல் நகங்களால் பிராண்டியது போன்ற ஒரு சத்தம் அவனது காதுகளில் விழுந்தது.

“இதன் பெயர்தான் இசையா?” என்று ரான் கிசுகிசுத்தான். அவர்கள் ஒரு திருப்பத்தில் திரும்பியபோது, கருப்பு நிற வெல்வெட் திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டிருந்த ஒரு கதவருகே நிக் நின்று கொண்டிருந்ததைக் கண்டனர்.

துக்கம் தூக்கலாக இருந்த ஒரு குரலில், “என்னருமை நண்பர்களே! வருக, வருக,” என்று நிக் அவர்களை வரவேற்றது. “நீங்கள் வந்தது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி.”

நிக், அழகிய குஞ்சத்துடன்கூடிய தனது தொப்பியைக் கழற்றி, அவர்களுக்குக் குனிந்து வணக்கம் தெரிவித்து அவர்களை உள்ளே அழைத்துச் சென்றது.

உள்ளே இருந்த காட்சி, விவரணத்திற்கு அப்பாற்பட்டு இருந்தது. அந்த நிலவறை முழுவதும், வெண்முத்து நிறத்தில், ஒளி ஊடுருவிச் செல்லக்கூடிய நூற்றுக்கணக்கான உருவங்கள் நிறைந்திருந்தன. அவற்றில் பெரும்பாலானவை நடனத் தளத்தில் நெருக்கியடித்து மிதந்து கொண்டு, கருப்புத் திரைச் சீலைகளால் உருவாக்கப்பட்டிருந்த மேடையிலிருந்த இசைக் குழுவினரின் முப்பது சங்கீத ரம்பங்களிலிருந்து வந்த கோரமான அதிர்விசைக்கு ஏற்பச் சுழல் நடனம் ஆடிக் கொண்டிருந்தன. மேலே தொங்கிக் கொண்டிருந்த சரவிளக்கு இன்னும் ஓராயிரம் கருப்பு மெழுகுவர்த்திகளால் அந்த அறையை நடுநிசி நீலநிறத்தில் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது. அவர்கள் மூவரின் மூச்சுக்காற்றும் பனிப்புகைபோல வெளிவந்து கொண்டிருந்தது. தாங்கள் திடீரென்று உறைபதனப் பெட்டி ஒன்றிற்குள் இறங்கியிருந்ததுபோல அவர்களுக்குத் தோன்றியது.

ஹாரி தன் உடலைச் சூடேற்றிக் கொள்ளும் பொருட்டு, “நாம் இந்த இடத்தைச் சுற்றிப் பார்க்கலாமா?” என்று கேட்டான்.

“ஜாக்கிரதை! யாருக்கு ஊடாகவும் புகுந்துவிடாதீர்கள்,” என்று ரான் நடுக்கத்துடன் கூறினான். அவர்கள் அந்த நடனத் தளத்தைச் சுற்றி ஓரமாக நடக்கத் துவங்கினர். பொலிவின்றி இருந்த கன்னிகாஸ்திரிகளின் கும்பல் ஒன்றையும், சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த ஒரு முரட்டு மனிதனையும், தன் நெற்றியைத் துளைத்திருந்த அம்புடன் இருந்த ஒரு போர் வீரனுடன் பேசிக் கொண்டிருந்த, ஹஃபில்பஃப் அணியைச் சேர்ந்த, எப்போதுமே சந்தோஷமாக இருந்த குண்டு ஃபிரையர் ஆவியையும் அவர்கள் கடந்து சென்றனர். ஒட்டி உலர்ந்து போயிருந்த முகத்துடனும், வெள்ளி ரத்தக் கறைகளுடனும் இருந்த ஸ்லிதரின் அணியைச் சேர்ந்த கொலைகார நவாப் ஆவிக்கு மற்றபிற ஆவிகள் முக்கியத்துவம் கண்டு ஹாரி கொடுத்துப் பேசிக் கொண்டிருந்ததைக் ஆச்சரியப்படவில்லை.

திடீரென்று அப்படியே நின்றுவிட்ட ஹெர்மயனி, “ஐயோ!” என்று அலறினாள். “திரும்புங்கள், திரும்புங்கள்! முனகல் மாட்டிலுடன் பேச நான் விரும்பவில்லை.”

அவர்கள் தாங்கள் வந்த வழியே கொஞ்ச தூரம் வேகமாகப் பின்னால் வந்த பிறகு, ஹாரி, “யார் அது?” என்று கேட்டான். “முதல் மாடியிலிருக்கும் மாணவியரின் குளியலறையில் வாசம் புரியும் ஆவி அது,” என்று ஹெர்மயனி கூறினாள்.

“குளியலறை ஆவியா?”

“ஆமாம். அந்த ஆவி பெரும் ரகளை செய்து அந்த இடத்தை வெள்ளக்காடாக ஆக்கிவிட்டிருந்ததால், கடந்த வருடம் முழுவதும் அந்தக் குளியலறை மூடப்பட்டிருந்தது. நான் ஒருபோதும் அங்கு சென்றதில்லை. அது அங்கே காத்துக் கொண்டிருக்கும்போது அங்கே போவதைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது ”

“அங்கே பார்,” என்று ரான் கத்தினான். “சாப்பாடு!”

அந்தப் பாதாள அறையின் மற்றொரு மூலையில் ஒரு நீண்ட மேசை போடப்பட்டிருந்தது. அதுவும் கருப்பு வெல்வெட் துணியால் ஆனால் அடுத்த நிமிடம் அவர்கள் நிலைகுலைந்து அந்த மூடப்பட்டிருந்தது. அவர்கள் அதை நோக்கி ஆவலாகச் சென்றனர். இடத்திலேயே ஆணி அடித்தாற்போல நின்றுவிட்டனர். அங்கிருந்து கிளம்பிய துர்நாற்றம் குடலைப் பிடுங்கியது. நேர்த்தியான வெள்ளித் கருக்கப்பட்டிருந்த கேக்குகள் பல தாம்பாளங்களில் குவித்து தட்டுகளில் அழுகிய மீன்கள் வைக்கப்பட்டிருந்தன. மரக்கரிபோலக் வைக்கப்பட்டிருந்தன. சிறப்பான புழுக் கொத்திறைச்சியும், பச்சை நிறப் பூஞ்சை பிடித்திருந்த ஒரு பெரிய சீஸ் கட்டியும் அங்கிருந்தன. எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல, மத்தியில் கல்லறைக் கல்லின் வடிவில் பிரம்மாண்டமான சாம்பல் நிற கேக் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. தார்போலத் தோற்றமளித்த ஒன்றினால் அதில் இந்த எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தன:

சர் நிக்கோலஸ் டே மிம்ஸி பார்ப்பிங்டன்
இறந்த நாள்: 31 அக்டோபர் 1492

படு குண்டாக இருந்த ஆவி ஒன்று, அந்த மேசையின் அருகே வந்து குனிந்து தன் வாயைத் திறந்தவாறே, அதில் வைக்கப்பட்டிருந்த ஒரு நாற்றமடித்த சால்மன் மீனின் ஊடாக அதைக் கடந்து சென்றதை ஹாரி பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

“அதன் ஊடாக நடக்கும்போது உன்னால் அதைச் சுவைக்க முடியுமா?” என்று ஹாரி அதனிடம் கேட்டான்.

“கிட்டத்தட்ட,” என்று சோகமாகக் கூறிவிட்டு அது அங்கிருந்து மிதந்து சென்றது.

ஹெர்மயனி தன் மூக்கை இறுக்கிப் பிடித்துக் கொண்டே அந்தப் புழுக் கொத்திறைச்சிக்கு அருகே குனிந்து அதை உற்றுப் பார்த்துவிட்டு, “அதன் நெடி தூக்கலாக இருக்க வேண்டும் என்பதற்காக, தேவைக்கு அதிகமாக அவர்கள் அதை அழுகவிட்டுள்ளனர்,” என்று விஷயம் தெரிந்தவள்போலக் கூறினாள்.

“எனக்கு வயிற்றைப் புரட்டிக் கொண்டு வருகிறது. நாம் கிளம்பலாமா?” என்று ரான் கேட்டான்.

அவர்கள் முழுவதுமாகத் திரும்பிக்கூட இருக்க மாட்டார்கள். அப்போது ஒரு சிறிய உருவம் மேசைக்கு அடியிலிருந்து வெளிப்பட்டு அந்தரத்தில் அவர்கள் முன் வந்து நின்றது.

“ஹலோ, பீவ்ஸ்,” என்று ஹாரி எச்சரிக்கையுடன் கூறினான். போட்டு உடைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த பீவ்ஸ் ஆவி, எப்போதும் சத்தங்களை ஏற்படுத்திய, சாமான்களைத் தூக்கிப் அவர்களைச் சுற்றியிருந்த மற்றபிற ஆவிகளைப் போலன்றி, வெளுத்தும் ஒளிபுகுமாறும் காணப்படவில்லை. மாறாக, அது பிரகாசமான ஆரஞ்சு நிறத் தொப்பி ஒன்றையும் ஒரு சுழல் டையையும் அணிந்திருந்தது. தனது கொடூரமான முகத்தில் குள்ளநரித்தனமான ஒரு பெரிய புன்னகையையும் அது படரவிட்டிருந்தது.

“கொறிக்க ஏதாவது வேண்டுமா?” என்று கேட்டுவிட்டு, பூஞ்சை படர்ந்திருந்த நிலக்கடலைக் கிண்ணம் ஒன்றை அது அவர்களிடம் நீட்டியது.

“கொடுத்ததற்கு நன்றி! ஆனால் வேண்டாம்,” என்று ஹெர்மயனி கூறினாள்.

“நீ அந்த அப்பாவி மர்ட்டிலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது,” என்று பீவ்ஸ் கூறியது. அதன் கண்களில் குறும்புக் கொப்பளித்துக் கொண்டிருந்தது. “ஆனால் நீ மர்ட்டிலைப் பற்றிப் பேசியது மரியாதையற்ற முறையில் இருந்தது.” பின் அது ஆழமாக மூச்சிழுத்துக் கொண்டு, அடிக்குரலில், “ஓ! மர்ட்டில்!” என்று கத்தியது.

“ஓ, பீவ்ஸ், தயவு செய்து நான் கூறியதை மர்ட்டிலிடம் சொல்லிவிடாதே. அது அதற்கு மனவேதனையை ஏற்படுத்தும்,” என்று ஹெர்மயனி கிசுகிசுப்பான குரலில் மன்றாடினாள். “நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை – ஹலோ மாட்டில்!”

ஒரு சிறுமியைப்போல இருந்த அந்த ஆவி அவர்கள் அருகே மிதந்து வந்தது. அது ஹாரி அதுவரை பார்த்திருந்ததிலேயே மிகவும் சோகமான ஒரு முகத்தைக் கொண்டிருந்தது. பாதிப் படிந்து கிடந்த முடியின் பின்னாலும், வெள்ளை வெளேரென்று இருந்த ஒரு தடிமனான மூக்குக்கண்ணாடியின் பின்னாலும் அதன் முகம் மறைந்திருந்தது.

“என்ன?” என்று அந்த ஆவி வேண்டா வெறுப்பாகக் கேட்டது. ஹெர்மயனி போலியாகத் தன் குரலில் உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு, “சௌக்கியமா, மர்ட்டில்?” என்று கேட்டாள். “உன்னைக் குளியலறைக்கு வெளியே பார்த்ததில் சந்தோஷம்!”

சூழ்ச்சித் தொக்கி நின்ற ஒரு குரலில், “ஹெர்மயனி இப்போதுதான் உன்னைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாள்,” என்று பீவ்ஸ் மர்ட்டிலின் காதில் கூறியது.

ஹெர்மயனி பீவ்ஸை முறைத்துக் கொண்டே, “நான் – நான் இன்றிரவு நீ மிகவும் அழகாகத் தோன்றுவதாக நான் கூறிக் கொண்டிருந்தேன்,” என்று மர்ட்டிலிடம் கூறினாள்.

மர்ட்டில் ஆவி ஹெர்மயனியை சந்தேகக் கண்ணோடு பார்த்தது. “நீ என்னைப் பரிகசிக்கிறாய்,” என்று மர்ட்டில் கூறியது. ஒளிபுகக்கூடிய விதத்தில் இருந்த அதன் சின்னஞ்சிறு கண்களிலிருந்து வெள்ளிக் கண்ணீர் வடிந்தது.

“இல்லையில்லை – உண்மையில் நான் உன்னைப் பரிகசிக்கவில்லை – மாட்டில்மிகவும் அழகாகத் தோன்றுவதாகத்தானே நான் கூறினேன்?” என்று கூறிவிட்டு, ஹெர்மயனி, ஹாரி மற்றும் ரானின் விலா எலும்புகளில் வலிக்கும்படிஇடித்தாள்.

“ஆமாம், இவள்…”

“அது உண்மைதான்!”

“என்னிடம் பொய் சொல்லாதே,” என்று மர்ட்டில் தேம்பியது. அதன் முகத்திலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் கொட்டியது. அதன் தோளுக்குப் பின்னால் இருந்து பீவ்ஸ் சந்தோஷமாக இளித்துக்க கொண்டிருந்தது. “மக்கள் என்னைப் பற்றி என் முதுகிற்குப் பின்னால் என்ன கூறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாதென்று பரிதாபமான மர்ட்டில்! எடுபிடி மர்ட்டில்! முனகல் மர்ட்டில்!

பீவ்ஸ் அதன் காதில், “நீ ஒன்றை விட்டுவிட்டாய்! முனகல் மர்ட்டில் வேதனையுடன் தேம்பித் தேம்பி அழுது கொண்டே அந்த நிலவறையைவிட்டு ஓடியது. பூஞ்சை படர்ந்திருந்த “புள்ளிமுகக்காரி மர்ட்டில்! புள்ளிமுகக்காரி மர்ட்டில்!” என்று நிலக்கடலையை மாட்டில்மீது தூக்கி எறிந்து கொண்டே
புள்ளிமுகக்காரி மர்ட்டில்!” என்று கத்தியது.

கத்தியபடி, பீவ்ஸ் ஆவி அவள் பின்னால் ஓடியது.

“ஐயோ பாவம்!” என்று ஹெர்மயனி கூறினாள்.

நிக் ஆவி அக்கூட்டத்திலிருந்து அவர்களை நோக்கி மீண்டும் வந்தது.

“எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது?”

“நன்றாகவே போகிறது,” என்று அவர்கள் பொய் கூறினர். நிக் பெருமையுடன், “நிறையப் பேர் வந்திருக்கிறார்கள்,” என்று கூறியது. “இதற்காக ‘ஒப்பாரி விதவை’ கென்ட்டிலிருந்து வந்திருக்கிறது என் சொற்பொழிவிற்கான வேளை வந்துவிட்டது. நான் போய் இசைக் குழுவின் காதில் ஒரு வார்த்தை போட்டுவிட்டு வருகிறேன்

ஆனால் சரியாக அக்கணத்தில் இசைக்குழு தன் கச்சேரியை நிறுத்தியது. அவர்களும் அந்த நிலவறையில் இருந்த மற்றவர்களும் மௌனமானார்கள். வேட்டைக் கொம்பொலி கேட்டதும் எல்லோரும் பரவசமடைந்தனர்.

“ஐயோடா சாமி!” என்று நிக் கசப்புடன் கூறியது.

அந்த நிலவறைச் சுவர்களின் ஊடாக ஒரு டஜன் குதிரை ஆவிகள் தாவிக் குதித்தன. ஒவ்வொரு குதிரையின்மீதும் தலையற்ற ஒரு குதிரைவீரனின் ஆவி அமர்ந்திருந்தது. கூடியிருந்த ஆவிகள் காட்டுத்தனமாகக் கைதட்டின. ஹாரியும் கைதட்டத் துவங்கினான். ஆனால் நிக்கின் முகத்தைப் பார்த்ததும் அவன் தன் கைதட்டலைப் பாதியிலேயே நிறுத்திக் கொண்டான்.

அக்குதிரைகள் பேய்ப் பாய்ச்சல் பாய்ந்து அந்த அறையின் மத்தியில் வந்து நின்றன. முன்னால், தாடியுடன் இருந்த தன் தலையைத் தன் கையில் பிடித்திருந்த ஒரு பெரிய ஆவி, கொம்பொலி எழுப்பிக் கொண்டே, குதிரையிலிருந்து கீழே குதித்து, கூட்டத்திலிருந்த எல்லோரையும் பார்ப்பதற்கு வசதியாகத் தன் தலையை உயர்த்திப் பிடித்தது (எல்லோரும் சிரித்தனர்). பின் அது நிக்கை நோக்கி வந்து, தன் தலையைத் தன் கழுத்தில் அமுக்கித் திணித்துக் கொண்டது.

“நிக்! எப்படி இருக்கிறாய்? தலை இன்னும் கழுத்தில் ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறதா?”

அது வெடிச் சிரிப்பு ஒன்றை உதிர்த்துவிட்டு நிக்கின் தோளில் பேட்ரிக்,

“உங்கள் வரவு நல்வரவாகட்டும்,” என்று நிக் இறுக்கமாகக் கூறியது.

ஹாரி, ரான், ஹெர்மயனி ஆகியோரைப் பார்த்துவிட்டு, பேட்ரிக் ஆவி, “அட, உயிருள்ள மனிதர்கள்!” என்று கூவியது. பின் தன் தலை மீண்டும் கீழே விழுவதற்காக, வியப்பால் துள்ளிக் குதிப்பதுபோல பாவனை செய்தது. கூட்டம் மீண்டும் கொக்கரித்தது.

“நல்ல வேடிக்கை!” என்று நிக் இறுகிய முகத்துடன் கூறியது.

தரையில் கிடந்த பேட்ரிக்கின் தலை, “கவலைப்படாதே நிக்!” என்று கூறியது. பிறகு மற்றவர்களைப் பார்த்து, “நாங்கள் நிக்கை எங்களுடைய ‘ஹெட்லெஸ் ஹன்ட்’டில் சேர்த்துக் கொள்ள மறுப்பது குறித்து நிக்கிற்குப் பெரும் மனவருத்தம். ஆனால் நிக்கைப் பார் _” என்று ஆரம்பித்தது.

தன்னை அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்த நிக் ஆவியால் தூண்டப்பட்ட ஹாரி, அவசர அவசரமாக, “நிக் பயங்கரமாக பயமுறுத்தும் ஆவியாக இருப்பதாக நான் நினைக்கிறேன். மேலும் – என்று கூறத் துவங்கினான்.

“ஹா!” என்று பேட்ரிக் கத்தியது. “உன்னை அப்படிக் கூறுமாறு நிக் உன்னிடம் சொல்லியிருக்கும், அப்படித்தானே?”

நிக் மேடையை நோக்கி விறுவிறுப்புடன் நடந்து சென்று, அங்கு வீசிக் கொண்டிருந்த நீல ஒளியில் நனைந்து கொண்டு, “அமைதி! அமைதி! எல்லோரும் தயார் என்றால், நான் என் பேச்சைத் துவங்குகிறேன்,” என்று சத்தமாகக் கூறியது.

“காலமாகிவிட்ட என்னுடைய துக்ககரமான பிரபுக்கள், சீமாட்டிகள், மற்றும் சீமான்களே, நான் மிகுந்த மன வருத்தத்துடன்…?”

அதற்கு மேல் அது பேசியதை யாரும் கேட்கவில்லை. பேட்ரிக் ஆவியும் ‘ஹெட்லெஸ் ஹன்ட்’டைச் சேர்ந்த பிற உறுப்பினர்களும் ‘தலையுருட்டும் ஹாக்கி’ விளையாட்டைத் துவக்கியிருந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்கள் விளையாடுவதைப் பார்க்கத் திரும்பினர். பார்வையாளர்களைத் தன் பக்கம் இழுக்க நிக் ஆவி வீணாக முயற்சித்தது. ஆனால் பேட்ரிக்கின் தலை பலத்தக் கரகோஷத்தின் பின்னணியில் தன்னைத் தாண்டிப் பறந்தவுடன், நிக் ஆவி அந்த முயற்சியைக் கைவிட்டது.

ஹாரிக்கு இப்போது பயங்கரமாகக் குளிரெடுக்கத் துவங்கியிருந்தது. பசியைப் பற்றிச் சொல்லவே வேண்டியிருக்கவில்லை.

“இதற்கு மேல் நமக்குத் தாங்காது,” என்று ரான் முனகினான். இசைக்குழு தன் கச்சேரியை மீண்டும் துவக்கியது. அங்கிருந்த ஆவிகள் மீண்டும் நடனத் தளத்திற்குத் திரும்பின.

“நாம் இங்கிருந்து கிளம்பலாம்,” என்று ஹாரியும் ஒப்புக் கொண்டான்,.

தங்களைப் பார்த்தவர்கள் அனைவருக்கும் தலையசைப்பையும் புன்முறுவலையையும் தெரிவித்துக் கொண்டே அவர்கள் மூவரும் கதவை நோக்கி நகர்ந்தனர். அடுத்த நிமிடம், கருப்பு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருந்த தாழ்வாரத்தில் அவர்கள் வேகமாகப் போய்க் கொண்டிருந்தனர்.

பேரரங்கிற்கு இட்டுச் சென்ற படிக்கட்டுகளில் மூவருக்கும் முன்னால் வேகமாகத் தாவி ஏறிக் கொண்டிருந்த ஹாரி, “பாயசமாவது மிச்சமிருக்கும் என்று நினைக்கிறேன்,” என்று நம்பிக்கையோடு கூறினான்.

அப்போது அவன் காதுகளுக்கு அது கேட்டது.

“… கிழி… குதறு… கொல்…”

அதே குரல். லாக்ஹார்ட்டின் அலுவலகத்தில் அவன் கேட்ட, ரத்தத்தை உறைய வைத்த அதே கொலைகாரக் குரல்.

அவன் தட்டுத் தடுமாறி அந்தக் கற்சுவரைப் பிடித்து நின்று கொண்டு, மங்கலாக இருந்த அத்தாழ்வாரத்தில் மேலும் கீழுமாகத் தன் கண்களைச் சுருக்கிக் கொண்டு பார்த்தபடி, அக்குரலைத் தன்னால் முடிந்த அளவு உன்னிப்பாகக் கேட்க முயன்றான். “ஹாரி, நீ என்ன செய்து கொண்டிருக் -”

“அதே குரல் – கொஞ்சம் சத்தம் போடாதே! -” …படு பயங்கரப் பசி . . . வெகு நாட்களாக

“கவனமாகக் கேளுங்கள்!” என்று ஹாரி அவசர அவசரமாகக் கூறினான். ரானும் ஹெர்மயனியும் உறைந்து போய் அவனையே பார்த்துக் கொண்டு நின்றனர்.

“.. கொல் கொல் . . . இது கொல்வதற்கான வேளை.”

அக்குரல் பலவீனமடைந்து கொண்டிருந்தது. அது அங்கிருந்து விலகிப் போய்க் கொண்டிருந்தது என்பது ஹாரிக்கு உறுதியாகத் தெரிந்தது. அக்குரல் அங்கிருந்து மேல் நோக்கிச் சென்றதுபோல அவனுக்குத் தோன்றியது! பயமும் பரவசமும் ஒரே நேரத்தில் அவனை ஆட்கொண்டன. அங்கிருந்த இருண்ட மேற்கூரையை அவன் பார்த்தான். மேல் நோக்கி அதனால் எப்படிப் போக முடியும்? கற்களால் ஆன மேற்கூரை ஒரு பொருட்டே இல்லாத மாயாவியா அது?

“இப்படிப் போகலாம்,” என்று கத்திவிட்டு, ஹாரி, பேரரங்கிற்கு இட்டுச் சென்ற படிக்கட்டுகளில் ஏறி ஓடினான். ஹாலோவீன் தின விருந்தைச் சுவைத்துக் கொண்டிருந்தவர்களின் பேச்சுச் சத்தம் அங்கு பெரிதாக எதிரொலித்துக் கொண்டிருந்ததால், அங்கு அக்குரலை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்பதை உணர்ந்த ஹாரி, முதல் மாடிக்கு இட்டுச் சென்ற அந்தச் சலவைக்கல் படிக்கட்டுகளில் தாவி ஏறி ஓடினான். ரானும் ஹெர்மயனியும் அவனுக்குப் பின்னால் தடதடவென்று ஓடி வந்து கொண்டிருந்தனர்.

“ஹாரி, நாம் என்ன பண்ணிக் -”

“உஷ்!”

ஹாரி தன் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டான். அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்கு மேலே இருந்த மாடியில் இருந்து, மேலும் தேய்ந்து கொண்டிருந்த அக்குரல் கேட்டது. “. . . எனக்கு ரத்த வாடை அடிக்கிறது .. எனக்கு ரத்த வாடை அடிக்கிறது!”

அவனுக்கு வயிற்றைப் புரட்டியது. “அது யாரையோ கொல்லப் போகிறது!” என்று அவன் கத்தினான். ரான், ஹெர்மயனி ஆகிய இருவரின் முகங்களில் தோன்றிய ஆச்சரிய ரேகைகளை அவன் அலட்சியம் செய்துவிட்டு, மூன்று மூன்று படிகளாகத் தாவி ஏறி அடுத்த மாடிக்கு ஓடினான். ஓடிக் கொண்டிருந்தபோதே அவன் தன் காலடி ஓசையையும்மீறி அக்குரலைக் கேட்க முயற்சித்தான்.

ஹாரி இரண்டாவது மாடியெங்கும் தடதடவென ஓடினான். அவனுக்குப் பின்னால் ரானும் ஹெர்மயனியும் மூச்சிறைக்க ஓடி வந்து கொண்டிருந்தனர். ஆளரவமற்று இருந்த கடைசித் தாழ்வாரத்தை நோக்கித் திரும்பும்வரை அவர்கள் நிற்கவே இல்லை. ரான் தன் முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்தபடி, “ஹாரி, என்ன இதெல்லாம்?” என்று கேட்டான். “எனக்கு எதுவும் கேட்கவில்லை

ஆனால் திடீரென்று ஹெர்மயனி தாழ்வாரத்தின் கோடியைச் சுட்டிக்காட்டினாள். அதிர்ச்சியில் அவளுக்கு முதலில் பேச்சே வரவில்லை.

“அங்கே பார்!”

அவர்களுக்கு நேர் எதிரே இருந்த சுவரில் எதுவோ மின்னிக் கொண்டிருந்தது. இருட்டில் கண்களை இடுக்கிப் பார்த்துக் கொண்டே, மெதுவாக அடிமேல் அடியெடுத்து வைத்து அதை அவர்கள் அணுகினர். இரண்டு சன்னல்களுக்கு இடையே இருந்த சுவரில் அலங்கோலமாக ஓரடி உயர வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன. ஆடிக் கொண்டிருந்த தீப்பந்தங்களின் ஒளியில் அந்த வார்த்தைகள் மங்கலாக மினுமினுத்துக் கொண்டிருந்தன.

ரகசியங்கள் அடங்கிய பாதாள அறை திறக்கப்பட்டுவிட்டது!
வாரிசுதாரர்களின் எதிரிகள் ஜாக்கிரதை!

“அது என்ன? அதன் கீழே எதுவோ தொங்கிக் கொண்டிருக்கிறதே, அது என்ன?” என்று ரான் தன் குரலில் நடுக்கத்தோடு கேட்டான்.

அவர்கள் அதை நெருங்கியபோது, ஹாரி கிட்டத்தட்ட வழுக்கி விழுந்துவிட்டான். அவனது காலுக்குக் கீழே தரையில் தண்ணீர் ஒரு குட்டையைப்போலத் தேங்கிக் கிடந்தது. ரானும் ஹெர்மயனியும் அவனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார்கள். சுவரில் எழுதப்பட்டிருந்த அந்தச் செய்தியை அவர்கள் மெதுவாக நெருங்கிக் கொண்டிருந்தபோது அவர்களுடைய கண்கள் அதன் கீழே இருந்த கரிய நிழலின்மீது நிலை கொண்டிருந்தன. அது என்னவென்று பின்னால் துள்ளிக் குதித்தனர். தேங்கிக் கிடந்த தண்ணீர் அவர்கள் மூவருக்கும் ஒரே நேரத்தில் தெரிய வந்ததும், அவர்கள் நாலாப்பக்கமும் படீரென்று தெறித்தது.

கண்காணிப்பாளர் ஃபில்ச்சின் நாரிஸ் பூனை, சுவரில் தீப்பந்தங்கள் மாட்டி வைக்கப்படும் தாங்கியில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டிருந்தது. அப்பூனையின் உடல் விறைப்பாக இருந்தது. அதன் கண்கள் அகலமாக விரிந்த நிலையில் வெறித்துக் கொண்டிருந்தன.

ஒருசில கணங்களுக்கு அவர்கள் அசையவே இல்லை. பின் ரான், “நாம் இந்த இடத்தை உடனடியாகக் காலி செய்துவிடலாம்,” என்று கூறினான்.

“நாம் உதவ முயற்சித்தால் என்ன?” என்று ஹாரி தயங்கித் தயங்கிக் கேட்டான்.

“என்னை நம்பு,” என்று ரான் கூறினான். “நாம் இந்த இடத்தில் இருந்தோம் என்று கண்டுபிடிக்கப்படுவது நமக்கு நல்லதல்ல.”

ஆனால் அதற்குள் மிகவும் தாமதமாகிவிட்டிருந்தது. தூரத்தில் இடி இடித்தது போன்ற முழக்கம் விருந்து முடிந்துவிட்டிருந்ததை அவர்களுக்கு அறிவித்தது. தாழ்வாரத்தில் அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்தின் இரு பக்கங்களிலிருந்தும் மாடிப்படிகளில் ஏறி வந்து கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மாணவர்களின் காலடி ஓசையும், நன்றாக விருந்துண்டிருந்த மக்களின் சத்தமான மகிழ்ச்சியான பேச்சுக் குரல்களும் கேட்டன. அடுத்தக் கணம், இருபுறத்தில் இருந்தும் மாணவர்கள் அவர்களை நெருங்கிக் கொண்டிருந்தனர்.

முன்னால் வந்து கொண்டிருந்தவர்கள் தங்களுக்கு எதிரே தொங்கிக் கொண்டிருந்த பூனையைப் பார்த்ததும், அக்கூட்டத்தின் அரட்டைகளும் பிற சத்தங்களும் அப்படியே நின்றுவிட்டன. ஹாரியும் ரானும் ஹெர்மயனியும் அந்தத் தாழ்வாரத்தின் நடுவில் தன்னந்தனியே நின்று கொண்டிருந்தனர். அந்தக் கோரக் காட்சியைப் பார்க்க அக்கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தபோது, அங்கே அமைதி கோலோச்சியது.

பின் அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு யாரோ கத்தினர்.

“வாரிசுதாரர்களின் எதிரிகளே ஜாக்கிரதை! அடுத்து நீங்கள்தான் ஈன ரத்தப் பிறவிகளே!”

அது மால்ஃபாய். கூட்டத்தினரை முட்டித் தள்ளிக் கொண்டு அவன் முன்னே வந்திருந்தான். ஆடாமல் அசையாமல் தொங்கிக் கொண்டிருந்த அப்பூனையைப் பார்த்து அவன் ஓர் அசட்டுச் சிரிப்பை உதிர்த்தபோது, அவனது உயிரற்றக் கண்கள் உயிர்பெற்று எழுந்திருந்தன. வழக்கமாக வெளுத்துப் போயிருந்த அவனது முகம் ரத்தச் சிவப்பாக மாறியிருந்தது.

– தொடரும்…

– ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும், மூலம்: ஜே.கே.ரோலிங், தமிழில்: பி.எஸ்.வி.குமாரசாமி, முதற் பதிப்பு: 2013, மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், மும்பை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *