ஸதாநந்த போதக சாமியார்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 13, 2025
பார்வையிட்டோர்: 121 
 
 

(1933ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-5 | அத்தியாயம்-6.1 | அத்தியாயம்-6.2

மன்மத பீடர்-மதிமோச விளக்கம் 

மன்மதபீட மகா யோகீசுவரர் வாயுஸ்தம்பனம் செய்து தமது பீடத்தோடு பூமியை விட்டு மேலே உயர்ந்து அந்தரத்தில் இருந்தபடி பக்த கோடிகளுக்குப் பிரசங்கம் புரிந்தாரென்றும், அந்த அதிமாநுஷ விசித்திரச் செய்கை யைக் கண்டு எல்லோரும் திகைத்து ஸ்தம்பித்து உட்கார்ந் திருந்தனரென்றும் நாம் நான்காவது அத்தியாயத்தின் முடிவில் கூறினோமல்லவா. அதற்கு மேலும் ஒரு நாழிகை காலம் வரையில் யோகீசுவரர் தமது உபந்நியாசத்தை நடத்தி, எல்லோரையும் ஆசீர்வதிக்க, அன்றைய கூட்டம் அதோடு கலைந்தது. யோகீசுவரர், ஸ்வர்ணாம்பாள் முதலி யோர் வீற்றிருந்த இடங்களுக்கு முனனர் உடனே திரை போடப்பட்டு விட்டதாகையால், பீடத்தோடு அந்தரத்தில் இருந்த யோகீசுவரர் மறுபடி எவ்விதம் தரைக்கு வந்தா ரென்பது எவருக்கும் தெரியாமல் போயிற்று. அந்த அத்யாச்சரியகரமான சம்பவம் நிகழ்ந்ததற்குப் பின்னர் யோகீசுவரரது பெருமை முன்னிலும் அதிகமாகப் பரவிப் போயிற்று. அவர் சாதாரண மனிதரே அன்றென்றும், தெய்வத்தின் அவதாரமே யென்றும் எல்லா ஜனங்களும் வாயோயாமல் கூறி அவரைப் பற்றிப் புகழ்ந்தபடியே  இருந்தனர். எவ்விதமான திறமையும் அற்ற முழு மூட சிகாமணி யொருவர் மடாதிபதி ஸ்தானத்தில் இருந் தாலும், அவரிருக்கும் இடத்தில் இலவசமாகக் கிடைக்கும் அன்றாட போஜனத்தைக் கருதி, அங்கு வந்துகூடும் ஜனங்க ளெல்லோரும் அந்த மடாதிபதியை ஸ்வாமி, ஸ்வாமி, என்று அபாரமாகத் தூக்கிவைத்துப் பெருமைப் படுத்து வது சர்வ சாதாரணமாய் இப்போதும் நடக்கும் காரியம். 

அங்ஙனமிருக்க, வாக்கு வன்மையோடு பிரசங்கம் புரிந்து, அதிமாநுஷ அற்புதங்களை நிகழ்த்திக் காட்டிய நம் மன்மதபீட மகா யோகீசுவரரைப் பாமர ஜனங்கள் புகழ்வ தும், அவருக்கு தெய்விகத்தன்மையை உண்டாக்குவதும் ஆச்சரியமான காரியங்களாகுமா? அந்த ஊரில் யோகீச வரர் அதற்குமேல் சுமார் இரண்டு மாத காலம் வரையில் தங்கியிருந்தாராதலால், அங்கு வந்து கூடிய ஜனக்கும்பல் நாளைக்கு நாள் அபாரமாகப் பெருகிப் போய் மகாமகக் கூட்டமோ வென்ற ஐயத்தை உண்டாக்கியது. ஒவ்வொரு நாளைய பகலிலும் யோகீசுவரர் ஒவ்வொரு புதிய பெண் குழந்தையை வைத்து ஆடம்பரமாகப் பூஜை நடத்தி, இரவில் விஸ்தாரமான சொற்பொழிவுகள் நிகழ்த்தி, புதிய புதிய அதிமாநுஷ விசித்திரங்களைச் செய்து காட்டி, மகா ஜனங்களைப் பரவசப்படுத்தினார். 

ஒவ்வொரு பகலிலும் பூஜிக்கப்பட்ட பெண் குழந்தை யும் அதன் தாயும் முதல் நாளிரவில் பூஜை மண்டபத்திற் குப் பக்கத்திலிருந்த கூடத்தில் புனிதமாகப்படுக்க வேண்டு மென்ற நியதி ஏற்பட்டுப் போயிருந்த தாகையால், ஸ்வர் ணாம்பாளுக்கு :அர்த்த ராத்திரியில் அம்பாள் பிரசன்ன மானதுபோல், ஒவ்வொரு தாய்க்கும் பிரசன்னமாய்க் குளிரக் கடாக்ஷித்தாளாதலால், அவர்களெல்லோருக்கும் ஸ்வர்ணாம்பாளுக்கு ஏற்பட்டது போலவே சித்தப் பிரமை உண்டாகிவிடவே, அவர்கள் எல்லோரும் எப்போதும் அம்பாளை நேரில் பார்த்தவர்களாய் வாய் ஓயாமல் ஸ்தோத்தி ரம் செய்து தேவிபக்தியில் லயித்துப் போய் உலகை மறந் தவர்களா யிருந்தனர். ஆனால் யோகீசுவரர் மேற்படி ஸ்திரீ கள் ஒவ்வொருத்திக்கும் செய்த மாந்திரிக சிகிச்சையினால் ஒவ்வொருத்தியும் சுமார் பதினைந்து தினங்களில் தனது சுய உணர்வை யடைந்து தேறிவந்தாள். 

அந்த இரண்டு மாத காலத்திற்குள் யோகீசுவரருக் குப் பல துளி பெருவெள்ளம் என்பது போல் இரண்டு லக்ஷம் ரூபாய்க்குமேல் பாத காணிக்கை வந்து சேர்ந்தது. அவ்வளவும் உடனுக்குடன் கணக்கிடப்பட்டு இரகஸி யத்தில் மதராஸ் பாங்கிக்கிப் போய்ச் சேர்ந்தபடி இருந்தது. 

அந்த நீண்டகாலத்தில் விஷ்ணுபுரம் கிராமத்தில் நடந்த பிராம்மண போஜனத்தினால் மடிந்துபோன அரிசி, பருப்பு, காய்கறி முதலிய வஸ்துக்களுக்கு நாம் மொத்தக் கணக்கெடுத்தால், அது பெரிய மலையாகவும், குருக்ஷேத் திரப்போரில் இருதிறச் சேனைகளுக்கும் செலவான மொத் தம் ஒரு கடுகாகவும் தோன்றும். மன்மதபீட மகா யோகி களின் தெய்விக சக்தியே அவ்வளவிற்கும் காரணமாக முடிந் தது. இரண்டாவது மாதமுடிவில் அவர் அவ்விடத்தைவிட டுப் புறப்பட்டுப் போய்விடப் போகிறார் என்ற வதந்தி ஏற் படத்தொடங்கவே,அதுவரை தினம் தினம் வடைபாயசம் சித்திரான்னங்களுடன் வயிறார போஜனம் செய்த மகா ஜனங்களும்,மாலை வேளைகளில் அவரது உபந்நியாசங்களைக் கேட்டு ஆனந்தித்தவர்களும் ஏக்கமும், விசனமும்அடைந்து அதே பேச்சாகப் பேசி ஒருவரிடத் தொருவர் அங்கலாய்த் துக்கொள்ளத் தொடங்கினர். யோகீசுவரர் எங்கே போனாலும் தாங்களும் அங்கே போவது இகபரம் இரண்டிற்கும் ஸார்த்தகமான தென்று தீர்மானித்தனர் பலர். “யோகீசு வராள் இவ்வளவு சீக்கிரத்தில் அடியேங்களை விட்டுப் போகக் கூடா” தென்று துணிந்து ஸ்வாமிகளிடம் விக்ஞா பனம் செய்து கொண்டனர் அநேகர். சிலர் கண்ணீர் விடுத் துக் கதறியழுதனர். 

கடைசி ரவில் ஸ்வாமிகள் பரம ஸுகிர்தமான சில வேதாந்த தத்துவங்களை வெளியிடப் போகிறார்களென்றும், இன்னும், பெரிய பண்ணை ஐயரவாளுடைய குடும்ப சம்பந்த இரகஸியங்கள் சிலவற்றைத் தெரிவிக்கப் போகிறார்களென்றும் அறிந்து பல்லாயிரக் கணக்கில் ஜனங்கள் வந்து கூடிப் போயினர். 

அன்றையதினம் மாலையில் யோகீசுவரருடைய பூஜை மண்டபம் மகா விஷ்ணுவின் பரம பதம்போல் ஜ்வலித்தது. ஸ்வாமிகள் மெருகு கொடுக்கப்பெற்ற தங்கம்போல் மின்னிய திவ்ய தேஜஸோடு பீடத்தில் அமர்ந்து எதிரி லிருந்த மகா ஜனங்களை அருள் வழிய நோக்கித் திருவாய் மலர்ந்தருளத் தொடங்கினார்:- 

ஆஸ்திக சிகாமணிகளே! இந்த இரண்டு மாதகால மாக நாம் ஒவ்வொரு மாலையிலும் இங்கு கூடிப் பலவகை யான பாரமார்த்திக விஷயங்களைப் பற்றிப் பேசி சந்தே தாஷ மடைந்து, நமது மனம் தூய்மையான விஷயங்களில் சிறிது காலமாயினும் லயித்திருக்கும்படியாகச் செய்து அவப் பொழுதைத் தவப்பொழுதாகச் செய்தோம். இன்றோடு அதற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்கப் போகிறோம். நாளைய தினம் மாலையில் நானெங்கோ நீங்களெங்கே வென்ற நிலைமை ஏற்படப்போகிறது. இன்னம் சில தினங்கள் கழியுமானால் இங்கு நாம் ஒன்றுகூடி இருந்ததும், ஆநந்தமாக  ஸல்லாபித்ததும் கனவுபோல் மாறிவிடு மென்பது நிச்சயம். சில வருஷங்களாய் விடிலோ, அதன் பிறகு நாம் ஒருவரை யொருவர் சந்தித்தால் கூட, அடையாளம் கண்டு கொள்வது துர்லபமாகிவிடும். இம்மையின் சம்பந் தங்கள் யாவும் இவ்விதம் முடிபவைகளே. நமது குடும்ப வாழ்க்கையும் இத்தன்மையதே; 

“தந்தை தாய் தமர் தாரம் மகவெனும் இவையெலாம் 
சந்தையிற் கூட்டம்; இதிலோ 
சந்தேக மில்லை; மணிமாட மாளிகை மேடை 
சதுரங்க சேனையுடனே 
வந்ததோர் வாழ்வுமோர் இந்த்ரஜாலக் கோலம் 
வஞ்சனை பொறாமை லோபம்
வைத்த மனமாங்கிருமி சேர்ந்தமல பாண்டமோ 
வாஞ்சனையிலாத கனவே.” 

என்று தாயுமானவர் இம்மை வாழ்க்கையை மிக அழகாக வர்ணித்திருக்கிறார். நமக்கும் இவ்வுலக வாழ்க்கைக்கும் உள்ள சம்பந்தம் மாத்திரமே இப்படி இருக்கிறதோ என்றால், நமது உடம்பிற்கும் ஆன்மாவிற்கும் உள்ள நட்பும் இது போன்றதே : 

“குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே 
உடும்போ டுயிரிடை நட்பு” 

என்கிறார் திருவள்ளுவ நாயனார். முதலில் முட்டையோடு ஒன்றுபட்டிருக்கும் பறவைக் குஞ்சு வளர்ந்து உருவடைந்த பிறகு முட்டையை விட்டு விலகிப் போகும் தன்மையைப் போன்றதே நம் உடம்பிற்கும் ஆன்மாவிற்கும் உள்ள சம்பந்தம். எனவே, நேற்று இருந்தவர் இன்று இல்லை என்பதே இந்த உலக வாழ்க்கையின் இலக்ஷணமா யிருப்பதுபற்றி, 

“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் 
பெருமை உடைத்திவ் வுலகு” 

என்றார் திருவள்ளுவ நாயனார். “இன்றைக்கிருந்தாரை நாளைக்கிருப்பரென்றெண்ணவோ திடமில்லையே” என்கிறார் தாயுமானவர். இவ்வித அநித்திய வாழ்வான இந்த மானிட வாழ்க்கைக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களும், பிணிகளும், பகைமைகளும், வேதனைகளும் கணக்கிலடங்கக் கூடியவைகளோ! 

“அன்ன விசாரம் அதுவே விசாரம்; அது ஒழிந்தால், 
சொன்ன விசாரம் தொலையா விசாரம்; நல்தோகையரைப்
பன்ன விசாரம் பல்கால் விசாரம்; இப்பாவி நெஞ்சுக்
கென்ன விசாரம் வைத்தாய் இறைவாகச்சி ஏகம்பனே”

என்று பட்டினத்தடிகள் பாடியுள்ளபடி வயிற்று வேதனை, தமக்கெனப் பொருள்தேடும் அவா, அழகான ஸ்திரீகளை யடையும் வேட்கை ஆகிய மூன்று அவஸ்தைகளும் மனிதன் முதல் பூச்சி புழுக்கள் முதலிய சகலமான ஜீவர் களையும் ஓயாமல் இயக்கிப் பம்பரம்போல் சுழற்றி வைக்கும் சக்திகளாயிருக்கின்றன. இவற்றில் வயிற்று வேதனையே அடிப்படையானது. பசி என்பது உலகில் இல்லாமல் போகுமானால், ஜீவன்களின் யக்கம் பெரும்பாலும் ஒடுங்கிப்போ மென்பது நிச்சயம். அடிக்கடி மரங்களும், பயிர்ச்செடிகளும் தோன்றித் தோன்றி ஏராளமான தானி யங்களையும் காய்கனி வர்க்கங்களையும் சொரிய வேண்டிய அவசியம் இல்லாமற்போகும். காலக்கிரமப்படி மழை, பனி, வெயில் முதலியவை உண்டாகி பயிர் பச்சைகளை போஷிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. ருதுக்களும், ருதுக்களை உண்டாக்கும் நவக் கிரகங்களும், அவைகளின் சஞ்சாரங் களும் அநாவசியமாகிவிடும். இரவு பகல் முதலிய வேறு பாடுகள் உண்டாவதும் போய்விடும். இந்த பிரம்மாண்டத் தின் நிலையே அடியோடு மாறிப் புதிதாய்விடும்; ஆகையால் இந்தப் பிரபஞ்சத்தின் சிருஷ்டி, திதி, சங்காரத்தின் சூட்ச மம் வயிற்றில் அடங்கிப்போ யிருக்கிறது. ஆகவே, 

“ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய், 
இரு நாளைக் கேலென்றால் ஏலாய் ஒருநாளும்
என்னோ வறியா இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்த லரிது.” 

என்று நம் முன்னோர் கண்டெழுதி வைத்திருக்கின்றனர். என்றும் தீராத இந்த வயிற்றுப் பிணியைத் தீர்ப்பதற்காக மனிதர் பூமியையும், பொருள்களையும், கால் நடைகளையும் ஏராளமாகத் தேடித் தமதென்று வைத்துக் கொள்ளுகின் றனர். அப்படி இருந்தும் அவர்களது ஆசை தீருகிறது மில்லை; மனம் அமைதியடைகிறது மில்லை. 

“மக்கள் சுற்றத் தாசை மறக்கேனே யென்குதே
திக்கரசா மாசையது தீரேனே யென்குதே 
காமக் குரோதங் கடக்கேனே யென்குதே
நாமேயர் சென்று நாடோறு மெண்ணும் 
அச்சமாங்கார மடங்கேனே யென்குதே
கைச்சு மின்னு மானங் கழலேனே யென்குதே
நீர்க்குமிழியா முடலை நித்தியமா யெண்ணுதே
ஆர்க்கு முயராசை யழியேனே யென்குதே. 
கண்ணுக்குக் கண்ணெதிரே கட்டையில் வேகக்கண்டும்
எண்ணுந்திரமா யிருப்போமென் றெண்ணுதே 
நரகக் குழியுமின்னு நான் புசிப்பே னென்குதே
உரகப்படத் தல்குல் உனைக்கெடுப்பே னென்குதே 
குரும்பை முலையும் குடிகெடுப்பே னென்குதே
அரும்பு விழியும் என்தன் ஆவியுண்பே னென்குதே 
மாதர் உருக்கொண்டு மறலிவஞ்ச மெண்ணுதே
ஆதரவு மற்றிங் கரக்காயுருகிறண்டா
அன்னவிசாரமது அற்றவிடங் கிட்டாதோ
சொன்ன விசாரந் தொலைந்த விடங் கிட்டாதோ
உலகவிசாரம் ஒழிந்த விடங் கிட்டாதோ
மலக்குழுவின் மின்னார் வசியாதுங்கிடாதோ.
காதல் தனியேனோ கண்டு மகிழேனோ 
சாதல் தவிரேனோ சங்கடந்தான் தீரேனோ” 

என்று பட்டினத்தடிகள் புலம்பிக் கதறுகிறார். இவ்வித மாக ஏற்படும் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை முதலியவற்றினால் மனிதர்களுக்குள் காமக்குரோத லோப மதமாற்சரியம் ஆகிய பலவகையான உணர்ச்சிகள் பெருகு கின்றன. இவைகளால் ஏற்படும் வேண்டுதல் வேண்டாமை காரணமாய் உலகம் எக்காலத்திலும் ஒரே குளறுபிடி மயமாகயிருந்து வருகிறது. நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் ஒருவரையொருவர் பகைத்து விஷமென வெறுக்கத் தொடங்குகின்றனர். பல ஆண்டுகள் ஒன்றா யிருந்து பழகி, ஏராளமான குழந்தைகளைப் பெற்று நன்மை தீமைகளை ஒருமிக்க அனுபவிக்கும் குடும்பத்தலைவனும், தலைவியும் சில குடும்பங்களில் எப்போதும் எலியும் பூனை யும் போல இருந்தே தமது வியவகாரங்களை நடத்திக் கொண்டு போகின்றனர். தன் மனையாளை உயிருக்கு யிராய் மதித்து, தன் ஆசாபாசங்களை யெல்லாம் ஒருங்கே அவள் மீது வைத்துள்ள புருஷன், அவள் அன்னிய புருஷனைப் பார்த்துப் புன்னகை செய்தால், சிறிதும் தயை தாக்ஷணயமின்றி அவளைக் கொன்று போட்டுவிடுகிறான். அது போலவே, தன் புருஷன் வேறொரு ஸ்திரீயை நாடுகிறான் என்பதைக் கண்டால் அவ னுடைய மனையாள் கிணற்றில் விழுந்தோ, விஷயத்தைத் ன்றோ உயிரை மாய்த்துக் கொள்ளுகிறாள். தகப்பனும் பிள்ளையும் பகைத்து ஒருவர் முகத்தில் மற்றவர் விழிக்காமலும்,ஒருவரோடு மற்றவர் பேசாமலும் இருந்தே காலத்தைக் கழிக்கின்றனர். ஒரு தாய் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிமார்கள் அற்ப காரணத்தைக்கொண்டு ஒரு வரையொருவர் பகைத்து, அடித்துக் கொள்ளுகிறார்கள்; அல்லது, ஒருவர்மே லொருவர் வழக்குத்தொடுத்து பிரிவீ கவுன்சில் வரையில் சளைக்காமல் போய் வழக்காடித் திரும்புகிறார்கள். ஒரு சாஸ்திரியாருடைய பிள்ளைகள் சண்டையிட்டுப் பங்கு பிரித்துக்கொண்ட கதையை நம் பெரியோர் சொல்வதுண்டு. அதை நீங்கள் கேட்டிருப்பீர்களோ மாட்டீர்களோ ; அதை நான் இந்த சந்தர்ப்பத்தில் இங்கு இரண்டொரு வார்த்தையில் குறிப் பிடுவது பொருத்தமாயிருக்கு மென்று கருதுகிறேன். திருச்சி ஜில்லாவைச் சேர்ந்த துறையூர் என்ற ஓர் ஊரில் சாஸ்திரியார் ஒருவர் இருந்தார்.பரம்பரையாய் அவருடைய முன்னோர்கள் வால்மீகி ராமாயண காலக்ஷேபம் செய்து பணம் சம்பாதித்து ஜீவித்துவந்தவர்கள். மேலே குறிக்கப் பட்ட சாஸ்திரியார் வால்மீகி ராமாயணப் பிரசங்கம் செய்த தோடு ஹரிகதை காலக்ஷேபங்களும் செய்யப் பழக்கிக் கொண்டிருந்தார். அவர் இரட்டை நாடி உடம்பைப் பெற்றவராயிருந்ததன்றி, நெய் முதலிய மஸ்தான வஸ்துக்களை அதிகமாய் உபயோகிப்பவர். ஆகையால், அவர் வாயைத் திறந்து பேசவோ, அல்லது, பாடவோ ஆரம்பித்தால், சோடாமுதலிய புட்டிகளை உடைத்துத் தப் பான பக்கமாகத் திருப்பி எவரேனும் சாப்பிட்டால், உள்ளே இருக்கும் குண்டு வந்து வந்து விழுந்து வழியை அடைத்துக்கொள்வதை நாம் பார்க்கிறோ மல்லவா ; அது போல, அவருடைய தொண்டையில் கொழுப்பு அடைத் துக்கொள்ளும்; குரல் பல தினிசாகப் பேசும். அவருக்கு சங்கீதப் பயிர்ச்சியும் அவ்வளவாக இல்லையாகையால், அவர் சுலோகங்களைப் பாட ஆரம்பித்தால், ஒரே அபசுர மயமாயிருக்கும்; இராகங்களின் உருப்படியே இன்னதென் பது எவருக்கும் புலப்படாது. ஒவ்வொரு சுலோகத்தை யும் சொல்லி முடித்தவுடன் அடித்தொண்டையால் ராக ஆலாபனை செய்து, கைகளையை முஷ்டி செய்துகொண்டு ஏந்திரத்தில் மாவறைப்பது போல முன்னால் சக்கரமாகச் சுற்றிக்கொண்டே ‘ஙே ஙே ஙே ஙே’ என்ற எழுத்தையே போட்டு மர்த்தனம் செய்து ‘ஹரே தாசரதே’ என்று முடிப்பார். குறும்புக்காரர்கள் பலர் அவருக்கு ‘செக்கு யாகவதர் என்ற திருநாமத்தைச் சூட்டிவிட்டனர். அதுவன்றி அவர் சுலோகங்களுக்கு அர்த்தம் சொல்லும் போது, “அந்த ராமமூர்த்தி உண்டே, அந்த லக்ஷ்மணப் பெருமானுண்டே, அந்த ஸீதா தேவியுண்டே, அந்த மாருதியுண்டே” என்று உண்டே உண்டே, என்ற சொல்லை அடிக்கடி உபயோகிப்பாராதலால், அவரை ‘உண்டை பாக வதர்’ என்றும் குறிப்பார்கள். அவருடைய குடும்பத்தின் மூலதனம் பனை ஒலையில் எழுதப்பெற்றதும், தலைமுறை தலைமுறையா யிருந்து வந்ததுமான வால்மீகி ராமாயணம் ஒன்றே. அதைச் சேர்த்துக் கட்டினால், சரியாய் ஓராள் தூக்கக் கூடியசுமை யிருக்கும். அந்தப் பனை ஓலைச் சுவடியை அந்தக் குடும்பத்தார் பொன்னேபோல் போற்றி, அடிக்கடி ஒவ்வொரு ஏட்டிற்கும் மஞ்சள் பூசி, சாம்பிராணிப் புகை ஏற்றி தங்கள் உயிருக்குயிராய் அதை வைத்துக் காப்பாற்றி வந்தனர். அதன் காரணம் பிரத்தியக்ஷமாகத் தெரியக் கூடியதே. அது அந்தப் பெரிய குடும்பத்திற்குத் தலை முறை தலைமுறையாக சகலமான சம்பத்தையும் கொடுத்து ரக்ஷித்து வந்த மாத்திரைக் கோலாயிருந்து வந்தது. ஆனால் இப்போது அச்சியந்திரம் வந்த பிறகு ராமாயணப் புஸ்த கங்கள் பல்லாயிரக் கணக்கில் சொற்பகாலத்தில் உற்பத்தி யாகத் தக்கசாதனம் ஏற்பட்டுவிட்டது. ராமாயண சாஸ்திரி களையோ, பனை ஓலைகளையோ சீந்துவாரில்லை. அநாதிகால மாய் நம் நாட்டுப் பனை மரங்கள் கீழ்மக்களுக்குக் கள்ளைக் குடங் குடமாய்க் கொடுத்து உதவியதுபோல, மேன்மக்க ளுக்குத் தன் ஓலையைக் கொடுத்து கலைக்ஞானம் அழியாமல் நிலைத்திருக்கும்படியான சாதனமாய் இருந்து வந்திருக் கிறது. நாம் எவைகளை மிக இழிவாகவும், கேவலமாகவும் மதிக்கிறோமோ அவை சிலவற்றில் நம் ஜீவாதாரமே அடங்கி இருக்கிறது. நாம் பள்ளரென்றும், பறைய ரென்றும் எவர்களை இழிவுபடுத்தி மிக தூரத்தில் ஓட்டுகிறோமோ அவர்கள் வருஷம் முழுதும் பட்டப்பாடே நமக்கு அரிசியாகவும் தானியங்களாகவும் காய்கறியாகவும் வந்து நம்மை வேளைக்கு வேளை போஷித் துக் காப்பாற்றுகின்றன. நம்முடைய மல மூத்திரங்களைக் காண நாமே அருவருப்படைகிறோம். மிக சந்தோஷ மாகவும் அசங்கியமென்றுணராமலும் கைகொண்டு அவற்றை விலக்கி, அதனாலேயே இழிவையும் அசுசியையும் அடைந்துள்ள தோட்டிகளைக் கண்டால் நாம் “நாயே ” என்றும் “கழுதை ” என்று வைது சீறி விழுகிறோம். நாம் மிகப் புனிதமாக வைத்து காப்பாற்றும் நமது கோவில்களைக் கட்டவும், சிலைகளை வார்க்கவும், இன்னம் இவைபோன்ற முரட்டு வேலைகளைச்செய்யவும், குடிகாரர் களுடைய தயவையே நாம் நாடவேண்டியதாகிறது. நாம் நமது தென்னை மரத்தை கவனித்தால் அதன் பாளையிலிருந்து கள் உற்பத்தி யாகிறது. அதே பாளையில் உற்பத்தியாகும் தேங்காயை நாம் மிகப் பரிசுத்தமானதென்று கருதி தெய்வத்திற்கு நிவேதனம் செய்து நாமும் உண்கிறோம். இப்படி ஒவ்வொரு ஷயத்திலும் நாம் முரணாகவே நடந்துகொள்ளுகிறோம். சர்வக்ஞரும், சர்வ வல்லமையுடையவருமான கடவுள் மூடத்தனமாகவோ, அநாவசியமாகவோ எதையும் படைத் திருக்கமாட்டார். ஆனால், நாம் சிற்றறிவு படைந்தவர்களா கையால், நமக்கு உண்மை விளங்குகிறதில்லை. நம் வெறு ப்பு விலக்குகளை நாம் அதீதமாகப் பாராட்டி, நமக்குப் பரம கிர்தர்களா யமைந்திருப்போரை அன்பாகவும்,நன்றி றிதலோடும் நடத்தாமல் கொடிய பகைவர்களாய்க் கருதுகிறோம். கள்ளைக் கொடுக்கும் பனைமரத்தின் ஒலைகளில்லா திருக்குமானால், நம் வேதங்கள், புராணங்கள், சாஸ்திர ங்கள் முதலியவை எப்படி நமக்குக் கிடைத்திருக்கும். கள்ளை உற்பத்தி செய்கிறதே என்று நினைத்து நம் முன் னோர் பனைமரங்களை யெல்லாம் வெட்டித்தள்ளி அதன் விதை அற்றுப்போம்படி நிர்மூலமாக்கினார்களா? இல்லை யல்லவா. நலம் எங்கிருந்தாலும் அதைக் கொள்ளவேண் டும், அதிலுள்ள கெடுதலை நாம் அவ்வளவாகப் பாராட்டு தல் கூடாது, எல்லாவற்றையும்சமரஸமாக நடத்தவேண்டும் என்பதே நம் முன்னோரின் கொள்கைகள். உழைப்பினால் அயர்ந்து வருந்தும் எளிய ஜனங்களை போதையி லாழ்த்தி மகிழ்வித்து அவர்களது தசைகளைக் காத்ததுபோல, அதன் ஓலை கலைஞரை விக்ஞான போதத்தி லாழ்ந்தி அவர்களது ஆன்மாவைப் பரம்பொருளோடு ஐக்கியப்படுத்தி ஆந்தத் தாலாட்ட முக்கியக் கருவியாயிருந்து வந்திருக்கிறது. முக்கியமாய் நம் செக்கு பாகவதர்போன்ற மகான்களுக்கு பனை ஓலைகளே சங்க நிதி பதும நிதியாயிருந்து வந்திருக்கிற தானாலும் வெள்ளைக்காரர் வருகையினால், பனை மரங்களின் மகிமை முங்கில் முதலியவற்றிற்கு மாற்றப்பட்டுப் போயி ருக்கிறது. காலக்கிரமத்தில் இனி என்னென்ன மாறுதல் கள் ஏற்படுமோ தெரியவில்லை. இனி நாம் நம் செக்குபாகவதருடைய குடும்ப விசேஷங்களை கவனிப்போம். அவ ருக்கு கடோத்கஜனும், பீமசேனனுமாய் ஏழு புத்திரர்கள் பிறந்திருந்தார்கள். எல்லோரும் ஆஜாநுபாகுவாய் வளர்ந்த செழிப்பான தேகத்தோடு கூடியவர்கள். பழைய சாதத்தை, பாறைபாறையாய் இறுகியிருப்பதும், ஏடு விலக்கப்படாதது மான எருமைத்தயிரால் இளக்கி, எரித்த பழைய சாம் பாரை வழித்துணை சேர்த்துக்கொண்டு பூர்த்தியாக இழுப் பதிலும், குளிர்ச்சியாகவும் வசதியாகவும் இருக்கும் திண்ணைகளாகப் பார்த்துப் படுத்துக் குறட்டை விட்டுப் பகல் முழுதும் தூங்குவதிலும் அவர்கள் அசகாய சூரர் களாயிருந்தனர். 

செக்கு பாகவதருடைய மனையாட்டியான அன்ன பூரணியம்மாள்: உத்தம குணம் வாய்ந்த பதிவிரதை; அதாவது, அசட்டிற்கு முதல் தாம்பூலம் பெறத் தகுதியுடைய வளும், தனக்கென்று சுய அறிவு, சுயேச்சை, சுயாதீனம் முதலியவை இன்றி, முற்றிலும் பராதீனமாயிருப்பவளும், இராப்பகல் எப்போதும் எவ்வித பலனையும் எதிர்பாராமல் உழைப்பதைத் தவிர வேறு சுகம் எதையும் காணாதவளும், புருஷன் முதலிய சகலமான சொந்த ஜனங்களுக்கும் கேவலம் அடிமைபோலிருந்து ஒவ்வொருவருடைய மன மும் கோணாமல் நடந்து கொள்ளுபவளும், திட்டுகளோ அடிகளோ, உதைகளோ கிடைத்தால், வாயைத் திறவாமல் பயபக்தி விநயத்தோடு பெற்றுக்கொண்டு முன்னிலும் அதிக சிரத்தையோடு தன் வேலைகளைச் செய்பவளும், பசியோ பட்டினியோ, பிணியோ, வேறு எவ்வித வேத னையோ, எதையும் பொறுமையோடு சகித்துக்கொண்டு எவரையும் நோகாமல், நியாயத்தைக்கூட எடுத்துச் சொல்லாமல் இருப்பவளும், அடிபெற்றால் அழ அறி யாமல் இருப்பவள் எவளோ அவளே நம் நாட்டில் உத்தமகுணம் வாய்ந்த புண்ணியவதி என்று பெரும் பாலும் குறிக்கப்படுவது வழக்கம், அவ்விதமான குணங்களெல்லாம் அன்னபூரணியம்மாளிடம் சம்பூர்ண மாக நிறைந்திருந்தன. செக்கு பாகவதரும் அவருடைய புத்திரர்களும் வெளியுலகத்தில் பிள்ளைப்பூச்சிகள் போல் பரம ஸாதுவாக நடந்துகொள்வார்கள். ஆனால் வீட்டில் அவர்கள் நடந்துகொள்ளும் விதமோ சொல்லத் தரமல்ல. மாறி மாறி ஒவ்வொருவரும் எந்தக் காரியத்தைக் கருதியா கிலும், அன்னபூரணியம்மாளை வதைத்து,வைது, அதட்டி தேள்கள் போல் கொட்டிக்கொண்டே இருப்பார்கள் ; அவ் வளவையும் வாஞ்சையோடு பொறுத்துக் கொண்டு, சதா காலமும் அவர்கள் ஒவ்வொருவருடைய சுக சௌகரியங் களையும் மிக அக்கரையாக கவனித்து அடிக்கடி அவர்களை உண்பித்துக் கொழுக்க வைத்துக் கொண்டே போவாள். அப்படி இருந்த காலத்தில் ஒரு நாள் செக்கு பாகவதர் மார்படைப்பினால் திடீரென்று அநாயாச மரணமாய் இறந்து போய்விட்டார். புத்திரசிகாமணிகள் தந்தை இறந்துபோனதைப்பற்றிய விசனத்தையும், பிரேதத்தை எடுக்க வேண்டு மென்ற நினைவையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு சொத்துக்களைப் பங்கு பிரித்துக் கொள்வதைப் பற்றி ஒரு வரோடொருவர் சச்சரவு செய்யத் தொடங்கி விட்டனர். முக்கியமாக லால்மீகி ராமாயணச் சுவடியும், தங்கள் தாயா ரும் யாருக்குச் சொந்தமாகிறது என்பதைப் பற்றிய தக ராறே தீர்க்கமுடியாததாய்ப் பெருத்த அமர்க்களத்திலும் அடிதடியிலும் கொண்டுபோய்விட்டது. பெரிய ஒரு ராஜ் யத்தின் வார்சுரிமையைப் பற்றி ஏற்படும் யுத்தம், அல்லது, பாரதப்போர் எவ்விதம் இருந்திருக்கும் என்பதை அவர்க ளுடைய சண்டை நிதரிசனமாகக் காட்டியது. செக்கு பாகவதருடைய பிரேதம் ஸ்மசானத்திற்குப் போய்ச் சேரப் போகிறதா என்று ஊர் ஜனங்கள் எல்லோரும் நினைத்துக் கவலைப் படும் படியான நிலைமை ஏற்பட்டு விட்டது. தெருவிலிருந்த அயல் வீட்டாருடைய வற்புறுத்தலினால் செக்குபாகவதருடைய சவத்திற்குத் தகனபாக்கியம் கிட்டியது. அதன் பிறகு அந்தப் போர் மிகவும் பயங்கரமானதாக முடிந்தது. தமயன் தம்பி என்ற முறைமையையோ மரியாதையையோ இலட்சியம் செய்யாமல் ஒருவரையொருவர் தாறுமாறாக வைவதும், மூவர், நால்வர் ஒன்றாகப் பிணைந்து, ஒருவர் குடுமியை மற்றவர் பிடித்துக்கொண்டு அடிகளையும் குத்துகளை யும் தாராளமாக வழங்குவதும், உலக்கை, அம்மிக்குழவி, கடப்பாறை முதலிய ஆயுதங்களை எடுத்து வைத்துக் கொண்டு அவற்றால் அடிக்கப்போவதாக பயமுறுத்து வதும், அதைக்கண்டு அவர்களுடைய தாய் மார்பிலும் வாயி லும் லபோ லபோவென்று அடித்துக்கொண்டுஐயோ,அப்பா வென்று பயங்கரமாய் அலறி அவர்களைப் பிரித்துவிடவும், சமாதானப் படுத்தவும் முயல்வதுமே, அந்த நாடகத்தின் காட்சிகளாய் மாறி மாறி அடிக்கடி நடந்தன. அவர்களுடைய  வீடு பூதபிசாசங்களின் வாசஸ்தல மாய்க் காணப்படதே யன்றி, பரம் ஸாதுக்களான சாஸ்திரிகளின் கிரகமாகவே தோன்றவில்லை. அந்த சச்சரவு சிறிது ஓய்வதும் மறுபடி மறுபடி ஆரம்பமாவது மாய் மாதக்கணக்கில் நீடித்து நடந்தது. இடையிடையில் அன்னபூரணியம்மாள் தனது புத்திரர்களைப் பார்த்து நிரம்பவும் பரிதாபகரமான குரலில் கெஞ்சி, “அப்பா குழந்தைகளா! ஏன் இப்படி ஒவ்வொருவரும் பிடிவாதம் பிடிக்கிறீர்கள்! நம்மிடம் இருக்கும் ராமாயணம் ஒன்றே ஒன்று. அதுவே ஏழுபேருக்கும் வேண்டுமென்றால், அது எப்படி நிறைவேறும்! புத்தியில்லாமல் நீங்கள் இப்படிச் சண்டைபோடுவதில் என்ன பலன் ஏற்படப்போகிறது? சண்டையை விட்டுவிடுங்கள். ராமாயணத்தில் ஏழு காண்டங்களிருக்கின்றன. மூத்தவன் முதல் காண்டத்தை வைத்துக்கொண்டு அப்பாவைப்போலப் பணம் சம்பாதி த்து, குடும்ப சவரக்ஷணையை கவனிக்கட்டும். முதலாவது காண்டம் முடிந்தவுடன், இரண்டாவது பையன் இரண்டாவது காண்டத்தை அதே ஜனங்களுக்கு வியாக்கியானம் செய்யட்டும். இந்த விதமாக தலைக்கு ஒரு காண்டமாய் நீங்கள் ஏழுபேரும் ராமாயண காலக்ஷேபத்தை நடத்திக் குடும்ப சவரக்ஷணையை கவனியுங்கள். பகல் வேளைகளில் தலைக்கு ஒவ்வொரு காண்டமாக வைத்துக்கொண்டு எழுதி ஒவ்வொரு பிரதி தயார்ப் படுத்திக்கொள்ளுங்கள். இப்படி நீங்கள் செய்தால், குடும்ப காலக்ஷேபம், எவ்வித இடை சலோ, அசௌகரியமோ இல்லாமல் நடந்துகொண்டு போகும். ராமாயணப் பிரசங்கம் செய்யும் திறமை உங்கள் எல்லோருக்கும் உண்டாகிவிடும். கொஞ்சகாலத்தில் ராமாயணச் சுவடி ஏழு பிரதிகள் தயாராகிவிடும். அதன் பிறகு நீங்கள் தலைக்கு ஒரு பிரதி எடுத்துக்கொண்டு. இஷ்டமானால், பிரிந்துபோகலாம். உங்கள் தகராறு தீரு வதற்கு இதுதான் வழி. இப்படியே செய்யுங்களப்பா ’ என்று சொல்லிக் கெஞ்சி மன்றாடினாள். 

தாய் செய்த இந்தப் பிரேரணையைப் பெரும்பாலோர் ஏற்றுக்கொண்டனர். ஆனால், தாயின் செல்லக் குழந்தை யான கடைக்குட்டிப்பையன், ‘சரி; அப்படியே செய்யலாம்; ஆனால் இப்போது ஒரு பிரதி இருக்கிறது; இன்னும் ஆறு பிரதிகள்தான் தயாராகவேண்டும்; இப்போதிருப்பதை நான் எடுத்துக்கொள்ளுகிறேன்; என் அண்ணாக்கள் ஆறு பேரும் தலைக்கொன்றாய் ஆறு பிரதிகள் எழுதி எடுத்துக் கொள்ளட்டும்’ என்று கொஞ்சலாகச் சொல்லிவைத்தான். மற்றவர் ஒவ்வொருவரும் அதையே பிடித்துக் கொண்டு, ‘அப்பாவினுடைய பிரதியை நான்தான் எடுத் துக்கொள்வேன்; மற்ற அறுவரும் பிரதிகள் எழுதிக் கொள்ளட்டும்’ என்று அந்தப் பல்லவியையே பாடிப் பிடிவாதம் பிடிக்கத்தொடங்கி விட்டனர். மறுபடியும் நிலைமை எக்கச்செக்க மடைந்துவிட்டது. வசைகளும், அடி உதைகளும் கூச்சல்களும் பெருகிப்போயின. அந்தக்காட்சி பல தினங்கள் வரையில் நீடித்திருந்தது. பிறகு சிறிதளவு ஓய்வு ஏற்பட்ட காலத்தில், ஒருவர் ஒரு புதிய பிரேரணையைத் தீர்மானத்திற்குக் கொணர்ந்து, ‘இந்தக் குளறலெல்லாம் வேண்டாம். ராமா யணத்தில் ஏழு காண்டங்கள் இருக்கின்றன. தலைக்கு ஒரு காண்டம் என்று பங்கு பிரித்து எடுத்துக்கொண்டு நாம் பிரிந்துபோய்விடுவோம். அதுவே சுலபமானவழி’ என்றார். அந்த யுக்தி ஒரு நிமிஷகாலம் திருப்திகரமானதாகத் தோன்றியதானாலும், அடுத்த நிமிஷம் அதற்கும் பெருத்த ஓர் இடைஞ்சல் குறுக்கிட்டது. ஏனென்றால், ஒவ்வொரு வரும், முதலாவது காண்டந்தான் தமக்கு வேண்டுமென்று போராடிப் பிடிவாதம் பிடிக்க வாரம்பித்தனர். எனவே, அந்தப் பிரேரணை எவ்வளவு தீவிரமாக எழுந்ததோ, அவ் வளவு தீவிரமாகவே புகைந்துபோய்விட்டது. கடைசிப் புதல்வர் இன்னொரு புதிய யுக்தியைக் கண்டுபிடித்து அதைப் பிரஸ்தாபித்தார். அதாவது, ராமாயணச்சுவடி யில் கோக்கப்பட்டிருந்த கயிற்றை விலக்கிவிட்டு, ஏடுகளை யெல்லாம் கீழதுமேலதாய்ப் புரட்டி, எல்லாக் காண்டங் களின் ஏடுகளையும், எவ்வித வரிசைக் கிரமுமில்லாமல் பிசரி, ஏடுகளை எண்ணி மொத்தம் கண்டுபிடித்து, காய்கறி களைக் கூறுபோடுவதுபோல ஏழு பங்குகளாய்ப் பிரித்து திருவுளச் சீட்டுப்போட்டு தலைக்கு ஒரு கூறாய் எடுத்துக் கொள்ளுகிறது. எல்லாருக்கும் எல்லாக் காண்டங்களிலிருந் தும் ஏடுகள் கிடைக்கும்’ என்பது அவருடைய யுக்தி. இதை மற்றவர் அனைவரும் மிக அழுத்தமாக ஆக்ஷேபித்தனர். ஏனென்றால் இந்த ஏற்பாட்டில் ஏடுகள் மாத்திரம் ஒவ்வொருவருக்கும் சம எண்ணிக்கையாகக் கிடைக்கு மன்றி, அவற்றில் உள்ள விஷயம் எல்லோருக்கும் ஒரே மாதிரியா யிராதல்லவா. ஆகையால் இது பாகப் பிரிவினை ஆகாது என்று எல்லோரும் ஆக்ஷேபித் தனர். அப்போது கடைசிப் புத்திரர் தமது பிரேரணைக்கே அடியில்வரும் திருத்தப் பிரேரணை ஒன்று கொண்டுவந் தார். அதாவது, முதலிலிருந்து ஒவ்வொரு ஏடாய் எடுத்து, அதை ஏழு சம துண்டுகளாய் வெட்டுகிறது. 

உடனே திருவுளச் சீட்டுப்போட்டு தலைக்கொரு துண்டா கக் கொடுத்துவிடுகிறது. இப்படி ஒவ்வோர் ஏட்டிற்கும் செய்துகொண்டே போனால், முதலிலிருந்து கடைசி வரையிலுள்ள ஒவ்வோர் ஏட்டிலும் ஒவ்வொருவருக்கும் ஏழிலொருபாகம் கிடைப்பது நிச்சயம் என்பது கடைசிப் புத்திரருடைய அபிப்பிராயம். அதைக்கேட்டு மற்றவர் எல் லோரும் கைகொட்டிச் சிரித்துப் புரளிசெய்து, ‘ஆகா, பிரகஸ்பதி பகவானப்பா இவர். இதற்கு முந்திய பிரே ரணைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது! அதற்குள்ள ஆக்ஷேபனை இதற்கும் உண்டு’ என்று சொல்லி அதை ஒட்டுக்கு விட மறுத்துவிட்டனர். அப் படி எல்லோரும் தம்மைப் புரளி செய்ததைக் கண்டவுடன் கடைக் குட்டிக்கி மூர்க்க வெறி கிளம்பி சகிக்க முடியாத படி பெருகிப்போயிற்று. அவர் மிக ஆவேசமாகவும் அழுத்தமாகவும் பேசவாரம்பித்து, ‘சரி; அப்படியானால் இன்னொரு காரியம் செய்வோம். அதைச் செய்தால், ஒவ் வொருவருக்கும் சமமான பங்கு கிடைக்கும். ஒவ்வொரு கூறும் அளவிலும் ஒரே மாதிரியாயிருக்கும். அதோடு விஷயமும் ஒன்றாகவே இருக்கும். எல்லா ஏடுகளுக்கும் நெருப்பை வைத்துக் கொளுத்தி விபூதியாக்குகிறது. அந்த ராமாயண ஸார விபூதியை நன்றாகப் பிசைந்து கலந்து ஏழு சமபாகமாகப் பிரித்து திருவுளச் சீட்டுப் போட்டு தலைக்கு ஒரு பங்காய் எடுத்துக் கொள்ளுகிறது. இப்படிச் செய்வதில் நிறை, விஷயம் இரண்டும் எல்லோ ருக்கும் சரியாகவே இருக்கும். அவனுக்கு ஒரு காண்டம் கிடைத்தது, இவனுக்கு வேறொரு காண்டம் கிடைத்தது என்ற ஆக்ஷேபனைக்கே இடமில்லாமல் போகும்’ என்றார். அதைக்கேட்ட மற்ற எல்லோரும் தமது ஆங்காரத்தையும், பொறாமையையும் சகிக்கமாட்டாமல், ‘சரி, அப்படியே செய்துவிடுவோம். இது முதல்தரமான யோசனை’ என்று சொன்னார்கள். இந்தத் தீர்மானம் ஏகமனதாக எல்லோ ராலும் நிறைவேற்றப் பட்டது. மிச்சமிருக்கும் இன்னொரு சொத்தாகிய தங்கள் தாயை எப்படிப் பங்கு போடுவது என்ற விஷயத்தைப் பற்றி அடுத்தாற்போல் விவாதிக்கத் தொடங்கினர். ஒவ்வொருவரும், ‘அம்மாள் என்னோடு தான் இருக்க வேண்டும்’ என்று கூச்சலிட்டதன்றி அப் போதே தாயாரை வளைத்துக்கொண்டு, ‘என்னோடு வந்து விடு, என்னோடு வந்துவிடு’ என்று மூலைக்கொருவராய்ப் பிடித்து இழுக்கத் தொடங்கவே, அன்னபூரணியம்மாள் பாடு திண்டாட்டமாகிவிட்டது. 

புத்திரர்கள் தன்மீது வைத்திருந்த அபாரமான பிரியத்தில் தன் கைகளிரண்டையும் பிய்த்து விடுவார் களோ வென்ற எண்ணமுண்டாகிவிட்டது. அம்மாள் மாறி மாறி சிரிப்பதும் வேதனைப் படுவதுமாய், ‘அப்பா குழந்தைகளே. உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மேல் கொள்ளைப் பிரியம். ஒவ்வொருவருக்கும் நான் இல்லாவிட் டால், ஒரு காரியமும் நடக்காது. என்னை ஒரு நிமிஷம் வையாமலும் அதட்டாமலும் இருந்தால், உங்கள் ஒவ் வொருவருக்கும் வயிறு வெடித்துப் போகும். எனக்கு இருப்பது ஓர் உடம்பு தான். ஏழு உடம்புகள் இல்லை. ஆகையால் யாராவது ஒருவரோடு இருக்க முடியுமே யன்றி ஒரே காலத்தில் எல்லாரோடும் இருக்க முடியாது. ஒரு நாளைக்கு அல்லது, மாசத்திற்கு, ஒருவரிடம் இருப்பது என்ற ஏற்பாட்டை நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள். மூலைக்கொருவராய் என்னை இழுக்கிற இழுப் பில் என் கைகள் பிய்ந்து விடும்போ லிருக்கின்றன. என் உயிர் போய்விட்டால், நான் ஒருவருக்கும் உபயோகமில் லாமல் போய்விடுவேன். ஆனால், தீராத உங்கள் தகராறு ஒரே முடிவாகத் தீர்ந்துபோகும். என் உயிரோ அவ்வளவு சுலபத்தில் போகக்கூடியதாயில்லை. நீங்கள் என் உடம்பைக் கத்தியால் வெட்டி, கண்டதுண்டமாக்கி, காய்கறிகளை நறுக் கிக் குவிப்பதுபோலக் குவித்து, தராசில் வைத்து நிறுத்து ஏழு சமபாகங்களாக்கி தலைக்கொன்றாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், ஏழு கூறுகளும் சம நிறையாக இருக்குமேயன்றி, ஒவ்வொன்றிலும் இருக்கும் துணுக் குகள் உடம்பின் வெவ்வேறு பாகத்துத் துணுக்குகளா யிருப்பது நிச்சயம். அது பட்சபாதமற்ற பாகப்பிரிவினை ஆகாது. ஆகையால், நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள். ராமாயணச் சுவடிக்கு நெருப்பு வைத்துக் கொளுத்தி விபூ தியாக்க வேண்டுமென்று நீங்கள் தீர்மானித்தீர்களல்லவா. அதோடு என்னையும் சேர்த்து வைத்து, வீட்டிலுள்ள மற்ற சாமான்கள், கட்டை முட்டைகள், இந்த வீடு ஆகியவற் றையும் சேர்த்து ஒருமிக்க நெருப்பு வைத்துக் கொளுத்தி சகல சொத்துகளையும் விபூதியாக்கி, ஒன்றாகக் கலந்து பாகம் பிரித்துக் கொள்ளுங்கள். அப்போது எல்லாத் தகராறுகளும் ஒரே வழியாகத் தீர்ந்து போகும். அதன் பிறகு உங்களுக்குள் எதைப் பற்றியும் சண்டையோ, மனஸ்தாபமோ ஏற்படாது. இதைத் தவிர வேறு மார்க்க மில்லை. இதை உடனே நிறைவேற்றி வையுங்கள். தாம் திக்கவேண்டாம்’ என்றாள். அதன் பிறகு இந்த விசித் திரமான பாகப்பிரிவினை எப்படித்தான் முடிந்தது என்பது நமக்குத் தெரியாது. இந்த வரலாற்றை நமக்குச் சொன்ன நம் பெரியோர்கள் அதற்கு மேற்பட்ட முடிவைத் தெரிவிக்காமல் விட்டுவிட்டார்கள். ஆகையால் நாம் அதை அறியக்கூடவில்லை. இதைப்போலவே உலகத் தில் அநேகமாய் ஒவ்வொரு குடும்பத்திலும் தீர்க்கமுடியாத வியவகாரங்கள் எத்தனையோ கிளம்பிக்கொண்டே இருக் கின்றன. அவற்றைத் தீர்த்துவைக்க, எல்லாம் வல்ல கட வுளுக்கே விருப்பமில்லாமல், விட்டுவைத்திருக்கையில், கே வலம் அற்ப அறிவும், சொற்ப நோக்கமுமுடைய மனிதரா கிய நாம் எப்படி இவைகளைத் தீர்த்துவைக்கப்போகிறோம். நெருங்கிய உறவினர்களான தாய், தந்தை, ஒரே வயிற்றி லுதித்த சகோதர சகோதரிகள் ஆகியோருக்குள்ளாகவே இவ்விதமான தகராறுகளும் அடி வசைகளும் ஏற்படுமானா ல், அன்னியர் ஒருவருக்கொருவர் சண்டை சச்சரவுகள் நடத்துவதைப்பற்றி நாம் சந்தேகிக்கவும் வேண்டுமா? மண் ணாசை, பொன்னாசை, பெண்ணாசை முதலியவற்றாலேற் படும் சச்சரவுகளோ அநந்தம். அதோடு ஜாதிமதச்சண் டைகளோ சொல்லத்தரமன்று. இவைகளைத் தீர்த்துவைக் கக்கூடியது வேதாந்த தத்துவமே என்று கருதி விசிஷ்டாத் வைதமென்றும், அத்வைத மென்றும் பலவகைப்பட்ட கொ ள்கைகளை ஏற்படுத்தி யிருக்கிறார்கள். அவற்றால் சண் டை சச்சரவுகள் அதிகரித்தனவே யன்றி குறைந்தபாடில்லை. நம் தேசத்திலுள்ள சுதந்திரச் சண்டைகளும் ஜாதிமதச்சண்டைகளும் போதாவென்று இப்போது கிறி ஸ்தவர், துருக்கர் முதலிய இதர ஜாதி மதத்தினருடைய சண்டை சச்சரவுகளும் வந்து சேர்ந்துகொண் டிருக்கின் றன. கடவுள் எல்லோருக்கும் தந்தை யென்றும், சகல மான ஜீவர்களும் அவருடைய குழந்தைகள், அதாவது சகோதர சகோதரிகள் என்றும் நாம் கருதவேண்டும்; பிற ருடைய பொருளை நாம் அபகரித்தல் கூடாது, எல்லோரிட மும் அன்பாயிருக்கவேண்டும், கடவுளிடம்கூட நாம் எதையும் எதிர்பார்க்காமல் பக்தி செலுத்தவேண்டும், அவரு டைய பாதார விந்தத்தில் எப்போதும் சேவை செய்து கொண்டிருப்பதைத் தவிர வேறு எதைப்பற்றிய ஆசையும் நம் மனதில் உண்டாகவேண்டாமென்று கடவுளிடம் வேண்ட வேண்டுமென்றும், இவை போன்ற எண்ணிறந்த அருமையான தத்துவங்களை யெல்லாம் விசிஷ்டாத்வைதம் போதிக்கிறது. ஆனால், இவைகளை எல்லோரும் அநுஷ் டிக்கும்படி செய்து காரியத்தில் நடத்திவைப்பதெப்படி ? நாம் மேலே விவரித்த பாகப் பிரிவினையில், ஒரே வயிற்றில் உதித்த சகோதரர்கள் நடந்துக்கொண்ட மாதிரியை கவ னிப்போமானால், ஒருவருக்கொருவர் சம்பந்தமற்ற இதர மனிதர்களும், ஒருவரை யொருவர் வதைக்கும் துஷ்டர் களும் சகோதரத்வம் பாராட்டுவரென்று நாம் எப்படி எதிர் பார்க்கமுடியும். கடவுள் எல்லோருக்கும் பிதாவென்றும் நாமெல்லோரும் சகோதரர்களென்றும் கிறிஸ்தவர் முதலிய இதர மதஸ்தர்களும்கூட புஸ்தகத்தில் தத்துவங்களை எழு திவைத்துக்கொண்டுதா னிருக்கிறார்கள். அது அநுபவத் திற்கு வந்த கொள்கையாயிருந்தால் அவர்களுடைய முன் னோர்கள் தங்கள் நாட்டைவிட்டு சேனைகளோடு இந்த நாட் டிற்கு வந்து நம்முன்னோர்களோடு ஏன் சண்டை செய்தார் கள்; இந்த நாட்டை ஏன் கைப்பற்றிக்கொண்டு நம் எல்லோரையும் ஓட்டாண்டி யாக்கினார்கள்? இதிலிருந்து அவர்களுடைய ஏகசகோதரத்வம் வெறும் ஏட்டுச்சுரைக்கா யென்பது நிதரிசனமாகத் தெரிகிறது. நாம் நம்முடைய நாட்டைத் திறமையாக ஆள சக்தியற்று குழந்தைபோல் இருக்கிறோமென்றும், தாங்கள் சகலமான விஷயங்களிலும் முன்னேற்றமும் நாகரிக முதிர்ச்சியும் அடைந்திருப்பவர்க ளென்றும், அதனால் நம்முடைய குழந்தைப்பருவம் நீங்குகிற வரையில், தாங்கள் நமக்கு போஷகர்களாயிருந்து எல் லாவற்றையும் நிர்வகிப்பதாக வெள்ளைக்காரர்களாகிய ஏக சகோதரத்வக் கிறிஸ்தவர்கள் ஒரு சமாதானம் சொல்வ துண்டு. இங்கிலாந்து தேசத்தையே நாம் உதாரணமாக எடுத்துக்கொண்டு பேசுவோம். அங்கிருப்பவர்கள் எல் லோரும் ஒரே மாதிரியான புத்திசாலித்தனமுடைய மேதா விகளல்லர். எல்லோரும் ஷேக்ஸ்பியரா ? எல்லோரும் மில்ட்டனா? எல்லோரும் கிளாட்ஸ்டனா? எல்லோரும் லாய்டு ஜார்ஜா ? எல்லோரும் பால்ட்வினா ? அங்கும் நம்மை ப்போல் இளித்தவாயர்களும், அசடுகளும்,பைத்தியங்களும் திறமையற்றவர்களும் ஏராளமாய் நிறைந்து இருக்கிறார்கள். அங்கு வருஷம் பிரதி கோடிக்கணக்கில் ஏற்படும் விவாக விடுதலைத் தீர்மானங்களை கவனித்தால், தம்தம் மனைவியை அடக்கியாளும் திறமையற்ற நபுன்சகர்களே பெரும்பாலோ ராய் இருப்பதும் நிதரிசனமாகத் தெரிகிறது. அங்கு மேதாவியாயிருப்போர் ஏமாளிகளாயிருக்கும் இத்தகைய மனிதர்களுடைய சொத்து சுதந்திரங்கள் முதலியவைகளை ஏன் அபகரித்து திறமையாய் அநுபவித்து வழிகாட்டியாய் நடந்துக்கொள்ளக்கூடாது? அசடனோ, மூடனோ, பைத் தியக்காரனோ, திறமையற்றவனோ,நபுன்சகனோ, எவனாயிருந் தாலும் அவனவன் தன்தன் திறமைக்குத் தக்கபடி தன் தன் சொத்து சுதந்திரங்களை அநுபவித்தாளப் பூர்த்தி யான உரிமை உடையவனாய் விடப்பட்டிருக்கிறானே யன்றி, நம் குழந்தைப் பருவம் நீங்குகிறவரையில் நம்மை போஷிப் பதுபோல, வெள்ளை மேதாவிகள் தம் நாட்டிலுள்ள திறமை யற்ற குழந்தைகளுடைய சொத்து சுதந்திரங்களை பலவந்த மாய் அபகரித்து ஆண்டநுபவிக்கவில்லையே. அதன் காரண மென்னவென்று அவர்களிடம் நாம் கேட்டால், நமக்கு சமாதானம் சொல்லப்போகிறார்களா? சொல்லமாட்டார்க ளென்பது நிச்சயம். ஆகையால் அவர்களுடைய ஏக சகோ தரத்வம், காரியத்தில் தங்கள் நாட்டாரோடு நிற்பதே யன்றி நம் நாட்டில் அநுபவத்திற்கு வராதது. அத்வைதி கள் சொல்லுவது இன்னம் விசித்திரமானது. நாமும் தெ ய்வமும் ஒன்று என்றும், இந்தப் பிரபஞ்சமெல்லாம் வெ றும் பொய்த் தோற்றமென்றும் நாம் நினைத்துக்கொண்டால், ஆசாபாசங்களெல்லாம் விலகிவிடுமாம். உலகத்திலுள்ள சண்டை சச்சரவுகள் சங்கடங்களெல்லாம் உடனே இல்லா மல் போய்விடுமாம். கடவுளின் ஸ்வரூபம் இன்னதென்ப தும், அது என்ன கருத்தோடு இந்த லீலாவிபூதியை உற் பத்திசெய்து நடத்திவருகிறதென்பதும் நமக்குத் தெரியா வென்றும், அவைகளை நாம் ஒருநாளும் அறியமுடியாதெ ன்றும் வேதங்கள் சொல்லுகின்றன. அதுவன்றி, நம்மு டைய ஜீவான்மா என்ன ரூபமாய், எங்கிருக்கிறது, அதன் சுயயோக்கியதை என்ன, அது என்ன வஸ்துவினாலானது என்ற விஷயங்கள் திட்டமாய் எவருக்கும் விளங்கவில்லை. அப்படியிருக்க, வாக்கிற்கும் மனதிற்கும் எட்டாத பரம் பொருளும், ஜீவாத்துமாக்களும் ஒன்றே என்று அழுத்தந் திருத்தமாகச் சொல்ல என்ன ஆதாரமிருக்கிறது. நம்மால் அறியக்கூடாத இரண்டு வஸ்துக்களின் தன்மையைப் பற் றித் துணிந்து நாம் பேசுவதெப்படி? உலகத்தின் ஆசாபா சங்களும் சங்கடங்களும் ஒழிய, இது ஒரு யுக்தியாகவை துக் கொண்டால்,இந்த அத்வைதத்தினால் நாம்கோரிய காரி யம் நிறைவேறுமா? இந்த மருந்து வியாதியைவிட அதிகமான கெடுதலை உண்டாக்கக்கூடியதாகவல்லவா இருக்கிறது. எல் லோரும் தெய்வங்களே என்றால், யார் செய்வது தவறு, யார் செய்வது சரியானது, யாரை யார் கண்டிப்பது என்ற நிர்ணயங்களே இல்லாமல் போவதும், தர்ம அதர்மங்களுக் கும் நன்மை தீமைகளுக்கும், பாபபுண்ணியங்களுக்கும் வித் தியாசம் இல்லாமல் போவதும் நிச்சயம். எல்லா ஜீவர்க ளும் தெய்வங்களென்றும், பிரபஞ்சம் வெறும் பொய்த் தோற்றமென்றும் கருதுவதே மோக்ஷமென்றால், நாம் கை லாசம், வைகுண்டம் முதலிய இடங்களுக்குப் போக வேண்டுமென்று பாடுபடுவதில் அர்த்தமே இல்லை. நாம் கடவுளை நினைத்து பக்தி, பஜனை முதலியவைகளைச் செய் வதே அவசியமில்லை. நாமே கடவுளாதலால், கடவுளின் ஒருபாகம் இன்னொருபாகத்தை நினைத்துஏன்ஸ்தோத்திரம் செய்வது,அதனால் அடையக்கூடிய பலன் என்ன? இந் தக் கொள்கை, நானே தெய்வமென்று ஒவ்வொருவனும் மமதைகொண்டு தன்னரசாய் நடந்துக்கொள்வதில் கொ ண்டுபோய் விடக்கூடியது. முற்காலத்தில் இருந்த இராவ ணன், இரணியன் முதலிய அசுரர்களுடைய கொள்கை இதுவே. இதில் இன்னொரு விநோதம் என்ன வென்றால், இந்தப் பிரபஞ்சத்தின் ஆசாபாசங்களையும் சங்கடங்களை யும் ஒழிப்பதற்காக, இந்த லீலா விபூதி பொய்த் தோற்ற மென்றும், இதையெல்லாம் நீத்து பஸ்மமாக்க ஒரு கடவுள் இருப்பதாகவும் சொல்லுவதோடு அதற்கு அறிகுறியாக விபூதிபூசிக் கொள்ளுகிறார்கள்; அப்படிப் பூசிக்கொண்டு, இந்த உலகத்தில் நமது சகல காமங்களையும் பூர்த்திசெய்து வைக்கும் ஸ்திரீ தெய்வமான காமாக்ஷி என்னும் சரஸ்வதி தெய்வத்தைப் பிரதானமாகப் பூஜிக்கிறார்கள். இந்த அத் வைத பீடத்தை உண்டாக்கிய ஆதிசங்கரரே காமகோடி என்னும் தெய்வ பீடத்தைப் பிரதானமாக ஸ்தாபித்தா ரென்றால், அவருடைய பொய்த்தோற்றப் பிரபஞ்சத்திற்கு அர்த்தமென்ன வென்பது நமக்கு விளங்கவில்லை. அவர்கள் விபூதியைப் பட்டை பட்டையாகப் பூசிக்கொண்டு காமாக்ஷியைப் பூஜை செய்கிறார்கள். அப்படிப் பூசுவது காமாக்ஷியால் ஏற்படக்கூடிய இம்மையின் சுகபோகங்களை யும், காமாக்ஷியையும் எரித்து சாம்பலாக்கிவிட்டதாகக் காட்டுகிறது. அந்தக் கோலத்தோடு காமாக்ஷியின் அருளை நாடுவதென்பது ஒன்றுக் கொன்று நேர் விரோதமான செய்கை யென்பது நிதரிசனமாகத் தெரிகிறது. உலகைப் பொய்த் தோற்றமாகக் கருதி விலக்கவேண்டுமென்ற கொள்கையை ஸ்தாபித்தவரே உலகின் சுகபோகங்களை ஏராளமாகத் தரக்கூடிய காமாக்ஷியென்னும் சுக்கிரனாகிய அசுரகுருவைப் பிரதான தெய்வமாக வைத்துப் பூஜை செய்தாரென்றால், அந்த அத்வைதத்தை அநுபவத்திற்குக் கொண்டுவர முடியாத காரியம் எதுவோ அதை அவரே செய்து வைத்திருக்கிறார் என்றே சொல்லவேண்டியதா கிறது. இதில் இன்னொரு முக்கியமான விஷயம் அடங்கி இருக்கிறது. நம் ஜீவன், பஞ்ச பூதங்களாலான பூத உடம் போடு சேர்ந்து பிறப்பதும், இம்மைச் சுகங்களை அநுப வித்து விட்டு இறப்பதும், மறுபடி புதிய தேகமெடுத்து ஜனிப்பதும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கிறதென் றும், இதினின்று விடுபட்டு, பூத உடம்பின் சம்பந்தமற்று ஜீவன் கடவுளிடம் போய்ச் சேருவதல்லவா மோக்ஷம். அத்வைதிகள் என்ன செய்கிறார்கள் என்றால், இந்த உலகத்தின் சுகபோகங்களைத் தரும் காமாக்ஷி அல்லது சரஸ்வதி என்று சொல்லப்படும் சுக்கிரனை முக்கியமாய் சகலமான சுகபோகங்களையும் தாமே கோருகிறார் கள். அதோடு சிவனைப் பூஜை செய்தால், அவர் கடைசிக் காலத்தில் பூத உடம்பை முடிவாக எரித்து விட்டு இந்த ஜீவனைத் தம்மோடு சேர்த்துக் கொள்வார் என்று கருதுகிறார்கள். ஆனால் அந்தச் சிவனும் இந்தச் சீவனும் ஒன்று என்றும் சொல்லுகிறார்கள். சீவனுடைய பாதிபாகம் அம்பிகை என்கிறார்கள். சிவனையும் அம்பிகையையும் பூஜை செய்வது கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பது போலல்லவா முடிகிறது. இம்மைச் சுகங்களை ஏராளமாகக் கொடுக்கும்படி அம்பிகையைக் கேட்டு, அவற்றினின்று விடுவித்து மோக்ஷ பதவியைக் கொடு என்று சிவனைக் கேட்பது ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறதல்லவா. அதுவன்றி மோக்ஷமென்பது சிவனோடு ஒன்றாய்ப் போவ தென்றால், அது இந்த ஜீவனும் அம்பிகைக்குப் புருஷனாகும் நிலைமையல்லவா. இந்தக் கொள்கை எவ்வளவு விகாரமாகத் தோன்றுகிறது பார்த்தீர்களா; ஆனால் விசிஷ்டாத்வைதிக னின் கொள்கை இதுவல்ல! நாம் உலக சுகங்களை நமதிச்சை ப்படி அநுபவித்துக்கொண் டிருந்தால், நமக்கு ஒரு நாளும் விடுதலை ஏற்படாது, நாம் கேட்கிறோமே யென்று கரு கடவுள் உடனே நமக்கு மோக்ஷத்தைக் கொடுத்து விட மாட்டார்,பஞ்சபூதத்தாலாகும் உடம்புகள் அதனதன்சட்ட திட்டங்களின்படி காரியங்களைச் செய்வதற்குக் கடவுளே எதிரிடையாக நடந்துகொள்ளமாட்டார்; நாம் நமது நடத் தையால் பஞ்ச பூதங்களின் பற்றைப் படிப்படியாக விலக்கிக் கொண்டு இந்தப்பிறப்பாகிய சக்கரத்திலிருந்துவெளிப் பட்டு பரமாத்மாவிடம்போக யோக்கியதையுடையவர்களாக நம்மைச்செய்து கொள்ளவேண்டும். நம் ஆசாபாசங்களை அடக்குவதற்கு அடிப்படையாக நாம் சாத்விகத் தன்மை யை உண்டாக்கிக் கொள்ளவேண்டும். அதற்கு அது குணமாக இந்த தேகத்தையே சாத்விக ஆகாரங்களை உண்பதால் அடியோடு மாற்றிவிட வேண்டும். அதிலே தான் மோக்ஷத்தின் திறவுகோல் அடங்கி இருக்கிறது என்பது விசிஷ்டாத்வைதிகளின் கொள்கை. அதுதான் வேதமதம் அல்லது வைதிகமதம். 

தேசிகருடைய பிரபந்தம் பதார்த்த குணசிந்தா மணி முதலியவற்றில் சாத்விக, ராஜஸ, தாமஸ பதார்த் தங்கள் இன்னின்னவை என்று முன்னோர் நிர்ணயித்திருக் கிறார்கள். அவைகளில் சாத்விககுணமுடைய பதார்த்தங் களை வரம்பழியாது உண்டுவந்தால், மனிதர்களுடைய தே கம் புனிதமடையும்; அவர்கள் அதீதமான ஆசாபாசங்களி னால் தூண்டப்படாமல் பரிசுத்தமான வழிகளைக் கடைப் பிடிப்பார்கள்; கடவுளிடம் மனம் திரும்புவதற்கு அது அனுகுணமான சாதனமாகும்; சுத்தமான ஆகாராதிகளால் தேகம் நன்னிலைமை யடையும் ; அறிவு தெளிவு பெறும் அக்ஞானத்தால் ஏற்படும் ஆசாபாசங்களில் அறிவு செல் லாது, பாரமார்த்திக வழியில் செல்ல அதுவே அடிப்படை யான நிலைமை. அத்வைதிகளின் நூலாகிய கைவல்லிய நவ நீதம் என்பதிலிருந்து நான் இங்கு ஒரு பாவை குறிப்பிடுகிறேன். 

“அறுசுவையி குணங் குற்றம் அசுத்தம் சுத்தம் 
அபத்தியம் பத்தியமென வூணாய்ந்திடாமல்
பொறுமையுடன் கிட்டினத்தைக் காட்டுத்தீப்போற்
போகங்கள் புசிப்பவன் மாயோகியாகும்
சிறிதுவலிது கடன தன்னியங்கள் நன்மை 
தீமைகள் சேரினும் படிகச்செயல்போற் சித்தம்
வெறிதிருக்குமவனே மாத்தியாகியாவன் விரதம்
இம்மூன்றுள்ளவரே வின்னோரே.” 

தன் கருத்தையும் சொல்லுகிறேன். ‘அறுவகை ரசங்க ளின் குணாகுணங்களைச் சுத்த அசுத்தங்கள் பத்திய அபத்தியங்கள் என உணவை ஆராய்ந்து பாராமல் சாந்தத்தோடும் நேரிட்டதைக் காட்டுத் தீப்போலப் போகங்களை அனுபவிப்பவன் மாயோகியாம்; அற்ப மும் மகத்துவமானவைகளும் தன்னுடையதும், பி ருடையதுமானவைகளும் புண்ணிய பாவங்களும், ஆகிய இவைகள் அடைந்தாலும் பட்டிகத்தின் தன்மையைப் போலச் சித்தமானது பற்றின்றி நிற்பவனே மாத்தியாகியா வான். இம்மூன்று விரதங்களும் உடையவர்களே முத்தியை உடைய சீவன் முக்தர்கள் என்பது இந்தப் பாடலின் அர்த்தமாம். இதில் மோக்ஷத்திற்கு வழி எவ்வளவு சுலப மாகக் காட்டப்பட்டிருக்கிறது,பார்த்தீர்களா! சுத்தம்,அசுத் தம், குணா குணம் முதலிய எதையும் பாராமல் எது அகப் படுகிறதோ அதைத் தின்பவர்கள் தான் மோக்ஷத்திற்கு உரியவராம். இதை எந்த அநுமானத்தின் மேல் கண்டு பிடித்தார்கள் என்பது தான் நமக்கு விளங்கவில்லை. இது உண்மையானால், நம்முடைய காக்கைகளெல்லாம் சீவன் முக்தர்களென்று நாம் நிச்சயமாய்ச் சொல்லலாம். அவைகள் ஒவ்வொன்றுக்கும் மோக்ஷம் சித்திப்பது நிச்சயம். ஏனென்றால், அவைகள் எது அகப்படுகிறதோ அதை ஆசையோடு தின்கிறது. பன்றிகள் கூட மலத்தையும் சில குறிப்பிட்ட வஸ்துக்களையும் மாத்திரம் தின்னுகின்றனவே யன்றி, மற்ற எதையும் தின்பதில்லை. ‘புலி பசித்தாலும் புல் தின்கிறதில்லை’ யென்ற பழமொழி சர்வசாதாரணமானது. அதுபோல ஒவ்வொரு ஜீவ ஜெந்துவுக்கும் உவப்பான ஆகாரங்கள் இன்னின்னவை என்ற நிர்ணயம் இயற்கை யிலேயே ஏற்பட்டுத் தொன்று தொட்டு அநுஷ்டானத்தில் இருந்து வருகின்றன. அததற்கு ஏற்பட்ட ஆகாரத்தை தின் னாமல் அசுத்தங்களைத் தின்றால், தேகாரோக்கியம் குலைந்து போவதும், நோய், மரணம் முதலியவை சம்பவிப்பதும் பிரத்தியக்ஷமாகக் கண்ணெதிரில் நிகழ்பவை. நாம் சாந்த மாகவும் மனோதிடத்தோடும் விஷத்தைப் புசித்தால், அது நம்மைக் கொல்லாமல் விடுமா? ஊமத்தங்காயைத் தின்று கொண்டே வந்தால், பைத்தியம் உண்டாகாமல் இருக் குமா? பாதம் பருப்பு, நெய், தயிர், பால் முதலியவற்றை யே உண்பவன் சிற்றின்ப சுகத்தில் நாட்டங் கொள்ளாமல் இருப்பது சாத்தியமா? ஒவ்வொரு பதார்த்தமும் அத னதன் குணத்திற்குத் தக்கபடி தேகத்தில் மாறுதலை உண் டாக்காமல் போகுமா? மனிதன் முழு மனதோடும் ஒரு கெட்ட வஸ்துவை உண்கிறானென்று வைத்துக் கொள் வோம். அது தாண்டையை விட்டுக் கீழே இறங்கும் வரையிலே தான், அவனுடைய மனதின் அதிகாரம் செல்லு மன்றி அதன்பிறகு அது உடம்பில் செய்யும் மாறு தலை அவன் தடுப்பதெப்படி? இப்படி சுத்த அசுத்தம் நல்லது கெட்டது பாராமல் தின்று வியாதியை உண்டாக்கிக் கொண்டால் மனத்தெளிவு கெட்டுப் போகுமென்பதை நாம் சொல்லவும் வேண்டுமா? துர்க்குணம் படைத்தவனை வயிற்றுவலிக்காரன் என்று சாதாரணமாய்க் குறிக்கிறோ மல்லவா? ஆகையால், கெடுதலான ஆகாரத்தினால் மனித னுடைய அறிவு, குணம், நடத்தை முதலிய எல்லாம் அவ சியம் மாறுபடு மென்பது பிரத்தியக்ஷத்தில் காணப்பட்ட அனுபவம். அதையநுசரித்தே வைத்திய சாஸ்திரங்களும், மருந்துகளும் உலகம் முழுதிலும் கணக்கிலடங்காமல் ஏற்பட்டிருக்கின்றன. உலகத்தின் கட்டுப்பாடுகளை மீறி, அநாவசியமாகத் தன் உடம்மை வதைத்து, வீண் அவஸ் தைகளை உண்டாக்கிக்கொண்டால் அதனால் நீடித்த வியாதி யோ, அல்லது, மரணமோ விளையுமே யன்றி மோக்ஷம் எப்படி சித்திக்கும் என்பதுதான் விளங்கவில்லை. ஆகார விஷயங்களில் மிருகங்கள், பூச்சி புழுக்கள்கூடத் தங்கள் பகுத்தறிவை உபயோகித்து அதனதன் நிலைமைக்கும் உடம்பின் கூறுக்கும் உகந்த ஆகாரங்களை உண்டு தன்தன் தேக நன்னிலைமையைக் காத்துக்கொள்ளுகின்றன. மனிதன் மோக்ஷமடையவேண்டுமானால், பூச்சி புழுக்களைவிடக் கேவல மாய் நடந்து, நிர்ணயங்களைக் கடந்து, அகப்பட்டதைத் தின்று, இந்த அற்புதமான சரீரத்தைப் பாழாக்கிச் சீர் குலைய அடித்துக்கொள்ளவேண்டு மென்பது பகுத்தறிவை திருப்தி செய்யத்தக்க விஷயமாய்ப் படவில்லை. நமது ஆசாபாசங்களையும் துர்மோகங்களையும் விலக்கவேண்டு மானால், அதற்கு சாத்விக பதார்த்தங்களே தக்க உபகார ணங்களன்றி மலத்தையும் அழுக்கையும் துர்க்குணங்களைப் பெருக்கும் வஸ்துக்களையும் மனம்வைத்து உபயோகிப் பது நாம் கோரிய பலனைத் தருமோ! கடவுள் இந்தப் பிர பஞ்சத்தில் ஒன்றுக்கொன்று வேறுபட்ட கோடாநுகோடி ஜீவஜெந்துக்களைப் படைத்து அததற்குத் தகுந்த, கணக்கி லடங்கா ஆகாராதிகளைப் படைத்திருக்கின்றார். நாம் பூமியில் நெல்லை விதைக்கிறோம்; ஏராளமாக நெல் விளை கிறது. புளியங்கொட்டையை நடுகிறோம். மரம் முளைத்து புளியம்பழங்களை வருஷாவருஷம் அபரிமிதமாகச் சொரி கிறது. கரும்பை நடுகிறோம். அதிலிருந்து பொதிபொதி யாக நாம் வெல்லாம் பெறுகிறோம். மிளகாய்க் செடியை நட்டால், மிளகாய்கள் வந்து குவிந்துபோகின்றன. இப்படி நமக்குத் தேவையான பற்பல குணவேறுபாடுகளுள்ள எண்ணிறந்த வஸ்துக்கள் நமக்கு சுலபத்தில் கிடைக் கின்றன. இத்தனை வகையான வஸ்துக்களும் நமக்கு ஒரே வயலிலிருந்து உண்டாகின்றன. ஆனால் நாம் அந்த வயலை எவ்வளவு ஆழம் தோண்டிப்பார்த்தாலும்,மணல், களிமண், கல் முதலியவற்றைத் தவிர வேறு எதுவும் காணப்பட வில்லை. மணல் முதலியவற்றை நம் வாயில்போட்டு மென்றால் நமக்கு எவ்விதமான சுவையும் உண்டாவதில்லை. அவைக ளைச் சுவைப்பதும் வேதனையாயிருக்கிறது. ஆனால் நமக்கு உண்டாகும் விளைபொருள்கள் ஏராளமாயிருப்பதிலிருந்து, எல்லாம் மண்ணிலிருந்தே பிரித்தெடுக்கப்பட் டிருக்கின்றன வென்பது பிரதியக்ஷயமாகத் தெரிகிறது. ஒரே தினிசான வஸ்துவைப் பிரித்தெடுத்து அடிக்கடி நமக்கு உதவும்பொரு ட்டு ஒவ்வொரு விதையிலும் சாசுவதமாக பிரம்மரந்திரம் அமைந்திருக்கிறது. அதை கிரமப்படி பூமியில் நட்டுத் தண்ணீர் பாய்ச்சினால், அதற்குள் மறைந்துள்ள பிரம்ம ரந்திரம் தனக்குத்தானே வேலை செய்யத்தொடங்கி செடி கொடி மரங்களாய் மாறி தன்னைப்போன்ற ஏராளமான பிரம்மரந்திரங்களை மறுபடி உண்டாக்கி வைத்துவிட்டு அழிந்து போகிறது. ஜீவஜேந்துக்கள் தம் தமக்குத் தேவை யானவைகளை உபயொகித்துத் தமது தேகத்தை போஷித் துக்கொள்ளுகின்றது. மறுபடி அதே பொருளை உற்பத்தி செய்யத் தேவையான பிரம்மரந்திரங்கள் மிஞ்சி நிற்கின் றன. காலில் மிதிபட்டு லக்ஷக்கணக்கில் கண்ட இடங்களி லெல்லாம் கிடக்கும் புளியங்கொட்டைகளில் ஒன்றை றை எடு த்து நாம் பூமியில் நட்டுத் தண்ணீர் வார்த்தால், அது சில வருஷங்களில் பிரம்மாண்டமான மரமாகி, ஒவ்வொரு வரு ஷத்திலும் லக்ஷக்கணக்கில் பழங்களைக் கொடுத்தபடி நீண் டகாலம் உயிரோடிருந்து மடிந்துபோகிறது. மரத்தின் ஒவ்வொரு பாகமும் நமக்கு ஒவ்வொரு விதத்தில் பயன் படுகிறது. அதிலிருந்து உண்டாகும் ஒவ்வொரு விதை யிலும் தாய் விதைக்கு இருந்தது போன்ற பிரம்மரந்திரம் அமைந்திருக்கிறது. புளியங்கொட்டையை நட்டால், அதிலிருந்து கரும்பு முளைப்பதில்லை; அதன் பழங்களில் புளிப்பை தவிர வேறு சுவை இருப்பதில்லை. இப்படி ஒவ்வொரு புளியங்கொட்டையும் முளைப்பது முதல் மர மாகிப் பலவருஷகாலம் இருந்து அழியும் வரையில் ஒரே விதமாக நடந்து கொள்ளுகிறது; ஒரேவிதமான சத்துக்களை யும், வஸ் துக்களையும் பூமியிலிருந்து கிரகித்து நமக்கு உதவி விட்டுப்போகிறது. இது ஓர் இலாகா. இந்த ஓர் இலாகா வில் இந்த உலகம் முழுதிலும் ஏற்படும் மொத்தக் கொட் டைகள் எத்தனை என்று கணக்கிட்டுச் சொல்லமுடியுமா? இதைப் போல எத்தனையோ வகை வகையான குணவேறு பாடுகளைப் பிரித்துதவும் வேறு வேறு தினிசு விதைகள் கோடாநுகோடியாய் உலகில் இருக்கின்றன.ஆற்று மணலை எண்ணுவது எவ்வளவு சுலபமானதோ அதுபோன்றதே. இந்தப் பிரபஞ்சத்தில் எத்தனை தினிசு விதைகள் இருக் கின்றனவென்று கணக்கெடுப்பதும். இப்படி நிரம்பிக் கிடக்கும் விதைகள் ஒவ்வொன்றுக்குள்ளும் கடவுள் ஒளிந்துகொண்டிருந்து அதற்கு ஏற்படும் மாறுபாடுகளையும், அதன் வேலைகளையும் நடத்திவைக்கி றாரா ? இல்லை. இப்போது நமக்கெதிரில் கடிகாரங்களைத் தயாரித்து விசைகளை வைத்து விடுகிறார்கள். மயிர்போலி ருக்கும் ஒரு விசை காற்றினாலசைகிறது. அதிலிருந்து சக் கரங்கள் ஒன்றை யொன்று கணக்குப்படி நகர்த்திக்கொ ண்டே போய் முடிவில் முள்களை அசைக்கின்றன. அவ் வாறு விசைகள் பல வருஷங்கள் வரையில் தாமாகவே அத னதன் வேலையை ஒழுங்காகச் செய்துகொண்டே இருக்கின் றன. இதைப்போல, இந்த உலகைப் படைத்த சிருஷ்டி கர்த்தா ஒவ்வொன்றிலும் விசைகளை வைத்து, அதது சாசுவதமாகத் தன்தன் வேலையைச் செய்யும்படி தந்திரம் செய்திருக்கிறார். அதையே நாம் பிரம்மரந்திரம் என்று சொல்லுகிறோம்.நமது மண்ணுலகில் மறைந்து கிடக்கும் விதைகளாகிய பிரம்மரந்திரங்கள் இத்தனை என்று நாம் மன தால் பாவிக்கவும் முடியாது; நம் எண்ணிக்கையிலும் அது அடங்காது. ஒவ்வொரு ஜீவஜெந்துவும் அதனதன் சாமர் த்தியத்திற்கும், வல்லமைக்கும், உழைப்பிற்கும் தக்கபடி எதை எப்படி வேண்டுமானாலும் தயாரித்து உபயோகித் துக் கொண்டு போகட்டும் என்று பிரம்மா சுயேச்சை யளி த்திருக்கிறா ரென்பது பிரத்தியக்ஷமாகத் தெரிகிறது. யார் எந்த வஸ்துவைத் தின்கிறார்கள், என்பதையாவது எவ்வ ளவு தின்கிறார்கள் என்பதையாவது சிருஷ்டிகர்த்தா கவ னிக்கவேண்டுமென்ற அவசியமாவது, அதன் கணக்கை எடுத்து, அதற்குத் தக்கபடி ஜீவர்களை தண்டிக்கவோ, புக ழவோ வேண்டுமென்ற நியதியாவது இருக்குமானால், ஒவ் வொரு வஸ்துவும் தானாகவே தன்னைப் பெருகிக்கொள்ளும் சூட்சுமத்தை அவர் வைத்துவிட்டு எதிலும் படாமல் தூர விலகி இருக்கமாட்டார். 

நாம் இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். பிரம்மரந்திரங்களாகிய விதைகளில் ஒவ் வொரு வகை விதையும் அதனதன் நீர்வளம் நிலவளத்திற் குத் தக்கபடி குணத்தில் வேறுபடுகிறது. நெல்விதையில் எத்தனையோ வகையான விதைகள் இருக்கின்றன. பூமியின் செழுமை, தண்ணீரின் மிகுதி, இதர வசதிகள் ஆகியவற் றால் நெல் விதைகள் பாதிக்கப்படுகின்றன. நீர்வளம் மிகுதி யாயுடைய தஞ்சை ஜில்லாவில் உற்பத்தியாகும் அரிசி சுல பத்தில் ஜீரணமாகத் தக்கதாயும், மிருதுத் தன்மையுடைய தாயுமிருக்கிறது. மலைநாடாகிய நெல்லூரில் உற்பத்தியாகும் அரிசி அழுத்தமாகவும், சுலபத்தில் ஜீரணமாகாததா யும் இருக்கிறது. ஓர் ஊரில் உண்டாகும் மாம்பழம் தேனுங் பாகுமாயிருக்கிறது; இன்னோரிடத்திலிருப்பது புளிப்பும் காறலுமாயிருக்கிறது. பூமிக்குள் புற்றுகளில் மறைந்திருக்கும் பாம்புகளை நாம் கவனித்தால், அவைக ளும் இந்த சிருஷ்டியில் பெரிய உபகாரத்தைச் செய்கின் றனவென்பது விளங்கும். பூமிக்குள் புளிப்பு, தித்திப்பு உப்பு, உவர்ப்பு, கைப்பு, காரம் முதலிய சுவைகளின் ஸத்து நிறைந்து கிடப்பது போல விஷமும் நிறைந்திருக்கிறது. பாம்புகள் பூமிக்குள்ளிருந்தபடி மண்ணிலுள்ள விஷத் தை இழுத்து நமக்காக அதை சுத்தமாக்கும் பிரம்ம ரந்தி ரஙகளாக அமைந்திருக்கின்றன. தண்ணீரிலும் விஷம் இருக்கிறதாகையால் அதை இழுப்பதற்கு தண்ணீர்ப் பாம்புகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் விஷம் மண்ணில் அதிகமாகவும், தண்ணீரில் சொற்பமாகவும் இருக்கிற தாகையால், தண்ணீர்ப் பாம்பின் கடியினால் மரணம் உண்டாகிறதில்லை. பிரம்ம ரந்திரங்களாகிய பீஜங்கள் பொதுவாக ஒரேமாதிரி வேலை செய்யும்படி சிருஷ்டிக்கப் ப்ட்டிருக்கின்றன வானாலும், அண்டை அயலிலுள்ள சௌகரியங்களினாலோ இடையூறுகளினாலோ, அவற்றின் போக்கும் குணமும் வித்தியாசப்பட்டுப் போகின்றன. ஒரு ரயிலை சமமாக இருக்கும் பாதையில் விட்டால் அசைவின்றி வேகமாய்ப் போகிறது. மலைமேல் ஏறும் ரயில் பாதையில் அதே ரயிலை விட்டால் அதன் வேகம் குறைந்துபோகிறது. தண்டவாளத்தின் மேல் தண்ணீர் வெள்ளம் வந்து விட்டால், வழியை விட்டு நகர்ந்து கீழே விழுந்து விடுகிறது. அதுபோல ஒவ்வொரு பீஜமும் அதனதன் காரியத்தை தானாகவே செய்கையில் ஏற்படும் துணைக்கருவிகளின் வித்தியாசத்தால் மாறுபட்டு வேறுபட்ட பலாபலன்களை உண்டாக்குகின்றன. அரிசி யைத்தின்றுகொண்டே இருப்பவன் அதை விட்டு வைக் கோலைத் தின்று சமாளித்துக்கொள்ளுவதாக வைத்துக் கொள்ளுவோம். அவனுடைய உடம்பின் மனிதத்தோற் றம் அதனால் உடனே மாறாதாயினும், உடம்பின் உறுதி அதன் குணம் முதலியவை காலக்கிரமத்தில் மாறிப்போ துவ நிச்சயம். தசை முதலியவை இறுக இறுக மூளையும் கெட்டிப்பட்டு, அதன் வேகம் குறைந்து மந்தித்துப்போம். அவன் மனிதனுடைய இயற்கையிலிருந்து மாட்டினுடைய   இயற்கையை யடைவது நிச்சயம். அவனுடைய வடிவம் மாடுபோல் மாறிவிடாதென்பதை நான் சொல்ல வேண்டு வதில்லை. ஆனால் அவனுடைய நடவடிக்கைகளும்,குண மும் மிருகத்தன்மையை அடையு மென்பது பிரத்தியக்ஷ த்தில் நிரூபிக்கக்கூடிய விஷயம். அந்த குணம் அவன் மண்டையோடு ஒழிகிறதா? இல்லை, மற்ற மாஞ்செடி கொடிகளுக்கு எப்படி விதைகளாகிய பிரம்மரந்திரங்கள் ஏற்பட்டிருக்கின்றனவோ, அதேபோல, மனித வர்க்கத்திற் கும் பீஜங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மனிதவர்க்கம் எப் படிப் பெருகுகிறதென்பது எல்லோருக்கும் தெரிந்த விஷ யமே. புருஷனுடைய இந்திரியத்தில் ஒரு துளியும் ஸ்திரீ யின் இந்திரியத்தில் ஒரு துளியும் சேர்ந்து ஸ்திரீயின் கர்ப்பப் பைக்குள் ஒன்றுபட்டு வளர்ந்து சிசுவாகமாறி வெளிப்படுகிறது. அப்படி உற்பத்தியாகும் குழந்தையின் வடிவம் சில சமயங்களில் தகப்பனாருடைய வடிவத்தைப் போலவே இருக்கிறது; சில சமயங்களில் தாயாரின் வடிவத் தைப் போலவே இருக்கிறது. சில சமயங்களில் இரண்டை யும் காட்டுவதாய் இருக்கிறது. தகப்பனாரிடமிருந்து தாயின் கர்ப்பப்பையில் போய்ச்சேர்ந்தது ஒரு துளி இந்திரியமே. இந்திரியம் ஜலரூபமா யிருப்பது. தந்தை யின் வடிவம் உச்சிமுதல் உள்ளங்கால் வரையில் எப்படி இருக்கிறதோ அப்படியே குழந்தையின் வடிவமும் அமை கிறது. உடம்பின் வெளித் தோற்றம் மாத்திரமா குழந்தை க்கு உண்டாகிறது? தந்தை செவிடா;யிருந்தால், குழந் தையின் காதிலும் காலக்கிரமத்தில் ஊனம் ஏற்படுகிறது. தந்தைக்கு வயிற்றுவலி இருந்தால், பிள்ளைக்கும் கால கிரமத்தில் அது உண்டாகிறது. இப்படி தந்தையின் உடம்பின் வெளிப்பாகம், உள்பாகம் ஆகிய இரண்டும் எவ்வெவ்வித இலக்ஷணங்களோடு, அல்லது ஊனங்களோடு அமைந் திருக்கின்றனவோ, அவ்வித இலக்ஷணங் களோ ஊனங்களோ குழந்தைக்கும் இருக்கின்றன. அதோடு தாயின் வடிவத்தன்மையும் சேருவதால் சிற்சில சமயங்களில் சில அம்சங்கள் மாறுபட்டுத்தோன்றுகின் றன. அதுவன்றி, தகப்பனுடைய குணம், அறிவு, ஒழு க்க முதலியவைகளும் அநேகமாய்ப் பிள்ளையிடம் காணப் படுகின்றன. அதுவன்றி, ‘மூத்ததுமோழை இளையது காளை’ என்பது சர்வசாதாரணமான பழமொழி. தாயும் தகப்பனும் உலக அநுபவம், வியவகார ஞானம், புத்திநுட்பம் முதலியவை இல்லா தவர்களாயிருக்கும் யௌவனப்பிராயத் தில் பிறக்கும் மூத்த குழந்தை அவர்களுடைய குணங் களைப்பெறுகிறது; அவர்கள் புத்திசாலிகளான பிறகு பிறக்கும் இளைய குழந்தைகள் அவர்களைப்போலவே புத்தி நுட்பமுடையவர்களா யிருக்கிறன. இவற்றினால் நாம் சில முக்கியமான விஷயங்களை யூகித்துக் கொள்ள வேண்டியவர்களாகிறோம். நாம் மிக இழிவாகக் கருதும் மனிதருடைய ய பீஜத்திற்குள் ஓர் அற் புதமான பிரம்மரந்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது. அது போட்டோப்படம பிடிக்கும் எந்திரம் போல் வேலை செய்கி றது. அந்த பீஜத்தில் உற்பத்தியாகும் விந்துவின் ஒவ் வோர் துளியிலும் அந்த போட்டோ எந்திரம் வேலை செய்து மனிதனுடைய தேகத்தின் உள்புறத்திலும், வெளிப்புறத்தி லும் அமைப்பு, குணம் நடவடிக்கை முதலிய வற்றில் என் னென்ன மாறுதல் ஏற்படுகிறதோ, அது அப்படியே ஒவ் வொரு துளி விந்துவிலும் பதியும்படியும், மறுபடி, ஸ்திரீ யின் கர்ப்பப்பைக்குப் போன அந்த நகல் வந்து அப்படியே உருவ மடைந்து அசலின் வடிவம் குணம் முதலிய வற் றையே தத்ரூபம் காட்டும்படி செய்கிறது. மனிதனுடைய விந்துத் துளியில் அவனுடைய சர்வாங்கங்களின் வடிவம் முதலியவை பதிவது மாத்திரமா? அப்போது ஆகாயத்தி லுள்ள நவக்கிரகங்கள், நக்ஷத்திரங்கள் ஆகியவற்றின் இருப் பிடங்கள், உச்ச நீசத் தன்மைகள், குணாகுணங்கள் முதலியவைகளும் மனிதனுடைய ஒவ்வொரு துளி விந்துவிலும் பதிந்து போகிறதாகையால், அந்தத்துளி கருவாகும் காலத் தில் உள்ள கிரகநிலை தசா புக்திகள் தாய் தந்தையரின் வடிவங்கள் அவர்கள் அது வரையில் செய்த காரியங்களா கிய கர்மங்களின் மொத்த ஸாரம், ஆசாபாச வேகம் அல் லது வாசனை ஆகிய யாவும் ஒவ்வொரு துளி விந்துவிலும் ஒட்டிக் கொண்டிருக்கும்படி மனித பீஜத்தில் அமைக்கப் பட்டுள்ள போட்டோ எந்திரமாகிய பிரம்மரந்தரம் செய்கி றது. ஒருவனுக்குப் பல குழந்தைகள் பிறந்தால் அந்தந்தக் காலம் வரையில் உள்ள மொத்த ஸாரம் அந்தந்தப் பிள்ளை யிடம் பிரதிபலிக்கிறது. மனிதன் இறக்கும் போது கடைசி வரையில் ஏற்பட்ட கர்ம பலாபலன் அவனுடைய பீஜத்தில் ஏற்பட்டுக் கொண்டே வருகிறது. அது கண்ணிற்குத் தென் படாத சூட்சும ரூபமுள்ள எந்திரமாதலால், மனிதன் இறந்த பின் அவனைக் கொளுத்தினாலும், அல்லது புதைத்தாலும், அவனுடைய உடம்பிலுள்ள பஞ்ச பூதங்கள் பிரிந்துபோய் விடும்போது அந்த சூட்சுமமான ரந்திரம் தனித்து நின்று அதன் பூர்வ கன்மம், பூர்வ ஆசாபாசங்கள் முத லியவற்றிற்குத் தக்கபடி புதிய உடம்பைப் பெறுகிறது. இப்படி ஜீவர்கள் பூத உடம்போடு சம்பந்தப்பட்டு பிரம்ம ரந்தர மாகிய சூட்சுமத்தினால் கர்ம பலாபலன்களைத் திறட் டிக் கொண்டு பிறப்பு இறப்பாகிய சக்கரத்தில் சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருக்கிறது என்பது நமக்குப் பிரத்தியக்ஷ மாகத் தெரிகிறது. 

இப்படி மனிதன் இறப்பு பிறப்பாகிய சக்கரத்தில் அகப்பட்டு, பஞ்ச பூதங்களின் விலங்குகளில் சிக்குண்டு, விடுபடும் மார்க்க மறியாது இந்த உலகத்திலேயே கிடந்து உழலுகிறான். இந்தக் கொடிய சிறையிலிருந்து விடுபடு வதற்கு, வேதாந்திகளாகிய வைஷ்ணவர்கள் வைதிக மதமே உண்மையான சாதனமென்று கண்டுபிடித்து மிக வைராக் கியத்துடன் அதைக் கடைப் பிடித்து வருகின்றார்கள் என்று மன்மதபீட மகா யோகீசுவரர் கூறி மேலும் பேச முயன்ற காலத்தில், எதிரில் உட்கார்ந்திருந்தவரும், விபூதி ருத்ராக்ஷம் முதலிய சின்னங்களைத் தரித்திருந்தவருமான ஸ்மார்த்த ஜாதிக் கிழவர் ஒருவர் மிகப் பணிவான குரலில் பேசத் தொடங்கி, “ஸ்வாமிகளுக்கு ஒரு சிறிய விக்ஞா பனம். அநுமதி தயவு பண்ண வேண்டும்” என்றார். 

யோகீசுவரர்:- எதைப் பற்றிக் கேட்க வேண்டுமானா லும் கேட்கலாம். எனக்குத் தெரிந்தவரையில் சமாதானம் சொல்லுகிறேன். அல்லது, நான் சொன்னதில் தவறு ஏதாவது இருந்தால் நான் என்னையே திருத்திக் கொள்ளத் தடையில்லை. பகுத்தறிவுக்கு ஒத்த உண்மை எது என்பதை ஆராயவேண்டு மென்பதே என் முக்கிய நோக்க மன்றி, ஜாதி மதப்போராட்டத்தைக் கிளப்ப வேண்டுமென்பது என் எண்ணமல்ல. அன்னிய மதத்தினர் நம்மையும் நமது கொள் கைகளையும் தூஷித்து இழிவு படுத்துகிறார்கள். ஆகையால் நாம் நமக்குள் உள்ள வேறுபாடுகளை நீக்கி சமரஸத்தன்மை யை உண்டாக்கிக் கொள்ள வேண்டிய தவசியம். அதுவு மன்றி, மற்ற மதத்தார்களுக்கும் நமக்கும் கூட ஒற்றுமை உண்டாக்கிக் கொள்ளவும் நாம் முயல வேண்டும். ஒவ்வொரு மதத்தினரின் முன்னோர்கள் தெய்வங்களை எவ்வித உள் கருத்தோடு அமைத்திருக்கிறார்கள் என்பதை நாம் நன்றாக ஆராய்ந்து பார்ப்போமானால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் பொருத்தமானதாகவே இருக்கு மென்பதில் ஐயமில்லை. ஆனாலும் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கும்போது, சிலவற்றில் சில அருமையான விஷயங்கள் காணப்படலாம். கூசாமல் அவைகளை ஏற்றுக் கொள்வதே விவேகிகளுக்கழகு. உதாரணமாக நாம் நம்முடைய போக்கு வரத்து சாதன விஷயத்தை எடுத்துக் கொள் வோம். ஆதி காலத்தில் ஜனங்கள் ஓர் ஊரிலிருந்து இன் னோர் ஊருக்குப் போக வேண்டுமானால், அது எவ்வளவு தூரமானாலும், காலால் நடந்தே போனார்கள்; அல்லது கட்டை வண்டிகளில் போனார்கள். காலக்கிரமத்தில் குதிரை வண்டிகள், பீட்டன் வண்டிகள், மோட்டார் வண்டி கள், ரயில் வண்டிகள், டிராம் வண்டிகள், ரிக்ஷாக்கள், கப்பல்கள், ஆகாய விமானங்கள் ஆகியவை தோன்றத் தோன்ற, பழைய சாதனங்களை விட்டுப் புதியவைகளை உப யோகிக்கிறார்கள். முன் காலங்களில் கால் நடையாகவும், கட்டை வண்டியிலும் ஏறிப் பல மாதகாலம் பிரயாணம் செய்து காசி ராமேசுவரம் போனவர்கள் இப்போது ரயி லிலும், மோட்டாரிலும் போகிறார்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையால்தானே என்ற நீதிப்படி,மதியூகம் முதிர, முதிர, புதிய கொள்கைகளும், புதிய பழக்க வழக்கங்களும் தோன்றுகின்றன. எவைகள் உசிதமாகத் தோன்றுகின்றனவோ அவைகளை நாம் ஏற்றுக் கொள்ளுகிறோம். அதுபோல, நாம் மத விஷயத்திலும் எல்லாக் கொள்கைகளையும் சமரஸத்தன்மையாக ஆராய்ந்து பார்த்து உசிதா உசிதங்களைத் தெரிந்துகொள்ள முயல்வது குற்ற மாகாது. நாம் கொள்கைகளின் குணா குணங்களை ஆராய்கிறோ மென்று நினைத்துக் கொள்ள வேண்டுமே யன்றி பிற மதஸ்தரை தூஷிப்பதாகவோ, இழிவு படுத்துவ தாகவோ கருதுவது சரியல்ல. நம் புராணங்களில் சில சமரஸமாகவும், சில பிற மத தூஷணை செய்வனவாகவும் இருக்கின்றன. சில தினங்களுக்கு முன் நான் ஸ்ரீ மஹாஸ்காந்த புராண வசனம் என்ற ஒரு புஸ்தகத்தைப் படித்தேன். அதில் 6-வது அத்தியாயத்தில் பிரமன் முதலிய தேவர்கள் அசுரர்களுடைய தொல்லையைப் பொறுக்க மாட் டாமல் நாராயணனிடம் ஓடி முறையிட்டதாகச் சொல்லப் பட்டிருக்கும் இடத்தில், அவர் சொன்னதாக எழுதப்பட் டிருக்கும் மறு மொழியை இங்கு நான் குறிப்பிடுகிறேன். அந்த வேடிக்கையைப் பாருங்கள். “ஹே பிரம்மேந்திரரே! நீங்கள் இருவரும் இத்தேவர்களுடன் என்னிடம் வந்த காரணம் என்ன? யான் இப்போது என்ன செய்ய வேண் டும்? யானோ அருவருக்கத்தக்க ஊமைக் கோட்டானைப் போல், இப்போது தினமும் மேருமலையின் குகையைச் சேர்ந்து, பயமில்லாது நித்திரை செய்து வருகிறேன். இவ் விடத்தில் சொப்பனத்தில் சூரனைக் கண்டு பயந்து உலக முழுவதிலும் ஓடிச் சுற்றி விழிப்படைந்த பின், மேருமலை யில் இருப்பது தெரிந்து பயமற்றவனானேன். சூரன் என்னும் சொல் என் செவியிற்பட்ட அளவில் என் மனம் நடுக்கம் கொள்கிறது. இம்மேரு மலையோ நம்மைக் காப்பதன் பொருட்டு கருணாநிதியாகிய காலகண்டரால் அருள் செய் யப்பட்டது” என்று திருவாய் மலர்ந்தருளும் போது,முனி வரர்கள் சூத முனிவரை நோக்கி, “முனிவரரே, மேரு மலையைப் பெரிய அசுரர்களும் வருவதற் கிடமில்லாதபடி தேவர்களுக்கு ஆதரவாகும் வண்ணம் பரமேஸ்வரர் அருள் செய்த விதம் என்ன?” என்றனர். அதற்கு சூத முனிவர் மறு மொழி சொன்னதாக மேலும் ஏதேதோ தகவல்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. வைஷ்ணவ தெய்வமாகிய நாராயணரை தூஷிக்க வேண்டுமென்ற கருத்தோடு கந் புராணத்தில் இம்மாதிரி எவரோ ஒரு சைவர் எழுதி வைத் திருக்கிறார் என்பதை நான் சொல்ல வேண்டுவதில்லை. இப்படி எழுதியவருக்கு நாராயணன், சிவன், பிரமன், இந் திரன், விஷ்ணு என்னும் பெயர்களின் கருத்தே இன்ன தென்பது தெரியாதென்று நாம் கருத வேண்டும். நம் தெய் வங்களெல்லாம் வான சாஸ்திர ஆராய்ச்சியினால் ஏற்பட்ட வை.அவை முக்கியமாய் லக்னங்கள்,கிரகங்கள், நக்ஷத்திரங் கள் ஆகியவற்றைக் குறிக்கின்றன. அந்த உண்மையை அறி யாதவர்கள், தெய்வங்கள் வெவ்வேறு உலகங்களில் நம்மைப் போன்ற வடிவங்களோடிருப்பவை என்று கருதி பொய்க் கதைகளை எழுதிப் புராணங்களில் சேர்த்திருக்கின்றனர். ஆகையால் நாம் பொய்களை விலக்கி, உண்மையைக் கண்டு பிடித்தால், சமரச உணர்ச்சியும் சகோதரத் தன்மையும் தாமாகவே ஏற்படும். மதச் சண்டைகள் ஒழிவதற்கு நாம் அங்குரார்ப்பணம் செய்ததுபோ லாகும். அதைக் கருதியே நான் விஷயங்களை எடுத்து உங்களுக்கு விளக்கிக் காட்டத் தொடங்கினேன். யாருக்கு எவ்விதமான சந்தேக மோ, ஆக்ஷேபனையோ உண்டானால், அதை தாராளமாக வெளியிடலாம். என்னால் கூடுமான வரையில் நான் சமா தானம் சொல்ல முயற்சிக்கிறேன். அல்லது, மற்றவர் சொல்வது நியாயமானதாயிருந்தால், அதை நான் ஏற்றுக் கொள்ளத் தடையில்லை. கிருஷ்ண பரமாத்மா கீதையில் “சகலமும் என் வடிவமே. யார் என்னை எந்த விதமாக பாவித்துப் பூஜை செய்தாலும் அது என்னையே சேரும்” என்று திருவாய்மலர்ந்தருளியிருக்கிறார். வேதத்தின் ஒரு பாகமாகிய நாராயண சூக்தம்,”நாயகனும், எல்லா ஆத்மாக் களுக்கும் ஈசுவரனும், ஜனன மரண மில்லாமல் சாசுவதமா யிருப்பவனும், சிவனென்று குறிக்கப்பட்டவனும், அடைந் தவர்களை நழுவ விடாதவனும், எல்லாவற்றையும்விட பிர தானமாக அறியத் தக்கவனும், எல்லாவற்றிற்கும் முடி வான அந்தராத்மாவும், எல்லாவற்றிற்கும் புகலிடமானவ னும் நாராயணனே” என்று சொல்லுகிறது. பகவத்கீதை யும், நாராயண சூக்தமும் வைஷ்ணவ நூல்கள். அவை (கந்தபுராணம் போல்) இதரர் தெய்வத்தை தூஷிக்காமல் சிவனை கௌரதையாகவே கொண்டாடுகின்றன. ஆனாலும் வைஷ்ணவர்கள் சிவனைப் பிரதான தெய்வமாக வைத்துப் பூஜிக்காமல் நாராயணனை வைத்துப் பூஜிக்க வண்டிய காரண மென்னவென்றால், அதற்கு சரியான முகாந்தர மிருக்கிறது. அதைப்பற்றி நாம் இன்னொரு சந் தர்ப்பத்தில் விஸ்தாரமாக ஆராய்ச்சி செய்வது நலமானது பரமாத்மா என்ன வடிவமாக இருக்கிறது என்பதையும், அதன் கருத்து இன்னதென்பதையும் நாம் ஒரு நாளும் அறிய இயலாது என்று வேதம், விஷ்ணு புராணம் முதலி யவை சொல்லுகின்றன. அவையும் வைஷ்ணவர்களுடைய நூல்களே. அப்படி இருந்தும் நாராயணனே பரமாத்மா என்று பிடிவாதமாக அவர்கள் ஏன் சொல்லுகிறார்கள் என் பதைப்பற்றியும் நாம் ஆராய்ச்சி செய்யவேண்டும். விதண் டாவாதத்திற்காக ஒருவர் அடியில் வருமாறு கேட்கலாம். “இந்தப் பிரபஞ்சம் முழுதும் என்னுடைய வடிவமே, யார் என்ன விதமாக பாவித்துப் பூஜை செய்தாலும் அது என்னை யே சேரும்” என்று கிருஷ்ண பரமாத்மா சொல்லி இருக்கி றாரே! அப்படியானால், நம்முடைய மலமும் கிருஷ்ண பர மாத்மாவின் வடிவந்தானே. அதை வைத்துப் பூஜை செய்தாலும், அதுவும் பரமாத்மாவுக்கு உகந்ததுதானே?” என் கேட்கலாம். உண்மையான பக்தியோடு மனிதன் எதை வைத்துப் பூஜை செய்தாலும் அதைக் கடவுள் அங்கீக ரிக்கத்தான் வேண்டும். ஆனாலும், உலக ரீதியை அநுச ரித்து நாம் உசிதா உசிதம் கண்டு எதையும் செய்வதே விவேகத்திற் கடுத்தது. நாம் இப்போது ஒருவரோடொரு வர் பேசும்போது, ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்து என் பேசவேண்டும். முகம் மாத்திரந்தானா மனிதன். உடம்பு, கைகால்கள் முதலியவை மனிதனுடைய அங்கங்களல்லவா. ஏன் நான் உங்களுடைய முதுகைப் பார்த்துப் பேசக் கூடாது. நீங்கள் ஏன் என்னுடைய காலைப் பார்த்து மறு மொழி சொல்லக் கூடாது. அப்படிப் பேசினாலும் அது நம் செவிகளில் படுமல்லவா? அப்படி இருக்க, ஏன் நாமெல் லோரும் முகத்தைப் பார்த்தே சம்பாஷிக்கிறோம். இதன் காரணத்தை நீங்கள் யாராவது திருப்திகரமாய் விளக்க முடியுமா? இது போலவே, இந்த அகண்டாகாரமான பிர பஞ்சம் முழுதும் பரமாத்மாவின் வடிவமேயானாலும், பர மாத்மாவின் ஞானமும் அருளொளியும் சில இடங்களில் அதிகமாய்ப் பிரகாசிக்கின்றன வென்று,நம் முன்னோர்கள் கண்டுபிடித்து அந்த இடத்தில் கடவுளை வணங்குவது நல் லதென்று ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப் பல வகுப்பார் செய்ததில், அவரவர்களுக்கு யுக்தமாகத் தோன்றியதெதுவோ அதை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். நாம் நம்முடைய பள்ளிக்கூடப் பாட புஸ்தகங்களில் குருடர் யானையைத் தொட்டுப்பார்த்த கதையைப் படித்தி ருக்கிறோமல்லவா ? யானை ஒன்றேயானாலும், காதைத் தொ ட்டவன், யானை முரம் போலிருக்கிற தென்றான், காலைத் தொட்டவன், யானை செக்குலக்கை போலிருக்கிற தென்றான், முகத்தைத் தொட்டவன் வேறுமாதிரியாக நினைத் தான். இப்படி யானை குருடன் ஒவ்வொருவனுக்கும் ஒவ் வொருவிதமாகப் பட்டது போல, இந்த அகண்டாகாரமான பிரபஞ்சமாகிய எல்லையற்ற மதயானைக்குள் மறைந்திருக்கும் பரமாத்மாவின் முகம் எங்கிருக்கிற தென்பதைப்பற்றியே பல மதஸ்தர்களும் ஒருவருக் கொருவர் சச்சரவு செய்து வந்தி ருக்கின்றனர். அந்த வேலையை நாம் நியாய புத்தியோடும், பகைமை, வெறுப்பு முதலிய துர்க்குணங்களின்றியும் செய்து சரியான முடிவிற்கு வந்தால், அப்போது நாம் உலகத்திற்கு உண்மையான பேருதவி செய்த புண்யாத்மா ஆவோம். அந்த ஒரே கருத்தை வைத்துக் கொண்டே நான் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டது. ஆகையால், என்னிடம் ஏதோ விஷயத்தைப்பற்றி விக்ஞாபனம் செய்துகொள்ள வேண்டு மென்ற பெரியவர் தம் மனதில் இருப்பதை துணிந்து வெளியிடலாம். அது இன்னதென்பதைத் தெரிந்துகொள்ள நானும் ஆவலுடையவனாகவே இருக்கிறேன். 

கிழவர்:- ஸ்வாமிகள் சொல்வ தெல்லாம் நியாய மாகவே இருக்கிறதானாலும், ஒரே ஒரு விஷயத்தில் எனக்கு சந்தேக மேற்பட்டது. அதைக் கேட்கலாமென்று நினைத் தேன். 

யோகீசுவரர்:- ஒ, அவசியம் கேட்கலாம். 

கிழவர்:- வேறொன்றுமில்லை. சற்று முன்னால் ஸ்வாமி கள், “வேதாந்திகளாகிய வைஷ்ணவர்கள் வைதிக மதமே உண்மையான சாதனமென்று கடைப்பிடித்து வருகிறார் கள்” என்று சொன்னதிலிருந்து சில சந்தேகங்கள் உண்டாகின்றன. சைவர்கள் வேதாந்திகளா இல்லையா, நம்மைப்போ ன்ற ஸ்மார்த்தர்கள் வேதாந்திகளா இல்லையா, வைஷ்ணவர் களுடைய மதம் ஒன்று மாத்திரந்தான் வைதிக மதமா, நம் முடைய மதம் வைதிக மதமல்லவா என்ற பல சம்சயங்கள் உதிக்கின்றன. இவைகளை தயவுசெய்து விளக்கவேண்டும். 

யோகீசுவரர்:- ‘சைவர்’ என்ற சொல்லின் அர்த்த மென்ன? 

கிழவர்:- சிவனை வழிபடுவோர் சைவர். 

யோகீசுவரர்:- அதாவது சிவனே முடிவான தெய்வம் என்று கருதுகிறவர்கள் சைவர்களோ? 

கிழவர்: ஆம். 

யோகீசுவரர்:- ‘வேதாந்தம்’ என்ற பதத்திற்கு அர்த்மென்ன? 

கிழவர்:- தாங்கள்தான் சொல்ல வேண்டும். 

யோகீசுவரர்:- வேதாந்தம் என்பது வேதா + அந்தம் என்ற சொற்களால் ஆனது. ‘வேதா’ என்றால் ப்ரம்மம்; ‘அந் தம் என்றால் முடிவு. அதாவது ப்ரம்மமே முடிவான தெய் வம் என்ற அர்த்தம் ஏற்படுகிறது. ப்ரம்மமே முடிவான தெய்வமென்று ஆதியில் ஏற்படுத்தியவர்களும், அதை அநுஷ் டானத்தில் வைத்திருப்பவர்களும், வைஷ்ணவர்களே. எத னுடைய ஆக்ஞையினால் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களும் நடைபெறுகின்றனவோ அதுவே ‘ப்ரம்மம்’ என்று வேதங்கள் சொல்லுகின்றன. அதாவது, சகல விதமான சக்திகளுக்கும், காரியங்களுக்கும் மூலாதா ரமாயிருப்பது எதுவோ, அது ப்ரம்ம மென்றும், நாராயண னென்றும் குறிக்கப்படுகிறது. சைவர்கள் சிவனே முடி வான தெய்வம் என்கிறார்கள். அது அழிக்கும் தொழில் ஒன்றை மாத்திரம் செய்வதாகையால், அது மேலே சொன்ன ப்ரம்மத்தின் ஒரு சிறிய அம்சம். அதுவன்றி இந்தப் பிரபஞ்சம் அழியும்போதுதான், அந்த அம்சம் தலை யெடுக்கும். இந்தப் பிரபஞ்சம் அழியுமென்ற நிச்சயமும் இல்லை; அழிந்தாலும், அது ஜலத்தில் கலந்திருந்து மறுபடி யும் உற்பத்தியாகிவிடு மென்று புராணங்கள் சொல்லுகின் றன. நிரந்தரமாயிருப்பது காத்தல் தொழில் ஒன்றே என் பது, இந்தப் பிரபஞ்சம் எப்போதும் நிலைத்திருப்பதிலி ருந்து பிரத்தியக்ஷமாகத் தெரிகிறது. ப்ரம்மத்தினிடம் அழிக்கும் அம்சம் பெரும்பாகமா யிருக்குமானால், இந்தப் பிரபஞ்சம் எப்போதும் சாம்பலாயிருக்கு மன்றி இப்போ துள்ள நிலைமையில் நிலைத்திராது. ஆகையால் என்றும் சிரஞ்சீவியாயும் பெரும்பாகமாயு மிருப்பது காத்தல் தொ ழிலே. இவ்விடத்தில் திருவள்ளுவருடைய பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறது: 

“குணம் நாடி,குற்றமும் நாடி, அவற்றுள்
மிகை நாடி, மிக்க கொளல்.” 

என்கிறார் திருவள்ளுவர். அதாவது ஒருவரிடம் அமைந் துள்ள குணாதிசயங்களில், எது பெரும்பாகமாக இருக்கிறதோ அதையே அந்த மனிதனுடைய குணமாய் எடுத்துக்கொள்ள வேண்டு மென்கிறார். இது தெய்வத்தின் விஷயத்திலும் ஒரு விதத்தில் பொருந்தும். ஆகவே, வேதங்கள், “தத் விஷ்ணோப் பரமம் பதம்” என்று சொல்லியிருக்கின்றன. ஆனால் சைவர்கள் பரம பதத்திற் கதிபதி சிவனே என்கிறார்கள்; தங்களுக்கும் ஆதாரம் வேதாந்தமே என்கிறார் கள். ஆனால் வேதாந்தம் என்ற சொல் ப்ரம்மம்தான் முடி வானது என்ற அர்த்ததைக் கொடுக்கிறது. நம்முடைய தே கத்திற்குள் அமைந்துள்ள சீவனோ, அல்லது, சீவாத்மாவோ எங்கேயிருக்கிறது,என்ன நிலைமையிலிருக்கிறது, அது எந்த ஆதாரத்தினால் இயங்குகிறது என்பதே நமக்குத் தெரிய வில்லை. அப்படி இருக்க, இந்த ப்ரம்மாண்டத்திற்கு ஆதார பூதமான பரம்பொருள் எப்படி இருக்கிறார், அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை நாம் எப்படி நிச்சயமா கச் சொல்ல முடியும். அதைக் காண்பவர் திரும்பி வந்து நமக்குச் சொல்லுவதுமில்லை; அப்படிச் சொன்னாலும் அதை யாரும் நம்பமாட்டார்கள். ஆகவே,பரம்பொருளை நாம் ஒரு விதமாக மனதால் பாவித்துக்கொண்டு பக்தி செலுத்து வோம். எப்படியென்றால், அவர் அற்புதமான தேஜஸ் வாய்ந் தவர், சகலமான கல்யாண குணங்களும் நிரம்பப் பெற்றவர், துர்க்குணங்களற்றவர், பரம தயாளு, சகலமான ஐசுவர்யங் களுக்கும் சொந்தக்காரர், சர்வக்ஞர், துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்பவர், அவர் உலக வியவகாரங்களில் சம் பந்தப்படாமல் நிரதிசய ஆநந்தத்தில் இருப்பவர்; சூரியர், சந்திரர் முதலிய நித்ய சூரிகள் அவருக்கு நிரந்தரமாக சேவை செய்து இந்த உலக காரியத்தை நடத்துகின்றனர், என்று நாம் அநுமானத்தினால் ஒரு தெய்வத்தை சிருஷ் டித்து அதனிடம் பக்தி செலுத்துவோம். கடவுளுக்கு ரூபமி ருக்கிறதோ இல்லையோ என்பது நமக்கு நிச்சயமாகத் தெரி யாதானாலும் அவர் ஒரு வடிவத்தோடு ஓரிடத்தில் இருப் தாக நாம் நினைத்தாலன்றி, நாம் மோக்ஷத்திற்குப் போல தென்பதற்கு அர்த்தமில்லாமல் போகுமாதலால், அப்படி நாம் பாவிக்க வேண்டும். அவர் ரூபமில்லாதவர் என்றால், அவ ருக்கு ஒரு குறித்த இருப்பிடமும் இல்லாமல் போகும். நாம் முடிவில் போய்ச் சேரவேண்டிய இடமும் இல்லாமல் போய் விடும். ஆகையால், எல்லாவற்றிலும் உத்கிருஷ்டமான ஓர் இடத்தில், சகல நற்குணங்களும் வாய்ந்தவராய்க் கடவுள் இருக்கிறார் என்று நாம் நினைத்து நம் மனத்தைத் திருப்பினா லன்றி, அது ஒருமுகப்பட்டு நிலைத்து நிற்காது. ஆகையால் பரம்பொருளுக்கு ஓர் இடமிருப்பதாயும்,வடிவ மிருப்பதா யும் கருதி நாம் வழிபட வேண்டும். கடவுளை ஆண்டி என்றும், கோர ரூபமுடையவ ரென்றும், நிர்வாணமாயிருந்து பே யோடு ஆடுபவரென்றும், இன்னம் பலவாறு பயங்கரமாகவும் விகாரமாகவும் பாவிக்க எவ்வித ஆதாரமுமில்லை. அப்படி நினைப்பதால் பிரத்தியேகமான அநுகூலம் எதுவும் ஏற்படுவ தாகவும் தெரியவில்லை. அப்பேர்ப்பட்டவரிடம் நாம் முடிவா கப் போவதை விட, இந்த லீலாவிபூதியிலிருப்பதே மே லென்று தோன்று மாதலால், அது நம் மனதில் கடவுள் பக்தி சரியானபடி ஏற்படாமல் தடைசெய்யக் கூடியதா யிருக்கும். நம் மனதாலும் வாக்காலும் பாவிக்க முடியாதபடி அமைந்துள்ள இந்த அற்புதக் களஞ்சியமான எல்லையற்ற லீலாவிபூதியை வேண்டுமென்றே கடவுள் சிருஷ்டித்து நிரந் தரமாய் வைத்திருக்க, இது அழிந்து பஸ்மமாய்ப் போக வேண்டுமென்றும், நாம் கடவுளோடு ஒன்றாகப் போய்ச் சேர்ந்து கடவுளாகிவிடவேண்டு மென்றும் கருதி அதற் காகக் கடவுளை வணங்குவது, அவருடைய கருத்திற்கு முற் றிலும் மாறானது, மகா பாபகரமானது. இந்த உலகத்தில் சாத்விகமான ஆகாராதிகளை உண்டு, நம்மை நிர்ணயத்தில் நிறுத்தி, பிறருடைய பொருளை அபகரிக்காமல், அக்கிரமக் காரியங்களைச் செய்யாமல் எல்லோரையும் நம்மைப் போலவே மதித்து வாஞ்சையாக நடந்து, சதாகாலமும் கடவுளுக்கு பக்தி செய்து சுத்த சாத்விக நெறியில் நின்று, உலக காரி யங்களில் ஒட்டியும் ஒட்டாமலும் இருந்து, எவ்விதமான பலனையும் எதிர்பாராமல் நமது கடமைகளைக் கடவுளின் ஆக்ஞையென்று செய்துகொண்டே போனால், இம்மையி லும் நாம் சுகமடைவோம்; மறுமைக்கும் அது நல்ல வழி காட்டும். இந்த லீலாவிபூதியிலிருப்பதும் துன்பகரமாகத் தோன்றாது. இது எரிந்து பஸ்மமாய்ப் போகவேண்டு மென்று நினைக்கவேண்டிய அவசியம் ஏற்படாது. அப்படி இதுவரையில் கோடானுகோடி பக்தர்கள் நினைத்து வேண் டியும் இந்த லீலாவிபூதி அழியாமல் அப்படியே இருந்து வருகிறது. பஸ்மமாவதென்பது, ஒவ்வொரு ஜீவனும் பிறப்பு இறப்பாகிய சக்கரத்தில் கிடந்து சுழல்வதிலிருந்து விடு வித்து மோக்ஷ பதவியைக் கொடுப்பதைக் குறிப்பதாக வைத்துக்கொண்டாலும் கூட, கடவுள் இச்சைப்பட்டால் சத்பாத்திரனான ஒரு ஜீவனை இந்த லீலாவிபூதியிலிருந்து தம்மிடம் அழைத்துக்கொள்ள அவர் அதிகமான பிரயாசை எடுத்துக்கொள்ளவும் வேண்டியதில்லை; இந்த ஜீவனோடு கூடிய பூத உடம்பு சூக்ஷ்ம உடம்பு முதலியவற்றை சாம்ப லாய் எரித்து, சாம்பலை இங்கே போட்டுவிட்டு அவனை அழைத்துக்கொண்டு போகவேண்டு மென்பதுமில்லை. பஞ்ச பூதங்களும், சூக்ஷ்ம உடம்பும் கடவுளின் ஆக்ஞைப்படி நடப் பனவாதலால், அவை ஒரு குறித்த ஜீவனை விட்டு விலகிப் போகவேண்டு மென்று அவர் நினைப்பாரானால் காரியம் உடனே அதுபோலவே நிறைவேறிப்போம். ஆகையால் ஜீவன் தன்னுடைய நல்ல நடத்தையினாலும், லீலாவிபூதியின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பதனாலும் கடவு ளுடைய கிருபைக்குப் பாத்திரனாவதே சுலபமான வழியன்றி, “உம்முடைய சட்டதிட்டங்களை யெல்லாம் அசட்டை செய்து சாம்பலாக்கிவிட்டு என்னை உம்மோடு சேர்த்துக் கொள்ளும்.இங்கே இருக்க எனக்கு இஷ்டமில்லை. நான் எல் லாக் கட்டுப்பாடுகளையும் மீறி எதை வேண்டுமானாலும் தின் பேன். நானும் நீரும் ஒன்று என்பதை நான் தெரிந்து கொண்டேன். அதுவே போதுமானது. உமக்கு நான் பக்தி பண்ணுவது அநாவசியம்” என்று கல்லுளிபோல் பிடிவாதம் பிடித்தால், அவனுக்குக் கடவுளின் அருள் ஏற் படுமென்று நாம் நினைக்க ஆதாரமில்லை. அவன் இம்மையி லும் வீண் வேதனைகளையும் அல்லல்களையும் தனக்குத் தானே உண்டாக்கிக்கொண்டு மறுமையையும் கெடுத்துக் கொண்டவனாவான் என்பது போன்ற கொள்கைகளையே வைஷ்ணவர்கள் அநுசரிக்கிறார்கள். சாத்விகமாயிருந்து சன் மார்க்க நெறிகளைக் கடைப்பிடித்து, இம்மையின் வேட்கை களைக் குறைத்து, பாரமார்த்திக நாட்டத்தையே பெரும் பாலாய்க்கொண்டு வைதிகர்களாயிருந்து இம்மை வாழ்க்கை யை நடத்துவதே புருஷார்த்தம், அதுவே நாம் மோக்ஷ மடையப் போதுமான சாதனம், மோக்ஷமடைய அதை விட நாம் அதிகமான முயற்சி எதையும் செய்ய வேண்டுவ தில்லை, இந்த உலகத்தையும், இதன் தர்மங்களையும் துறந்து, கசமாலங்களைத் தின்றுகொண்டு பாழாண்டியாய் அலையவேண்டுவதில்லை. இந்த லீலாவிபூதியை எரித்து பஸ் மமாக்கி நம்மைத் தன்னோடு ஐக்கியமாக்கிக் கொள்ளும்படி கடவுளிடம் பைத்தியக்காரத்தனமாகக் கேட்டுக்கொண்டே, இந்த உலக சுகசாதனங்களை நாடி முரண்பாடாக நடக்க வேண்டியதில்லை. மனோவாக்கு காயம் ஆகியவற்றைப் பண்படுத்தி, திரிகரண சுத்தியாக நடந்து, இந்த உலக வியவ காரங்களைக் கடவுள் இட்ட கட்டளையாகச் செய்து,உள்ள நிலைமையில் திருப்தியடைந்து, “உலகத்தோடொட்ட ஒழு கல், பல கற்றும், கல்லார் அறிவிலாதார்” என்ற நீதியைக் கவனித்து, பிரபஞ்சப் போக்கை எதிர்க்காமல் அதற்கு அடங்கி நடந்து, இம்மையில் உடம்பும், மறுமையில் ஆசா பாச கவனமுமாக இருந்து, கேவலமான பூச்சி புழுக்களுக் குக்கூட நம்மால் துன்பம் நேராதபடி ஒழுகி,எவ்வுயிரும் தம்முயிர்போல் மதித்து நடப்பதே வைதிக மதம். அதே வேதத்தில் குறிப்பிடப்பட்ட புருஷார்த்தம். அதுவே வைஷ்ணவ மதம். நாம் இந்தப் பிரபஞ்சத்திலேயே இருந் தாலும், இதை விட்டு மோக்ஷலோகத்தை யடைந்தாலும், எப்போதும் கடவுளுக்குத் தொண்டு செய்வதே நமக்கு முடிவான கதி, அதுவே நமக்குப் பேரின்பம் பயப்பது என்ற மனவுறுதியை நாம் கடைப்பிடிக்க வேண்டும். 

“பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும் 
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோக மாளும் 
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே” 

என்ற வைஷ்ணவப் பாடலின் கருத்தை கவனியுங்கள். “எனக்கு தேவேந்திர பதவி கிடைத்தால் கூட, அதில் எனக்கு ஆசை ஏற்படாது, உன் நாமத்தை ஸ்மரிப்பதி லுண்டாகும் ஆநந்தத்தைத் தவிர எனக்கு வேறு எதுவும் தேவையில்லை” என்கிறார் இதைப் பாடிய ஆழ்வார். எவ் விதமான பலனையும் நாடாமல்,பக்தியின் இன்ப மொன் றயே கருதி கடவுளை பஜிக்க வேண்டும் என்பது இதன் கருத்து. வேதங்களும் கீதையும் நிஷ்காம்யமாக நாம் வுளை ஆராதிக்கவேண்டு மென்கின்றன. காமகோடி, கா மாக்ஷி முதலிய அசுர தெய்வங்களையே பிரதானமாக வைத்து வணங்கி, இகலோக சுகங்களை நாடுகிறவர்கள் நிஷ்காம்யமாகப் பூஜை செய்கிறவர்கள் அல்லர்; அவர்கள் செய் வது வேதங்களின் ஆக்ஞைக்கு விரோதமான காரியமாகை யால், அப்படிச் செய்பவர்கள் வேதங்களுக்குப் புறம்பான வர்கள். ஆகவே, அவர்கள் வைதிகர்கள் ஆக மாட்டார்கள். அவர்களுடைய மதம் வைதிக மதமே அல்ல. லோகமாதாவை நாம் தாயாரென்றும், பிராட்டி யென்றும், நாச்சியார் என் றும், இலக்கிழமி என்றும் கம்பீரமான பதங்களால் குறிக்க வேண்டுமே யன்றி,நம் காமம் முதலியவற்றைத் தீர்த்து வைப்பவளாகக் கருதுவது இழிவான மனப்பான்மையைக் காட்டுகிறது. தாய்க்குக் குழந்தையின் தேவை இன்ன தென்பது நன்றாகத் தெரியும். குழந்தையிடம் அன்பாயி ருக்க வேண்டுமென்று தாய்க்கு நினைப்பூட்ட வேண்டியதே இல்லை. லோகமாதா நமக்கு இம்மையிலும் தாய், மறுமை யிலும் தாய் என்று கருதுவதே சரியான கொள்கை. இம்மையில் நமது காமங்களைப் பூர்த்தி செய்பவளென்றும், மறுமையில் நம் மனைவி யென்றும் லோகமாதாவை நினைப்பது பாபகரமான நினைவு. “அம்பிகை” என்ற பெயர் அன்பு, ஈகை என்னும் சொற்களால் ஆனது. கடவுளுடைய அன்பையும் ஈகையையும் ஒரு பெண்ணுருவமாக்கி அதையே பிரதான தெய்வமாக வைத்து வணங்குவதும் காம்யத்தையே கருதியதாகிறது. வானசாஸ்திரப்படி சுக்கிரனாகிய பெண் தெய்வம் கால புருஷனுடைய முன்கையாகக் கருதப்படுகி றது. இப்படிக் கையை மாத்திரம் வைத்து வணங்குவோர் சகல போகங்களையும் கொடுக்கும் அசுர குருவை வணங்கு கிறவர்கள். அது காம்யமான பூஜை. கடவுளுடைய பாதங் களை சிரமேல் வைத்து வணங்குவோர் அவருடைய பாதார விந்தத்தினடியில் நிரந்தரமாய்க் கிடப்பதைக் கோரும் நிஷ்காம்ய பக்தர்கள். அசுர குருவின் பக்தர் ஒருவர் சில வருஷங்களுக்கு முன் சென்னையிலிருந்து இறந்து போனார். அவர், நான் மேலே குறித்த “பச்சைமா மலைபோல் மேனி” என்ற பாடலுக்கு ஒரு புது மாதிரியான அர்த்தம் சொன்னார். அவர் இட்டலி சாப்பிடுவதில் பெரிய நிபுணர். நாம், ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத், ஸர்வம் ப்ரம்மமயம் ஜகத் என்று கருதுகிறோம். அவர் ஸர் வம் இட்டலிமயம் ஜகத் என்று கருதுகிறவர். இந்தப் பிர பஞ்சமே விஷ்ணுவினுடைய தேகமாதலால், அவரைப் பச்சைமா மலைபோல் மேனி, பவளவாய், கமலச் செங்கண் என்று வர்ணித்தார் ஆழ்வார். நம் இட்டலி நிபுணர் அதற்கு என்ன அர்த்தம் செய்தார் தெரியுமா? பச்சை: மா = பச்சரிசி மாவால், மலைபோல் மேனி = மலைபோல் குண்டு குண்டாயிருக்கும்படி இட்டலி செய்து, பவளவாய் கமலச் செங்கண் = நமது உதடுகள் பவளம் போலவும், கண் கள் தாமரைப் புஷ்பம் போலவும் சிவந்து போம்படி செய் யும் காரமான மிளகாய்ப் பொடியோடு எப்போதும் சாப்பி டும் ருசியை எனக்குத் தரவேண்டும், அச்சுதா, இந்திர பதவிகூட அதற்கு நிகராகாது என்று அவர் அர்த்தம் செய் தார். அவருடைய புத்தி எதை நாடுகிறது பாருங்கள். இந்த உலகத்திலுள்ள இன்பம் சிற்றின்ப மென்றும், மேலு லகத்து இன்பம் பேரின்ப மென்றும் சிலர் ஒரு சாக்கைச் சொல்லி, “ஐயோ இது வேண்டாம் அப்பனே” என்று சிவ னிடம் முறையிடுகிறார்கள்; சகல போகங்களையும் தரும் காமாக்ஷியையே சதாகாலமும் பிரதானமாய் வணங்குகிறார் கள். அந்தக் காமாக்ஷி அதே சிவனுடைய ஒரு பாகமென் றால், நாம் சிவனோடு ஐக்கியமானாலும், அந்தக் காமாக்ஷியின் சிற்றின்பங்கள் அங்கேயும் பக்கத்திலேயே ஒட்டிக்கொண்டி உயிரென்றும், பிரம்மாவை அதன் உடல், அல்லது, ஸ்வரூப மென்றும் கருதுவதுண்டு.

– தொடரும்…

– ஸதாநந்த போதக சாமியார் (நாவல்), முதற் பதிப்பு: செப்டம்பர் 1933, எம்.எஸ்.ராமுலு கம்பெனி, மதராஸ்.

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் வடுவூர் துரைசாமி ஐயங்கார் (1880-1942) தமிழ் எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய வணிகக் கேளிக்கைப் படைப்புகளை எழுதிய முன்னோடிகளில் ஒருவர். திகம்பரச் சாமியார் என்னும் துப்பறியும் கதாபாத்திரத்தை உருவாக்கியவர். 1942-ல் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் காலமானார். தமிழில் பிரிட்டிஷாரால் நவீன காவல்துறையும், நீதிமுறையும் உருவாக்கப்பட்டதை ஒட்டி குற்றங்களை காவலர் நவீன முறையில் துப்பறிவதன் மீது வாசகர்களின் ஆர்வம் உருவாகியது. தொடக்ககால தமிழ் பொதுவாசிப்பு எழுத்துக்கள் பெரும்பாலும் துப்பறியும் மர்மக் கதைகளாகவே அமைந்தன.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *