வால் இருக்கவேண்டிய இடத்தில் தலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 16, 2025
பார்வையிட்டோர்: 123 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பல ஆண்டுகளுக்கு முன்னர் மாளவ நாட்டில் வறியவன் ஒருவன் இருந்தான். பொருள் தேடி நலமடையலாம் என்று அவன் பலவாறு முயன் றான். அவனுக்கு எந்தக் காரியமுங் கைகூடி வர வில்லை. அந்த ஊரில் உள்ள மக்கள் யார் என்ன சொன்ன போதிலும் சிறிதும் ஆராய்ந்து பாராமல் கேள்விப் பட்டவைகளையெல்லாம் உண்மை என்று நம்பும் இயல்பினை யுடையவர்கள். இதனை நன்கு உணர்ந்தவறிவயன் அம்மக்களைவஞ்சித்துப் பொருள் திரட்டவேண்டும் என்று எண்ணினான். 

ஒரு நாள் ஒருவருக்குந் தெரியாமல் தன்னு டைய குதிரையைக் குதிரை லாயத்தில் வால் பக் கம் இருக்க வேண்டிய இடத்தில் தலைப் பக்கம் இருக்கும்படி வழக்கத்திற்கு விரோதமாகத் திருப் பிக் கட்டி வைத்தான். பிறகு லாயத்தைப் பூட்டி விட்டு வெளியே வந்தான். 

“ஓ மக்களே! வால் இருக்க வேண்டிய இடத் திலே தலை யிருக்கும் குதிரையைப் பார்த்தீர்களா? என்னுடைய லாயத்தில் அத்தகைய புதுமையான குதிரை ஒன்று இருக்கிறது. வேடிக்கை! வேடிக்கை!! கட்டாயம் பார்க்க வேண்டிய வேடிக்கை; பார்க்க வருபவர்கள் ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுக்க வேண்டும் ” என்று எங்கும் பறை யறைவித்தான். துண்டுத் தாள்கள் அச்சிட்டும் பரப்பினான். 

“சொன்னவர் சொன்னாலும் கேட்பவர்கட்கு மதியில்லையா” என்னும் பழமொழியையும் எண்ணிப் பாராமல் அப்புதுமையைக் காணும் பொருட்டுக் குறிப்பிடப்பட்டநாளில் மக்கள் அந்தக்கோமாளியி னுடைய குதிரை லாயத்துக்கு அண்மையில்வந்து கூடினார்கள். மோசக்காரன் ஒவ்வொருவரிடத் திலும் ஒவ்வொரு ரூபாய் வாங்கிக்கொண்டு இறுதி யில் லாயத்தின் கதவைத் திறந்தான். உள்ளே நுழைந்த அவ்வளவு பெயரும் தம்முடைய அறி யாமைக்காக வெட்க மடைந்தது மல்லாமல், குதி ரைக்கு வாலிருக்க வேண்டிய இடத்தில் தலையிருக் கிறது என்று அவன் சொன்ன சூதை அறிந்து கொண்டு, ஐயோ சிறிது எண்ணிப் பார்க்காமற் போனோமே. இவ்வளவு பேரிடத்திலிருந்தும் பணத் தைப் பறித்துக் கொண்டு பைத்தியக்காரர்களாக்கி விட்டானே என்று மிகுந்த வருத்த மடைந்தார்கள். அவன் கூறிய செய்தி தவறானதென்று அவன் மீது குற்றஞ் சாட்டுவதற்கும் இடமில்லை. அவன் கூறியபடியே வால் இருக்க வேண்டிய இடத்தில் தலை இருந்தது. 

– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *