வாய்மையும் வண்மையும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 16, 2025
பார்வையிட்டோர்: 25 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உள்ளத்திற் பட்டதை உரைக்க வாய்மை வேண்டும். ஆனால் அதனை ஏற்று நன்கு மதிக்க வண்மையும் (தியாகமும்) இன்றியமையாதது. 

நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன் தமிழ் நாட்டிற்கு வடக்கிலும் மிகு தொலைவுசென்று பகைவரை வென்றடக்கித் தன் கொடி நிழலை விரிவுபடுத்தி வந்தான். 

பகைவர் நாடுகளை வென்றபின், ‘ தன் போர் வீரர் அந்நாட்டு மக்களுள் எவர் உடைமையையும் கொள்ளையிடக் கூடாது,’ என்று அவன் ஆணை யிட்டிருந்தான். 

ஆமல்லன் என்ற வீரன் ஒரு வீட்டிலிருந்த வெல்லப்பொதி ஒன்றைப் பறித்துக்கொண்டான். 

அரசன் அவனை வெறிக்கப் பார்த்து, ” நீ எப்படி உணர்வின்றி என் ஆணையை மீறி அவன் உடை மையைக் கைக்கொண்டாய்?” என்று கேட்டான். 

ஆமல்லன்,”அரசே, தாம் இந்நாட்டு மன்னர் களின் உயிரையும் உடைமையையும் மானத்தை யும் கொள்ளையிடுகின்றீரே. நான் ஒரு வெல்லப் பொதிமட்டும் எடுத்தது குற்றம் என்று சொல்கின் றீரே!” என்றான். 

அரசன் சினம் மாறிப் புன்முறுவல் கொண் டான். பொருள் பறிபோன ஆளைக் கூப்பிட்டு அவனுக்கு நாலு மடங்காகப் பொருள் கொடுத்து அனுப்பிவிட்டு ஆமல்லனை அழைத்து, அன்புடன் அணைத்துக்கொண்டு, ” வீரரே! உமது வாய்மை யுரை கேட்டு மகிழ்ந்தேன். ஆயினும் உமக்கு நான் நேற்று மறு மொழி கூறாதது உமது வாய் மையை மதிக்கவேயாகும். நாம் வேற்று நாட்டு மன்னர்களின் உயிரையும் உடைமையையும் பிற வற்றையும் கொள்ளை கொள்வது நமக்காகவா? மேலும், நமக்கல்லாத இச்செயலில் நம் உயிர், உடைமை, மானம் அனைத்தையும் நாம் பணை யம் வைத்தன்றோ ஆடுகின்றோம்,” என்றான். 

வாய்மை மிக்க வீரன், வண்மை மிக்க அரசனது பெருமையறிந்து அடிபணிந்து, அகங் குழைந்து மன்னிப்புக் கேட்டான். 

– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *