வருதப்பா வருதப்பா.. கஞ்சி வருதப்பா..!






வீட்டுக் கொல்லையில் இருந்த முருங்கை மரத்தில் கொத்துக் கொத்தாய் காய்த்துத் தொங்கின முருங்கைக் காயகள். வெள்ளிங்கிரி வாக்கிங்க் போகும் போதெல்லாம் வைத்த கண் வாங்காமல் முருங்கை மரத்தை வெறித்துப் பார்ப்பதைப் பார்த்திருக்கிறான் வீட்டு பரமசிவம்.
‘கண்ணுல தீய வெக்க..!’ மனசுக்குள் கறுவியிருக்கிறான். எனக்குக் கடவுள் கொடுத்த சொத்து..! உன் வீட்டில மொளைக்கலைனா அதுக்கு யாரு என்ன பண்ணுவா?! எல்லாம் புண்ணியம் பண்ணியிருக்கணும்! தன்னைப் பற்றியே தானே பெருமை பட்டுக் கொண்டான்.
மாடியில் குடியிருக்கும் மைதிலி கீழிறங்கி வந்தாள். வாடகை சொளையாய் மாசமான அவிழ்ப்பவள். அவள் மரத்தைப் பார்ப்பது பரம சிவத்துக்குப் பெருச்சாய்ப் படவில்லை! காசு கண்ணை மறைச்சுடும் தானே!?
மைதிலிதான் வச்ச கண்ணு வாங்காம பார்க்க, பரம சிவன் கேட்டான் ‘என்ன முருங்கையை அப்படி பார்க்கிறே…மைதிலி?!
ஒண்ணுமில்லை… சாம்ப்பார்ல போட்டா நல்லா இருக்குமே?! அதுக்குத்தான்.
‘அதுக்கென்ன ரெண்டைப் பறிச்சுக்கோ..’ என்றான் பணத்துக்கு பதில் செய்யும் நினைப்பில்!!.
பறிச்சும் முடியாது! என்றாள் மைதிலி!
ஏன்?
அதுக்கு கை ராசி வேணும்! என்றாள் வறட்சியாய்.
என்ன சாம்பார் சுவைக்கவா? கேட்டான் பரமசிவன்.
ஆமாம்.. பச்சைப் பாம்பு வாலை இழுத்து உறுவிவிட்டா.. சாம்பார் சுவை கூடுமாம் ஊருக்குள் பேசிக்கொண்டார்கள் என்றாள் மைதிலி.
சரி, உறுவித்தான் பாரேன். சொல்லிவிட்டு உள்ளே போனான்.
இப்படியெல்லாமா ஒரு நம்பிக்கை?!
அவன் குளிக்கப் போனான்.
கொத்தாய் தணிந்து காய்த்துத் தொங்கி இருந்த முருங்கைக் காயை யாருக்கும் தெரியாம பறிக்க… இழுத்தாள் மைதிலி. காயோடு காயாய் தொங்கிய நிஜ பச்சைப் பாம்பொன்று கொத்தோடு கைக்கு வந்தது!.
பறிச்ச வேகத்தில் உதற…, பச்சைப் பாம்பு வாலு வழுவழுக்கப் பதறிப் போய் அய்யோ.. அய்யோ அலறி கீழே போட்டு ஓடினாள் மாடிக்கு!.
மைதிலி பச்சைப் பாம்பை உருவியதாலோ பயத்தில் அலறியதாலோ பத்து வீட்டுக்கு மணந்தது அன்று அவள் வைத்த திருட்டு முருங்கைக் காய் சாம்பார்!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |