மெளவுனமே பார்வையால ஒரு…!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 26, 2024
பார்வையிட்டோர்: 3,751 
 
 

காசிநாதன் தோட்டத்தில் பல மாடுகள் பாலுக்காகவும் உரத்துக்காகவும் உழவுக்காகவும் பராமரிக்கப்பட்டுவந்தன. சில சண்டி மாடுகள் சிலசமயங்களில் கசாப்புக்காகவும் அனுப்பப்படுவதுண்டு! சில பசுக்கள்வயிற்றில் கன்றைச் சுமந்து காத்திருந்தன ஈனுவதற்காக. புதிதாய் ஈனப்பட்ட கன்று ஒன்று கருப்பும் வெள்லையும் கலந்த புள்ளிகளோடு கண்கள் மிரள தாயருகே தவித்தபடி காத்திருந்தது தாயின் மடிப்பாலுக்காக.

பால் கறந்து வியாபாரத்துக்கு ஊற்றும் தன்ராஜ் சீம்பாலை கன்றுக்கு முழுமையாய்க்குடிக்க விட்டுவிடுவான், கன்று புஷ்டியாய் வளரட்டும் என்ற நல்லெண்ணத்தோடு! எப்போதாவது வரும் ஒரு டிராக்டர் சில நோஞ்ச்சான் மாடுகளைச் சுமந்து போகும் போது மற்றவற்றிக்குத் தெரியும் ‘அது அடி’ மாட்டுக்குப் போகிறது தென்று!’

அந்த கருப்பு வெள்ளை கலந்த கன்று ‘ஒரு கர்வத்தோடு’ அந்தத் தொழுவத்தில் காத்திருந்தது. அதன் பார்வையில் ஒரு வைராக்கியம் தென் பட்டது தன்ராஜ் கண்களுக்கு மட்டும்.

தம்மில் சிலவற்றை அடிமாட்டுக்கு அனுப்பவதில் அதுக்கு அத்தனை விருப்பமில்லை. அன்று ரெண்டு நடுத்தர வயதுக் காளைகளை தன்ராஜ், தானே ஒரு டிராக்டரில் ஏற்றியபோது அவற்றில் ஒன்றாக இருந்தது அந்த கருப்புவெள்ளைக் காளையும்.

திருவிழாவில் ‘ரேக்ளா’ ரேஷுக்காக என்று பாவம் அதுக்குத் தெரியவில்லை. வண்டியில் பூட்டப்பட்டதை அது அதுவரை பார்த்திராத காரணத்தால், தன்னை அடிமாட்டுக்காக ஏற்றுவதாக தவறாய் அனுமானித்து பிட்டத்தில் ஊசியால் குத்தியதையும் வாலைக் முறுக்கி உசுப்பேத்தியதையும் மூர்க்கமாய் பார்த்து ஒரு முடிவுக்கு வந்தது. முறுக்கிய வேகத்தில் மூர்க்கமாய் ரோட்டில் பயணிக்காமல் உடன் பயணிக்கும் காளையையும் கண்களால் பேசி இழுத்துக் கொண்டு ஓடி,

வண்டியைக் கவிழ்த்து பள்ளத்தில் தள்ளி, மெளனமே பார்வையால் ஒரு இறுதிப் பாடல் பாடி அங்கிருந்த சிலர் யாத்திரையை நிறுத்தி, கம்பீரம் மின்னும் கண்களோடு மண்ணில் புரண்டு மாண்டது .

பாவம் அதன் அவசர கதி பயணத்தில் தன்ராஜும் தன் யாத்திரையை முடித்துக் கொண்டதுதான் சோகம்.

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *