முகவரி தேடும் காற்று

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 10, 2025
பார்வையிட்டோர்: 179 
 
 

அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24

அத்தியாயம் 19 – ஏற்றுமதி இறக்குமதி

நவசேவா கஸ்டம்ஸ் கட்டிடத்திற்கு வந்திறங்கிய போது, குட்டி அரசுக்காக காத்திருந்தான்.

“என்ன குட்டி நலமா?” கைகுலுக்கியபடி அரசு கேட்டான்.

“நலத்திற்கு என்ன குறைச்சல். வேலைப் பளுதான் அதிகமாகி விட்டது. சொல் எந்த மாதிரி பிசினஸ் பண்ணலாம் என்று முடிவு செய்துள்ளாய்?”

“இப்படி நடுத்தெருவில் நிற்க வைத்து பேசுவாயா? இல்லை உன் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்வாயா?”அரசு குட்டியின்முதுகில் ஓங்கி தட்டியவாறு கேட்டான்.

“ஸாரிப்பா. வா, முதலில் சாயா குடிக்கலாம்.”

இருவரும் நவசேவா கஸ்டம்ஸ் அலுவலகத்திற்கு அருகிலிருந்த ரெஸ்டாராண்டில் அமர்ந்து டீ ஆர்டர் கொடுத்து விட்டு “சொல்லு, அப்பா அம்மாவை விட்டு விட்டு வந்து விட்டேன் என்றாய். எப்போதாவது தொடர்பு கொண்டாயா?” என்று கேட்டான் குட்டி.

“தொடர்பு கொண்டால் திரும்ப என்னை அழைப்பார்கள். பழைய குருடி கதவைத் திறடி கதையாக அப்பாவின் வியாபார சாம்ராஜ்யத்தை கட்டி அழச் சொல்வார்கள். சரி அந்தக் கதையெல்லாம் எதற்கு? நான் சொன்ன விஷயங்களெல்லாம் செய்தாயிற்றா?” என்றான் அரசு.

“ஆபீஸ் பார்த்தாச்சு. டெலிபோன், புக் பண்ணியாச்சு. நீ சொன்ன மாடலில் பேக்ஸ் மெஷின், கம்ப்யூட்டர் எல்லாம் ஆர்டர் கொடுத்தாச்சு.”

“இனி நீ வந்து பார்த்து ஓ.கே சொன்னால் சரி. மற்றபடி எல்லாம் முடிந்த மாதிரிதான். ஆமாம் மார்க்கெட்டிங் எல்லாம் எந்த வகையில் முடிவு செய்திருக்கிறாய் அரசு.?

“கப்போலி தொழிற்சாலை அருகே இறக்குமதி செய்கிற ஏற்றுமதி செய்கிற அத்தனை கம்பெனியிலும் கொஞ்சம் ஏறி இறங்கினால் வியாபாரம் வழிக்கும் வந்து விழும். அது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை.”

“அப்போ சரி.” காலி டீ கப்பை மேஜையில் வைத்து விட்டு “கிளம்பலாமா?” என்றான்.

“ஓ… தாராளமாக.”

இருவரும் குட்டியின் டாட்டா சுமோவில் பயணித்து குட்டியின் அலுவலகத்திற்கு வந்தனர். எல்லோரும் அவரமாக பணியில் இருந்தது மிகவும் வியப்பாக இருந்தது அரசுவிற்கு.

“பராவாயில்லை குட்டி. பிசினஸில் எஸ்டாபிளிஸ் ஆகிவிட்டாய் என்று நினைக்கிறேன்.”

“ஏதோ இப்போது தான் தவழ ஆரம்பித்திருகிறேன். ஒரு நிமிடம் சில இ.. மெயில்கள் அனுப்ப வேண்டும். முடித்து விட்டு இருவரும் உனக்காக பார்த்திருக்கும் ஆபீஸை பார்க்கப் போகலாம்.”

“தாராளமாக.”

குட்டியின் சிறிய சிறிய வேலைகளை முடித்து விட்டு ஆன்கரேஜ் பில்டிங்கில் மூன்றாவது மாடிக்கு அரசுவின் ஆபீஸிற்கான இடத்திற்காக வந்தார்கள்.

உள்ளே நுழைந்ததும் “வாவ்…. ரொம்ப அழகாக இருக்கிறது.” என்றான் அரசு.

“எப்படி அரசு. பிடித்திருக்கிறதா?”

“ரொம்ப பிடித்திருக்கிறது. இந்தச் சனிக்கிழமையே பூஜை போட்டு ஆரம்பித்து விடலாம். உள்ளேயிருக்கும் கேபினில் இருப்பவருக்கு ‘லாப் … டாப்’ கொடுத்து விட்டலாம். ஆமாம் ஒரு கம்ப்யூட்டர் தானே ஆர்டர் கொடுத்திருக்கிறாய்.”

“ஆமாம் அரசு.”

“இன்னும் இரண்டு கம்ப்யூட்டருக்கு ஆர்டர் கொடுத்து விடு.”

“சரி. வேறு ஏதாவது மாற்றங்கள்?”

“முதலில் ஆபீஸ் ஆரம்பிக்கட்டும் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.” அரசு சொல்லி முடிப்பதற்குள் அவன் ‘செல்’ லில் சங்கீத ஒலி ஆரம்பித்தது.

‘செல்’லில் எண்ணைப் பார்த்து விட்டு “சொல்லு திலக். எப்படி இருக்கிறாய்.” என்று கேட்டான் அரசு.

“ரொம்பா நலம். எங்கே இருகிறாய்?”

“நவ சேவா அலுவலகம் பார்த்து முடிவு செய்து கொண்டிருக்கிறேன்.”

“ஏதோ ரொம்ப ஆழக் கால் வைக்கிறாயா? அல்லது அகலக்கால் வைக்கிறாயா என்பது புரிய வில்லை. ஆனால் உன்புயல் வேகம்

பிடித்திருகிறது. ஆமாம் போன வாரம் பூனே போயிருந்தாயே அலுவலகம் ஆரம்பித்து விட்டதா.”

“ஆமாம், உனக்குத்தான் அதைப்பற்றி விவரமாக இ.மெயில் போட்டிருந்தேனே. அதிலே நாசிக்கில் இன்னொருவருடன் சேர்ந்து மருந்து வியாபாரம் ஆரம்பித்த தென்றும் குறிப்பிட்டிருந்தேனே. அந்த மெடிசினுக்கு வெளிநாட்டு ஆர்டர் கூட கிடைத்திருக்கிறது. ஏற்றுமதி முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். என்பதையும் எழுதியிருந்தேன்.”

“அப்படியா, வெரிகுட் . இ.மெயில் பார்க்க நேரமில்லை. அடுத்து எங்கே?”என்றான் திலக்.

“சிங்கப்பூர் போகிறேன்” என்றான் அரசு.

அத்தியாயம் 20 – முதன் முறையாக சிங்கப்பூர்

அரசு ஏர்போர்ட்டில் வந்திறங்கிய போது திலக் வெளியே காத்திருந்தான்.

“வாப்பா அரசு, எப்படி இருக்கிறாய்?” என்று அழைத்தான்.

“திலக் ஏன் வேலையெல்லாம் போட்டுவிட்டு சும்மா இங்கேயெல்லாம் வந்தாய்! ஏதோ வியாபாரத்தை தொடங்கி வைக்க உதவினாய். அதன் மூலம் முதன் முறையாக சிங்கப்பூர் போகிறேன் என்பதால் உன்னிடம் போன் பண்ணிச் சொன்னேன்.”

“மற்றபடி ஏர் போட்ர்டுக் கெல்லாம் உன்னை வீணாக அலையச் சொன்னது? மற்றபடி வியாபாரம் எப்படி இருக்கிறது? வெளிநாட்டு ஆர்டர் ஏதாவது உண்டா?” அரசு திலக்கை கட்டி அணைத்தபடி கேட்டான்.

“எங்கே வெளிநாட்டு ஆர்டருக்கு ஓடுறது…. நீ போட்டு அனுப்புகிற வெளிநாட்டு எல்.சி. களுக்கே என்னாலே சப்ளை பண்ண முடிய வில்லை. உண்மையிலே உன் வளர்ச்சி என்னைத் திகைக்க வைக்கிறது அரசு. ஏதோ ஒரு தீர்மானமில்லாமல் வியாபாரம் பண்ண வந்திருக்கின்ற பணக்கார பையன் கொஞ்சநாள் ஆடிப் பார்த்து விட்டு திரும்ப ஊருக்குப் போய்விடுவான் என்று

நினைத்தேன். பரவாயில்லை கொடிமரம் நாட்டிவிட்டாய். கொடிபறக்க விடாமல் ஓயமாட்டாய். கீப் இட் அப் மை டியர்.”

“அப்புறம் இங்கே உன்னை வந்து பார்க்க வந்ததில் ஒரு சுய நலமும் ஒரு உன் நலமும் கலந்திருக்கிறது.”

“இந்த வேளையில் கேட்க வேண்டுமா என்றுதான் நினைத்துக் கொண்டிருந் தேன்.” என்றான் கடிகாரத்தைப் பார்த்தவாறு.

“அட சும்மா சொல்லுப்பா இன்னும் நேரனிருக்கிறது.”

“பரவாயில்லை நீ போய் எனக்குச் சிங்கப்பூரிலிருந்து போன் பண்ணுவா யல்லவா?”

“கண்டிப்பாக…. இப்படி நீ கேட்கும் போதுதான் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. சொல் என்ன சுய நலம்… என்ன என் நலம்?”

”ஒன்றுமில்லை. சிங்கப்பூரிலே ஒரு கிளையண்டை தொடர்பு கொண்டு கொஞ்சம் எக்ஸ் போர்ட் பண்ணினேன். போனிலேயே இ..மெயிலிலோ கிடைக்கமாட்டேன் என்கிறான். முடிந்தால் அவனைப் பார்த்துப் பேசி கொஞ்சம் வரவேண்டிய பணத்தை வசூல் செய்யணும். அப்புறம் உன் நலம் பற்றிச் சொன்னேனில்லே… நேற்று ஒரு விசன்ஸ் புத்தகம் பார்தேன். ஆடு, மாடு தீவனம்

தயாரிக்க புதிய உணவு வகை கலக்க மிகவும் குறைந்த விலையில் கண்டு பிடித்திருக்கிறர்களாம். அதை சிங்கப்பூரிலே இந்த அட்ரஸில் தான் (பையிலிருந்த காகிதத்தை எடுத்து) முதன் முதலாக அறிமுகம் படுத்துகிரார்களாம்.”

“இதையும் பார்த்தாய் என்றால் உன் தயாரிப்பு செலவு, மற்றும் மூலதனம் போடுவதோடு தொழிலையும் வளர்த்துக் கொள்ள முடியும்.”

“ஆமாம். ஷிப்பிங் கம்பெனி ஆரம்பிக்க சொன்னாயே என்னாயிற்று? கையிலிருந்த முகவரி காகிதத்தை அரசுவிடம் கொடுத்து விட்டு கேட்டான் திலக்

“நான் சிங்கப்பூர் போறதே இப்போது மெயினாக ஷிப்பிங் கம்பெனி விஷயமாகத் தான் போகிறேன். அங்கே ஒரு ஃபிரைட் ஃபார்வேர்ட் கம்பெனியோடு ஒரு அக்ரிமெண்ட் போட்டு என்னுடைய மறு பக்க ( கவுண்டர் பார்ட்) வெளி நாட்டு கம்பெனியாக மாற்றிக் கொண்டு அங்கிருந்து ஜப்பான் போய் ஓஸாகாவிலும் அதே கம்பெனியின் இன்னொரு கிளையிலும் கொஞ்சம் பேசிவிட்டு, சில வியாபாரங்களை முடித்து விட்டு வரலாம் என்றிருக்கிறேன்.”

வெரிகுட், அரசு. வளர்ந்துகிட்டே போகணும். எங்களையெல்லாம் மறந்து விடாதேப்பா.”

“திலக்.. என்னால் பெற்ற அம்மாவைக் கூட நான் மறந்து விட முடியும். என்ன செய்யப் போகிறேன் என்று கண்ணைக் கட்டி ஆற்றில் விட்டாற்போல இருந்த போது எனக்கு முழுக்க முழுக்க அடைக்கலம் தந்து, எனக்குத் தோள் தந்து… உன்னை மறக்கச் சொல்கிறாயா?” அரசுவின் கண்களில் நீர் முத்துகள் சரிந்து விட, “அட இத்ற்கெல்லாம் வீணாக கண் கலங்கிக் கொண்டு போப்பா. எல்லா வற்றையும் சிறப்பாக செய்து விட்டு வெற்றியோடு வா.” என்றான் திலக்.

“நீ இருக்கும்போது எனக்கு எல்லாமே வெற்றிதான் திலக். கண்டிப்பாக இந்தப் பயணத்தில் உனக்கு வர வேண்டிய பணத்தை வசூலித்துக் கொண்டு உனக்கு நேரடியாக சிங்கப்பூர், ஓஸாகா ஆர்டர்கள் கொண்டு வருவேன். நீயும் என்னோடு வளர வேண்டமா?”

“எல்லாம் அந்த இறைவன் அருள் இருந்தால் எல்லாம் நல்லபடி நடக்கும் போய் வாப்பா.” என்று திரும்பவும் அரசுவைக் கட்டிப்பிடித்து அணைத்து வழியனுப்பி விட்டு வெளியே வந்த போது பூனத்திடமிருந்து போன் வந்தது.

அத்தியாயம் 21 – மொபையில் குயிலாகியது

திலக் உணவை முடித்துக் கொண்டு ஆபீஸ் பையனிடம் வாங்கிவரச் சொன்ன பான்(வெற்றிலை) எடுத்து போட்டுக் கொண்டபோது, மொபையில் குயிலாகியது.

எடுத்து அரசுவிடமுள்ள மொபைல் எண் என்பதை தெரிந்து கொண்டு “அரசு, சிங்கப்பூர் எப்படி இருக்கிறது?” என்று கேட்டான்.

“சிங்கப்பூர் வேலை முடிந்து ஒஸாகா வந்தாச்சு. உன்னுடய சிங்கப்பூர் கஸ்டமர் உனக்கு பணம் அனுப்பி விட்டான். புதிய ஆர்டரும் அனுப்பி இருக்கிறான். இ..மெயில் பார்த்தாயா?”

“இல்லை. பணம் வந்து விட்டால் ஒரு புது மெஷின் டோக்கியோவிலிருந்து இறக்குமதி செய்யலாம் என்றிருந்தேன்.”

“உடனே இ..மெயில் பார்த்து வங்கியைத் தொடர்பு கொண்டு பணம் வந்தது தெரிந்ததும் எனக்கு போன் பண்ணு. நான் ஊர் திரும்புவதற்கு முன்னால் டோக்கியோ போய் உன் மெஷினுக்கு ஆர்டர் கொடுத்து விட்டு வருகிறேன்.”

“ஏய் நீ ஏன் வீணாக அலைகிறாய்?”

“நான் வேறு யாருக்காகச் செய்யப் போகிறேன். உடனே போன் பண்ணு.”

“சரிப்பா நீ போன காரியம் என்னாயிற்று.”

“சிங்கப்பூர் மற்றும் ஒஸாகாவில் என் ஷிப்பிங் பார்ட்னர்களோடு ஒப்பந்தம் முடிந்து விட்டது. ஐப்பதுக்கு ஐம்பது லாப சதவிகிதம் பிரித்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டார்கள். இந்த அளவிற்கு எளிதாக முடிந்து விடும் என்று நம்பவே இல்லை. எவ்வளவு பெரிய நெட் ஒர்க் வைத்திருக்கிறார்கள் தெரியுமா? அமெரிக்கா, ஆப்பிரிக்கா எல்லாம் கூட இவர்கள் மூலமாக நான் புதிய கப்பல் வர்த்தக ( ஷிப்பிங்) தொடர்பு கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.”

“வெரிகுட். அப்புறம்?”

“ம்.. ஒரு பெரிய விஷயம் சொல்ல மறந்து விட்டேன். இங்கே ஒஸாகா பிராஞ்ச் ஷிப்பிங் பார்ட்னர் அண்ணனுக்கு எப்படியாவது இந்தியாவிலே ஒரு கால் நடைத் தீவனம் கம்பெனி ஆரம்பிக்க ஆசை. இவர்கள் இன்னும் பழைய இந்தியாவை நினைத்துக் கொண்டு வேலையாட்களிடம் சம்பளம் குறைவு, அதனால் தயாரிப்பு (புரொடக்சன்) செலவு குறைவு என்று கணக்கிட்டுக் காட்டினான்.ரொம்பத் துல்லியமாக கணக்குப் போட்டு

வைத்திருக்கிறான். பாராட்ட வேண்டும். அப்புறம் நாசிக்கில் ஏற்கெனவே ஒரு பழைய நிலம் விலைக்கு வந்த ஞாபகம் வர, அதையே வாங்கி வாங்கி விடச் சொல்லி இருக்கிறேன். அதைப் பற்றித் தெரியுமா? அங்கே தொழிற்சாலை ஆரம்பித்து விடலாம் என்று நினைத்து விஷயத்தை விவரமாகச் சொன்னேன்.அவன் சொன்னது தான் எனக்கே ஆகாயத்திற்கு தூக்கிக் கொண்டு போன ஆச்சரியமாகி விட்டது.”

“சஸ்பென்ஸ் வைக்காதே சொல்லு.”

“ஆரம்பிக்கிறதிலிருந்து மெஷினரி கொண்டு வந்து நிறுவி தயாரிப்பு ஆரம்பிக்கும் வரை அவர்கள் செலவு, இயந்திரங்கள் இறக்குமதி செய்து சுங்கவரி கட்டாமல் இருக்க நூறு சதவீதம் ஏற்றுமதி கம்பெனியாக சுங்க இலாக்காவிற்கு தெரிய படுத்தி சுங்க இலாகாவில் (கஸ்டம்ஸ்) பதிவு (ரெஜிஸ்டிரேஷன்) செய்து செலவுகளை குறைத்து செலவில் ஏற்றுமதி ஆரம்பித்து விட முடிவு செய்திருக்கிறார்கள்.”

“சரி மேலே சொல்லுப்பா. உன் போன் பில் எகிறிக் கொண்டே போகிறது.” என்றான் திலக்.

“பில்லைப் பற்றிக் கவலைப் பட்டால் காரியம் நடக்காது திலக். அந்த கம்பெனி நிர்வாகம் முழுவதும் என் தலைமையில் என் அம்மா பெயர்

தாங்கி ‘ராணி அனிமல் பீட்ஸ்’ என்ற அளவில் உருவாகப் போகிறது.”

“ஜப்பானில் இருந்து அவர்கள் நிர்வாகம் செய்வார்கள். அடிக்கடி இந்தியா வந்து போவார்கள். சரியாக இலாபத்தைக் கணக்கிட்டு (நெட் டு நெட் ஷேர் )நாற்பது அறுபது சவீதம் என்று பேசியுள்ளார்கள்.நாளை ஒப்பந்தம் கையெழுத்துப் போடுகிறேன். ஒரு உதவி செய். நான் இ..மெயில் தந்த நாசிக்காரன் போன் முகவரி எல்லாம் அனுப்புகிறேன். நாளைக்கே, (அவனைப்பார்த்து பன்னிரெண்டு ஏக்கர் நிலம் என்று சொன்னான்) அந்த இடத்தை பேசி முடித்து எப்படி பணம் தர வேண்டும், எப்படி கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என்ற விஷயங்களை கொஞ்சம் தொடர்பு கொண்டு சொல்கிறாயா?”

“அரசு சூப்பர்டா. எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறாய். நானே உனக்கு அசிஸ்டெண்டாக சேர்ந்து விடலாம் போல இருக்கிறது.”

“சும்மா கிண்டல் பண்ணாதே திலக். நீ தானே எனக்கு குருவாக இருந்தவன். அந்த இடத்திலேயே இரு. இன்னும் உன் வியாபாரத்தை பெருக்குவதில் உதவி செய்யப் பார்க்கிறேன். அப்புறம்… எங்கள் அப்பா ஆபீஸிலிருந்து யாராவது உன்னைத் தேடி வந்தார்களா?”

“இல்லையே ஏன் அப்படிக் கேட்கிறாய்?”

“இல்லை. கொஞ்சம் சந்தேகம். என் அப்பாவைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். நான் உன்னிடம் வந்தது, கம்பெனி போன செய்தி எல்லாம் அவருக்குப் போயிருக்கும்.”

“இல்லை, உனக்கு ஏதாவது தகவல் கிடைத்ததா?”

“இல்லை திலக். ஆனால் ஏனோ என்னால் உனக்கு இடைஞ்சல் நேரப்போகிறது என்று உள் மனம் சொல்கிறது.”

“அட, போப்பா. ஜப்பானிலே போயிருந்து கொண்டு என்னைப்பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாய். போன வேலையை ஒழுங்காக செய்து முடித்து விட்டுத் திரும்பு.”

“சரி.சரி.. உன்னைக் கொஞ்சம் கவனித்துக்கொள். ஏதாவது பிரச்சினை என்றால் சொல். உடனடியாக போன் பண்ண மறக்காதே. ம்… அப்புறம்மறந்து விட்டேன். உன் தந்கை பூனம் உன் கல்யாண விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தாள். என்னாயிற்று?”

“முதலிலே பூனத்திற்கு ஒரு வழி பண்ண வேண்டும். இரண்டு மூன்று இடங்களிலே அவள் ஏற்கனவே திருமணமானவள் என்று

தெரிந்தவுடன் தட்டி விட்டு விட்டார்கள். அவளுக்கு எங்கேயாவது அமைந்து விட்டால் அப்புறம் பார்க்கலாம்.”

“யேய்.. நீ சொல்றதைப் பார்த்தால்… யாரையாவது லவ் பண்றியா?”

“அது நீ… வந்த பிறகு பேசிக்கொள்ளலாம்.”

“படவா சொல்லு ஆமாவா இல்லாயா?”

“ஆமா.”

“யாருடா?”

“எல்லாம் மும்பைத் திரும்பு நேரிலே பேசிக்கலாம்.” என தொடர்பைத்துண்டித்தான்.

– தொடரும்…

– முகவரி தேடும் காற்று (நாவல்), முதல் பதிப்பு: 2020, மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற வெளியீடு.

GeorgeChandran பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *