பொறுத்தார் பூமி ஆள்வாரே!
(பழைய கதை புதிய பாடல்)
கோவில் வாசல் ஒன்றிலே
குந்தி யிருந்தார் ஓர்துறவி
வாசல் தன்னில் வான்முட்ட
வளர்ந்த யானை இருந்ததுவாம்!
ஆற்றில் அதனைக் குளிப்பாட்ட
அழைத்துப் போனான் அதன்பாகன்
சேற்றுச் சகதியில் ஓர்தவளை
சிக்கி யிருந்தது அவ்வழியில்
யானை நகர மாறுத்ததுவாம்
ஏனோ இடக்குச் செய்ததுவாம்!
சிக்கி யிருந்த அத்தவளை
சினத்துடன் யானை தனைபார்த்து
‘கிடக்கும் என்னை வணங்காமல்
கடக்கும் எண்ணம் உனக்குண்டோ?!’
என்றே யானையை மிரட்டியதாம்
யானை பொறுமை காத்ததுவாம்!
பார்த்த பாகன் ஓடிப்போய்
பளபள முகத்துடன் வீற்றிருந்த
துறவியை வருக எனவழைத்தான்
பார்த்ததை மெல்ல அவர்க்குரைத்தான்.
வந்த துறவி வைத்திருந்த
ஊன்று கோலால் தவளையினை
குத்தி நெம்பி வீசிவிட்டு
குனிந்து பார்த்தார் ஒருகாட்சி!
“ஓற்றை ரூபாய் நாணயம்மேல்
உட்கார்ந் திருந்த காரணத்தால்
சேற்றைப் பூசிய சிறுதவளை
சினந்து பேசியதாம் யானையிடம்
“யாரோ காசுக் கதிபதியாய்
இருக்கை யிலேயே இறுமாப்பா?!
ஊரார் மிதித்துனைக் கொல்லட்டும்!
உனக்கி தெந்தன் தீர்ப்பென்றார்!”
ஒற்றை மூச்சால் யானையுமே
ஊதித் தள்ளி தவளையினை
காண எட்டாத் தொலைவிற்குக்
கடத்தி யிருக்கக் கூடும்தான்.
தவளை திமிராய்ப் பேசியது!
யானை பொறுமை காத்ததுவாம்!
உலகில் திமிரால் எதிர்ப்போரை
ஒருநாள் பொறுமை வென்றுதரும்!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: February 24, 2026
பார்வையிட்டோர்: 318
