பொய்யும் உண்மையும்

பொய்களை சொல்லி மாய இன்பத்தில் வாழ்வதை விட உண்மையை சொல்லி மன நிம்மதியோடு வாழலாம்
கணேசன் என்ற ஒரு தொழிலதிபர் இருந்தார். அவர் மூன்று கடைகளை சொந்தமாக வைத்துக் கொண்டிருந்தார். அந்த மூன்று கடையிலும் இரண்டு இரண்டு தொழிலாளர்களை வேலைக்கு வைத்து நடத்தி வந்தார். அனைத்து தொழிலாளர்களிடமும் செல்போன் மூலமே விசாரித்து வந்தார்.
அந்த மூன்று கடையின் ஒரு கடையில் ராயுடு ,மதன்குமார் என்று இரண்டு பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அதில் மதன்குமார் அதிகமாக பொய்களை மட்டும் சொல்லி திரிவது அவரது வழக்கம். ராயுடு உண்மைகளை மட்டுமே பேசுவான் உண்மையாகவும் இருப்பான்.
முதலாளி தினமும் செல்போனில் பேசி கடை வியாபாரத்தை பற்றி விசாரிப்பார். மதன் குமார் தன் வீட்டில் இருந்தபடியே நான் கடையில்தான் இருக்கிறேன் ஐயா, வியாபாரம் எல்லாம் அருமையாக போகிறது என்று பொய் பொய்யாக சொல்லுவான்.
பிறகு முதலாளி ராயுடுவிற்கு ஃபோன் செய்வர், ராயுடு போன்காலை அட்டென்ட் செய்து ஐயா நான் வந்து கொண்டிருக்கிறேன் சிறிது தாமதம் ஆகிவிட்டது நான் வந்து விடுகிறேன் என்று உண்மையை சொல்வான். அதற்கு முதலாளி ராய்டுவை திட்டிவிட்டு காலை கட் செய்து விடுவார்.
இன்னொரு நாள் கால் செய்து விசாரிக்கும் போது மதன் வீட்டில் இருந்தபடியே ஐயா நான் கடையில்தான் இருக்கிறேன் என்று பச்சையாக பொய் சொன்னான். அதற்கு முதலாளி சரி என்று வைத்து விட்டார்,
அடுத்து ராயுடுவிற்கு கால் செய்தார் ராய்டு, ஐயா நான் இன்னும் பத்து நிமிடங்களில் கடைக்குப் போய் விடுவேன் என்று சொன்னான் அதற்கு முதலாளி தினமும் தாமதமாக வருவதே உனக்கு வேலை என்று சொல்லி திட்டி விட்டு காலை கட் செய்து விட்டார்.
இதே தினமும் நடந்து கொண்டிருந்தது . ஒரு நாள் கடைக்கு முதலாளி நேரடியாக வந்துவிட்டார். கடையில் ராயுடு மட்டும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை கொடுத்துக் கொண்டிருந்தான் முதலாளி ராயுடுவை பார்த்து மதன் எங்கே என்று கேட்டார். அதற்கு அந்த கடை வாடிக்கையாளர்கள் முதலாளியை பார்த்து இந்த கடையில் இவர் ஒருவர் மட்டும்தான் இருப்பார் நீங்கள் மதன் எங்கே என்று யாரைக் கேட்கிறீர்கள் என்று கேட்டார்கள்,
முதலாளிக்கு ஒரே ஆச்சரியம், உடனே மதனுக்கு கால் செய்தார் மதன் காலை அட்டென்ட் செய்து, ஐயா கடையில் தான் இருக்கிறேன் என்றான் உடனே முதலாளி நானும் கடையில் தான் இருக்கிறேன் உன்னை காணவில்லையே என்று கேட்டு, ராயுடு மட்டும்தான் இருக்கிறான் என்றார், உடனே மதன் ஐயா நான் அருகில் தான் இருக்கிறேன் இன்னும் கொஞ்ச நேரத்தில் வருகிறேன் என்றான் முதலாளி காலை கட் செய்தார்.
சிறிது நேரம் கழித்து மதன் வீட்டிலிருந்து ஓடி கடைக்கு வந்தான் முதலாளி மதனை பார்த்து நீ தினமும் என்னிடம் பொய் மட்டும் சொல்லி என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய் இனிமேல் நீ என் கடைக்கு வேலைக்கு வர வேண்டாம் நின்று விடு என்று கண்டிப்புடன் சொல்லி விட்டார்.
மதன் தலை குனிந்தபடியே மீண்டும் தன் வீட்டிற்கு சென்றான்.
ராயுடு தன் மனதில் “பொய்களை சொல்லி மாய இன்பத்தில் வாழ்வதை விட உண்மையை சொல்லி மன நிம்மதியோடு வாழலாம்” என்று தன் வேலையை பார்க்க தொடங்கினான்.
– எழு (சிறுகதைகள்), மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com, மின்னூலாக்கம் – ஐஸ்வர்யா லெனின்.
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: March 6, 2026
பார்வையிட்டோர்: 50