பெரிய வேலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 200 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சீனாவிலுள்ள அமெரிக்க எண்ணெய் கம்பெனிக்கு ஒரு ஆள் தேவை இருந்தது. வேண்டிய திறமைகளை விளம்பரம் செய்தார்கள்.

குன்றனைய மனுக்கள் குவிந்தன. ஆனால் ஒருவருக்கும் தகுதி இல்லை.

கம்பெனியின் உபதலைவர் சொன்னார்:

“நமக்குத் தேவையான ஒருவரை நான் அறிவேன். அவர் சீனாவில் மிஷனரியாக வேலை செய்கிறார். பட்டம் பெற்றவர், சீன மொழி தெரிந்தவர். மிஷனரியாக 600 டாலர் சம்பளம்தான் வாங்குகிறார்” என்றார்.

உடனே அவர் தருவிக்கப்பட்டார்.

“எங்கள் எண்ணெய் கம்பெனிக்கு நீங்கள்தாம் தலைவராக இருக்கவேண்டும்; பத்தாயிரம் டாலர் சம்பளம் தருகிறோம்” என்றார்,

மிஷனரி ஒரே வார்த்தையில் முடியாது என்று மறுத்தார், 12 ஆயிரம், 15 ஆயிரம் என்று சம்பளத்தைக் கூட்டியும் மறுத்துவிட்டார்.

“ஏன் ஒரேயடியாக மறுக்கிறீர், சம்பளம் போதாதோ” என்றார். அதற்கவர் சொன்னார்;

“நான் பெரிய வேலை செய்கிறேன். சின்னச் சம்பளம் வாங்குகிறேன். சின்ன வேலை செய்து பெரிய சம்பளம் வாங்குவதைவிடப் பெரிய வேலை செய்து குறைந்த சம்பளம் வாங்குவதையே நான் பெரிதும் நாடுகிறேன்” என்றார்.

நாம் கடவுளுக்குச் செய்யும் வேலையே பெரிய வேலையாகும்.

”ஜனங்களுக்குள்ளே தங்களை மனப்பூர்வமாய் ஒப்புக்கொடுத்த இஸ்ரவேலின் அதிபதிகளை என்இருதயம் நாடுகிறது; கர்த்தரைத் தோத்தரியுங்கள்”. [நியாயாதி 5:9]

“என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக.” [யோவான் 21:15]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *