புத்திசாலி வேலு
கதையாசிரியர்: சிறுவர் கதைகள்
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 6,709

ஒரு ஊரில் வேலு என்ற சிறுவனும் அவன் தாத்தாவும் வசித்து வந்தனர்.தாத்தா வேலுவுக்குக் கதை சொல்வார்.
அந்த தாட்டில் அரசர் தன் மக்களுக்கு எவ்வளவு அறிவு இருக்கிறது என்று தெரிந்துகொள்ள விரும்பினார்.
உடனே ‘தாளை மன்னர் போட்டி வைப்பதால் அனைவரும் அரசவை முன் கூடவும்’ என்று அறிவிப்பு வெளியானது. அது வேலுவின் காதுகளுக்கு எட்டியது.
தாத்தாவோடு அங்கு சென்றனர்.
பல செல்வத்தர்கள், வணிகர்கள் கூடியிருந்தனர். மல்லர் வந்து அமர்ந்தார், முதல் போட்டி, பெரிய பானையை சிறிய பானைக்குள் போட வேண்டும். அடுத்தது. இந்த கூரை வீட்டில் உள்ள நெல்லை வெலியில் கொண்டுவராமல் உலரவைக்கவேண்டும்.
இரு போட்டியிலும் வெல்பவருக்குப் பரிசு என்பது அறிவிப்பு. யாராலும் முடியவில்லை.
கடையொக வந்தால் வேலு, “யாராலும் செய்ய முடியாததை சிறுவன் நீ செய்யப் போகிறாயா” என்று கூறி சிரித்தனர்.
மேடையில் இருந்த பெரிய பானையை உடைத்து சிறிய பானைக்குள் போட்டான். பின், ‘கிடுகிது’ என்று மேல் ஏறி ஓலையைப் பிரித்து எறிந்தான். குரிய ஒளி நெய்லின் மீது பட்டு தெய் காய்ந்தது. சிறுவனை அைைனவரும் பாராட்டினர்.
– பொல்மலைச்செல்வன், குகை மேல்நிலை; சேலம்.