பாவத்தின் தன்மை
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 172
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பேரீச்ச மரத்தின் கொட்டை வாழை மரத்தினி டம் வந்து “அங்குமிங்கும் அலைந்து கஷ்டப்பட்டு விட்டேன்; உன் இலைகளுக்குள் தங்குவதற்குச் ‘சிறிது இடம் கொடு” என்று கேட்டது.
சரி என்று வாழை மரமும் இடம் கொடுத்து விட்டது. பின்பு அந்த நினைவே இல்லாமலும் போய் விட்டது.
கொட்டை சும்மா இடித்து வைத்த புளி போல் ஆடாமல் அசையாமலா இருக்கும்? அது முளைத்து வேரூன்றி வாழை மரத்தோடு சேர்ந்தே வளர்ந்தது.
“இதென்ன தொல்லை, நீ எப்படி இங்கு வந்தாய்?’ என்று வாழை கேட்டது. ‘நீ எனக்குத் தங்க இடம் கொடுக்கவில்லையா?” என்றது பேரீச்ச விதை “நாம் இருவரும் சேர்ந்தே வளர்ந்து விட்டோமே” என்ற வாழையிடம் “நான் தனியாகப் போகமுடியும்மா? இருவரும் சேர்ந்தேதான் சாகவேண்டுமா?” என்று விதை சொல்லி முடிக்கையில் வாழை வாடிச்செத்தது.
பாவத்தின் தன்மையும் இதுவே தான். அதற்குச் சிறிது இடம் கொடுத்தால் போதும், ஆளையே அழித்து விடும்.
“பாவம் உன் வாசற்படியில் படுத்திருக்கும்” [ஆதியாகமம் 4:71
“பாவஞ்செய்கிற எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்” [யோவான் 8:34]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
