பாம்பும், பூனையும்
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 171
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நல்ல பாம்புகளோ, சாரைப் பாம்புகளோ, விரியன் பாம்புகளோ, தண்ணீர்ப் பாம்புகளோ எந்தப் பாம்பா னாலும் சரி கூட்டம் கூட்டமாகவோ அல்லது இரண்டு மூன்று சேர்ந்தோ போகிறதேயில்லை. பொதுவாகப் பாம்புகள் தனியாகத்தான் போகும். ஏவாளை ஏமாற்ற சர்ப்பம் தனியாகத்தானே வந்தது. அவ்விதமே பாம் பைப் போல விஷமுள்ள துன்மார்க்கர் தனியாகத்தான் திரிவர்.
பூனை எலியை எப்பக்கம் பிடிக்கிறது? முதலில் முதுகில்தான் பிடிக்கும். முதுகெலும்பை ஒடித்து ஓட முடியாதென்று கண்டவுடன் எலியைக் கீழேவிட்டு வேடிக்கை பார்க்கிறது. அவ்வாறே சாத்தானும் விசு வாசிகள் பலரைப்பிடித்து முதுகெலும்பை ஒடிக்கிறான் விசுவாசமாகிய முதுகெலும்பை ஒடித்துப்
பின்பு வேடிக்கை பார்க்கிறான். அதன் பிறகு அவர்களைப் பம்பரம் போல் ஆட்டுகிறான்.
‘சர்ப்பத்தைப் போல் தங்கள் நாவைக் கூர்மையாக்குகிறார்கள்: அவர்கள் உதடுகளின் கீழ் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது” [சங்கீதம் 140:3]
”…. சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே” [2 கொரிந்தியர் 11:14]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
