பழங்கால வழக்கம்
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 192
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பழங்கால ஜெர்மனி நாட்டில் ஒரு விபரீதவழக்க மிருந்தது. தங்கள் பிள்ளைகள் வேசியின் பின்ளைகளோ அல்லவோ என்று பரிசோதிக்க ரைன் என்ற நதியிலே தூக்கி எறிவார்களாம். தண்ணீர் அடித்துக்கொண்டு போய்விட்டால் அல்லது ஆழ்ந்துபோனால் வேசியின் பிள்ளைகலாம்.
இக்கொடிய வழக்கத்திலும்கூட நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஒன்றுண்டு.
ஆண்டவரும் தம் பிள்ளைகளைத் துன்பமாகிய ஆற்றிலே-வேதனையாகிய வெள்ளத்திலே தூக்கி எறிகிறார். நம்பிக்கையோடு அவரிடம் நீந்தி வரும்போது தம்முடைய பிள்ளைகளென்றும் மாம்ச இச்சையில் சிக்குண்டு துன்பத்தைச் சகிக்கமுடியாமல் முறுமுறுத்து அவரைவிட்டுப் பின்வாங்கிப் போகையில் சாத்தானின் பிள்ளைகளென்றும் கண்டுகொள்கிஞர்.
வைரங்கூட செதுக்கப்படும் போதுதானே மிளிருகிறது.
“தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல கர்த்தரும் எவனிடத்தில் அன்பு கூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறர்.” (நீதிமொழிகள் 3:12)
“நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறர்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?” (எபிரேயர் 12:7}
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
