நிழல் வாழ்க்கையில் ஒரு நிஜ தரிசனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 29, 2026
பார்வையிட்டோர்: 3,369 
 
 

அடியொற்றி போகும் தருணங்கள் அன்பே சிவமாவதில்லை , ஜடம் வெறித்த இந்த வாழ்க்கையில், உமாவின் முகம் வெறும் நிழலாகவே வந்து , மனதை உறுத்திற்று. அவள் எனக்கு நெருங்கிய சொந்தம் தான் இரத்த உறவு. எனினும் மனசளவில் அவள் எட்டாக் கனி மட்டுமல்ல துருவமும் கூட,இந்தத் தரப்படுத்தலின் கதை ஒன்றே சத்தியமானது யாழ்ப்பாணத்தில் கொடூர யுத்தம் காரணாமாக மூச்சிழந்து கிடக்கும் எத்தனையோ வீடுகளில், அதுவும் ஒன்று அப்போதெல்லாம், உமா வீடு என்றால் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். அப்படியொரு அரண்மணை, அங்கு போய் உயிர் வாசம் செய்த பழக்கம் எனக்கும் உண்டு. ஏனென்றால் அவள் என் சித்தப்பா மகள், வெறும் உறவு நெருக்கத்தோடு, முடிந்து போன கதை. மனசளவில் அவள் என்னோடு ஒட்டாத துருவமாகவே வாழ்கிற கதை தான் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

உமாவும் அவளின் மூன்று சகோதரர்களும் வெளிநாட்டுக்கு குடி பெயர்ந்து போய் விட்டார்கள், உமாவும் சுக திசை மாறி, புருஷனை இழந்து விட்டதால் தனது இரு மகள்களுடனும் லண்டனில் தான் வசிக்கிறாள், அதுவும் தனியாக சிறகொடிந்த ஒற்றைப் பறவையாக.

ஏழாலையில் அவள் வாழ்ந்த அந்த பென்னம் பெரிய வீடு, வெகு காலமாக ஆளில்லாமல், பூட்டியே கிடக்கிறது சில வருடங்களுக்கு முன் அம்பியக்காவின் மூத்தமகள் தான் அங்கு குடியிருந்தாளாள் அவளுக்கு புருஷன் பிள்ளைகளில்லை தனி மரம் தான் வாழ வழியின்றி, வீட்டில் ஆடு கோழி வளர்த்துத் தான், அவள் ஜீவனம் ஓடுகிறதாம்.

அவளுக்கு அடுக்கடுக்காக மூன்று சகோதரிகள் ஒன்றும் எடுபடவில்லை, எல்லாம் தேர் ஏறி ஊர்வலம் போக முடியாமல் சில்லு முறிந்து போன கதை தான். அதிலும் அம்பியக்கா ஊருக்கெல்லாம் உபகாரி. அதிலும் உமா வீட்டையே தாங்கிப் பிடித்து முழுக் குடும்பமுமே, அவர்கல் பணிவிடைசெய்து வாழ்ந்ததெல்லாம் பொன்னெழுத்துக்களால், பொறிக்கப்படவேண்டிய, ஒரு உயிர்க் காவியம், அதைத் தூசி தட்டிப் பார்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

உமா விட்டில் குடியிருக்கும் அம்பியக்காவின் மூத்த மகள், நித்யா உமா வீட்டில் ஆடு வளர்க்கும் போது நேர்ந்த ஒரு சோக சம்பவம். அவளும். உமா வீட்டில் தொண்டு செய்து பிழைத்தவள் தான் உமாவின் தாய்.

பூரணத்தின் செய்காரிய திறமை பற்றி ஊரே கதைசொல்லும் அம்பியக்காவின் மகள்களிடம் வேலை வாங்கும் அவள் சாமர்த்தியம் எனது அம்மாவிடம் இல்லையென்பதை, ஒரு குறையாக நான் எடுத்துக் கொள்ளவில்லை, ஏனென்றால்,, அவளின் அப்பழுக்கற்ற குணவிஷேசங்களுக்கு முன்னால் இந்தக் காரிய நடத்தைகள் தூசுக்கு சமம். அம்மா அப்படியொரு தாராள மனம் கொண்ட கொடை வள்ளலாக நின்று நிலைத்தவள்.

ஒரு முறை கடும் மழை பெய்த, போது உமா வீட்டைச் சுற்றி, வெள்ளம் ஓடியதால், ஆடு கொட்டிலின்றி நனைகிறதே, என்ற, கவலையில், நித்யா அந்த வீட்டில் ஒதுப்பூறகாக இருந்த, ஸ்டோர் ரூமில், ஆட்டைக் கட்டியதால், வந்த விபரீத விளைவு , இதை யாரோ சொல்லக் கேட்டு, லண்டனிலிருந்து, உமா எழுதிய கடிதம் தான் இப்போது பேசு பொருளாகி விட்டிருந்தது. அது கொழும்பு வரை வந்து சேர்ந்து என் காதுக்கு எட்டிய போது, நான் நினைவிழந்து தடுமாறித் தான் போனேன். இதை போன் வழியாக எனக்கு எடுத்துச் சொன்னவள் கங்கா. அவள் என் அக்கா மகள். அவளும் இப்போது, ஊரில் தான் இருக்கிறாள். நகர வாழ்க்கையை வெறுத்து, ஒரு தெய்வீக இருப்பில் வீற்றிருப்பது போல அவள் நிலைமை, அவ்வளவு தூரம், அவள் அந்தக் கிராமத்தோடு ஐக்கியமாகிவிட்டிருந்தாள். ஒரு காலத்தில் அவள் அம்மாவின் செல்லப் பிள்ளையாக இருந்தவள். அது மட்டுமல்ல அப்பாவின் தொலைநோக்கு பார்வை, எப்படியோ அவளையும் தொற்றிக் கொண்டு விட்டது, தர்மசிந்தனையுள்ள அவளின் பேச்சு, ஒரு ஆன்மீக சித்தியாகவே என்னை வந்தடைந்தது. அதைக் கேட்பதற்கும் நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

ஒருநாள் அகாலத்தில் அவள் குரல் கேட்டது, போன வழியாகத் தான். நான் தூங்கப் போகிற நேரம். தனிமையில் விழிக்கிற நேரமே, அதிகம் இந்த விழிப்பு எதனால், வந்தது? உடல் என்பதை மரந்து விட்ட சுகமான,, விழிப்பு நிலை ஆராதனை அது. எப்போதும் இதற்குத் தலை வணங்கியே நான் வாழ்ந்திருக்கிறேன். அகாலத்தில், அவள் அழைப்பு ஒரு தார்மீக செய்தி கூற வருவது போல் எனக்குப்படவே எழுந்திருந்து போன் பக்கமாக ஓடினேன். அதுவும் வீட்டுப் போன் கையடக்கத் தொலைபேசி, என்னிடமில்லை. இதை வைத்திருப்பவரகள, மாய உலகின். சகதி, குளித்து எழுபவர்களாகவே, நான் உணர்ந்திருக்கிருக்கிறேன். இந்த உணர்தலின விழிப்பு நிலை மறவாமலே, சக்ஜமாக குரலை உயர்ந்தி, நான் கேட்டேன்.

என்ன கங்கா? இந்த நேரத்திலை, போன் எடுக்கிறாய் ஏதும் விசேஷமே?

ஒரு மண்ணாங்ட்டியுமில்லை. ஓரு இழவு கதை தான்.

என்ன சொல்கிறாய், ஆரும் இரந்திட்டினமே?

இல்லை. அதை விடக் கேவலம் இதைக் கேட்ட பிறகு எனக்கு ஒன்றும் ஓடேலை. காதிலை இரும்பைக் காய்ச்சி ஊத்தின மாதிரி, நான் துடிச்சுப் போனன். பாருங்கோ சித்தி, அம்பியகாவும் அவவின்ரை பிள்ளைகளும், உமா வீட்டாருக்கும் செய்த பணிவிடைகளை நினைச்சால் அதுக்காக வீடென்ன ஊரையே எழுதிக்கொடுத்து விடலாம். அதைச் செய்வதற்குப் பதிலாக அவ என்னசெய்தா தெரியுமோ சித்தி?

என்ன செய்தாள் என்ரை அருமை சகோதரி?

ஆட்டை வீட்டிற்குள் கட்டியதற்காக, தாறுமாறாக வாய்க்கு வந்தபடி நித்யாவை ஏசி உடனடியாக வீட்டை விடுமாறும் அங்க, லண்டனிலிருந்து, சுடச் சுட ஒரு கடிதம் உமா போட்டாந்தக் கடிதத்தால் நித்யாவின் நிலைகுலைந்து நிற்கிறது. இதை சொல்லாவிட்டால், எனக்கு மூளை சிதறி வெடித்து விடும் போல பயம் வந்திட்டுது. அது தான் சித்தி உங்கடை நித்திரையைக் குழப்பி நான் போன் எடுத்தனான்.

எனக்குத் தெரியும் . கங்கா என்ரை குஞ்சியாச்சி. அது தான் உமாவின் அம்மா! அப்பவெல்லாம் நாகரீக மொழி நாங்கள் பேசுறேலை. மாசுபடாத அன்பு ஒன்று தான் எங்களை வளர்த்து விட்டிருக்கு . ஆனால் குஞ்சியாச்சி எப்படியிருந்தா கூலி கொடுக்காமலே வேலை வாங்கத் தெரிந்த செய்காரியக் கலை தெரிந்த அவவின் மகள் தான் இந்த உமா, அவளுக்கு கொழும்பிலேயே இரன்டு வீடு இப்ப லன்டனிலேயும் வீடுகள் இருக்காம், பெரிய கோடிஸ்வரி அவளுக்கு இது சிம்பிள் விவகாரம்.

அம்பியக்காவுக்கு பட்ட நன்றிக் கடனை இப்படியா தீர்ப்பது?

வேறு எப்படி சொல்லுங்கோ சித்தி!

அவள் இடத்திலை நானாக இருந்தால், அந்த வீட்டை என்ன ஊரையே எழுதிக் கொடுத்திருப்பன். அதை வித்தாவது நித்யா குடும்பம் பிழைத்துக் கொண்டால், அதுவே தர்மம் நிழலே வாழ்வாகி வாழத் தெரிந்தவர்களுக்கு, இந்த நிஜத்தின் உண்மையும் அதன் தர்சன இருப்பும் வெறும் கனவாகவே போய் விடும்,

சித்தி! நன்றாய் சொன்னனியள், உங்கள் வாய்க்கு சீனி தான் போட வேணும்.

எனக்கு சுகர் பரவாயில்லை, நீ போடு!

இது எதுக்கு? கனவுலகிருந்து விழித்துக் கொண்டதற்கா ? இதைக் கேட்டு விட்டு உரத்த குரலெடுத்து அவள் சிரிப்பதை ஜீரணித்தவாறே எனக்குத் தூக்கம் தான் வந்தது. துக்கம் வரவில்லை நிழலைக் கண்டவர்ளே தூங்கி வழிகிறார்கள், நிஜத்தின் இருப்பை மறாந்து போனதால் தான் அவர்களுக்கு இந்த இரண்டும் கெட்டான் நிலை. சகதி குளித்தே சாகப் பிறந்த அவர்கள் முன் நிலா வெளிச்சம் சூழ, நான் படுக்கப் போனது இரு விழிப்பு நிலை சாம்ராச்சியமாகவே என் காலடியில் முடி சூடிக் கொண்டு கிடப்பதாய் நான் உணர்ந்தேன். உமா என் நினைவை விட்டு அடியோடு மறைந்தே போனாள்.

ஆனந்தி என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *