நகை பகையை வெல்லும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 16, 2025
பார்வையிட்டோர்: 28 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘வெம்பகை’ என்றொரு பாண்டிய மன்னன் இருந்தான். அவன் அவைக்களத்தில் கோமாளி யாக இருந்தவன் மதியழகன். அவன் நகைச்சுவை குன்றாமலே அவையோர் ஒவ்வொருவரை யும் தாக்கித் தலையிறங்கச் செய்வது வழக்கம். ஒரு நாள் நாக்குத் தவறி அரசனையே அவன் இறக்கிப் பேசிவிட்டான். அரசன் சட்டென வெகுண்டு, அவனைக் கொலை செய்யும்படி ஆணையிட்டு விட் டான். 

எப்போதும் கடகடவென்று பேசும் விகடன் வாளா இருப்பது கண்டு, அரசன் அவனைச் சற்றுப் பேச வைத்துத் தணிவு செய்ய வேண்டும் என்றெண்ணி, “நீ எங் கோமாளி யாதலால், உனக்கு ஒரு வகையிற் பரிவு காட்டுகிறேன்; நீ எந்த வழியாகச் சாக வேண்டுமென்று விரும்பு கிறாயோ, அந்த வழியிலேயே சாகலாம். ஆகவே, உன் முடிவு உன் நாக்கையே பொறுத்துள்ளது,” என்றான். 

மதியழகன் உடனே முகமலர்ந்து, “அப்படி யாயின், அரசே! முதுமை வழியாக நான் சாகும் படி அருளல் வேண்டும்,” என்று கூறினான். 

எதிர்பாராத இவ்விடையைக் கேட்டு அரசன் வியப்பும் மகிழ்ச்சியுங் கொண்டு சினம் ஆறினான். அதன்பின் அரசன், தான் பகையரசரிடம் செலுத் தும் வன்கண்மையை அந்நகையரசினிடம் எந் நாளும் காட்டுவதில்லை.

– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *