கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: December 30, 2024
பார்வையிட்டோர்: 23,997 
 
 

கல்விச் சேவையில் புகுத்தப்பட்ட தரப்படுத்தல் சட்டத்தின் மூலம் ஈழத்தில் பாதிப்படைந்த புத்திசாலி மாணவர்கள் பலர். அரசுக்கு திறமையான மனிதவளத்தைத் தன் இனவேற்றுமை சட்டத்தினால் இழந்ததை பற்றி கவலை இருந்ததாகத் தெரியவில்லை. அரசின் முழு நோக்கமும் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்று, நாட்டை ஆளுவதே. இச்சட்டத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலர் விடுதலைப் போராளிகளானார்கள். பண வசதி படைத்த சில மாணவர்கள்; பாதுகாப்பு தேடி, தம் வருங்காலம் நல்லதாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தோடு பிற நாடுகளுக்கு புலம் பெயர்ந்தார்கள். தம் அறிவைப் பயன்படுத்தி புதியதை கண்டுபிடிக்க வேண்டும், வி;ஞ்ஞானியாகி தங்களின் தமிழ் சமூகத்துக்க உதவவேண்டும் என்ற நோக்கம் கொண்ட இரு மாணவர்கள் பற்றிய கற்பனைக் கதை இது. 

சங்கரும், சீலனும் இராசாயனவியல் ஆசிரியர் மகாலிங்கத்தின் இரு மகன்கள். இவர்களில் மூத்தவன் மாதவன் அவன்pன் தம்பி சீலன்; இரு வருடங்களால்; ளமை. படித்தவர்கள் வாழும் ஊரான பருத்தித்துறையில் பிறந்தவர்கள். மகாலிங்கம் மாஸ்டர் பருத்தித்துறை ஹார்ட்டிலி கல்லூரியில் உயர் வகுப்புகளுக்கு இரசாயனப் பாடம் கற்பிக்கும் பிரபல்யமான ஆசிரியர். அக்கல்லூரி பல அறிஞர்களையும் விஞ்ஞானிகளையும் உருவாக்கியுள்ளது. மகாலிங்கத்தின்; மனைவி இந்துமதி ஒரு கணித ஆசிரியை. பருத்தித்துறை மெதடிஸ்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கணித ஆசிரியையாக வேலை செய்பவள். 

சங்கரும், சீலனும் வீட்டில் வைத்து பரிசோதனைகள் செய்வதில் ஆர்வம் காட்டிவந்தார்கள். அவர்களை ஊக்கப்படுத்த அவர்கள் இருவரினதம் வேண்டுகோளுக்கு இணங்கி பரிசோதனைகள் நடத்துவதற்கு வீட்டில் தனி அறையொன்று பெற்றோரால் ஒதுக்கப்பட்டது. இரசயானப்; பொருட்களை வாங்குவதற்கு தேவையான பணத்தை, இங்கிலாந்தில் இரசாயனப் பொறியியலாராக வேலை செய்யும் தாய்மாமன்; அனுப்பி வந்தார். 

சங்கர், சீலனோடு ஒன்றாகப் படித்தவர்கள் ஜெயமும் ரவியும். பால்ய நண்பர்கள். உறவினர்கள் கூட. அவர்கள் இருவரும் பிரபல்யமான பிஸ்னஸ்மன் கணேசலிங்கத்தின் மகன்கள். படிப்பில் சங்கரையும் சீலனையும் போல் கெட்டிக்காரர்களாக இல்லாவிட்டாலும,; அவர்கள்; தந்தையைப்போல் வணிகத்தில் அதிகம் ஆர்வம் உள்ளவர்கள். பணவசதி இருந்ததால் படிப்பை இலங்கையில் தொடராமல் கனடாவுக்கு புலம் பெயர்ந்தார்கள். கனடா சென்ற ஜெயமும் ரவியும், ரியல் எஸ்டேட் ஏஜண்டுகளாகி, பிரபல்யமடைந்தார்கள், தங்களின் பால்ய நண்பர்களான சங்கரையும், சீலனையும் கனடாவுக்கு வரும்படி அவர்கள் பலதடவை அழைத்தும், பிறந்த மண்ணை விட்டு வரமுடியாது என்று அவர்கள் மறுத்துவிட்டார்கள். அவர்களின் நோக்கம் வேறு. 

வன்னி காட்டுப் பகுதியில் ஒரு பாரிசோதனை கூடம் அமைத்து இருவரும் தமிழ் ஈழ விடுதலைப் போருக்கு தம் அறிவைப் பயன் படுத்த தீர்மானித்தார்கள். தங்கள் நோக்கத்தை; நண்பர்களான ஜெயத்துக்கும் ரவிக்கும் அறிவித்தார்கள். 

“உங்கள் பரிசோதனைக்கு தேவையான நிதி உதவி செய்ய நாங்கள் தயார். உங்கள் ஆராச்சி வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள். ஆனால் ஒன்று. நாம் உங்கள் பரிசோதனைக்கு நிதி உதவி செய்யும் விஷயம் எங்களுக்குள் மட்டுமே இரகசியமாக இருக்கட்டும். எங்கள் தந்தையாருக்கும் தெரியக் கூடாது” என்று கனடா வாழ் நண்பர்கள் இருவரிடம் இருந்து பதில் வந்தது. 

பரிசோதனைக்குத் தேவப்பட்ட இராசயனப் பொருட்களையும் கருவிகளையும் பிறநாட்டில் இருந்து வாங்குவதற்கு தேவையான நிதி உதவியையும,; ஒழுங்குகளையும் ஜெயமும் ரவியிம், செய்தார்கள். 

சங்கரும், சீலனும் 48 மணித்தியாலங்களுக்கு உறைய வைக்கும் துப்பாக்கி தோட்டாக்களை தம் ஆராச்சி மூலம் கண்டுபடித்தனர். ஆரம்பத்தில், வன்னி காட்டில் உள்ள சில மிருகங்களில் பரிசோதனை செய்து, முழு வெற்றி கண்டார்கள். 

போராட்டத்தை நடத்தும் தலைவரிடம் தங்கள் கண்டு பிடிப்பைப் பற்றி எடுத்து சொன்னார்கள். அவர்களுடைய கண்டுபிடிப்பை தலைவர் முதலில் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். 

“உங்கள் பரிசோதனையின் வெற்றியைப் பாராட்டுகிறேன். ஆனால் நாம் இந்த உறைய வைக்கும் தோட்டாக்களை பாவிப்பதை ஊடகங்கள் அறிந்தால் நாங்கள் இராசாயன ஆயுதம் பாவிக்கிறோம் என்று எம் மேல் குற்றம் சாட்டுவார்கள். அதோடு மட்டுமல்ல ரசாயன ஆயுதங்களை போரில் பாவிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆதனால் நாம் இந்த தோட்டாக்களை பாவிப்பதை தவிர்க்கவேண்டும்” என்று சொன்னார். 

“இது 1988 இல் குர்திஷ் மகள் மேல் சதாம் ஹ_செயின் பாவித்த கடுகுவாயு போன்ற இரசாயன ஆயுதம் போல் அல்ல இது. நேருக்கு நேர் எதிரிகளோடு துப்பாக்கி, பாவித்து சுடும் போது மட்டுமே இத் தோட்டாக்களை பாவித்து, 48 மணித்தியாலங்களுக்கு எதிரிகளை செயல் பட முடியாமல் உறைய வைக்கலாம்.; உறைந்த எதிரிகளை இலகுவில் சிறைபிடித்து போர்க் கைதிகளாக்கலாம். சிறைபிடித்தவர்களை வைத்து அரசாங்கத்தோடு பேரம் பேசி, எமக்கு வேண்டியதைப் பெறலாம். இந்த தோட்டாக்களை பாவிப்பதால் எதிரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படாது. பொது மக்களையும் பாதிக்காது என சங்கரும்; சீலனும் தலைவருக்கு விளக்கம் கொடுத்தார்கள். அரை மனதோடு அவர் சம்மதித்தார். 

யானையிறவு போர்க்களத்தில் இவர்கள் கண்டு பிடித்த தோட்டாக்கள் நூற்றுக் கணக்கான எதிரிகளை இலகுவாக போர்க் கைதிகளாக உயிரோடு சிறைபிடிக்க உதவியது. இனிவரும் போர்களிலும் அந்த உறைய வைக்கும் தோட்டக்களை 72 மணித்தியாலங்களுக்கு நீண்ட நேரம் உறையவைக்கும் வகையில் பரிசொதனைகள் மூலம் தயாரிக்க முடியுமா என்ற ஆராச்சியைத் தொடர முடிவு எடுக்கப்பட்டது. 

போரின் உச்சக் கட்டத்தின் போது சங்கர், சீலன் பரிசோதனை சாலையைப்பற்றிய விபரம் எதிரிகளுக்கு இனத் துரொகிகள் அறிவி;த்ததால் பரிசோதனைச் சாலை குண்டு தாக்குதலுக்கு உற்பட்டு அழிந்தது. அத்தாக்குதலினால் பரிசோதனை சம்பந்தப்பட்ட ஆவணங்கள் எரிந்து சாம்பலாயிற்று. சங்கரும்; . சீலனும் மரணத்தைத் தழுவினார்கள். 

தமிழ் ஈழம் சிறந்த விஞ்ஞானிகளை இழந்தது. 

(யாவும் கற்பனையே) 

– காலம் (அறிவியல் சிறுகதைத் தொகுப்பு), மின்னூல் வெளியீடு: http://FreeTamilEbooks.com.

பொன் குலேந்திரன் பொன் குலேந்திரன் - Pon Kulendran - 12-June-2016 யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடாகக் கொண்டவர். யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில் ஆரம்பக் கல்வி கற்று கொழும்பு பல்கலைகத்தில் பௌதிகத்துறையில சிறப்பு பட்டம் பெற்றவர். இலங்கை தபால் தந்தி திணைக்களத்தில் சிரேஷ்ட அத்தியட்சகராக கடமையாற்றி அதன் பின்னர் துபாய் அபுதாபி சார்ஜா இங்கிலாந்து அமெரிக்கா ஆகிய நாடுகளில் தொலை தொடர்பு (Telecommunications) துறையில் சிரேஷ்ட பொறியியலாளராக வேலை செய்தவர். பின்னர் கனடா “டெலஸ்”…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *