தெரிந்து தெளிதல்




(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நம்மைச் சூழ்ந்திருக்கும் பொருள்களின் தன்மையை யும், மக்களின் நடவடிக்கைகளையும் உற்றுநோக்கியறிவது நம் உயர்நிலைமைக்கு அடிப்படையான பற்றுக்கோடாகும். பள்ளிக்கூடக் கல்வியினாலும் புத்தகக் கல்வியினாலும் எல்லாமறிந்துகொள்ள முடியாது. மக்களின் குணங்கள், உலக ஒப்புரவு, ஓரிடத்திற்குரிய பொருள்களின் தனிப் பட்ட தன்மைகள் ஆகிய இவைகளைத் தெரிந்தறிந்துகொள் வது ஒவ்வொருவருக்கும் வேண்டப்படுவதான ஒன்றாம். நம் கண்ணுக்குப்படுகிற எதனையும் உற்றுநோக்கி ஓர்ந்து அறிதலால் இது கைகூடும்.

மக்கள் எந்தெந்த நேரங்களில் எவ்வெத்தன்மையான உணர்ச்சியடைகின்றார்கள் என்பதைச் சிலர் உற்றுநோக்கி யறிந்துகொண்டிருக்கின்றார்கள் இத்தகையோர் தங்களைச் சூழ்ந்திருக்கும் பக்கத்து மக்கள், நண்பர்கள் மனத்தில் உண்டாகும் எண்ணத்தை முன்னறிந்து தங்கள் பேச் யும் செய்கையையும் தக்கபடி சரிப்படுத்திக் கொள்கின்றனர்.
இவர் இச்செவ்வியில் இவ்வித உணர்ச்சிகொள்வர் என்று அறிந்துகொள்ளும் வல்லமையையே திறமை என் பர். ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளும்போது இக் குணம் மிக வேண்டற்பாலது. இக்குணமின்றி எவரும் சிறந்த மரியாதைபெறுவது அருமை செயற்கரிய செயல் களில் இத்திறமை என்பது மிக மேற்பட்டதாகும்.
துன்பம் வந்தபோது உற்றுநோக்குதல் மிக்க உதவி செய்யும். படகோட்டிகள் பாறைகளின் இருப்பைப் பற்றியும், கடலின் பற்பலவகையான தோற்றங்களைப் பற்றி யும் முன்னமேயே உற்றுநோக்கி அறிந்திருப்பார்களானால் புயலடிக்குங் காலத்தில் அதன் கொடுமையினின்றும் எளிதில் தப்பித்துக்கொள்வார்கள் அல்லவா? அதுபோ லவே, மக்களும் சிறுசிறு செய்திகளின் வெவ்வேறுபட்ட தனமைகளை ஊற்றங்கொண்டு உற்றுநோக்கித் தெரிந்து கொண்டிருப்பார்களாயின் எவ்வகை இடுக்கணிலும் ஊறொன்றும் படாமல் உய்யக்கூடுமல்லவா?
சிலர் இடுக்கண் இடையூறுகள் நேர்ந்துவிடின் மன மதியும் இடுக்கணழியாமையுங் கொண்டிருப்பதுடன் அந்நேரததில் இன்னது செய்யவேண்டுமென்பதற்கேற்ற வழிவ வகைகளையும் கண்டுபிடித்துக்கொள்கின்றனா. மேலும் அவர்கள் ஒரு வழி தவறினால் உடனே வேறொரு வழியைத் தெரிந்தெடுத்துக்கொள்கின்றனர். இதனைத்தான தெரிந்து தெளிதல் என்பா. இது சிலர்க்கு இயற்கையாகவே உண்டு. ஆனாலும் ஏனையோரும் பல்பொருள்களையும் பல்வகைத் திறமைவாய்ந்த மக்களையும் உற்றுநோக்கிப் பார்த்துப் பார்த்துப் பயிற்சிபெற்றுப் பயனடையலாம்.
1. பேதுரு காசண்டன்
பிரான்சு நாட்டில் பேதுரு காசண்டன் என்கிற கல்விப்பயிற்சி பெற்ற அறிவாளி யொருவனிருந்தான். அவன் ஏழு வயதிலேயே இரவில் எழுந்தெழுந்து வானத்தை அண்ணார்ந் து பார்த்துக் கொண்டு வான்மீன்களின் த ன்மையைக் கருத்துடன் உற்று நோக்கிக் கொண்டிருப்பான். ஒருநாள் அவன் தன்னோடொத்த சிறுவர்களுடன் கூடிக்கொண்டு நிலவொளியில் உலாவப்போனான். அப்போது வானிற் சந்திரனுக்கு நேரே மேகங்கள் ஓடிக்கொண்டி ருந்தன. பேதுருவினுடன் வந்த பிள்ளைகள் ‘மேகமோ மதியோ து என்று மாறுபட்டு வாதிட்டனர். அவர்கள் கடைசியாக மதியே ஓடுகின்றது என்கிற முடிவுக்கு வந்துவிட்டனர். ‘மேகந் தான் ஓடும், மதி ஓடாது என்று காசண்டன் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
பிறகு காசண்டன் அவர்களை ஒரு பெருமரத்தடியிற்கொண்டு போய் நிறுத்திக் கிளைகளின் மூலம் சந்திரனைப் பார்க்கும்படி சொல்லினன். அப்போது அவர்கள் சந்திரன் இருந்த விடத்தி லேயே இருக்கிறதென்றும் மேகங்களே மரத்தைத் தாண்டியோடு கின்றன என்றுந் தெள்ளத்தெளியத் தெரிந்துகொண்டு, ‘பேதுரு சொன்னதே சரி, யாமே தவறாக உணர்ந்தோம்,’ என்று அவனை மெய்ச்சிக் கொண்டனர்.
2. வேடனும் மான் தொடையும்
ஒரு காட்டில் ஒரு வேடன் தான் முன்னாள் கொன்ற ஒரு மானின் தொடையைத் தன் குடிசைக் கூரையில் ஆறத் தொங்க வைத்துவிட்டு வெளியே போய்வந்தான். அதற்குள் அது காணாமற் போயிற்று; அவன் அது திருடுபோயிற்று என எண்ணினான். அவ்விடத்தைச் செவ்வையாக ஆராயந்து பார்த்தான்; பின் ஆள் காலடிச்சுவடு கண்டு, அது போனவழியை உற்றுநோக்கி அத்திருடனைப் பிடிக்க அவ்வழியே சென்றான்.
எதிர்நோக்கி வந்த சில வழிப்போக்கர்களைப்பார்த்து அவன், ‘ஒரு சிறு துப்பாக்கியேந்தி ஒரு கூழைவால் நாயுடன் போன குள்ளக் கிழ வெள்ளைக்காரன் ஒருவனை நீங்கள் கண்டீர்களா ?” என்று கேட்டான். அவர்கள் ”ஆம்” என்றனர். வேடன், “சரி, சரி அவன்தான் அந்த ஆள். இறைச்சியைக் கொண்டுபோய்விட்ட திருடன் அவனே,” என்றான். அவர்கள் வேடனை நோக்கி, “என்றைக்கும் பார்த்திராத ஒருவனைப்பற்றி இவ்வளவு நுட்பமாக வும் விளக்கமாகவும் அறிந்து பேசுகின்றனையே, அஃது எப்படி?” என்று கேட்டனர். அதற்கு அவன் :
க. இறைச்சியைத் தொங்கவிட்டிருந்த இடத்தில் அவன் கற்களைக் கொண்டுவந்து போட்டு மேடாக்கி அதனமேல் நின் கொண்டு அவ்விறைச்சியைக் கொண்டுபோயிருக்கின்றானாகையால் அவன் குள்ளன் என்று அறிந்தேன்.
உ. சருகிலைகளின் மேல் அவன் சிறுதாண்டுபோட்டு நடந்து போயிருக்கிற அடையாளங் கண்டு அவன் கிழவன் என்று அறிந் தேன்.
ஙு. அவன் பெருவிரல்களைத் திருகித்திருகிவைத்து நடந்து போயிருக்கிற அடையாளங் கண்டு அவன் வெள்ளைக்காரன் என்று அறிந்தேன்.
ச. அவன் உள்ளே நுழைந்தபோது வெளியே தன்துப்பாக்கியை ஒரு மரத்தின் பக்கம் சாரவைத்திருந்திருக் கின்றான்; அதன் முனை மரத்தின்மேல் பட்டிருந்த அடையாளம் தரைக்குச் சிறிறு உயரத்திலேயே இருந்தபடியால், அத்துப் பாக்கி சிறியது என்று அறிந்தேன்.
கு. அவனுடைய நாய் சிறியதென்று அதன் காலடிச்சுவட்டினால் அறிந்தேன்.
சு. திருடன் உள்ளே இருந்தபோது வெளியில் மண் தரை மேல் உட்கார்ந்திருந்த நாயின் வாலினால் உண்டான அடையாளங் கண்டு அவ்வால் கூழையென்று அறிந்தேன், என்றான்.
3. எலியும் முட்டையும்
எலி முட்டைகளைத் திருடிக்கொண்டு போய்விடும் என்றால் யாராவது நம்புவார்களா? அஃது உண்மையாகவே நடந்ததைக் கேளுங்கள் :
ஆங்கில நாட்டின் ஒரூரில் ஒரு குடியானவன் இருந்தான். அவன் ஒருநாள் எலிகள் ஒரு கோழிக்கூண்டைச் சுற்றிக்கொண்டி ருப்பதைக் கண்டான். கண்டவன், ‘இவ்வெலிகள் என்ன செய் கின்றன பார்ப்போம்,’ என்று சிறிது தொலைவில் அமரிக்கையாக இருந்துகொண்டு அவைகளை நோக்கியபடியே நின்றான்.
ஓர் எலி ஒரு முட்டையின்மேல் குனிந்து படுத்தவாக்காக இருந்து, தன் வாலை அடிக்கு இழுத்து வாயிற் பற்றிக்கொண்டது. இதனால் அம்முட்டை எலியின் கால்களினாலும் வாலினாலும் பிடி பட்டுப்போயிற்றல்லவா? உடனே சில எலிகள் அதன் கிட்டவந்து அதன் கழுத்தைப் பிடித்திழுத்துக்கொண்டு கூண்டினின்றும் வெளியேறிப் போய்விட்டன. அக்குடியானவன் பகுத்தறிவில்லா உயிர்களாகிய எலிகளின் சூழ்ச்சித் திறத்தைக்கண்டு வியப்பெய்தி தன்னிடஞ் சென்றான்.
4. ஓவியனும் அவன் கையாளும்
ஒரு கோவிலின் கும்மட்ட முடியில் வேலைசெய்வதற்காகச் சாரங்கட்டியிருந்தது. கும்மட்டத்தினுள்ளே ஒருவன் ஓவிய மொன் எழுதி அதற்கு நிறங்கொடுத்துக்கொண்டிருந்தான். இடைநடுவிற், செய்த வரையில் ஓவியம் எப்படிக் காணப்படு கின்றது என்று பார்ப்பதற்கு ஓவியத்தை நோக்கியபடியே பின் வாக்காகவே மெதுவாகப் போய்க்கொண்டிருந்தான். அவன் முது குக்குப் பின்பக்கம் சாரம் குறுக்குக் கொம்பில்லாமல் திறந்தபடி யாக இருந்தது. ஓவியன் இரண்டோரடி யெடுத்துவைத்து விட்டால் மல்லாக்கக் கீழே விழுந்து உடல் தூள் பட்டுப்போய்விட வேண்டியதுதான்.
இந்த நெருக்கடியில் அவன் கையாள் என்ன செய்தானென் றால் :- ஒரு நிறச்சட்டியை எடுத்து அந்த ஓவியத்தின்மேல் அடித்து விட்டான். உடனே ஓவியன் அடங்காச் சினங்கொண்டு கையாளைப் புடைக்க ஓடிவந்து விட்டான் கையாள் காரணத்தை எடுத்துக் காட்டியும் ஓவியனுக்குச் சினமடங்காததனால் அவன் அந்நேரத்தில் அக் கையாளுக்குச் செவ்வையாக நன்றி யறிவு கூற ல்லை. ஆனாலும் கையாளின் இடுக்கணழியாத் தன்மையையும் சூழ்ச்சிச் திறத்தையும் ஓவியன் பிறகு நன்கறிந்தான்.
கையாள் அவ்வாறு செய்திராவிட்டால் ஓவியன் பாழ்பட்டு உயிரிழந்திருப்பானல்லவா? அவ்வாள் பலநாள் வேலையினாலாகிய ஓவியத்தை ஒரு விநாடியிற் கெடுத்துவிட்டது சிறந்த நன்மை யாகவே முடிந்ததைப் பாருங்கள்.
5. கப்பல் செலுத்திய பையன்
நூற்று முப்பதாண்டுகட்கு முன்பு நார்த்தம்பர்லண்ட் கரை யோரத்தில் ஒரு பிரான்சுக் கடபல் புகழி என்கிற ஓர் ஆங்கிலக் கப்பலைச் சிறைப் படுத்திக்கொண்டது. ஒரு கிழவனும் ஒரு பைய னுந் தவிர மற்ற வெள்ளையர்களை யெல்லாம் பிரான்சுக் கப்பல் கை திகளாகப் பிடித்துக் கொண்டுபோய்விட்டது. புகழியில் அவ் விரண்டு வெள்ளையர்களு ம் அதனை உடனிருந்து பிரான்சுத் துறைமுகஞ் சேர்க்க ஆறு பறங்கிக் காரர்களுமே இருந்தார்கள்.
புகழி புறப்பட்டதும் புயற்காற்று கடுமையாக அடித்து அதனை ஒரு உளைகுடா முனையில் தள்ளிக்கொண்டு போய் விட்டது. அவ்வளைகுடா வழியிற் கப்பலோட்டிக்கொண்டு போவதற்குக் கிழவனுக்குத் தெரியாது; அயலாராகிய பறங்கி களுக்குந் தெரியாது: சருக்கிருட்டும் மூடிக்கொண்டது; விளக்கு கள் காற்றில் அவிந்து போய்விட்டன; எண்ணெயுந் திரியும் இருக்குமிடந் தெரியவில்லை. ஆகையால் திசையறி கருவி என்ன பயன் தரும்!
பதின்மூன்று வயதேயுடைய ஆங்கிலப் பையன் அவ்வழியே கப்பலில் இரண்டொரு தடவை வந்திருககின்றான் அவன் அவ்வளை குடாவின அக்கம் பக்+ங்களில் உள்ளவைகளை யெல்லாம் ஏறக்குறைய அறிந்தருந்தான். தொலைவில் ஒரு கலங்கரை விளக் காளியைக் கண்டு முன் பழககத்தினால் அஃது இன்னவிடம் என்றறந்துகொண்டு கப்பலைத் தானே நடத்த முன் வந்தான்.
அவ்வளை குடாவில் ஆங்கிலச் சண்டைக் கப்பல் ஒன்று. இருக்குமிடம் அவனுக்குத் தெரியும் கப்பலை அவன் அவ்விடத்திற் கொண்டுடோய் நிறுததினான். நிறுத்தினவுடனே அவன், அக் கப்டல் வேலையாட்களைக் கூப்பிட்டு, “யான் ஆறு கைதிகளைக் கொண்டுவந்திருக்கின்றேன், அவர்களை இறக்கிக் கொண்டுபோக வாருங்கள்,’ எனறு று கூவினான். பறங்கிகள் ‘அயலார் கையில் அகப்பட்டுக் கொள்கின்றோமே’ என்று அச்சங்கொண்ட போதி லும் புடலடியனின்றும் தப்பித்துக்கொண்டு போய்விட வேறுவழி காணாமல் மன அமைதியோடிருந்து விட்டனர். சண்டைக் கபடற் காரர்சள் பையன கப்பலுக்கு வந்து பார்ததபோது அவன் அப் பறங்கிகளினுடைய போர்க் கருவிகளையெல்லாம் பிடுங்கி வைத்துக் கொண்டு அவர்களை முன்னமேயே கைதிகள் போலவே செய்து வைத்திருந்தான். ஆங்கிலக் கப்பல் ஆங்கிலரிடமே சோந்து விட்டது. தேவருடைமை தேவரிடமே வந்து சேர்ந்தது.
– நல்லொழுக்கப் பாடம், முதற் பதிப்பு: ஏப்ரல் 1951, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட், திருநெல்வேலி.
![]() |
சேலை சகதேவ முதலியார் (1874 - ஜூலை 28, 1953) தமிழ்ப் பாடநூல்களை எழுதிய முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார். திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பதிப்பாசிரியராகவும், செந்தமிழ்ச்செல்வி இதழின் ஆசிரியராகவும் இருந்த மணி திருநாவுக்கரசு கோரியதற்கு இணங்க பள்ளி மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடுகளான கழகத் தமிழ்ப்பாட வரிசையில் ஆறு நூல்களை சேலை சகதேவ முதலியார் செம்மை படுத்திக் கொடுத்தார். அந்நிறுவனம் வெளியிட்ட…மேலும் படிக்க... |