திருமணம்
கதையாசிரியர்: ரா.தணலன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 27, 2026
பார்வையிட்டோர்: 1,781
(1953ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
4. பாலு!
உலகத்திலே என்னுடைய வேலை ரொம்பக் கஷ்டமானது, ஏன் என்றால் நான் எப்பொழுதுமே உலகத்தைப் பற்றியே சிந்திக்கிறேன். என்னைப் பற்றி மாத்திரமே சிந்திப்பது என்பது என் வழக்கமல்ல. என் வாழ்க்கையிலேயே நானும் உலகமும் இரண்டறக் கலந்து போயிருக்கிறோம். பார்க்கிறவர்கள் என்ன நினைக்கிறார்கள், “இந்த பாலு இருக்கிறானே… அசாத்திய குஷிப் பேர்வழி. நாடோடி…. நாரதன்…. நல்ல விஷய ஞானம் உள்ளவன் என்று நினைக்கட்டும் நினைக்கட்டும். அவர்கள் அப்படி நினைத்துக் கொண்டி ருக்கிற வரை என க்கு லாபம்தான், உலகத்தின் கண் களை அந்த வழியில் திருப்பி விடவேண்டும் என்பது. தான் என் ஆசையும்-அப்பொழுதுதான் நம்ம காரியம். நடக்கும்.
என்னை மற்றவர்கள் நாரதன் என்கிறார்கள். என் காரியங்களும் அப்படித்தான் நடக்கின்றன. ஆனால் அப்படியிருப்பது எவ்வளவு கஷ்டம் என்பது இந்த முட்டாள்களுக்கு கொஞ்சமாவது புரிகிறதா?
பாருங்கள் ஒரு நாரதன் வேலை-மாமா உத்தி யோகத்தை இப்பொழுது செய்து முடித்திருக்கிறேன். முதலியார் பெண் கமலாவுக்கும் பிள்ளைவாள் பையன் ரகுநாதனுக்கும் ரெஜிஸ்டர் ஆபீசிலே கல்யாணம். நான் சாட்சியாக அவர்கள் திருமண வைபவம் இனிது நடந்தேறி முடிந்தது. ஆனால் அதே சமயத்தில் பிள்ளை வாளுக்கும் நான் நல்லவனாக இருக்கிறேன், யாரா லாவது இந்தக் காரியம் முடியுமா……. ? நீங்களே சொல்லுங்கள்.
கொஞ்ச நாளாகவே எனக்கு இந்த விஷயம் தெரி யும். ராம கிருஷ்ண பிள்ளைதான் ஒரு மாத காலமாக காய்ந்த எண்ணெயில் கடுகைப் போட்டாற்போல் பொரிந்து கொண்டிருக்கிறாரே? ஊரெல்லாம் தெரிந் திருக்கும் விஷயம் எனக்கு மட்டும் தெரியாமலா இருக் கும்? அப்படி இருக்க முடியாதே ? முதலில் எனக்குத் தெரிந்துதானே ஆகவேண்டும்? ராமகிருஷ்ணபிள்ளை புத்தியில்லாத மனிதன் ஆரம்பத்திலேயே என்னிடம் சொல்லியிருந்தால் விஷயம் இவ்வளவுதூரம் போய்விட விட்டிருப்பேனா? கடைசிநிமிஷத்தில் பையன் வீட்டை விட்டுப் போய்விட்டபிறகு….” பாலு நான் என்ன பண்ணட்டும்? என்று கதறுகிறார். ஒன்று இப்படி அல்லது அப்படிஆகட்டும் என்றுநினைத்துத் துணிந்து முதலியார் வீட்டுக்குப் போய் வைத்தேன். நமக்குத் தான் எங்கும் பயம் கிடையாதே?- கொஞ்ச காலமாக! இந்தப் பக்கத்தில் நம்மை நன்றாகத் தெரிந்தவர் யாரும் இல்லை இல்லா தவரை நல்லதுதான்! அங்கே என் னடா என்றால் அவ்வளவு படித்துப் பட்டம் பெற்று பி. ஏ. பாஸ் செய்த பையன் முதலியார் காலடியில் விழுந்து கிடக்கிறான்.
ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். இந்தப் பெண் கள் விஷயம் இருக்கிறது பாருங்கள். அது எங்கே யுமே இப்படித்தான். எவ்வளவு பெரிய மனிதனையும் எவ்வளவு சின்ன ஏன் சமயங்களில் ஒரு காசுக்கும் உதவாதவனிடம் கூட மண்டிபோட வைத்து விடும். உலகத்தில் அப்படித்தான் இருக்கிறது. இந்த உலகம் இருக்கிறதே இதுவும் என்னைப் போலத்தான். விசித் திரமானது. விபரீதமானது. கபடு சூது நிறைந்தது-! இதில் அப்பாவிகளுக்குக் காலம் இல்லை! எனக்கு நன் றாகத் தெரியும். என் அளவு உலகத்தை அறிந்து கொண்டவர்கள் கிடையாது தவிர எந்தச் சமயத் திலும் நம்ம புத்தி இருக்கிறதே.. ரொம்ப ரொம்பக் கூர்மையாகவே இருக்கும். இல்லாவிட்டால் சட்டென்று பிள்ளைவாளுக்காகப் பேசப் போனவன் ரகுவுக்குப் பரிந்து பேசி முதலியாரை ரிஜிஸ்டர் மணத்திற்குச் சம்மதிக்கிற அளவுக்குக் கொண்டு வந்திருப்பேனோ? நான் மட்டும் போன காரியத்தை மனதில் வைத்துக் கொண்டு முதலியார்வாள் நீங்கள் இப்படிச் செய்யக் கூடாது என்று சொல்லி இருந்தேனானால் இந்தக் கல்யாணம் நடந்திருக்குமா? ஒருக்காலும் நடந்திருக்காது.
சரி அங்கே அப்படி முடிந்தது. இங்கே இனிப் பிள்ளைவாளைச் சமாதானப் படுத்த வேண்டுமே……..? அந்தக் காரியத்தையும் வெற்றிகரமாகச் செய்து முடித்து விட்டேன்! சும்மாவா உலகம் எனக்கு நார தன் என்ற பெயர் கொடுத்திருக்கிறது. பாருங்கள். நேராகப் பிள்ளைவாளிடம் வந்தேன் வந்ததும் வராதது LDIT…….. “பிள்ளைவாள் நம்ம காரியம் ஸக்ஸெஸ்… நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாதீர்கள்”, என்றேன் பிள்ளை அப்படியே அசந்து போய் விட்டார். ரகுவே நேரில் வந்து ‘நான் அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளவில்லை’, என்று சொல்லியிருந்தால் கூட அவருக்கு அவ்வளவு திருப்தி ஏற்பட்டிருக்காது. “பாலு…….. நீங்கள் எடுத்த காரியம் எதுவுமே தோல்வி அடையாது. தெரியாமலா உங்களிடம் வந்தேன். காரி யத்தை எப்படி முடித்தீர்……..? என்று ஆவலுடன் கேட்டார். உடனே போட்டேனே ஒரு போடு….?’ உம்ம பையனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் கல் யாணத்தை முடித்து வைத்து விட்டேன்” என்று. பிள்ளை அப்படியே மூர்ச்சையாகியிருப்பார். “உம்ம நல்லதுக்காகத்தான். மாணிக்க முதலியாரை அடி யோடு ஒழித்து. இந்தப் பக்கத்தில் நீங்கள் தான் உண்மையான பெரிய மனிதர் என்பதை நிலைநாட்டத் தான்” என்றேன். பிள்ளை விழித்தார். “ஏன் ஐயா பயப்படுகிறீர்? உங்கள் பையன் என்ன? ஆண்பிள்ளை தானே? அவரைப் போலே நீங்களும் என்ன பெண்ணையா பெற்று வைத்திருக்கிறீர்கள்….பயப்பட….? இன்றைக்கு மாணிக்க முதலி ஜாதி விட்டு ஜாதி கல் யாணம் செய்து கொடுத்து விட்டான். நாளைக்கு ஊர் முழுவதும் அவனைக் காரித்துப்பாதா?….” என்றேன்.
“அதனால் எனக்கு என் மகன் கிடைப்பானா ஐயா..,.!” என்று அழுது வடிகிறார் பிள்ளை. உடனே கொடுத்தேன் அவருக்கு ஒரு டோஸ் அமிர்தாரிஷ்டம் அதுதான் நீர் பயப்படாதீர் ஐயா. உங்கள் மகனை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பது என் பொறுப்பு மாணிக்க முதலியும் அவன் மகளும் தொலைந்தார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பையன் இன்னும் நூறு கல்யாணம் செய்து கொள்ளலாம். ஒருத்தனைக் கட்டி விட்ட பிறகு அந்தப் பெண்ணை இனி யார் ஐயா ஏறெடுத்துப் பார்ப்பார்கள் என்றேன் பிள்ளைக்குக் கொஞ்சம் உயிர் வந்து விட்டது. என் னுடைய திட்டத்தை ஒன்றன் பின் ஒன்றாக நான் பிள்ளையிடம் எடுத்து வைத்தேன். நாங்கள் இரண்டு பேரும் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பிள்ளைவாளுக்கு உள்ளம் குளிர்ந்துவிட்டது. சின் னப்பிள்ளை போல் கல கலவென்று சிரித்துக்கொண்டு போனார். ஆமாம்….பாலு…. மிஸ்டர் பாலு….எப்பொழு தும் உலகத்தை மறந்துவிடாதே….ஆமாம். நீ உலகத் தின் மேல் கண்ணாக இருக்கிறவரை உலகம் உன்னை அசைத்துவிட முடியாது. இல்லையோ அது உன்னை விழுங்கி ஏப்பமிட்டு விடும். அது அவ்வளவு பொல் லாதது ஐயா…. நான் சும்மாவா சொல்கிறேன்.
5. கமலா!
உலகம் இவ்வளவு பொல்லாததாக இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. தனக்கு ஒரு தீங் கும் செய்யாதவர்களை அது ஏன் இவ்வளவு துன் புறுத்த வேண்டும்? மனிதர்கள் ஏன் இவ்வளவு விசித் திரமானவர்களாக இருக்கிறார்கள்? பார்க்கப்போ னால் அப்பா எல்லோருக்கும் நல்லவராக இருந்திருக் கிறாரே தவிர அவர் யாருக்குமே ஒரு தீங்கும் செய்த தில்லை. தமக்குத் தீமை செய்தவர்களுக்குக் கூட நன் மை செய்யும் இதயம் படைத்தவர் அப்பா. அப்படி யிருக்க….
இந்தச் சில நாட்களாக அப்பா படும் மனவேதனை….! அவருக்கு என்னால்தானே இத்தனை அவ மானமும் என்று நினைத்தால் என் இதயம் வெடித்து விடும்போல் இருக்கிறது. நான் பிறந்த அன்று முதல் இன்றுவரை அவ்வளவு அன்போடும் ஆசையோடும், என் மனம் விரும்பியதெல்லாம் தந்து வளர்த்து என் னைப் பெண்ணாக்கிய அவருக்கு நான் இப்படிப்பட்ட கைமாற செய்யவேண்டும் ? அவருக்கு இவ்வளவு துன்பத்திற்குக் காரணமாவேனென்று தெரிந்திருந்தால் அதைவிட நான் இறந்து போயிருக்கக் கூடாதா….?
அவரைப் பார்த்தவர்கள் பரிகசிக்கின்றனர். அவர் யார் யாருக்கு, பொன்னாலும் பொருளாலும் இன்னும் எல்லாவிதத்திலும் எல்லா உதவிகளும் செய் தாரோ….அவர்களே இன்று அவரை அலட்சியமாக அவமானகரமாகப் பேசுகின்றனர்.
ஊர்ப் பெரிய மனிதர்கள் கூட்டமாமே….அந்தக் கூட்டத்தில் அவர்கள் பத்துப்பேருக்கு முன்னால் அப் பாவைக் கேட்ட கேள்விகளும் பேசிய பேச்சுக்களும்…. அப்பப்பா…அப்பா எப்படித்தான் சகித்துக் கொண் டாரோ எனக்குத் தெரியவில்லை. அன்று முழுவதும் நான் அழுது கொண்டே கிடந்தேன். ஒருவர் கேட் டாராம், “ஏன் ஐயா ஊர்ப்பையன்களை எல்லாம் மயக்கி வசப்படுத்திக் கொள்ளத்தான் உன் பெண் களை ஆடவும் பாடவும் படிக்க வைத்தாயோ….? உன்னைப் போன்றவர்களை ஊருக்குள் வைத்திருந் தால் ஊர் என்ன ஆகிறதையா….?” என்று. இன் னொரு புண்ணியவான் ” இவனை நடுத் தெருவில் விட் டுக் கல்லால் அடித்துக் கொல்லவேண்டும் ” என்று யோசனை கூறினானாம். இந்த உலகத்தில் நல்ல மனி தர்களுக்குக் காலமில்லை போல் இருக்கிறது. ஏன்? அவ்வளவு தூரம் போவானேன் ? அப்பாவிடம் அவ் வளவு ஆட்டம் போட்டவர்கள் வேலைக்காரன் முனிய னிடம் ஏன் வாலாட்ட முடியவில்லை. அவனும்தான் கலப்பு மணம் செய்து கொண்டான். அவன் தான் அந்தப் ‘பெரிய மனிதர்களுக்கு’ சுடச் சுடப் பதில் கொடுத்தானாமே…. ? அப்பா ஒரு ஊமைப் பிராணி தன்னை அடித்தவர்களைக் கூடத் திருப்பி அடிக்கத் தெரியாதவர்.
முனியன் கதை கதையாக வந்து சொல்கிறான். இங்கே வண்ணான் வெளுப்பதில்லை. நாவிதன் சிரைக்க வருவதில்லை. வீட்டிலே வேலை செய்து கொண்டிருந்த வேலைக்காரி நின்று கொண்டாள். ஆனால் முனிய னிடம் அதே ஆட்கள் கூழைக் கும்பிடு போட்டுக் கொண்டு வேலை செய்கிறார்களாம். வண்ணான் முத லில் துணி எடுத்துக் கொண்டு போகமாட்டேன் என் றானாம். டேய்…. மரியாதையா எடுத்துட்டுப்போயிடு இல் லாட்டா… உன்னையும் உன் வீட்டையும் இந்த ஊர்க் காரனுங்க துணி அத்தனையையும் சேர்த்து வைத்துக் கொளுத்திப் போடுவேன்; என்று மிரட்டினானாம். அவன் பயந்து நடுங்கிக் கொண்டு துணி எடுத்துப் போகிறானாம். சொல்லுங்கள் எஜமான் உங்கள் வீட் டிலும் எடுத்துக் கொண்டு போகச் சொல்கிறேன் என் கிறான். அப்பாதான் வேண்டாம் என்று விட்டார். நம்முடைய வேலைகளை நாமே செய்து கொள்வதால் நமக்கு ஒரு அவமானமும் வந்து விடாது என்கிறார் அப்பா….
எனக்கு வீட்டு வேலை செய்வது கஷ்டமாகத்தான் இருக்கிறது. தண்ணீர் இழுக்கவும் துவைக்கவும் என் னால் முடியவே இல்லை. அவருக்கும் ரொம்பவும் வருத் தம், “கமலா…. என்னால் உனக்கும் அல்லவா துன்பம் வந்து விட்டது….” என்று கூறி வருந்துகிறார், நாம் வருத்தப்படுவதனால் எதையாவது மாற்றிவிட முடியு மா….? ஏன்தான் இப்படிப்பட்ட கல்யாணம் செய்து கொண்டோம் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் அவர் முகத்தைப் பார்த்தால் ?
நாங்கள் வேறு வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் தான்…. ஆனால் மனிதர்கள் தானே ? இன்னொரு ஜாதி யைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மனிதத் தன்மை யில் ஏதாவது வேற்றுமை வந்து விடப்போகிறதா….? எல்லோரும் ஒரு குலம் எல்லோரும் ஒரு இனம் என்ற இந்த மாபெரும் கருத்துப் பரவி வருகிற இந்த இருபதாம் நூற்றாண்டிலுமா மனிதர்கள் இவ்வளவு பிற் போக்கில் ஆழ்ந்து கிடக்கிறார்கள் ? நான் யோசித்துப் பார்க்கிறேன். நாம் மனதால்கூடத் தீமை செய்ய நினைக்காமல் இருக்கும் பொழுது இந்த மனிதர்கள் ஏன் தான் நம்மைப் பகைக்க வேண்டும்…..
இந்த மனிதர்கள் இந்த சமுதாயத்தின் உறுப் பினர்கள்தான். இந்த சமுதாயம் ஏதோ காலத்தில் வகுக்கப்பட்ட, ஆனால் இந்தக் காலத்திற்குப் பொருந் தாத சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு இயங்குகிறது. இந்த சட்ட திட்டங்களை ஆக்குவதும் அழிப்பதும் தன் கையில்தான் இருக்கிறது. இவை இருப்பதும் இல்லா மல் இருப்பதும் தன் தேவைகளை, தன் நலன்களைப் பொறுத்துத்தான் இருக்கிறது என்பவற்றை எல்லாம் மறந்து விட்டு, தலையைக் குனிந்து கொண்டு, எதையும் பாராமல் ஒன்றின் வழியிலேயே இன்னொன்று செல் லும் செம்மறியாட்டுக் கூட்டம்போல் இன்னும் அந்தப் பழய பாதையிலேயே போக விரும்புகிறது. ஆனால் சமுதாயத்தினால் அது முடியாது. அது விழிப்படைந் தே ஆகவேண்டும். தன் போக்குகளையும் எண்ணங் களையும் மாற்றிக்கொண்டே ஆகவேண்டும். அந்தக் காலம் விரைவில் வரும். வந்தே தான் தீரும் என்கிறார் அத்தான். அந்தக் காலம் வருவது என்று? அதுவரை நாங்கள் இப்படிப் படாத பாடு பட்டுக்கொண்டிருக்க வேண்டியதுதானா?
நாங்கள் எவ்வளவு ஆசையோடு ஒருவரை ஒருவர் நேசித்தோம் ? நாங்கள் இருவரும் ஒன்றாகும் நாள் என்று வருமோ…. என் று எத்தனை எத்தனை ஆவ லுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் ? ஐரேய ஒரு கணம் தனிமையில் சந்திப்பதாக எத்தனை பாடு பட்டோம்? இன்று அந்த இணையற்ற காதல் இன் பம் கை நிறையக் கிடைத்திருந்தும் கூட….ஒரு கணம் வேதனை இல்லாமல் முழு இன்பத்தில் மனம் செலுத்த முடிந்ததா? அவர் மனவேகனையோடு என்னை நோக்கி வருகிறார். நானும் துன்பத்தோடு அலுத்துப் போய் அவரை நோக்கிச் செல்கிறேன். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டு உட் கார்ந்திருக்கிறோம். எங்கள் துன்பத்தை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம் என்பதைத் தவிர வேறு ஒரு மகிழ்ச்சியும் எங்களுக்குக் கிடைக்கவில்லை….
“கமலூ…. எனக்குச் சீக்கிரம் வேலை கிடைத்து விடும். நாம் பட்டணத்திற்குப் போய்விடலாம். அங்கே இந்த சாதி சழக்குகள் ஒன்றும் கிடையாது. நாம் இன்பலோகத்தில் வாழலாம்.” என்று அவர் கூறுகிறார் ஒவ்வொரு நாளும் தபால்காரனை எதிர் பார்த்துத் தவம் கிடக்கிறார். தனக்கு வரும் கடிதங்களை எங்கே பிறர் மறைத்துவிடுகிறார்களோ என்று கூட அவருக் குப் பயம்…? நாங்கள் எங்காவது போய்விடலாம். ஆனால் அப்பா….
6. மாணிக்க முதலியார்
பிறரைத் துன்புறுத்திப் பார்த்துத் தாம் இன்பம் அடைகிறவர்களும் இருக்கிறார்களே. அவர்கள் இதயம் என்ன வஸ்துவால் தான் செய்யப்பட் டிருக்குமோ? எனக்குப் புரியவில்லை ! வாழ்க்கை எவ்வளவு துன்ப நிறைந்ததாக இருக்கிறது. உலகத்தில் துன்பத்தின் சுவை அறியாதவன் யாராவது இருக்கிறானா…? தனக். குத் துன்பம் வந்துறும் போது துடிதுடிக்கும் மனிதன் பிறரும் துன்பத்தில் அப்படித்தானே துடிப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டாமா? யோசித் துப் பார்க்கப்போனால் ஓவ்வொருவரும் தன்னால் முடிந்த வரை பிறருடைய துன்பத்தைக் குறைக்க முயல்வதுதானே மனிதத்தன்மை. அந்தத்தூய மனப்பான்மை மாத்திரம் மனிதர்க்கு வரமுடியு மானால்….? உலகம் எவ்வளவு இன்பம் நிறைந்ததாக இருக்கும்….?
மகான்கள் என்று சொல்லப்படுகிற ஒவ்வொரு வரும் மனிதரை இந்த லட்சியத்தை நோக்கி இழுத்து வர முயற்சி செய்திருக்கிறார்கள். அறிஞர்கள் ஒவ் வொருவரும் மனிதர்க்கு இந்தச்சிறந்த உண்மையையே எடுத்துக் கூறியிருக்கிறார்கள். ஆனால்…. இவ்வளவு காலமாகியும் மனிதனால் அந்த நிலைமைக்கு வந்து சேர முடியவில்லை. ஆமாம் சமுதாய அமைப்பிலேயே எதோ தவறு இருக்கிறது. மனித இனத்தின் முன் னேற்றத்தை தடுத்து நிறுத்தும் நச்சரவுகள் மனித இனத்திற்குள்ளேயே எங்கோ மறைந்து கிடக்கின்றன.
இந்தக் கொஞ்ச நாட்களாக இப்படி நேரம் போவது தெரியாமல் சிந்தித்துக்கொண்டே இருப்பது என் தொழிலாகி விட்டது, சிந்திக்கிறேன். சிந்தித் துக்கொண்டே இருக்கிறேன்….மூளைகளைப்படைகிற வரையிலும்! கவலையும் துன்பமும் மனிதனை வந்து சூழ்ந்து கொள்கிறபொழுதுதான் மனிதன் சிந்தனா வாதியாகிறான் போலும்.
ஆமாம்… மனித இனத்தின் துயரங்களையும் குறை பாடுகளையும் பார்த்து மனம் புழுங்கி ஓயாமல் சிந்தித் துச் சிந்தித்தான் கிறிஸ்துவும், புத்தரும், காந்தியும் போன்ற ஞானிகள் எல்லோரும் உன்னதமான தத்து வங்களைக் கண்டு பிடித்தார்கள். வேதனைதான் எல் லாத் தத்துவங்களுக்குமே தாய்மைப் பாத்திரத்தைத் தாங்கியிருக்கிறது. ஒரு குழந்தையின் மலர்ந்த மதி வதனத்தைக் காணும் முன் தாயின் முகம் வேதனை யால் சுருங்கி மெலிகிற தல்லவா….? உலகத்தில் காணும் எல்லா உன்னதப் பொருள்களுமே வேதனை வாயிலாகப் பிறந்தவைதான். இப்படி எல்லாம் நினைக்கும்பொழுது துன்பம் வாழ்க….துயரம் வாழ்க என்று சொல்லத்தோன்றுகிறது. ஆனால்…
நாம் தத்துவங்களை உற்பத்திசெய்து கொண்டே இருக்க இருக்கத்தான் நமது வாழ்வும் வளமும் சுருங்கி வறுமைப்படுகுழி நோக்கி முன்னேறிக் கொண்டிருக் கிறோம். வறுமையற்ற வாழ்வில் மனித இனம் தன் வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் வழியில் சிந்தனை யைச் செலுத்துமானால்….
சிந்தித்துச் சிந்தித்து மூளை குழம்புகிறது. எனக் குப் பைத்தியம் பிடிக்க வேண்டியது ஒன்றுதான் பாக்கி ! ஆமாம் எனக்குப் பைத்தியம் பிடித்து வேட்டி யைக் கிழித்துக்கொண்டு திரிவேனானால் உள்ளம் மகிழ்ந்து பார்த்துச் சிரிக்கப்பலபேர் இருக்கிறார்கள். எனக்கு ஏன் இன்னும் பைத்தியம் பிடிக்கவில்லை என்பதைப்பற்றி அவர்கள் யோசனை செய்துகொண் டிருக்கலாம். ஏன்…பைத்தியம் பிடிக்க வேண்டிய நிலையில் தானே இருக்கிறேன் நான்.
நான் பாடுபட்டுச்சேர்த்து வைத்த பணம் எல்லாம். போனதைப் பற்றிக்கூடக்கவலை இல்லை. ஆனால், என்னிடம் ஆயிரமும் இரண்டாயிரமுமாகக் கொடுத்து வைத்திருந்தார்களே…. ஏழை விவசாயிகள்…. அவர்க ளுடைய பணம் எல்லாமும் அல்லவாபோய் விட்டது. என்னுடைய குழந்தைகளின் ஆபரணங்கள் துணி மணிகள் எல்லாம் களவு போனதைப்பற்றிக் கவலை இல்லை. ஆனால், அந்த ஏழை விதவை தன் மகளின் கல்யாணத்தின்போது கொடுத்தால்போதும் என்று கொடுத்து வைத்திருந்த நகை நட்டு முழுவதும் அல்லவாபோய் விட்டது.
என்னைக்கொள்ளை அடிக்கத் திருடர்கள் எங் கிருந்து வந்து சேர்ந்தார்கள். அதுவும் என் வீட்டில் மூலை முடுக்குகளில் வைத்திருந்த விலை உயர்ந்த பொருள்கள் எல்லாம் வைத்தவன் எடுத்ததுபோல் அப்படிப் பொறுக்கி எடுத்துக்கொண்டுபோக அவர் களுக்கு எப்படித் தெரிந்தது. உள்ளறிந்த கள்ளன் என்பார்களே…அப்படிப்பட்ட உள்ளறிந்த கள்ளன் எனக்கு எங்கிருந்து வந்து முளைத்தான்? நான் யாருக்கு என்ன துரோகம் செய்தேன் ? போலீஸ் விசாரணையின்போது “உங்களுக்கு யார்மேலாவது சந்தேகம் இருக்கிறதா சொல்லுங்கள்….சும்மா யார் பேரிலாவது சொல்லுங்கள்…” என்று திருப்பித் திருப்பிக் கேட்டார் அந்த சப் இன்ஸ்பெக்டர். பாலு மெதுவாக என் காதில் வந்து சும்மா ராமகிருஷ்ண பிள்ளைமேல் சொல்லுங்கள்…. அவன்தான் கொலை காரன். ஆள் வைத்துச் செய்திருப்பான், என்று சொன்னான். ஆனால், என்மனம் இசையவில்லை. நம்மிடம் அணுவளவும் ஆதாரம் இல்லாமல் இருக்க அபாண்டமாக ? ஒருவர்மேல் பழி சுமத்துவதா….?
அன்று ரகு பட்டணத்தில் இருந்து வந்திருக் கிறான், நல்லகாலம் அவனுக்குப் பட்டணத்தில் ஏதோ பாங்கில் நல்ல உத்தியோகம் கிடைத்து விட்டது. வீடும் சௌகரியமாகக் கிடைத்திருக்கிறது. கமலாவை அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்று வந் திருந்தான். எங்கே ரொம்ப நேரம் வரை பேசிக் கொண்டிருந்து விட்டு கவனித்துக் கதவைத் தாழ் இடாமல் படுத்துக்கொண்டார்களோ….ஆனால், இதற்கு முன்னால் இந்த வீட்டில் இப்படி எத்தனையோ தடவை கதவை அடைக்காமல் கூடப்படுத்துக் கொண்ட தில்லையா….? என் போதாத காலம்….! அதைத் தவிரச் சொல்லிக்கொள்ள வேறு என்னதான் இருக்கிறது.
கமலாபோய் விட்டாள். எது எங்கிருக்க வேண்டுமே அது அங்கிருப்பது தானே சிறப்பு….? அதன் வாழ்வால் அங்குதானே பயனும் ஏற்படுகிறது. முத்தைப் பெறுவதற்காகத்தன் உயிரையே தியாகம் செய்யும் சிப்பி அதைத் தன்னிடமே வைத்துக் கொள்ள முடிகிறதா…? அப்படி வைத்துக் கொண் டாலும் அதற்கு ஏதேனும் பயன் உண்டா…? முத்துத் தான் சிறப்பை அடையமுடியமா…? கமலா…தன் ஆடல் பாடல்களால், அருவிச் சிரிப்பொலியால் இந்த வீட்டை நிறைத்துக் கொண்டிருந்தாள். என் உள் ளத்தையும் நிறைத்துக் கொண்டிருந்தாள். இப் பொழுது அவள் தன் வாழ்வை நிறைவுறச் செய்து கொள்வதற்காகத் தன் கணவன் வீடு சென்றிருக் கிறாள். இதில் நான் வறுத்தப்பட என்ன இருக்கிறது? நாளைக்கு விமலாவும் அப்படித்தான்! தமக் கையைப் பிரிந்தபின் பாவம் அவளுக்குத் தான் ரொம் பக் கஷ்டமாக இருக்கிறது.
நான் என்னுடைய கஷ்டத்தைப் பற்றியே எண் ணிக் கொண் டிருக்கிறேன். என்னிடம் பணம் கொடுத்து வைத்திருந்தவர்கள்…. அவர்கள் மனம் என்ன பாடுபட்டுக் கொண்டிருக்கிறதோ…..? அப்பா …. என்னால் சிந்திக்க முடியவில்லை. துயரம் இதயத்தை அழுத்துகிறது….! ஆமாம். இன்னும் கொஞ்ச நாளில் எனக்குப் பைத்தியம் பிடிக்கவேண்டியதுதான் பாக்கி.
– தொடரும்…
– திருமணம் (நாவல்), முதல் பதிப்பு: பிப்ரவரி 1953, சத்தி பதிப்பகம், சென்னை.