தன் குழந்தையைக் கொன்று சக்களத்தி மேல் பழி போட்டது
கதையாசிரியர்: மரியாதைராமன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 18, 2025
பார்வையிட்டோர்: 1,194
(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தன் குமாரனுக்கு மரியாதைராமனென்கிற பேரும் நியாயாதிபதி உத்தியோகமும் கிடைத்த சமாசாரத்தை அவன் தகப்பன் கேள்விப்பட்டு அவனிடத்திற்கு வந்து ‘ஓகோ பிள்ளாய் என்ன காரியம் செய்தாய். இப்படி மதி மோசம் போகலாமா? நியாய சூச்சம் அறிகிறது தேவர் களுக்கும் எளிதல்லவே. சற்றே பிசகினால் அதிக பாவம் விளையுமே. நீ இந்த நியாயாதிபதியத்தை விட்டு விடு” என்று சொன்னான்.
அதைக்கேட்டு மரியாதைராமன், “ஓய் என் பிதாவே! கோபம் செய்ய வேண்டாம். கடவுளானவர் எப்படிப்பட்ட நியாய சூட்சமத்தையும் கண்டுபிடிக்கத்தக்க புத்தியைக் கொடுத்து அதிலே எவ்வளவும் குற்றம் வராமல் என்னைக் காப்பாற்றுவார். தானாக வந்த சீதேவியைக் காலாலுதைத்துத் தள்ளுவது போல், உலகத்தை எல்லாம் ஆளும் அரசனாலே கிடைத்த இந்த நியாயாதிபதித் (ஸ்)தானத்தை விட்டுவிடச் சொல்லாதிருக்கும்படி உம்மைப் பிரார்த்திக்கிறேன்” என்றான்.
இந்தச் சொற்களைக் கேட்டு மறுத்துச் சொல்லுதற்கு இடமில்லாமல் “உன்னிஷ்டப்படி செய்”யென்று சொல்லி விட்டுப் போயின பின்பு நான் இனி இவனுடன் சகவாசம் செய்வேனேயானால் இவனுக்கு வருகிற குற்றத்துக்கும் பழிக்கும் ஆளாக வேண்டும். ஆகையால் தேசாந்திரம் போகிறதே உத்தமம் என்று நினைத்துக்கொண்டு தன் மகனுடனே சொல்லாமல் பிரயாணம் செய்துகொண்டு போகிறபோது, அன்று இராத்திரி ஒரு ஊரிலே ஒரு இராத்திரி ஒரு வீட்டிலே இறங்கினான்.
அந்த வீட்டுக்காரன் அன்றைக்கு வெளியிலே போயிருந்தான். அவன் மனைவிமார்கள் இரண்டுபேர் மாத்திரம் இருந்தார்கள், மூத்தவள் நித்திரைபோய் விட்டாள். தலைக்கடைத் திண்ணையில் படுத்திருந்த மரியாதைராமன் தகப்பன் தன்பிள்ளைக்குச் சம்புவித்த தைக் குறித்துத் தூக்கம் பிடியாமல் எண்ணமிட்டுக் கொண்டு இருந்தான்.
ஆனால் பாதி இராத்திரியிலே அவனையுந் தன் சக்களத்தியையும் தூங்கிவிட்டாரென்று நினைத்து இளையவள் இதுவே நல்ல தருணமென்று தன் சோர நாயகனை உள்ளே அழைத்துக்கொண்டு போய்ச் சரசத்துடனே இருக்கிற சமயத்திலே அதற்கு விரோதமாகத் தன் குழந்தை முழித்துக்கொண்டு வீரிட்டு அழுத வாக்கியத்தைக் கண்டு கழுத்தைப் பிசக்கிக் கொன்று, அதை மூத்தவள் பக்கத்திலே கிடத்திவிட்டுத் தன் இஷ்டத்தை நிறைவேற்றிக்கொண்டு விடியாற்) காலத்திலே கள்ளப் புருசனை அனுப்பிவிட்டு ஊரெல்லாம் அறியும் படியாகத் தன்னையைச் (தன் பிள்ளையை சக்களத்தி பொறாமையினாலே கொன்றாளென்று பழிபோட்டுக் கூவியழுதுகொண்டு மரியாதை ராமனிடத்திலே பிராது செய்யப் போனாள்.
இதுகளையெல்லாம் தப்பாமல் பார்த்துக்கொண்டிருந்த மரியாதைராமன் தகப்பன் தனக்குள்ளே ஆச்சரியப்பட்டு “நல்லது. இந்த வழக்கைக் குறித்து என்மகன் சரியாகத் தீர்ப்புச் செய்வானேயாகில் மற்ற வழக்குகளிலும் பிசகமாட்டானென்று நம்புவேன்’ என் று மறுவேசங் கொண்டு நியாயஸ்தலத்துக்குச் சமீபத்தில் வந்திருந்தான்.
மரியாதைராமன் அந்த விபச்சாரி செய்த பிராதைக் கேட்டுச் சேவகரைக்கேட்டு மூத்தவளை அழைப்பித்து, ‘நீயேன் இப்படிப்பட்ட சிசுஹத்தி செய்தாய்?” என் று கேட்டான். இறைவனே! நரகத்துக்கு ஆளாகத்தக்க இந்த மகாபாதகத்தைக் கடவுளறிய நான் செய்ததில்லை” என்றாள்.
அந்தச் சொல்லைக் கேட்ட மாத்திரத்திலே இளைய வளோ, “ ஓப் நியாயாதிபதியே! இவள் மிகவும் மோசக்காரி, கொலைசெய்தாளென்பதில் நீர் எவ்வளவும் சந்தேகப்படா தேயும்” என்றாள். இவ்விருவர் சொல்லையுங் கேட்டுச் சந்தேகப்பட்டு ‘இதற்குச் சாட்சி உண்டா? ” என்று கேட்டான். அதற்கு இளையவள், “என் கண்களேயல் லாமல் வேறே சாட்சியில்லை” என்றாள்.
நியாயாதிபதி தேவதைக்குத் தியானித்துக்கொண்டு உண்மையை வெளிப்படுத்தத் தக்க ஒரு யோசனை தனக் குள்ளே செய்து அவ்விரண்டு பெண்டுகளையும் பார்த்து, “உங்களுக்கு வேறு சாட்சியில்லாமையால் புடவையை அவிழ்த்துவிட்டு நிர்வாணமாக இந்த மகாசபையை மூன்று சுற்று வந்து சத்தியம் செயிங்கோள்” என்றான்.
இந்தச் சொல்லைக் கேட்ட மாத்திரத்திலே சின்னவள் அப்படியே செய்யத் துணிந்தாள். பெரியவளோவென்றால் “என் உயிர் போனாலும் போகட்டும். இப்படிப்பட்ட மானக்கேடான காரியத்துக்கு உட்படமாட்டேன்” என்று தனக்குள்ளே நிச்சயித்துக்கொண்டு, “ஓய்! நியாயதி பதியே! அந்தக் குழந்தையைக் கொன்றவள் நானே ! என்னை அதற்குத் தகுதியான தெண்டினை செய்யாமல் இப்படிப்பட்ட மானபங்கம் செய்யாதே!” என்றாள்.
நியாயாதிபதி, இவ்விருவர் சொல்லையுங் கண்டு “இளையவள் முழுமோசக்காரி” என்றறிந்து, சில அடிகள் அவளை அடித்து அவள் வாயைக் கொண்டே நிஜத்தை வெளிப்படுத்தி அவளைத் தூக்கில் போட உத்தரவு கொடுத்தான். இளையவளுக்குத் தானொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைக்கும் என்கிற பழமொழிப்படி நேரிட்டது.
இதுகளை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மரிபாதை ராமன் தகப்பன் அளவற்ற சந்தோஷத்தை அடைந்து புத்திரனிடத்துக்குப்போய், “மரியாதைராமன் என்கிற பேரும் இந்தத் தொழிலும் உனக்கொக்கும்; இப்படிப்பட்ட புத்தியுஷ்த்திகளை உனக்குக் கொடுத்த கடவுளுக்கு நான் வந்தனம் செய்கிறேன். நீ தீர்க்காயுசு உள்ளவனாகச் சுகத்தோடே வாழ்!” என்று ஆசிர்வாதஞ் செய்து தன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான்.
– மரியாதைராமன் கதைகள் (ஆய்வுப் பதிப்பு), இரண்டாம் பதிப்பு: மே 2001, பதிப்பாசிரியர்: முனைவர் ய.மணிகண்டன், சரசுவதி மகால் நூலகம் வெளியீடு, தஞ்சாவூர்.
| பதிப்பாசிரியர் முகவுரை (மரியாதைராமன் கதைகள் - பதிப்பியல் நோக்கில சில குறிப்புகள்) மரியாதைராமன் கதைகள் இப்பொழுது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. இவ்வேளையில், முதற்பதிப்பு வெளிவந்த காலத்திற்குப்பின் இக்கதைகள் தொடர்பாக என்னால் தொகுக்கப்பெற்ற சில அரிய குறிப்புகளை இங்குப் பதிவுசெய்கிறேன். அவற்றோடு இப்பதிப்பினைக் குறித்தும், மரியாதைராமன் கதைப்பதிப்புகள் குறித்தும் குறிப்பிடத் தக்க செய்திகளையும் இங்கே அளிக்கின்றேன். இச்செய்திகள் இக்கதையிலக்கிய ஆர்வலர்க்கும் அன்பர்களுக்கும் பயன்மிக நல்கும் பான்மையனவாகும். புகழ்மிகு கதையிலக்கியங்கள் : விக்கிரமாதித்தன்…மேலும் படிக்க... |