சம்பளம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 4, 2015
பார்வையிட்டோர்: 8,401 
 
 

“வெற்றி!.நமக்கு நல்ல கதை கிடைத்து விட்டது!இனி பட்ஜெட்டைப்பற்றி கவலையே வேண்டாம்!.”இந்தப் படம் கதை,வசனம்,நடிப்பு மூன்றுக்கும் தேசிய விருது வாங்கி விடும்!….வசூலும் எப்படியும் எழுபது ‘சி’யைத் தொடும்!…..””

“எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்?……”

“அந்தக் கதை பத்திரிகையில் தொடராக வந்தபொழுதே பெண்கள் விரும்பி படித்த கதை! நெ. 1.டைரக்டர்,நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்திருக்கிறேன்.கதை அப்படியே திரையில் வந்து விடும்!..

சம்பள விஷயத்தையும் பேசி விட்டேன்!….ஹீரோவுக்கு 10 சி, ஹீரோயினுக்கு 1 சி, டைரக்டருக்கு 2 சி, காமெடிக்கு 1 சி, ஒரு குத்துப் பாட்டுக்கு டான்ஸ் ஆடும் கவர்ச்சி நடிகைக்கு 50 லட்சம்..”

“சம்பளம் எல்லாம் கொஞ்சம் அதிகமாகத் தெரிகிறதே?…..”.”

“என்ன செய்வது?….இப்ப அவங்களுக்குத்தானே மார்கெட் இருக்கு….அது மட்டுமில்லே வெற்றி…….இந்தக் கதையை அப்படியே திரைக்கு கொண்டு வர அவங்க தான் தேவைப் படறாங்க!….நாம எதிர்பார்க்கிற வசூல் ……அப்பத் தான் கிடைக்கும்!..”.”

“உனக்கு நம்பிக்கை இருந்தா எனக்கும் சரி.!…”

தமிழில் பல வெள்ளி விழாப் படங்களைத் தந்த வெற்றி வேந்தன் பிக்சர்ஸ் அதிபர்கள் வெற்றி வேலும்,முல்லை வேந்தனும் பேசி ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள்.

“முல்லை!…..கேட்க மறந்து விட்டேன்!…….கதை வசனம் யாரு?…..””

“பத்திரிகையில் தொடர் கதை எழுதிய அதே எழுத்தாளர் தான்! அவருக்கும் சம்பளம்பேசி எக்ரிமெண்டே போட்டு விட்டேன்!.”.”

“அப்படியா?……எவ்வளவு?…”

“இருபதாயிரம்!.”..”

“அவரோட கதையை நம்பித் தான், நாம 50 கோடி இன்வெஸ்ட் பண்ணப் போறோம்! அவருக்கு சம்பளம் ரொம்பக் குறைவா இருக்கே?….””

முல்லை வேந்தன் சிரித்துக் கொண்டே சொன்னார்.

“நம்ம பீல்டிலே எழுத்தாளர்கள் தான் ரொம்ப நல்ல மாதிரி!.அவங்கிட்டே போய் இலட்சக்கணக்கில் நாம பணத்தைக் கொடுத்தா அவங்களும் கெட்டுப் போயிடுவாங்க!…”..”

“ஆமா…ஆமா….நாம ஏன் அந்தப் பாவத்தை செய்ய வேண்டும்?…..””

– பொதிகைச் சாரல் ஜூலை 2013

துடுப்பதி ரகுநாதன் கடந்த 60 ஆண்டுகளில் கதை, கட்டுரை, நாவல்கள், தொடர்கதைகள் என 600-க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியிருக்கும் துடுப்பதி ரகுநாதன், 80 வயதைக் கடந்த நிலையில் இன்னும் சுறுசுறுப்பாய் எழுதிக்கொண்டிருக்கிறார். தற்போது கோவை நஞ்சுண்டாபுரம் சாலை நேதாஜி நகரில் வசித்து வரும் துடுப்பதி ரகுநாதனை சந்தித்தோம். “பூர்வீகம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள துடுப்பதி. பெற்றோர் செல்லப்பன்-செல்லம்மாள். ஜவுளி வியாபாரம். பெருந்துறை உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி முடித்துவிட்டு, கோவையில் தங்கி கூட்டுறவில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *