குரங்கும் முதலையும்
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 25, 2026
பார்வையிட்டோர்: 1,665
நீர்நிலை ஒன்றின் அருகே இருந்த குரங்கும் அந்த நீர்நிலையில் வசித்த முதலையும் நெடுநாட்களாக நண்பர்களாக இருந்து வந்தனர்.
மரத்தில் வசித்த சில பறவைகள், முதலையுடன் நட்பு வேண்டாம் என்று குரங்குக்கு அறிவுரை கூறின.
குரங்கு ‘முதலை நல்ல நண்பன்’ என்று அவர்களிடம் கூறி வந்தது.
ஒரு நாள், முதலை , ‘என்னுடைய மனைவி முதலையிடம் நமது நட்பு பற்றி சொன்னேன். உன்னை வீட்டிற்கு அழைத்து வரச் சொல்லி இருக்கிறாள் வா என் வீட்டுக்கு’ என்று குரங்கை அழைத்தது.
குரங்கும் முதலையின் மீது அமர்ந்து கொள்ள முதலை மெதுவாக நகர தொடங்கியது. முதலை பேசியது ‘என் மனைவி சொன்னாள் – குரங்கின் ஈரல் மிகவும் நன்றாக இருக்கும்’
குரங்குக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ‘என்ன நண்பா நான் கரையில் இருக்கும் போதே சொல்லி இருக்கலாமே.. நான் ஈரலை மரத்தில் காயப்போட்டு வந்திருக்கிறேன். போய் எடுத்து வருகிறேன்’ என்று கூறி முதலையின் முதுகில் இருந்து கரைக்குத் தாவி மரத்தில் ஏறி உச்சியில் சென்று அமர்ந்து கொண்டது.
நீதி – ஆபத்தை உணரும் நேரத்தில் அறிவைப் பயன்படுத்தி அதிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும்.
(நாட்டுப்புறக் கதைகளிலிருந்து…)
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நல்ல மனம் வாழ்க!
வளர்கவி
June 20, 2026
கருங்கல்லும் கூழாங்கல்லும்!
வளர்கவி
June 17, 2026
அறிவு அற்றங் காக்கும் கருவி!
வளர்கவி
May 31, 2026
