கிராமராஜ்ஜியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 8, 2025
பார்வையிட்டோர்: 50 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“நீங்கள் தானய்யா வரவேண்டும். ” 

“அது ஏனய்யா? எத்தனையோ சிறப்பான தலைவர்கள் இருக் கிறார்கள். அதை விட்டு விட்டு ஒதுங்கி வாழும் என்னைப் பிடித் துக் கொண்டு” என்றேன். 

“அதென்னமோ எனக்குத் தெரியாது. அம்மா சொன் னாங்க. இந்த வருசம் குடியரசு விழாவிலே கொடி ஏத்தரது குருவய்யாதான் என்று திட்ட வட்டமாகச் சொல்லிட்டாங்க! எனக்கு அதான் தெரியும்”. 

“அது யாரய்யா அந்த அம்மா ? என் வாழ்வில் எனக்கு உத்தரவு இட ஒரு அம்மா ?” 

“அது தானுங்க சோமரசம் பேட்டை அம்மா. அதோட அந்த ஊர் சனங்க எல்லாமே ஒரு கால்லே நின்னு ஒங்களெக் கூட்டியாரச் சொல்லுராக. நீங்க வந்து தான் ஆகணும்” என்று அன்புக் கட்டளையிட்டார் அவர். 

என்றுமே அன்புக்குக் கட்டுப்படும் நான் ஒப்புக்கொண்டேன் திருச்சிக்கு மேற்கே ஐந்து கல் தொலைவிலுள்ள சோமரச பேட்டையில் குடியரசு தின விழாவுக்கு வந்து கொடியேற் ஒப்புக் கொண்டு விட்டேன்; இன்று புறப்பட்டும் விட்டேன் இப்போது அங்கெல்லாம் டவுன் பஸ் போய்க் கொண்டிருக்கிறது மெயின் கார்டு கேட்டுக்கு வந்து விட்டேன். 

எட்டாம் நெம்பர் பஸ் வந்த பாடாக இல்லை. இன்று மட்டு என்னுள் ஒரு இனம் தெரியாத குதூகலம். ஏன் என்று எனக்கு தெரியவில்லை.ஒரு வேளை இளமை நாட்களில் வாழ்ந்து பழகிய ருக்குப் போவது காரணமாக இருக்கலாம். இத்தனை ஆண்டு களாகத் திருச்சிக்கு எத்தனையோ முறை வந்திருந்தாலும் கூட மூன்று கல் தொலைவிலுள்ள உய்யக் கொண்டான் திருமலைக்கு ன் அதன் பின்னர் வந்தவன் அல்லன். இன்று தான் போகிறேன். 

கால் நடையாக மூன்று மைல்கள் நடந்து வந்து திருச்சிராப் பள்ளியில் படித்த காலம். அதற்கும் முன்னர் சோமரசம் பேட்டையிலிருந்து இரண்டு மைல்கள் வந்து உய்யக் கொண்டான் திருமயிலையில் படித்த பருவம்; எல்லாம் சேர்ந்து கொண்டு மனதைக் கிசு கிசு மூட்டிக் கொண்டிருந்தது. நெஞ்சம் கிளு கிளுத்தது. 

ஆமாம்! நான் ஆறாவது படிக்கும் போது தான் எங்கள் குடும்பம் அழகிய கிராமமான சோமரசம் பேட்டைக்குக் குடி பெயர்ந்தது. அப்போது அவ்வூரின் எலிமெண்டரி ஸ்கூலில் ஐந்தாவது வரையில் தான் இருந்தது. ஆறாவது படிக்க உய்யக் கொண்டான் திருமலைக்குத் தான் போக வேண்டும். 

அங்கே ஒரு ஹையர் எலிமெண்டரி ஸ்கூல் இருந்தது, எட்டாவது வகுப்பு வரையில் அங்கே உண்டு. நான் ஆறாவது வகுப்பில் சேர்க்கப் பட்டேன். தினமும் நடந்து வந்து படிப்பேன். அப்போது அந்தப் பள்ளிக்கூடத்தின் தலைமையாசிரியராக இருந்தவர் ஒரு நல்ல மனிதர். இலட்சுமணன் என்பவர். முன்னேற்றுக் கருத்துக்களைக் கொண்ட ஒரு சிறந்த ஆசிரியர். இன்று நான் அரசியலில் ஒரு வல்ல எழுத்தாளனாகவும், பேச்சாளனாகவும் ஆவதற்கு அவரே அஸ்திவாரம் இட்டார். மற்றும் கலை, கல்வி, இசை ஆகியவற்றிற்கும் என்னை ஊக்கியவர் அவரே. 

பள்ளிக்கூட நாடகங்களில் என்னை நடிக்க வைத்தார். தக்கிளி பிடித்து நூற்க வைத்தார். ராட்டையில் நூல் நூற்க வைத்தார். அந்த நாட்களில் ஆங்கில அரசு இருந்ததால் இவை ள்ளிப் பாடத் திட்டத்தில் இல்லாவிட்டாலும் கூட அவர் வுனமாக இவற்றை மாணவர் மனத்தில் பதிய வைத்தார். பாடங்களின் இடையிடையே கதைகளைப் போல இந்திய ஈட்டின் பெருமைகள் பற்றிப் போதித்தார்; அதன் பயனாகத் கான் நான் அரசியலில் பங்கு கொண்டேன். 

அந்தச் சமயத்தில் ஒரு தடவை மகாத்மா காந்தியவர்கள் தமிழ் நாட்டுக்கு விஜயம் செய்திருந்தார்கள். பிஹார் பூகம்பத் துக்கு உதவி செய்ய நிதி கேட்டு வந்திருந்ததாக ஞாபகம். ருச்சிக்கும் வந்திருந்தார்கள். அந்த நேரத்தில் அவருக்கு ஒரு தர் மாலை அணிவித்து ஒரு சிறு தொகை அளிக்கவும் எங்கள் தலைமையாசிரியர் ஏற்பாடு செய்திருந்தார். அப்படி மாலை அணி வித்து தொகை அளிக்க ஒரு சிறுமியை சித்தம் செய்திருந்தார். அவள் பெயர் மறந்து விட்டது. ரோஜா ரோஜா என்று அழைப் போம். என்னுடன் கூட சோமரசம் பேட்டையிலிருந்து உடன் நடந்து வருபவள் தான். 

என்ன காரணத்தாலோ அன்று அந்தச் சிறுமி காந்திஜிக்கு மாலை அணிவிக்கவில்லை. அதற்குப் பதில் நான் மாலை அணிவித் தேன். சிறு தொகை கொண்ட முடிச்சை அண்ணல் கையில் என் பிஞ்சுக் கைகளால் கொடுத்தேன். அந்த சந்திப்பின் காரணமோ என்னமோ நானும் அரசியலில் பங்கு கொண்டு அதிகமாக ஈடுபட்டேன். தீவிரமாக என்னை நானே முன்னேற் றிக் கொண்டேன். 1942ல் சிறை சென்றேன். தேர்தலில் நின்றேன். வென்றேன். பதவி வகித்தேன். என்னென்னவோ; அதெல்லாம் இப்போது எதற்கு ? இன்னம் இன்றும் என் தேசிய வாழ்வு தொடர்கிறது. கொடி ஏற்றப் போகிறேன். 

இளமை நினைவுகள் வந்து விட்டால் எத்தனை வயதிலாக இருந்தாலும் தன்னுள் ஒரு துடிப்பு வந்து விடுகிறது. இன்று நான் இளைஞனாக என்னை எண்ணிக் கொண்டேன். அப்படி யில்லாவிட்டால் ஓடி வந்து கொண்டிருக்கும் எட்டாம் நெம்பர் பஸ்ஸில் முதல் ஆளாகத் தொத்தி ஏறிக் கொண்டிருப்பேனா ? யாரோ கூடச் சொன்னார்கள் : ” கௌவனைப் பாருய்யா ! எளம் பிள்ளை மாதிரி பாஞ்சு ஏர்ரான் என்று. நான் என்ன செய்ய? சலவை செய்த கதராடை போல என் நிலை மாறிவிட்டாலும் சோமரசம் பேட்டைக்குப் போகப் போகிறேன் என்ற எண்ணம் முதல் என்னை இளைஞன் ஆக்கிவிட்டிருக்கிறது. பஸ்ஸில் ஸீட்டில் இடம் பிடித்து உட்கார்ந்து கொண்டேன். பஸ் புறப்பட்டது. 

என் சிறு கால் பட்டுத் தேய்ந்த அதே பாதை. தென்னூர் கேட், புத்தூர் வண்டி ஸ்டாண்டு. இருபுறமும் தென்னை வளர்ந்த வளைந்த சாலை, இடையிடையே கொடிக்காலிகள், வாய்க்கால் கள், கடைசியில் உய்யக் கொண்டான் ஆறு. இதோ மலை கூடத் தெரிகிறது. மலையைத் தாண்டித்தான் நான் பயின்ற பள்ளி, இப்போது போர்டு ஹைஸ் கூல் ஆகிவிட்டிருக்கும். ஒரு வேளை அதே தலைமையாசிரியர், இலட்சுமணன் இன்னும் பணி ஆ…ற்…று … சேச் சே, இது காறும் அவர் ஓய்வு பெற்றிருக்க லாம். எதற்கும் இறங்கிப் பார்க்க வேண்டும் என்ற உந்தல்.. சோமரசம் பேட்டைக்கு டிக்கெட் வாங்கினாலும் உய்யக் கொண்டான் திருமலையில் இறங்கி விட்டேன். ஊரே மாறி விட்டிரு தது. என் நண்பர்களின் பெயரை நினைவு படுத்திக் கொன் டேன்: மகுளாளி மகன் கணேசன், மளிகைக் கடைக்கார மகன் திருமுடி, ரோஜா, ராமு… அப்பா… என் நண்பர்கள் இப் போது எங்கெங்கே இருக்கிறார்களோ ? 

சுற்று முற்றும் பார்த்தேன்… எதுவும் தெரிந்த முகம் இல்லை விசாரித்துப் பார்த்தேன்.. பழைமை பற்றி நான் நினைத்த அளவு வேறு எவரும் நினைத்ததாகத் தெரியவில்லை. கடைசியில் ணேசனைக் கண்டுபிடித்தேன்.. அப்பா ஆள் எப்படி மாறிவிட் டான்; என்னை விடக் கிழவனாகி விட்டிருந்தான். என்னைப்பற்றி னைவு படுத்திப் படுத்திக் கொண்டு பட்டும் படாமலும் பேசி தன். எனக்குப் பிடிக்கவில்லை. அடுத்த பஸ்ஸில் சோமரசம் பட்டைக்குப் புறப்பட்டு விட்டேன். 

பஸ்ஸில் ஒருவர் என்னை இனம் கண்டு கொண்டு விட்டார். ‘என்னங்க. நான் கோட்டையிலே ஒங்களைத் தேடிவிட்டு ர்ரேன். நீங்களானா ஒங்க பழைய ஊருலே வந்து வண்டி பர்ரீங்க…” எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. 

“ஏனய்யா. நான் இந்த ஊர்க்காரன் என்று எப்படித் தெரியும்?” 

“ஏன்! அம்மாதான் சொன்னாங்க…!” 

“அம்மாவா ! அது யாருப்பா…?” 

“என்னாங்க இப்படிச் சொல்றீங்க. இன்னிக்கி அவுங்க ற்பாட்டுலே தானே விழா நடக்குது… அவுங்கதான் ஒங்களைக் றிப்பிட்டுக் கூட்டியாரச் சொன்னாங்க…!” 

“அது யாரைய்யா… என்னைத் தெரிஞ்சம்மா…?” 

“அதுதானுங்க ரோஸம்மா…!” 

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ரோஸ் அம்மா. ரோஜா கானா… சே… இத்தனை ஆண்டுகளில் ரோஜா எந்தப் பேரனை உடுத்துக்கொண்டு எந்த ஊரில் போய்க் கொண்டிருக்கிறாளோ! இது யாராவது கிறிஸ்தவப் பெண்ணாக இருக்கும்… என்று எண்ணினேன். என் சிந்தனையை அந்த ஆள் கலைக்க வில்லை. பஸ் ஓடிக்கொண்டிருந்தது. 

ஒரு வழியாக சோமரசம் பேட்டைக்கு வந்து சேர்ந்தோம். உடன் வந்தவர் என்னை மரியாதையாக அழைத்துச் சென்றார். விழா நடக்கவிருந்த வீட்டின் வாயிலில் கொண்டு சேர்த்தார். ஊரே மாறிவிட்டிருந்தது. கல்வித் துறைக்குப் போகும் திருப்பத்தில் ஒரு சிறு பர்ணசாலை போன்ற வீட்டில் தான் கொடி ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாசலில் தோரணம். தேசியக் கொடி. அத்துடன் மாதர் நல மன்றம். காந்தி நூற்பு ஆலை போன்ற பெயர்கள் கொண்ட பலகைகள் புதிதாக மாட்டி வைக்கப்பட்டிருந்தன. என்னை ஒரு முதிர்ந்த அம்மையார் வரவேற்றார்கள். வாருங்கள் குரு. வாருங்கள்…!” எனக்கு ஒன்றும் புரியவில்லை. இத்தனை உரிமையுடன் என்னை அழைப்பவர், என் தாய், என் சகோதரி மற்றும் ஒருத்தி.. ஆம்! ரோஜா… 

“யாரது ! ரோஜாவா…?” என்றேன். 

“ஆமாம் அய்யா! உங்க ரோஜாதான் ரோஸம்மாவாக இங்கு நிற்கிறேன்.” 

“பெயர் மொழி பெயர்ப்பா.. இல்லை. மதம்…!” 

“இரண்டும் இல்லை… நான் எந்த மதமும் இல்லை காந்தி மதம்.. ராசம்மா என்ற இந்துப் பெண்ணாகப் பிறந்து.. ரோஜா வாகப் படித்து இன்று ரோஸம்மா…!” 

“நான் நினைத்தேன்…!” என்று விட்டேன்… 

“எப்படி…” ரோஜா கேள்விக் குறியாகி நின்றாள்… அவள் கண்களில் அதே பழைய குறுகுறுப்பு… 

“இல்லை இந்த ஊருக்கு வருகிறேன் என்று நினைத்தவுடன் ரோஜாவின் மணம் தான் முதன் முதல் வந்தது… பின்னர் இளமை நினைவுகள்…” 

இதற்குள் விழா நிர்வாகிகள் விழாவைத் தொடங்கி விட்டார்கள். என்னை மேடைக்கு அழைத்தார்கள்… நான் தலைமை வகித்துக் கொடி ஏற்றினேன். வரவேற்பு உரையாக ரோஸம்மா பேசினார்கள். 

“அன்பர்களே ! என்னை உங்களுக்குத் தெரியும். ஊரில் ஒதுங்கி நிற்கும் ரோஸம்மா. தலைமை வகிக்கும் ஸ்ரீமான் குரு என்னுடன் இளமை நாட்களில் படித்தவர். நாங்கள் இவ்வூரிலி ருந்து உய்யக் கொண்டான் திருமலைக்குப் படிக்கப் போவோம் நடந்து தான். அன்று பஸ்கிடையாது. அங்கே அன்று ஒரு தலைமை ஆசிரியர் இருந்தார்கள். லட்சுமணன் என்று பெயர். 

ஒரு சமயம் மகாத்மா காந்தி அண்ணல் திருச்சிக்கு வர இருந்தார்கள். அவருக்கு கதர் மாலை அணிவிக்கத் தலைமை ஆசிரியர் என்னை ஏற்பாடு செய்திருந்தார்கள். நானும் பயந்து கொண்டே ஒப்புக் கொண்டேன். இருந்தாலும் அண்ணலை நேரில் காணும் பேறு கிடைக்குமே என்ற பேராசையில் ஒப்புக் கொண்டேன். 

அந்த நிகழ்ச்சிக்கு முதல் நாள் இரவு எனக்கு ஒரு கனவு வந்தது. மகாத்மா காந்தி வருகிறார். நான் நடுங்கும் கைகளில் கதர் மாலையைப்பற்றி நிற்கிறேன். என்னிடம் மாலையைப்பெற அவர் குனிகிறார். என்னிடம் அவர் கேட்கிறார். ‘இந்த மாலை யிலுள்ள நூலை நீநூற்றாயா? என்று, நான் தலையை அசைக் கிறேன், இல்லை என்று. அண்ணல் வேண்டாம் என்பதாகக் கையை நீட்டி விடுகிறார், நான் விழித்த பின்னரும் அந்தக் கை என்னை நோக்கி நீண்டிருப்பதாக ஒரு தோற்றம். அதையே அபயகரமாகக் கொண்டேன். 

அன்று துவங்கினேன் நூல்நூற்க. இன்னம் நூற்றுக் கொண்டிருக்கிறேன். என்னுடன் மட்டும் இல்லாமல் இந்தப் பக்கத்து கிராம மக்கள் அனைவரும் நூற்கிறார்கள். வீட்டிலி ருந்த படியே ஏதோ சம்பாதிக்கிறோம். நான் மகாத்மா காந்திய வர்களைப் பார்த்தவள் இல்லை. அந்த பாக்கியம் தலைமை தாங்கும் குருவுக்கு நிறைய உண்டு. அவர் பேசுவார், “நான் சொன்னேன். அன்பர்களே ! அம்மையார் கூறியபடி நான் அண்ணலை நேரேபார்த்தேன். மாலை அணிவித்தேன். அதன் பின்னர் பலமுறைகள் அண்ணலை அருகில் பார்த்திருக்கிறேன். ஆனால் அந்த பாக்கியத்தை வழங்கியவர்கள் முன்னர் பேசிய ரோஜம்மையார் தான். 

“எப்படி என்றால் அவர்கள் கூறிய படி கனவில் அண்ணலைக் கண்டு விட்டதனால் அவர்கள் மறுத்து விட்ட நிகழ்வை நிறை வேற்ற என்னைப் பணித்தார்கள். நான் அண்ணலுக்கு மாலை யணிவித்தேன். அன்றிலிருந்து அரசியலில் பங்கு கொண்டேன். அதன் சின்னமாகக் கதர் அணிகிறேன். ஆனால் தக்களி பிடித்து நூற்றவன் அல்லன். நான் அண்ணலின் அரசியல் வழி தொடர்ந்தேன்; அது அத்தனை இனிமை வழங்க வில்லை. அம்மையார். அண்ணலின் வேறு வழியான நிர்மாண திட்டத் தைத் தொடர்ந்தார்கள். அது என்றும் குண்றா இளமையுடன் தொடர்ந்து வருகிறது ; கன்னித் தமிழைப் போல…..” என்று பேசி அமர்ந்தேன். 

விழா அமளி முடிந்த பின்னர் ரோஸம்மா என்ற ரோஜா கேட்டார்கள், 

“என்ன குறு…திருச்சியில் இருக்கிறீர்களா ?” என்று. 

“ஆமாம் ரோஜா! ஆனால் இந்தப்பக்கம் வந்ததே இல்லை…” 

“அதுதான் சென்னைக்கும் டில்லிக்கும் போவதற்கே சரியாயிருக்குமே !” 

“ஆமாம்! எல்லா இடங்களுக்கும் போனேன். பல பதவிகள் வகித்தேன்…என்ன பிரயோசனம்…” 

“ஏன்? அதுவும் அண்ணலின் வழியில் நாட்டு சேவை தானே?” 

“அப்படித்தான் சொல்லிக் கொள்ள வேண்டும். பதவி வந்த பின்னர் போதை தருகிறதே…அதில் தடுமாறாதவர்கள் யார்…” 

“ஏன் நீங்கள் நிலையாக இருக்கிறீர்களே?” 

“நான் நிற்கலாம்! ஏனெனில் எனக்கென்று உள்ளது நான் தானே?”

“ஏன்? உங்கள்… குடும்.. ப… ம்…” 

“ஏன்! நிங்கள் எல்லோரும் தான்…” 

“அப்படியானால்…வாழ்வில் ஏதும் துக்ககரமான……” 

“சுபமே ஏற்படாத போது துக்ககரம் என்ன…நீ கேட்பது புரிகிறது…நான் திருமணமாகாதவன் தான் இன்னமும்…” 

“ஓஹோ! வழி வேறாக இருந்தாலும் நிலைமை ஒன்று தான்…” 

“ஏன் ரோஜா நியும். இன்னம்… கன்னிதானா…” 

“வேறே என்ன செய்வது குரு மகுளாளி மகன் கணேசன் இருந்தானே. அவனுக்குப் பெண் கேட்டார்கள். நான் மறுத்து விட்டதால் என் பெற்றோர் என்னைத் துன்புறுத்தினர். நான் அன்றே தனித்து வந்து விட்டேன். இந்த நூற்பாலையைத் துவக்கினேன். என் வாழ்வுக்குத் தேவையான ஊதியத்தை இந்த சர்க்கா தருகிறது… மவுனமாக வாழ்வை நடத்துகிறேன். கணேசனை மணந்திருந்தால்… இந்த நிம்மதி கிடைக்குமா?” 

“நிம்மதி என்பது சரி…தாயாக, மாமியாக, பாட்டியாக…” 

“எல்லாமாக இந்தக் கிராம மக்களுக்குத் தோற்ற மளிக்கிறேன். அண்ணலின் வழியில் அன்பும் சேர்த்துக் கொண்டால், அனைத்துலகும் நமது குடும்பம் தானே…”! 

“அந்தக் குடும்பத்துள் என்னையும்…” 

“இதற்கு வேண்டுகோள் வேறா…. இந்த நாடே என் வீடு அதில் உள்ள மக்கள் அனைவரும் என்னும் போது… அதில் நீங்ளும் சேர்ந்தவர் தானே…?” 

“இருக்கலாம்…ஆனாலும்….” 

“ஆனாலும் என்ன? இதோ இந்த மனையில் இன்னம் இடம் இருக்கிறது. உங்களுக்கும் ஒரு பர்ண சாலை அமைத்துக் கொண்டு… விருப்பமிருந்தால் இங்கேயே…” 

“அது தான் நானும் நினைத்தேன். பட்டண வாழ்வு எனக்குப் பிடிக்கவில்லை… அதிலும் வளர்ந்து வரும் திருச்சியில்…” 

“பேசாமல் இங்கே வந்து நிம்மதியாக… வாழலாமே.” 

“எனக்கும் நூற்கக் கற்றுக் கொடுப்பாயா…” 

“நூற்பது என்ன… கிராம ராஜ்யத்தின் கலைகள் அனைத்தையும், கற்கலாம்…” 

“ஆமாம்! அதுவே சரி; அண்ணலின் வழியில் பிரிந்தோம்… மீண்டும் அண்ணலின் வழியிலேயே ஒன்று படுவோம்… ” 

அதன் பிறகு நான் திருச்சிக்கு வரவேயில்லை… 

– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *