காண்கிற கடவுள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 192 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு பணிப்பெண்ணிற்கு திருடுவது பழக்கமாய் போய்விட்டது. வீட்டுத் தலைவிக்கு வேலைக்காரப் பெண் திருடுகிறாள் என்பது நன்றாகத் தெரியும். என்றா லும் அவளை விட்டுவிட மனமில்லை. வேலை செய்வதில் பம்பரம் போல் சுற்றுவாள். மகா திறமையுள்ள வேலைக்காரி.

வீட்டுத்தலைவி ஒரு யுக்தி செய்தாள். எப்பக்கம் நின்று பார்த்தாலும் தன்னையே பார்ப்பதான பாவனை யில் ஒரு படத்தைச் சித்தரித்தாள். அந்தப் பெரிய படத்தை நடுஅறையில் மாட்டினாள்’ ‘இந்தப் படம் நம்மை பார்க்கிறது போல கடவுளும் நம்மைப் பார்க் கிறார்’ என்று வேலைக்காரிக்கு விவரித்துச் சொன்னாள்.

ஒருநாள் பணிப்பெண் சர்க்கரை திருடும்போது படத்தைப் பார்த்தாள். அவள் திருட்டைப் பார்ப்பது போலிருந்தது அதன் கண்கள். கத்திரிக்கோலை எடுத்து வந்து இரு கண்களையும் கத்தரித்து எடுத்து விட்டாள். என்னே பேதமை!

ஒருவர் தம் சீடர்களில் மூவரை அழைத்து ஆளுக் கொரு மாம்பழம் கொடுத்து ‘ஒருவருங்காணாத இடத் தில் சென்று தின்று வாருங்கள்’ என்று அனுப்பினார்.

நீரினுள் மூழ்கி பழம் தின்றேன் என்றான் ஒருவன். கதவை அடைத்துக் கொண்டு தின்றேன் என்றான் மற் றொருவன். மூன்றாமவன் ‘இறைவனுக்கு மறைவான இடம் ஒன்றுமில்லை; ஆகையால் தின்னவில்லை’ என்றான்.

“கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது”. [11 நாளாகமம் 16:9]

ஆண்டவருடைய பார்வைக்கு மறைவான படைப்பு ஒன்றுமில்லை. [எபிரேயர் 4:13]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *