கவலை
கதையாசிரியர்: இரா.துரைமாணிக்கம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 7, 2026 வெளியான ஆண்டு: 1990
பார்வையிட்டோர்: 31
(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அங்கே உட்கார்ந்திருக்கிறது யார் ? நமக்குத் தெரிந்தவர் மாதிரி இருக்கிறதே. இன்னும் கொஞ்சம் அருகில் போய் பார்ப்போமே என்று தனக்குள் சொல்லிக் கொண்டே அங்கிருந்த ஓர் இருக்கையை நோக்கி கண்ணுசாமி சென்றார்.
அடே! நான் எண்ணியது சரியாகத்தான் இருக்கிறது. இராமசாமி தான் உட்கார்ந்திருக்கிறார்.
“என்னப்பா இராமசாமி. இங்கே தனியாக உட்கார்ந்திருக்கிறாய்?”
தன் பெயரைச் சொல்லி அழைத்தவரைத் திரும்பி பார்த்த இராமசாமி, “அடாடா வாங்க, வாங்க! கண்ணுசாமி” என்றார்.
“சிராங்கூன் வட்டாரத்தை விட்டு நீங்க பிடோக் புது நகருக்குக் குடிபோனதிலிருந்து இந்தப் பகுதியிலேயே பார்க்க முடியவில்லையே! எப்படி இருக்கிறீங்க? வீட்டில் எல்லோரும் நலமா?” என்று கேட்டுக் கொண்டே தான் உட்கார்ந்திருந்த இருக்கையில் இடம் கொடுக்க நகர்ந்து கொண்டார்.
“ஆமாப்பா! உன்னைப் பார்த்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. நான் முன்புபோல் இவ்வட்டாரத்திற்கு அடிக்கடி வருவது இல்லே. இங்கு வருவது என்றால் மூன்று பஸ் மாத்தி வர வேண்டும். அதோடு வீட்டின் பொறுப்பை என் பையனிடமே விட்டு விட்டேன். அவன் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறான்” என்றார் கண்ணுசாமி.
“ஆமாம் நீ எப்படி இருக்கிறாய்? உன் மனைவி பிள்ளைங்க எல்லாம் எப்படி இருக்கிறாங்க? இங்கே ஏன் தனியா உட்கார்ந்திருக்கி- றாய்? இன்றைக்கு வேலை இல்லையா?” என்று தொடர்ந்து கேட்டார்.
“எல்லாம் இருக்காங்க. எனக்கு உடம்புக்கு முடியலே. அதான் ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு வந்தேன். ஒரே களைப்பாக இருந்தது. இந்த இருக்கையில் உட்கார்ந்து விட்டேன்” என்றார் இராமசாமி.
“என்ன இராமசாமி? நீ மனக்கவலையாக இருக்கிறாப் போல தெரிகிறதே. என்ன காரணம்?” என்றார் கண்ணுசாமி.
“அதெல்லாம் ஒன்றுமில்லை”.
“என்னிடம் மறைக்க வேண்டாம். அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறதே. உனக்கு விருப்பம் இருந்தால் சொல்லு. இல்லையென்றால் பரவாயில்லை.”
“உங்களிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்ல போகிறேன்?”
“தயங்காமல் சொல். என்னால் உனக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமானால் செய்கிறேன். அதோடு மனச்சுமையை மற்றவர்களிடம் கூறும் போதுதான் அதன் பாரம் குறையும் என்பார்கள்” என்றார் கண்ணுசாமி.
”உண்மை தான். உங்களுக்குத்தான் தெரியுமே. என் மனைவி நீண்ட நாட்களாக நோயாளியாக இருக்கிறாள்” என்பது.
“ஆமாம்! டாக்டர் என்னதான் சொல்லுகிறார்?”
”எல்லா பரிசோதனையும் செய்துவிட்டேன். எதிலும் குறை இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் உடல் மட்டும் மெலிந்து கொண்டே வருகிறது. அதுதான் எனக்குப் புரியவில்லை என்கிறார்.”
“தனிப்பட்ட முறையில் சிறப்பான வைத்தியரிடம் காட்ட வேண்டியது தானே?” என்றார் கண்ணுசாமி.
“அப்படி காட்டுவதற்கு எனக்கு வசதி வேண்டுமே” என்றார் இராமசாமி.
“நான் உனக்கு உதவி செய்யவா?”
“வேண்டாம்! வேண்டாம். எனக்கு இரத்த அழுத்தம் நீண்ட நாட்களாக இருக்கின்றது. அதோடு நான் வேலையிலிருந்து அடுத்த மாதம் ஓய்வு பெறவிருக்கிறேன். இதுநாள் வரையில் வந்து கொண்டிருந்த வருவாய்க்கும் இனி வழியில்லாமல் போய் விட்டது. இனிமேல் எப்படிதான் வாழ்வது என்று தெரியவில்லை” என்றார் இராமசாமி.
“ஆமாம்! உன் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் வேலை செய்யவில்லையா?”
”அதை ஏன் கேட்கிறீர்கள்? நமக்கு வருகின்ற வருவாயில் ஒரு வெள்ளி கூட மிச்சப்படுத்த முடியவில்லையே. இந்த நிலையில் பிள்ளைகளுக்கு நம்மால் எப்படி பணம் சேர்த்து வைக்க முடியும்? அவர்களை நன்றாக படிக்க வைத்து விட்டால் அதுவே போதும் என்று எண்ணி அவர்கள் கேட்டதை எல்லாம் இல்லை என்று சொல்லாம வாங்கி கொடுத்தேன். கஷ்டம் எனறால் என்ன? என்று தெரியாமல் வளர்ந்த அவர்கள் ஒழுங்காக படிக்கவில்லை. எங்காவது வேலைக்குப் போகச் சொன்னால் வேலைக்கும் போகாமல் விருந்து, வேடிக்கை, உல்லாசம் என்று ஊர் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இதையெல்லாம் எண்ணிதான் மிகவும் கவலைபட்டுக் கொண்டு இருக்கிறேன்” என்றார் இராமசாமி.
“கேட்க வருத்தமாகத்தான் இருக்கின்றது. இருந்தாலும் மனித- னுக்கு கவலையைவிட கொடிய நோய் எதுவுமே இல்லை. எனவே என்ன வந்தாலும் கவலை மட்டும் படக்கூடாது. அப்போது தான் இருக்கின்ற இன்னும் கொஞ்ச காலத்தையும் நல்ல முறையில் கழிக்க முடியும்’ என்றார் கண்ணுசாமி.
ஒருநாள் என் மகன் மோகன் என்னிடம் வந்து, “நான் உங்களிடம் கொஞ்ச நேரம் பேச வேண்டும்” என்றான்.
“நீ என்னிடம் என்ன பேச இருக்கிறது?”
“வந்து…..வந்து….”
“என்னடா வந்து போய்?”
“எனக்கு உடனே திருமணம் செய்து வையுங்கள்” என்றான்.
நான் சிரித்தேன். பிறகு “கலியாணமா? உனக்கா?”
”ஆமாம்! எனக்குத்தான்”
”நன்றாக யோசித்துதான் சொல்லுகிறாயா?”
“இதில் என்ன யோசிக்க இருக்கிறது?”
“கலியாணம் என்பது ஆயிரங்காலத்து பயிரப்பா!”
“அதாலென்ன?”
”உனக்கு இப்போது என்ன வயது? அதோடு நீ வேலை எதுவும் செய்யவில்லையே! நீ எப்படி உன் மனைவியை வைத்து காப்பாற்றுவாய்?”
“நான் இப்போது ஒரு இக்கட்டான நிலையில் இருக்கிறேன். அதிலிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ளக்கள் உடனே கலியாணம் செய்து கொள்ள வேண்டும்.”
“அது என்ன?”
“நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன்.’
“காதலி! நான் வேண்டாம் என்று சொல்லவில்லையே.”
”அவள் திருமணத்துக்கு என்னை அவசரப்படுத்துகிறாள்.”
“இந்தக் காலத்து பெண்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. நாகரிகம் என்ற பெயரால் எல்லாவற்றையும் மிகவும் எளிதாக எடுத்துக் கொள்கிறார்கள். வேலை இல்லாத உன்னை காதலித்தது மட்டுமல்ல. தன்னை வைத்து காப்பாற்ற முடியாத உன்னையே திருமணம் செய்து கொள்ள அவசரப்படுகிறாள் என்கிறாயே. நல்ல வேடிக்கை.”
“அவள் கருவுற்று விட்டாள்.”
“அப்படியா? அது தான் இந்த அவசரமா?’
“நீ உடனே இந்த இடத்தை விட்டுக்கிளம்பு. உன்னால் எனக்கு எந்த நன்மையும் இல்லை. இப்போது கெட்ட பெயரையும் வாங்கி கொண்டு வந்திருக்கிறாய். இனிமேல் என் முகத்தில் விழிக்காதே. இனி உனக்கு நான் அப்பனும் இல்லே. நீ எனக்கு மகனும் இல்லே. இங்கே வராதே! வராதே!” என்று கூறி விரட்டி விட்டேன்.
அன்று போனவன்தான். இன்றுவரை அவனை நான் பார்க்க- வில்லை என்று தன் மகனைப்பற்றி இராமசாமி கூறினார்.
மகள் வசந்தி நினைத்த நேரத்தில் வருவாள். நினைத்த நேரத்தில் போவாள். எதுவும் கேட்டால் வாய் திறக்க மாட்டாள். அவளை எப்படி திருத்துவது? அவளுக்கு எப்படி கல்யாணம் செய்வது? ஒன்றும் புரியவில்லை. இதையெல்லாம் நினைத்துதான் நான் நாள்தோறும் கவலை பட்டுக்கொண்டு இருக்கிறேன்” என்று தன் மனச்சுமையை இராமசாமி கூறி முடித்தார். கண்ணுசாமி பெருமூச்சு விட்டுக்கொண்டு மிகவும் மோசமான நிலைதான் உன் நிலை. இருந்தாலும் நிலைமை இப்படியே இருந்து விடாது. இப்படி அடிக்கிற காற்று திசை மாறி அடிக்கவும் கூடும்” என்றார்.
“நீங்கள் சொல்வது புரியவில்லையே!”
”உன் பிள்ளைகள் மனம் மாறி ஒரு நாள் உன்னிடம் வருவார்கள். உன்னைக் கவலை இல்லாமல் பார்த்துக் கொள்ளுவார்கள் என கூறுகிறேன்.”
“எனக்கு நம்பிக்கை இல்லை.”
“மனித வாழ்வுக்கு நம்பிக்கைதான் முக்கியம்” என்றார் கண்ணுசாமி.
“எல்லாம் அவரவர் வாங்கி வந்த வரம்” என்றார் இராமசாமி. “நீ சும்மா மனதைப் போட்டு அலட்டிக் கொள்ளாதே. தைரியமாக இரு. எல்லாம் நல்லபடியாய் நடக்கும்” என்றார் கண்ணுசாமி.
“அப்படி நடந்தால் நல்லதுதான்.”
“சரி புறப்படு. பேசிக் கொண்டே போவோம். எனக்கு நேரமாகிறது” என்றார் கண்ணுசாமி.
இருவரும் கிளம்பினார்கள்.
தன்னுடைய வீட்டுக்கு வந்துவிட்டுப் போகுமாறு இராமசாமி கண்ணுசாமியை அழைத்தார்.
தான் பிறகு வருவதாக கூறி விடை பெற்றுக் கொண்டார் கண்ணுசாமி.
வீட்டிற்குள் நுழைந்த இராமசாமிக்குத் தன் மனதில் இருந்த பாரம் கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது.
உள்ளே மகளும் மனைவியும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்- தார்கள்.
அப்பாவைப் பார்த்ததும் மகள் எழுந்து வந்தாள் “டாக்டர் என்ன சொன்னார்?” என்று விசாரித்தாள்.
இராமசாமி ஒரு கணம் திகைத்து நின்றார். பேசுவது நம் மகள்தானா? என்று மீண்டும் அவளை உற்றுப் பார்த்தார்.
“அவள் கேட்கிறாள். பேசாமல் நிற்கிறீர்களே?” என்றாள் இராமசாமியின் மனைவி.
“பேசுவது நம் மகள்தானா? என்ற சந்தேகம் வந்துவிட்டது.”
“என்னை மன்னித்து விடுங்கள் அப்பா. நான் இனிமேல் உங்கள் மனம் புண்படும்படி நடக்க மாட்டேன். நான் என்னுடைய தவற்றை உணர்ந்து விட்டேன்” என்றாள் மகள்.
“அப்படியா! மிகவும் சந்தோசம்” என்றார் இராமசாமி.
“அப்பா! நீங்கள் உங்கள் வேலையிலிருந்து அடுத்த மாதம் ஓய்வு பெறப்போகிறீர்கள் அல்லவா? நீங்கள் தனித்திருந்து மனக்கவலை படாமல் இருக்க ஏற்பாடும் செய்துள்ளேன்” என்றாள்.
“என்ன ஏற்பாடு?’
”நாம் ஒரு சாப்பாட்டுக் கடை திறப்போம். அதில் நாம் எல்லோரும் சேர்ந்து உழைப்பதின் வழி நம்முடைய கவலைகளை மறக்கலாம். மகிழ்வுடன் வாழலாம்” என்றாள். அதைக் கேட்ட இராமசாமி உண்மையிலேயே மகிழ்ந்தார்.
அந்த நேரத்தில் அவரின் மகன் தன் மனைவியுடனும் மகனுடனும் வீட்டினுள் நுழைந்தான். தன்னை மன்னித்துவிடுமாறு கேட்டுக் கொண்டான் மகன் தான் பொறுப்புள்ளவனாக மாறிவிட்டதாகவும் கூறினான்.
பேரப்பிள்ளையைப் பார்த்தவுடன் இராமசாமி தன்னை மறந்த நிலையில் ஆனந்த கண்ணர் விட்டார்.
பேரனைத் தூக்கிக் கொண்டு, மகனையும் மருமகளையும் கட்டித் தழுவினாள் இராமசாமியின் மனைவி.
கண்ணுசாமி சொன்னது போல் காற்று திசை மாறி வீச ஆரம்பித்து விட்டது. இனி இராமசாமிக்கு ஏது மனக்கவலை?
– காலம் கடந்து விட்டது, முதற் பதிப்பு: ஏப்ரல் 1990, 25வது ஆண்டு நிறைவு விழா, இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பட்டுக் குழு, சிங்கப்பூர்.
![]() |
இரா.துரைமாணிக்கம் (பிறப்பு: அக்டோபர் 15 1945) இவர் ஒரு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளராவார். தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம் வேப்பக்குளம் எனுமிடத்தில் பிறந்த இவர் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து அங்கு விவேகானந்தர் தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியையும், உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றார். தமிழ், ஆங்கிலம், மலாய் போன்ற மொழிகளில் தேர்ச்சிமிக்க இவர் தமிழாசிரியராகப் பணியாற்றிவந்தார். அத்துடன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் 1999ல் சிங்கப்பூர்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
புதிய வார்ப்புகள்
ஜெயகாந்தன்
November 7, 2026
உந்தன் நிழலாய் நானடி தோழி…
காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்
November 7, 2026
தெய்வசிகாமணி
மு.வீ.சங்கமுத்துப்பிள்ளை
November 7, 2026
