கள்ளர் குகை
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 191
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சந்தர்ப்பத்தைப் பார்க்கும்போது, ‘என் பிதாவின் வீட்டை வியாபாரத்தலம் ஆக்கிவிட்டீர்களே’ என்று தானே இயேசு சுவாமி சொல்லி இருக்க வேண்டும்? பின் ஏன் ‘கள்ளர் குகை’ என்றார்?
அக்காலத்தில் திருடர்கள் வாரத்தில் ஆறுநாட்களும் திருடி மலையின் ஒரு பெரிய குகையில் சேர்த்து வைப்பார்கள். வாரத்தில் ஒருநாள் திருடப்போக மாட்டார்கள்.
வாரத்தில் ஏதோ ஒருநாளை விடுமுறை நாளாக வைத்து அந்நாளில் குடித்து வெறித்துக் கூத்தாடு வார்கள். திருடிய பொருட்களை விலை கூறி விற்பார்கள். அந்நாள் வியாபாரத்தலம் போல்தான் காணப் படும்.
அதை நினைத்துத்தான் ‘என் பிதாவின் வீட்டைக் கள்ளர் குகை ஆக்கினீர்கள்’, என்றார் கிறிஸ்து பெருமான்.
அவ்வாறே கிறிஸ்தவர்களில் பலர் வாரத்தில் ஆறு நாட்களிலும் திருடுகிறார்கள்.
கடவுளுக்குரிய நேரத்தை, பொருளை, பணத்தை, தருணத்தை, தாலந்தைத் திருடுகிறார்கள். ஆறு நாட்களும் இவ்விதம் பாவங்களால் கர்ப்பம் தரிக்கிறார்கள்.
ஏழாம்நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாச்சுதே! அன்று நன்றாகத்தின்று பாட்டுப்பாடி, துதித்துக் குதித்து மகிழ் கொண்டாடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களைப் பார்த்து ஆலயத்தைக் கள்ளர் குகையாக்குகிறார் என்று சொல்வது சரிதானே?
“என் ஓய்வு நாட்களை ஆசரித்து, என் பரிசுத்த தலத்தைக் குறித்துப் பயபக்தியாய் இருப்பீர்களாக” [லேவியராகமம் 19:30]
“என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும்.” [மத்தேயு 21:13]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
