கர்ணனும் கர்ம யோக சுவடுகளும்

இத்தனை நாளுமல்ல வருடக் கணக்கில் ஒரு வாழ்க்கை யுகம். குணாளினிக்கு. குணா என்பதே அவளின் வீட்டுப் பெயர். வீடாக இருந்தாலென்ன காடக இருந்தலென்ன இத்துணை காலமும் அவள் வாழ்ந்து கழித்த சுவடுகளில் இது முற்றிலும் மாறுபட்ட ஒன்று, வினை தீர்க்கவல்ல வேதம் சொல்லத்தான் இன்றுஅவள் புதிதாய் பிறந்திருப்பது போல்பட்டது.
இந்தபடுதலில் உச்சி குளிர அவள் அதைக் கேட்டுக் கொண்கொண்டிருந்தாள்.
அப்போது நெருங்கிக் கேட்டது லதாவின் குரல்சொந்தக் குரல்கள். ஒரு புறம் சொந்தமாவது பந்தமாவது கஷ்டம் வந்தால் காடு வெறித்த நிழல் தான் இதை நேர்முகமாக அறிந்துபழகிய அன்பவக் கிழவி அவள்.
இளம் வயசிலே முப்பொழுதும் அவளுக்கு கஷ்ட திசை தான் கல்யாணத்திற்குப் பிறகு வாழ்க்கையென்ன எதுவுமே ஒட்டவில்லை யந்திரமாகவே வாழ்ந்தாள்.
நடைப்பிணமாகவே செத்தொழிந்தாள், இதை கட்டம் போட்டு சொல்ல நினைத்தால், காட்சி கடவுளில்லை, கனவு தான் வரும்.
எல்லாம் பொய் இந்த உடல் பொய் நான் பொய் – அப்ப இந்த சம்சார சாகரம் தான் எதற்கு வந்தது? வினை தீர்க்கத்தான் வேதம் சொல்லத் தான்.
அப்போது நேரம் என்னவென்று தெரியவில்லை பகல் சாப்பிடக் கூடவில்லை, தட்டுக் கழுவி சோறுபோட்டுச் சாப்பிடும் நிலை கூட இல்லை. இப்போது அவளுக்குத் தெரியும். லதா பேசி முடித்தால், தான் சாப்பாடு வரும்அவள்யார்? அவளுக்கு அன்றாடம் சலிக்காமல், பணிவிடை செய்யும் ஒரு வேலைகாரச் சிறுக்கி. ஆனால் இவள் வேறு மாதிரி. கால விளையாட்டில் இவள் பொறுக்கியெடுத்த முத்து. அதன் விசுவரூப தர்ன் இப்போது விரிந்து கொண்டு போனது வேதம் சொன்னது.
அதை – குணா கவனம் சிதறாமல் கேட்டுக் கொண்டிருந்தாள். வாழ்க்கையும் வாழ்ந்த பொழுதுகளும் திசை மாறிப் போனாலும், அவள் இருப்பு ஒன்று தான் அந்தக் கடவுள் நிலை, சிறிதும் தளும்பாமல், அதை அவள் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அப்போது லதா கேட்டாள்.
அம்மா! நீங்கள் எனக்கு ஓர் உதவி செய்ய வேணும்.
கேள் இயலுமானால் செய்து தருகிறேன்.
இது எனக்கல்ல கிருஷ்ணாவின் மகளூக்கு, காசு காட்ட முடியாமல் கல்லூரிக்கு போக முடியாமல் இப்ப அவள் வீட்டிலை இஞ்சை கொழும்பிலை தான் இருக்கிறாள். ஒரு வருடமாய் அவள் பள்ளிக் கூடமே போகவில்லை.
என்ன ஒருடமா? ஏன் இப்படி?
அது தான் சொல்ல வாறன், கிருஷணாவைத் தான் உங்களுக்கு நன்றாய்த் தெரியுமே..இஞ்சை வந்து வீட்டுவேலை பெயிண்ட் அடிக்கிற்\ வேலையெல்லாம் செய்வானே. என்ரை அக்கா ராசம்மாவின் மூத்த மகன். அவன்ரை பிள்ளைதான் இப்ப படிக்க வழியில்லாமல், நிக்குது. அவள் படிக்க வேண்டுமானால், கல்லூரிக்குபெருந் தொகை காசு கட்ட வேண்டும். கொரோனா வந்ததால் கிருஷ்ணாவுக்கு இப்ப வேலையுமில்லை. அது தான் கேக்கிறன், நீங்கள் மனசு வைத்தால், இது நடக்கும்.
என்ன சொல்கிறாய்?
அம்மா! பெருந் தொகை தான் இது ஆனால், உங்களாலை முடியும்.
அதைக் கேட்டு குழம்பினாள் குணா. அப்ப நான் இருந்த நிலைவேறு ஓருஆயிரம் ரூபாய் பெறவே தீக்குளித்து எழுந்தவள் நான். ஒரு முறை நடந்த சங்கதி அப்போது நான் பிள்ளைகளோடு ஏழாலை வீட்டில் தான் இருந்தேன். கணவருக்கு கொழும்பில் வேலை அது ஒரு மாயச் சங்கதி. அவரிடமிருந்து காசு பெறுவதே , கல்லில் நார் உரித்த மாதிரி, அவ்வளவு கஷ்டப்படிருப்பேன்.
ஒரு முறை கொழும்பிலிருந்து யாரோ ஓர் உறவினர் அவர் மூலம் மனைவியிடம் கொடுக்கும்படி இவரிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்தனுப்ப அதை உரியவரிடம் சேர்க்காமல் கையாடி விட்டார். அந்தக் காசு நளினிக்கு வந்து சேர வேண்டியது. நடந்தது அறிந்து பக்கத்து விட்டிலிருந்து நளினியே நேரில் வந்து விட்டாள், அதை வாங்கிச் செல்ல, அதுவும் கேவலம் ஓர் ஆயிரம் ரூபாய். தன் நிலை அறிந்தும் ஒதுங்கிப் போக மனம் வராமல் அவளே நேரில் வந்த போது, குணாவுக்கு வேறு வழி தெரியவில்லை. குழந்தைகள் பசி தீர்க்கவென வைத்திருந்த காசும் போச்சுது. வேறு வழியில்லை. அன்று முழுநேர பட்டினி சாவு தான். இது இவ்வாறிருக்க, லதா கேட்பது எந்தவிதத்தில் நியாமென்று புரிய மறுத்தது குணாவுக்கு.
குணாவுக்கு. இருந்தும், அவள் கடவுள் மனம் அதற்கு ஒத்துழைக்கவே விரும்பியது அதானால், அவள் சொன்னாள்.
லதா! நீ கேட்பதால், எனக்கு மறுக்க மனம் வரவில்லை. அதுவும் ஒருலட்சம் என்கிறாய். பிள்ளைகளிடம் கேட்டு வாங்குகிற நிலையில் நானில்லை. எனக்கே வருகிற பென்ஷன் பத்தவில்லை. அவர்கள் தான் தந்து உதவுகிறார்கள். ஒன்று செய்யலாம், என் நெருங்கிய உறவுகள் வெளிநாட்டிலை இரூக்கினம். அவர்களில் சிலபேரை நான் கேட்டுப் பார்க்கிறேன். பேஸ்புக் பார்ப்பதால், மெசன்ஞர் மூலம் கேட்டு எழுதுகிறேன். கடவுள் எங்களை ஆசீர்வதிக்கட்டும் என்றாள் பெருந்தன்மையோடு.
இது எங்கிருந்து வந்தது?ஆவல் செய்த ஆன்மீக தவத்தின் விளைவா? தெரியவில்லை யாரும் அழக் கூடாது என்பதே, அவளின் விருப்பம். அவளை அழ விட்டே, வேடிக்கை, பார்த்த, இந்த சமூகத்திலே தான் அவளின் இந்தக் கடவுள் இருப்பும் காட்சி உலகமும். அதில் வாழ்ந்து கழிப்பதற்காக, அற்பவிடயங்களுக்கெல்லாம் காசை வாரி இறைக்கிற பழுது மனம் கொண்டபாலை வெளி உலகில் அவள் பதியாக இருக்க நேர்ந்ததே! இது எப்படி?
இதை ஆராய இப்ப நேரமில்லை. பொஸ்வானாவில் அவளின் சித்தப்பா மகன் ஒருவன் பெரும் தொழில் அதிபராக இருக்கிறான். அதை விட அவளின் சொந்த அக்கா மகன் அமெரிக்காவில் என்ஞினியராக வேறு இருக்கிறான். அவனையும் கேட்டுப் பார்ப்போம். இன்னுமொருவன் அவள் தங்கை மகன் ஒரேயொரு மகன் தான் தங்கைக்கு. அவனும் அவுஸ்ஹிரேயாவில் இருக்கிறான். இவர்கள் மூவரிடம் கேட்டால் நிச்சயம் காசு கைக்கு வரும்.
அது நடக்கவே செய்தது. பாங்க் மூலம் அவர்கள் மூவர்மாகச் சேர்ந்து அனுப்பிய ஒரு லட்சம் காசை கிருஷ்ணா வந்து மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டது மட்டுமல்ல அவள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றும் போனதையிட்டு அவளுக்கு பெரும் மகிழ்ச்சி.
கேவலம் ஒரு வேலைகாரியின் சொல் கேட்டு, அவள் செய்து விட்ட மாபெரும் கொடை, ஒரு சராசரி பெண் என்ன மனிதர்களே செய்ய மறுத்து பின் வாங்கிப் போகிற நிலையின் அவள் பூரணத்துவம் அடைந்து விட்ட நிலையில் அவள் வகுத்த வியூகமும் அங்கு பறக்கிற வெற்றிப் பதாகையும் ஒரு கர்ணனாகவே மாறி, அவள் புரிந்து விட்ட இந்தக் கர்மயோக யுவடுகளையே பற்றிக் கொள்ளாமல், அச் செய்தி அரிந்து கொண்ட விபரீத புத்தியின் மாசு படிந்த நிலையில் இது நடந்து சில நாட்களே, கடந்து விட்ட நிலையில் ஒரு பிரச்சனையின் பூதமாக மச்சாள் வேதம் அங்கு வந்து சேர்ந்தாள்.
இதை அவள் எதிர்பார்க்கவில்லை ஊரிலென்றால், இக் கதை கால் முளைத்தே காற்றில் பறந்து ஒரு நிமிடம் கூட ஆகாது இந்தத் தெஹிவளையில் இது எப்படி வெளியே போய் இவள் காதுக்கு எட்டிற்று?
அதற்கு விடையறியாத நிலையிலே, இந்த சங்கமம் அபத்தக் கேள்விகள்.
அவள் நிதானம் தப்பிய வேளை இது.
அதனால் கேட்டாள்.
என்ன மச்சாள் இந்த நேரம் சூடேறி வந்திருக்கிறாய்?
உனக்கு விசரே?
என்ன சொல்கிறாய்? எப்பவும் எனக்கு விசர் பிடிச்சதில்லை இப்ப வேறு மாதிரி நான் ஆகியிருப்பதாக நீ நினைச்சால் உனக்குத் தான் விசர் என்று நினைக்கத் தோன்றும் சொல்லு இப்ப என்ன சொல்ல வாற்றாய்?
நீ ஆருக்கோ ஒரு லட்சம் காசு சேர்த்திருப்பதாக உன்ரை மகன் சொன்னான் எனக்கு நெஞ்செல்லாம், பதறிப்போச்சு. நீயா இதை செய்தாய்?
ஓம் நான் தான் கடவுள் மாதிரி நான் இருக்கிறது உனக்கு வேடிக்கை மட்டுமல்ல வேதனையாகவும் இருக்கு. அதுக்கு என்ன செய்ய? என்னால் அபடித்தான் இருக்க முடியும். ஒரு நூறு காசுக்கே யாசகம் கேட்டு தெருவெல்லாம்அலைந்து திரிந்த , எனக்கு இப்படியொரு புத்தி மாற்றாட்டமா, அன்றி கடவுள் நிலையா என்று தானே நீ குழம்பிப் போய் வந்திருக்கிறாய்? கவலைப்படாதே. நான் கடவுள் தான். அதற்கு மேலாய் கையில் தீபம் வைச்சுக் கொண்டு ஒரு கர்ணனாக இருந்து கர்மயோகம் புரிகிற புத்திதான் எப்பவும் எனக்கு இல்லாவிட்டால், நானும் உன்னைப் போல மட்டுமல எல்லோரையும் போல பிணம் தின்னும் காட்டிலே தான் இருள் விழுங்கிய பூதமாய்தான் நானும் விழுந்து கிடக்க நேரிடும். இது நடவாமல் நான் இப்படி கடவுளாய் மாறியிருப்பதைக் கூட உன்னால் புரிந்து கொள்ள முடியாமல் இப்படி பிணம் தின்னும் காட்டிலே இருள் வெறிச்சு வந்திருக்கிற நீயென்ன உன் நிழல் கூடஎன்னைக் கருவறுபதற்கு கையில் கத்தியோடு வந்து நிற்பதாய்நான் அஞ்சுகிறேன். உன் நிழல் கூட என் மீதுபட்டால் தோஷமாகி விடும் போய் விடும்.
அவளின் உக்கிரமான அந்தப் புது அவதாரத்தின் ஒளி கூட படமுடியாத அந்தகார இருளே வந்து தன்னை மூடிவிட்டாற் போல திடுக்கிட்டு மல்லாந்து சரிந்த நிலையில் தனக்கு இயல்பான பிணம் தின்னும் காட்டை நோக்கி முற்றும் அந்த நடைப்பயணம் துரிதகதியில் மேலும் தொடர்ந்து, குணாவுக்கு அது வெறும் புதினம் போலவே பட்டது. அப்போது அவள் நின்று கொண்டிருக்கும் கடவுள் நிலைக்கு மாறாக அது வேறு துருவத்தில் போய்க் கொண்டிருப்பதாய் அவளுக்கு உறைத்தது. அந்த உறைதலின் சாட்சி புருஷனாகவே, இன்னும் அவல் ஒளிர்ந்தாள். அவனன்றி வேறு எதுவுமில்லை, இது தான் நிஜம் நிதர்ஸ்மான உண்மை. இந்த மாசுபடாத உண்மைகளுக்கே ஒர் கலங்கரை விளக்கமாக மட்டுமல்ல, கடவுளாகவும் இருக்க நேர்ந்திருக்கிறது.
![]() |
என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: December 4, 2025
பார்வையிட்டோர்: 92
