கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 990 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்றைக்குப் பள்ளியில் பெற்றோர் தின விழா. கூடவே சிறந்த மாணவர்களுக்குக் கல்வி அமைச்சர் தன் கைகளால் பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் இருந்தது. மாணவர்கன் அழகிய சீருடையில் வலம் வந்து கொண்டிருந்தனர். பள்ளிக்கூடம் வண்ண வண்ண காகிதக் கொடிகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் அழைப்புக் கிணங்கியும் அவர்கள் பாராட்டப்படுவதைப் பார்த்து மகிழவும் ஆர்வமாய் வந்திருந்தனர். பெரும் அரசியல் தலைவர்கள் உயர் அரசாங்க அதிகாரிகள் என்று சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் பெரிய மனிதர்க ளின் வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் பள்ளியாதலால், மைதானம் முழுவதும் விலையுயர்ந்த வெளிநாட்டுக் கார்கள் நின்றிருந்தன.

அன்றைக்கு விடுமுறை வாங்கிக் கொண்டு, தனது ஹோண்டா மோட்டார் சைக்கிளில் வந்த ஜெயராமன், அதை எங்கே நிறுத்துவது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந் தார். அவரது தயக்கத்தைக் கவனித்த மாணவன் ஒருவன் அவருக்கு உதவினான்.

அவன் காட்டின இடத்தில் வண்டியை நிறுத்திப் பூட்டி அதில் மாட்டப்பட்டிருந்த சாலைவரிப்பட்டையை அவிழ்த் துத் தனது காற்சட்டைப் பைக்குள் பத்திரப்படுத்திக் கொண்டு தனது மகன் விவேகானந்தனைத் தேடினார் அவர்.

சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் மாணவர்களைப் பார்க்க அவருக்கு மகிழ்ச் சியாய் இருந்தது. வாழ்க்கையில் கிடைத்தற்கரிய அந்தப் பருவத்தில். வறுமை என்னும் கொடிய நோய்க்கு ஆளாகி அப்பருவத்தில் பெற வேண்டிய வாய்ப்புகள் சந்தோஷங்களை எல்லாம் தன்னால் அனுபவிக்க முடியாமல் போன காரணத்தினால்தான், தன்னுடைய ஒரே மகனான விவேகானந்தனை நல்ல முறையில் படிக்க வைக்க, அல்லும் பகலு மாய் உழைத்து அவனுக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்து இந்த உயர்நிலைப் பள்ளியில் படிக்க வைத்திருக்கிறார். இன்றைக்கு அவன் பரிசு வாங்கும் நாள். அதைத் தன் கண்களால் காண வேண்டும் என்ற ஆவலில்தான், இன்று அவரும் இங்கே வந்திருக்கிறார்.

“என்னப்பா ஜெய ராமன் லீவு போட்டுட்டு எங்கேயே வெளியூர் போறதா சொல்லிட்டு இங்கே நின்னுகிட்டிருக்கே.”

குரல் கேட்டு ஜெயராமன் திரும்பினார். அவருடைய முதலாளி! திடுக்கிட்டுப்போய் பின் சமாளித்துக் கொண்டார்.

“இன்றைத்கு என் மகனுக்கு மந்திரி பரிசு கொடுக்கிறாங் கன்னு சொல்லி எனக்கு அழைப்பு வந்திருக்கு எசமான். அதுதான் வந்தேன்”

மிகுந்த பணிவன்புடன் கூறுகிறார். அவருடைய முதலா ளியான காவல்துறை மேல் அதிகாரி அருனானந்தனுக்கு அந்தசெய்தி வியப்பை தந்தது.

“நீ என்கிட்டே உன் மகன் இங்கே படிக்கிறதா இது வரைக்கும் சொல்லவே இல்லியே ஜெயராமா; எத்தனையாவது கினாஸ்ல படிக்கிறான். ஆர்வமாய் அதே நேரம் வியப்புடன் கேட்கிறார்.

‘‘ஐந்தாம் படிவம் முடிச்சுட்டான் எசமான்… தயங்கித் தயங்கி அவர் கூறிக் கொண்டிருக்கும் போது, மாணவர்கள் குழுவாக வந்து அவர்களை வரவேற்று அழைத்துச் சென்று இருக்கையில் அமரச் செய்கின்றனர். முதலாளியுடன் சமமாக. அமரக் கூடாது என்ற எண்ணத்தில் ஜெயராமன் கடைசி வரிசையில் வந்து அமர்ந்து கொள்கிறார். விலை உயர்ந்த காலணிகள் ஆடைகள் மின்ன, முக்கிய பிரமுகர்கள் முன் வரிசையில் அமர்ந்திருக்கின்றனர்.

பற்றியும் பெற்றோர்களின் கடமை பற்றியும் மாணவர்களின் ஒழுங்குமுறை பற்றியும் பேசினார். நல்ல மதிப்பெண்களைப் பெற்று மிகச்சிறப்பாகத் தேர்ச்சி பெற்று பள்ளிக்குப் பெருமை தேடித் தந்த மாணவர்க ளைப் பாராட்டி அவர்களைப் போலவே அடுத்தடுத்து தேர்வு எழுதும் மாணவர்களும் தேர்ச்சி பெற்று வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பல இனமாணவர்கள் பயில்கின்ற அப்பள்ளியில், மாணவர் தலைவனான விவேகானந்தன் ஒலிபெருக்கியின் முன்னால் வந்து அனைவரையும் வரவேற்று நான்கு மொழி யிலும் பேசி எல்லோரின் கவனத்தையும் கவர்ந்தான். அதன் பின் பள்ளியின் முதல்வர் வந்து கல்வியின் முக்கியத்துவம்

வெற்றி பெற்ற மாணவர்கள், சிறப்புத் தேர்ச்சி பெற்றவர் களுக்கான பரிசு வழங்கும் நேரம் வந்தது . கல்வியமைச்சரி டம் கைகுலுக்கி உற்சாகமாய் மாணவர்கள் பரிசுகளை வாங் கிச் சென்றனர். பள்ளியின் முதல் மாணவரும் சிறந்த தேர்ச்சியாளருமான விவேகானந்தன் மேடைக்கு அழைக்கப் பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.

அவனைப் பார்த்துப் பெருமைபட்டார் கல்வி அமைச்சர். அந்தச் சிறந்த மாணவனின் தந்தைக்குத் தன் பாராட்டுத லைத் தெரிவித்துக் கொண்ட அமைச்சர், அவர் மேடைக்கு வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஒலிபெருக்கி யில் அறிவிப்பாளர் விவேகரனந்தனின் தந்தையை மேடைக்கு வரும்படி அழைக்க விவேகானந்தன் ஓடிப்போய் தன் தந்தையின் கையைப் பிடித்து அழைத்து வந்தான். அமைச்சர் அவருக்குக் கைகொடுத்தார். அவரைப் பற்றி விபரங்களைக் கேட்டறிந்து மெய்சிலிர்த்து. போனார்.

சாதாரண தோட்டவேலை செய்து வந்த போதும் தன் மகனின் கல்விக்காக பெருமுயற்சி எடுத்து அவனை இந்த அளவுக்கு உயர்த்திய அவரின் பொறுப்புணர்ச்சியைப் பாராட்டி, விவேகானந்தனின் மேல்படிப்புக்கு வேண்டிய அனைத்து உதவிகளுக்கும் தாமே அரசாங்கத்திற்குச் சிபாரிசு செய்து பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.

வந்திருந்த முக்கிய பிரமுகர்களில் பலர் ஜெயராமனைப் பாராட்டியதுடன் விவேகானந்தனையும் வாழ்த்தினார்கள். ஜெயராமன் தடுமாறிப்போனார். மேடையிலிரந்து கீழே இறங்கி வந்தவரை அவரது முதலாளி எதிர் நின்று கை நீட்டி அவர் கையைப் பற்றிக் குலுக்கினார்.

நீ தான் உண்மையிலேயே பாராட்டப்படவேண்டிய நபர் ஜெயராமா… மத்தவங்களுக்கு நீ ஒரு உதாரணம். உன்னோட் பிள்ளைக்கு இப்படிப்பட்ட வல்லமையை எங் கேருந்துப்பா வாங்கிக் கொடுத்தே?! நாலு மொழி பேசறான்.

முதல் பையான வந்திருக்கான். இதெல்லாம் என்ன அதிச யம் என்ன மந்திரம் போட்டே?

“அவரிடம் பேசிக் கொண்டே விவேகானந்தனைப் பிடித்து தன்னோடு சேர்த்துக் கொண்டார்.

எல்லாம் நீங்க போட்ட பிச்சைதான் முதலாளி… இந்தப் பதினைந்து வருஷமா நீங்க என்னை உங்களது பிள்ளையாட்டம் வளர்த்திங்க, என் பையன் பசி பட்டினி இல்லாம பணக்கஷ்டம் இல்லாம வளர்ந்து படிச்சான் முதலாளி… நீங்க என் குடும்பத்தில நிம்மதியை வளர விட்டீங்க, என்னோட பிள்ளை தன் அறிவை வளர்த்திருக்கான்.

ஜெயராமனின் பதிலில், முதலாளி நெகிழ்ந்து போனார். நாளைக்கு வேலைக்கு வர்றப்ப பிள்ளையைக் கூட் டிட்டு வா ஜெயராமா… அவனுக்கு என்னோட வெகுமதி களை நான் கொடுக்கனும்.

முதலாளி புறப்பட்டுப் போனார். விழா முடிந்து எல் லோரும் போய்க் கொண்டிருந்தார்கள். ஜெயராமன் தன் பிள்ளையைத் தனது வண்டியில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார்.

வீட்டுக்கு வந்ததும் மனைவியிடம் சொல்லி திருஷ்டி சுற்றிப் போடச் சொன்னார். மகனை அருகில் அழைத்து பக்கத்தில் அமர்த்திக் கொண்டரர். அவன் கைகளை எடுத்து முத்தம் கொடுத்தார்; கன்னங்கனை அன்பாய் நீவிவிட்டார்.

என் செல்வமே உன்னைப் பெத்து வளர்த்த பெருமை எனக்கு ஏழு பிறப்புக்கும் போதுமய்யா… உனக்கு ஆண்ட வன் ஆயுனை கொடுக்கணும்… நீ நல்லா இருக்கணும்…

எல்லாரும் என்னைத்தான் பாராட்டினாங்க ஆனா அவுங்க ளுக்கு ஓர் உண்மை மறந்து போச்சு. உண்மையிலேயே இந்த வெற்றி உன்னோட உழைப்புக்குக் கிடைச்ச வெற்றிதான்!

நான் எவ்வளவுதான் சிரமப்பட்டாலும், நீ கவனித்துப் படிக்கலேனா இந்த வெற்றியை நீ அடைஞ்சிருக்கவே முடி யாது இந்தப் பிள்ளையைப் பெற இவன் என்ன புண்ணியம் செய்தானோன்னு மத்தவங்க பேசற அளவுக்கு சாதிச்சிட்டியே ராசா”

மகனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டார் அந்த அணைப்பில் இத்தனை ஆண்டுகாலம் கண்ட கனவு பலித்த பெருமை படர்ந்தது.

மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி, இவன்தந்தை
எணினாற்றான் கொல்எனுஞ் சொல் (குறன்:70)

விளக்கம்: http://www.thirukkural.com/2009/01/blog-post_14.html#70

– குறள் விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1996, மாஸ்கோ பதிப்பகம், சென்னை

சிங்கை தமிழ்ச்செல்வம் நூலாசிரியர் பற்றி... - மனங்கவர் மலர்கள், முதற் பதிப்பு: ஜூன் 2005 இலக்கிய வடிவங்களில் சிறுகதை. புதினம், கட்டுரை, உரைவீச்சு போன்ற அனைத்து நிலைகளிலும் சிந்தனையை வெளிப்படுத்துகின்ற ஆற்றல் மிக்கவராக மதிக்கப்படுகின்ற சிங்கை. தமிழ்ச்செல்வம் அவர்களை 1995-ம் ஆண்டு முதல் நான் நன்கு அறிந்து வைத்து உள்ளேன். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் உறுப்பியம் பெற்றுத் தொண்டாற்றினார். துணைச் செயலாளர் பொறுப்பேற்றுத் துணை நின்றார். கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராய்த் தொடர்ந்து…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *