ஒளி உடல் கண்ட ஓர் உயிர் வெளி பயணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 12, 2026
பார்வையிட்டோர்: 3,363 
 
 

காரணமில்லாமல் காரியம் நிகழ்வதில்லை. ஒரு காரியம் இந்த உடற்கூற்று விவகாரம் ஏன் இவ்வளவு மனிதர்களும் பிறந்து பிறந்து சாகிறார்கள். உண்மையில் இப்படிப் பிறப்பது கூட பெருந் துயரம் தான் இதில் சந்தோஷமென்பது நீர்க்குமுழிக்குச் சமம் எனினும் இத பேருண்மையை, பேரறிவை எவரும் கருத்தில் கொள்வதாக இல்லை மாறாகஅற்ப சுகங்களுக்காக தன்னையே இழக்கும் நிலை தான் இந்த வேட்டையாடல் எதுவுமின்றி, காட்டிலேயே வாழ்ந்து மறைந்த, ஒரு கன்னித் தேவதையே என் மகள். பொன் மகள் பூச் சிதறல் மனம் கொண்டவள் எனினும் வாழ்க்கை இவள் கைக்கு வரவில்லை வானமும் போனது. இது கண்டு நான் திகைத்தேன் அழுதேன் இந்த அழுகை வாழ்க்கை கூட அன்பு மறைந்த, ஒற்றைத் தடத்தில் தான் உயிர் இழந்த பயணம் செய்ய நேர்ந்தது . இது எனக்கா அவளுக்கா என்று புரியாமலே இந்த ஓட்டமும் இழப்பகளும் பாட்டும் ஆட்டமும் கூத்து கும்மாளமுமாய் , வாழந்து சிறக்கிறமன்ணில் மரை பொருளாகிப் போனாள் என் அன்பான மகள் ஆதர்ஸநாயகி1 இது எனக்கு மட்டும் தான் உலகின் கண்களில் பூத் தூவுகிற நிலைமை, கடைசி வரை, இவளுக்கு வரவில்லை சுமார் முப்பது வருடங்களுக்கு மேலான சோக வாழ்க்கையின் தடங்கள் அவ்வளவு குரூரமானவை . உலகில் நம் பயணம் இத்தகையதல்ல தேர் ஏறிப் போனால், தான் வாழ்க்கை ஆம், அப்படித்தான் உலகமும் மனிதர்களும் இதற்கு மாறாக கூறுபட்டு கொடிய வினை ஆற்றி, சேறு குளித்து எழுந்தாலும் உலகம் அதைக் கண்டு கொள்வதில்லை, அன்பு வழிபாடு மட்டுமே செய்யத் தெரிந்த நான் காலம் முழுக்க கழுவாய் சுமந்து வருந்த, வேண்டிய நிலையும் கண்ணீர் கடலில் குளித்தே சாக வேன்டிய நிலையும் எதனால் வந்தது? இதைத் தோண்டி, துருவ ஆரம்பித்தால், பூதங்களே, தலையெடுக்கும் புனிதம் வராது.

அந்த ஒரு கரிநாள், ஒரு கணித மேதையாகவே பிரகாசிக்க வேண்டிய என் அருமை மகளை, காலம் விழுங்கிய நாள் இதில் மனவருத்தமான விடயம் என்னவென்றால், மூச்சு மட்டும் அவளுக்குப் போகவில்லை பேச்சும் போனதே! இந்த இழப்பும் இழிநிலை வாழ்க்கக்கும் சூத்திரதாரி என் கணவனா? காரியவாதிகளாகவே நின்று நிலைத்து, கல்லெறிந்து தாக்கும் மனிதர்களா?எவராயிருந்தாலென்ன?நீதியே செத்து விட்ட பின் , வேதம் சொல்லிப் பலனில்லை. இதை நினைக்க்கும் போது, மனம் கனக்கத் தான் செய்கிறது. எனது காலடியில் புதைந்து கிடக்கிறது வாழ்க்கை. அந்த இ ருண்ட யுகம் கன்ணில் வெறித்தது. இப்படி இருள் விழுங்கிச் சாகவா என் கல்யாணமும் காட்சி நிழலும் ? எனக்கு நன்றாக ஞாபகம் இருந்த ஒரு மேலான ஒரு தெய்வீக புருஷனையே என் எதிர்காலக் கணவனாய்நான் கனவு கண்டு கொண்டிருந்த வேளையில் தான் இந்த அபத்தம் நேர்ந்தது. இத்ற்கு யாரும் பொறுப்பில்லை. என் பாவக் கண்க்கின்படி தான் எல்லாம் நிகழ்கிறது. என் கல்யாணம் கூட எனக்கு நன்மை தராத, வெறும் காட்சி நிழலாய் மறைந்தே போனது. இன்பம் மட்டுமே குறியாக இருக்கிறவர்களுக்கு இது பொருந்தாது. இந்த சித்ந்ந்தமே இன்று வரை, என்னை வழி நடத்துதுகிறது. என்னை வாழ்விக்க வந்த உண்மையும் கூட எவர் முதுகிலும் ஏறிச் சவாரி செய்யும் பழக்கம் என் கனவில் கூட வந்ததில்லை. அதனால் என் மகளின் இறப்பு கூட ஒரு சாதாரண நிகழ்வாகத் தான் என் வாழ்வில் நடந்தேறியிருக்கிறது. ஒரு நிழல் , சம்பவமாக அதை நான் காண்கிறேன்.

உணர்கிறேன்ஆம் அன்று அதிகாலை வேளையில், அதை ஒரு விழிப்பு நிலை மறந்து போன கனவாகத் தான் நான் கண்டேன்.

ஆம் அவள் செத்துக் கிடந்தாள். என் மகள் என் உயிர் வார்ப்பு . அவளுக்குக் கல்யாணம் கூட நடந்தேற விடாமல்,, அவல் மூது கல் எறிந்து கொன்றானே, ஒரு மனிதன் பாவி1 அவனின் அகோரப் பசிக்கு என் மகளா கிடைத்தாள்? மனிதனே 1 சற்று நில் உன்னிடம் ஒரு கேள்வி1 எங்கள் குடும்பத்தோடு. உனக்கு முன் பின் பழக்கமில்லை . என் மகளையே அறியாமல் செய்த தவ்று உன்னைச் சும்மா விடாது இருந்து பார் என்ன நடக்குதென்று!

உயிர் வெளியே அறியாத மனிதர்ளிடம் எனக்கு என்ன பேச்சு?

பேச்சொழிந்த என் மகளும் இன்று மூச்சிழந்து கிடக்கிறாள். கட்டில் மீது நிலை வகுத்தி வெறித்த உயிர் விடியும் வரை தூங்குவது போல ஒரு பாவனை இல்லை ஆழ்ந்த தூக்கம் அவள் நோய்வாய்ப்பட்ட பிறகு அடியோடு இல்லை. தூக்க மாத்திரை போட்டால் தான் கண் மூடுவாள். இன்று அதுவுமின்றி ஒரு செத்த சடமாக அவள். எல்லாம் முடிந்து போனது . நான் இதற்காக, உரத்த குரல் எடுத்து அழவில்லை. கண்ணீர் வெள்ளம் பாய. நான் கதறி அழுத குரல் காற்றில் கேட்காமலே போனது மறு நாள் சடங்கு மலர்சாலையில் அவள் வெறும் நிழல் வெறித்த பொமையாக பெட்டிக்குள் கிடக்க அருகே நானும் என் இரு மகள்களும் வெளிநாட்டிலிருந்து வந்த களைப்போடு, கண்களில் கண்ணீர் நது கரை ஓடாமல் காட்சி வெறுமையின்றி, அவளும் என்னைப் போல் உயிர் வெளிப் பயணாமா?லன்டனில் இருந்து வந்திருக்கிற என் மகளை தோள் தொட்டு உலுக்கி நான் கேட்கிறேன்.

ஏன்ன? உனக்கும் அழுகை வரேலையே? அதற்கு அவள் சொன்னாள் தினசரி இவள் சாவைக் கண்டவள் தானே நானும் நீங்களே நெஞ்சில் அடித்துக் கொண்டு அழாமல், இருக்கிறியள் இதைப் பார்த்தே. எனக்கும் பழகிப் போச்சு. நீங்கள் அம்மா இல்லை கடவுள். அவள் அதை சொன்ன போது, நான் கேட்டேன். கடவுளை எங்கை எப்படி நீ பார்த்தாய்?அதற்கு பதில் சொல்ல முடியாமல் அவள் திணறிய போது நான் சொன்னேன் . இப்ப நான் காண்கிறனே இவள் உடலையல்ல உயிர் வெளியை ஒளி வந்து பிரகாசிக்கிற தேவதையே இவளூம், என்ற போது இவள் வெகுவாகப் புல்லரித்துப் போனதை , ஓர் உயிர் வெளிஆனந்த இருப்பாகவே என்னால் உணர முடிந்தது இனியென்ன, இந்த தீங்கற்ற துன்பம் தராத அந்த பேரின்ப உயிர் வெளி உலகமே வசமாகி விட்டது போல் , இந்த நிஜ உலகமும் அதன் இருப்பும் வெறும் கனவாகவே மறைந்து போய் வெகு நேரமாகி விட்டது . இனி இந்த சடங்கும் மனித வேஷமும் வெறும் பாசாங்கவே தோன்றும் தோன்றின.

ஆனந்தி என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *