ஒருநாள் உன்னாவிரதம்!
கதையாசிரியர்: வளர்கவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 31, 2025
பார்வையிட்டோர்: 257
மவுன பாரதி அன்றைக்கு அலுவலகம் வந்ததிலிருந்து யாரிடமும் பேசவில்லை., சும்மாவே அவன் ரிசர்வ்டு டைப். யாரிட்டயும் அதிகமாப் பேசமாட்டான். பழனிச்சாமி மட்டும் அவனுக்கு உற்ற தோழன். அவன் கிட்ட மட்டும்தான் எதுவும் பேசுவது அவன் வழக்கம். அவன் இயல்பு தெரிந்தவர்கள் இங்கிதமாக ஒதுங்கிக் கொள்வார்கள்.

மதியம் லஞ்ச் டைம் வரை இறுகின இதழ்களோடு இறுக்கமாய் இருந்தான். சாப்பாட்டப்பவாவது வாயைத் திறப்பான் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.
அப்போதும் அவன் தனியாய்ப் போய் உட்கார்ந்து கொண்டு தான் கொண்டு வந்ததைத் தின்று தீர்த்தான். அடுத்தநாள் அவனாகவே வந்து வலியப் பேச, எல்லாருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
‘ஏன் நேற்று பூராம் எங்க யார்ட்டயும் நீ முகங்கொடுத்துப் பேசலை!’. முகமது அலிதான் மவுனம் கலைத்தார்.
‘அலி உங்களுக்குத்தான் தெரியுமே?! எனக்கு உடலில் இல்லாத பிரச்சனைகள் இல்லை என்று?! கொலஸ்டிரால் இருக்கு..! அலர்ஜி! இத்யாதி, இத்யாதிகள்… அடுக்கிக் கொண்டே போக இடைமாறித்தான் ஏக்நாத்,
‘வயசானா எல்லாருக்கும் எதோ பிரச்சனை வரும். அதுக்காக இப்படி ஒதுங்கியா இருப்பே…??! மருந்து கிருந்து சாப்பிட்டு நோயை மட்டுப் படுத்த வேண்டியதுதானே?!
‘கரெக்ட்! அதான், என் சித்த வைத்தியர் சொன்னா மாதிரி பூண்டு குழம்பு வைத்து சாப்பிட்டேன்.
சரி, அதனாலென்ன??
அதனாலென்னவா…? பூண்டு வாய்வுக்கு மருந்து.. ஆனா வாய்க்கு விரோதியாச்சே?
ஒடம்புக்கு உகந்தது… ஆனால், உரையாடலுக்கு உகந்ததில்லையே?!
ஒருத்தனின் வாய்வு அடக்கவும் வாய் அடக்கவும் ஒரே மருந்து குழம்பில் பூண்டு! என்றவன் சொன்னதும்தான் அவனின் ‘ஒருநாள் உன்னாவிரத’ மகிமை மற்றவர்க்குத் தெரிந்தது.
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
